Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமையான மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்களும் பேச்சும்....... நன்றி நுணா.......!    🦚

எனது மனைவியின் அனுபவமும் ஒன்று உண்டு.(திருமணத்துக்கு முன்பு). முடிந்தால் பின்பு எழுதுவம்.....!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா.

7 hours ago, suvy said:

எனது மனைவியின் அனுபவமும் ஒன்று உண்டு.(திருமணத்துக்கு முன்பு). முடிந்தால் பின்பு எழுதுவம்.....!

சகோதரங்களுடன் போறதாக நினைத்து உங்கள் கையை பிடித்துக் கொண்டு போயிற்றாவோ?

இவர் கூறிய விடயங்களில் ஆன்மீகம இல்லை. மனிதனால் நம்ப முடியாத கட்டுக கதைகளை அழகு தமிழில் கூறுவதை விட வேறு வேலை இல்லை இவர்களுக்கு. கட்டுக்கதைகளை உண்மை போல் சொல்லி மக்களை ஏமாற்றுவமது  இவர்கள் தொழில். ஒரு திரைப்படத்தில் ஒரு  பிள்ளை காணாமல் போனபோது முருகனிடம் முறையிட்டதை  தனது  தகப்பன் கிண்டல் அடித்ததற்காக அவரது பிள்ளையையையே இரண்டு மணி நேரம் காணமல்  போக செய்யதானாம் முருகன். அந்த  அளவுக்கு உலகில் நடை பெற்றும் சிறிய சிறிய விடயங்களைக்கூட துல்லியமாக  கண்காணித்து அவர்கள் தண்டனை கொடுக்கும்  முருகனுக்கு மில்லியன்  கணக்கான மக்கள் தனது  ஏரியாவான தமிழ் நாட்டிலேயே ஒரு நேர சாப்பாடு கூட இல்லாமல் கஷ்ரப்படுவது  தெரியவில்லையாம். யாரை ஏமாற்றுகிறார்கள். இதை நம்ப ஒரு கூட்டம். 

மரணம் ஒன்று இருக்கின்ற வரையில்....

நீ விரும்பாத ஒன்று நடக்கின்ற வரையில், 
நீ விரும்பூக்கின்ற  ஒன்று நடக்காத  வரையில்....

கடவுள் என்பவன், நீ விரும்புகின்றாயோ இல்லையோ,  
இருந்துகொண்டே இருக்கின்றான்!

- சுவாமி விவேகானந்தர் 

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

ஒருவர் தனது தாய்தந்தை காட்டிய மதத்தையும், அவர்கள் காட்டிய கடவுளையும், முழுமையாக உணரவோ, நம்பமுடியாமலும் இருக்கும் நிலையில், அவரால் வேறு எந்த மதங்களையும் அவற்றின் கடவுள்களையும், நம்பவோ, உணரவோ முடியாது. அப்படி நம்பவோ, உணரவோ முடிந்தவர்களிடம் பரிகாசங்கள் ஏற்படாது.

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, Paanch said:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

ஒருவர் தனது தாய்தந்தை காட்டிய மதத்தையும், அவர்கள் காட்டிய கடவுளையும், முழுமையாக உணரவோ, நம்பமுடியாமலும் இருக்கும் நிலையில், அவரால் வேறு எந்த மதங்களையும் அவற்றின் கடவுள்களையும், நம்பவோ, உணரவோ முடியாது. அப்படி நம்பவோ, உணரவோ முடிந்தவர்களிடம் பரிகாசங்கள் ஏற்படாது.

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்.  

நன்றி. உங்கள் சொந்த கருத்துக்கு. நம்ப முடியாமல் , உணர முடியாமல் செய்தது யார் தவறு? 

காத்தற் கடவுளுக்கு தன்னையும் பாதுகாக்க சக்தி இல்லை. மக்களையும் பாதுகாக்க சக்தி இல்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, கறுப்பன் said:

நன்றி. உங்கள் சொந்த கருத்துக்கு. நம்ப முடியாமல் , உணர முடியாமல் செய்தது யார் தவறு? 

தவறு செய்யாத ஒருவரை நீங்களாவது என்னிடம் காண்பிக்கும் வரையில், உங்கள் கேள்விக்கான பதில் என்னிடம் இல்லை. 😢

4 hours ago, Paanch said:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

ஒருவர் தனது தாய்தந்தை காட்டிய மதத்தையும், அவர்கள் காட்டிய கடவுளையும், முழுமையாக உணரவோ, நம்பமுடியாமலும் இருக்கும் நிலையில், அவரால் வேறு எந்த மதங்களையும் அவற்றின் கடவுள்களையும், நம்பவோ, உணரவோ முடியாது. அப்படி நம்பவோ, உணரவோ முடிந்தவர்களிடம் பரிகாசங்கள் ஏற்படாது.

நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்.  

சரியாக சொன்னீர்கள். உண்மை தாய்தந்தையர் காட்டிய மதங்களை முழுழுமையாக நம்பமுடியாத அளவுக்கு எமக்கு கல்வியை தாய்தந்தையர் கொடுத்த பின்னர் அடுத்தவர் மதங்களையும் நம்ப முடியாது. ஒரு மதத்தை கண்மூடித்தனமாக நம்புபவர்கள்  தான் பெரும்பாலும் மதமாற்றும் பேரவழிகளிடம் சிக்குபவர்கள். என் போன்றவர்களிடம் மத மாற்ற பிரசாரங்கள் எடுபடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

உங்கள் பெற்றோரின் மதம் என்னவென்று தெரியாது. ஆயினும் பெற்றோர்களும் நம்பாத அவர்கள் மதத்தை உங்கள்மேல் திணித்து, உங்களுக்கு மதம்பிடிக்க வைக்காத அவர்கள் செயலைப் பாராட்டுகிறேன்.🙌 அத்துடன் அவர்களும் பிறமதத் தத்துவங்களை பரிகாசம் செய்தார்களா? இல்லையா? என்ற உண்மையையும் நீங்கள் தயங்காமல் பதிவுசெய்வீர்கள் என நம்புகிறேன்.:100_pray:

16 minutes ago, Paanch said:

நான் பரிகசிப்பது மதங்கள் விதைக்கும் மூடத்தனங்களை மட்டும் தான். அது தவறல்ல என்பதில் நான் உறுதியாக உள்ளேன். கடவுளை மட்டும் நம்புபவர்கள் அதை  சந்தோசத்துடன் வரவேற்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 அலுவலகங்களில் வேலைக்குச் செல்லும்போது தொழிலாளர்களிடம் அடையாள அட்டை இருந்தால்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள் வேலை முடிந்து வீடுதிரும்பும்போது தந்தையிடம் மனைவியோ பிள்ளைகளோ அடையாள அட்டைகேட்பதில்லை. இதுதான் உங்கள் விஞ்ஞானத்தின் தார்ப்பரியம். வீட்டுக்குவந்தது உண்மையில் உங்கள் தந்தைதானா?

  • கருத்துக்கள உறவுகள்
On 8/27/2019 at 10:04 AM, Paanch said:

உங்கள் பெற்றோரின் மதம் என்னவென்று தெரியாது. ஆயினும் பெற்றோர்களும் நம்பாத அவர்கள் மதத்தை உங்கள்மேல் திணித்து, உங்களுக்கு மதம்பிடிக்க வைக்காத அவர்கள் செயலைப் பாராட்டுகிறேன்.🙌அத்துடன் அவர்களும் பிறமதத் தத்துவங்களை பரிகாசம் செய்தார்களா? இல்லையா? என்ற உண்மையையும் நீங்கள் தயங்காமல் பதிவுசெய்வீர்கள் என நம்புகிறேன்.:100_pray:

வடிவேலின் நகைச்சுவைக்கு சிரித்தார்களா இல்லையா?
அப்போ அவர்கள் விவேக்கை எதிர்க்கிறார்களா? இல்லையா?
என்பதுபோல் இருக்கிறது உங்கள் கேள்வி ....... பரிக்ஷிக்க கூடிய விடயங்களை முழுதாக 
வளர்ந்த பின்னும் நடுவீதியில் நின்று செய்பவனை விட்டு விட்டு ..... பார்த்து சிரிப்பவன் மேல் 
எதற்கு பழிபோடுகிறீர்கள்? 
ஆன்மீகத்தை காட்டுகிறேன் என்று கூறி கூட்டம் கூட்டி 
படுக்கை அறையில் தன்  ஆண்குறியை காட்டும் நித்தியானந்தா பின்னால் 
நின்று இழுபட்டுக்கொண்டு இருந்தால் ........ எனக்கு உங்களை பார்க்கவும் சிரிப்புதான் வரும்.

போலிகளையும் ... கேலிகளையும் காவுபவர்கள்தான் சிந்திக்க வேண்டும் 
சிரிப்பது மனித இயல்பு ..... அவனாவது மகிழ்வாக இருக்கிறானே என்று விடுவதுதான் நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

போலிகளையும் ... கேலிகளையும் காவுபவர்கள்தான் சிந்திக்க வேண்டும் 
சிரிப்பது மனித இயல்பு ..... அவனாவது மகிழ்வாக இருக்கிறானே என்று விடுவதுதான் நன்று. 

இந்துசமயத்தில் எனக்கும் உடன்பாடில்லை ஆனாலும் அதில் தெரிவிக்கப்படும் நல்லவற்றை நான் குறைகூறுதில்லை. ஆனால் இங்கு இந்துசமயம் என்றாலே அதில்உள்ள குறைகளைமட்டுமே தெரிந்தெடுத்து அதுபற்றிச் சிந்திக்காமல், பரிகசித்து சிரிக்க முற்படுவதையே தவறென்று தெரிவிக்க முயன்றேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 8/27/2019 at 10:36 AM, vanangaamudi said:

 அலுவலகங்களில் வேலைக்குச் செல்லும்போது தொழிலாளர்களிடம் அடையாள அட்டை இருந்தால்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள் வேலை முடிந்து வீடுதிரும்பும்போது தந்தையிடம் மனைவியோ பிள்ளைகளோ அடையாள அட்டைகேட்பதில்லை. இதுதான் உங்கள் விஞ்ஞானத்தின் தார்ப்பரியம். வீட்டுக்குவந்தது உண்மையில் உங்கள் தந்தைதானா?

தனிமனித தாக்குதலை நாகரீகம் அற்ற முறையில் உங்களைப்போல செய்வதில் இருந்து ...
அவன் முஸ்லீம்  ... இவன் இந்து .... அவள் க்ரிஸ்டியன்  என்று பேதம் சொல்லி ஆளை 
வெட்டும் அளவுக்கு போகிறவர்கள் உங்களைப்போன்ற மதம் பிடித்தவர்கள்தான்.

உங்களின் கருத்து மறைமுகமாக துல்பனுக்கு  சார்பானது விளங்கி எழுதிநீன்ர்களா 
இல்லையா என்பதுதான் புரியாது. உங்கள் அநாகரீக கருத்துக்களில் இருந்து விளங்க கூடியது 
உங்களுக்கு அந்த அளவுக்கு அறிவு இருந்து இருக்காது என்பதைத்தான்.

கோவிலில் ஆளை அடையாள படுத்த கமெரா போடுகிறார்கள் .... கடவுளுக்கும் 
பக்தனை தெரியவில்லை .... பக்கதனுக்கு பக்தி புரியவில்லை.
இந்த கோமாளிகளின் வீடுகளுக்கு யார் போய்வருகிறார்கள்? ஏன் அறிவு வளரவில்லை என்பதுதான் 
இங்கு முதன்மையான கேள்வி? 

மேலே தலைப்பும் பேச்சும் .....
முருகன் 3 மணிநேரம் பிள்ளையை ஒழித்தார் என்று இருக்கு 
3 மணிநேரம் பிள்ளையை ஒழிக்கும் முருகனுக்கு ..... திருடனை ஒழிக்க வக்கில்லை. 
பிராமணன் எனும் பெயரால் கோவிலுக்குளேயே முருகனால் பாதுகாக்க படுகிறான். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

இந்துசமயத்தில் எனக்கும் உடன்பாடில்லை

ஏன் நீங்கள் உடன்பட மறுக்கிறீர்கள்?
அப்படி அதில் ஏதும் தவறு இருந்தால் அதை ஏன் எழுதாமல் மறைக்கிறீர்கள்? 

ஆனாலும் அதில் தெரிவிக்கப்படும் நல்லவற்றை நான் குறைகூறுதில்லை.

நல்லவற்றை யாரேனும் ஏன் குறைகூற போகிறான்?
நல்லது இருந்தால் அது நாட்டுக்கும் சமூகத்தத்துக்கும் நல்லதுதானே? 

ஆனால் இங்கு இந்துசமயம் என்றாலே அதில்உள்ள குறைகளைமட்டுமே தெரிந்தெடுத்து அதுபற்றிச் சிந்திக்காமல்,

குறைகளை காண்பவன் ஏன் அதை தொடர்கிறோம் என்று சிந்திப்பதால்தான் 
எழுதுகிறான் ......... நீங்கள்தான் குறைகளை கண்டும் ஒன்றில் சிந்திக்காது அல்லது 
பாதுகாக்க  எழுதாமல் இருக்கிறீர்கள். குறைகளை நீக்குவது என்பது மனித இயல்பு 
அதுபற்றி பேசி எழுதினால்தான் மாற்றம் வரும். தயவு செய்து நீங்கள் காணும் குறைகளை எழுதுங்கள் 
அதுதான் ... உங்களுக்கு பிடிக்குதோ இல்லையோ இந்துமதம் என்றதை சீர்படுத்தும். 

பரிகசித்து சிரிக்க முற்படுவதையே தவறென்று தெரிவிக்க முயன்றேன்.  

இதில் என்ன தவறு என்று கொஞ்சம் விளக்கமாக எழுதினால் என்னால் புரிந்துகொள்ள முடியும் 
நகைசுவை செய்பவன் ...... செய்கிறான்   .... அதை பார்க்கிறவன் சிரிக்கிறான்.
தான் கடவுள் என்று முழுமையாக நம்பும் ஒன்றை பரிசகிக்க அவன் கூட தயங்கவில்லை 
நீங்கள் ஏன் சிரிப்பவன் மீது பழியை போடுகிறீர்கள் என்பது உண்மையிலேயே புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

ஆரியம் இந்துசமயத்தின் மூலமும் தமிழரையும் தமிழையும் சிதைப்பதை ஆராச்சியாளர்கள் பலரும் தெரிவிக்கவும், அந்த உண்மையை அறியமுடிவதாலும் அதன்மீது எனக்கு உடன்பாடு வரவில்லை.

உலகில் பலசமயங்கள் உள்ளன. ஆனால் இந்துசமயம் என்றதும், அதனைப் பரிகசிக்கப் பாய்ந்து வருபவர்களை உங்களால் காண முடியாவிட்டால் அது என்தவறலல்ல. வேறு சமயங்கள் பற்றியும் இங்கு பதிவுகளும், கருத்துகளும் வருகின்றன, ஆனால் அவைகள்பற்றி இவர்கள் எதுவுமே சொல்வதில்லை ஏன்.?

பரிகசிப்புக்கும், நகைச்சுவைக்கும் உள்ள வேறுபாடு உண்மையிலே புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது.?

1 hour ago, Paanch said:

தமிழையும் தமிழரையும் ஆரியம் இந்து மதம் மூலம் சிதைப்பதை பொறுத்துக்கொள்ளும்  உங்களால் (தமிழ் மொழி சிதைகப்டாலும் பரவாயில்லை என்று) அதை சிதைக்ப்பதற்காக இந்து மதம் பரப்பிய, பரப்பி கொண்டு இருக்கும் அடிமுட்டாள் பழக்கங்களை  நான் பரிகசிப்பதை பொறுக்க முடியவில்லை. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஆரியம் இந்துசமயத்தின் மூலமும் தமிழரையும் தமிழையும் சிதைப்பதை ஆராச்சியாளர்கள் பலரும் தெரிவிக்கவும், அந்த உண்மையை அறியமுடிவதாலும் அதன்மீது எனக்கு உடன்பாடு வரவில்லை.

16 minutes ago, tulpen said:

தமிழையும் தமிழரையும் ஆரியம் இந்து மதம் மூலம் சிதைப்பதை பொறுத்துக்கொள்ளும்  உங்களால் (தமிழ் மொழி சிதைகப்டாலும் பரவாயில்லை என்று)

ருல்பென் அவர்களே! ஒருவர் தன்கருத்தை எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் அது அவரது உரிமை. ஆனால் இன்னொருவர் கருத்து என்ன என்பதை விளங்கிக்கொள்ளாது அதற்குப் பின்னூட்டம் எழுத முனைவது ஏற்புடையதல்ல.

7 minutes ago, Paanch said:

ருல்பென் அவர்களே! ஒருவர் தன்கருத்தை எப்படிவேண்டுமானாலும் எழுதலாம் அது அவரது உரிமை. ஆனால் இன்னொருவர் கருத்து என்ன என்பதை விளங்கிக்கொள்ளாது அதற்குப் பின்னூட்டம் எழுத முனைவது ஏற்புடையதல்ல.

உங்கள் கருத்தை விளங்கிக் கொண்டேன். ஆரியம் இந்து மதத்தின் மூலம் தமிழரையும் தமிழையும் சிதைப்பதால் உங்களுக்கு  இந்து மத்த்தின. மீது உடன்பாடு இல்லை. அவ்வாறு எமது மொழியையும் , தமிழரையும் சிதைப்பதற்கு ஆரியரால்  இந்து மதத்தின்  மூலம் பரப்பப்பட்ட மூடத்தனங்களை நான் கேலி செய்கிறேன்.  மூடத்தனங்களை பாராட்டமுடியாது.  காவிரி நதி எப்படி உருவானது என்பதை அகத்தியரின் கமண்டலத்தை காகம் தட்டி விட அதிலிருந்து நதி  உருவானது என்று  என்று இந்து மதம் கூறினால் அதை எள்ளி நகையாடுவது தப்பல்ல. 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தை அப்படியொரு அர்த்தத்தில் எழுதவில்லை .  நான்கு வரிகளை வைத்து  என்னை முற்று முழுதாக எடைபோட்டு ஒரு ஆராய்ச்சியே  செஞ்சிடீங்களா  பாஸ் - எங்கள் பார்வையின் கோணம் மாறவேண்டும் என்பதை சொல்வதற்கே முயற்சித்தேன் கருத்தாளர் நிற்கும் இடம் எங்கே என்பதுதான் என் கேள்வி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.