Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் தாயகம் வட மாகாணம் யாழ்ப்பாணம்

நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை

அமைச்சர் சம்பிக்க ரணவக்க நோில் சென்று விகாரையில் வழிபாடு
 
main photomain photomain photo
  •  
தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவற்குழி சம்புத்தி சுமன விகாரைத் திறப்பு விழா எனப் பெயரிடப்பட்ட அழைப்பிதழ் கொழும்பில் உள்ள பிரமுகர்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 
 
பின்னர் 2015 ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமதிப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு விகாரை ஒன்றைக் கட்டுவதற்காக காணி ஒதுக்கப்பட்டு, கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கெதிராக சாவகச்சேரிப் பிரதேச சபை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதவுமின்றி விகாரை கட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தி, சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனால் விகாரையைத் தொடர்ந்து கட்டுவதற்கு நீதிபதி சிறிநிதி நந்தசேனன் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார்.

சம்பிக்க
share-fb.png share-tw.png
விகாரை கட்டுவதற்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபை தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெற்றப்பட்ட பின்னர், அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க நாவற்குழி விகாரைக்குச் சென்று வழிபடும் காட்சி இது. பாட்டாளி சம்பிக்க ரணவக்க, 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து யானைச் சின்னத்தில் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மகரகம தொகுதி அமைப்பாளராக சம்பிக்க ரணவக்க நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அனுமதியை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் சென்ற ஆண்டு ஆவணி மாதம் 20 ஆம் திகதி உரிய ஆவணங்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. விகாரை கட்டப்படும் காணி இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரியது என்பதால் குறித்த காணியில் விகாரை கட்டுவதற்கு கொழும்பில் உள்ள வீடமைப்பு அதிகார சபையின் சிங்கள உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனால் விகாரை கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையும் தமது மனுவை மீளப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சென்ற ஆண்டு பத்தாம் மாதம் பதினொராம் திகதி விகாரையைக் கட்டுவதற்கான அனுமதியையும் சாவகச்சேரி பிரதேச சபை வழங்கியுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டது என்பதை சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் கந்தையா வாமதேவன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் குறித்த விகாரை அவசர அவசரமாக கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது குறித்து கூர்மைச் செய்தித் தளத்திடம் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி காண்டீபன், விகாரை கட்டப்படுவதற்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்றார்.

ஏனெனில், நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காண்பித்தால் பிரதேச சபை கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியே ஆகவேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள சட்டங்கள் மூலமாக ஈழத் தமிழர்கள், தமது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது.

எனவே ஈழத் தமிழர் பிரதேசங்களில் காணி அபகரித்தல், விகாரை கட்டுதல், புத்தர் சிலைகள் வைத்தல் போன்ற விடயங்களுக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து நீதியைப் பெற முடியாது. ஆகவே இந்த விவகாரத்தை ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனையாகவே நோக்கியிருக்க வேண்டும் என்று காண்டீபன் கூறினார்.

இதேவேளை, புதிதாகத் திறக்கப்படவுள்ள விகாரைக்கான புனிதத் தாது, நாளை மறுதினம் 12 ஆம் திகதி குருநாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து காலை எட்டு மணிக்கு ஊர்வலமாக (பெரகரா) எடுத்துச் செல்லப்படும்.

அன்று இரவு அனுராதபுரம் துபாராம சைத்திய விகாரையைச் சென்றடையும் ஊர்வலம், அடுத்த நாள் 13 ஆம் திகதி காலை ஏழு மணிக்கு மீண்டும் அங்கிருந்து ஆரம்பமாகி அன்றைய தினம் மாலை ஐ;ந்து மணிக்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாவற்குழி சம்புத்தி சுமன விகாரையைச் சென்றடையுமென அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நல்லிணக்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் காலத்திலேயே இலங்கைப் படையினரின் ஒத்துழைப்போடு இலங்கை ஒற்றையாட்சியின் சட்டங்களுக்கு அமைவாக விகாரைகள் துரிதமாகக் கட்டப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு மாசி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் கட்டப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான செயற்பாட்டாளர் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் விகாரைகள் கட்டும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றார்.

நாவற்குழி விகாரையை கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னர், கடந்த மாதம் அங்கு சென்ற அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, அந்த விகாரையில் வழிபட்டார்.

ஆயிரம் விகாரைகள் கட்டப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.

சாவகச்சேரி பிரதேச சபை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளது.

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உண்டு. ஆனால் அந்த அதிகாரங்கள் எதுவுமே இதுவரை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காணி அதிகாரங்களை கொழும்பு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் நிர்வாகம் தம்வசப்படுத்தியுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. ஆனால் அந்தத் திருத்தச் சட்டத்தைக் கூட உரிய முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்த விரும்பவில்லையென தமிழ்த் தரப்பு ஏலவே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1072&fbclid=IwAR2JA1cxrtp-3bgRu3JRHxBwZVuQLySMq2QplZcL7mBLlNmhyJG_gB7R3Hc

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் புத்த மதத்திற்கு மாறினால் மொழியையும் நிலத்தையும் தக்கவைக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் இலங்கையில் எதுவும் செய்யலாம்! 

மதம் மாறினவையள் தான் இன்று பெரும்பான்மை சிங்களவர்களாகியுள்ளதாக நான் கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ampanai said:

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் புத்த மதத்திற்கு மாறினால் மொழியையும் நிலத்தையும் தக்கவைக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. 

12 hours ago, ஏராளன் said:

அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் இலங்கையில் எதுவும் செய்யலாம்! 

மதம் மாறினவையள் தான் இன்று பெரும்பான்மை சிங்களவர்களாகியுள்ளதாக நான் கருதுகிறேன்.

ஐம்பெரும் காப்பிய காலம் நினைவுக்கு வருகிறது. காவிரி பூம்பட்டணம் செழித்து ஓங்கிய காலம் அது. பின்னர் சோழர் காலத்தில் பௌத்தம் அழிக்கப்பட்ட சிங்களமும் பாளியும் தான் பௌத்தத்தை பாதுகாத்தன.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நிலத்தில் சொந்த இனத்தால் கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டும்.தேர் வடம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டு பதிலாய் பொக்லைன் இயந்திரமூலம் இழுக்கப்பட்டும் அவமானபடுத்தபடும்  தாயக தமிழர்கள்  பெளத்ததிற்கு மாறி இதுபோன்ற விகாரைகளில் போய் நிம்மதியாய் வழிபாடு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு..

புல்டோசரையும் பொக்லைனையும்விட சக தமிழன் தரம் குறைந்தவனென்றால் புத்தரை தொழுவதில் ஒன்றும் தப்பில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, valavan said:

உண்மைதான்.தமிழினம் தனக்குத்தானே சூனியம் வைத்து அழிந்து கொண்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்துவும் எமது மதம் இல்லை.

பெளத்தமும் எமது மதமில்லை.

தமிழுக்கு, தமிழர்க்கு என ஒரு நிறுவன மயப்பட்ட மதம் இருந்திருக்கவில்லை.  இயற்கையையும், மூதாதையையும் வழிபட்ட நம் இனத்தில், இறை எனும் தத்துவம் இருந்தது ஆனால் நிறுவனமயப்பட்ட மதம் இருக்கவில்லை.

இந்த வெற்றிடத்தை இந்து (பிரம்மணியம்), சமண, பெளத்த, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் நிரப்பி கொண்டன.

தமிழர்களின் பெரும்பான்மை மதமாக எப்போதும் பிரம்மணியம்தான் இருந்தது என்றில்லை.

வர்ணாசிரம அடிப்படையில் அமைவதால் இந்து சமயத்தில், மானம் உள்ள எந்த தலித்தும் இருக்க மாட்டன்(ள்) என்பதும் உண்மையே.

எனவே இன்னொரு முறை மத அடையாளத்தை மாற்றுவதால், நம் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முடியும் என்றால் ஏன் அப்படி செய்ய கூடாது? என்ற கேள்வியில் நியாயம் இருந்தாலும்,

1. ஆக்கிரமிப்புக்கு அடி பணிந்து எம் தற்போதைய மத அடையாளத்தை விட்டு கொடுப்பது இழுக்கில்லையா?

2. நீர்கொழும்பு-மன்னார் வரை கத்தோலிக்கராக மாறிய தமிழர், ஈற்றில் இன மொழி அடையாளத்தையும் இழந்துவிட்டது போல் எமக்கும் ஆகாதா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

D_FpVltXUAApfP_.jpgD_FpVlvW4AAZ7pQ.jpgD_FpVlvX4AAs6dW.jpg

ஈழத்தில் 11 ஆம் வகுப்பு வரை சமய பாடம் ஒரு கட்டாய பாடம். நாங்கள் இந்துக்கள் அல்ல, சைவர்கள்.

எமது மக்கள் ஒரு நலிவுற்ற நிலையில் இன்று உள்ளார்கள்.

தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அரங்கேறும் நில அகபரிப்பு, பறிபோகும் வாழ்வாதாரங்கள்.
வறுமை, விரக்தி, யாருமே அற்ற நாதி நிலை.

இந்த நிலைமையில் நாளைக்கு எவ்வாறு தனி நபராக, குடும்பமாக, சமூகமாக வாழ்வை தக்கவைத்து வாழ்வது என விடை கண்டால் மட்டுமே, வாழ்ந்தால் மட்டுமே, நாளைமறுநாள் பற்றி யோசிக்க மக்களும் நிலமும் இருக்கும்.

சிங்கள குயேற்றத்தையும் கொஞ்சம் குறைக்கலாம். மொழியை ஒரு பிரேதச ரீதியாக தக்கவைக்கலாம்.

இதை விட மாற்று வழிகள் இருக்கும் என்றால் அவையும் மக்களால், மக்கள் விரும்பிகளால் நிச்சயம் ஆராயப்படல் வேண்டும்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ampanai said:

அந்த தமிழ் தலைவர்கள் என்ன செய்கின்றார்கள்? ஆட்சியை தக்க வைப்பதில் கவனம் செலுத்துகின்றார்களோ? இலங்கையின் ஆட்சியை நிர்மாணிக்கும் வல்லமை பெற்றவர்கள் தன் இனத்தின் தலைவிதியை மாற்ற முடியாத  பொய்யர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

D_FpVltXUAApfP_.jpgD_FpVlvW4AAZ7pQ.jpgD_FpVlvX4AAs6dW.jpg

ஈழத்தில் 11 ஆம் வகுப்பு வரை சமய பாடம் ஒரு கட்டாய பாடம். நாங்கள் இந்துக்கள் அல்ல, சைவர்கள்.

இதே பாடத்திட்டம்தான் இலங்கையில் தமிழர் வந்தேறிகள் என்றும், தமிழ் மன்னன் முந்து சிவனின் மகன் ஒரு சிங்கள மன்னம் எண்டும் கூட எமக்கு படிபிச்சது. அதுக்காக அதையும் ஏற்போமா?

சைவம் எமது மதம் என்போரே,

1. முதன் முதலில் சைவம் என்ற சொல் எந்த தமிழ் இலக்கியத்தில், எந்த கல்வெட்டில் வந்தது?

2. சைவம் எமது வாழ்வின் ஆரம்ப சமயம் எனில், ஏன் எமது சங்க இலக்கியங்கள் சைவ இலக்கியங்களாக இல்லை?

சைவமோ, வைணவமோ, காணபத்யமோ, சாக்தமோ, செளமாரமோ இவற்றை சாம்பாராக்கி ஆதி சங்கரர் உருவாக்கிய “இந்து” வோ எமது மதம் அல்ல.

இஸ்லாத்துக்கு முந்திய அரேபியர்களை போல எமக்கும், நிறுவனமயப்படாத, உள்ளுர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப இடத்துக்கு இடம் வேறு பட்ட ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் மதம் இருக்கவில்லை. 

இப்போதைய அந்தமான் பழங்குடிகளுக்கு, அமேசன் பழங் குடிகளுக்கு எப்படி நிறுவன மயப்பட்ட மதம் இல்லாமல் ஆனால் இறையியல் இருக்கின்றதோ, அப்படி.

இந்த பண்டைதமிழர் இறையியலை முதலில் ஆக்கிரமித்து அழித்தொழித்தது பிரம்மணியம். எம் கடவுளாரை காட்டு மிராண்டி ஆக்கி, எம் வணக்க முறையை கவிச்சி என்றாக்கி. எங்கள் குறு நிலத் தெய்வங்களான முருகனை தங்கள் சிவனுக்கு இரண்டாம் மகனாக சுவீகரித்து, எம் மேல் ஆக்கிரமிப்பு மூலம் வலுக் கட்டயமாக அமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பே சைவம்/இந்து எல்லாமே.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளனின் மொழியில், அவன் முறையில் அவனை கடவுளுக்கும் நமக்குமான ஏஜெண்டாக கொண்டு வழிபட்டு, எம் இலக்கியமும், பக்திமார்க்கம் என்று பிரம்மணிய ஆசான்களின் நாயன்மாரின் வழிப்பட்டு போன பின், இப்போ நாமே ஆக்கிரமிப்பாளனின் மதத்தை தலையில் சுமந்து “நான் இந்து என மார்தட்டுகிறோம்”.

நிற்க,

இதேபோல் இப்போ நாமெல்லாம் தமிழ் பெளத்தராக மாறிவிட்டால், இன்னும் ஒரு 100 வருடத்தில் இன்னொரு சின்ன குமாரசாமி வந்து “நான் தமிழ் பெளத்தன்” என்று மார்தட்டி விட்டுப் போகட்டுமே?

தமிழ் தப்பினால் போதாதா?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதங்கள்  புகுத்தப்படும் போது வேண்டாத மொழிகளும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் புகுத்தப்படுகின்றது. இதுதான் ஐரோப்பியர்களின் வணிக படையெடுப்புகளிலும் நடந்தது.
இன்று  இலங்கையின் தமிழ் பிரதேசங்களிலும் இந்திய தமிழ் நாட்டிலும் ஒரு நாடு  எனும் பெயர்ல் சிறப்பாக நடந்தேறி வருகின்றது.

ஈழத்தமிழன் மதவெறி பிடித்தவனல்ல. ஆனால் மொழி சிதையும் போது மதத்தை கெட்டியாக பிடிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.......

main photo

புத்தமதம் ஏன் தமிழை அரவணைக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் ஏன் சைவம் எமது மதம் இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

1. எமது பழ வகைகள் எவை? மா பலா வாழை. ஏன் சங்க இலங்கியங்களிலோ, கல்வெட்டுகளிலோ அப்பிள் திராட்சை பற்றி ஏதுமில்லை? ஏனென்றால் அவை எம் நிலத்துக்குரியன அல்ல. அவை பற்றி தமிழுலகு அப்போது அறிந்திருக்கவில்லை.

2. எமக்கு ஏன் நானிலங்கள் மட்டும்( முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி). ஏனென்றால் பாலை எமக்கு அந்நியமானது. தமிழர் நிலத்தில் பாலை இல்லை.

3. ஏன் தமிழ் இலக்கியங்களில் பனிச் சரிவு பற்றிய பதிவுகள் இல்லை ஆனால் கடற்கோள் பற்றிய பதிவு இருக்கிறது? ஏனென்றால் நாம் பனிசூழ் பகுதியில் வாழவில்லை.

4. சரி அப்போ சைவத்தின் முழுமுதற் கடவுள் யார்? சிவன்.

5. சிவன் எங்கே இருக்கிறார்? வடக்கே, திபெத்தில், கைலாய மலையில்.

6. எனது, மொழி, உணவு, இலக்கியம், பண்பாடு எல்லாமே என்னை சுற்றியே இருக்க , என் மதம் மட்டும் எப்படி கைலாயத்தில் இருந்து வந்தது?

7. அப்போ எனது மதம் இங்கே உருவாகவில்லை, கைலாயத்துக்கு அருகில் இருந்த யாரோ என் நிலத்துக்கு வந்து எனக்கு என்மதம் பற்றி சொல்லி என்னையும் மதம் மாற்றி இருக்கிறார்களா?

8. அப்போ நான் இப்படி மாறும் முன் என்னிடம் இருந்த இறையியல் என்ன?

9. அதுதானே என் உண்மையான மதம்? அல்லது நம்பிக்கை?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

மதங்கள்  புகுத்தப்படும் போது வேண்டாத மொழிகளும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் புகுத்தப்படுகின்றது. இதுதான் ஐரோப்பியர்களின் வணிக படையெடுப்புகளிலும் நடந்தது.
இன்று  இலங்கையின் தமிழ் பிரதேசங்களிலும் இந்திய தமிழ் நாட்டிலும் ஒரு நாடு  எனும் பெயர்ல் சிறப்பாக நடந்தேறி வருகின்றது.

ஈழத்தமிழன் மதவெறி பிடித்தவனல்ல. ஆனால் மொழி சிதையும் போது மதத்தை கெட்டியாக பிடிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.......

main photo

புத்தமதம் ஏன் தமிழை அரவணைக்கவில்லை?

ஒரு காலத்தில் பெளத்தமே தமிழின் பிரதான மதம். பிரமணியத்துக்கும் பெளத்ததுக்குமான சண்டையில் தமிழில் இருந்து பெளத்தம் விரட்டப் பட்டது. இந்திய துணைக் கண்டத்தின் கடைக்கோடி வரை துடைத்தெறியப்பட்ட பெளத்தம், சிங்களவர் மத்தியில் மட்டும் தங்கியது. அங்கேயாவது தன் இருப்பை தக்க வைக்க வேண்டும் என்ற அவதியில், தேரர்கள் மூலம், பெளத்தத்தை சிங்கள இன அபிமானத்துடன் சேர்த்து, பெளத்த-சிங்கள அடையாளத்தை கட்டி எழுப்பியது. நீ சிங்களவன் என்ற அடையாளத்தை பேண வேண்டுமா? அப்போ பெளத்தனாயிரு. ஒன்றை இழந்தால் மற்றதயும் இழப்பாய் என்று பயமுறுத்தி, பெளத்தம் சிங்களத்தில் குருவிச்சை போல ஒட்டுண்ணி வாழக்கை வாழ்கிறது.

தன் இருப்பை சிங்களத்திடம் பேண, பெளத்தம் பிரம்மணியம் சேர் தமிழை, தமிழரை கருவறுக்க வேண்டிய பரம்பரை வைரியாக சிங்களத்திடம் காட்டுகிறது.

புத்தம் ஏன் தமிழை ஆதரிக்கவில்லை என்பதற்கான பதில் மட்டுமில்லை. சிங்கள-பெளத்த மஹாவம்ச மனோநிலை என்றால் என்ன, எப்படி உருவானது என்பதற்கும் இதுவே விளக்கம்.

நிலமா? மதமா? மொழியா? என கேட்டால் முதலில் நிலம்தான், நிலம் மட்டும்தான்.

நிலம் இருந்த படியால்தான் புத்தமதம் அன்று தப்பியது.

இன்று தமிழன் நூறு வருடங்கள் பின்னரும் இலங்கை தீவில் இருக்க இன்று நிலத்தை தக்க வைக்கவேண்டும். 

அதற்கு அரசியல்வாதிகளை மட்டும் மக்கள் நம்பி இருக்க கூடாது.

  • ஒன்று இணைந்த போராட்டங்கள்,
  • சுயநலம் அற்ற தலைமைகளை உருவாக்குதல்,
  • தலைமைகள் மீதான விழிப்புணர்வை வளர்த்தல்.
  • குடும்ப பெண்களை முன்வைத்து பொருளாதார வளத்தை உருவாக்குதல் ......

என என் கருத்தை கூறினாலும், தாயக மக்கள் தான் இறுதியில் தமக்கு சரியான பாதைகளை தெரிந்து அவற்றை முன்னெடுக்கவேண்டும். அதற்கு புலம்பெயர் மக்கள் உதவவேண்டும்.

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

உங்களை போல நானும் முன்பு சிந்திப்பதுண்டு. ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறீர்கள்.

சிங்கள-பெளத்தம் என்பது இரெட்டைக் குழல் துப்பாக்கி. சிங்கள மொழியின் ஆதிக்கம். பெளத்த மதத்தின் ஆதிக்கம். ரெண்டுமே ஒன்றுக்கு ஒன்று குறையாத குறிக்கோள்கள்.

அதனால்தான் தமிழில், தமிழால் இலங்கையில் பெளத்தம் வளர்க்க அரசோ, பிக்குகளோ முனவதில்லை.

மதம் ➡️ மொழி ➡️ நிலம்

மொழி ➡️ மதம் ➡️ நிலம் 

எந்த வகையிலும் தமிழ்-இந்து/கிறீஸ்த பகுதியை, சிங்கள-பெளத்த பகுதியாக மாற்றும் மட்டும், மஹாவம்ச மனோநிலையின் பசி அடங்குமா என்பது கேள்விக் குறியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ஒரு காலத்தில் பெளத்தமே தமிழின் பிரதான மதம். பிரமணியத்துக்கும் பெளத்ததுக்குமான சண்டையில் தமிழில் இருந்து பெளத்தம் விரட்டப் பட்டது. இந்திய துணைக் கண்டத்தின் கடைக்கோடி வரை துடைத்தெறியப்பட்ட பெளத்தம், சிங்களவர் மத்தியில் மட்டும் தங்கியது. அங்கேயாவது தன் இருப்பை தக்க வைக்க வேண்டும் என்ற அவதியில், தேரர்கள் மூலம், பெளத்தத்தை சிங்கள இன அபிமானத்துடன் சேர்த்து, பெளத்த-சிங்கள அடையாளத்தை கட்டி எழுப்பியது. நீ சிங்களவன் என்ற அடையாளத்தை பேண வேண்டுமா? அப்போ பெளத்தனாயிரு. ஒன்றை இழந்தால் மற்றதயும் இழப்பாய் என்று பயமுறுத்தி, பெளத்தம் சிங்களத்தில் குருவிச்சை போல ஒட்டுண்ணி வாழக்கை வாழ்கிறது.

அந்த கும்பலில் வேற்று மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள் அல்லவா?
 
இனஅழிப்புக்கு பிந்திய தமிழீழம் மீதான ஆக்கிரமிப்பின் குறீயீடு சம்புத்தி

வடதமிழீழம்: யாழ்ப்பாணம் – நாவற்குழியில் முதல் சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை திறந்துவைக்கப்படவுள்ளது.

இன அழிப்பு யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்டமான பௌத்த விகாரை இதுவாகும். இந்த விகாரையின் திறப்பு விழா இன்று இடம்பெறவுள்ளது.

சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை ஶ்ரீலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கு முன்னோடியாக, குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு நாவற்குழி நோக்கி பேரணியாக புறப்பட்ட விகாரைக்கான புனித தாது, அநுராதபுரம் தூபராம சைத்திய விகாரையை நேற்று இரவு வந்தடைந்தது.

2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அருகில், நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் அத்துமீறி குடியிருந்தனர்.

தமிழர்களுக்கு எதிரான மனநிலையுடன், நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியமர்த்தப்பட்டனர்.

அந்த மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்களை அமைக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஹெல உறுமய உதவிபுரிந்தது.

பின்னர் விகாரை அமைக்கும் பணி ஆரம்பித்தபோது, சாவகச்சேரி பிரதேசசபையினால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்பின்னர் அமைச்சர் சஜித்தின் தலையீட்டையடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையும் விகாரை அமைக்க அனுமதியளித்தது.

தமிழர்கள் வாழும் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளினால் பரவலாக குற்றம் சுமத்தப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இவ்வாறு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thaarakam.com/news/79246?fbclid=IwAR0R6qeBzW2FdqaN2w16b4vmY2R90NpcZXbeZkizw1WbI8Crea5t6sGk4zw

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

அந்த கும்பலில் வேற்று மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள் அல்லவா?
 
தமிழ்-இந்து/தமிழ்-கிறிஸ்தவர்/முஸ்லீம்களின் கதையை முடித்த பின் அவர்களின் கதை முடிவும் தொடங்கும்.

எ. எல் குணசேகர என்று ஒரு வக்கீல், பக்கா இனவாதி. கீழ்நாட்டு, கிறீஸ்தவ சிங்களவர். 94-99 வரையில் தொலைகாட்சி பேட்டிகளில், சும்மா தூள்பறக்க இனவாதம் பேசுவார். குமார் பொன்னருக்கும் இவருக்கும் தொலைக்காட்சியில் நடந்த விவாதங்களில் அத்தனை சூடு இருக்கும்.

பின்னர் எதோ ஒரு விடயத்தில், ஒரு சிங்கள ஊரில் வைக்கப்பட்ட மாதா சிலை விவகாரம் என நினக்கிறேன், இவர் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை பேசப் போக, முழு பெளத்த-சிங்கள இயந்திரமுமே இவருக்கு எதிராக திரும்பியது. 

துரோகிபட்டம், போத்துகீசருக்கு மூதாதையர் பாலியல் சேவகம் என்பதாக கிழிச்சு தொங்க விடப்பட்டார்😂.

கடைசியில் நீ சிங்களவனே இல்லை என்றெல்லாம் சொல்லி, எனக்கா இந்த நிலை என ஆள் கண்ணீர்விட்டது, பொது வெளியில்.

22 hours ago, goshan_che said:

உங்களை போல நானும் முன்பு சிந்திப்பதுண்டு. ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறீர்கள்.

சிங்கள-பெளத்தம் என்பது இரெட்டைக் குழல் துப்பாக்கி. சிங்கள மொழியின் ஆதிக்கம். பெளத்த மதத்தின் ஆதிக்கம். ரெண்டுமே ஒன்றுக்கு ஒன்று குறையாத குறிக்கோள்கள்.

அதனால்தான் தமிழில், தமிழால் இலங்கையில் பெளத்தம் வளர்க்க அரசோ, பிக்குகளோ முனவதில்லை.

மதம் ➡️ மொழி ➡️ நிலம்

மொழி ➡️ மதம் ➡️ நிலம் 

எந்த வகையிலும் தமிழ்-இந்து/கிறீஸ்த பகுதியை, சிங்கள-பெளத்த பகுதியாக மாற்றும் மட்டும், மஹாவம்ச மனோநிலையின் பசி அடங்குமா என்பது கேள்விக் குறியே.

சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். மேலதிக பதில்கள் இப்பொழுது என்னிடம் இல்லை. 

நிலத்தில் பொருளாதார பலத்துடன் இருந்தால் அது மற்றைய கதவுகளை திறக்கும்.  ஆனால், பொருளாதார பலம் பெற எமக்கு இதர கதவுகள் திறந்து இருக்க வேண்டும் என்பதும் உண்மை. 

எவரும் வெற்றிபெற்றவர்களை தான் பின் தொடருவார்கள். அந்த வகையில் பெரும்பான்மை சமூகம் இன்று அந்த வெற்றி மன வட்டத்துள் உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2019 at 3:48 AM, nunavilan said:

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 

On 7/12/2019 at 12:48 PM, குமாரசாமி said:

உண்மைதான்.தமிழினம் தனக்குத்தானே சூனியம் வைத்து அழிந்து கொண்டிருக்கின்றது.

நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கு அத்தியடிக் குத்தியன் மூலகாரணம் என்று வந்த செய்திகள் படித்த ஞாபகம் உள்ளது.

யாழ். நாவற்குழியில்

சமித்தி சுமண விகாரை திறப்பு

யாழ்ப்பாணம், நாவற்குழியில் அமைக்கப்பட்ட நல்லிணக்க விகாரை என அழைக்கப்பட்ட சமித்தி சுமண விகாரை இன்று (13) பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு அமைய திறந்து வைக்கப்பட்டது.

இராணுவம் உட்பட முப்படைகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம், நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்திற்கு அருகில் கட்டப்பட்ட மிகப்பெரிய விகாரையான சமித்தி சுமண விகாரை இவ்வாறு இன்று (13) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த குடியேற்றத்தில் சுமார் 9 சிங்கள குடும்பங்களே வசிப்பதாக குறித்த பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள தென்மராட்சி பிரதேச சபையின் தலைவர் வாமதேவன் கந்தையா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள குடியேற்றத்தில் இராணுவத்தினால் 28 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதில் சுமார் 20 பயன்பெறும் குடும்பங்கள் அங்கு தங்கியிருப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விகாரைக்கான புனித தாது குருணாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து இன்று (13) மாலை எடுத்து வரப்பட்டது.

நாவற்குழி சந்தியில் இருந்து, விகாரைக்கான புனித தாது மற்றும், பௌத்த மத அனுஷ்டான முறைப்படி, தீப் பந்தம், பௌத்த கொடி, ஆலவட்டங்களுடன், பிக்குகளின் தலைமையில் புனித தாது, விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வடமேல் மாகாணம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு, சாது எனும் நாமத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட விகாரையின் மேல் , புனித தாது வைக்கப்பட்டது.

இந்த புனித தாதுவை, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்ஷண ஹெட்டியாராச்சி, உட்பட முப்படைகளின் தளபதிகள், உட்பட விகாராதிபதிகள், விகாரையின் மேல் வைத்தனர்.

அதன் பின்னர், பௌத்த சமய விதிமுறைகளின் படி, பிரித் ஓதப்பட்டது.

இவ்விகாரை திறப்பு விழாவில், புனித தாது எடுத்து வரப்பட்டது முதல் விகாரையின் மேல் வைக்கும் வரை, இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.thinakaran.lk/2019/07/13/உள்நாடு/37162/யாழ்-நாவற்குழியில்-சமித்தி-சுமண-விகாரை-திறப்பு

யாழà¯. நாவறà¯à®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯ à®à®®à®¿à®¤à¯à®¤à®¿ à®à¯à®®à®£ விà®à®¾à®°à¯ திறபà¯à®ªà¯-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening

யாழà¯. நாவறà¯à®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯ à®à®®à®¿à®¤à¯à®¤à®¿ à®à¯à®®à®£ விà®à®¾à®°à¯ திறபà¯à®ªà¯-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2019 at 7:35 AM, goshan_che said:

8. அப்போ நான் இப்படி மாறும் முன் என்னிடம் இருந்த இறையியல் என்ன?

9. அதுதானே என் உண்மையான மதம்? அல்லது நம்பிக்கை?

தமிழரின் இறையியலில் வைரவர் முக்கியமானவர். முருகனும் தமிழர் கடவுள்.

சிங்கள மொழி உருவாக முதல் சிங்களவரும் தமிழ் பேசும் முருக பக்தர்கள்.

பௌத்தம் தமிழகத்தை தன்னகத்தே கொண்ட போது சிங்களவரும் பௌத்தராகினர். 

பின்னர் பிராமணருக்கு ஆதரவாக பௌத்தத்தை சோழர் அழித்த போது தமிழகம் சைவமானது.

ஆனால் சிங்களவரை தமிழ் மொழி மூலம் சைவராக்க முடியவில்லை. 

தமிழரின் பண்டைய கடவுள்களான முருகன், வைரவர் கோவில்களை அமைத்து தமிழர் பண்பாடு மீண்டும் சிறக்க வேண்டும்.

தமிழ் பௌத்தத்தை உயிர்ப்பித்து சிங்கள பௌத்தத்தின் ஏகாதிபத்தியத்தையும் மகாசங்கத்தின் வல்லாதிக்கத்தையும் 

கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Jude said:

இதனால்  கள்ளம் கபடமறியா எமது முஸ்லீம் அன்புச்சகோதரர்களுக்கு சொல்ல விளைவது என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.