Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் சுமார் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளதாக விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

Featured Replies

தன்னாட்சி, தட்சார்பு, தன்னிறைவு என்ற கோட்பாடுகளுக்கு ஏற்பவே தான் செயற்பட்டு வருவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். 

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முஸ்லிம் மயமாக்கல் தொடர்பில் அத்துரலிய ரத்தன தேரர் தனக்கு கூறியவற்றை அவர் இவ்வாறு விபரித்தார். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பலவிதமாக பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.  சுமார் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள், இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்துரலிய ரத்தின தேரர் என்னிடம் தெரிவித்தார். இந்த செயற்பாடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எனவே எமது காணிகள், எமது பெண்கள், உரிமைகள் என்பன பறிபோகின்றன என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளாா்.

http://www.hirunews.lk/tamil/220709/கிழக்கில்-சுமார்-300-தமிழ்-கிராமங்கள்-முஸ்லிம்-கிராமங்களாக-மாறியுள்ளதாக-விக்னேஸ்வரன்-குற்றச்சாட்டு  
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்

விக்னேஷ்வரன்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

"எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்" என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டமையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா என்று, முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் பிபிசி தமிழ் வினவியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பத்திரிகையொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தொடர் கட்டுரைகளின் மூலம் இதனை தான் அறிந்து கொண்டதாக கூறியதோடு; "ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்" என்றார்.

"தமிழர் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக, இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது" என்றும் அவர் பிபிசி யிடம் கூறினார்.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறியுள்ள இந்த விடயமானது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கவலை தெரிவித்துள்ளார்.

விக்னேஷ்வரன் கூறுகின்றமை போல் தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து அந்தக் கிராமங்களை முடியுமான வரை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழர், முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கு உள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, "பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்" எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.

"முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விடயத்தைக் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, அவர் குறிப்பிட்ட 300 தமிழர் கிராமங்களும் எந்த மாவட்டத்தில் உள்ளன என்ற விவரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்" என்றும் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49069613

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பான்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா ?

HRS_6839.JPG

 

-எம்.ரீ. ஹைதர் அலி -
சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா
என்ற சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது - பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

அரசியல் அதிகாரங்களை பெறுவதற்குரிய மிகப்பெரிய மூலதனமாக இனவாதம் மாறிவிட்டதென்பதற்கு சீ.வி. விக்னேஸ்வரன் விலக்கல்ல என்பதை 300 தமிழ் கிராமங்கள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டது என்கின்ற ஆதாரமற்ற மிகப்பெரும் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக முதலமைச்சராகிய சீ.வீ. அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு வெளியேறியதற்குப்பின் தனெக்கென ஒரு அரசியல் இருப்பை இனவாத்த்தினூடாக தக்கவைக்க முயற்சிப்பது அவர் வகித்திருந்த ஆதாரபூர்வமான உண்மையின் பக்கம் மாத்திரம் நீதி செலுத்தும் உயர் நீதியரசர் என்கின்ற பதவிக்கு இவர் தகுதியற்றவராக இருந்திருப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது.

நல்லிணக்கம், ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு என்று இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் பேரின சக்திகளால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்ற இக்கால கட்டத்தில் சக சகோதர சிறுபாண்மை மீது இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டதை முஸ்லிம் சமூகம் மிக வன்மையாக கண்டிக்கின்றது.

கடந்த யுத்த காலத்தின்போது யுத்தத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொண்டிராத முஸ்லிம் சமூகம் எண்ணில் அடங்காத உயிர்ச் சேதங்களையும், பாரிய பொருளாதார இழப்பையும், தமது வாழ்வுரிமைகளையும் தமிழ் போராட்டக்காறர்களால் இழந்து வட, கிழக்கில் துன்பப்பட்டதை சீ.வீ. அவர்கள் மறந்துவிட்டு பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

21/4 தாக்குதலுக்கு பின்னரான காலத்தில் முஸ்லிம் சமூகம் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வாறான அபாண்டமான கருத்துக்கள் முஸ்லிம் சமூகம் மீதான சந்தேகப் பார்வையை மேலும் அதிகரிக்கும் விதமாக மாறியுள்ளது.

நாட்டில் பேரினவாதம் சிறுபாண்மைகளை ஓரம்கட்டி தனிச் சிங்கள இராச்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற கோசத்துடன் ஒரு பன்சலையினூடாக ஒரு ஆயிரம் வாக்கு என்ற முன்னெடுப்புக்களை முன்னெடுத்து 7,000,000 பேரின் வாக்கினால் நாட்டினுடைய தலைவரை தேர்வு செய்ய முயற்சிக்கும் மிக ஆபத்தான சூழலில் சிறுபாண்மைக்குள் பிளவுகளை ஏற்படுத்தி பெரும்பாண்மைகளின் கைகூலியாக சீ.வீ. செயற்படுகின்றாரா என்ற பலத்த சந்தேகம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்றி வேறு எவராலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்கின்ற மிகப்பெரும் உண்மையை சீ.வீ. வருகின்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து வெளியேற்றப்படும் அந்தநாளில் புரிந்துகொள்வார்.

ஆக மொத்தத்தில் சீ.வீ. அவர்கள் இனவாத அரசியலை கைவிட்டுவிட்டு ஜனநாயக நீரோட்டத்தில் இன நல்லிணக்கத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கின்ற நல்ல சிந்தனையுடன் எதிர்காலத்தில் பயணிக்க சிறுபான்மை சமூகம் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், இன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.

https://www.madawalaenews.com/2019/07/scv.html

 

  • கருத்துக்கள உறவுகள்

ஷிப்லி பாறுக்  முஸ்லிம் இனவாதி கிஸ்புல்லா பற்றி ஒரு வார்த்தை பேசாத இவரின் கூற்றை எப்படி உண்மையாக எடுக்க முடியும்??

விக்கியின் கூற்றுக்கு முஸ்லீம் மதவெறியர்களின் பதிலிலுள்ள பதற்றம் அவரது கூற்றை உண்மையாக்குகிறது.

நல்ல முஸ்லிம்களுடன் இன ஐக்கியத்தை ஏற்படுத்த, கள்ளக்காணி பிடிக்கும் முஸ்லீம் காடையர்களின் செயல்களை பகிரங்கமாக அம்பலப்படுத்துவது பெரிதும் உதவும்.

கிழக்குமாகாண பிரதிநிதியான சம்மந்தன் தனது வீட்டுக்கு கிட்ட இருக்கும் கன்னியா பறிபோவது கூடத் தெரியாமல் இருக்கும் நிலையில் இந்த விடயத்தில் விக்கியின் செயல்கள் பாராட்டப்பட வேண்டியவை.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

கடந்த யுத்த காலத்தின்போது யுத்தத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குகொண்டிராத முஸ்லிம் சமூகம் எண்ணில் அடங்காத உயிர்ச் சேதங்களையும், பாரிய பொருளாதார இழப்பையும், தமது வாழ்வுரிமைகளையும் தமிழ் போராட்டக்காறர்களால் இழந்து வட, கிழக்கில் துன்பப்பட்டதை சீ.வீ. அவர்கள் மறந்துவிட்டு பேசுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரில் அரசுக்கு முண்டு கொடுத்தே  முஸ்லிம்கள் தான். அது உளவு படையில் இருந்து தமிழ் கிராமங்களை அழிப்பது வரை.

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் ஐயா 300 கிராமங்கள் என்று இலக்கம் குறித்து பேசும்போது பொத்தாம் பொதுவாக ஆய்வு இல்லாமல் பேசுவது சரியல்ல. கிழக்கில் மொத்தமாகவே 300 முஸ்லிம் கிராமங்கள் இல்லையே என முஸ்லிம் தரப்பில் இருந்து எழுப்பபட்ட கேழ்விக்கு விக்னேஸ்வரன் ஐயா பதில் சொல்ல வேண்டும். உண்மையிலேயே பொது எல்லைகலைக் கொண்ட 300 தமிழ் மற்றும் முஸ்லிம் கிராமங்கள் கிழக்கில் இல்லையென்பதுதான் உண்மை. 

  • தொடங்கியவர்

"கிழக்கில் மொத்தமாகவே 300 முஸ்லிம் கிராமங்கள் இல்லையே என முஸ்லிம் தரப்பில் இருந்து எழுப்பபட்ட கேழ்விக்கு விக்னேஸ்வரன் ஐயா பதில் சொல்ல வேண்டும்"

விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் கருத்து ஆதரமில்லாதது என்றால், இங்கே மறுதலிக்கும் தரப்பு அதை ஆதாரத்துடன் மறுப்பதே  பண்பானது.

முஸ்லீம் தரப்பு கிழக்கில் எத்தனை தமிழ் கிராமங்களை 1948இல் இருந்து முஸ்லீம் கிராமங்களாக மாற்றி உள்ளார்கள் என ஆதாரத்துடன் சேர்ப்பிக்க உரிமை உள்ளது. 

எத்தனை வேற்று மத மக்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி  உள்ளார்கள் என்ற புள்ளி விபரமும் தெரியப்படுத்தப்படலாம். அதுவும் அவர்களின் சனநாயக உரிமை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/23/2019 at 11:19 AM, colomban said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்றி வேறு எவராலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்கின்ற மிகப்பெரும் உண்மையை..

tenor.gif

அதிகபடியா அவையளுக்கு இறங்கி போகினமா ..? 😢

  • கருத்துக்கள உறவுகள்

Asmy.jpg

தனது தமிழ் சமூகத்திலிருந்து எவரோ ஒருவர் சொன்ன வாய் பேச்சை வைத்து தன் சமூகம் பாதிக்கப்படுவதாகவும் தன் சமூகத்தின் உரிமைகள், இருப்புக்கள், வாழ்வாதாரம் பறி போவதாகவும் பகிரங்கமாக ஆதாரங்கள் இல்லை என்று தெரிந்தும் தமிழர் தரப்பின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவராக இருக்கும் முன்னாள் வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தன் சமூகம் சார்ந்து சொன்ன கருத்துக்களை முந்தியடித்துக் கொண்டு ஊடக அறிக்கைகள் மூலம் விமர்சிக்கும் நாம் இழந்து போயுள்ள எமது உரிமைகள், நிலபுலங்களை, பிரதேச எல்லைகளை மீட்க என்ன முன்னெடுப்புகளை செய்துள்ளோம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி கேள்வி எழுப்புகிறார்.
 
வட மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு முஸ்லிம் தலைமைகள் அறிக்கை விடுவதையிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
 
அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது-
 
முன்னூறு கிராமங்களும் வீதிகளும் முஸ்லிம் மயப்படுத்தப்பட்டுள்ளதையும் தமிழ்ப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆதராமில்லாமல் பொறுப்பு வாய்ந்த தமிழ் தலைவர்களில் ஒருவரான விக்னேஸ்வரன் ஊடங்களில் பகிரங்கமாக சொன்ன அபாண்டங்களை அவர் சமூகம் சார்ந்தும் அவரது எதிர்கால அரசியல் சர்ந்ததாகவும்  அதன் பின்னாலுள்ள சக்திகள் பின்னணிகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டுமே தவிர வெறுமனே அவருக்கெதிரான ஊடக அறிக்கைகளால் எதனையும் நாம் சாதித்து விடமுடியாது.
 
நாம் இழந்துள்ளத்தை பகிரங்கமாகப் பேசி, அதற்காகப் போராடததன் விளைவுகள் தான் இவ்வாறான அறிக்கைகளுக்கு காரணம் எனலாம். கோறளைப்பற்று மேற்கில் பறி கொடுக்கப்பட்ட காணிகள் மீட்கப்படவில்லை. வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபை உருவாக்கம் இழுபறி நிலையில் உள்ளதமையால் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை கண்டும் காணாமல் இருக்கிறோமா? மீனவர்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டுள்ளது. அதற்கான சரியான தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. வயற்காணிகள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் என அடுக்கிக் கொண்டே போகுமளவிற்கு எம் சமூகத்தின் பிரச்சினைகள் நிறைந்துள்ளன.
 
நாம் இதையெல்லாம் பகிரங்கமாக எடுத்துரைத்து தீர்வு காண்பதை விட்டு விட்டு அறிக்கைகள் விடுவதால் ஆன பயன் என்பதயும் நாம் அலச வேண்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்கான முன்னாள் நீதிபதி ஒருவர் ஆதாரமற்ற செய்திகளை விட்டு இன முரண்பாடுகள் தோற்றுவிக்கும் செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும். எமது சமூகம் கடந்த கால யுத்த சூழலிலும் அதன் பின்னரான காலப்பகுதிகளிலும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் பேசப்படுவது தான் இவ்வாறான கருத்துக்ளுக்கு பதிலாக அமையும்.
 
வடக்கில் முஸ்லிம்கள் பலவந்தமாக துரத்தப்பட்டு பல கிராமங்கள் இழக்கப்பட்டுள்ளன. அதே நிலைமை கிழக்கிலும் குறிப்பாக எமது பிரதேசத்தில் குஞ்சான்குளம், காயங்குளம் பகுதிகளிலும் தமிழ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தலையீடுகளும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
 
எமது பிரதேசத்தில் எழும் காணிப்பிரச்சனைகளின் போது கூட தமிழ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் களத்தில் நின்று போராடி கையகப்படுத்தும் நிலை தொடர்கிறது. இதையெல்லாம் நாம் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டு அறிக்கையூடாக அரசியல் செய்து விட்டுப்போவதால் சமூகம் அடையப்போகும் நன்மை தான் என்ன?
 
பிரதேசத்திலுள்ள காணி எல்லைப் பிரச்சினைகளை தீர்க்க எமது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதேச செயலாளராக வரமுடியாத நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும் அதே வேளை, எமக்கு கிடைக்கிற திறமையான அதிகாரிகளையும் இழந்தே வருகின்றோம்.
 
அண்மையில் வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் வழங்களில் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய அளவானவையே வழங்கப்பட்டன. இந்த விடயத்தில் கூட அரசியல்வாதிகளும் பிரதேச செயலாளர்களும் மேற்கொண்ட ஆக்கபூர்வமான முயற்சிகள், முன்னெடுப்புக்கள் என்ன?
 
ஆகக்குறைந்து குறித்த பிரதேச எல்லைக்குள் வருகின்ற காணிப் பிரச்சனைகளை தீர்க்க நீதி மன்றங்களை நாடுகின்ற போது குறித்த காணி தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேச செயலக எல்லைக்குள் உள்ளதென்பதைக் கூட ஊர்ஜிதப்படுத்தி ஆவணங்கள், கடிதங்களை வழங்க முடியாத அரச அதிகாரிகளை பெற்றுமுள்ளமை எமது சமூகம் பெற்றுள்ள துர்ப்பாக்கி நிலை என்று சொல்வதை விட வேறில்லை.
 
தமிழ் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவர்கள் சமூகம் சார்ந்து குரல் கொடுப்பதையும் அதிகார ரீதியாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் இனவாத நடவடிக்கையாக நாம் விமர்சிக்க முடியாது. அது அவர்கள் இனம் சார்ந்த நடவடிக்கையாகும். இதற்கெதிராக அறிக்கை விட்டு எமது கையாலாகாத தனத்தை வெளிக்காட்டிக் கொள்கிறோமே தவிர ஆக்கபூர்வமான எந்த செயற்பாடுகளும் எம்மிடம் இல்லை.
 
அரசியல்வாதிகள் தமக்கான வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டு செயற்படுவதனால் இவ்வாறான சூழ்நிலைகளில் பேச முடியாதவர்கள் இருக்கும் அதேவேளை அரச அதிகாரிகளாவது அவர்களது கடமைகளையும் சமூகம் அவர்களிடம் எதிர்பார்க்கும் தீர்வுகளையும் பெற்றுக் கொடுப்பதில் பின் நிற்பதாகவே தோன்றுகிறது. அரசியல் இயந்திரம் அவ்வாறு என்றால் அரச இயந்திரமும் இது விடயங்களில் மெத்தன போக்கையே கடைப்பிடிக்கின்றன.
 
இன்னும் எவ்வளவு எமது காணிப்பிரச்சினை தேர்தல் கால கோசங்களாக இருக்கப் போகிறது? எவ்வளவு காலம் இதையே காட்டி இரு கட்சிகளும் அரசியல் செய்யப் போகிறீர்கள்? என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.