Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தரவைப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம் - சிவலிங்கம் விசனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தரவைப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம் - சிவலிங்கம் விசனம்

கல்முனை உப பிரதேச செயலக எல்லையாக உள்ள  தரவை பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றப்பட்டமை குறித்து சிவலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

789.jpg

எனினும் இந்த நடவடிக்கைக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

DSC_0305.jpg

மேற்படி வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு நெடுஞ்சாலைகள்  வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிமின்  ரண் மாவத்திட்டத்தின் கீழ் இவ்வீதிக்கு  ஒரு கோடி 80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு  காபட் இடும் வேலைத் திட்டம் புதன்கிழமை நேற்று ஆரம்ப நிகழ்வு  இடம்பெற்றது.

DSC_0299.jpg

இதன் போது   ஐக்கிய தேசிய கட்சியின்  கல்முனை தொகுதி ஐ.தே. கட்சி அமைப்பாளரும்  சட்டத்தரணியுமான  எம்.எஸ். அப்துல் ரஸாக்  கல்முனை மாநகர சபை வேட்பாளருமான எஸ்.எல். முஹிஸின்  கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம். நபார் உள்ளிட்டோர் இவ்வீதியின் காபட்  அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

DSC_0290.jpg

குறித்த நிகழ்வில்  திணைக்கள பொறியியலாளர்கள்  ஐ.தே. கட்சி பிரதேச முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0286.jpg

ஐக்கிய தேசிய கட்சியின்  கல்முனை தொகுதி ஐ.தே. கட்சி அமைப்பாளரும்  சட்டத்தரணியுமான  எம்.எஸ். அப்துல் ரஸாக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  

DSC_0240.jpg

 இந்நாட்டில் மிக மோசமான ஒரு வீதியாக பல வருடங்களாக இந்த கல்முனை தொகுதியில் இருக்கும் நகர மண்டப வீதியின் அபிவிருத்தி திட்டத்தை பொறியலாளர்களின் சரியான திட்டமிடலுடன் பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நாங்கள் இப்போது ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம்.

DSC_0280.jpg

கம்பரலிய திட்டத்தினை கொண்டு பல நூறு மில்லியன் ரூபாயினால் இந்த நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடைபெற்று வருகிறது. எமது தொகுதிக்கும் 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதனை திட்டமிட்டு செய்ய அந்தந்த தொகுதி எம்.பிக்கள், அமைப்பாளர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல எதிர்வரும் காலங்களில் நான் மக்கள் பிரதிநிதி அந்தஸ்தை பெற்றால் இன்னும் நிறைய திட்டங்கள் செய்ய முடியும்  என்றார்.

DSC_0240.jpg

இந்நிலையில் இதற்கெதிராக   பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட  முறைப்பாட்டில்  கல்முனை உப பிரதேச செயலக எல்லையாக உள்ள  தரவை பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றப்பட்டது.

DSC_0238.jpg

ரண் மாவத் திட்டத்தின் கீழ் காபட் இட்டு  புனரமைப்பு செய்யப்படவுள்ள இவ் தரவைப் பிள்ளையார் ஆலய வீதி  தற்போது விளம்பர பலகையின் ஊடாக  பொது மக்களின்  பார்வைக்கு காட்சியளிக்கும் முகமாக  கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம் செய்யப்பட்டு நிறுவப்பட்டு உள்ளதை இனமுறுகலை ஏற்படுத்தும் என கூறி அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSC_0228.jpg

இந்த முறைப்பாட்டினை  கல்முனை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த முறைப்பாட்டின் பின்னர்   கல்முனை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்  சந்திரசேகரம் சாமூவேல் ராஜன்

எங்களுடைய மனதிற்கு வேதனை தரக்கூடிய செயற்பாடு நடைபெற்றிருக்கின்றது.கல்முனை தரவை பிள்ளையார் வீதியாக இருக்கின்ற வீதிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருக்கின்றவர் தன்னுடைய படத்தை பெரிதாக போட்டு கே .கே. பி வீதி என்று பெயர் வைத்திருக்கின்றார்.

இந்த வீதி கடற்கரைப்பள்ளி வீதியாக பெயர் மாற்றம் பெற்று இருப்பது வேதனைக்குரிய விடயம். ஏனெனில் ஐந்நூறு வருடங்களுக்கு மேலாக தரவைப் பிள்ளையார் ஆலய வீதியாக இருந்த வீதி திடீர் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.

இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் கடற்கரை பள்ளி வீதி என பெயர் பலகை இடப்பட்டபோது எங்களுடைய ஆலய பரிபாலன சபை உதவியுடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனை அடுத்து கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு இந்த வீதி கடற்கரை பள்ளி வீதியல்ல  தரவைப் பிள்ளையார்  வீதி என  தீர்ப்பளிக்கப்பட்டது. இன முரண்பாடு தோற்றுவிக்கும் வகையில் சில அரசியல்வாதிகள் மேற்கொள்ளும்  சதித்திட்டங்களுக்குள்  மக்களை பகடைக்காய்களாக்க  வேண்டாம்.

தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்ற சூழ்நிலையில்  சுயலாபம்  தேடுகின்ற  விடயமாகவே இதனை  பார்க்கின்றோம். மேலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி குறித்த விளம்பர  பெயர் பலகை  பொருத்தப் பட்டுள்ளதாவும் இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இலட்சினைகள் பெயர்கள் யாவும் அனுமதி இன்றியே பொறித்துள்ளதாகவும் என்னிடம்  தெரிவிக்கப்பட்டது.எனவே இவ்வாறானவைகள் சில விஷமிகளின் நிகழ்ச்சி நிரல்கள் ஆகும். பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வலியுறுத்துகின்றோம் என தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்  சிவலிங்கம் 

எமது மூதாதையரின் சொத்தாகவும் கல்முனை நகரில் இரண்டு கண்கள் ஒரு கண்களாக  தென்படும் இந்த ஆலயம் கடற்கரை பள்ளி பெயர் சூட்டப்பட்டு இருப்பது சட்டவிரோதமான செயல்மட்டுமல்ல இரண்டு இனங்களும் ஐக்கியமான வாழ்கின்ற சூழ்நிலையில் குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடாகும்.

உடனடியாக உரியவர்  செயற்பட்டு இந்த வீதி விளம்பர  பதாகையை அகற்றி இன்  நல்லுறவைப் பேண வேண்டும் என்பதே எனது நோக்கமாகுமென தெரிவித்தார்

 

https://www.virakesari.lk/article/61166

 

  • கருத்துக்கள உறவுகள்

தரவைப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம் - சிவலிங்கம் விசனம்

 

பிள்ளயார் யார்? சிவலிங்கத்தின் (பெருமானின்) மகன், தன் மகனின் பெயரை முஸ்லீமாக மாற்ற விடுவாரா? விசனம் கட்டாயம் வரும்

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

தரவைப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம்.

பிள்ளையான் வெளியிலை இருந்திருந்தால்  இதெல்லாம் நடக்குமோ எண்டு என்ரை தங்கச்சி மேசையிலை அடிச்சு கேக்கிறமாதிரி கனவு கண்டன்.tw_glasses:

கிழக்க்கில் 300 தமிழ் கிராமங்கள் முஸ்லீம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது என திரு. விக்கினேஸ்வரன் கூறி இருக்கையில், இதை பார்க்கும்பொழுது 3000 வீதிகள் கூட இவ்வாறு பெயர் மாற்றப்பட்டு இருக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

தரவைப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம்.

பிள்ளையான் வெளியிலை இருந்திருந்தால்  இதெல்லாம் நடக்குமோ எண்டு என்ரை தங்கச்சி மேசையிலை அடிச்சு கேக்கிறமாதிரி கனவு கண்டன்.tw_glasses:

பிள்ளையான் இருக்கும் போது அண்ண பல இடங்களில் கை வைக்க முடியல ஹிஸ்புல்லாவால் மட்டக்களப்பில் அம்பாறை பக்கமும் அதற்கு மகிந்தவும் பிள்ளையானை செல்லப்பிள்ளையாக வைத்திருந்தார் ஆனால் பிள்ளையான் நினைத்தனை செய்ய நினைப்பவர் ஆரையம்பதியில் தமிழர்கள் காணிகளில் அத்து மீறியவர்களையும் அடாத்தாக பிடித்தவர்களையும் விரட்டியவர்  என சொல்லலாம் ஆனால் அவர் இல்லாததுகிழக்கில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களுக்கும் எம்பிக்கும் சாதகமாக அமைந்து விட்டது  கூட்டமைப்பினர் வந்து வழக்கு மட்டும் போட்டு விட்டு செல்வார்கள் உதாரணமாக கன்னியா , கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஆனால் நடப்பது ஊர் அறியும் உலகும் அறியும் 

நான் பிள்ளையானுக்கு ஆதரவு அல்ல ஆனால் பிள்ளையானினிடம் இருந்த சில அல்லகைகள் சில தவறாக நடந்ததாலும் அது அவருக்கு கெட்ட பெயரை உண்டாக்கியது ஆனால் பிள்ளையானுக்கென ஒரு கூட்டம் இப்பவரைக்குமிருக்கு  அது இந்த ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் நிகழ்ந்தால் நடக்கும் மீண்டும் மிக வேகமாக இருக்கும் காரணம் சிறை பிள்ளையானுக்கு ஒரு வழியையும் செய்தியையும் சொல்லி கொடுத்திருக்கு என்று சொல்லலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

KALMUNAI ROAD ACCIDENT
கல்முனை வீதி விபத்து - வ.ஐ.ச.ஜெயபாலன்

கல்முனை தரவை பிள்ளையார் கோவில் வீதி கடற்கரை பள்ளியாக பெயர்மாற்றபட்ட பிரச்சினை மீண்டும் கல்முனையில் பதட்டத்தை அதிகரித்துள்ளமை கவலையாக உள்ளது.
.

ஒரு தமிழ்ப் பெயர் இருந்திருக்கிறது அது முஸ்லிம் பெயராக மாற்றபடுகிறது. இதுபற்றிய நீதிமன்ற தீர்பும் உள்ளதாக தமிழர் தரப்பில் சொல்கிறார்கள். வரலாறையும் முஸ்லிம் மக்களின் இருப்பையும் மதித்து வீதியின் கடற்கரை பக்கப் பாதியின் பெயரை முஸ்லிம் பெயராக மாற்றலாம். முழுமையும் மாற்றுவதானால் சரியான நடைமுறை பேசித் தீர்பதுதான்.

.
என்னைகேட்டால் கடற்கரையில் இருந்து பாதித்தூரம் கடற்கரைப்ப் பள்ளி வீதியாகவும் மிகுதி தரவை பிள்ளையார் கோவில் வீதியாகவும் அழைக்கபடலாம் என்பேன். எனினும் இவை கல்முனை வடக்கு எல்லைநிர்ணய பேச்சுவார்ர்த்தைகள்வரை பின்போடப்படுவதே சிறந்தது எனத் தோன்றுகிறது. 
.
இத்தகைய பிரச்சினைகளை கிடப்பில் போட்டுவிட்டு 
கல்முனை வடக்கு பிரதேச சபை தரமுயர்த்தபடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பேசி முடிவெடுங்கள். இனமுரண்பாடு இல்லாமல் மக்களின் முன்னுரிமைகளின் வரிசையில் பிரச்சினைகளை பேசி தீர்க்க தமிழரும் முஸ்லிம்களும் இனியாவது முன்வரவேண்டும்.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

 

தரவைப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம்.

பிள்ளையான் வெளியிலை இருந்திருந்தால்  இதெல்லாம் நடக்குமோ எண்டு என்ரை தங்கச்சி மேசையிலை அடிச்சு கேக்கிறமாதிரி கனவு கண்டன்.tw_glasses:

அண்ணா,நீங்கள் நக்கலுக்கு சொன்னாலும் அதான் உண்மை 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ரதி said:

அண்ணா,நீங்கள் நக்கலுக்கு சொன்னாலும் அதான் உண்மை 

 

தங்கச்சி! அது நக்கலாய் இருந்தாலும்......இன்றைய காலகட்டத்துக்கு முள்ளை முள்ளாலைதான் எடுக்க வேணும் எண்டதை 2009க்கு பிறகும் காலம் உணர்த்தி நிக்கிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிள்ளையான் இருக்கும் போது அண்ண பல இடங்களில் கை வைக்க முடியல ஹிஸ்புல்லாவால் மட்டக்களப்பில் அம்பாறை பக்கமும் அதற்கு மகிந்தவும் பிள்ளையானை செல்லப்பிள்ளையாக வைத்திருந்தார் ஆனால் பிள்ளையான் நினைத்தனை செய்ய நினைப்பவர் ஆரையம்பதியில் தமிழர்கள் காணிகளில் அத்து மீறியவர்களையும் அடாத்தாக பிடித்தவர்களையும் விரட்டியவர்  என சொல்லலாம் ஆனால் அவர் இல்லாததுகிழக்கில் உள்ள முஸ்லீம் அமைச்சர்களுக்கும் எம்பிக்கும் சாதகமாக அமைந்து விட்டது  கூட்டமைப்பினர் வந்து வழக்கு மட்டும் போட்டு விட்டு செல்வார்கள் உதாரணமாக கன்னியா , கல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஆனால் நடப்பது ஊர் அறியும் உலகும் அறியும் 

நான் பிள்ளையானுக்கு ஆதரவு அல்ல ஆனால் பிள்ளையானினிடம் இருந்த சில அல்லகைகள் சில தவறாக நடந்ததாலும் அது அவருக்கு கெட்ட பெயரை உண்டாக்கியது ஆனால் பிள்ளையானுக்கென ஒரு கூட்டம் இப்பவரைக்குமிருக்கு  அது இந்த ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் நிகழ்ந்தால் நடக்கும் மீண்டும் மிக வேகமாக இருக்கும் காரணம் சிறை பிள்ளையானுக்கு ஒரு வழியையும் செய்தியையும் சொல்லி கொடுத்திருக்கு என்று சொல்லலாம் 

யதார்த்தம் என்ன என்பதை சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.

14 hours ago, poet said:

என்னைகேட்டால் கடற்கரையில் இருந்து பாதித்தூரம் கடற்கரைப்ப் பள்ளி வீதியாகவும் மிகுதி தரவை பிள்ளையார் கோவில் வீதியாகவும் அழைக்கபடலாம் என்பேன்.

பள்ளிவாசல் வீதி என்று இருப்பதுதான் நல்லது.

KKP வீதி என்டா "கள்ள காணிகள் பிடிப்பவர்" வீதி என்டு வாசிக்கோணும் கண்டியளோ!

789.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/26/2019 at 6:42 PM, குமாரசாமி said:

 

பள்ளிவாசல் வீதி என்று இருப்பதுதான் நல்லது.

அதில் ஒர் பாடசாலையை(பள்ளி)கட்டி விட்டால் பிரச்சனை முடிந்திடும்.....பள்ளி வீதி பாடசாலை வீதி....🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.