Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

Featured Replies

13 minutes ago, ஏராளன் said:

சைவ/இந்து மத வழிபாடுகளில், கோவில்களில் சாதிய நடைமுறைகளினால் மக்களை பிரிக்கும்போது கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மக்கள் மாறுவதை தடுக்கமுடியாது.

ஊர்கூடி தேர் இழுக்க முடியாதபோது, அங்கே அவர்கள் எல்லோரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதனால் மக்கள் இயல்பாகவே அங்கே போகின்றார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு உதவிக்கல்விப் பணிப்பாளராக உள்ள அண்ணன் சொன்னார் அவரவருக்கு அவரவர் பகுதியில் கோவிலை கட்டி கொடுத்தால் ஏன் பிரச்சனை வருகுது என்று! (நான் மனதில நினைச்சன் நீங்கள் பணிபுரியும் இடம் நல்லா வரும் என்று)

சாதியத்துக்கு எதிரான செயல் மதமாற்றம் என்பது நடைமுறையில் பிழைத்துப் போன ஒரு செயல்பாடு. அப்படி மதம் மாறியவர்களும் மாறிய மதத்தவர்களால் மதிக்கப்படுவதில்லை என்பது தான்நடைமுறை உண்மை.

நீங்கள் சொல்வது போன்று சாதியத்துக்கு எதிரான போராட்டமாக அவர்கள் மதம் மாறுகின்றார்கள் எனில், இப்படியான போலி ஜெபக் கூட்டங்களும், போலி சுவிசேஷக் கூட்டங்களும் எதற்கு? அருகில் இருக்கும் இன்னொரு மத வழிப்பாட்டுத் தலத்துக்கு சென்று மதம் மாற முடியுமே?

  • Replies 114
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Justin said:

தாயக மக்களில் வாள்வெட்டுக் குழு, கஞ்சா குழு இப்போது இது போன்ற வேலையற்று வெட்டியாக திரியும் "மதமாற்றத் தடுப்புக் குழு" எனப் பல குழுக்கள் உண்டு! அவற்றையெல்லாம் நாம் தலை சாய்த்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் எழுதிய நினைவு எனக்கு இல்லை. ஆனால் அரசியல் சார்ந்து தங்கள்  தலைமையை தாயக மக்கள் தெரிவு செய்தால் அதற்கு இங்கிருந்து கொக்கரித்தல் சரியல்ல என்பதே எனது கருத்து! இதை விட நான் ஏதும் மாறி எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

நான் கவனித்த ஒரு விடயம், இந்த தமிழ் தேசியம் என்று தில் காட்டித் திரிவோரில் பெரும்பாலோருக்கு  தமிழ் மொழியைக் கிரகித்தலே பெரிய சவாலாக இருக்கிறது! என்ன மர்மமோ தெரியவில்லை!  

இறுதியாக  தமிழ்த்தேசியத்தில் முடித்திருக்கின்றீர்கள்

மதம்  சார்ந்த திரி  என்பதாலும்

இங்கு  எல்லா  மத  கருத்தாளர்களும்  இருப்பதால்...?

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

மதமாற்றம் செய்யவோ அல்லது கூட்டுப் பிரார்த்தனை செய்யவோ தனியார் ஒருவரின் வீடு/வளவில் உரிமையாளரின் அனுமதியுடன் செய்வது சட்டவிரோதமல்ல.
மக்கள் மதம் மாறாமல் செய்ய என்ன வழி என்பதை கண்டடைவதே தீர்வாக அமையும்.

21 minutes ago, Justin said:

கிராம சேவையாளரிடம் குடும்ப அட்டைப் பதிவும் வெளியாரின் வீட்டில் ஒரு போதனைக் கூட்டம் நடப்பதும் ஒன்றா? அப்படி எந்த அனுமதியும் தேவையில்லை. சரி, ஏன் காவல் துறைக்குப் போகவில்லை? சட்ட விரோதமென்றால் கம்பியெண்ண வைத்திருக்கலாமே? இல்லாத சட்டத்தை  உருவாக்கி விட்டு அதை தாங்களே அமல் செய்தும் இருக்கீனம்!

மற்றவருக்குப் போதித்தார்கள் என்றால் "மற்றவர்" யார் என்றே கேட்டேன். நான் கிறிஸ்தவன். ஒவ்வொரு ஞாயிறும் எனக்கும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கும் ஆலயங்களில் போதிக்கிறார்கள் தான். அதனால் அது மதமாற்றக் கூட்டம் ஆகி விடுமா? அங்கே இருந்தோர் சுய விருப்பில் அந்த வீட்டில் இருந்திருந்தால் அதைக் கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது? எவருக்கும் இல்லை என்பதே என் கருத்து!

வெளியிடத்தில் வசிப்பவர் குறித்த வீட்டை தமக்கு வழங்கினார்கள், கிராம சேவகரும் உரிய அனுமதி தந்துள்ளார் என அவர்கள் தான் கூறியுள்ளார்கள். ஆனால் கிராம சேவகர் தன்னிடம் அனுமதி பெறவில்லை என்கிறார்.

இங்கு யார் குடும்ப அட்டைப் பதிவு பற்றி கதைத்தது? விலாசம் பதிவது பற்றியே நான் எழுதினேன். அவ்வீட்டை போதனைக்கு பயன்படுத்துவதற்கும் அனுமதி தேவைப்பட்டிருக்கலாம் என்றும் கூறினேன். ஞாயிறு வகுப்பு என்றால் ஒரு நாளுடன் முடியாது. தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் நடக்கும்.

ஆலயங்களில் போதனை நடைபெறுவதற்கும் மற்றவர்களை வீட்டுக்கு வரவழைத்து போதிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. 😀

மற்றவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால் ஆலயத்திற்கு நேரே சென்று போதனை கேட்பார்கள். வீடுகளுக்கு சென்று அல்ல. 😀

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

அருகில் இருக்கும் இன்னொரு மத வழிப்பாட்டுத் தலத்துக்கு சென்று மதம் மாற முடியுமே?

இதை தான் சொல்கிறேன். சமயம் என்பது சட்டத்திற்கு அப்பாற்றப்பட்டது.

அந்தந்த ஊராரின் உணர்வுகளிற்க்கு மதிப்பளிக்க வேண்டும்.

16 minutes ago, manimaran said:

சத்தியசாயி பாபா பஜனை யாழில் வீடுவீடாக செய்து படத்திலிருந்த வீபூதியும் சிவலிங்கமும் எடுத்து கொடுத்துக்கொண்டிருந்த போது யாரும் அவர்களை அடித்து விரட்டியதாகவோ அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சணை பற்றி பேசியதையோ நான் கேள்விப்பட்டதில்லை. 

இந்துக்கள் (சைவர்கள்) இங்கு கங்கணம் கட்டி நிற்பது போதனை செய்வோர் கிறித்தவர்கள் என்பதானால் மட்டுமே.

இங்கு ஒரு மதவெறி இன்னொரு மதவெறியை எதிர்க்கின்றது. 

இரண்டும் எம்மை அழிவை நோக்கியே கொண்டு செல்லும்

சத்திய சாயிபாபா, நித்தியானந்தா, கல்கி பகவான், அம்மா பகவான் போன்ற போலி / கள்ள சாமியார்களின் பெருமையை பரப்பும் கூட்டங்களும் அமைப்புகளும் கூட விரட்டபட வேண்டியவையே.. அவை இன்னும் விரட்டப்படாமல் இருப்பதால் மட்டும் இந்த மதமாற்றக் கூட்டத்தின் செய்லகள் நியாயமாகி விடப் போவதில்லை.

இங்கு இந்த பிரச்சனையை இந்து V கிருஸ்தவ பிரச்சனையாக ஆரும் பார்ப்பதாக தெரியவில்லை (உங்களை தவிர). அப்படி பார்க்கின்றவர்களாயின் ஊரில் இருக்கும் கிருஸ்தவ தேவாலயங்களில் நடக்கும் பூசைகளுக்கும், திருவிழாக்களுக்கும் கூட எதிரானவர்களாக இருப்பர். அம்மன் கோவிலைக் கண்டால் அம்மாளாச்சி என்று கும்பிட்டு விட்டு மாதா கோவிலிற்கு சென்று மெழுகுதிரியும் ஏற்றுகின்றவர்கள் தான் இங்கும் ஊரிலும் அதிகம்.

தனிப்பட்ட ரீதியில் நான் கடவுள் மீதோ மதங்களின் மீதோ சிறு நம்பிக்கை கூட கொள்வதில்லை. ஆனால் என் மகளுடன் இலங்கைக்கு சென்ற போது பொன்னம்பல வாணேச்சர் கோவிலுக்கும் அடுத்ததாக கொச்சிக் கடை அந்தோனியார் கோவிலுக்கும் தான் கூட்டிக் கொண்டு சென்றேன்.

1 minute ago, நிழலி said:

சத்திய சாயிபாபா, நித்தியானந்தா, கல்கி பகவான், அம்மா பகவான் போன்ற போலி / கள்ள சாமியார்களின் பெருமையை பரப்பும் கூட்டங்களும் அமைப்புகளும் கூட விரட்டபட வேண்டியவையே..

நாம் வாழும் காலத்தில் கண்ட மிக மிக மோசமான ஏமாற்றுக் கும்பல்கள் தான் இவை!

இந்த இந்துத்துவ ஏமாற்றுக் கும்பல்களுக்கும், கிருத்துவ மதவெறி பிடித்து மதமாற்றத்தை வலிந்து முன்னெடுக்கும் ஏமாற்றுக் கும்பல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!  

இந்தக் கும்பல்களிடம் சிக்கி சீரழிந்தவர்களே அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

நாம் வாழும் காலத்தில் கண்ட மிக மிக மோசமான ஏமாற்றுக் கும்பல்கள் தான் இவை!

இந்த இந்துத்துவ ஏமாற்றுக் கும்பல்களுக்கும்,

கிருத்துவ மதவெறி பிடித்து மதமாற்றத்தை வலிந்து முன்னெடுக்கும் ஏமாற்றுக் கும்பல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!  

இந்தக் கும்பல்களிடம் சிக்கி சீரழிந்தவர்களே அதிகம்.

இரண்டுக்கும்  ஒரு  வித்தியாசம்

ஒன்றில்  ஏழைகள் சேர்கிறார்கள்

அடுத்ததில்  பணக்காரர்கள்  சேர்கிறார்கள்

1 minute ago, விசுகு said:

இரண்டுக்கும்  ஒரு  வித்தியாசம்

ஒன்றில்  ஏழைகள் சேர்கிறார்கள்

அடுத்ததில்  பணக்காரர்கள்  சேர்கிறார்கள்

உண்மை தான்!

ஒன்றில், ஏழைகளை துஸ்பிரயோகம் செய்து சேர்க்கிறார்கள்.

மற்றதில், துஸ்பிரயோகம் செய்ய வசதியாக பணக்காரர்கள் சேர்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

300 கிராமங்களுக்கு மேல் முஸ்லீம் மயமானதும் என்றும் பல் ஆயீரக்கணக்கானவர்கள் முஸ்லீம்களுக்கும் மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று சொன்ன போது வராது மத பற்று இங்கு வந்திருக்கிறது 

நாம இதுக்குள்ளதான் நிற்போம் 

சண்டே ஸ்கூல் என சில பாதிரியார்களும் பல பேரும் இணைந்து பல ஏழைக்கிராமங்களில்  பல மாணவர்களையும் பல குடும்பங்களையும் தேர்ந்தெடுத்து உதவி செய்கிறார்கள் அந்த உதவியின் நன்றிக்கு அவர்களும் மதம் மாறுகிறார்கள் இது அன்று தொட்டு இன்று வரைக்கும் நடக்கும் சம்பவம் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு இறுக்கமாக இருக்கும்வரை எவரும் அதற்குள் புகுந்து விளையாடலாம். அதைத்தான் ஆங்கிலேயன் கண்டுபிடித்து விளையாடினான். 

ஆங்கிலேயர்களுக்கு அடிமையாக இருந்த காலத்தில் அவர்கள் மதத்தைத்தழுவி வாழவேண்டிய தேவைகள் நிர்ப்பந்தமாகவும் இருந்தது. இப்போது அவர்கள் இல்லை, இந்நிலையில் மதம் மாறவோ, மாற்றவேண்டிய தேவையோ எதுவும் இல்லை. பின்பு ஏன் இந்தப் பிரச்சனை. இது எங்கிருந்து உருவாகிறது. யாரால் தூண்டப்படுகிறது. அதனை அறிந்து அதனின்றும் விலகி வாழ்வதில்தான் ஒற்றுமை நிலவும்.

23 minutes ago, நிழலி said:

அம்மன் கோவிலைக் கண்டால் அம்மாளாச்சி என்று கும்பிட்டு விட்டு மாதா கோவிலிற்கு சென்று மெழுகுதிரியும் ஏற்றுகின்றவர்கள் தான் இங்கும் ஊரிலும் அதிகம்.

Edited by Paanch

38 minutes ago, Justin said:

என்ன தீமை? இது தவறு அல்லது குற்றம் என்றால் அந்தத் தவறின் victim யார்?

மூளைச்சலவை செய்து இன்னொரு மதத்திலுள்ளவர்களை தமது மதத்திற்கு மாற்றுவதே தவறான ஒரு செயல் தானே? அதையே புரிந்து கொள்ள முடியாமல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

நயன்தாரா பிரபுதேவாவுடனான காதலின் போது கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியிருந்தார். பின் காதல் முறிவு ஏற்பட்டதும் மீண்டும் கிறிஸ்தவராக மாறினார்.

இந்து என்பது ஓர் சமயம் அல்லது மதம் அல்ல. அது பல கிளை மார்கங்களிற்றுக்கு கூட்டு அடையாளமாக இருக்கிறது.  

ஆயினும், அதை பெரிதுபடுத்தாமல், சமயம் என்று வைத்துக்கொள்வோம்.  
இந்து சமயம்  என்பது பிறப்போடு வரும் அடையாளத்தை ஒத்தது. நீக்கி விட முடியாது.

ஆனாலும், அவரவர் தாம் நீங்கியதாகவும், சேர்ந்ததாகவும் அறிவிக்கலாம், உணரத் தலைப்படலாம்,  வாழலாம்.

காரணம், இந்த பிராந்தியத்தின் அடையாள மார்க்கமது.

எனவே கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆக இப்பொது தமது சமயம் என்று உணரத் தலைப்படுபவர்கள், எத்தனை தலை முறை கடந்தாலும், அவர்களின் அடி இந்த பிராந்தியமாயின், அவர்கள் இந்து சமயத்தில்  இருந்து ஒரு போதுமே நீக்கப்படவில்லை, நீக்கப்படவும் முடியாது என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

300 கிராமங்களுக்கு மேல் முஸ்லீம் மயமானதும் என்றும் பல் ஆயீரக்கணக்கானவர்கள் முஸ்லீம்களுக்கும் மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று சொன்ன போது வராது மத பற்று இங்கு வந்திருக்கிறது  

நாம இதுக்குள்ளதான் நிற்போம் 

சண்டே ஸ்கூல் என சில பாதிரியார்களும் பல பேரும் இணைந்து பல ஏழைக்கிராமங்களில்  பல மாணவர்களையும் பல குடும்பங்களையும் தேர்ந்தெடுத்து உதவி செய்கிறார்கள் அந்த உதவியின் நன்றிக்கு அவர்களும் மதம் மாறுகிறார்கள் இது அன்று தொட்டு இன்று வரைக்கும் நடக்கும் சம்பவம் தான் .

நடந்தது school  இல்லை.

எதோ வெளியார் தான்தோன்றி தனமாக ஓர் ஊரிற்குள் புகுந்து மதமாற்றம் செய்யும் முயதர்சி தடுக்கப்பட்டிருக்கிறது.

ஊரவர்கலின் உணர்வு, சட்டத்தை அவர்கள் கையில் எட்டுக்கை வைத்திருக்கிறது. அது சரி, பிழை என்பது வேறு விடயம்.  

300 கிராமங்கள் முஸ்லீம் கிராமமாக மாறும் வரைக்கும், கிராமத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. அரசியலால் ஒன்றும் செய்ய முடியாது.

சரி விடுங்கள், கிழக்கில் தமிழரின் அபிவிருத்தியை வருகிறேன் என்ற கருணா கூட ஒன்றும் செய்யவில்லை.              

1 minute ago, Kadancha said:

இந்து என்பது ஓர் சமயம் அல்லது மதம் அல்ல. அது பல கிளை மார்கங்களிற்றுக்கு கூட்டு அடையாளமாக இருக்கிறது.  

ஆயினும், அதை பெரிதுபடுத்தாமல், சமயம் என்று வைத்துக்கொள்வோம்.  

பல சமயங்களின் கூட்டு “இந்து சமயம்” என தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது. Religion: Hinduism.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

நடந்தது school  இல்லை.

எதோ வெளியார் தான்தோன்றி தனமாக ஓர் ஊரிற்குள் புகுந்து மதமாற்றம் செய்யும் முயதர்சி தடுக்கப்பட்டிருக்கிறது.

ஊரவர்கலின் உணர்வு, சட்டத்தை அவர்கள் கையில் எட்டுக்கை வைத்திருக்கிறது. அது சரி, பிழை என்பது வேறு விடயம்.  

300 கிராமங்கள் முஸ்லீம் கிராமமாக மாறும் வரைக்கும், கிராமத்தவரால் ஒன்றும் செய்ய முடியாது. அரசியலால் ஒன்றும் செய்ய முடியாது.

சரி விடுங்கள், கிழக்கில் தமிழரின் அபிவிருத்தியை வருகிறேன் என்ற கருணா கூட ஒன்றும் செய்யவில்லை.              

நான் சொன்னதும் உங்களுக்கு விளங்கல பாஸ் ஞாயிற்றுக்கிழமைகளில் சண்டே ஸ்கூல் எனத்தான் நடாத்தி கிழக்கில் மாற்றினார்கள் மாறிவர்களை ம ............. ருக்கும்  கணக்கெடுப்பதில்லை நாங்கள் ஏனென்றால் அவன் கஸ்ரத்தில் இருப்பவன் அவனுக்கு உதவி செய்ய நான் வள்ளலும் இல்லை மாறாக ஒன்றை கொடுப்பதற்கும் திணிப்பதற்கும் வேறு பாடுகள் அதிகம் அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் 

யார் சொன்னது கர்ணா ஒன்றும் செய்ய வில்லையென கர்ணா தன்னுடன் இருந்து போராளியான ,மாவிரரான பல பேரின் குடும்பங்கங்களுக்கு உதவி செய்துள்ளார் பிரிந்து போன பலருக்கு அரச வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுத்துள்ளார் அவர் துரோகி என்றபடியால் அது வெளியில் தெரிவதில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

300 கிராமங்களுக்கு மேல் முஸ்லீம் மயமானதும் என்றும் பல் ஆயீரக்கணக்கானவர்கள் முஸ்லீம்களுக்கும் மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று சொன்ன போது வராது மத பற்று இங்கு வந்திருக்கிறது 

நாம இதுக்குள்ளதான் நிற்போம் 

சண்டே ஸ்கூல் என சில பாதிரியார்களும் பல பேரும் இணைந்து பல ஏழைக்கிராமங்களில்  பல மாணவர்களையும் பல குடும்பங்களையும் தேர்ந்தெடுத்து உதவி செய்கிறார்கள் அந்த உதவியின் நன்றிக்கு அவர்களும் மதம் மாறுகிறார்கள் இது அன்று தொட்டு இன்று வரைக்கும் நடக்கும் சம்பவம் தான் .

பாம்பை அடிக்கும்  தடி  தற்போது தமிழரிடமில்லை

அதற்காக எலியை  அடிக்காமலிருக்கமுடியாதே...

எலிக்கு  விழும்  அடி

பாம்பையும்  பின் வாங்க  வைக்கலாமல்லவா??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பாம்பை அடிக்கும்  தடி  தற்போது தமிழரிடமில்லை

அதற்காக எலியை  அடிக்காமலிருக்கமுடியாதே...

எலிக்கு  விழும்  அடி

பாம்பையும்  பின் வாங்க  வைக்கலாமல்லவா??

ஒன்றை சொல்லி ஆக வேண்டும்  எல்லாம் எலிகள் தான் ஆனால் தங்கும் வளைதான் வேறு 

ஒரு சின்ன கதை ஒரு வயலில் பல எலிகள் இருந்ததாம் அந்த எலிகளில் ஒன்று அந்த வயலில் உள்ள  விதைகளையும் அறுத்து உண்டு வந்தததாம் அந்த எலியை பிடிக்க மற்ற நல்ல எலிகளிடம் ஐடியா கேட்டானாம் அந்த வயல் முதலாளி அதற்கு மற்ற எலிகளெல்லாம் எங்களுக்கு கலர் அடித்து விடுங்கள் அந்த கலரில் இருக்கும் எல்லா எலிகளும் நல்ல எலிகள் கலர் இல்லாத  எலிமட்டும் உங்கள் வயலை நாசம் பண்ணும் எலி என்று சொல்லிச்சாம் வயல்காரனும் நல்ல எலிகளுக்கு  கலர் அடிச்சிவிட்டு போக அன்றிரவு மழைவர எல்லா எலிகளும் நனைந்து கலர் இல்லாமல் இருக்க ஒட்டு மொத்த எலிகளையுமே அடிச்சு விரட்டினானாம் அந்த விவசாயி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இறுதியாக  தமிழ்த்தேசியத்தில் முடித்திருக்கின்றீர்கள்

மதம்  சார்ந்த திரி  என்பதாலும்

இங்கு  எல்லா  மத  கருத்தாளர்களும்  இருப்பதால்...?

நன்றி வணக்கம்

தமிழ் தேசியப் பரப்பில் நான் பேசிய கருத்தை இங்கு கொண்டு வந்து புகுத்தியதே நீங்கள் தானே? அதையே நான் செய்தால் ஏன் ஏமாற்றம்?

1 hour ago, Lara said:

வெளியிடத்தில் வசிப்பவர் குறித்த வீட்டை தமக்கு வழங்கினார்கள், கிராம சேவகரும் உரிய அனுமதி தந்துள்ளார் என அவர்கள் தான் கூறியுள்ளார்கள். ஆனால் கிராம சேவகர் தன்னிடம் அனுமதி பெறவில்லை என்கிறார்.

இங்கு யார் குடும்ப அட்டைப் பதிவு பற்றி கதைத்தது? விலாசம் பதிவது பற்றியே நான் எழுதினேன். அவ்வீட்டை போதனைக்கு பயன்படுத்துவதற்கும் அனுமதி தேவைப்பட்டிருக்கலாம் என்றும் கூறினேன். ஞாயிறு வகுப்பு என்றால் ஒரு நாளுடன் முடியாது. தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் நடக்கும்.

ஆலயங்களில் போதனை நடைபெறுவதற்கும் மற்றவர்களை வீட்டுக்கு வரவழைத்து போதிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. 😀

மற்றவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தால் ஆலயத்திற்கு நேரே சென்று போதனை கேட்பார்கள். வீடுகளுக்கு சென்று அல்ல. 😀

மதமாற்றம் பற்றி பேசுவோர் அனேகர், நீங்கள் உட்பட, கிறிஸ்தவ மதங்களில் இருக்கும் பல குழுக்கள் எவ்வாறு வெவ்வேறு வழிகளில் வழிபடுகிறார்கள் என்று ஒரு ஐடியாவும் இல்லாமல் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள் தனியாரின் வீடுகளில் வழி பாடு செய்வது பல காலமாக நடைபெறும் ஒன்று. இது தெரியா விட்டால் தெரிந்து கொள்ள உங்கள் கிறிஸ்தவ நண்பர்களிடம் அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம், கூட்டுச் செபமாலை என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள். அறிந்து கொள்ள ஆர்வம் இல்லா விட்டால், "பொது இடத்தில் தான் வழிபடவேண்டும், தனியார் வீட்டில் நடந்தால் அது கள்ள வேலை தான் !" போன்ற தவறான வதந்திகளைப் பரப்பாமல் இருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

மூளைச்சலவை செய்து இன்னொரு மதத்திலுள்ளவர்களை தமது மதத்திற்கு மாற்றுவதே தவறான ஒரு செயல் தானே? அதையே புரிந்து கொள்ள முடியாமல் கேள்வி மேல் கேள்வி கேட்கிறீர்கள்.

இந்தத் தவறின் இலக்கு யார் என்பதே தெரியாமல் தவறு தவறு என்று நீங்கள் புலம்பிக் கொண்டிருப்பது உங்களுக்கு விளங்கவில்லையா? யாருக்கு எதிராக இந்த தவறு நடக்கிறது?

7 minutes ago, Justin said:

மதமாற்றம் பற்றி பேசுவோர் அனேகர், நீங்கள் உட்பட, கிறிஸ்தவ மதங்களில் இருக்கும் பல குழுக்கள் எவ்வாறு வெவ்வேறு வழிகளில் வழிபடுகிறார்கள் என்று ஒரு ஐடியாவும் இல்லாமல் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள் தனியாரின் வீடுகளில் வழி பாடு செய்வது பல காலமாக நடைபெறும் ஒன்று. இது தெரியா விட்டால் தெரிந்து கொள்ள உங்கள் கிறிஸ்தவ நண்பர்களிடம் அருங்கொடை மறுமலர்ச்சி இயக்கம், கூட்டுச் செபமாலை என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள். அறிந்து கொள்ள ஆர்வம் இல்லா விட்டால், "பொது இடத்தில் தான் வழிபடவேண்டும், தனியார் வீட்டில் நடந்தால் அது கள்ள வேலை தான் !" போன்ற தவறான வதந்திகளைப் பரப்பாமல் இருங்கள்!

நீங்கள் மதமாற்ற கோஷ்டிக்கு வக்காலத்து வாங்கும் எண்ணத்துடன் எழுதுவதால் உங்களுக்கு விளக்கம் தருவது கடினம்.

ஆளில்லாத வெளியாருடைய வீட்டிற்கு வெளியிடத்திலிருந்து வந்து மற்றவர்களுக்கு போதனை செய்வதென்பது மதமாற்றும் நோக்கத்துடன் அமைந்த ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒருவராக தான் நீங்கள் உள்ளீர்கள். 😎

வெளிநாடுகளில் யெகோவா மதத்திற்கு மாறிய தமிழர்கள் சிலர் ஊருக்கு ஆட்களை அனுப்பி அங்குள்ளவர்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றியதும் எனக்கு தெரியும். உங்களைப்போன்றோர் அதற்கும் வக்காலத்து வாங்குவீர்கள். 🙃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சத்திய சாயிபாபா, நித்தியானந்தா, கல்கி பகவான், அம்மா பகவான் போன்ற போலி / கள்ள சாமியார்களின் பெருமையை பரப்பும் கூட்டங்களும் அமைப்புகளும் கூட விரட்டபட வேண்டியவையே.. அவை இன்னும் விரட்டப்படாமல் இருப்பதால் மட்டும் இந்த மதமாற்றக் கூட்டத்தின் செய்லகள் நியாயமாகி விடப் போவதில்லை.

இங்கு இந்த பிரச்சனையை இந்து V கிருஸ்தவ பிரச்சனையாக ஆரும் பார்ப்பதாக தெரியவில்லை (உங்களை தவிர). அப்படி பார்க்கின்றவர்களாயின் ஊரில் இருக்கும் கிருஸ்தவ தேவாலயங்களில் நடக்கும் பூசைகளுக்கும், திருவிழாக்களுக்கும் கூட எதிரானவர்களாக இருப்பர். அம்மன் கோவிலைக் கண்டால் அம்மாளாச்சி என்று கும்பிட்டு விட்டு மாதா கோவிலிற்கு சென்று மெழுகுதிரியும் ஏற்றுகின்றவர்கள் தான் இங்கும் ஊரிலும் அதிகம்.

தனிப்பட்ட ரீதியில் நான் கடவுள் மீதோ மதங்களின் மீதோ சிறு நம்பிக்கை கூட கொள்வதில்லை. ஆனால் என் மகளுடன் இலங்கைக்கு சென்ற போது பொன்னம்பல வாணேச்சர் கோவிலுக்கும் அடுத்ததாக கொச்சிக் கடை அந்தோனியார் கோவிலுக்கும் தான் கூட்டிக் கொண்டு சென்றேன்.

இந்த மதம்சாரா மூட நம்பிக்கை எதிர்ப்பு விடயத்தில் நீங்கள் இங்கே ஏராளனுடன் தனித்துத் தான் நிற்கிறீர்கள். ஏனையோர், இந்த துரத்திய கூட்டம் உட்பட, சைவம் காத்தல் என்ற நிலைப்பாட்டில் நின்று தான் கருத்துரைக்கின்றனர். ஆனால், எந்த மதத்தின் விளம்பரத்தையும் போதனையயும் வன்முறை அச்சுறுத்தலால் தடுப்பது தவறு என்று நான் சொல்கிறேன். இந்த "மக்களிடம் இருந்து பிறக்கும் சக்தி" என்று நீங்கள் நம்பும் விஜிலான்ரிசத்தை இப்போதே தடுக்க வேண்டுமா? அல்லது பாலூற்றி வளர்த்து விட்டு வென்னப்புவவில் கிறிஸ்தவ சிங்களவர்கள் அல்லது காலியில் பௌத்த சிங்களவர்கள் சாய் பாபா பஜனையை வீடு புகுந்து குழப்பும் வரை பொறுத்திருந்து விட்டு பிறகு ஆறுதலாகக் கண்டிக்க வேண்டுமா? முதலாவது தான் என் தெரிவு.  

8 minutes ago, Justin said:

இந்தத் தவறின் இலக்கு யார் என்பதே தெரியாமல் தவறு தவறு என்று நீங்கள் புலம்பிக் கொண்டிருப்பது உங்களுக்கு விளங்கவில்லையா? யாருக்கு எதிராக இந்த தவறு நடக்கிறது?

நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். உங்களால் கிரகத்து அறிய முடியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

கிறிஸ்தவர்கள் சைவ சமயத்தவர்களை மதம் மாற்றுகிறார்கள். முஸ்லிம்கள் சைவ சமயம், கிறிஸ்தவ சமயத்தவர்களை மதம் மாற்றுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

நீங்கள் மதமாற்ற கோஷ்டிக்கு வக்காலத்து வாங்கும் எண்ணத்துடன் எழுதுவதால் உங்களுக்கு விளக்கம் தருவது கடினம்.

ஆளில்லாத வெளியாருடைய வீட்டிற்கு வெளியிடத்திலிருந்து வந்து மற்றவர்களுக்கு போதனை செய்வதென்பது மதமாற்றும் நோக்கத்துடன் அமைந்த ஒன்று என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒருவராக தான் நீங்கள் உள்ளீர்கள். 😎

வெளிநாடுகளில் யெகோவா மதத்திற்கு மாறிய தமிழர்கள் சிலர் ஊருக்கு ஆட்களை அனுப்பி அங்குள்ளவர்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றியதும் எனக்கு தெரியும். உங்களைப்போன்றோர் அதற்கும் வக்காலத்து வாங்குவீர்கள். 🙃

நான் வக்காலத்து வாங்குவது தனிமனிதனின் சுதந்திரத்திற்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும்!  முஸ்லிம் மதத்திற்கு இந்துப் பெண் மதம் மாறிய போதும் நான் அதற்கு வக்காலத்து வாங்கினேன் இதே களத்தில்! உங்களுக்கு உங்கள் தீவிரம் கலந்த மதப் பற்றை இல்லாத சட்டம், நிகழாத தவறு என்பவற்றால் மூடி மறைக்க ஆவல்! எனக்குப் பதில் தரும் ஆர்வமில்லாமல் இல்லை உங்களிடம்! உங்களிடம் பதிலே இல்லை என்பதே உண்மை!

1 minute ago, Lara said:

நான் ஏற்கனவே பதில் கூறி விட்டேன். உங்களால் கிரகத்து அறிய முடியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.

கிறிஸ்தவர்கள் சைவ சமயத்தவர்களை மதம் மாற்றுகிறார்கள். முஸ்லிம்கள் சைவ சமயம், கிறிஸ்தவ சமயத்தவர்களை மதம் மாற்றுகிறார்கள்.

இந்த மதம் மாறிய சைவர்களும் கிறிஸ்தவர்களும் வந்து முறைப்பாடு செய்தார்களா? அப்படியானால் தங்களுக்குக் குற்றமிழைக்கப் பட்டதாக நினைக்கவில்லை! அப்ப யாருக்குத் தவறு நடந்ததாக நீங்கள் குத்தி முறிகிறீர்கள்?

11 minutes ago, Justin said:

நான் வக்காலத்து வாங்குவது தனிமனிதனின் சுதந்திரத்திற்கும் பேச்சுச் சுதந்திரத்திற்கும்!  முஸ்லிம் மதத்திற்கு இந்துப் பெண் மதம் மாறிய போதும் நான் அதற்கு வக்காலத்து வாங்கினேன் இதே களத்தில்! உங்களுக்கு உங்கள் தீவிரம் கலந்த மதப் பற்றை இல்லாத சட்டம், நிகழாத தவறு என்பவற்றால் மூடி மறைக்க ஆவல்! எனக்குப் பதில் தரும் ஆர்வமில்லாமல் இல்லை உங்களிடம்! உங்களிடம் பதிலே இல்லை என்பதே உண்மை!

நான் பலதடவை விளக்கம் கூறி விட்டேன்.

இங்கு இல்லாத சட்டம், நிகழாத தவறு என நீங்கள் தான் மீண்டும் மீண்டும் கதைக்கிறீர்கள்.

இன்னொரு மதத்திலுள்ளவரை மூளைச்சலவை செய்து மதம் மாற்றுவது தவறு. அது கண்டிக்கப்பட வேண்டியது.

நான் எங்கே எனது தீவிர மதப்பற்றில் கதைக்கிறேன்? எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் மதம் மாற்றுவது தவறு என்பது எனக்கு தெரிந்த ஒரு விடயம்.

வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பற்றியும் முன்னர் குறிப்பிட்டு எழுதியுள்ளேன்.

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.