Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

 கருத்தாடல் வேண்டாம் வெறும் கருத்து பகிர்ந்தால் போதும் என்று ஒரு விருப்பில் இருந்தேன், இடையில் இந்த தலைப்பில் அந்த விரதம் முறிந்தது கவலைதான், இத்துடன் முடித்துக்கொள்கிறேன் உங்களுக்கும் உங்கள் நேரத்திற்கும் நன்றி.

இத்திரியில் எழுதியதற்காக வருத்தப்படுகிறேன். 

  • Replies 114
  • Views 7.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாவ்..இது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைக்கவில்லை! சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாயிற்று, அறிய வேண்டியவையும் அறிந்து கொண்டு விட்டதால், நான் வேலையில் மூழ்குகிறேன். எல்லாரும் நலமோடிருங்கள்!

8 hours ago, வாதவூரான் said:

16 வயதுக்கு உட்பட்டவருடன் அவருடைய சம்மதத்துடன் உடலுறவு கொள்வது எப்படி பாலியல் வல்லுறவு என்று வருமோ அது போல் தான் இதுவும் . அதாவது ஒருவருடைய இயலாமையை (வறுமையையோ நோயையோ)  வைத்து மதமாற்றம் செய்வது. ஒருவருடைய இயலாமையையாரும் சாதகமாக எடுக்க கூடாது.

சிறு வயது குழந்தையை கோவிலுக்கோ, தேவாலயத்திற்கோ, மசூதிக்கோ அழைத்து சென்று மத்ததை அவர்களின் மூளையில் திணிப்பதும் ஒரு வன்முறை தானே. 

மதம் மாற்றுபவர்கள் மட்டுமல்ல செடில் குத்தி காவடி எடுப்பது , தூக்கு காவடி எடுப்பது  போன்ற காட்டு மிரண்டி பழக்கங்களை ஊக்குவிப்போரும் அடித்து விரட்ட வேண்டும். அளவிற்கு  அதிகமாகபொன்னான நேரத்தை  கோவில்களுடன் வீணாக்கும் மக்கள் கூட்டம் எத்தனை நூற்றாண்டு சென்றாலும் முன்னேறாது

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள் எல்லாமே நிறுவன அமைப்புமுறையைச் சார்ந்தன. ஒன்றையொன்று அழித்து தம்மை நிலைநிறுத்த  வன்முறைகளை எப்போதுமே பாவித்தன. 

எனவே இங்கு ஒன்றும் புதுமையாக நடக்கவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, கிருபன் said:

மதங்கள் எல்லாமே நிறுவன அமைப்புமுறையைச் சார்ந்தன. ஒன்றையொன்று அழித்து தம்மை நிலைநிறுத்த  வன்முறைகளை எப்போதுமே பாவித்தன. 

எனவே இங்கு ஒன்றும் புதுமையாக நடக்கவில்லை!

சைவசமய நிறுவனங்கள் மதப்பிரச்சாரங்கள் செய்வதில்லை.  இதர மதங்களைப்போல் சம்பளங்கள்/அன்பளிப்புகள் வெளிநாட்டிலிருந்து வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

சைவசமய நிறுவனங்கள் மதப்பிரச்சாரங்கள் செய்வதில்லை.  இதர மதங்களைப்போல் சம்பளங்கள்/அன்பளிப்புகள் வெளிநாட்டிலிருந்து வருவதில்லை.

முற்றிலும் உண்மை தாத்தா 🙏/
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

சைவசமய நிறுவனங்கள் மதப்பிரச்சாரங்கள் செய்வதில்லை.  இதர மதங்களைப்போல் சம்பளங்கள்/அன்பளிப்புகள் வெளிநாட்டிலிருந்து வருவதில்லை.

2002ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வ‌ர‌ வ‌ன்னியில் இருந்து யாழ்பாண‌த்தில் இருக்கும் ப‌ல‌ ஊர்க‌ளுக்கு ஆயுத‌ம் க‌ட‌த்த‌ ப‌ட்ட‌து தாத்தா /

எங்க‌ட‌ ஊருக்கு ஆயுத‌ம் க‌ட‌த்த‌ முத‌ல் எங்க‌ள் ஊரில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போராளிக‌ள் நேத்தி க‌ட‌ன் வைச்ச‌வை ஆயுத‌ க‌ட‌த்த‌ல் வெற்றி க‌ர‌மாய் முடிந்தா பெரிய‌ பூசை செய்வ‌து என்று /

ஆயுத‌ க‌ட‌த்த‌லும் வெற்றிக‌ர‌மாய் முடிந்த‌து / போராளிக‌ள் பிற‌க்கு நேத்தி க‌ட‌ன் வைச்ச‌ கோயிலுக்கு பெரிய‌ பூசையே வைச்ச‌வை / 

போராளிக‌ள் செய்த‌ பூசையை பொது ம‌க்க‌ள் எல்லாரும் க‌ண்ணால் க‌ண்ட‌வை /

இப்ப‌டி ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ள் இருக்கு தாத்தா த‌மிழீழ‌ ப‌ட்டி தொட்டி வ‌ர‌ இருக்கும் எம‌து இந்து  கோயில்க‌ளின் பெருமைக‌ள் 🙏 /
 
  • கருத்துக்கள உறவுகள்

சைவ மதத்தில் சாதியை காட்டி மதம் மாறியவர்கள். தாங்கள் மாறிய மதத்தில் சாதி வேறுபாடு இல்லாமல் இருக்கினமா?...கிறித்தவர்களுக்கிடையே எத்தனை மதப்பிரிவு?...கத்தோலிக்கர் இவர்களை[மற்ற கிறிஸ்தவர்களை] கணக்கிலும் எடுப்பதில்லை.
காசுக்காய் மதம் மாறியவர்களுக்கு எவ்வளவு நாளைக்கு காசு கொடுத்து கொண்டு இருப்பார்கள்...அப்படிப்பட்ட  காசுக்காய் மதம் மாறியவர்கள் நாளைக்கு இன்னொரு மதத்தில் அதிக காசு தருகிறேன் என்றதும் அதற்கு மாறி விடுவார்கள்...அப்படிப்பட்டவர்கள் தான் காசுக்காய் ஊழியம் செய்கிறேன் என்று போறவர்கள்.
உண்மையாக,விரும்பி இந்த கிறிஸ்த சபையில் சேருபவர்கள் எத்தனை பேர்?
ஜ ஏ எஸ் போன்ற தீவிர வாத அமைப்புகள் மக்களது சூழ்நிலையை பயன் படுத்தி தற்கொலைத் தாக்குதலுக்கு தூண்டுகின்றதோ அதற்கு ஒப்பானது இந்த மத மாற்ற கும்பலின் செயற்பாடு...அவர்களது சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்துவது.
மேலே சிலர் சொன்ன மாதிரி ஏன் இவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களிடமோ அல்லது கத்தோலிக்கரிடமோ வாயை திறப்பதில்லை?
புத்த விகாரைகள் அமைப்பது பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை...நாளைக்கே அந்த விகாரைகளில் எங்கட கடவுள்மார் தான் இருப்பினம் 
அற்ப சலுகைகளுக்காய் மதம் மாறி அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் அல்லாடுகிறவர்களை கண்டு இருக்கிறேன் இருக்கிறேன்...யாரெண்டாலும் எனக்கென்ன போனால் போகட்டும் என்று இனி விட முடியாது. இது எங்கட மக்கள் என்று பொறுத்து பார்த்து தொடங்கி இருக்கின்றார்கள் அடித்து விரட்ட ...இது முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டியது.
இதற்கு முன்னர்இந்த கிராமத்தில்  அடித்து விரட்டியும் ,திரும்பவும் அவர்கள் வந்திருப்பது இந்த கிராமத்தில் உள்ளோர் கேணைகள் எப்படியாவது அங்குள்ளோரை மதம் மாத்திடோணும் என்ட நோக்கத்தில் தான்.
அவரவர் மதம் அவரவர்களுக்கு பெருசு ...வைச்சு கொண்டு உங்களோடு இருங்கவன் ...ஏன் மற்றவரை மாத்த முயல்கிறீர்கள்?

8 minutes ago, பையன்26 said:

2002ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வ‌ர‌ வ‌ன்னியில் இருந்து யாழ்பாண‌த்தில் இருக்கும் ப‌ல‌ ஊர்க‌ளுக்கு ஆயுத‌ம் க‌ட‌த்த‌ ப‌ட்ட‌து தாத்தா /

எங்க‌ட‌ ஊருக்கு ஆயுத‌ம் க‌ட‌த்த‌ முத‌ல் எங்க‌ள் ஊரில் இருக்கும் ஒரு கோயிலுக்கு போராளிக‌ள் நேத்தி க‌ட‌ன் வைச்ச‌வை ஆயுத‌ க‌ட‌த்த‌ல் வெற்றி க‌ர‌மாய் முடிந்தா பெரிய‌ பூசை செய்வ‌து என்று /

ஆயுத‌ க‌ட‌த்த‌லும் வெற்றிக‌ர‌மாய் முடிந்த‌து / போராளிக‌ள் பிற‌க்கு நேத்தி க‌ட‌ன் வைச்ச‌ கோயிலுக்கு பெரிய‌ பூசையே வைச்ச‌வை / 

போராளிக‌ள் செய்த‌ பூசையை பொது ம‌க்க‌ள் எல்லாரும் க‌ண்ணால் க‌ண்ட‌வை /

இப்ப‌டி ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ள் இருக்கு தாத்தா த‌மிழீழ‌ ப‌ட்டி தொட்டி வ‌ர‌ இருக்கும் எம‌து இந்து  கோயில்க‌ளின் பெருமைக‌ள் 🙏 /
 
வீரமிகு போராளிகள் என்று நாங்கள் மதித்த புலிகளில் இவ்வாறு நேர்ததிக்கடன் வைக்கும் முட்டாள்தனமான செயற்பாடுகளும் நடந்துருக்கின்றன என்ற தகவலை வழங்கியுள்ளீர்கள். 

1 hour ago, குமாரசாமி said:

சைவசமய நிறுவனங்கள் மதப்பிரச்சாரங்கள் செய்வதில்லை.  இதர மதங்களைப்போல் சம்பளங்கள்/அன்பளிப்புகள் வெளிநாட்டிலிருந்து வருவதில்லை.

ஆனால் தன்னை நம்பிய மக்களை கடவுள் நம்பிக்கைக்கு  அப்பால் வடிகட்டிய மூடப்பழக்கங்களை அள்ளி விதைத்து தன்னை நம்பிய மக்களின் முன்னேறத்திற்கு தடை போட்டவை சைவ நிறுவனங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மதங்கள் எல்லாமே நிறுவன அமைப்புமுறையைச் சார்ந்தன. ஒன்றையொன்று அழித்து தம்மை நிலைநிறுத்த  வன்முறைகளை எப்போதுமே பாவித்தன. 

எனவே இங்கு ஒன்றும் புதுமையாக நடக்கவில்லை!

புதுமையாக நடக்கவில்லை என்றால்?
தொடர்ந்தும் நடக்கலாம் என்பதா உங்கள் நிலைப்பாடு?
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை 
மிருகங்களுக்கு எதிரான வன்கொடுமை 
போன்றவற்றை தடுக்க மீ டூ  ப்ளூ க்ரோஸ் போன்றவை உருவாக்கவில்லையா?
அப்பாவி மக்களை ஏமாற்றி கேலி கூத்து செய்யும் மத கூட்ட்ங்களினால் 
அழிந்துபோகும் மக்களை இனியும் காக்க கூடாதா?

இங்கு மேலிருக்கும் பல கருத்துக்கள் சைவர்கள் கூட 
சைவம் மதம் என்ற போர்வையில்தான் எழுதுகிறார்கள் 
சைவம் மதமில்லை  சைவம் ஒரு மார்க்கம் 
சைவத்துக்கும் மதங்களுக்கும் தொடர்பில்லை 
பின்னாளில் வந்த மத சண்டைகளினால்தான் சைவர்கள் 
தமக்கு என்றும் தமது பிரதேசங்களையும் வலியுறுத்தி சிவாலயங்களை கட்டினார்கள் 
"அருவமும் உருவமும் இல்லா அரும்பெரும் ஜோதி" என்பதே சைவம் 
சைவத்தில் இயற்கையும் பஞ்ச பூதங்களும்தான் கடவுள் (சக்தி) 
மேலோகம் கீலோகம் என்ற பித்தலாட்டம் ஏதும் இல்லை 
விஜய நகரத்தை ஆண்ட சோழர்கள்தான் முதன் முதலில் இந்த பிததாலடத்தை 
கற்றுக்கொண்டு பின்னாளில் தமிழர்களிடையே பரப்பியது ... இவர்களின் பிந்தைய சோழர்கள்தான் 
சைவத்தை சேதாரம் ஆக்கி இன்றைய நிலையை உருவாக்கியது. தமிழர்களுக்கு சொந்தமான பௌத்தம் 
தமிழர்களிடம் இருந்து காணாமல் போனது என்பதும் சோழர்களால்தான் 
பூரண சைவம் என்பது கி. மு 1500 ஆண்டளவில் இருந்து இருக்கிறது பின்புதான் கொஞ்சம் கொஞ்சமாக 
கலப்படம் தொடங்கி இருக்கு வாய்ப்பு இருக்கிறது. 

இன்றைய எல்லா மதமும் வியாபாரம் சார்ந்தது மக்களை ஏய்த்து பிழைக்கும் 
ஒரு கூட்டத்தால் நன்கு திட்டம் இட்டு மக்களை சுரண்டி வாழ்கிறது.
இல்லாத கடவுளை வைத்து மக்களை மூளை சலவை செய்து 
மக்களை கொடிய வன்முறையாளர்களாக மாற்றி  பிரிவினைகளை வளர்த்து 
சண்டைகள் யுத்தங்கள் மூலம் அழிவுகளை உருவாக்கி நாடுகளை அழிக்கும் 
கொடூர செயல் வரைக்கும் செய்ய கூடிய சக்தியாக இந்த மதங்கள் பின்புலத்தில் இயங்குகின்றன.

நீங்கள் கடவுளை நம்பினால் உங்கள் பாசையில் நேரடியாகவே கடவுளை 
தொழமுடியாத முண்டங்கள் ஆக்கி  பாதிரியார்  பூசாரி  இம்மாம் என்ற இடைத்தரகர்களை உருவாக்கி 
உங்களுக்கு தெரியாமலே உங்கள் ஊரையே கொள்ளையிட்டு சாமி பெயரில் பூட்டி வைத்துவிடும் 
உங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு நேர்ந்ததும் யாருக்கு சொந்தம் என்பது  தெரியாது 
இது ஒரு நீண்ட தொலைநோக்கு கொள்ளை வரை நடக்கிறது.

நீங்கள் மனிதராகினால் மதம் தேவை இல்லை 
மிருகங்கள் போல நிம்மதியாக வாழலாம் 
இல்லையென்றால் இப்படித்தான் அடிதடியில் இறங்கி அழிந்து போவீர்கள் 

அடித்தவர்கள் 
வேண்டியவர்கள் 
இருவருமே இதில் செயற்பாடுவினை ஈட்டியவர்கள்தான் 
செய்வினை சொந்த மூளை என்று ஏதும் இல்லை. 
இவர்கள் மேய்ப்பர்கள் மேலே இருந்து பாதுகாப்பாக 
பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தனியொருவன் உங்கள் கருத்து மிகவும் ஆழ்மனது அதை யாரும் இங்கு புரிந்துகொள்வார்கள் என்று நான் 
நம்பவில்லை. இங்கிருந்து ஊருக்கு போகும் புறம்போக்குகள் அங்கே தமது கோவில் சிகரத்துக்கு குஞ்சம் 
கட்டுவதில் தீவிர கவனம் செலுத்துவதால் ...... எமது பிரதேசமும் பரமபரை பண்பாடுகளும் சுரண்டப்படுவதையோ யுத்தத்துக்கு முகம்கொடுத்து எழ முடியாது இருக்கும் உறவுகளின் நிலைமையை காண கூடியவர்களாகவோ இல்லை. உங்கள் கருத்துக்கு நன்றி ..... உண்மை நிலையும் உணர வேண்டிய கருத்தும் உங்களுடையது........... இப்படியே இருந்தால் இருக்கும் மிச்ச கோவில் இருக்கும் கும்பிட ஆட்கள் இருக்காது  என்ற உண்மையை இந்துமத தீவிரவாதிகள் உணரும்போது காலம் கடந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

வீரமிகு போராளிகள் என்று நாங்கள் மதித்த புலிகளில் இவ்வாறு நேர்ததிக்கடன் வைக்கும் முட்டாள்தனமான செயற்பாடுகளும் நடந்துருக்கின்றன என்ற தகவலை வழங்கியுள்ளீர்கள். 

உங்க‌ளுக்கு உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாட்டி நான் என்ன‌ செய்ய‌ 🤔 /

2002ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வ‌ர‌ யாழ்பாண‌த்தில் பொங்கி எழும் ம‌க்க‌ள் ப‌டையுட‌ன் சேர்ந்து போராளிக‌ளும்  ப‌ல‌ காய் ந‌க‌ர்த்த‌ல்க‌ளை வெற்றிக‌ர‌மாய் செய்த‌வை 💪 /

போராளிக‌ள் வீர‌ம் மிக்க‌ வ‌ல்ல‌மையான‌வ‌ர்க‌ள் தான் அதில் மாற்று க‌ருத்து இல்லை 💪 /
அவ‌ர்க‌ள் செய்த‌ உண்மை வ‌ர‌லாறை தான் மேல‌ எழுதி நான் 🙏/

பொங்கி எழும் ம‌க்க‌ள் ப‌டையில் என‌து ந‌ண்ப‌னும்  ப‌ங்கு ப‌ற்றி போராளிக‌ளுட‌ன் ர‌க‌சியாமாய் ப‌ல‌ வேலைக‌ள் செய்த‌வ‌ர் , அதில் அவ‌ர்க‌ள் வெற்றியும் க‌ண்ட‌வை , 

இது பொய் என்றால் உங்க‌ளுக்கு நெருக்க‌மான‌ யாழ்பாண‌த்து முன்னால் போராளிக‌ளை விசாரிச்சு பாருங்கோ உண்மை வெளியில் வ‌ரும் / இப்போது உள்ள‌ சூழ் நிலையில் அவ‌ர்க‌ள் இத‌ சொல்லுவார்க‌ளோ தெரியாது / ஏதோ ஒரு நாள் உண்மை வெளியில் வ‌ரும் 🙏

1 hour ago, குமாரசாமி said:

ஐயரிடமே போய் பிரச்சாரம் செய்ய வெளிக்கிட்டார்கள். 😂

50 minutes ago, tulpen said:

வீரமிகு போராளிகள் என்று நாங்கள் மதித்த புலிகளில் இவ்வாறு நேர்ததிக்கடன் வைக்கும் முட்டாள்தனமான செயற்பாடுகளும் நடந்துருக்கின்றன என்ற தகவலை வழங்கியுள்ளீர்கள். 

போராளிகள் என்றால் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கக்கூடாது என எதிர்பார்த்தால் அது அவ்வாறு எதிர்பார்ப்பவர்களின் தவறு.

Edited by Lara

47 minutes ago, tulpen said:

ஆனால் தன்னை நம்பிய மக்களை கடவுள் நம்பிக்கைக்கு  அப்பால் வடிகட்டிய மூடப்பழக்கங்களை அள்ளி விதைத்து தன்னை நம்பிய மக்களின் முன்னேறத்திற்கு தடை போட்டவை சைவ நிறுவனங்கள். 

ஏனைய மதங்களிலும் மூட நம்பிக்கைகள் இருந்தன, இருக்கின்றன. தமிழர்கள் முன்னேறாததன் காரணம் அரசியல் பிரச்சினை, அதை தொடர்ந்து நீண்டகால போர், போரின் பின்னும் தொடரும் அரசியல் பிரச்சினை.

Edited by Lara

15 minutes ago, Lara said:

ஐயரிடமே போய் பிரச்சாரம் செய்ய வெளிக்கிட்டார்கள். 😂

போராளிகள் என்றால் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கக்கூடாது என எதிர்பார்த்தால் அது அவ்வாறு எதிர்பார்ப்பவர்களின் தவறு.

கடவுள் நம்பிக்கை என்பது வேறு இதை நீ செய்தால் உனக்கு இதை செய்வேன் என ற நேர்த்திக்கடன் (லஞ்சம்) என்ற முட்டாள் நம்பிக்கை வேறு. 

Just now, tulpen said:

கடவுள் நம்பிக்கை என்பது வேறு இதை நீ செய்தால் உனக்கு இதை செய்வேன் என ற நேர்த்திக்கடன் (லஞ்சம்) என்ற முட்டாள் நம்பிக்கை வேறு. 

கடவுளை வணங்குவோருக்கு நேர்த்திக்கடன் என்பது கடவுள் நம்பிக்கையின் ஒரு அங்கம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது முட்டாள் நம்பிக்கை. 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

சைவ மதத்தில் சாதியை காட்டி மதம் மாறியவர்கள். தாங்கள் மாறிய மதத்தில் சாதி வேறுபாடு இல்லாமல் இருக்கினமா?...

இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பஜனை செய்யுமிடத்தில் சாதி இல்லை எல்லோரையும் அன்புடன் 
அழைக்கிறார்கள் நீங்களும் போகலாம் ..... சகோதரி என்று அன்புடன் வரவேற்பார்கள்.
இந்து கோவில்போல் சாதாரண அர்ஜனைக்கே குலம் கோத்திரம் எல்லாம் கேட்க மாட்டார்கள். 

கிறித்தவர்களுக்கிடையே எத்தனை மதப்பிரிவு?...கத்தோலிக்கர் இவர்களை[மற்ற கிறிஸ்தவர்களை] கணக்கிலும் எடுப்பதில்லை.

முருகனுக்கும் சொந்த சகோதரமான பிள்ளையாருக்கும் 
மொழிப்பிரச்சனையே உண்டு  பிள்ளையார் என்ன பாஷை பேசினார் என்பது 
இப்போ தெரிய வாய்ப்பில்லை கிருஸ்ணரின் சொந்த மனைவி ருக்குமணியை யாருக்கும் 
தெரியாது கள்ள காதலி ராதாவுக்கு தெருவுக்கு தெரு கோவில் என்று இத்தனை 
முரண்பாட்டை எம் வீட்டில் வைத்துக்கொண்டு ...... எந்த மூஞ்சியுடன் அவர்களிடம் கேள்வி கேட்க போவது 

காசுக்காய் மதம் மாறியவர்களுக்கு எவ்வளவு நாளைக்கு காசு கொடுத்து கொண்டு இருப்பார்கள்...அப்படிப்பட்ட  காசுக்காய் மதம் மாறியவர்கள் நாளைக்கு இன்னொரு மதத்தில் அதிக காசு தருகிறேன் என்றதும் அதற்கு மாறி விடுவார்கள்...அப்படிப்பட்டவர்கள் தான் காசுக்காய் ஊழியம் செய்கிறேன் என்று போறவர்கள்.

எப்படியோ எல்லோரும் 100 வருடத்துக்கு உள்ளேதான் வாழப்போகிறோம் 
எந்த மதத்தில் இருந்தாலும் சொந்த வாழ்வை வாழ இன்று பணம் அவசியம் 
நீங்கள் தருவத்துக்கு தயாரெனில்  இன்றைய உலகில் ரதியம்மா என்று உங்கள் பெயரிலேயே மதம் உருவாக்கலாம். யார் கொடுக்கிறார்களோ அவர்களிடம்தான் ஏழைகள் போகமுடியும் ... இதில் என்ன தப்பு இருக்கிறது? மதம் என்று போனால் கடவுளை காட்ட ஏதாவது ஒரு மதம் இருக்கிறதா? எல்லாம் பித்தலாட்டம் காட்டுவதுக்கு தானே உண்டு ......... பார்ப்பதுக்கு  காசு தருவார்கள் என்றால் போகாமல் இருப்பதுதான் தவறு. 

உண்மையாக,விரும்பி இந்த கிறிஸ்த சபையில் சேருபவர்கள் எத்தனை பேர்?

ஜீரோ 
கிறிஸ்ட்டினாவை விரும்பி போறவனே 90நாளில் போரடிச்சு திரும்பி வாறான் 
கிறிஸ்தவ சபையில் விரும்ப என்ன இருக்கு? 

ஜ ஏ எஸ் போன்ற தீவிர வாத அமைப்புகள் மக்களது சூழ்நிலையை பயன் படுத்தி தற்கொலைத் தாக்குதலுக்கு தூண்டுகின்றதோ அதற்கு ஒப்பானது இந்த மத மாற்ற கும்பலின் செயற்பாடு...அவர்களது சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்துவது.

உண்மைதான் உலகில் எல்லா மதமும் இதைத்தான் கடந்த ஆயிரம் வருடதுக்கு மேலாக 
செய்து வருகிறார்கள். எம்மை சார்ந்த மதம் செய்யும் வெறியாட்டத்தை நாம் மறைத்து கொள்கிறோம் 
அடுத்தவன் செய்யும்போது மட்டும்  கண்டிக்கிறோம். திருப்பதி வாசலில் இருக்கும் பிச்சைக்காரரை 
பாக்தரும் காண்பதில்லை ...... பக்தரை ஏய்த்து பிழைக்கும் பார்ப்பான கூட்டமும் காண்பதில்லை ..... 
உள்ளே தங்கம் அடாவடி தனமாக பூட்டி ஆணவமாக சிரித்துக்கொண்டு இருக்கிறது .. வாசலில் பசியில் பட்டினி கொலை நடக்கிறது. 

மேலே சிலர் சொன்ன மாதிரி ஏன் இவர்கள் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களிடமோ அல்லது கத்தோலிக்கரிடமோ வாயை திறப்பதில்லை?

ஏமாற யார் தாயாராக இருக்கிறானோ அவனை ஏமாற்றுவதுதானே சுலபம் 
வேண்டாத வேலைக்கு யாரும் போவானா? முள்ளு கம்பிகளை உடலில் குத்தி 
காவடி எனும் பெயரில் கயிறில் தொங்கும் கூட்டடம் தொடங்கி ரஞ்சிதாவுக்குள் தங்கம் தேடும் 
பிரம்மசாரிய நித்தியானந்தா தமது வாழ்வை தங்கம் ஆக்குவார் என்று வீடியோ பார்த்தும் ஏமாற கூடிய 
லட்ஷ கணக்கான கூட்டம் இங்குதானே இருக்கிறது?

புத்த விகாரைகள் அமைப்பது பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை...நாளைக்கே அந்த விகாரைகளில் எங்கட கடவுள்மார் தான் இருப்பினம் 

எதுவும் தெளிவாக இருக்க உங்களுக்கே விருப்பம் இல்லை 
புத்தன் தனித்திருக்க பிடிக்கவில்லை பித்தலாட்டம் கலந்துவிட்டால் மகிழ்ச்சி 
கொத்து ப்ரோட்டா என்று ஆன பின்பு கொஞ்சம் ஜேசுவையும் போட்டு கொத்துவதில் 
என்ன தவறு என்பதுதான் எனக்கு புரியவில்லை? 

அற்ப சலுகைகளுக்காய் மதம் மாறி அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் அல்லாடுகிறவர்களை கண்டு இருக்கிறேன் இருக்கிறேன்...யாரெண்டாலும் எனக்கென்ன போனால் போகட்டும் என்று இனி விட முடியாது. இது எங்கட மக்கள் என்று பொறுத்து பார்த்து தொடங்கி இருக்கின்றார்கள் அடித்து விரட்ட ...இது முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டியது.

அடி வாங்கியவர்களின் மேய்ப்பர்களுக்கு தகவல் கிடைத்ததும் 
கொஞ்சம் பணத்துடன் வந்து கிராம சேவையையே வாங்கி விடுவார்கள் 
அடிக்க போனவர்கள் வீட்டுக்குள் போதனைக்கு போனத்துதான் எமது வரலாறு 
இனி எப்படி மாறும் என்று நம்புகிறீர்கள்?

இதற்கு முன்னர்இந்த கிராமத்தில்  அடித்து விரட்டியும் ,திரும்பவும் அவர்கள் வந்திருப்பது இந்த கிராமத்தில் உள்ளோர் கேணைகள் எப்படியாவது அங்குள்ளோரை மதம் மாத்திடோணும் என்ட நோக்கத்தில் தான்.
அவரவர் மதம் அவரவர்களுக்கு பெருசு ...வைச்சு கொண்டு உங்களோடு இருங்கவன் ...ஏன் மற்றவரை மாத்த முயல்கிறீர்கள்?

மதம் என்பது வியாபாரம் கூடிய வருமானம் ஈட்ட 
கூடிய பக்த அடியார் கூட்டம் வேண்டும் ....  வல்லவன் விலைபேசி 
வாங்குகிறான்  முடியாதவன் புறுபுறுக்கிறான் 

1 minute ago, Lara said:

கடவுளை வணங்குவோருக்கு நேர்த்திக்கடன் என்பது கடவுள் நம்பிக்கையின் ஒரு அங்கம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அது முட்டாள் நம்பிக்கை. 

ஏதாவது கொடுத்தால்  தான் நான் விரும்பியதை தருவான் என்றால் சாதாரண வியாபாரியை போன்றவன் தால் கடவுள் எனபது அர்ததமா?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

கடவுள் நம்பிக்கை என்பது வேறு இதை நீ செய்தால் உனக்கு இதை செய்வேன் என ற நேர்த்திக்கடன் (லஞ்சம்) என்ற முட்டாள் நம்பிக்கை வேறு. 

ஏன் தேசிய‌ த‌லைவ‌ரின் திரும‌ண‌ம் த‌மிழ் நாட்டில் ஒரு கோயிலில் ந‌ட‌ந்த‌து / த‌லைவ‌ருக்கும் க‌ட‌வுள் ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அவ‌ரின் திரும‌ன‌மும் கேபி முன் நிலையில் ஒரு கோயிலில் ந‌ட‌ந்த‌து / இதுக்கு எந்த‌ நொட்டி சாட்டை சொல்ல‌ போறீங்க‌ள் 😁😉/

Just now, tulpen said:

ஏதாவது கொடுத்தால்  தான் நான் விரும்பியதை தருவான் என்றால் சாதாரண வியாபாரியை போன்றவன் தால் கடவுள் எனபது அர்ததமா?

ஏதாவது கொடுத்தால் தான் தாம் விரும்பியதை கடவுள் தருவார் என நினைத்து நேர்த்திக்கடன் வைப்பதில்லை. 

தாம் விரும்பியதை தந்தால் அதற்கு பதிலாக மகிழ்வுடன் இவர்கள் ஒன்றை செய்வதாக கூறுவதே நேர்த்திக்கடன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

ஏன் தேசிய‌ த‌லைவ‌ரின் திரும‌ண‌ம் த‌மிழ் நாட்டில் ஒரு கோயிலில் ந‌ட‌ந்த‌து / த‌லைவ‌ருக்கும் க‌ட‌வுள் ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அவ‌ரின் திரும‌ன‌மும் கேபி முன் நிலையில் ஒரு கோயிலில் ந‌ட‌ந்த‌து / இதுக்கு எந்த‌ நொட்டி சாட்டை சொல்ல‌ போறீங்க‌ள் 😁😉/

ஒரு கோவிலில் வைத்து தாலி கட்டும்படி மதிவதனி அவர்கள் விரும்பியதாகவும் 
அதனால்தான் அது கோவிலில் நடந்தததாகவும் அடெல் பாலசிங்கமோ அல்லது 
அண்டன் பாலசிங்கமோ ஒருவரின் புத்தகத்தில் வாசித்த நினைவு. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ‘தமிழ் நாடு திருப்போரூர் முருகன் கோவிலில்தான் / விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கும், மதிவதனி அவர்களுக்கும் 01.10.1984 அன்று திருமணம் நடைபெற்றது 🙏🙏

20190730-233953.png
 
எம் த‌மிழீழ‌ போராட்ட‌த்துக்கும் க‌ட‌வுளுக்கும் என்ன‌ ச‌ம்ம‌ந்த‌ம் என்று தேவை இல்லாம‌ புல‌ம்பும் கூட்ட‌த்துக்கு இந்த‌ ப‌திவு 😉😠 /

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

ஏதாவது கொடுத்தால் தான் தாம் விரும்பியதை கடவுள் தருவார் என நினைத்து நேர்த்திக்கடன் வைப்பதில்லை. 

தாம் விரும்பியதை தந்தால் அதற்கு பதிலாக மகிழ்வுடன் இவர்கள் ஒன்றை செய்வதாக கூறுவதே நேர்த்திக்கடன்.

இரண்டும் ஒன்றுதானே 

ஒன்று சாப்பாடுக்கு முன் 
மற்றது சாப்பாடுக்கு பின் 

மொத்தத்தில் மருந்து வியாபாரியாகத்தானே 
கடவுள் இருக்கிறார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாமதமும் நல்லதையே சொல்கின்றது. மனிதர்கள் தான் அதை தவறாக பயன் படுத்துகின்றனர்.

நல்லதுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கணணியை இன்று தவறான வழிக்கு பயன்படுத்துவது போல....😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.