Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சாமானியன் said:

அது வேலை வாய்ப்பு சம்பந்தமான விடயமெல்லோ,   மணித்தியாலத்திற்கு பேசிச்சினமோ இல்லை மொத்தமாக குடுத்தினமோ  ….. 

என்ன இழவோ...  தெரியாது, சாமானியன்.
நாவல் நிற உடுப்புடன் நின்று, சாப்பாட்டு  பொதிகளும்..  கொடுத்தார்கள்.
வெடித்த  வெடிகளின் புகை.. மண்டலமே... என்னை திகைக்க வைத்து....
இப்படியும்.. மனிதர்களா? என்று... மனதை, பாதித்த நிகழ்வுகள் அவை.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

இரத்த ஆறு பெருக்கு எடுத்து ஓட இனி மேல் என்ன இருக்கு?...இவர்களது குடும்ப ஆட்சி வந்தால் தான் தமிழருக்கு ஒர் தீர்வு வரும் 

அப்ப இந்தமுறை கூத்தமைப்பு மற்ற குதிரையிலை ஏறி ஓடப்போயினம்.ஒவ்வொரு லெக்சனுக்கும் குதிரையை மாத்தி மாத்தி ஓடுறது எங்கடை அரசியல்வாதியளின்ரை வழமையான வேலைதானே.

 

தமிழ் மக்கள் கோத்தாவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சாந்தி எம்.பி.

தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனக் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்களென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

20190813_061222.png

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை அறிவித்தமை தொடர்பில் கருத்துத் அதரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் இந்த யுத்தத்திலே பாதிக்கப்பட்டவள் என்பதற்கு அப்பால், அந்த யுத்தத்தின் பின்பு மீள்குடியேறிய காலத்திலேயும், யுத்த காலத்திலேயும் மக்களோடு சேர்ந்து வாழ்பவள் என்ற வகையில், இந்த கோத்தபாய ராஜபக்சவை எங்களது மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அவர்களது ஆட்சி என்பது ஒரு அசுர ஆட்சி என்றுதான் நான் கூறிக்கொள்வேன்.

இந்த மக்களுக்கு இப்பொழுது ஒரு பயமாகவிருக்கின்றது.

வெள்ளை வேன் கடத்தல், பிள்ளைகளைக் காணாமலாக்குதல், ஊடகவியலாளர்களைக் கடத்துதல், கப்பங் கேட்டல் போன்ற பல்வேறுவிதமான அநாகரீகமான வேலைகள் அரங்கேற்றியது இந்த கோத்தபாய ராஜபக்சவோடு இணைந்த அந்த மகிந்த குடும்பம், ராஜபக்ச குடும்பம். எனவே கோத்தபாய ராஜபக்சவை எங்களது மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்து எனக்கு நன்கு தெரியும் என்றார்.

https://www.virakesari.lk/article/62556

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில வெடிகள் கொழுத்தி கொண்டாடி இருக்கிரார்கள் இதுவே கிழக்கு என்றால் எப்படி இருந்து இருக்கும் என நினைத்துப்பார்த்தேன் 

 

வாழ்த்துக்கள் கோட்டா பாயா

கோத்தா சனாதிபதியானால் உண்மையில் அவர் ஒரு இராணுவத்தளபதி போலவே இயக்குவார் என பலர் எண்ணுகிறார்கள். காரணம், அதுதான் அவருக்கு அதிகம் தெரிந்தது.

அவரை பின்னால் வைத்து இயக்க விரும்புவது, அண்ணன் மகிந்த. தனது மற்றைய குடும்ப அங்கத்தவர்களை விட கோத்தாவையே இலகுவாக இயக்கலாம் என அவர் நம்பி முடிவெடுத்துள்ளார். 

ஆனால், மக்களுக்கு கூற விரும்புவது, நாட்டின் பாதுகாப்பே இன்றைய முதல் தேவை. அதை செய்யக்கூடியவர் கோத்தா ஒருவரே.

இதில் இரணிலுக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. உயிர்த்த ஞாயிறு பற்றிய விசாரணைக்குழுவில் தானும் தனது அரசும் பொறுப்பு ஏற்பதாக கூறி இருந்தார். ஆனால், பதவியை துறக்கவில்லை (ஓ, இது சிறி லங்கா). அதன் மூலம், மக்களுக்கு மகிந்த குடும்பம் இதை செய்திருக்காது என்ற சந்தேகத்தையும் விலக்கி இருக்கின்றார். 
  

Edited by ampanai

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தில வெடிகள் கொழுத்தி கொண்டாடி இருக்கிரார்கள் இதுவே கிழக்கு என்றால் எப்படி இருந்து இருக்கும் என நினைத்துப்பார்த்தேன் 

 

வாழ்த்துக்கள் கோட்டா பாயா

உங்கட பிரதேசவாத சிந்தனை அப்பிடி என்னதான் சொல்லுது யாழ்பாணத்தைப் பற்றி?

12 hours ago, ampanai said:

கோத்தா சனாதிபதியானால் உண்மையில் அவர் ஒரு இராணுவத்தளபதி போலவே இக்குவார் என பலர் எண்ணுகிறார்கள். காரணம், அதுதான் அவருக்கு அதிகம் தெரிந்தது.

கோத்தா முன்பு கூறியிருந்தார் தான் டொனால்ட் ட்ரம்ப் மாதிரி ஆட்சி புரிவேன் என. 😀

கோத்தா ஜனாதிபதியாக வந்தால் ஜோன் பொல்டனுக்கு படு குஷியாக இருக்கும். 😎

Edited by Lara

கோத்தபாய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிரச்சாரத்தில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்துள்ளார். அவரது கட்சியின் முகநூலில் இது உள்ளது : ?nrslppofficial

ட்ரம்ப் : மேக் அமெரிக்க கிரேட் எகெய்ன் ( அமெரிக்காவை மீண்டும் உயர்ந்த நாடாக்கு ) 
கோத்தா :  மேக் சிறிலங்கா கிரேட் எகெய்ன்  ( அமெரிக்காவை மீண்டும் உயர்ந்த நாடாக்கு ) 

பà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à¯.

 

கோத்தா அமெரிக்க பிரசையா? (Gota still American?) 

  • அமெரிக்க அரசு ஆனி மாதம் முடிந்த  காலாண்டு  பிரசா உரிமையை இழந்தவர்களின் பட்டியலை  விபரங்களை பிரசுரித்தது  
  • US Government publishes June quarter list of people who lost citizenship 
  • அந்த பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை 
  • Gota’s name missing from new list covering period of claimed renunciation

http://www.ft.lk/top-story/Gota-still-American/26-683980

22 minutes ago, ampanai said:

கோத்தா :  மேக் சிறிலங்கா கிரேட் எகெய்ன்  ( அமெரிக்காவை மீண்டும் உயர்ந்த நாடாக்கு

அமெரிக்காவை அல்ல ஶ்ரீலங்காவை. ஆனால் இதுவும் பொருந்துகிறது. :grin:

26 minutes ago, ampanai said:

 

பà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à¯.

 

வட்டத்திற்குள் ஶ்ரீலங்கா. வட்டம் என்ன சந்திரனா? :grin:

18 minutes ago, ampanai said:

கோத்தா அமெரிக்க பிரசையா? (Gota still American?) 

  • அமெரிக்க அரசு ஆனி மாதம் முடிந்த  காலாண்டு  பிரசா உரிமையை இழந்தவர்களின் பட்டியலை  விபரங்களை பிரசுரித்தது  
  • US Government publishes June quarter list of people who lost citizenship 
  • அந்த பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை 
  • Gota’s name missing from new list covering period of claimed renunciation

http://www.ft.lk/top-story/Gota-still-American/26-683980

கோத்தா முக்கிய புள்ளி என்பதால் அவரை பற்றிய விபரங்களை இரகசியமாக வைத்திருக்கிறார்களோ தெரியாது.

'பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடையும்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இல்லாமல் போவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேச்சுவார்த்தையின்-இறுதியில்-வேட்பாளர்-மாறலாம்/175-236797

%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

கதிர்காமத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷ விஜயம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் கதிர்காமம் புனித பூமிக்கான விஜயத்தை மேற்கொண்டார்

அங்கு அவருக்காக விசேட பூஜைகள் நட்தப்பட்டதுடன், இந்த விஜயத்தில் எதிர்கட்சித் தலைவர் மகிந்தராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

http://www.hirunews.lk/tamil/222322/கதிர்காமத்திற்கு-கோட்டாபய-ராஜபக்ஷ-விஜயம்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/14/2019 at 12:09 PM, Rajesh said:

உங்கட பிரதேசவாத சிந்தனை அப்பிடி என்னதான் சொல்லுது யாழ்பாணத்தைப் பற்றி?

அதாவது வந்து கோட்டாவைக்கூட ஆதரிக்க ஆட்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கு என்று  

  • கருத்துக்கள உறவுகள்
On 8/13/2019 at 12:36 PM, ampanai said:

அவரை பின்னால் வைத்து இயக்க விரும்புவது, அண்ணன் மகிந்த. தனது மற்றைய குடும்ப அங்கத்தவர்களை விட கோத்தாவையே இலகுவாக இயக்கலாம் என அவர் நம்பி முடிவெடுத்துள்ளார். 

பல ஆய்வாளர்கள் இந்த கருத்துடன் உடன்படவில்லை.
கோத்தாவை தவிர மற்றவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்ற 
காரணம் மற்றும் கோத்தா தனித்து களம் இறங்கும் சாத்தியம் காரணமாகவே 
மகிந்த இவரை ஏற்று கொண்டார்.

On 8/13/2019 at 5:49 PM, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தில வெடிகள் கொழுத்தி கொண்டாடி இருக்கிரார்கள் இதுவே கிழக்கு என்றால் எப்படி இருந்து இருக்கும் என நினைத்துப்பார்த்தேன் 

 

வாழ்த்துக்கள் கோட்டா பாயா

மட்டக்களப்பிலும் வெடி கொளுத்தப்பட்டிருப்பதாக தமிழ்சிறி அவர்கள் எழுதியிருந்தார்.

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதாவது வந்து கோட்டாவைக்கூட ஆதரிக்க ஆட்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கு என்று  

யாழ்ப்பாணத்தில் கோத்தாவுக்கு முன்பும் ஆதரவு இருந்தது தான். டக்ளஸ் போன்றவர்களே உள்ளார்களே.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/17/2019 at 12:44 AM, Lara said:

மட்டக்களப்பிலும் வெடி கொளுத்தப்பட்டிருப்பதாக தமிழ்சிறி அவர்கள் எழுதியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் கோத்தாவுக்கு முன்பும் ஆதரவு இருந்தது தான். டக்ளஸ் போன்றவர்களே உள்ளார்களே.

ஓம் ஒம்

கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கபட்டாலும் சிராந்தியே தேர்தலில் களமிறங்குவார் - சந்திமா கமகே 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது  பல்வேறு குற்றசாட்டுக்கள் உள்ளன. அந்த குற்றசாட்டுக்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாராக கோத்தபாயவை அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கியவுடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ரஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே தெரிவித்தார்.  

chandima-gamage_29072019_MPP.jpg?itok=7a

அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசவினதும் பங்கேற்புடனேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் களமிறங்குவோம். இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது.  

நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகவோ அல்லது வேறு ஒருவாராக இருந்தாலும் அவருக்கு எங்களின் முழு ஆதரவையும் வழங்குவோம். இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலைமையில் இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.  

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஆகவே இதுவரை காலமும் சுதந்திரமாக கருத்து வெளியிட்ட வந்த ஊடகங்கள் எதிர்வரும் காலங்களில் கோத்தபாய கூறும் விடயங்களை மாத்திரமே வெளியிட வேண்டிவரும் என்பது உறுதி. 

தற்போது அவரின் அமெரிக்க குடியுரிமை தொடர்பிலும் பிரச்சினை எழுந்துள்ளது. கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் இதுபோன்ற சவால்கள் தோன்றியிருக்கும் நிலையில் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. எங்களுக்கு கிடைத்துள்ள  தகவல்களுக்கு அமைய  தற்போது கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி  சிராந்தி ராஜபக்ஷவே வேட்பாளராக  களமிறங்குவார் என்று தெரியவருகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/63027

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.