Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதி யுத்த சமயத்தில் விடுதலைப்புலிகள் திருமாவளவனிடம் கூறிய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

இறுதியாக, தனது மக்களுக்கே நாளொன்றிற்கு ஒவ்வொருகதை கூறும் திருமாவும், அவரது தோழர்களும் எமக்கு அதைவிட அதிகமான புனைகதைகளைக் கூறக்கூடியவர்கள்தான் என்பதை நாம் எப்படி மறந்தோம். பேசாமல், அவர்களை அவர்கள் பாட்டில் விட்டுவிட்டு, எங்கள் வேலையைப் பார்ப்பதே மேல்.

மிகவும் சரியான கருத்து ரஞ்சித்.
இந்திய பாராளுமன்ற உறுப்பினராக... அவரது மக்களால் தேர்த்தெடுக்கப் பட்ட  திருமாவை...
வேண்டுமென்றே இங்கிலாந்துக்கு அழைத்து.... அவரது வாயை கிளற வைத்து..
அவமானப் படுத்தி அனுப்பியது போல் இருக்கின்றது.

இனியாவது... அவர்களை... அவர்கள் பாட்டில் இருக்க விடுங்கள்.

  • Replies 76
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

பையன்,

தமிழகத்து அரசியல் பலமென்பது மத்தியை ஆட்டம்காண வைக்கும் ஒரு ஆயுதம் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை. எம் ஜி ஆர் காலத்திலேயே, அவரின் கைக்கு மீறி காரியங்கள் நடந்தபோது, அவர் தலைவரை மீண்டும் ஈழத்துக்கே திரும்புங்கள், தமிழகத்தில் இருப்பது உங்களுக்கு ஆபத்து என்று சொன்னாரே ஒழிய, மத்தியைக் கட்டுப்படுத்த முயலவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், புலிகளின் மிகப்பெரும் ஆதரவாளராக இருந்த எம் ஜி ஆருக்கே கைகள் கட்டப்பட்டுத்தான் இருந்தன.

கருனாநிதிபற்றிக் கேட்கத் தேவையில்லை. 2008 / 2009 களில் அவர் மத்திய காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும்கூட, அவரால் எதுவுமே செய்திருக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை. கனிமொழியினதும், ராஜாவினதும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செயற்பாடுகளைக் காரணம் காட்டி, சோனியா கருனாநிதியின் வாலை ஒட்ட நறுக்கி வைத்திருந்தது அவர் பேசாமல் இருந்ததிற்கு ஒரு காரணம். அடுத்தது, இலங்கையில் போரை நிறுத்துங்கள், அல்லது தமிழ்நாடு பிரியும் என்று கருனாநிதி கேட்டிருந்தால், மறுகணமே அவரின் மகளும், வளர்ப்பு மகனும் சிறைப்பிடிக்கப்பட்டு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஆளுனராட்சி அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கும். இவை எதற்குமே கருனாநிதி உடன்படப்போவதில்லை. கருனாநிதி இடத்தில் எவர் இருந்தாலும், இதுதான் நடந்திருக்கும்.

அடுத்தது திருமாவளவன் போன்றவர்கள்மேல் நாம் வைத்திருந்த அளவுக்கதிகமான நம்பிக்கையும், அவர்களின் அரசியல் செல்வாக்கும், அதனோடு நாம் அடைந்த ஏமாற்றங்களும். ஈழத்து தமிழ் அரசியல்வாதிகளே தமது பதவிகளைத் துறக்காது, அரசுக்கு மாறி மாறி முண்டுகொடுத்துவரும்போது, திருமாவளவன் போன்றோரை எங்களுக்காக குரல் கொடுங்கள், பதவி துறவுங்கள் என்று எப்படி எதிர்பார்ப்பது? அடுத்தது, இவர் தனது சாதிமக்களுக்காக கேட்டுப் பெற்றுக்கொள்ளும் பதவியை தூக்கியெறிவதென்பதோ, அல்லது மத்திய அரசுக்கெதிராகச் செயற்படுவதென்பதோ தனது மக்களுக்கு எதுவித நண்மையையும் செய்யப்போவதில்லையென்றானபின், அவர் அதை ஏன் செய்யவேண்டும்? எங்களுக்காக தனது அரசியல் எதிர்காலத்தை வீணடிப்பதால் எமக்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை, மத்திய அரசையும் ஆட்டம் காண வைக்கப்போவதில்லை, அவரது மக்களும் நண்மை அடையப்போவதில்லை.

என்னைப்பொறுத்தவரை தமிழக அரசியல் வாதிகள் அனைவருமே வெத்துவேட்டுக்கள். இப்படிச் சொல்வது அவர்களை அவமானப்படுத்தவல்ல, மாறாக அவரகளது அரசியல் பலத்தின்மூலம் எமக்கு எதையுமே செய்ய அவர்களால் இயலாது என்பதைத்தான்.

திருமா போன்றவர்கள் அவ்வப்போது எம்மிடையே உலாவருவதால் அவர்கள் மேல் எமது ஆத்திரத்தைக் காட்டுகிறோம். ஆனால், கொலைகளைச் செய்யத் திட்டமிட்டு, கனகச்சிதமாய் அரங்கேற்றிய சோனியா, நாராயணன், சிவ் சங்கர் மேனன், அந்தோனி, நம்பியார்கள், பிரணாப் முகர்ஜீ போன்ற மனித உருவில் உள்ள மிருகங்கள் எம்மிடையே ஒருபோதும் உலாவரப்போவதில்லை. இவர்கள்மேல்த்தான் எமது ஆத்திரம் திரும்பவேண்டும்.

இறுதியாக, தனது மக்களுக்கே நாளொன்றிற்கு ஒவ்வொருகதை கூறும் திருமாவும், அவரது தோழர்களும் எமக்கு அதைவிட அதிகமான புனைகதைகளைக் கூறக்கூடியவர்கள்தான் என்பதை நாம் எப்படி மறந்தோம். பேசாமல், அவர்களை அவர்கள் பாட்டில் விட்டுவிட்டு, எங்கள் வேலையைப் பார்ப்பதே மேல்.

வ‌ண‌க்க‌ம் அண்ணா ,
நீங்க‌ள் சொல்லும் ஒரு சில‌ விடைய‌ங்க‌ளில் உட‌ன் ப‌டுகிறேன் , 2013ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஜெய‌ல‌லிதா எடுத்த‌ துனிச்ச‌லான‌ முடிவுக்கு , காங்கிர‌ஸ் க‌ட்டு ப‌ட்டு ந‌ட‌ந்த‌து ,  ஜெய‌ல‌லிதாவின் துனிவும் நேர்மையும் பாராட்ட‌ த‌க்க‌து /

அண்ண‌ன் சீமானோ அல்ல‌து அண்ண‌ன் வேல்முருக‌னோ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ரா இருந்து இருக்க‌னும் காட்டு தீ போல‌ த‌மிழ் நாடு எரிந்து இருக்கும் , நூற்றுக்கு 70 விழுக்காடு த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரியாது ஈழ‌த்தில் இப்ப‌டி ஒரு இன‌ அழிப்பு ந‌ட‌க்குது என்று 2009 , எல்லாத்தையும் மூடி ம‌றைத்த‌வ‌ன் க‌ருணாநிதி ம‌க்க‌ளுக்கு உண்மை நிலை தெரிய‌க் கூடாது என்று , எல்லா ப‌க்க‌த்தாலும் சிக்க‌ள் க‌ருணாநிதிக்கு வ‌ர‌ தான் அவ‌னின் கேவ‌ல‌மான‌ அர‌சியலின் எதிர் கால‌த்தை நினைத்து , உண்ணா விர‌த‌ போராட்ட‌த்தை அறிவிச்சவ‌ர் அவ‌ர் போட்ட‌ கேலி கூத்து உல‌க‌ த‌மிழ‌ர்க‌ள் பார்த்து அருவ‌ருத்து க‌ருணாநிதியின் மூஞ்சையில் காரி துப்பினார்க‌ள் , க‌ருணாநிதியின் உண்ணா விர‌த‌த்துக்கு பிற‌க்கு ஈழ‌ ம‌ண்ணில் எம் ம‌க்க‌ள் எவ‌ள‌வு பேர் கொல்ல‌ ப‌ட்டார்க‌ள் , க‌ருணாநிதி எத‌ சொல்லி உண்ணா விர‌த‌த்தை முடித்து கொண்டார் / 

ம‌ன‌ம் உண்டா இட‌ம் உண்டு , இந்தியா என்ப‌து வ‌ட‌ நாட்டானுக்கும் ம‌ட்டும் சொந்த‌மான‌ நாடு அல்ல‌ , ப‌ல‌ மொழி ப‌ல‌  இன‌  இன‌ங்க‌ளை கொண்ட‌ நாடு தான் இந்தியா , காங்கிர‌ஸ் க‌ட்சி என்ப‌து ப‌ழிக்கு ப‌ழி வாங்கும் ஒரு க‌ட்சி , இந்திரா காந்தி அம்மையார் கொல்ல‌ ப‌ட்ட‌துக்கு டெல்லியில் வ‌சித்த‌ சீக்கிய‌ ம‌க்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌ கொடுமைகல‌ நீங்க‌ள் ந‌ல்லாவே அறிவீங்க‌ள் , சீக்கிய‌ ம‌க்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌ கொடுமையை ப‌ற்றி ராஜீவ் காந்தியிட‌ம் ஒரு ஊட‌க‌ம் கேக்க‌ ராஜீவ் காந்தி திமிரா ஆனுவ‌த்துட‌ன் ப‌தில் அளித்தார் /
இதா இவ‌ர்க‌ளின் இந்தியா நாட்டு ப‌ற்று / 

பாகிஸ்தான் நேபால் கார‌ங்க‌ள் த‌ந்திர‌ம‌ய் த‌ப்பிச்சிட்டாங்க‌ள் இந்தியா என்ர‌ விச‌க்கிருமிக‌ளிட‌ம் சிக்காம‌ , அறிஞ‌ர் அண்ணா கையில் எடுத்த‌ போராட்ட‌த்தை கைவிடாம‌ல் மேலும் ச‌ர்வ‌தேச‌ நாடு இவ‌ர்க‌ளுக்கு அப்போது உத‌வுமாயின் த‌மிழ் நாடும் இந்திய‌த்துக்கை இல்லாம‌ த‌னி நாடாக‌ இருந்து இருக்கும் , த‌மிழர்க‌ள் இந்திய‌த்துக்கை 73வ‌ருட‌மாய் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்க‌ள் , அதுக்கு முத‌ல் அவ‌ர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் ஆக‌வே வாழ்தார்க‌ள் /

Edited by பையன்26

14 hours ago, குமாரசாமி said:

தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் இந்தியாவால் அளிக்கப்பட்டதே அது ஏன்?

இந்திராகாந்தி காலத்தில் இந்தியா ரஷ்ய ஆதரவு நாடாக இருந்தது.

இலங்கை அமெரிக்கா பக்கம் சாய வெளிக்கிட்டதால் தமிழர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இந்திராகாந்தி உயிருடன் இருந்திருந்தால் பாக்கிஸ்தானிலிருந்து வங்காளதேசம் பிரிய உதவியது போல் இலங்கையிலிருந்து தமிழீழம் பிரிய உதவி செய்திருக்கலாம்.

ஆனால் பாக்கிஸ்தானிலிருந்து வங்காளதேசம் பிரிய இஸ்ரேலின் ஆயுத, ஆலோசனை உதவிகளை இந்திராகாந்தி பெற்றார், வங்காளதேசத்தின் முக்தி பாஹினிக்கும் அவ் உதவிகளை பெற வழிவகுத்துக்கொடுத்தார். இலங்கை விடயத்தில் இஸ்ரேல் இலங்கை அரசு பக்கம் இருந்தது. எனவே அவர் உயிருடன் இருந்திருந்தாலும் தமிழீழம் சாத்தியப்பட்டிருக்குமோ தெரியாது.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

இதை தான் லாரா  , கோசான் சே அண்ணாவுக்கு இர‌ண்டு மாச‌த்துக்கு முத‌ல் சொல்லி காட்டினான் , நான் எழுதின‌த‌ பார்த்து என்னை பார்த்து ந‌க்க‌ல் சிரிப்பு சிரிச்சார் 😂😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இதை தான் லாரா  , கோசான் சே அண்ணாவுக்கு இர‌ண்டு மாச‌த்துக்கு முத‌ல் சொல்லி காட்டினான் , நான் எழுதின‌த‌ பார்த்து என்னை பார்த்து ந‌க்க‌ல் சிரிப்பு சிரிச்சார் 😂😁

பையா, ஹொலிடேய அனுபவிக்க விடமாட்டியள் போல 😂,

மேலே நான் சொன்னதையே லாராவும் சொல்கிறார் ப்ரோ. இந்திரா எம் ஆதரவு நிலை எடுத்தது, ஜேஆர்ரை வழிக்கு கொண்டுவர. 87 இல் ஒப்பர்ரேசன் பூமாலையோடு ராஜீவிடம் அடிபணிந்த்தது போல, இந்திரா நெருப்பெடுக்க தொடங்க ஜேஆர்  இந்திராவிடவும் அடிபணிந்திருப்பார்.

அத்தோடு தமிழ் ஈழத்தை தூக்கி பரணில் போட்டிருப்பார் இந்திரா.

நீங்கள் அஞ்ஞாதவாசம் புரிந்த காலத்தில், இதை பற்றி கனக்க இங்கே எழுதிவிட்டேன்.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை இலங்கையை பொறுத்தவரை இதுதான்.

1. தமிழர்கள் இலங்கை, இந்திய நாடுகளின் ஆட்சிக்குள் இருக்கும் வரை, ஒருபோதும் அவர்கள் இந்தியா ஒருமைபாட்டு, பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக ஆக மாட்டார்கள்.

2. தமிழ் ஈழம் அமைந்தால் - நீண்ட காலநோக்கில், அந்த அரசு, தமிழ்நாட்டுக்கு சார்பாக இந்திய நலனில் தலையிடலாம்.

3. தமிழ் ஈழத்தை இந்தியா பெற்றுக் கொடுத்தால், இலங்கை பாகிஸ்தானை போல நிரந்த பகையாளி ஆகிவிடும். மீதமுள்ள இலங்கையில் நிச்சயம் சீன படைகள் இறங்கும்.

4. சிங்களவர்களிடம் இருந்தும், இலங்கை தமிழரிடம் இருந்தும் இந்திய நலனுக்கு  வரக்கூடிய ஆபத்தை தவிர்க்க, எப்போதும் தமிழர், சிங்களவர் விரோதம் பேணப்பட வேண்டும், அதில் இரு பகுதிக்கும் மிகவும் வேண்டபட்ட தரப்பாய் இந்திய மத்திய அரசு இருக்க வேண்டும்.

இதற்கு குறுக்கே வந்தபடியால்தான் புலிகளை அழித்தொழித்தார்கள்.

இந்திரா இருந்தாலென்ன, இப்போ பிஜேபி இருந்தாலென்ன இதுதான் இந்தியாவின் இலங்கை கொள்கை. வாஜ்பாய் ஆட்சியில், தீவிர புலிஅபிமானி பெர்னாண்டெஸ் ராணுவ மந்திரியாக இருந்தபோதும் கூட இது மாறவில்லை.

இந்த கொள்கையில் ஒரு சிறிய தளர்வு நிலை விபிசிங் ஆட்சியில் வந்தது. விபிசிங் ஆட்சி எல்லா விதத்திலேயும் வெளியிறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவந்த ஆட்சி. ஆனால் அது நிலைக்கவில்லை.

19 hours ago, Paanch said:

13.09.2012 அன்றைய ஆனந்த விகடன் இதழில் இயக்குனர் சீமான் அவர்களின் பேட்டியில்,

விகடன் : ஈழத்தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

சீமான் : முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதிய கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப்பிள்ளைகளான நாங்கள் இவர்கள் பின்னால் செல்ல முடியாது.

அது 2012 இல் ஐயா. அண்ணன் அப்ப ஒரு இலங்கை தமிழ் பெண்ணைதான் கலியாணம் செய்வேன் என்று சொல்லித் திரிந்த காலம். 😂.

அதுக்குப் பிறகு அண்ணன் எக்கசக்க டிரெக் மாறீட்டார். அண்மைகாலங்களில் திராவிட கட்சிகளோடு கூட்டில்லை ஆனால் ராமதாசு, திருமாவோடு சேரலாம் என்பதே சீமானின் நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

பையா, ஹொலிடேய அனுபவிக்க விடமாட்டியள் போல 😂,

மேலே நான் சொன்னதையே லாராவும் சொல்கிறார் ப்ரோ. இந்திரா எம் ஆதரவு நிலை எடுத்தது, ஜேஆர்ரை வழிக்கு கொண்டுவர. 87 இல் ஒப்பர்ரேசன் பூமாலையோடு ராஜீவிடம் அடிபணிந்த்தது போல, இந்திரா நெருப்பெடுக்க தொடங்க ஜேஆர்  இந்திராவிடவும் அடிபணிந்திருப்பார்.

அத்தோடு தமிழ் ஈழத்தை தூக்கி பரணில் போட்டிருப்பார் இந்திரா.

நீங்கள் அஞ்ஞாதவாசம் புரிந்த காலத்தில், இதை பற்றி கனக்க இங்கே எழுதிவிட்டேன்.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை இலங்கையை பொறுத்தவரை இதுதான்.

1. தமிழர்கள் இலங்கை, இந்திய நாடுகளின் ஆட்சிக்குள் இருக்கும் வரை, ஒருபோதும் அவர்கள் இந்தியா ஒருமைபாட்டு, பாதுகாப்புக்கு பெரும் ஆபத்தாக ஆக மாட்டார்கள்.

2. தமிழ் ஈழம் அமைந்தால் - நீண்ட காலநோக்கில், அந்த அரசு, தமிழ்நாட்டுக்கு சார்பாக இந்திய நலனில் தலையிடலாம்.

3. தமிழ் ஈழத்தை இந்தியா பெற்றுக் கொடுத்தால், இலங்கை பாகிஸ்தானை போல நிரந்த பகையாளி ஆகிவிடும். மீதமுள்ள இலங்கையில் நிச்சயம் சீன படைகள் இறங்கும்.

4. சிங்களவர்களிடம் இருந்தும், இலங்கை தமிழரிடம் இருந்தும் இந்திய நலனுக்கு  வரக்கூடிய ஆபத்தை தவிர்க்க, எப்போதும் தமிழர், சிங்களவர் விரோதம் பேணப்பட வேண்டும், அதில் இரு பகுதிக்கும் மிகவும் வேண்டபட்ட தரப்பாய் இந்திய மத்திய அரசு இருக்க வேண்டும்.

இதற்கு குறுக்கே வந்தபடியால்தான் புலிகளை அழித்தொழித்தார்கள்.

இந்திரா இருந்தாலென்ன, இப்போ பிஜேபி இருந்தாலென்ன இதுதான் இந்தியாவின் இலங்கை கொள்கை. வாஜ்பாய் ஆட்சியில், தீவிர புலிஅபிமானி பெர்னாண்டெஸ் ராணுவ மந்திரியாக இருந்தபோதும் கூட இது மாறவில்லை.

இந்த கொள்கையில் ஒரு சிறிய தளர்வு நிலை விபிசிங் ஆட்சியில் வந்தது. விபிசிங் ஆட்சி எல்லா விதத்திலேயும் வெளியிறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவந்த ஆட்சி. ஆனால் அது நிலைக்கவில்லை.

அது 2012 இல் ஐயா. அண்ணன் அப்ப ஒரு இலங்கை தமிழ் பெண்ணைதான் கலியாணம் செய்வேன் என்று சொல்லித் திரிந்த காலம். 😂.

அதுக்குப் பிறகு அண்ணன் எக்கசக்க டிரெக் மாறீட்டார். அண்மைகாலங்களில் திராவிட கட்சிகளோடு கூட்டில்லை ஆனால் ராமதாசு, திருமாவோடு சேரலாம் என்பதே சீமானின் நிலைப்பாடு.

பிரோ இதை எல்லாம் போன‌ நூற்றாண்டில் செய்து முடிச்சு இருக்க‌ வேண்டிய‌ விடைய‌ம் ,கால‌ம் க‌ட‌ந்த‌ பின் ஞான‌ம் எத‌ர்க்கு ,
இந்திரா காந்தி அம்மையார் கூட‌ ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ஒன்னா ப‌ய‌ணிச்ச‌வ‌ர் , ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு அப்போது ப‌ல‌ உண்மைக‌ள் தெரியும் ,

தாய்க்கு இருந்த‌ ந‌ல்ல‌ புத்தி அறிவு ம‌க‌னுக்கு இல்லை , அது தான் எம் நில‌மை இப்ப‌டியான‌து , ராஜீவ் காந்தி எல்லாத்தையும் கெடுத்தான்

இந்த‌ நூற்றாண்டில் நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி , அது ந‌டை முறைக்கு ஆகாது  இனி, 

ச‌ரி நீங்க‌ள் உங்க‌ள் விடுமுறையை ஜாலிய‌ க‌ழியுங்கோ / 

On 8/25/2019 at 3:49 PM, கிருபன் said:

நடேசன், தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியைத் தெரிவித்தார். ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாகச் சென்று காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தியுங்கள்’. தலைவர் பிரபாகரனின் அந்தச் செய்தியைக் கேட்டதும்தான் நான் உடனடியாக அறிவாலயம் சென்று காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இணைந்துகொண்டேன்“ என தெரிவித்தார்.

ஏமாற்றி பிழைப்பு நடத்துவதற்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் தாம் கருணாநிதியையும் விஞ்சிவிடுவோம் என்று நிரூபித்து வருகிறார்கள்! 

திருமாவளவன் இனி திருட்டுமாவளவன் என்று தனது பெயரை மாற்றுவது சிறந்தது!

திருட்டுமாவளவன் மட்டும்மல்ல இன்னும் பலர் இவரைப் போலவே இந்திய அரச கொலைகாரர்களுக்கு சாமரம் வீசினால் தமிழின அழிப்பை நிறுத்திவிடுவார்கள் என்று கூவித் திரிந்ததை மறப்பதற்கில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, போல் said:

திருட்டுமாவளவன் மட்டும்மல்ல இன்னும் பலர் இவரைப் போலவே இந்திய அரச கொலைகாரர்களுக்கு சாமரம் வீசினால் தமிழின அழிப்பை நிறுத்திவிடுவார்கள் என்று கூவித் திரிந்ததை மறப்பதற்கில்லை!

த‌மிழ‌க‌ மக்க‌ள் ந‌ல்ல‌வை 🙏, அர‌சிய‌ல் வாதிக‌ள் ம‌க்கா பிராடுக‌ள் , இரண்டு நாக்கு ப‌டைச்ச‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் த‌மிழ் நாட்டில் அதிக‌ம் 😠/

  • கருத்துக்கள உறவுகள்

இது முகங்கள் தெரியவரும் காலப்பகுதி. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் ஏன் தலையிட்டது என்பதற்குப் பலரும் தமக்கு விரும்பிய கோணத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பதோடு, இக்கோணங்களிருந்தே எமது போராட்டம் தோல்வியுற்றதற்கான காரணங்களையும் கண்டுபிடிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, இந்தியா உண்மையாகவே தனித் தமிழ் ஈழம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கில்த்தான் அன்று செயற்பட்டதாக நம்பும் பலர் எம்மிடம் இன்னும் இருக்கிறார்கள். அதேபோல, இந்திரா அம்மையாரோ அல்லது எம். ஜி. ஆரோ இருந்திருந்தால் தமிழீழம் நிச்சயம் கிடைத்திருக்கும் என்று நம்புபவர்களும் எம்மில் இன்னும் இருக்கிறார்கள்.

ஆனால், உண்மை என்னவென்றால், இந்தியாவைப் பொறுத்தவரை தனி ஈழம் என்பது ஒருபோதுமே ஒரு நோக்காக இருக்கவில்லை என்பதும், அதுநோக்கி இந்தியா எப்போதுமே செயற்படவில்லை என்பதும் தான் உண்மை.

மேலே லாரா கூறியதுபோல, அமெரிக்க சார்பு மேற்குலகு நாடிச் செல்லும் ஜே ஆரின் இலங்கையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே ரஷ்ஷிய முகாமிலிருந்த இந்தியா அன்று ஈழத்தமிழர்களின் போராட்டத்தினைப் பயன்படுத்தி இலங்கை விவகாரத்தில் உள்நுழைந்தது. இது பலருக்கு இன்னும் புரியவில்லை என்பது வேதனை.

இலங்கையில் இந்தியா மூக்கினை நுழைத்த அதே காலப்பகுதியில் பஞ்சாப்பிலும், அசாம் நாகலாந்து மாநிலங்களிலும் இந்தியா பிரிவினைவாதிகளை எதிர்கொண்டிருந்தது. ஈழத்தமிழர்களுக்கு தனிநாடொன்றினைத் தீர்வாக இந்தியா முன்வைத்தால், உள்நாட்டில் இந்திய மத்திய அரசுக்கெதிராக பிரிவினைவாதம் கோரிப் போரிடும் இனங்களும் தனிநாடு கோரலாம் என்பது இந்தியாவுக்குத் தெரியாததல்ல. ஆகவேதான், எக்காரணம் கொண்டும் இந்தியா தனி ஈழத்தை ஆதரிக்கப்போவதில்லை தெளிவாகிறது.

இதற்குப்பின்னர், ராஜீவ் கொண்டுவந்த 1987 ஆம் ஆண்டின் சமாதான உடன்படிக்கை சிலரைப் பொறுத்தவரை தமிழர்கள் தவறவிட்ட இறுதிச் சந்தர்ப்பம் என்று நோக்கப்படினும்கூட, பலரைப் பொறுத்தவரை சொல்லப்பட்ட விடயங்கள் நடக்கவில்லை என்பதுடன், ஒப்பந்தத்தைச் செயற்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தினைவிட, புலிகளை நிராயுதபாணிகளாக்குவதையே இந்தியா முக்கிய நோக்காகக் கொண்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். உண்மையும் அதுதான். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தாயகத்தின் அடிப்படையில் தீர்வு அமையவேண்டும் என்று இந்தியா உண்மையாகவே விரும்பியிருந்தால், அம்மாநிலங்களைப் பிரித்து இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது பேசாமல் இருந்தது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, 2009 இனவழிப்பில் இந்தியாவின் பங்கென்பது, ஈழத்தமிழர் தொடர்பில் இந்தியாவின் உண்மையான நோக்கம் என்னவென்பதனை மிகவும் வெளிப்படையாகக் காட்டிவிட்டதென்பதே உண்மை. 

ஈழத்தமிழருக்கு நியாயமான தீர்வொன்றினைத் தர இந்தியா ஒருபோதும் முயலப்போவதுமில்லை, இடமளிக்கப்போவதுமில்லை. 

Edited by ரஞ்சித்
spelling

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

எங்க‌ளின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை என்ன‌ அண்ணா , 
எந்த‌ வ‌ழியில் ப‌ய‌ணிச்சால் சரியாக‌ இருக்கும் ,

இந்தியா இந்தியா என்று எங்க‌ள் கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ போகிறோமா , 

த‌லைவ‌ர் சொன்ன‌து தான் நினைவுக்கு வ‌ருது ( அவ‌ல‌த்தை த‌ந்த‌வ‌னுக்கு அதையே திருப்பி கொடு )

இந்தியா என்ற‌ பெய‌ரை கேட்டாலே பெரும் கோவ‌த்தோடு வெறுப்பும் அதிக‌ம் வ‌ருது 😉 /

ராஜீவ் காந்தி என்ர‌ கொடுங்கோல‌ன‌ வேறு மானில‌த்தில் வைச்சு போட்டு த‌ள்ளி இருந்தா , அந்த‌ ப‌ழி எம் த‌லையில் விழுந்து இருக்காது , 

எம் முன்னோர்க‌ள் ஒன்றை செய்யும் போது யோசிச்சு தான் செய்தார்க‌ளா 🤔
 
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

எனக்குத் தெரியாது பையன்.

ஆனால், எனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இந்தியா எமக்குச் செய்த அட்டூழியங்களைச் சொல்லி வருகிறேன். இணையத்திலும் நேரிலும். வெளிநாடுகளில் இந்தியா தன்னைப்பற்றிக் கூறிக்கொள்வதுபோல, அப்படியொன்றும் ஜனநாயகத்தை விரும்பும் காந்தியின் தேசம் அல்லவென்பதும், சிறுபான்மையினங்களை வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் இந்தியா எப்படி நடத்துகிறதென்பதை என்னால் முடிந்தளவிற்கு எழுதிவருகிறேன். இது எம்மால் நிச்சயம் செய்யப்படவேண்டிய ஒரு நடவடிக்கை.  இந்தியா இந்தியா என்று நாம் இன்னும் கும்பிட்டுக்கொண்டிருப்பது எமக்கு எதையுமே தரப்போவதில்லை என்பதுமட்டும் உண்மை.

இந்தியா காஷ்மீர் விவகாரத்தில் நடந்துகொள்ளும் முறைபற்றிய விமர்சனங்கள் சர்வதேச ரீதியில் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தியாவினால் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அகோரங்களும் கூறப்படுதல் அவசியம் என்று நினைக்கிறேன்.

இதைவிட வேறு என்ன அரசியல் ரீதியாகச் செய்வதற்கு என்னவிருக்கிறது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இந்தியாவை எதிர்த்து ஈழத்தமிழர்கள் எவ்வாறான அரசியலைச் செய்யமுடியும் என்பது இதுவரை சோதித்துப் பார்க்கப்படவில்லை. அப்படியொன்றிருந்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம். அதற்கு, எமக்கு ஆதரவான, இந்தியாவுக்கு நிகரான சக்தியொன்று தேவை. அப்படியொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை, இதுவரைக்கும் !

17 hours ago, ரஞ்சித் said:

ஒப்பந்தத்தைச் செயற்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தினைவிட, புலிகளை நிராயுதபாணிகளாக்குவதையே இந்தியா முக்கிய நோக்காகக் கொண்டிருந்தது என்றும் சொல்கிறார்கள். உண்மையும் அதுதான்

ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 48 மணி நேரத்தினுள் போர் நிறுத்தம் அமுலுக்கு வரும், போராளிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் இருந்தது.

16 hours ago, பையன்26 said:

ராஜீவ் காந்தி என்ர‌ கொடுங்கோல‌ன‌ வேறு மானில‌த்தில் வைச்சு போட்டு த‌ள்ளி இருந்தா , அந்த‌ ப‌ழி எம் த‌லையில் விழுந்து இருக்காது , 

எம் முன்னோர்க‌ள் ஒன்றை செய்யும் போது யோசிச்சு தான் செய்தார்க‌ளா 🤔

ராஜீவ் காந்தியை புலிகள் கொலை செய்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? 😀

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பையன்26 said:

எங்க‌ளின் அடுத்த‌ க‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கை என்ன‌ அண்ணா , 
எந்த‌ வ‌ழியில் ப‌ய‌ணிச்சால் சரியாக‌ இருக்கும்

இருப்பதாய் தக்க வைப்பதும், வளர வைப்பதும்.

பிஜேபி, இலங்கை தீவின் உண்மையான வரலாற்றை பகிரங்கமாக இடித்துரைக்கவும் வரைக்கும் வந்து விட்டது.

ராஜபக்சே இற்கு அதிகராத் தொனியில் உள்ள அறிவுறுத்தலின் படி, வடக்கு கிழக்கை இணைப்பதற்கு வாக்கெடுப்பு தேவை இல்லை. ஏனெனில், முஸ்லிம்கள் இலங்கை தீவின் பூர்விக குடிகள் இல்லை.  
   
கிந்தியா இதுவரையில் சிங்களத்தை நம்பாவிட்டாலும், சிங்ளம் சொல்வதை ஏற்றுக் கொண்டது.

ஏப்ரல் இல் நடந்த முஸ்லீம் தீவிரவாத தாக்குதல் எல்லாவற்றையும் பிரடிப்  போட்டுவிட்டது.

தமிழரிடம் வடக்கு கிழக்கில் அதிகாரம் இருப்பது, கிந்தியாவின் தேவையாக மாறி உள்ளது.

அது மட்டுமல்ல, கோத்தா முழுப் 13 ஐயும் அமுல் செய்யமுடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைபிற்கு   கூறிவிட்டார்.

மோடி, சொறி சிங்களத்துக்கு ஏறத்தாழ கட்டளையிட்டது, 13 இற்கு மேல் செல்லும் படி.

இதில் சில அறிகுறிகள் வெளிப்படையாகவும் தெரிகிறது, அதாவது கோத்த மோடியிடம் கேட்ட சந்திப்பு நேரத்திற்கு பேட்ஜில் இல்லை.  தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு, ஒருவரையும் நம்பி நடக்குமாறு நான் கூறவில்லை.

https://www.businesstoday.in/opinion/columns/sri-lanka-faustian-bargain-with-pakistan-exit-ltte-enter-isi/story/339389.html

22 hours ago, ரஞ்சித் said:

வடக்குக் கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த தாயகத்தின் அடிப்படையில் தீர்வு அமையவேண்டும் என்று இந்தியா உண்மையாகவே விரும்பியிருந்தால், அம்மாநிலங்களைப் பிரித்து இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது பேசாமல் இருந்தது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது.

முன்னைய இந்திய ஆட்சியாளரும் பின்னைய இந்திய ஆட்சியாளரும் வேறு வேறு. 😀

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

இருப்பதாய் தக்க வைப்பதும், வளர வைப்பதும்.

பிஜேபி, இலங்கை தீவின் உண்மையான வரலாற்றை பகிரங்கமாக இடித்துரைக்கவும் வரைக்கும் வந்து விட்டது.

ராஜபக்சே இற்கு அதிகராத் தொனியில் உள்ள அறிவுறுத்தலின் படி, வடக்கு கிழக்கை இணைப்பதற்கு வாக்கெடுப்பு தேவை இல்லை. ஏனெனில், முஸ்லிம்கள் இலங்கை தீவின் பூர்விக குடிகள் இல்லை.  
   
கிந்தியா இதுவரையில் சிங்களத்தை நம்பாவிட்டாலும், சிங்ளம் சொல்வதை ஏற்றுக் கொண்டது.

ஏப்ரல் இல் நடந்த முஸ்லீம் தீவிரவாத தாக்குதல் எல்லாவற்றையும் பிரடிப்  போட்டுவிட்டது.

தமிழரிடம் வடக்கு கிழக்கில் அதிகாரம் இருப்பது, கிந்தியாவின் தேவையாக மாறி உள்ளது.

அது மட்டுமல்ல, கோத்தா முழுப் 13 ஐயும் அமுல் செய்யமுடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைபிற்கு   கூறிவிட்டார்.

மோடி, சொறி சிங்களத்துக்கு ஏறத்தாழ கட்டளையிட்டது, 13 இற்கு மேல் செல்லும் படி.

இதில் சில அறிகுறிகள் வெளிப்படையாகவும் தெரிகிறது, அதாவது கோத்த மோடியிடம் கேட்ட சந்திப்பு நேரத்திற்கு பேட்ஜில் இல்லை.  தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு, ஒருவரையும் நம்பி நடக்குமாறு நான் கூறவில்லை.

https://www.businesstoday.in/opinion/columns/sri-lanka-faustian-bargain-with-pakistan-exit-ltte-enter-isi/story/339389.html

மன்னிக்கவும் கடஞ்சா,

மோடியின் கடந்த இலங்கை வருகையின் போதும் நீங்கள் இதேபோல இந்திய நிலைப்பாட்டில் ஒரு கடும் மாற்றம் வந்துள்ளதாக குறிப்பிடீர்கள். 

ஆனால் அது நீங்கள் தனிப்பட்டு கேள்விபட்ட விசயம் என்றும் கூறினீர்கள்.

வரும் செய்திகளை வைத்து பார்க்கும் போது அப்படி ஏதும் மாற்றம் ஏற்பட்டது போலத் தெரியவில்லை.

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்/பாகிஸ்தான் ஆளுமை என்பது புலிகள் போல ஒரு மிகப்பெரிய நிரந்தர அச்சுறுத்தல் இல்லை- இந்தியாவுக்கு.

தவிரவும் இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவுக்கு எவ்வளவு தலையிடியோ அதே அளவு தலையிடியே இலங்கைக்கும்.

ஆகவே, இரு நாடுகளும் சேர்ந்து இஸ்லாமிய பயங்கரவாதத்தை வேறறுப்பார்களே ஒழிய,  இஸ்லாமியர்களை அடக்குவதற்காக வாக்கெடுப்பு இன்றி (1987 ஒப்பந்ததுக்கு முரணாக) வடக்கு-கிழக்கை இணைத்து அதிகாரத்தை தமிழர்கள் கையில் கொடுப்பார்கள் என்பது நம்பக்கூடியதாக இல்லை.

மறுவழமாக, கிழக்கு மாகாணசபையில் முஸ்லீம்கள் அதிகாரத்தை கைப்பற்ற கூடிய சாத்தியம் இருப்பதைக் காட்டி, மாகாணசபைகளுக்கு காணி, பொலீஸ் அதிகாரம் வழங்காமல் விடும்/ அல்லது மாகாண சபை முறையையே ஒழிக்கும் முடிவுக்கு இலங்கை வரலாம். இதை இந்தியாவும் ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவின் இலங்கை கொள்கையில் எந்த மாற்றத்தையும் என்னால் காண முடியவில்லை.

பிகு: இலங்கையில் நடக்கும் எதிர்-இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகள் முற்றும் இந்திய மேற்பார்வையிலேயே நடக்கிறன. இந்தியாவின் மதிப்பீட்டில், இலங்கை மீது பிடியை போதுமானளவு இறுக்கியாகிவிட்டது. இப்போ தமிழர்களுக்கு எதையும் கொடுப்பதால் இந்தியாவுக்கு ஒரு நன்மையும் இல்லை. இலங்கையின் இஸ்லாமிய பயங்கரவாதத்தை முளையிலேயே கிள்ளியும் ஆகிவிட்டது. இதைச் சாட்டி இலங்கையை மேலும் தன் பிடிக்குள் இழுத்தும் ஆகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

முன்னைய இந்திய ஆட்சியாளரும் பின்னைய இந்திய ஆட்சியாளரும் வேறு வேறு. 😀

தோழர்..

தாங்கள் பிரையன் லாரா போல ஒரு சிக்ஸ் கடாசி போட்டீர்கள்..☺️

brian.jpg

7 hours ago, Lara said:

முன்னைய இந்திய ஆட்சியாளரும் பின்னைய இந்திய ஆட்சியாளரும் வேறு வேறு. 😀

முன்னைய ஆட்சியாளரும் இன்றைய ஆட்சியாளரும் வெவ்வேறாக இருந்தாலும் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை இருவரும் ஓரே கொள்கையுடையவர்களே. காங்கிரஸ் கட்சியையாவது   நாம் சரியாக கையாண்டிருந்தால் எமக்கு சாதகமாக திருப்பி இருக்கலாம். அதற்கான ராஜதந்திரம் எம்முடம் இல்லாமல்  போனது எமது துரதிஷ்ரமே. தற்போதைய ஆட்சியாளர் அப்படிப்பட்டவர்கள் அல்ல. கடும்போக்கு வலது சாரிகளைக்கொண்ட கட்சி இது. இவர்களிடம் இருந்து எமக்கு எமக்கு நன்மை கிடைக்கும. என ஈழத்எதமிழர் எதிர்பார்ப்பது எமது   வழமையான ஏமாறும் பாணிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, tulpen said:

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை அரசுகள் மாற மாற மாறும் ஒரு கொள்கையல்ல. அப்படியிருந்திருந்தால், காங்கிரஸின் தவறுகளை பி ஜே பி திருத்தியிருக்கும்.

எவர் ஆட்சிக்கு வந்தாலும் கொள்கை வகுப்பாளர்களும், அவர்களது நோக்கமும் மாறுவதில்லை.

ஈழத்தமிழர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் ஒன்றுதான். 

2 hours ago, tulpen said:

முன்னைய ஆட்சியாளரும் இன்றைய ஆட்சியாளரும் வெவ்வேறாக இருந்தாலும் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை இருவரும் ஓரே கொள்கையுடையவர்களே. காங்கிரஸ் கட்சியையாவது   நாம் சரியாக கையாண்டிருந்தால் எமக்கு சாதகமாக திருப்பி இருக்கலாம். அதற்கான ராஜதந்திரம் எம்முடம் இல்லாமல்  போனது எமது துரதிஷ்ரமே. தற்போதைய ஆட்சியாளர் அப்படிப்பட்டவர்கள் அல்ல. கடும்போக்கு வலது சாரிகளைக்கொண்ட கட்சி இது. இவர்களிடம் இருந்து எமக்கு எமக்கு நன்மை கிடைக்கும. என ஈழத்எதமிழர் எதிர்பார்ப்பது எமது   வழமையான ஏமாறும் பாணிதான். 

முன்னைய இந்திய ஆட்சியாளரும் பின்னைய இந்திய ஆட்சியாளரும் வேறு வேறு என எழுதியதற்குள் ஏன் இன்றைய ஆட்சியாளரை இழுக்கிறீர்கள்?

நான் சொன்னது இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்கை தற்காலிகமாக இணைத்தது ராஜீவ் காந்தி, உச்சநீதிமன்றம் அதை பிரித்து தீர்ப்பு வழங்கிய போது அவர் உயிருடன் இல்லை, ஆட்சியாளரும் இல்லை.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி இருவரும் அமெரிக்க, இஸ்ரேல் எதிர்ப்பாளர்கள். இந்திராகாந்தி போர் நேரத்தில் இஸ்ரேலின் உதவியை பெற்றிருந்தாலும் இஸ்ரேலுடனான உத்தியோகபூர்வ இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்துவதை தவிர்த்து வந்தவர். இஸ்ரேல் டெல்லியில் தூதரகம் திறக்க விரும்பிய போதும் அனுமதிக்கவில்லை.

இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட பின் பி.வி நரசிம்மராவ் ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள். அவர் உத்தியோகபூர்வமாக இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினார். இஸ்ரேல் டெல்லியில் தூதரகம் அமைக்க அனுமதித்தார். இந்தியா அமெரிக்க, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறியது.

ராஜீவ் காந்தி ஒப்பந்தம் கொண்டுவரும் போது நல்ல நோக்கத்துடன் தான் கொண்டு வந்தார். ஆனால் இடையில் CIA, Mossad, RAW போன்றன அவற்றை குழப்பியடித்து விட்டது. ஜே ஆர் ஜயவர்த்தனவும், லலித் அத்துலத்முதலியும் ராஜீவ் காந்தியை தமது வலையில் சிக்க வைத்து விட்டார்கள், புலிகளுக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும் முயற்சியிலும் வெற்றி கண்டு விட்டார்கள். பல விடயங்கள் தமிழர்களின் கையை மீறி போய் விட்டது.

ஆனாலும் 1991 இற்கு முன்னான இந்தியாவும் அதன் பின்னான இந்தியாவும் வேறு.

Edited by Lara

27 minutes ago, Lara said:

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். 1991  என்பது தமிழரைப் பொறுத்தவரை எதிர்மறையான திருப்புமுனையாக அமைந்துவிட்டது. ஶ்ரீலங்கா அரசுக்கு  அரசியல் வெற்றியை ஆரம்பித்து வைத்த ஆண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்/பாகிஸ்தான் ஆளுமை என்பது புலிகள் போல ஒரு மிகப்பெரிய நிரந்தர அச்சுறுத்தல் இல்லை- இந்தியாவுக்கு.

இது பார்வைக்கு சிறிதாக தெரியலாம்.

ஆனால், கிந்தியவிற்கு இது விடுதலைப் புலிகளை போன்றது இல்லை. அதை விட பெரியது என்று.

ஏனெனில், விடுதலைப் புலிகளுக்கு ஒரு போதுமே அரசுகளின் ஆதரவோ, அரவணைப்போ இல்லை என்பது கிந்தியவிற்க்கு  நன்கு தெரியும்.
   
அத்துடன், அந்த அரசுகளின் ராணுவ உளவு அமைப்பும் இங்கைத் தீவில் காலூன்றி விட்டது.

மிகவும் முக்கியமாக, கிந்தியாவின், எதிரிகளிடம் இருந்து தொலைவில் உள்ள, ஒப்பீட்டளவில் கூடிய பாதுகாப்பான, தென்பகுதி (5ம் படையால்) அச்சுறத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

அப்படியிருந்திருந்தால், காங்கிரஸின் தவறுகளை பி ஜே பி திருத்தியிருக்கும்.

பிரச்சனையின், சரியான வரலாற்றை பிஜேபி மட்டுமே வெளிப்படையாக அறிவித்துள்ளது.

அதுவும், சொறி சிங்களத்தின் முன்னாள் அதிபர், பிஜேபி காஷ்மீர் இல் செய்ததை, சிங்களத்துக்கு சாதகமான முறையில் அணுகுவது பற்றி அறிவித்த போது.

பிஜேபி, ஈழத்தத்தமிழர்கள்ளுக்கு ஆதரவில்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையான வரலாற்றை மறைத்து, சிங்களத்தை திருப்தி படுத்தும் வெறுப்பு இல்லை.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

வரும் செய்திகளை வைத்து பார்க்கும் போது அப்படி ஏதும் மாற்றம் ஏற்பட்டது போலத் தெரியவில்லை.

பிரச்சனையின், சரியான வரலாற்றை பிஜேபி மட்டுமே வெளிப்படையாக அறிவித்துள்ளது.

அதுவும், சொறி சிங்களத்தின் முன்னாள் அதிபர், இலங்கைத்தீவு சின்ஹல பௌத்த  நாடு கூக்குரலிட்ட அதிபர், பிஜேபி காஷ்மீர் இல் செய்ததை சிங்களத்துக்கு சாதகமான முறையில் அணுகுவது பற்றி அறிவித்த போது.

 காங்கிரஸ், இதை பற்றி வாயே திறக்கவில்லை, ஆமோதித்ததும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

பிரச்சனையின், சரியான வரலாற்றை பிஜேபி மட்டுமே வெளிப்படையாக அறிவித்துள்ளது.

அதுவும், சொறி சிங்களத்தின் முன்னாள் அதிபர், பிஜேபி காஷ்மீர் இல் செய்ததை, சிங்களத்துக்கு சாதகமான முறையில் அணுகுவது பற்றி அறிவித்த போது.

பிஜேபி, ஈழத்தத்தமிழர்கள்ளுக்கு ஆதரவில்லாமல் இருக்கலாம், ஆனால் உண்மையான வரலாற்றை மறைத்து, சிங்களத்தை திருப்தி படுத்தும் வெறுப்பு இல்லை.

உங்களிடம் ஒரு கேள்வி, எதற்காக இந்தியாவை, கிந்தியா என்று அழைக்கிறீர்கள்? இழிவுபடுத்தவா அல்லது இந்தியா ஒரு இந்துத்துவ நாடு இல்லை என்பதை பறைசாற்றவா? சும்மா, அறிந்துகொள்வதற்காகத் தான் கேட்கிறேன்.

அடுத்தாக, பி.ஜே. பியின் கிந்தியா ஈழத்தமிழர் தொடர்பாக எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்? காங்கிரஸின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாட்டிற்கும் பி.ஜே பியின் நிலைப்பாட்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதென்று நினைக்கிறீர்களா? அப்படியிருந்தால், அது எவ்வகையில் எமக்கு சாதகமானதாக இருக்கப்போகிறது? 

ஈழத்தமிழரின் போராட்டத்தின் நியாயத்தன்மையை பி.ஜே பி புரிந்துவைத்திருக்கிறதென்றால், காங்கிரஸ் அதுபுரியாமலா இவ்வளவு காலமும் எமது தலையெழுத்தை மாற்றிக்கொண்டிருக்கிறதென்று நினைக்கிறீர்கள்? 

காஷ்மீர் தொடர்பாக பி, ஜே பியின் அண்மைய நடவடிக்கைகளை நீங்கள் ஆதரித்திருப்பதைப் பார்த்தேன். அதற்கான காரணம் வெறுமனே ஹிந்து - முஸ்லீம் பிரச்சினையில்லை என்றும், பாக்கிஸ்த்தான் - இந்தியா பிணக்கும் இல்லையென்று நான் எடுத்துக்கொள்ளலாமா? இவை இரண்டுமில்லையென்றால், நீங்கள் கிந்தியாவின் புதிய காஷ்மீர் நிலைப்பாட்டை ஆதரிக்கக் காரணம் என்ன? காஷ்மீர் தொடர்பான கிந்தியாவின் இப்புதிய நிலைப்பாடு எப்படி எமக்குச் சாதகமாக அமையப்போகிறதென்று நினைக்கிறீர்கள்? நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்கூட, காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த்து இழக்கப்படுவது, ஈழத்தமிழர் நிலைப்பாட்டை இன்னும் பலவீனமாக்கி விடாதா? தனது மாகாணம் ஒன்றிற்கு சிறப்பு அந்தஸ்த்து ஒன்றை வழங்க மறுக்கும் அல்லது இருந்ததைப் பறித்தெடுக்கும் ஒரு அரசு, எப்படி இன்னொரு நாட்டின் சிறுபான்மையினத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து ஒன்றை வழங்கும்படி அந்நாட்டு அரசைக் கேட்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அப்படிக் கோருவதற்கான தார்மீக அந்தஸ்த்தை கிந்தியா காஷ்மீரில் இன்று செய்துள்ளதோடு முற்றாக இழந்துவிட்டதென்பது உங்களுக்குத் தெரிகிறதா? 

இவை எல்லாவற்றையும் விட, ஈழத்தமிழருக்கு நியாயமான தீர்வொன்றைத் தர வேறொரு காரணம் பி.ஜே. பியின்  கிந்தியாவுக்கு இருக்கிறதென்றால், அதை நீங்கள் எழுதவேண்டுமெ என்பது எனது அவா. ஒருவேளை. நாங்கள் எல்லோரும் பார்க்கும் கோணத்தைவிட, இன்னொரு கோணத்திலிருந்து நீங்கள் அதைப் பார்க்கலாம் என்பதனால் கேட்கிறேன். 
 
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர்..

தாங்கள் பிரையன் லாரா போல ஒரு சிக்ஸ் கடாசி போட்டீர்கள்..☺️

brian.jpg

புரட்சி, உங்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் உண்மையாகவே இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை ஆட்சிகள் மாறும்போது மாற்றப்படுகிறதென்று நம்புகிறீர்களா? அப்படி மாறுகிறதென்றால், பி.ஜே. பியின் ஆட்சியினால் எமக்குக் கிடைத்திருக்கும் நண்மைகள் பற்றிச் சொல்லுங்களேன்? உங்களின்மாநிலமே அவர்களை முற்றாக நிராகரித்திருக்கும்போது, நீங்கள் ஆட்சிமாற்றம் எமக்கு நண்மையாக இருக்கும் என்று நினைப்பது வியப்பளிக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.