Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ல‌ண்ட‌னில் இருந்து ஊருக்கு போன‌ கிழ‌வ‌னுக்கு வ‌ந்த‌ காம‌ வெறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பையன் 26
நான் பலநாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்தாலும் உங்கள் பதிவில் வந்து எழுதுவது இல்லை. ஏனெனில் அது விழலுக்கு இறைத்த நீர் என்று தெரியும் என்பதனால். தேசியம் என்னும் ஒரு சிறந்த ஆயுததத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இங்குள்ள சிலரைப்போல் பலரையும் முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பதிவுகளை போடுகிறீர்கள். அதை மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையா என்று கூட எண்ணிப் பார்க்காததானாலேயே தொடர்ந்தும் அப்படியான சிறுபிள்ளைத் தனமான பதிவுகளை போடுகிறீர்கள். அதற்கான முக்கிய காரணம் உங்களுக்கான மற்றவரின் பார்வையின் தேவைதான் என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் புரிந்துதான் இருந்தாலும் முகம் தெரியாத உங்கள் முகத்துக்காகவும் யாழில் வாசிக்கும் மற்றவர்கள் முகத்துக்கும் அஞ்சி யாரும் உங்களுக்கு எதிராக முகம் முறித்து எழுதுவதில்லை. இனிமேலும் இப்படி சிறுபிள்ளைகள் போல் கதை சொல்வதை விட்டு பயனுள்ள எதையாவது செய்யுங்கள்.

அப்படிப்போடு  அரிவாளை  என்றாராம்

பாராட்டுக்கள்   சுமே

உண்மைகளை  ஒத்துக்கொள்ளவும்   மனங்கள்  வளரணும்

  • Replies 144
  • Views 16k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

இது  ஒரு  சமூதாயத்தை நேசிப்பவனின் சமூதாயக்கோபம்  மட்டுமே

ஒரு விபரீதத்தை  கண்டவுடன்  அதை தடுக்க  அல்லது

இனி நடக்காதிருக்க  தன்னால்  முடிந்ததை

தனக்குத்தெரிந்ததை  

பையன் 26  செய்துள்ளார்

ஏற்கனவே  நான் எழுதியபடி  அது  வெளியில்  தெரியப்படுத்தியிருக்கக்கூடாது

மற்றும்  நாலு பேருக்கு  உதவுமென்றால்  எதையும் செய்யலாம்

இதுவே  எனது  நிலை.

அப்புறம்  எதெற்கெடுத்தாலும்  ஆலோசனையும்

சட்ட விவாதங்களும் செய்வோர்

அவர்  சார்ந்த சமூகத்திற்காக  ஒரு  புல்லைத்தானும்  புடுங்கியதில்லை

புடுங்க முடியாது

விசுகு அண்ணா உங்க‌ளுக்கு இந்த‌ இட‌த்தில் இன்னொரு உண்மையை சொல்ல‌ விரும்புகிறேன் , 

எம‌க்காக‌ போராடின‌ ஒரு போராளி குடும்ப‌த்த‌ புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு எடுக்க‌ , யாழ் க‌ள‌ உற‌வின்   கை எழுத்து தேவை ப‌ட்ட‌து , போனுக்காள் தொட‌ர்வு கொண்டு கேட்டேன் இத‌ செய்ய‌ முடியுமா உங்க‌ளால் காசு ஒன்றும் க‌ட்ட‌ தேவை இல்ல  , உங்க‌ளின் கை எழுத்து தான் தேவை என்று , அதுக்கு அவ‌ர் த‌ய‌க்க‌ம் காட்டினார் , அதுக்கு பிற‌க்கு நான் அவ‌ரிட‌ம் இத‌ ப‌ற்றி கேட்ட‌தும் இல்லை க‌தைச்ச‌தும் இல்லை , போராளிக‌ள் உச்சி வெய்யில் காடு ம‌ழை புய‌ல் இதை எல்லாம் பெருட் ப‌டுத்தாம‌ எம‌க்காக‌ போராட‌ தான் நாட்டில் ச‌ண்டை என்று சொல்லி புல‌ம் பெய‌ர் நாட்டில் செட்டில் ஆகி வ‌ச‌தியாய் வாழுகின‌ம் , ஆனால் ஒரு போராளி குடும்ப‌த்துக்காக‌ கை எழுத்து போட‌ கூட‌ த‌ய‌க்க‌ம் காட்டுவின‌ம் , ஆனால் யாழில் வ‌ந்து போலி புலி வேச‌ம் போடுவின‌ம் ப‌ல‌ர் , அடுத்த‌ வ‌ருட‌ம் நான் வ‌சிக்கும் நாட்டு அர‌சாங்க‌ம் அந்த‌ போராளி குடும்ப‌த்தை danske røde kors மூல‌ம் இந்த‌ நாட்டுக்கு எடுக்க‌ போகின‌ம் விசுகு அண்ணா 🤞

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பையன் 26
நான் பலநாட்களாக உங்கள் பதிவுகளை வாசித்தாலும் உங்கள் பதிவில் வந்து எழுதுவது இல்லை. ஏனெனில் அது விழலுக்கு இறைத்த நீர் என்று தெரியும் என்பதனால். தேசியம் என்னும் ஒரு சிறந்த ஆயுததத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இங்குள்ள சிலரைப்போல் பலரையும் முட்டாள்கள் என்று எண்ணிக்கொண்டு பதிவுகளை போடுகிறீர்கள். அதை மற்றவர்கள் நம்புகிறார்களோ இல்லையா என்று கூட எண்ணிப் பார்க்காததானாலேயே தொடர்ந்தும் அப்படியான சிறுபிள்ளைத் தனமான பதிவுகளை போடுகிறீர்கள். அதற்கான முக்கிய காரணம் உங்களுக்கான மற்றவரின் பார்வையின் தேவைதான் என்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் புரிந்துதான் இருந்தாலும் முகம் தெரியாத உங்கள் முகத்துக்காகவும் யாழில் வாசிக்கும் மற்றவர்கள் முகத்துக்கும் அஞ்சி யாரும் உங்களுக்கு எதிராக முகம் முறித்து எழுதுவதில்லை. இனிமேலும் இப்படி சிறுபிள்ளைகள் போல் கதை சொல்வதை விட்டு பயனுள்ள எதையாவது செய்யுங்கள்.

சுமே அக்கா.. நானறிய.. புலம்பெயர் மண்ணில் கொடிபிடிச்சு.. கூப்பாடு போட்டு.. பின் தாயகத்தில் போய் புத்தகம் வெளியிட்டு பெயர் விலாசம் காட்டினதை தவிர நீங்கள் சாதித்தது ஒன்றுமில்லை.

ஆனால்.. பையன்26 அப்படியல்ல. அவர் போராட்ட காலத்திலும் சரி இப்பவும் சரி தன்னால் இயன்றதை செயலில் காட்டுகிறார். பெயர் விலாசம் தேடுவதில்லை. அந்தக் குணம் எல்லோருக்கும் எல்லா இளையோருக்கும் வாய்க்காது. 

அவரை போற்ற வேண்டாம். சிறுமைப்படுத்தாமல் விடுங்கள். ஏனெனில்.. அதற்கான தகுதி எங்கள் யாருக்கும் இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ந‌ம்பி ப‌ழ‌கின‌வையை நான் ஒரு போதும் கை விட்ட‌து இல்லை விசுகு அண்ணா , அந்த‌ போராளி இறுதி க‌ட்ட‌ யுத்த‌தில் ச‌ர‌ன் அடைஞ்சு , க‌ருணாவின் ஆட்க‌ள் தான் அந்த‌ போராளிய‌ வீசாரிச்ச‌வை , ம‌ற்ற‌ போராளிக‌ளோட‌ சேர்த்து இவ‌ருக்கும் சிறைக்குள் வைச்சு அகோர‌மா அடி விழுந்த‌து , ஒரு மாதிரி அந்த‌ போராளிய‌ காசு க‌ட்டி வெளியில் எடுத்தாச்சு , 

புல‌ம் பெய‌ர் நாட்டுக்கும் விரைவில் வ‌ந்து சேருவின‌ம் , 

மெள‌வுன‌மாய் இருந்து த‌னி ஒருவ‌னாய் நான் செய்த‌ ப‌ணி என‌க்கும் ஒரு சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் தான் தெரியும்  , 

ஏன் என்ற‌ உற‌வின‌ர்க‌ள் கூட‌ என்னை க‌ழுவி ஊத்தின‌வை , உன்னோட‌ வ‌ந்த‌ ம‌ச்சானை பார் எவ‌ள‌வு முன்னோறி விட்டான் நீ ஏன் இப்ப‌டி இருக்கிறாய் என்று ,

நான் ம‌னித‌ நேய‌த்தையும் எம் இன‌த்தையும் எம் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் உயிருக்கு உயிரா நேசித்தேன் ,  அதில் கூட‌ நேர‌த்தை பாவித்து விட்டேன் , இன்னும் ப‌ல‌த‌ செய்தேன் , இதேல்லாம் உப்புச‌ப்பு இல்லாம‌ கீழ் த‌ன‌மாய் எழுதுப‌வ‌ர்க‌ளுக்கு எங்கை தெரிய‌ போகுது விசுகு அண்ணா 😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, nedukkalapoovan said:

சுமே அக்கா.. நானறிய.. புலம்பெயர் மண்ணில் கொடிபிடிச்சு.. கூப்பாடு போட்டு.. பின் தாயகத்தில் போய் புத்தகம் வெளியிட்டு பெயர் விலாசம் காட்டினதை தவிர நீங்கள் சாதித்தது ஒன்றுமில்லை.

ஆனால்.. பையன்26 அப்படியல்ல. அவர் போராட்ட காலத்திலும் சரி இப்பவும் சரி தன்னால் இயன்றதை செயலில் காட்டுகிறார். பெயர் விலாசம் தேடுவதில்லை. அந்தக் குணம் எல்லோருக்கும் எல்லா இளையோருக்கும் வாய்க்காது. 

அவரை போற்ற வேண்டாம். சிறுமைப்படுத்தாமல் விடுங்கள். ஏனெனில்.. அதற்கான தகுதி எங்கள் யாருக்கும் இல்லை. 

ந‌ன்றி ச‌கோத‌ரா
2008ம் ஆண்டில் இருந்து யாழ்க‌ள‌த்தில் என்னோடு ஒன்றாய் ப‌ய‌ணித்த‌ உற‌வுக‌ளுக்கு தான் என்னை ப‌ற்றி ந‌ல்லா தெரியும் , யாழில் இணைந்த‌தே த‌மிழீழ‌ நாட்டு ப‌ற்றால் தான்,  நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கூட்ட‌த்துக்கு யாழில் ப‌தில் அளிப்ப‌து இல்லை என்று முடிவு ப‌ண்ணி விட்டேன் அண்ணா , நீங்க‌ள் எழுதினா பிற‌க்கு ப‌ல‌ர் இந்த‌ திரியில் எழுதி இருந்தின‌ம் , அத‌ வாசிக்கும் ம‌ன‌ நிலையில் நான் இல்லை , இன்றும் உங்க‌ளை அன்புட‌ன் அண்ணா என்று கூப்பிட‌ கார‌ண‌ம் உங்க‌ள் மேல் உள்ள‌ அன்பால் , எதையும் ந‌க்க‌ல் நையாண்டி செய்யாம‌ புரிய‌ ப‌டுத்துவீங்க‌ள் ம‌ற்றும் என்னை போல் கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிக்கிறீங்க‌ள் உட‌ன் பிற‌ப்பே 👏🙏

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பையன்26 said:

பையா, ஒருகை கொடுப்பது மறுகைக்கு கூட தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான். நீங்கள் செய்வதை செவ்வனே செய்யுங்கள் (இருட்டடி கூட) ஆனால் அதை பொதுவெளியில் பகிர்வதை கொஞ்சம் குறைப்பது நல்லதென்பது எனது கருத்து  ஏனென்றால் யாழ் களத்தில் பலருக்கு இலவச அறிவுரை வழங்கத்தான் தெரியும். அதைவிட ஒன்றையும் புடுங்கியதில்லை. முக்கியமான கருத்துக்களை கட்டாயம் பகிர விரும்பினால் அவர்களுக்கு தனி மடலில் தெரிவியுங்கள். இங்குள்ள தட்டச்சு, வாய் வீரர்களுக்கு உங்களின் செயலும் சொற்களும் கொஞ்சம் சுடுது போல தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/21/2019 at 6:02 PM, goshan_che said:

நான் மாறி மாறி எழுதவில்லை. எனது முதலாவது பதிவு நீங்கள் இந்த நபர் உங்களுடைய நண்பரின் மாமனார் என்று நீங்கள் சொல்லும் முன் எழுதியது.

அப்போது நான் நினைத்தேன் நீங்கள் யாரோ சொன்னதை கேட்டு ஒருவரை தாக்கியுள்ளீர்கள் என. ஆனாலும் அப்போதும் இதை பொலீசில் முறையிடுங்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றுதான் எழுதினேன்.

அதன் பின்னர்தான் நீங்கள் இந்த நபர் உங்களுக்கு எந்தவகையில் நெருக்கமானவர் என்பதை எழுதினீர்கள். எனது அடுத்த பதிவிலே நான் எழுதினேன் “பையா இதை நான் எதிர்பார்க்கவில்லை” என.

அந்த தகவல் இந்த சம்பவம் பற்றிய என் அணுகுமுறையை 180 பாகையால் மாற்றியது. இது இந்த நபரை தப்ப வைக்கும் முயற்சி என்றும் கூட தோன்றுகிறது.

நீங்கள் இதில் இவரை தப்ப வைக்க முயற்சிப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் நிச்சயமாக உங்களை சேர்த்து கொண்டு, அல்லது பாவித்து, இந்த நபருக்கு சில அடிகள், காறிதுப்பல்கள் வசவுகளோடு எஸ்கேப் ஆக திட்டம் வகுக்க பட்டுளது என்பது, இதுவரை நீங்கள் சொன்னவற்றை வைத்து என் அனுமானம்.

இது உங்களுக்கு விளங்கினால் சந்தோசம். இல்லை எண்டாலும் கவலை இல்லை.

நன்றி வணக்கம்.

மீண்டும் வேறு ஒரு சந்தோசமான திரியில் சந்திப்போம்🙏🏾

கோசான், இதுவே உங்கள் மாமனாராக இருந்தால் உங்கள் அணுகுமுறை எப்படியிருக்கும்? இதில் பலவற்றை யோசிக்கவேண்டியுள்ளது போல எனக்கு தோன்றுகிறது. ஒரு கிழவனின் மனிதாபமற்ற ஈன செயலுக்காக முழு குடும்பத்தையுமே நடுவீதிக்கு கொண்டுவருவது முறையாகுமா? என்னைக்கேட்டால் இனிமேல் காம உணர்வே வராதபடி செய்திருந்தால் சரியான தண்டனையாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் மேலைத்தேய நாடுகளில் அப்படி செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல!!! 

ஆனால் ஊரிலுள்ள அந்த பிள்ளையின் எதிர்காலம் என்ன என்பதை நினைக்கமுடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Eppothum Thamizhan said:

ஊரிலுள்ள அந்த பிள்ளையின் எதிர்காலம் என்ன என்பதை நினைக்கமுடியவில்லை?

இது  ஒரு   பாரீய  பிரச்சினை  சகோ

இதற்குள்

பொருளாதாரம் சார்ந்த இடைவெளி

குடும்பங்களின் வறுமை  மற்றும்  நோய்கள் சார்ந்த ஏற்றத்தாழ்வு

மாத  வருமானம்  சார்ந்த பெரும் வித்தியாசம்

புலம்  பெயர்  பகட்டு வாழ்க்கை  மற்றும்  உடல் நிலை

எல்லாமே   உண்டு

இது முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக  புலத்திலிருந்து  செல்பவர்களால்

அதிலும் பென்சர்காரர்களால்  அதிகளவு செய்யப்படுவதாக   தெரிகிறது

நான்  முன்பும்  எழுதியது  தான்

நாம்  எதுவெல்லாம் நம்  மண்ணில் நடந்து  விடக்கூடாது  என்று

கனவு  கண்டு  உழைத்தோமோ

அவை  அனைத்தும் எம்   கண் முன்னால் நடக்கின்றன

இந்த  அவலங்களை  பார்க்கின்ற  போது

அல்லது  அவலத்தை  செய்தவனை சந்திக்கின்ற  போது

தனது  இனத்தின்  மீது அக்கறை  கொண்ட ஒரு  இளைஞனின் சிறு கோபத்தை உணர  முடிகிறது

அவ்வளவு  தான்.

97701931-thinking-monkey-sitting-on-the-

இப்பிடி பொழுது போகாமல் இருக்கிறதை விட்டுட்டு இந்தத் திரிக்க போனா... சும்மா விண்ணானம், சுய விளம்பரங்கள், ஊர் புதினங்கள் பிரபல்யம் ஆவது எப்படி என்றெல்லாம்  இலவச ஆலோசனைகள் எல்லாம் பாக்கலாம் கண்டியளோ?..... பாவம் ஆரு பெத்த பிள்ளையோ.. பேரை ஊரை சொல்லாட்டிலும் அம்பலத்தில ஊர் வாய்க்கு உலையரிசி ஆகுது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

பையா, ஒருகை கொடுப்பது மறுகைக்கு கூட தெரியக்கூடாது என்று நினைப்பவன் நான். நீங்கள் செய்வதை செவ்வனே செய்யுங்கள் (இருட்டடி கூட) ஆனால் அதை பொதுவெளியில் பகிர்வதை கொஞ்சம் குறைப்பது நல்லதென்பது எனது கருத்து  ஏனென்றால் யாழ் களத்தில் பலருக்கு இலவச அறிவுரை வழங்கத்தான் தெரியும். அதைவிட ஒன்றையும் புடுங்கியதில்லை. முக்கியமான கருத்துக்களை கட்டாயம் பகிர விரும்பினால் அவர்களுக்கு தனி மடலில் தெரிவியுங்கள். இங்குள்ள தட்டச்சு, வாய் வீரர்களுக்கு உங்களின் செயலும் சொற்களும் கொஞ்சம் சுடுது போல தெரிகிறது.

ந‌ன்றி தோழா , 
சில‌த‌ வெளிச்ச‌ம் போட்டு காட்ட‌ தான் வேனும் , யாழில் புலி வேச‌ம் வெளியில் மாறு வேஷ‌ம் 

நீங்க‌ள் கீழ‌ எழுதின‌து மிக‌ ச‌ரி 🤞

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஆதிவாசி said:

97701931-thinking-monkey-sitting-on-the-

இப்பிடி பொழுது போகாமல் இருக்கிறதை விட்டுட்டு இந்தத் திரிக்க போனா... சும்மா விண்ணானம், சுய விளம்பரங்கள், ஊர் புதினங்கள் பிரபல்யம் ஆவது எப்படி என்றெல்லாம்  இலவச ஆலோசனைகள் எல்லாம் பாக்கலாம் கண்டியளோ?..... பாவம் ஆரு பெத்த பிள்ளையோ.. பேரை ஊரை சொல்லாட்டிலும் அம்பலத்தில ஊர் வாய்க்கு உலையரிசி ஆகுது...

ஆதி 2008க்கு பிற‌க்கு இப்ப‌ தான் உங்க‌ளை காணுறேன்  , 
உங்க‌ளை யாழில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி , தொட‌ர்ந்து எழுதுங்கோ ஆதி , வாழ்க்கை என்றால் ஆயிர‌ம் ந‌ல்ல‌ ம‌னித‌ர் இருந்தா  ஜ‌ந்து கொச‌ப்புக‌ள் இருக்க‌ தான் செய்வின‌ம் , கொசப்புக‌ளை அப்பற‌ ப‌டுத்தி விட்டால் சோலி முடிஞ்சுது /

இதில் விள‌ம்ப‌ர‌ம் ஒன்றும் இல்லை , சில‌ர் த‌ங்க‌ளை போல் ப‌ட‌ங்க‌ள் போட்டு எழுதினா தானாம் ந‌ம்புவின‌ம் , ப‌ய‌ணிக்க‌ இன்னும் நீண்ட‌ தூர‌ம் இருக்கு / 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

கோசான், இதுவே உங்கள் மாமனாராக இருந்தால் உங்கள் அணுகுமுறை எப்படியிருக்கும்? இதில் பலவற்றை யோசிக்கவேண்டியுள்ளது போல எனக்கு தோன்றுகிறது. ஒரு கிழவனின் மனிதாபமற்ற ஈன செயலுக்காக முழு குடும்பத்தையுமே நடுவீதிக்கு கொண்டுவருவது முறையாகுமா? என்னைக்கேட்டால் இனிமேல் காம உணர்வே வராதபடி செய்திருந்தால் சரியான தண்டனையாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் மேலைத்தேய நாடுகளில் அப்படி செய்வது அவ்வளவு இலகுவான காரியமல்ல!!! 

ஆனால் ஊரிலுள்ள அந்த பிள்ளையின் எதிர்காலம் என்ன என்பதை நினைக்கமுடியவில்லை?

இந்த கேள்விக்கு பதில் சட்டென கூறிவிடலாம்.ஆனாலும், கொஞ்சம் நேரம் எடுத்து, சிந்தித்தே எழுதுகிறேன்.

 மாமனார் என்ன, அப்பராய் இருந்தாலும் , சின்ன பிள்ளையள் மேல் கைவைப்பவர்களை, மகளை புணர்பவர்களை சட்டத்தின் கையில் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை. 

அதன் பின் விழைவுகளை வரும் போது எதிர்கொள்ள வேண்டியதுதான் வேறு வழியில்லை. இந்த ஈனப்பிறப்புகளை உறவாக அடைந்தமைக்கு எனக்கான தண்டனை என ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

இது தியாகமோ மண்ணாங்கட்டியோ இல்லை. குறைந்த பட்ச மனிததுவம்.

மீண்டும், மீண்டும் சொல்கிறேன் இந்த கிழவனை பிடித்துக் கொடுப்பதால் - அவரின் குடும்பம் நடுவீதிக்கு வரவேண்டியதில்லை.

இப்படியான விடயங்களில் முடிவெடுக்க நெஞ்சுரம் வேண்டும். நண்பனை பகைக்க, நண்பனின் மனைவியை பகைக்க.  நண்பனின் மாமியாரை பகைக்க என்னால் முடியவில்லை என்றால், சிவனே என விலகிவிடுவேன்.

நீங்கள் எப்படி ? கிழவனை ரெண்டு தட்டுத்தட்டி விட்டு விடுவீர்களா? 

பிள்ளையின் எதிர் காலம் கேள்விக்குறிதான். கிழவன் இதை பற்றி கவலை கொள்ளப்போவதில்லை. அவரின் குடும்பமோ, அவரோ இந்த பிள்ளைக்கும், குழந்தைக்கும் பண உதவி செய்யப்போவதாக தெரியவில்லை.

ஏச்சு, பேச்சு, நக்கல்....😡

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இது  ஒரு   பாரீய  பிரச்சினை  சகோ

இதற்குள்

பொருளாதாரம் சார்ந்த இடைவெளி

குடும்பங்களின் வறுமை  மற்றும்  நோய்கள் சார்ந்த ஏற்றத்தாழ்வு

மாத  வருமானம்  சார்ந்த பெரும் வித்தியாசம்

புலம்  பெயர்  பகட்டு வாழ்க்கை  மற்றும்  உடல் நிலை

எல்லாமே   உண்டு

இது முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக  புலத்திலிருந்து  செல்பவர்களால்

அதிலும் பென்சர்காரர்களால்  அதிகளவு செய்யப்படுவதாக   தெரிகிறது

நான்  முன்பும்  எழுதியது  தான்

நாம்  எதுவெல்லாம் நம்  மண்ணில் நடந்து  விடக்கூடாது  என்று

கனவு  கண்டு  உழைத்தோமோ

அவை  அனைத்தும் எம்   கண் முன்னால் நடக்கின்றன

இந்த  அவலங்களை  பார்க்கின்ற  போது

அல்லது  அவலத்தை  செய்தவனை சந்திக்கின்ற  போது

தனது  இனத்தின்  மீது அக்கறை  கொண்ட ஒரு  இளைஞனின் சிறு கோபத்தை உணர  முடிகிறது

அவ்வளவு  தான்.

ச‌த்தியாமாய் நானும் நினைக்க‌ வில்லை இப்ப‌டி ந‌ட‌க்கும் என்று , 2009ம் ஆண்டு சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் இணைய‌த‌ள‌த்துக்கை போக‌ இவ‌ள‌வு இட‌த்தையும் குறுகிய‌ நேர‌த்துக்குள் இழ‌ந்து விட்டோமா என்று , 
2009ம் ஆண்டு நான் ஒழுங்காய் தூங்க‌ வில்லை விசுகு அண்ணா , சாப்பிட்ட‌ சாப்பாட்டுக்கையே என்ர‌ க‌ண்ணீர் விழுந்த‌து , மிக‌வும் ஒரு மோச‌மான‌ ஆண்டு 2009 ,

ப‌ல‌ர் ம‌ன‌ நோயாளி ஆகின‌வ‌ர்க‌ள் , அதில் யாழில் ஒரு உற‌வும் , அத‌ அவ‌ரே சொன்னார் , 

ப‌ழைய‌ ப‌டி மீண்டு எழுவ‌து கொஞ்ச‌ம் க‌ஸ்ர‌ம் , சிங்க‌ள‌வ‌னிட‌ம் க‌தைச்சு பேசி த‌மிழ‌ர்க‌ளுக்கு தீர்வு வாங்குவ‌து என்ப‌து எம் த‌லையில் நாம் ம‌ண் அள்ளி போடுவ‌துக்கு ச‌ம‌ம் ,

எம்ம‌வ‌ர்க‌ள் இருந்து இருக்க‌னும் 
புல‌ம் பெய‌ர் நாட்டில் பென்ச‌ன் எடுத்த‌வை ஊருக்கு போக‌வே விரும்ப‌ மாட்டின‌ம் , 2002ம் ஆண்டில் இருந்து 2006ம் ஆண்டு வ‌ர‌ , போராளிக‌ள் செக் ப‌ண்ணி போட்டு தான் உள்ள‌ விடுவின‌ம் ,

2004ம் ஆண்டு என‌து ம‌ச்சாளின் இர‌ண்டு தோழிக‌ள் , ம‌ச்சாளையும் என்னையும் வ‌வுனியாவில் வ‌ந்து பார்த்த‌வை , பென் போராளிக‌ள் சீர் உடையில் , கையில் ஆயுத‌ம் ஒன்றும் இல்லை , அவை கூட‌ நின்று புகைப் ப‌ட‌ம் எடுத்தேன் , அந்த‌ ப‌ட‌ங்க‌ள் எங்கை என்று என‌க்கே தெரியாது , தேவை இல்லா ப‌ட‌ங்க‌ள் நிறைய‌ இருக்கு பெண் போராளிக‌ளுட‌ன் எடுத்த‌ ப‌ட‌த்தை காணும் 😉

பெண் போராளிகளின் பொறுமை அட‌க்க‌ ஒடுக்க‌ம் , அன்பு ப‌கிர்ந்து கொள்ளுவது எல்லாம் த‌னி அழ‌கு அண்ணா , 
ம‌ச்சாள் அறிமுக‌ம் செய்து வைச்சா நானும் கொஞ்ச‌ நேர‌ம் ம‌ன‌ம் விட்டு க‌தைச்சேன் , 

அந்த‌ நாளை நினைச்சு பார்க்கையில் அதுங்க‌ளை காக்க‌ த‌வ‌றி விட்டோம் என்று நினைப்ப‌து உண்டு , த‌மிழ் நாட்டு பின‌ம் தின்னி அர‌சிய‌ல் வாதிக‌ள் மேல் எவ‌ள‌வு அசிங்க‌மான‌ சொர்க்க‌ல‌ பாவிச்சாலும் ஆத்திர‌ம் அட‌ங்காது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதிக்கப்பட்ட பிள்ளைக்கு அவரின் உறவினர்களால் மட்டுமே உதவிசெய்ய முடியும்.
இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் பாதுகாப்பாக இருக்கவேண்டியவரே அந்த பாவத்தை  செய்து விட்டார்.வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது.
பையனுடன் ஒத்தாசையாக  நின்று கிழவருக்கு அடிபோட்ட மருமகனின் நிலைப்பாடு என்னவாம்?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, tulpen said:

பையன்26  நீங்கள் ஆத்திரப்பட்டாலும் பரவாயில்லை. உங்கள் தப்பை உணரவேண்டும் என்பதற்காக கூறுகிறேன். போட்டுத்தள்ளுதல் ஆளை தூக்குதல் போன்ற  சொற்றொடர்களை பாவிப்பதையும் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதையும் நிறுத்துங்கள்.  இவற்றை செய்பவர்கள் உங்கள் நண்பர்கள் என்று வேறு பதிவிட்டுள்ளீர்கள். இன்றய நிலையில்  இவற்றை இப்போது செய்வோர் போராளிகள் அல்ல. அவர்கள் ரௌடிகள் கிறிமினல்கள். அந்த கிறிமினல்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்காதீர்கள். 

யாழ்களம் எமக்காக ஆவுறுதியாகிய மாவீர்களின்  தியாகங்களை கௌரவிக்கிறதே தவிர நீங்கள் கூறும் ரௌடிகளை ஆதரிக்கவில்லை  என்றே நான் கருதுகிறேன் 

சரியாகச் சொன்னீர்கள்!, புலிகள், பிரபாகரன், மாவீரர்கள் என மற்றவர்களின் தியாகங்களை மேற்கோள் காட்டிக் கொண்டு இங்கே சிலர்  ஆடும் கூத்துகளைப் பார்க்கையில் விளங்குவது: புலிகள் வேறு இப்போது இருக்கும் புலிகளின் வால்கள் வேறு! 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இந்த கேள்விக்கு பதில் சட்டென கூறிவிடலாம்.ஆனாலும், கொஞ்சம் நேரம் எடுத்து, சிந்தித்தே எழுதுகிறேன்.

 மாமனார் என்ன, அப்பராய் இருந்தாலும் , சின்ன பிள்ளையள் மேல் கைவைப்பவர்களை, மகளை புணர்பவர்களை சட்டத்தின் கையில் கொடுப்பதை தவிர வேறு வழியில்லை. 

அதன் பின் விழைவுகளை வரும் போது எதிர்கொள்ள வேண்டியதுதான் வேறு வழியில்லை. இந்த ஈனப்பிறப்புகளை உறவாக அடைந்தமைக்கு எனக்கான தண்டனை என ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

இது தியாகமோ மண்ணாங்கட்டியோ இல்லை. குறைந்த பட்ச மனிததுவம்.

மீண்டும், மீண்டும் சொல்கிறேன் இந்த கிழவனை பிடித்துக் கொடுப்பதால் - அவரின் குடும்பம் நடுவீதிக்கு வரவேண்டியதில்லை.

இப்படியான விடயங்களில் முடிவெடுக்க நெஞ்சுரம் வேண்டும். நண்பனை பகைக்க, நண்பனின் மனைவியை பகைக்க.  நண்பனின் மாமியாரை பகைக்க என்னால் முடியவில்லை என்றால், சிவனே என விலகிவிடுவேன்.

நீங்கள் எப்படி ? கிழவனை ரெண்டு தட்டுத்தட்டி விட்டு விடுவீர்களா? 

பிள்ளையின் எதிர் காலம் கேள்விக்குறிதான். கிழவன் இதை பற்றி கவலை கொள்ளப்போவதில்லை. அவரின் குடும்பமோ, அவரோ இந்த பிள்ளைக்கும், குழந்தைக்கும் பண உதவி செய்யப்போவதாக தெரியவில்லை.

ஏச்சு, பேச்சு, நக்கல்....😡

சகோ, நீங்கள் மேலேகூறியவை போல செய்யக்கூடிய எத்தனை பேர் இன்று நம்மில் உள்ளனர்? குறைந்த பட்ச மனிததுவம், முடிவெடுக்க நெஞ்சுரம் இவையெல்லாம் மற்றவன் வீட்டில் நடக்கும்போது அறிவுரை சொல்ல நல்லாத்தான் இருக்கும். அது தனக்கென்று வரும்போதுதான் புரியும் அதன் கஷ்டங்கள். அதற்காக அந்த கிழவனுக்கான தண்டனை இத்துடன் முடித்துவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நாம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்த நாடுகளின் வாழ்ந்தாலும் எமது இனத்தின் குத்திக்காட்டும் புத்தியென்பது இன்னமும் மாறவில்லை என்பது உங்களுக்கு தெரியாததல்ல.

ஒரு கதைக்கு கிழவனின் மகளோ மகனோ அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்குப்பிறகு அந்த குடும்பத்தார் ஏதாவது ஒரு பொது நிகழ்வுக்கு போகலாம் என்று நினைக்கிறீர்களா? எமது சனம் பார்வையாலேயே வறுத்தெடுத்துவிடும். அதைவிட நக்கல் நளினங்கள் சொல்லவே தேவையில்லை. ஊரில் அதைவிட கேவலம். சட்டப்படி என்று வரும்போது ஊடகங்களே அந்த பெண்ணின் வருங்காலத்தை சீரழித்துவிடும். ஊரிலுள்ள பெண்ணின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாமல் நாம் நமது கருத்துக்களை இங்கு  அள்ளி  எறிவது எவ்வித பயனையும் தராது.

கிழவனை இப்படியே விட்டு வைப்பதும் ஆபத்தானதே. 

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

சரியாகச் சொன்னீர்கள்!, புலிகள், பிரபாகரன், மாவீரர்கள் என மற்றவர்களின் தியாகங்களை மேற்கோள் காட்டிக் கொண்டு இங்கே சிலர்  ஆடும் கூத்துகளைப் பார்க்கையில் விளங்குவது: புலிகள் வேறு இப்போது இருக்கும் புலிகளின் வால்கள் வேறு! 

இங்கே பலருக்கும் தெரியும் புலிகள் இருந்தபோது உங்களது வாய்கள் வேறு என்பதும் இப்போது உங்கள்  வாய்கள் வேறென்பதும் .

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Eppothum Thamizhan said:

சகோ, நீங்கள் மேலேகூறியவை போல செய்யக்கூடிய எத்தனை பேர் இன்று நம்மில் உள்ளனர்? குறைந்த பட்ச மனிததுவம், முடிவெடுக்க நெஞ்சுரம் இவையெல்லாம் மற்றவன் வீட்டில் நடக்கும்போது அறிவுரை சொல்ல நல்லாத்தான் இருக்கும். அது தனக்கென்று வரும்போதுதான் புரியும் அதன் கஷ்டங்கள். அதற்காக அந்த கிழவனுக்கான தண்டனை இத்துடன் முடித்துவிட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. நாம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்த நாடுகளின் வாழ்ந்தாலும் எமது இனத்தின் குத்திக்காட்டும் புத்தியென்பது இன்னமும் மாறவில்லை என்பது உங்களுக்கு தெரியாததல்ல.

ஒரு கதைக்கு கிழவனின் மகளோ மகனோ அவரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்குப்பிறகு அந்த குடும்பத்தார் ஏதாவது ஒரு பொது நிகழ்வுக்கு போகலாம் என்று நினைக்கிறீர்களா? எமது சனம் பார்வையாலேயே வறுத்தெடுத்துவிடும். அதைவிட நக்கல் நளினங்கள் சொல்லவே தேவையில்லை. ஊரில் அதைவிட கேவலம். சட்டப்படி என்று வரும்போது ஊடகங்களே அந்த பெண்ணின் வருங்காலத்தை சீரழித்துவிடும். ஊரிலுள்ள பெண்ணின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாமல் நாம் நமது கருத்துக்களை இங்கு  அள்ளி  எறிவது எவ்வித பயனையும் தராது.

கிழவனை இப்படியே விட்டு வைப்பதும் ஆபத்தானதே. 

நீங்கள் சொல்வது எதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல் உண்டு (yardstick ). நான் எனது அளவுகோலின் அடிப்படையில்தான் எழுதுகிறேன்.

நான் கீழே எழுதுவதை பார்த்துவிட்டு ஆதிவாசி என்னை சுயதம்பட்டம் அடிப்பதாக நக்கல் அடிக்ககூடும். பரவாயில்லை. 

நல்லவேளையாக இப்படி ஒரு சம்பவம் என்னை சுற்றி இதுவரை நடந்ததில்லை.  ஆனால் பாலர் வகுப்பில் இருந்து என்னுடன் வளர்ந்த இருவர் வழிதவறிய போது நான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை திரும்பி பார்க்கும் போது- இந்த விசயத்தில் நான் என்ன செய்திருப்பேன் என்பது எனக்கு ஊகிக்க ஒன்றும் கடினமாக இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, Eppothum Thamizhan said:

இங்கே பலருக்கும் தெரியும் புலிகள் இருந்தபோது உங்களது வாய்கள் வேறு என்பதும் இப்போது உங்கள்  வாய்கள் வேறென்பதும் .

வாய் (எனக்கும் பலருக்கும்) மாறியது புலிகள்  இல்லாமல் போனதால் அல்ல! புலிகள் அழிந்து கொண்டிருந்த கடைசி வருடத்தில் அவர்கள் செய்த மக்கள் விரோத செயற்பாடுகளால் தான்! ஆனால், நீங்கள் மாற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் உங்கள் போன்றோருக்கு நான் ஏற்கனவே பல் இடங்களில் சுட்டிக் காட்டியது போல பிசினஸ் நோக்கங்கள் இருக்கின்றன! எனவே புலியின் பெயர் முக்கியம்! சோ கீப் இற் அப்!😎

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Justin said:

வாய் (எனக்கும் பலருக்கும்) மாறியது புலிகள்  இல்லாமல் போனதால் அல்ல! புலிகள் அழிந்து கொண்டிருந்த கடைசி வருடத்தில் அவர்கள் செய்த மக்கள் விரோத செயற்பாடுகளால் தான்! ஆனால், நீங்கள் மாற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் உங்கள் போன்றோருக்கு நான் ஏற்கனவே பல் இடங்களில் சுட்டிக் காட்டியது போல பிசினஸ் நோக்கங்கள் இருக்கின்றன! எனவே புலியின் பெயர் முக்கியம்! சோ கீப் இற் அப்!😎

ஜஸ்டின் அண்ணா,

ஒரு பணிவான வேண்டுகோள்.

1. இப்போ புலிகள் இல்லை.

2. இங்கே எழுதுபவர் யாரும் புலிகள் இல்லை. இவர்கள் ஒன்றில் வியாபாரிகள், அல்லது trolls அல்லது கற்பனையாளர்கள் (fantasists). இவர்களுடன் புலிகளை பற்றி கதைத்து ஒன்றும் ஆகப்போவதில்லை.

3. இங்கே பலருக்கு தெரிந்தோ, தெரியாமலோ ஒரு பழக்கம் இருக்கிறது - தமது தர்க்கம் தோற்குமால் போல தென்பட்டால் உடனே புலியை திரியில் இழுத்து விடுவார்கள். மற்றையவரை புலி எதிர்பாளராக காட்டி, தம்மை தேசப்பற்றாளராக நிறுவிக் கொள்வார்கள்.

4. விசுகு அண்ணா வந்து எழுதுகிறார் - இங்கே சட்டம் எழுதுபவர்கள் (நான்தான் அதிகம் எழுதினேன்) நாட்டுக்கு ஒன்றும் செய்யாதவத்களாம். இது எப்படி அவருக்குத் தெரியும். அவர் ஊர்மக்களுடன் சேர்ந்து சில நல்ல விடயங்களை செய்து. அதை யாழிலும் போட்டுள்ளார். ஆனால் எல்லாரும் அப்படி போடுபவர்கள் இல்லையே?

5. இதே திரியில் நெடுக்கு சுமேயை கேட்கிறார் - லண்டனில் போராடியதை, கொடி பிடித்ததை தவிர வேறு என்ன செய்தீர்கள் என? நெடுக்கு என்ன செய்தார்? அவர் கனக்க செய்தார் எனவே வைத்துக் கொள்வோம், அது எமக்கெல்லாம் தெரியாதல்லவா? அப்படி சுமேயும் செய்திருக்கலாம்தானே? இவர்கள் யார் மற்றையவரின் பங்களிப்புக்கு வரவு/செலவு போட?

6. இவர்கள் புலிகள் இல்லை. புலிகளின் வால்கள் கூட இல்லை. ஆகவே இவர்களுடன் கருத்தாடும் போது தயவு செய்து புலிகளை இழுக்காதீர்கள். அவர்கள் வா, வா என சீண்டுவார்கள் ஆனால் அந்த மாயவலையில் வீழ்ந்து விடாதீர்கள். ஒரு கிழவன் மகளை பெண்டாண்டதற்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லை. ஆனால் இவர்கள் தமது தர்க்கம் தோற்கும் போது இதில்தான் கொண்டு வந்து முடிப்பார்கள். 

7. கருநாநிதி தனது கொள்ளைக்கெல்லாம், அண்ணாவின் பெயரால், பெரியாரின் நாமத்தால் என எப்படி வெள்ளை அடித்தாரோ, அப்படி இவர்கள் தாம் செய்யும் அசட்டு தனத்துக்கெல்லாம் பிரபாவின் பெயரை பயன்படுத்துவார்கள். வரலாற்றில் இது ஒன்றும் புதிதில்லை, ஜேசுவின் ரோமர்கள் சுவீகரித்தது போல, புத்தரின் பெயரை இனவாதிகள் கைப்பற்றியது போல, பிரபாவின் பெயரை இப்போ இவர்கள் பயன்படுதுகிறார்கள்.

8. உங்களுக்கும், ஏனையவர்கும் எனது தாழ்மையான, தோளமை மிக்க வேண்டுகோள், இவர்களுக்கு பதில் இடும் போது புலிகளை எந்த வகையிலும் அந்த சம்பாசணையில் புலிகளை இணைக்காதீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.