Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் ‘ஆர்எஸ்எஸ்’சின் 17 கிளை அமைப்புகள்

Featured Replies

இந்தியாவின் தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்பான ராஷ்ரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் கிளைகள் சிறிலங்காவிலும் செயற்படுவதாக, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின், திருமண வரவேற்பு நிகழ்வு கடந்த 17ஆம் நாள் கொழும்பில் இடம்பெற்றது.

இந்த திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த சுப்ரமணியன் சுவாமி, ஊடகங்களுடன் பேசும் போதே, சிறிலங்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 17 கிளைகள் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், எந்தெந்த அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பின்னணியுடன், அதன் கிளைகளாக இயங்குகின்றன என்ற விபரத்தை சுப்ரமணியன் சுவாமி வெளியிடவில்லை.

இந்த நிகழ்வில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய நிறைவேற்றுக் குழுவில் பணியாற்றியவரும், பாஜகவின் தேசிய செயலருமான ராம் மாதவ், இந்தியாவின் முன்னாள் பிரதமர் தேவகௌடா, இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

namal-wedding-1.jpg

namal-wedding-2.jpg

namal-wedding-3.jpg

http://www.puthinappalakai.net/2019/09/22/news/40149

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.எஸ்.எஸ்.  இன்  கிளை அமைப்பு  சிறிலங்காவில் இயங்கினால்...
நிச்சயம் அது... தமிழர், முஸ்லீம்களுக்கு... எதிராகவே செயல்படும் என்பதில் சந்தேகம் இல்லை. 

On 9/24/2019 at 8:52 AM, போல் said:

சிறிலங்காவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 17 கிளைகள் இயங்குவதாக தெரிவித்துள்ளார்

இந்த 17 கிளைகளும் சொறிலங்கவிலுள்ள 17 பௌத்த தீவிரவாதக் குழுக்களுடன் ஏற்கனவே முடிச்சு போட்டிருப்பினம்.

On 9/24/2019 at 8:52 AM, போல் said:

எனினும், எந்தெந்த அமைப்புகள் ஆர்எஸ்எஸ் பின்னணியுடன், அதன் கிளைகளாக இயங்குகின்றன என்ற விபரத்தை சுப்ரமணியன் சுவாமி வெளியிடவில்லை.

RSS வெளிநாடுகளில் HSS என்ட பேர்ல இயக்குதாம்.

On 9/23/2019 at 11:32 PM, தமிழ் சிறி said:

ஆர்.எஸ்.எஸ்.  இன்  கிளை அமைப்பு  சிறிலங்காவில் இயங்கினால்...
நிச்சயம் அது... தமிழர், முஸ்லீம்களுக்கு... எதிராகவே செயல்படும் என்பதில் சந்தேகம் இல்லை. 

எவ்வாறு மதம் சார்ந்த அமைப்பு, ஆர்.எஸ். எஸ்., பெரும்பான்மை சைவர்களான தமிழர்களுக்கு எதிராக இயங்கும்? 

  • தொடங்கியவர்
5 hours ago, ampanai said:

எவ்வாறு மதம் சார்ந்த அமைப்பு, ஆர்.எஸ். எஸ்., பெரும்பான்மை சைவர்களான தமிழர்களுக்கு எதிராக இயங்கும்? 

RSS என்பது மிக மோசமான தமிழர் விரோத அமைப்பு!  

RSS என்பது ஹிந்தி வெறியர்களின், பிராமண வெறியர்களின் கைகளில் உள்ளதொரு அமைப்பு.

ஆர்.எஸ்.எஸ் எனப்படுவது 24/7 செயற்படும் தென்னாசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனம்; இன்றைய இந்தியாவின் ஒவ்வொரு அசைவிற்குமான மூலோபாயங்களை வகுப்பது இந்த நாக்பூரை தலைமையகமாக கொண்ட இந்த அமைப்பே...
 
ஆர்.எஸ்.எஸ் ஐ விளங்கிக் கொள்ள வேண்டுமானால் அதன் சித்தாந்தத்தினை சரிவர புரிந்துகொள்ள வேண்டும். சமஷ்கிருதத்தை மொழியாகக் கொண்ட, வர்ணாசரம கட்டமைப்பிற்கு உட்பட்ட, அகண்ட பாரதத்தை நிறுவுவதே ஆர்.எஸ்.எஸ் இன் தெளிவான சித்தாந்தம்...
 
இந்த சித்தாந்ததிற்குள் ஈழ தமிழரின் நிலையமைவு எப்படி இருக்குமென உங்கள் ஊகதிற்கே விட்டுவிடுகின்றேன்....
 
நாம் நடைமுறை (issue based) அரசியலுடன் நின்றுவிடாது, சித்தாந்த (ideology based) அரசியலையும் உள்வாங்கிக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது....
9 hours ago, ampanai said:

எவ்வாறு மதம் சார்ந்த அமைப்பு, ஆர்.எஸ். எஸ்., பெரும்பான்மை சைவர்களான தமிழர்களுக்கு எதிராக இயங்கும்? 

தமிழ் மக்களின் போராட்டத்தை அழிப்பதற்கு ஶ்ரீலங்கா அரசுக்கு வலிந்து உதவிய இந்தியாவின் செயல் தனியே காங்கிரஸ் சோன்யாகாந்தியின் தனிப்பட்ட முடிவு என்று அப்பாவித்தனமாக நம்புபவர்கள் மட்டுமே இந்த கேள்வியை கேட்க முடியும். ஆர். எஸ். எஸ் இந்து மக்களுக்கான் அமைப்பு அல்ல பிராமண ஆதிக்கத்திற்கான அமைப்பு என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் கடினமான வேலை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இரும்பொறை said:
 
நாம் நடைமுறை (issue based) அரசியலுடன் நின்றுவிடாது, சித்தாந்த (ideology based) அரசியலையும் உள்வாங்கிக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது....

திருகோணமலையில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட லட்சுமிநாரயணன் கோவில் ஒர் சிறந்த உதாரணம் அது போன்று மட்டக்கள்ப்பிலும் ஒர் கோவில் உண்டு .....சைவர்களின் வழிபாட்டுக்கு எதிரான வழிபாட்டு  முறைகள் அங்கு பின்பற்றபடுகின்றது....தவறு என் சொல்லவில்லை ஆனால் இவை எல்லாம் திட்டமிட்டு நடைபெறுகின்றாதா என்பதுதான் சந்தேகம்....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இரும்பொறை said:
ஆர்.எஸ்.எஸ் எனப்படுவது 24/7 செயற்படும் தென்னாசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனம்; இன்றைய இந்தியாவின் ஒவ்வொரு அசைவிற்குமான மூலோபாயங்களை வகுப்பது இந்த நாக்பூரை தலைமையகமாக கொண்ட இந்த அமைப்பே...
 
ஆர்.எஸ்.எஸ் ஐ விளங்கிக் கொள்ள வேண்டுமானால் அதன் சித்தாந்தத்தினை சரிவர புரிந்துகொள்ள வேண்டும். சமஷ்கிருதத்தை மொழியாகக் கொண்ட, வர்ணாசரம கட்டமைப்பிற்கு உட்பட்ட, அகண்ட பாரதத்தை நிறுவுவதே ஆர்.எஸ்.எஸ் இன் தெளிவான சித்தாந்தம்...
 
இந்த சித்தாந்ததிற்குள் ஈழ தமிழரின் நிலையமைவு எப்படி இருக்குமென உங்கள் ஊகதிற்கே விட்டுவிடுகின்றேன்....
 
நாம் நடைமுறை (issue based) அரசியலுடன் நின்றுவிடாது, சித்தாந்த (ideology based) அரசியலையும் உள்வாங்கிக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது....

51 minutes ago, putthan said:

திருகோணமலையில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட லட்சுமிநாரயணன் கோவில் ஒர் சிறந்த உதாரணம் அது போன்று மட்டக்கள்ப்பிலும் ஒர் கோவில் உண்டு .....சைவர்களின் வழிபாட்டுக்கு எதிரான வழிபாட்டு  முறைகள் அங்கு பின்பற்றபடுகின்றது....தவறு என் சொல்லவில்லை ஆனால் இவை எல்லாம் திட்டமிட்டு நடைபெறுகின்றாதா என்பதுதான் சந்தேகம்....

நேரமின்மையால் சுருக்கமாக சொல்கிறேன்.

நான் pakistan தேசதின் தோற்றம் பற்றி முன்பே சொல்லி இருந்தேன். அது 1800 -1850 களுக்கிடையில் தொடங்குகிறது.   எழுத்து மூலமான ஆதாரம் இல்லை தான். ஆனால் அன்றைய British civil service அதிகாரிகளால் ஆங்காங்கு குறிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு தோற்றத்தோடு, nation-state வந்து விட்டது.

இடையில்,  pan-India-Islamic என்ற கருப்பொருளும் வந்தது, மொழி, கலாசாரம் வேறாயினும். ஆயினும், jinnah அதை எடுக்கவில்லை.

இந்து தேசத்தின் விழிப்புணர்வு, வடிவமைப்பு என்பது, 1850 பின் இந்து - முஸ்லீம் என்ற பிரிவு முற்றி வந்ததாயினும், அது இந்து (அல்லது இந்துத்துவ தேசம்) தேசம், இந்திய தேசம் என்பதை தோற்றுவிக்கவில்லை. ஏனெனில், அதற்கண தேவை கிந்தியவிற்கு இருக்கவில்லை, பிரித்தானியர் இந்திய அரசு பிரியக் கூடாது என்பதில் கிந்தியர்களை தூக்கி பிடித்ததால். 

Carl von Clausewitz இன் nation என்பது, ஓர் மொழி, ஓர் மத, வரலாற்றில் ஒரே அனுபவங்களுக்கு உட்பட்ட ஓரின மேலாண்மையுடன் கூடிய மக்கள் கூட்டம்.

Carl von Clausewitz இன் nation, state => nation-state  என்பது இந்தியாவிற்கு இல்லை, கிந்திய தேசம் என்பதன் வடிவமைப்பு வரலாறு கூட இல்லை.

இப்போதைய மேற்கு அரசுகள், nation-state என்பதை neo-liberal state என்ற போர்வையால் மறைத்தாலும், அவர்களின்   சித்தாந்தம்  ஓர் மொழி, ஓர் மத,  ஓரின மேலாண்மை என்ற அடிப்படையே.

ஜனநாயகமும், universal franchise ம் அப்படிப்பட்ட போர்வைகளே.  மேற்கு nation-state எனும் அமைப்பு மிகவும் ஒடுக்கு முறையான அடிப்படையே. ஐரோப்பாவில் மிகுந்த ஒடுக்குமுறை இல்லாமல் இருந்தற்கு காரணம், அவர்கள் மொழிவாரி பிரதேசங்களாக, அரசுக்களாக பிரித்தமையால், தொடர் யுத்தங்களின் வழியாக.

ஆயினும், nation-state இன் ஒடுக்குமுறையை இப்போதும் ஐரோப்பாவில் காண்கிறோம், basque, catalonia, uk  உதாரணங்கள்.           

RSS இந்த சித்தாந்தம் எதுவாயினும், அதன் தோற்றத்தின் வேட்கை ஓர் தேசத்தை, nation-state ஐ  உருவாக்குவது,  உருவாக்கத்தின் வரலாற்றை வடிவமைப்பது.

சமீபத்தில், அமித் ஷா சொல்லிய  இந்திய நிலப்பரப்பில் எல்லோரும் தெரிந்ததாக  ஓர் மொழி இருக்கவேண்டும் என்பது தேசத்தை உருவாக்குதல் என்பதன் அடிப்படையிலேயே.     
  
மேலே உள்ள கருத்துக்களை வைத்து பார்க்கும்பொழுது ஆர்.எஸ்.எஸ் எனப்படும் அமைப்பு எமக்கு ஆபத்தாக அமையக்கூடிய ஒரு அமைப்பாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து சில முன்னெடுப்புக்களை சாதுரியமாக முன்னெடுக்கலாம் என எண்ண தோன்றுகின்றது.

எம்மை சுற்றி உள்ள எல்லோரையும் எதிரிகளாக பார்த்தால் அவர்கள் அனைவரையும் எதிர்க்கும் பலமோ, ஒற்றுமையோ, யுக்தியோ எம்மிடம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

திருகோணமலையில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட லட்சுமிநாரயணன் கோவில் ஒர் சிறந்த உதாரணம் அது போன்று மட்டக்கள்ப்பிலும் ஒர் கோவில் உண்டு .....சைவர்களின் வழிபாட்டுக்கு எதிரான வழிபாட்டு  முறைகள் அங்கு பின்பற்றபடுகின்றது....தவறு என் சொல்லவில்லை ஆனால் இவை எல்லாம் திட்டமிட்டு நடைபெறுகின்றாதா என்பதுதான் சந்தேகம்....

புத்தன்,  இணுவிலில்.... உள்ள, அனுமான் கோவிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

மேலே உள்ள கருத்துக்களை வைத்து பார்க்கும்பொழுது ஆர்.எஸ்.எஸ் எனப்படும் அமைப்பு எமக்கு ஆபத்தாக அமையக்கூடிய ஒரு அமைப்பாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து சில முன்னெடுப்புக்களை சாதுரியமாக முன்னெடுக்கலாம் என எண்ண தோன்றுகின்றது.

எம்மை சுற்றி உள்ள எல்லோரையும் எதிரிகளாக பார்த்தால் அவர்கள் அனைவரையும் எதிர்க்கும் பலமோ, ஒற்றுமையோ, யுக்தியோ எம்மிடம் இல்லை. 

Ähnliches Foto

Bildergebnis für பொன். ராதாகிருஷ்ணனை

அம்பனை.... நீங்கள், எவ்வளவு குத்தி முறிந்து...
அவர்களுடன்.. நட்பு  பாராட்ட  வெளிக்கிட்டாலும், அவர்கள்... உங்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். 

உதாரணத்துக்கு... தமிழகத்து  பா.ஜ.க. தலைவியாக இருந்த, தமிழிசை சவுந்தர் ராஜனையும்,
மத்திய அமைச்ராக இருந்த   பொன். ராதா கிருஷ்ணனையும்....
இந்த பிராமண  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்.. பொது மேடைகளிலும், விருந்து நிகழ்வுகளிலும்...
மிகவும் கேவலமாக, வெறும் நிலத்தில் இருக்க வைத்து... 
அவமானப் படுத்திய படங்களை நான் பார்த்தேன். 

அந்த உயர் பதவிகளில், அந்த நாட்டை  சேர்ந்தவர்களுக்கே.... இந்த நிலைமை என்றால்,
எம்மை... எந்த அளவிற்கு, மதிப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

புத்தன்,  இணுவிலில்.... உள்ள, அனுமான் கோவிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சிறி,
நானும் இதைப்பற்றி நினைத்தேன். இம்முறை  இலங்கை போயிருந்தபோது இந்த வித்தியாசங்களை பார்க்க முடிந்தது. வட  இந்திய அடையாளங்கள் மெதுவாக உள்நுழைகின்றன. அத்துடன் சில ஊர் வைரவர், வீரபத்திரர் போன்ற கிராம கோவில்களில் கூட தற்போது ஆகம விதிகளை உள்நுழைத்து, ஐயர்களை கொண்டு பூசை செய்யும் முறை வந்துவிட்டது.  நாம் தமிழர்களாக அடையாளப்படுத்துவதே எமது தனித்துவத்துக்கான பாதுகாப்பு. பிராமணர்களை கோவில்ககளில் முன்னிலைப்படுத்துவதை நிறுத்தும் வரைக்கும், இவற்ரை நிறுத்த முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நீர்வேலியான் said:

நீர்வேலியான்.... எமது  ஈழப்  போராட்டம், வெற்றி பெற்றிருக்குமானால்....
எத்தனையோ... கிழிசடை தனங்களை, களைந்து எறிந்திருக்கலாம்.
என்ன... செய்வது,  எல்லாத்தையும் பார்த்து... காலம் தள்ள வேண்டிய,  
நிலையில்... உள்ளதை நினைக்க, வேதனையாக உள்ளது. 

1 hour ago, தமிழ் சிறி said:

அம்பனை.... நீங்கள், எவ்வளவு குத்தி முறிந்து...
அவர்களுடன்.. நட்பு  பாராட்ட  வெளிக்கிட்டாலும், அவர்கள்... உங்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். 

உதாரணத்துக்கு... தமிழகத்து  பா.ஜ.க. தலைவியாக இருந்த, தமிழிசை சவுந்தர் ராஜனையும்,
மத்திய அமைச்ராக இருந்த   பொன். ராதா கிருஷ்ணனையும்....
இந்த பிராமண  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்.. பொது மேடைகளிலும், விருந்து நிகழ்வுகளிலும்...
மிகவும் கேவலமாக, வெறும் நிலத்தில் இருக்க வைத்து... 
அவமானப் படுத்திய படங்களை நான் பார்த்தேன். 

அந்த உயர் பதவிகளில், அந்த நாட்டை  சேர்ந்தவர்களுக்கே.... இந்த நிலைமை என்றால்,
எம்மை... எந்த அளவிற்கு, மதிப்பார்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

தகவலுக்கு நன்றிகள் தமிழ்சிறி.

சிங்கள நில ஆக்கிரமிப்பு, சைவ மத அழிப்பு, தமிழ் மொழி அழிப்பு என பலவேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுக்கும் மக்களுக்கு எமது அரசியல் வாதிகளால் எதையும் பெற முடியாத நிலையில் இவர்களுடன் தொடர்பு வைப்பது பரவாயில்லை என எண்ணுபவர்களுக்கு (ஒரு புத்த கோயிலை விட அனுமார் கோயில் தமிழர் தாயகத்தில் முளைப்பது பரவாயில்லை என எண்ணுபவர்கள் உண்டு.) என்ன சொல்லி ஏற்கவைக்கலாம் (ஆர். எஸ். எஸ் ஆபத்தானவர்கள் )?

இல்லை பௌத்த மதத்தை அரச மதமாகவும் முதன்மை மதமாகவும் ஏற்றுக்கொண்டு வாழப்பழகுவது சிறந்ததா?  

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ampanai said:

தகவலுக்கு நன்றிகள் தமிழ்சிறி.

சிங்கள நில ஆக்கிரமிப்பு, சைவ மத அழிப்பு, தமிழ் மொழி அழிப்பு என பலவேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுக்கும் மக்களுக்கு எமது அரசியல் வாதிகளால் எதையும் பெற முடியாத நிலையில் இவர்களுடன் தொடர்பு வைப்பது பரவாயில்லை என எண்ணுபவர்களுக்கு (ஒரு புத்த கோயிலை விட அனுமார் கோயில் தமிழர் தாயகத்தில் முளைப்பது பரவாயில்லை என எண்ணுபவர்கள் உண்டு.) என்ன சொல்லி ஏற்கவைக்கலாம் (ஆர். எஸ். எஸ் ஆபத்தானவர்கள் )?

இல்லை பௌத்த மதத்தை அரச மதமாகவும் முதன்மை மதமாகவும் ஏற்றுக்கொண்டு வாழப்பழகுவது சிறந்ததா?  

சும்மா ....இருங்கோ...... அம்பனை,
தாச்சியில்... வறுக்கப் பட்ட  கடலை,  அது... சுடுகுது என்று,
நேரே... அடுப்புக்குள் விழுந்த, கதையாக போய் விடும்.  😮

நாம்.. நாமாகவே, இருப்போம். அது தான் அழகு. 💓
மதத்தையோ, மொழியையோ... திணிப்பதுதான், பிரச்சினையின்  ஆரம்ப புள்ளி. 
இது தெரியாததால்... தான்,  ஸ்ரீலங்கா இன்னும் சிங்கப்பூர் ஆகாமல் இருக்கு. :grin:

19 hours ago, இரும்பொறை said:

நாம் நடைமுறை (issue based) அரசியலுடன் நின்றுவிடாது, சித்தாந்த (ideology based) அரசியலையும் உள்வாங்கிக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது....

நாம் தமிழினப் படுகொலைகாரர்களின் சித்தாந்தத்தை பாத்து அஞ்சுவது, அதற்கு அடிமையாக நினைப்பது மிகவும் ஆபத்தானது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.