Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபய ஜனாதிபதியானால் தமிழருக்கு தீமையில்லை – விக்னேஸ்வரன்

Featured Replies

“கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. 

அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை”என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கேள்வி ஒன்றிற்கான பதில் என அவர் அனுப்பிவைத்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கேள்வி:- உங்கள் கருத்துப்படி ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:- இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிக முக்கியமானது. ஜனாதிபதி யார் என்ற அடிப்படையில்தான் பின்னர் பாராளுமன்ற தேர்தல்களும் மாகாண சபைத் தேர்தல்களும் நடக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்றதொரு பொதுக் கருத்துண்டு. அதற்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுகாறும் ஐ.தே.கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தமையே.எப்படியும்  தமக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் சஜித் இருந்தால் அவர் தன்னைத் தானே ஏமாற்றுபவர் ஆகிவிடுவார்.

கோத்தாபயவைப் பொறுத்தவரையில் பெரும்பான்மை சிங்கள வாக்குகளை அவரே பெறுவார். தமிழர்கள் எவருக்கும் வாக்களிக்காமல் விட்டால் கட்டாயம் கோத்தாபயவே வெல்வார். கோத்தாபயவுக்கு எந்தத் தன்மானத் தமிழனும் வாக்களிக்க மாட்டார் என்று நான் முன்னர் கூறியுள்ளேன்.

சஜீத் எந்தவித நன்மையைப் பெற்றுத் தருவேன் என்று தமிழர்களுக்கு கூறாது விட்டு தமிழர்கள் எவருக்கும் வாக்களியாது விட்டால் அது கோத்தாபயவுக்கே நன்மையாகப் போய்விடும். கோத்தாபய தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியாக என்ன செய்யப் போகின்றார் என்று எதுவும்  கூறத்தேவையில்லை. ஆனால் சஜீத் எமக்கு என்ன தரப் போகின்றார் என்று கூறாதுவிட்டு தமிழர்கள் அவருக்கு வாக்களிக்காது விட்டால் கட்டாயம் கோத்தாபய வெல்வார்.

கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை.

தற்போதிருக்கும் நிலையில் அவர் சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். இதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பமாட்டார்கள். அதனால் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்கள் சார்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அது எமக்கு நன்மைதரும்.

அமெரிக்காவுடன் “கள்ள உறவு” கோத்தாபயவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி இருந்தாலும்  கூட அமெரிக்கா கோத்தாபயவை வழி நடத்தவே பார்க்கும். அது தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கும். ஏனென்றால் எமது புலம் பெயர் தமிழரின் செல்வாக்கு அமெரிக்காவில் இருப்பது கண்கூடு.

ஆகவே சஜீத் எமக்குத் தரப் போவதை அவர் தெளிவாக வெளிப்படையாகக் கூற வேண்டும். அதனால் அவருக்கு வரப்போகும் சிங்கள வாக்குகள் குறைந்து விடமாட்டா. ஆனால் தமிழ், முஸ்லிம் வாக்குகள் அவரை வெல்ல வைக்கும். தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடங்களை ஏற்கனவே பல ஆவணங்களில் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆகவே பாரம்பரிய தமிழ் பேசும் பிரதேசங்கள் எவை என்பதை சஜீத் ஏற்க வேண்டும். அப்படியானால் அவர்களுக்கு வழங்கப்போகும்  தீர்வை அவர் வெளிப்படையாகக் கூறவேண்டும்.

வேண்டுமெனில் புத்தரின் போதனைகளே தம்மை வழிநடத்துவதாகக் கூறி எமக்கு அவர் தரப்போவனவற்றைக் கூறி வைக்கலாம். எம்மைப் பொறுத்த வரையில் அவர் தருவதை ஏற்கும் நிலையில் நாம் இல்லை. எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரித்துக்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு திருப்பித்தர வேண்டும் என்பது சம்பந்தமாகவும் எமது முன்மொழிவுகளை இந்த அரசுக்கு ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.

எமது மாகாண சபையும் அது பற்றித் தனது முன்மொழிவுகளைத் தெரியப்படுத்தியுள்ளது.

ஆகவே சஜீத் எதைத் தருவார் என்று முதலில் அவரின் தேர்தல் அறிக்கையைப் பரிசீலித்துப் பார்ப்போம். அதன்பின் அவரின் நிலைப்பாட்டைக் கேட்டறிவோம். பின்னர் நடவடிக்கையில் இறங்குவோம். இப்போது பொறுமை காப்போம் – என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/65885

  • Replies 67
  • Views 5.7k
  • Created
  • Last Reply
35 minutes ago, ampanai said:

தற்போதிருக்கும் நிலையில் அவர் சீனாவைச் சார்ந்தே செல்ல வேண்டிய நிலையில் உள்ளார். இதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பமாட்டார்கள். அதனால் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்கள் சார்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதொரு நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அது எமக்கு நன்மைதரும்.

அமெரிக்காவுடன் “கள்ள உறவு” கோத்தாபயவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி இருந்தாலும்  கூட அமெரிக்கா கோத்தாபயவை வழி நடத்தவே பார்க்கும். அது தமிழர்களுக்கு சார்பாகவே இருக்கும். ஏனென்றால் எமது புலம் பெயர் தமிழரின் செல்வாக்கு அமெரிக்காவில் இருப்பது கண்கூடு.

கோத்தா ஜனாதிபதியாக வந்தால் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழர்கள் சார்பாக நடவடிக்கை எடுக்கும் நிலைக்கெல்லாம் தள்ளப்பட மாட்டார்கள்.

கோத்தா அமெரிக்காவின் நண்பன் என முன்னர் சில திரிகளில் எழுதியிருக்கிறேன். கோத்தாவுக்கு இந்திய ஆதரவும் உள்ளது.

எனவே சீனா, இந்தியா, அமெரிக்கா மூன்றையும் தனது கைக்குள் வைத்திருப்பார்.

விக்கினேஸ்வரன் இன்னமும் சிலவிடயங்களில் அரசியல் அறிவிலியாக இருப்பதை அவரது இந்தக் கருத்துகள் (தேவையற்ற காலத்தில் தேவையற்ற கருத்துக்கள்) தெளிவாக முன்வைக்கிறது.

இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்கள் மூலம் விக்கினேஸ்வரன் மக்கள் செல்வாக்கை இழப்பது மட்டுமே உறுதி.

மாரித் தவளை தண்ணீரைக் கண்டவுடன் கத்திக் கத்தி உயிரிழப்பதைப் போலவே விக்கினேஸ்வரனும் பத்திரிகைக்காரர்களை கண்டால் வாய் திறந்து கத்திக் கத்தி தனது செல்வாக்கை இழப்பதை வழமையாக கொண்டிருக்கிறார்.

நிறைகுடம் தளம்பாது. விக்கினேஸ்வரன் தன்னிடம் அரசியல் முதிர்ச்சி இப்போதைக்கு இல்லை என்பதை இதுபோன்ற தேவையற்ற விடயங்களில் வாயைக் கொடுத்து நிரூபித்து வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா, இந்தியா நாடுகளில் அரசியல் செய்வோரை அரசியல் விபச்சாரிகளாக கணித்து இங்கு உறவுகள் முன்பு பதிவுசெய்துள்ளனர். விக்கினேசுவரனுக்கு அரசியல் தெரியவில்லை என்றால் அவர் அரசியல் விபச்சாரி இல்லை என்றாகிது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு சஜித் என்னசெய்வார் என்பதை வெளிப்படையாக சொல்லி சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க சஜித் விரும்பமாட்டார்.   /சஜீத் எமக்குத் தரப் போவதை அவர் தெளிவாக வெளிப்படையாகக் கூற வேண்டும். அதனால் அவருக்கு வரப்போகும் சிங்கள வாக்குகள் குறைந்து விடமாட்டா என்ற கருத்து ஏற்புடையது  அல்ல.

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரன் ஒரு முன்னாள் நீதியரசர். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்தும் அரசியலை வாழ்வியலாக கொண்டவர்கள் எந்த தீர்வையும் பெற்றுத்தராத நிலையிலேயே விக்னேஸ்வரன் அரசியல் பேச வேண்டிய நிலை உருவானது. அவர் பேசுவது ஒரு தீர்க்கமற்றதாக தெரியலாம், ஆனால், பலதையும் சிந்திக்க தூண்டுகின்றது. அதுவே ஒரு முன்னேற்றம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் கோத்தபாயவுக்கு ஆதரவாக காய்நகர்த்துவார் சரி வரா விட்டால் தேர்தல் பகிஸ்கரிப்பு என்பார். இரண்டுமே கோத்த பாயவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நகர்வுதான். இதைத்தான் ஓரிரு வருடங்களாக நான் சொல்லி வருகிறேன். கடைசியில் விக்னேஸ்வரனே சொல்லிவிட்டார். கொழும்பை சேர்ந்த அதி தீவிரவாதி  கோத்தபாயவுக்கு வாக்களிக்கும்படி கேட்க்க மாட்டார் ஆனால் தேர்தலை பகிஸ்கரிக்க சொல்வார் என்று சொல்லுவார் என்றும் எழுதியுள்ளேனே. கொழும்பு தமிழ் தலைவர்களை கையாளும் பொறுப்பு வாசுட்தேவாவின் பணியாக உள்ளது. அப்பன் குதிருக்குள் இல்லை.

.

கோத்தா வந்தால் இதுசெய்வார் இல்லாவிட்டா; சர்வதேசம் நம்மை ஆதரிக்கும் என்கிற விவாதம் 2005ல் மகிந்த சார்பாக வைக்கப்பட்ட பழைய விவாதம். மிந்த வென்றால் தீர்வை முன்வைப்பார் இல்லையேல் சர்வதேசம் எங்கள் பக்கம் சாயும் என்கிற 2005 விவாதத்தை நம்பியமையே 2009ல் இனக்கொலைக்கு வழி வகுத்தது. 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, poet said:

.

கோத்தா வந்தால் இதுசெய்வார் இல்லாவிட்டா; சர்வதேசம் நம்மை ஆதரிக்கும் என்கிற விவாதம் 2005ல் மகிந்த சார்பாக வைக்கப்பட்ட பழைய விவாதம். மிந்த வென்றால் தீர்வை முன்வைப்பார் இல்லையேல் சர்வதேசம் எங்கள் பக்கம் சாயும் என்கிற 2005 விவாதத்தை நம்பியமையே 2009ல் இனக்கொலைக்கு வழி வகுத்தது. 

இதை "இராசதந்திர" நகர்வு என்போர் இன்னும் இருக்கிறார்களே ஐயா? அதாவது, 2005 முடிவை புலிகளின் தலைமை எடுத்து, அதன் விளைவுகள் அவர்கள் மீதும் மக்கள் மீதும் பொறிந்து விழுந்த பின்னும் அதை இராசதந்திரம் தான் என்போர் இருக்கிறார்கள். விக்கி ஐயா அந்தத் தரப்பினரைக் குளிர்விக்க பேசுகிறார்!

2 hours ago, ampanai said:

விக்னேஸ்வரன் ஒரு முன்னாள் நீதியரசர். ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்தும் அரசியலை வாழ்வியலாக கொண்டவர்கள் எந்த தீர்வையும் பெற்றுத்தராத நிலையிலேயே விக்னேஸ்வரன் அரசியல் பேச வேண்டிய நிலை உருவானது. அவர் பேசுவது ஒரு தீர்க்கமற்றதாக தெரியலாம், ஆனால், பலதையும் சிந்திக்க தூண்டுகின்றது. அதுவே ஒரு முன்னேற்றம் தான்.

அம்பனை, என்ன முன்னேற்றம் இந்த பத்து வருடப் பழைய யோசனையில் உங்களுக்குத் தெரிகிறது என்று விளக்குங்கள்? கோத்தா மகிந்தா செய்ததையும் பார்த்தோம்! அவர்கள் இப்போது செய்து கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். இதையெல்லாம் செய்தி ஊடகங்களில் பார்த்து ஒரு deduction ஐச் செய்ய முடியாத ஒருவராக விக்கி ஐயா இருக்கிறார்! ஒபாமாவும் ஹிலரியும் இருந்த போது உதவிக்கு வராத அமெரிக்கா, ட்ரம்ப்பும் பொம்பியோவும் இருக்கும் போது வரும் என்று எவராவது நம்பினால், அது அவர்களின் முட்டாள் தனம்!

  • தொடங்கியவர்

 விக்னேஸ்வரன் இந்த பேட்டி மூலமாக சகல தமிழ் கட்சிகளும் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

  1. ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்றதொரு பொதுக் கருத்துண்டு. அதற்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுகாறும் ஐ.தே.கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தமையே.
  2. சஜீத் எமக்கு என்ன தரப் போகின்றார் என்று கூறாதுவிட்டு தமிழர்கள் அவருக்கு வாக்களிக்காது விட்டால் கட்டாயம் கோத்தாபய வெல்வார்.
  3. ஆனால் அவர் (கோத்தாபய) வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை

7 hours ago, ampanai said:

ஆகவே சஜீத் எமக்குத் தரப் போவதை அவர் தெளிவாக வெளிப்படையாகக் கூற வேண்டும். அதனால் அவருக்கு வரப்போகும் சிங்கள வாக்குகள் குறைந்து விடமாட்டா. ஆனால் தமிழ், முஸ்லிம் வாக்குகள் அவரை வெல்ல வைக்கும். தமிழ் மக்களின் பாரம்பரிய வதிவிடங்களை ஏற்கனவே பல ஆவணங்களில் இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆகவே பாரம்பரிய தமிழ் பேசும் பிரதேசங்கள் எவை என்பதை சஜீத் ஏற்க வேண்டும். அப்படியானால் அவர்களுக்கு வழங்கப்போகும்  தீர்வை அவர் வெளிப்படையாகக் கூறவேண்டும்.

வேண்டுமெனில் புத்தரின் போதனைகளே தம்மை வழிநடத்துவதாகக் கூறி எமக்கு அவர் தரப்போவனவற்றைக் கூறி வைக்கலாம். எம்மைப் பொறுத்த வரையில் அவர் தருவதை ஏற்கும் நிலையில் நாம் இல்லை. எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரித்துக்கள் பற்றியும் அவற்றை எவ்வாறு திருப்பித்தர வேண்டும் என்பது சம்பந்தமாகவும் எமது முன்மொழிவுகளை இந்த அரசுக்கு ஏற்கனவே சொல்லியாகிவிட்டது.

பிரதான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டும்  தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை தமது தீர்மானம் என்னவென்பதை அறிவிக்காதுள்ள நிலையில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அழைப்பினை அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்  மற்றும் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

 விக்னேஸ்வரன் இந்த பேட்டி மூலமாக சகல தமிழ் கட்சிகளும் சிந்திக்க வேண்டிய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

  1. ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கே தமிழர்கள் வாக்களிப்பார்கள் என்றதொரு பொதுக் கருத்துண்டு. அதற்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுகாறும் ஐ.தே.கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தமையே.
  2. சஜீத் எமக்கு என்ன தரப் போகின்றார் என்று கூறாதுவிட்டு தமிழர்கள் அவருக்கு வாக்களிக்காது விட்டால் கட்டாயம் கோத்தாபய வெல்வார்.
  3. ஆனால் அவர் (கோத்தாபய) வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை

இந்தப் பத்து வருடப் பழைய யோசனைக்குத் தான் விளக்கம் கேட்டேன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

1. இப்போது அமெரிக்காவும் உலகமும் இருக்கும் நிலையை 2009 ஓடு ஒப்பிட்டால், இப்போது எங்கள் வெற்றி வாய்ப்பு அதிகமா குறைவா?

2. அந்த வெற்றி வாய்ப்பு கோத்தா மூலம் மீண்டும் வெள்ளைவானிலும் வேறு வழியிலும் காணாமல் போகப் போகும் மக்களின் உயிரை விட பெறுமதி கூடியதாக இருக்குமா?  

  • தொடங்கியவர்
6 hours ago, Lara said:

எனவே சீனா, இந்தியா, அமெரிக்கா மூன்றையும் தனது கைக்குள் வைத்திருப்பார்.

உலகில் அப்படி ஒரு நாடும் இதுவரை இல்லை. கோத்தபாய அண்ட் கோ அவர்களின் அதிஷ்டம் அப்படி நீடிக்கும் என நம்புவது கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்

1. சம், சும் = பத்து சதத்துக்கு பிரயோசனமில்லாத ஆக்கள்.

2. கஜே கோஸ்டி = 5 சதத்துக்கு பிரயோசனமில்லாத ஆக்கள்.

3. விக்கி ஐயா = 1 சதத்துக்கு பிரயோசனமில்லாத ஆள்.

இன்றுவரை ஊழல் அற்று வாழ்கிறார். உண்மையிலேயே இதய சுத்தியுடன் செயல்படுகிறார் என்பது மறுக்க முடியா உண்மை. சரவணபவன், சிறீதரனுடன் ஒப்பிடும் போது, விக்கியின் அப்பழுக்கற்ற தன்மை மிகப் பெரியது.

பொயட் ஐயா,

வாசு சொல்லி விக்கி கோட்டவுக்கு வேலை பாக்கிறார் என்பதெல்லாம் சாக்கடை அரசியல் குற்றச்சாட்டுகள்.

வாசுதேவ சொல்லி போர்குற்ற, இன ஒழிப்பு பிரேரணையை ஏன் விக்கி கைவிடவில்லை.

Play the ball, not the man. 

ஆனால் -

அரசியலில் விக்க்? 

இன்னும் கோட்ட அபய வந்தால் சர்வதேச அழுத்தத்தின் மூலம் ஒரு விடிவு வரும் என நம்பும் மனிதரை என்னவென்று சொல்வது 🤦‍♂️.

நல்லவேளையாக விக்கி எனும் நல்ல மனிதரை இனம் கண்டு கொண்ட எம் மக்கள், அவருக்கு அரசியல் சுட்டுப் போட்டாலும் வராது என்பதையும் புரிந்துகொண்டுள்ளார்கள்.

அண்மைய எழுக தமிழ் பிசு பிசுப்பு காட்டி நிற்பது இதையே.

சஜித்தோ, கோட்டாவோ எமக்கு பட்டு குஞ்சரம் கட்டிவிடப்போவதில்லை. ஆனால் கோட்டா வந்தால் அரையில் இருக்கும் துண்டையும் உருவி விடக்கூடும்.

3 minutes ago, ampanai said:

உலகில் அப்படி ஒரு நாடும் இதுவரை இல்லை. கோத்தபாய அண்ட் கோ அவர்களின் அதிஷ்டம் அப்படி நீடிக்கும் என நம்புவது கடினம்.

இது தனிமனிதர்களின் அதிஸ்டம் அல்ல.

இலங்கையில் எந்த அணி ஆட்சியில் இருந்தாலும் இந்த அதிஸ்டம் இருக்கும். ஆட்சியை இழக்கும் போது அதிஸ்டம் கைமாறும்.

  • தொடங்கியவர்
9 minutes ago, Justin said:

1. இப்போது அமெரிக்காவும் உலகமும் இருக்கும் நிலையை 2009 ஓடு ஒப்பிட்டால், இப்போது எங்கள் வெற்றி வாய்ப்பு அதிகமா குறைவா?

2. அந்த வெற்றி வாய்ப்பு கோத்தா மூலம் மீண்டும் வெள்ளைவானிலும் வேறு வழியிலும் காணாமல் போகப் போகும் மக்களின் உயிரை விட பெறுமதி கூடியதாக இருக்குமா?  

1. ஒரு அரசியல் தீர்விற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

2. அது சர்வதேச, குறிப்பாக சீன - அமெரிக்க சண்டையால். 

7 minutes ago, goshan_che said:

இது தனிமனிதர்களின் அதிஸ்டம் அல்ல.

இலங்கையில் எந்த அணி ஆட்சியில் இருந்தாலும் இந்த அதிஸ்டம் இருக்கும். ஆட்சியை இழக்கும் போது அதிஸ்டம் கைமாறும்.

அவ்வாறு தான் என்றால் ஈராக்கில் சதாமும் லிபியாவில் கடாபியும் சவூதி போல் இருந்திருப்பார்கள்.

இல்லை, வடகொரியா நாட்டின் தலைவரை இன்றைய அமெரிக்க அதிபர் சந்தித்ததும் அதிஷ்டாம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

1. ஒரு அரசியல் தீர்விற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

2. அது சர்வதேச, குறிப்பாக சீன - அமெரிக்க சண்டையால். 

1. எப்படி?

2. எப்படி?

5 minutes ago, ampanai said:

அவ்வாறு தான் என்றால் ஈராக்கில் சதாமும் லிபியாவில் கடாபியும் சவூதி போல் இருந்திருப்பார்கள்.

இல்லை, வடகொரியா நாட்டின் தலைவரை இன்றைய அமெரிக்க அதிபர் சந்தித்ததும் அதிஷ்டாம் தான்.

ஈராக்கின் சதாம், லிபியாவின் கடாபி, கொரியாவின் கிம், இவர்களோடு ஒப்பிடக் கூடிய நிலை இலங்கையில் இல்லை! எங்களுக்கு எல்லா அனியாயங்களும் நடந்தாலும் மக்களால் தேர்வாகும் அரசும் கட்டமைப்பும் இருக்கும் நாடு சிறிலங்கா. எண்ணை, அணுவாயுதம் போன்ற சொற்களைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

  • தொடங்கியவர்
4 minutes ago, Justin said:

1. எப்படி?

2. எப்படி?

2009இல் நிறைவுற்ற ஈழ போராட்டம் 9/11/2001 இல் உருவான உலக பயங்கரவாத போராட்டத்திற்குள் மாட்டியது. 

இன்றைய உலகில் நடக்கும் போராட்டம் நாளைய பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ தனிப்பெரும் வல்லரசிற்கான போராட்டம். அதில் பல புதிய நாடுகள் உருவாகும் நிலை வரும். அதில், நாம் மற்றும் எமது தலைமைகள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் விடுதலை அமையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ampanai said:

1. ஒரு அரசியல் தீர்விற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

2. அது சர்வதேச, குறிப்பாக சீன - அமெரிக்க சண்டையால். 

அவ்வாறு தான் என்றால் ஈராக்கில் சதாமும் லிபியாவில் கடாபியும் சவூதி போல் இருந்திருப்பார்கள்.

இல்லை, வடகொரியா நாட்டின் தலைவரை இன்றைய அமெரிக்க அதிபர் சந்தித்ததும் அதிஷ்டாம் தான்.

உங்களது பதிலிலே உங்களுக்கான பதிலும் இருக்கிறது?

சவுதியும் ஜோர்தானும் தொடர்ந்தும் செல்லப்பிள்ளைகளாக இருக்க ஏன் கடாபியும், சதாமும் அழிக்கப்பட வேண்டியவர்கள் ஆயினர்?

ஏனெனெனில் இவர்கள் இருவருக்கும் அமெரிக்காவின் செல்ல பிள்ளைகளாக இருந்த படி, அடுத்த நிலை சக்திகளையும் பகைக்காமல் எப்படி காய் நகர்த்துவது என்பது புரியவில்லை.

சவுதியை எடுங்கள். அமேரிக்காவின் செல்லப்பிள்ளை, ஆனால் என்றைக்குமே சோவியத்துடனோ, சீனாவிடனோ முண்டியதில்லை.

இலங்கையும் அப்படித்தான் - சீனா, இந்தியா, அமேரிக்கா இடையே ஒரு சமநிலையை பேணும் போக்கே இலங்கையின் வெளியிறவுக் கொள்கை. இந்த மூன்று நாட்டில் ஒன்றையும் அதிகம் உள்ளே எடுக்கவும் மாட்டார்கள், அதிகம் பகைக்கவும் மாட்டார்கள்.

பிரதமர்-குழப்ப காலத்தில் ரணில் சைனாவையும், மகிந்த இந்தியா, யு எஸ்சை கையாண்டதையும் பார்க்கும் போது இது புரியும்.

இந்த 3 நாட்டில் ஒரு நாடு இலங்கைக்கு பகையாக திரும்பாதவரை எமக்கு சர்வதேச அழுத்தத்தில் ஒரு தீர்வு என்பது பகல் கனவே.

இந்த 3 நாட்டையும், கோட்டவோ, ரணிலோ, சஜித்தோ ஒரு போதும் பகைக்கவும் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

2009இல் நிறைவுற்ற ஈழ போராட்டம் 9/11/2001 இல் உருவான உலக பயங்கரவாத போராட்டத்திற்குள் மாட்டியது. 

இன்றைய உலகில் நடக்கும் போராட்டம் நாளைய பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ தனிப்பெரும் வல்லரசிற்கான போராட்டம். அதில் பல புதிய நாடுகள் உருவாகும் நிலை வரும். அதில், நாம் மற்றும் எமது தலைமைகள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் விடுதலை அமையலாம்.

இது உங்கள் அபிப்பிராயம்!  வல்லரசுப் போராட்டமாக உங்களுக்குத் தெரிந்தாலும் உண்மையில் வர்த்தக மேலாண்மைப் போட்டி மட்டுமே நடக்கிறது! அது நாடுகளை ஏன் உருவாக்கும் என்று எனக்கு விளங்கவில்லை! ஈழத்தை உடைத்து தனியாக உருவாக்கினால் சீனாவுக்கோ அமெரிக்காவுக்கோ என்ன மூலப் பொருளை இலகுவாகப் பெற முடியும்? எதுவும் இல்லை! எனவே வர்த்தகப் போட்டி திரை மறைவுப் பேச்சு வார்த்தைகளில் தீர்ந்து விடும், இதற்காக நாடுகளை உருவாக்க வேண்டுமென்றால் புதிய நாடுகள் ஆபிரிக்காவில் எப்போதோ உருவாகி விட்டிருக்க வேண்டும்! அப்படி எதுவும் நடக்கவில்லை!

இந்த எட்டாக் கனிக் கற்பனை பற்றிய என் இரண்டாவது கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

"2. அந்த வெற்றி வாய்ப்பு கோத்தா மூலம் மீண்டும் வெள்ளைவானிலும் வேறு வழியிலும் காணாமல் போகப் போகும் மக்களின் உயிரை விட பெறுமதி கூடியதாக இருக்குமா?" 

  • தொடங்கியவர்
9 minutes ago, goshan_che said:

இந்த 3 நாட்டில் ஒரு நாடு இலங்கைக்கு பகையாக திரும்பாதவரை எமக்கு சர்வதேச அழுத்தத்தில் ஒரு தீர்வு என்பது பகல் கனவே.

இந்த 3 நாட்டையும், கோட்டவோ, ரணிலோ, சஜித்தோ ஒரு போதும் பகைக்கவும் போவதில்லை.

அணிசேரா கொள்கையில் இருந்து இலங்கை வெளியேறி பல ஆண்டுகளாகி விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ampanai said:

2009இல் நிறைவுற்ற ஈழ போராட்டம் 9/11/2001 இல் உருவான உலக பயங்கரவாத போராட்டத்திற்குள் மாட்டியது. 

இன்றைய உலகில் நடக்கும் போராட்டம் நாளைய பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ தனிப்பெரும் வல்லரசிற்கான போராட்டம். அதில் பல புதிய நாடுகள் உருவாகும் நிலை வரும். அதில், நாம் மற்றும் எமது தலைமைகள் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் விடுதலை அமையலாம்.

நாளைய தனிபெரும் வல்லரசாக யூஎஸ் அல்லது சைனா வர போட்டி போடுகிறன. ஆனால் இதில் இரெண்டு பகுதிக்கும் நமக்கு உதவ வேண்டிய தேவை என்ன? அல்லது நம்மிடம் பெறத்தான் என்ன இருக்கிறது.

புலிகள் ஒரு சமாந்தர அரசை நடத்தும் போதே - எந்த ஒரு நாடும், இலங்கைக்கு எதிராக, புலிக்கு ஆதரவாக திரும்பவில்லை.

இப்போ இந்திய சமுத்திரத்தில் தமது மேலாண்மையை நிலைநாட்ட சீனாவும், இந்தியாவும், அமேரிக்காவும் சிவி, சம் சும், மாவை யுடன் டீல் போடும் ஒரு காலம் வரும் என்பது - அதீத கற்பனை. 

சீனா v அமெரிக்கா & இந்தியா என ஒரு யுத்தம் (உலக யுத்தம்) வராதவரை, இலங்கையின் தற்போதைய கொள்கை தொடரவே செய்யும்.

அப்படி ஒரு யுத்தம் வந்தால் - நீங்கள் சொன்னபடி நடக்கலாம்.

ஆனால் பின்-அணு ஆயுத உலகில் இப்படி ஒரு யுத்தம் வர இப்போதைக்கு சாத்தியமில்லை.

  • தொடங்கியவர்
6 minutes ago, Justin said:

இது உங்கள் அபிப்பிராயம்!  வல்லரசுப் போராட்டமாக உங்களுக்குத் தெரிந்தாலும் உண்மையில் வர்த்தக மேலாண்மைப் போட்டி மட்டுமே நடக்கிறது! அது நாடுகளை ஏன் உருவாக்கும் என்று எனக்கு விளங்கவில்லை! ஈழத்தை உடைத்து தனியாக உருவாக்கினால் சீனாவுக்கோ அமெரிக்காவுக்கோ என்ன மூலப் பொருளை இலகுவாகப் பெற முடியும்? எதுவும் இல்லை! எனவே வர்த்தகப் போட்டி திரை மறைவுப் பேச்சு வார்த்தைகளில் தீர்ந்து விடும், இதற்காக நாடுகளை உருவாக்க வேண்டுமென்றால் புதிய நாடுகள் ஆபிரிக்காவில் எப்போதோ உருவாகி விட்டிருக்க வேண்டும்! அப்படி எதுவும் நடக்கவில்லை!

இந்த எட்டாக் கனிக் கற்பனை பற்றிய என் இரண்டாவது கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

எண்பதுகளின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் என சாம்ராஜ்யம் 1989இல் 15 நாடுகளாக உடையும் என கூறி இருந்தாலும் அது அபிப்பிராயம் தான். இல்லை பெரிதாக வளங்கள் இல்லை மார்சல் டீட்டொவின் யூகோசிலாவியாவும் உடைந்ததுதான்.

அதேவேளை பிரிந்த ஜெர்மனியும் இணைந்தது எல்லாமே நாம் கடந்து வந்த பாதைகளே.

2 minutes ago, goshan_che said:

அப்படி ஒரு யுத்தம் வந்தால் - நீங்கள் சொன்னபடி நடக்கலாம்.

ஆனால் பின்-அணு ஆயுத உலகில் இப்படி ஒரு யுத்தம் வர இப்போதைக்கு சாத்தியமில்லை.

எண்பதுகளின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் என சாம்ராஜ்யம் 1989இல் 15 நாடுகளாக உடையும் என கூறி இருந்தாலும் அதில் அணு ஆயுதங்கள் இருந்தும் மேற்குலம் உடைத்தது, யுத்தம் இல்லாமல் சத்தம் இல்லாமல். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ampanai said:

எண்பதுகளின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் என சாம்ராஜ்யம் 1989இல் 15 நாடுகளாக உடையும் என கூறி இருந்தாலும் அது அபிப்பிராயம் தான். இல்லை பெரிதாக வளங்கள் இல்லை மார்சல் டீட்டொவின் யூகோசிலாவியாவும் உடைந்ததுதான்.

அதேவேளை பிரிந்த ஜெர்மனியும் இணைந்தது எல்லாமே நாம் கடந்து வந்த பாதைகளே.

எண்பதுகளின் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் என சாம்ராஜ்யம் 1989இல் 15 நாடுகளாக உடையும் என கூறி இருந்தாலும் அதில் அணு ஆயுதங்கள் இருந்தும் மேற்குலம் உடைத்தது, யுத்தம் இல்லாமல் சத்தம் இல்லாமல். 

மன்னிக்க வேண்டும், 

கோட்டா 2 எலக்சன் வெண்டாலும் 8 ஆண்டுகள்தான் ஜனாதிபதி.

அடுத்த 8 ஆண்டுகளில் உலக மகாயுத்தம் வரும் என எனக்குத் தெரிய வேறு யாரும் எதிர்வுகூறவில்லை.

இந்த மில்லியன்:1 நிகழ்தகவை நம்பி கோட்டாவின் பேயாட்சிக்குள் எம்மக்களை தள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தா வந்தால் படிப்படியாக இந்தியாவின் பிரசன்னத்தை இலங்கைத்தீவில் குறைத்துக்கொண்டு சீனாவுடனான தனது உறவை வளர்ப்பார் இதன்மூலம் இந்தியா மீண்டும் தமிழர்களது முதுகில் ஏறிச்சவாரிசெய்ய ஆயத்தமாகும் மீண்டும் குழப்பங்களை இந்தியா ஏற்படுத்தும் இதன்மூலம் மேலும் பலவீனப்படுவது தமிழர்தரப்பே. அதற்குள் ஐந்துவருடகாலமாகிவிடும் திரும்பவும் முதலில் இருந்து தொடங்கும் இப்படியே நாம் எமது அடையாளங்கள் அனைத்தையும் இழந்துவிடுவோம். தவிர கொத்தா வராதுவிட்டாலும் இதுபோல இன்னுமொன்று  தொடரும் ஆக அமக்கு மட்டுமே சேதாரம். ஆகவே இந்தியாவை தமிழர்தரப்பு ஒரேயடியாகவே புறந்தள்ளுவதே நன்மையளிக்கும்.

  • தொடங்கியவர்
8 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும், 

கோட்டா 2 எலக்சன் வெண்டாலும் 8 ஆண்டுகள்தான் ஜனாதிபதி.

அடுத்த 8 ஆண்டுகளில் உலக மகாயுத்தம் வரும் என எனக்குத் தெரிய வேறு யாரும் எதிர்வுகூறவில்லை.

இந்த மில்லியன்:1 நிகழ்தகவை நம்பி கோட்டாவின் பேயாட்சிக்குள் எம்மக்களை தள்ள முடியாது.

சஜித் ஆட்சி என்பது பிசாசாட்சியாக இருக்க முடியாது என ஒரு உத்தவாதமும் இல்லை.

விக்கி அவர்களின் கருத்து சிந்திக்க வேண்டிய ஒரு கருத்தே : "கோத்தாபய வென்றால் தமிழர்கள் மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவார்கள் என்று தமிழர்கள் அஞ்சுவது புரிகின்றது. அவ்வாறு அவர் நடந்து கொள்ளமாட்டார் என்றே தோன்றுகின்றது. அந்த அளவுக்கு உலக நாடுகள் அவரை உற்று நோக்கிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் அவர் வந்தால் சர்வதேச ரீதியாக எமக்கு நன்மையே அல்லாது தீமையில்லை. "

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ampanai said:

நீங்கள் 2015-19 இலங்கைக்கு போனீர்களா?

2009-2015 போனீர்களா?

இலங்கை தமிழ்மக்களின் வாழ்வோடு பரிச்சயமான யாருக்கும் எந்த ஆட்சியில் மக்கள் ஒப்பீட்டளவில் நிம்மதியாக இருந்தார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

சஜித் வந்தால் தற்போது இருக்கும் நிலை தொடரும் என எதிர்பார்க்கலாம்.

கோட்டா வந்தால் 2005-2009 வரையான ஆட்சி போலல்லாதுவிடினும் 2010-2015 வரையானது போன்ற ஒரு அடக்குமுறை ஆட்சியே அமையும் என்பதை எதிர்வுகூறுவதும் அவ்வளவு கடினமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாவின் அரசியல் குறைவிளக்கத்துக்கு பின்வரும் அவர் உதிர்ப்புகள் ரெண்டுமே போதும்.

1. உலக நாடுகள் உற்று நோக்குவதால் தமிழரை கோட்ட ஒன்றும் செய்யமாட்டார் -  எந்த கோட்ட? உலக நாடுகளின் மேற்பார்வையில் நம்மை கூட்டம் கூட்டமாக காலி பண்ணினாரே? உலகநாடுகளின் எம்பெசிக்கு வெளியே வைத்து வெள்ளைவானில் ஆட்களை தூக்கினாரே? அதே கோட்ட இப்போ உலக நாடுகளுக்கு பயந்து அடக்கி வாசிப்பாராம். இந்த வயசிலும் ஐயா sense of humour ஐ இழக்காதது சந்தோசம்.

2. தமிழர்க்கு இன்னதை தருவேன் என சொல்வதால் - சஜித் சிங்கள வாக்குளை இழக்க மாட்டாராம்! - இலங்கையில் 5 ம் ஆண்டு படிக்கும் பிள்ளை கூட இந்த கருத்தை ஏற்காது. 48 முதல் தமிழர்கு ஐந்து குழி நிலம் கொடுப்போம் என்று சொன்னவர்களை கூட பெளத்தசிங்கள வாக்காளர் துரத்தி, துரத்தி அடித்திருக்கிறார்கள். இலங்கை அரசியலின் பாலபாடம் இது. இதை கூட புரியாமல் ஐயா, என்னாத்த அரசியல் செய்யுறாரோ 🤦‍♂️.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.