Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்

Featured Replies

கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் செல்வாக்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு பெற்றவருமான ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில்  ஜஸ்டின் பெரும்பான்மை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன்வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவும்  கூறப்படுகிறது.

இதனால் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெற வாய்ப்பில்லாததால், ஜஸ்டின் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க நேரிடும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/85779/ஜஸ்டின்-ட்ரூடோபெரும்பான்மையை-இழப்பார்-எனகருத்து-கணிப்புகளில்-தகவல்

LEADERS-DEBATE.jpg

Liberal Party Leader Justin Trudeau, People’s Party of Canada Leader Maxime Bernier, Conservative Leader Andrew Scheer, Bloc Québécois Leader Yves-François Blanchet, Green Party Leader Elizabeth May and NDP Leader Jagmeet Singh. CANADIAN DEBATE PRODUCTION PARTNERSHIP.

எனக்கு ஜஸ்ரினையும் லிபரல்ஸ் ஐயும் கண்ணிலும் காட்டக் கூடாது. கடுமையாக உழைப்பவர்களிடம் இருந்து உறிஞ்சி Welfare கூட்டத்துக்கு அர்ப்பணிக்கும் இடது சாரி கூட்டங்கள் இவர்கள். இவர்களைப் போலத்தான் NDP யும்.
ஆனால் இம் முறை எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டு லிபரலும் NDP யும் சேர்ந்து ஆட்சியமைக்கும் நிலை வரலாம். ஆரம்பத்தில் பழமைவாத கட்சியான கொன்சர்வேட்டிக்கு கிடைத்து இருந்த ஆதரவு அதன் தலைவரின் வசீகரமற்ற கொள்கை மற்றும் பேச்சுக்களால் குறைவடைந்து விட்டது.

  • தொடங்கியவர்

தலைப்பாகை வைத்திருப்பவர் என்னை கவர்ந்திருந்தார். என்னால், எமது அடுத்த தலைமுறையையும் எதிர்காலத்திற்கும் சரியானவராக தெரிந்தார்.

கியூபெக் பிரிவினைவாதியையும் பிடித்திருந்தது, ஆனால் பிடிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

கடுமையாக உழைப்பவர்களிடம் இருந்து உறிஞ்சி Welfare கூட்டத்துக்கு அர்ப்பணிக்கும் இடது சாரி கூட்டங்கள் இவர்கள்.

இது welfare கூட்டம் என்று அடித்தட்டு மக்களை சோம்பேறிகள் என்று சொல்லி வர்க்கவேறுபாட்டை வளர்க்கும் கருத்து. இந்தியாவில் சாதியமைப்பு போல மேல்நாடுகளில் வர்க்க அமைப்பு உள்ளது. கீழ் வர்க்க மக்கள் மேலே முன்னேற சமூக உதவித் திட்டங்கள் உதவுகின்றன. அதனைத் துஷ்பிரயோகிக்கும் சிலரை வைத்துக்கொண்டு எல்லோரையும் வேலை செய்யாமல் சொகுசாக வாழ்கின்றார்கள் என்று சொல்லமுடியாது.

தற்போது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதைப் பற்றி வரும் விமர்சனங்களும் இப்படியான “பார்வை”களிலேயே வருகின்றது.

27 minutes ago, கிருபன் said:

இங்கு கொடுக்கப்படும் இவ்வாறான உதவித் திட்டங்களில் அனேகமானவை சோம்பேறித்தனத்தை வளர்ப்பதற்கும் அதனை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதற்குமே உதவி செய்கின்றன.  அங்கவீனமானவர்களுக்கு, உடல் நிலை காரணமாக உழைக்க முடியாதவர்களுக்கு சரியான போசாக்கு கிடைக்காத குழந்தைகளுக்கு உதவி செய்வது வேறு, வருடாந்திரம் குறைவான தொகையை அரசுக்கு காட்டும் கும்பல்களுக்கு உதவி செய்வது வேறு.

ரூடோ போன்ற இடது சாரிகள் தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலை வழங்குவதற்கு பதிலாக உதவிப்பணத்தை வழங்குவது எந்த பயனையும் கொடுக்காது. பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை குறைக்காமல் அல்லது பெறும் கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்காமல், வருடம் 50000 இற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இலவசமாக கொடுக்க நினைப்பது எல்லாம் உழைப்பவர்களை சுரண்டும் முறைகள் தான், ரூடோவின் காபர்ன் வரி போன்றன மிகப் பெரும் Scams.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டையும் இதனையும் ஒப்பிடமுடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக நான் இடது சாரி மற்றும் சோசலிச அரசியலை அடியோடு வெறுப்பவன் என்பதாலும் முதலாளித்துவ கொள்கைகளில் நாட்டமுள்ளவன் என்பதாலும் லிபரல்களையும், ndp இனரையும் அடியோடு வெறுக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

காப்பரின்  8 வருட ஆட்சியில் மேற்குறிப்பிட்ட எவற்றை மாற்றிக்காட்டி இருந்தார்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பாலான வெளிநாடுகளில் ஜஸ்டின் விரும்பத்தக்க  பிரதமராகவே காணப்படுகின்றார். எனினும் அவருக்கு மிகவும் இறுக்கமான தேர்தலாகவே இருக்குமென ஜேர்மனிய தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். காரணம் ஊழல் வழக்கு மற்றும் ஒரு புகைப்படம்.

2 hours ago, nunavilan said:

காப்பரின்  8 வருட ஆட்சியில் மேற்குறிப்பிட்ட எவற்றை மாற்றிக்காட்டி இருந்தார்??

அதனால் தான் கடந்த முறை ரூடோவுக்கு வாக்களித்து இருந்தேன்.

ஆனால் ரூடோ வந்தபின் செய்தவற்றில் பல எனக்கு பிடிக்கவில்லை.

சிரியா அகதிகளை / முஸ்லிம்களை பெரும் எண்ணிக்கையில் குடியேற்றியது, கார்பன் வரி, கஞ்சாவை அனுமதித்தமை, வெளியுறவு கொள்கை, தன்னை முன்னிலைப் படுத்த்திய ரூடோவின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள், சோசலிச சார்பு போன்றன வெறுக்க வைத்து விட்டன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, நிழலி said:

சிரியா அகதிகளை / முஸ்லிம்களை பெரும் எண்ணிக்கையில் குடியேற்றியது

ஏன் இந்த எரிச்சல்? கனடாவிற்கு அகதியாக வந்து குடியேறிய ஈழத்தமிழர் பற்றிய உங்கள் கருத்து என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இங்கு கொடுக்கப்படும் இவ்வாறான உதவித் திட்டங்களில் அனேகமானவை சோம்பேறித்தனத்தை வளர்ப்பதற்கும் அதனை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதற்குமே உதவி செய்கின்றன.  அங்கவீனமானவர்களுக்கு, உடல் நிலை காரணமாக உழைக்க முடியாதவர்களுக்கு சரியான போசாக்கு கிடைக்காத குழந்தைகளுக்கு உதவி செய்வது வேறு, வருடாந்திரம் குறைவான தொகையை அரசுக்கு காட்டும் கும்பல்களுக்கு உதவி செய்வது வேறு.

ரூடோ போன்ற இடது சாரிகள் தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலை வழங்குவதற்கு பதிலாக உதவிப்பணத்தை வழங்குவது எந்த பயனையும் கொடுக்காது. பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை குறைக்காமல் அல்லது பெறும் கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்காமல், வருடம் 50000 இற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இலவசமாக கொடுக்க நினைப்பது எல்லாம் உழைப்பவர்களை சுரண்டும் முறைகள் தான், ரூடோவின் காபர்ன் வரி போன்றன மிகப் பெரும் Scams.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டையும் இதனையும் ஒப்பிடமுடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக நான் இடது சாரி மற்றும் சோசலிச அரசியலை அடியோடு வெறுப்பவன் என்பதாலும் முதலாளித்துவ கொள்கைகளில் நாட்டமுள்ளவன் என்பதாலும் லிபரல்களையும், ndp இனரையும் அடியோடு வெறுக்கின்றேன்.

எனக்கும் உங்களது கருத்தில் உடன்பாடுண்டு ஆனால் உண்மையாக மனிதாபிமான உதவிகளை சிலர் தவறாக பாவிக்கிறார்கள் என்பதற்காக அது தேவைப்படுபவர்களை கைவிடமுடியாதல்லவா? இதுவும் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு சுற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படை தான். இதில் நாம் கோபப்படுகின்றோம் ஆனால் இதனால் அதிகம் பயனடையாத இந்நாட்டவரே இச்சட்டங்களை இயற்றுகின்றனர். தொடர்ந்து ஊக்குவிக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பணக்கரவர்க்கம் மிடில் கிளாஸ் குடிகளின் இரத்தத்தை குழல் வைத்து 
உறிஞ்சு குடித்த்துக்கொண்டே இருக்கும் 
இவர்களின் கட்டுப்பாட்டில்  வங்கி  அரசியல்வாதிகள் மீடியா இருக்கும்.

மீடியா மூலம் குழப்பவாதங்களை பரப்பி கொண்டே இருப்பார்கள் 
அரசியல்வாதிகள் மூலம் தமக்கு சாதகமானவற்றை அமுலாக்குவார்கள் 
வங்கிகள் மூலம் நாட்டு வருமானத்தை வடித்துக்கொண்டு இருப்பார்கள் 

இன்றைய நிலையில் நிழலி வர்கள் பிரதமர் ஆனாலும் கீழே இருக்கும் படத்தில் 
பெரிதக மாற்றம் செய்ய முடியாது. மேலைநாடுகளில் வெள்ளை இனத்தவரில் 
(டிஸ்அபிலிட்டி) வலதுகுறைந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது 
இவர்களை பராமரிக்க எல்லா அரசுகளுக்கும் பாரிய செலவு ஆகிறது அதுபோல வயதானவர்களின் 
எண்ணிக்கையும் கூடிக்கொண்டு இருக்கிறது ........ பணக்கார வர்க்கம் இவர்களை வைத்து எப்படி 
வியாபாரம் செய்வது என்று யோசித்து பல வியாபாரங்களை இவர்கள் மூலம் செய்கிறார்கள் 
அதன்மூலம் அரசு பணத்தின் ஒரு பகுதியை தமதாக்கி கொள்கிறார்கள்.
பின்பு பத்திரிகைகள் மூலம் வரிகள் கூடுவதுக்கு சோம்பேறிகள் காரணம் என்று மிடில் கிளாஸை 
கோபம் ஊட்டுவார்கள் கனடா பணக்காரர்களின் வங்கி கணக்கு மட்டும் எப்போதும் கூடிக்கொண்டே 
இருக்கும் ............ அமெரிக்கா கனடாவை பொறுத்தவரை மிடில் கிளாஸ்தான் அரசு சக்கரத்தை சுழற்றுவது.

கட்சி மாறும் 
ஆட்சி மாறும் 
காட்சி மாறும் 
உழைத்து பில் கட்டிக்கொண்டு இருப்பது என்பது ஒருபோதும் மாறாது.   

Image result for canada welfare share on annual budget

  • தொடங்கியவர்

இன்னும் வாக்களிப்பு முடிவடையவில்லை.  பெரும்பான்மை பலம் பெற 170(338இல்) தேவை

ஆனால், வந்த கணிப்பை வைத்து மீண்டும் லிபரல் ஆட்சி, ஆனால் பெரும்பான்மை பலம் இருக்காது. ஜாக்மீத் சிங்கின் என்.டி.பி. உடன் ஆட்சி அமைக்கலாம். 

எனவே, அடுத்த வருடம் மீண்டும் தேர்தல் / வாக்களிப்பு நடக்கலாம் 

கனடாவில் மத்திய அரசு சேர்க்கும் வரியில் ( அம்மா) , தனது வாழ்க்கையில் கடினப்படும் மாகாணங்களுக்கும் (மொத்தம் 10)  பிரதேசங்களுக்கும் ( மொத்தம் 3 ) (பிள்ளைகளுக்கு) பகிர்ந்தளிப்பார்.

இதில் பிரிவினை கோரும் க்யூபேக் பெரிய தொகை பெறும். அவர்கள் வாழ்க்கையினை அனுபவிக்கிறார்கள். 

b1RRQtB.png

graph 1

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் Justin Trudeau

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் Justin Trudeau.💐

உலக மக்களால் விரும்பப்படும் அரசியல் தலைவர் ஒபாமாவைப் போல் நீங்களும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது முறையாக கனடியத் தேர்தலில் வென்று ஆட்சி  அமைக்கவிருக்கின்றார்.
தவறுகளை சீர்செய்து தொடர்ந்தும் கனடிய மக்களுக்கு நல்லாட்சியை
வழங்க வாழ்த்துக்கள்
ஹரி அவர்களும் மிகப்பெரும்பான்மையுடன் வென்றிருக்கின்றார்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

கனடாவில் 2ஆவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

 Oct 22, 2019 0 180
157172822585901.jpg

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றிப்பெற்றிருக்கிறது.

பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ மைனாரிட்டி ஆட்சியை அமைக்கவிருக்கிறார். உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார்.

இருப்பினும், ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்து வரும், வலதுசாரி சிந்தனையுடைய பழமைவாத கட்சிக்கு, முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன.

மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களை பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவைப்படுவதை விட 14 இடங்கள் குறைவாகவே, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிடைத்துள்ளது.

கனடாவின் எதிர்க்கட்சியான பழமைவாத கட்சி 122 இடங்களை தனதாக்கியுள்ளது. கடந்த முறை, 95 இடங்களை வென்ற நிலையில் இம்முறை, கூடுதலாக 27 இடங்களை வென்றுள்ளது. பெரும்பான்மை பலம் இல்லாததால், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மைனாரிட்டி ஆட்சியமைக்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங்((Jagmeet Singh)) தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதால், கிங் மேக்கராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.polimernews.com/dnews/85901/கனடாவில்-2ஆவது-முறையாகபிரதமராகிறார்-ஜஸ்டின்ட்ரூடோ

  • தொடங்கியவர்
27 minutes ago, ampanai said:

இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங்((Jagmeet Singh)) தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதால், கிங் மேக்கராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். 
இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், 

குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.   

  • தொடங்கியவர்

பிரெக்சிட் போன்று சில நாடுகள் ஐரோப்பாவில் பிரிய எண்ணும்பொழுது, கனடாவிலும் இவ்வாறான ஒரு பிரிவு மீண்டும் தலைதூக்கியுள்ளது. 

ஏற்கனவே, கனடாவின் மாகாணமான கியூபெக் பிரிய நீண்டகாலமாக முனைந்து வருகின்றது. 

நேற்றைய தேர்தல் முடிவுகளில், வென்ற கட்சியான லிபரல் இரண்டு மேற்கு மாநிலங்களில் எந்த ஒரு வெற்றியையும் பெறவில்லை. அதனால், அந்த மாகாண மக்களின் விருப்புக்களை இந்த அரசால் பூர்த்தி செய்ய முடியுமா?, என்ற கேள்வி உள்ளது.  

https://www.vicnews.com/news/wexit-trending-after-election-in-support-of-western-canada-separation/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.