Jump to content

பிரஜாவுரிமையை கைவிடுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார்- தூதரகம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரஜாவுரிமையை கைவிடுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார்- தூதரகம்

பிரஜாவுரிமையை கைவிடும் சான்றிதழை பெற்றுக்கொண்ட பின்னரே ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டவர் என கருதப்படுவார் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

குறி;ப்பிட்ட சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

பட்டியலில் அவரது பெயர் வெளியாவது வேறு விடயம் எனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நன்சி வன்கொம் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜாவுரிமைய துறந்தவர்கள் குறித்த பட்டியலில் ஏன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவின் பெயர் இடம்பெறவில்லை என்ற கரிசனை காணப்படுவது குறித்த கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சட்டங்களின் அடிப்படையில் தனிநபர் குறித்து கருத்துதெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் ஒருவரின் பிரஜாவுரிமையை கைவிடுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் குறித்த விபரங்களை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இணையத்தில் பார்வையிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

குடியுரிமையை கைவிடும் நடவடிக்கைகளை அமெரிக்க தூதரகமே கையாள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

us_embssy_no_12.jpg

அந்த நபரின் பெயர்  பட்டியலில் வெளியாவது  வேறு விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரஜாவுரிமையைகைவிடுவது தொடர்பான ஆவணங்கள் தூதரகத்திற்கு சமர்ப்பிக்கப்படும், பின்னர் அந்த ஆவணங்கள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பபடும் என தூதரக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் குறிப்பிட்ட நபரிற்கு குடியுரிமையை கைவிடுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்  கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/68936

Link to comment
Share on other sites

அப்போ கோதாவுக்கு நீங்கள் சான்றிதழ் கொடுத்திருக்கீறிர்களா இல்லையா? அதை சொல்லுங்கள். அலி sabri ஏதோ ஒரு லெட்டர் வைத்துக்கொண்டு  மக்களை ஏமாத்துறான்.

Link to comment
Share on other sites

1 hour ago, Vankalayan said:

அப்போ கோதாவுக்கு நீங்கள் சான்றிதழ் கொடுத்திருக்கீறிர்களா இல்லையா? அதை சொல்லுங்கள். அலி sabri ஏதோ ஒரு லெட்டர் வைத்துக்கொண்டு  மக்களை ஏமாத்துறான்.

அமெரிக்க தூதுவர்கள் சொல்லமாட்டாங்கள்! என்னெண்டால் அவர்கள் கோத்தபய்யாவுக்கு பயங்கர ஆதரவாம் 😂

Link to comment
Share on other sites

அமெரிக்கா காரன் ஒரு நாளும்  கோத்தாவின் குடியுரிமையை நீக்க  மாடடான்। அதே நேரம் நீக்கவில்லை என்றோ நீக்கிவிட்டொம் என்றோ சொல்ல மாடடான்। இனிமேல் இலங்கையில் யார் வந்தாலும் அமெரிக்காவின் ஆட்சிதான் நடக்கும்। யு என் பீ இல் உள்ளவர்கள் எல்லாம் அநேகமாக அமெரிக்கா சார்புடையவர்கள்। கோத்தாவின் துரும்பு இப்போது அமெரிக்காவின் கையில்। அமெரிக்கன் ஒன்றும் அறியாதவர்கள் அல்ல। கோத்தாவால் இனிமேல் சீன சார்பு தீர்மானகளை எடுக்க முடியாது। முடிவாக இது ஒரு அமெரிக்கா சார்பு அரசு அமைவதட்கான தேர்தல்। 

Link to comment
Share on other sites

போர்க்குற்றவாளியும், மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதியுமான கோட்டாபய ராஜபக்ச இன்னமும் அமெரிக்க குடியுரிமையைக் கைவிடவில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளதாக ஒரு வீடியோ எனக்கு கிடைத்துள்ளது.  

குடியுரிமையைக் கைவிடும் செயற்பாடு நிறைவுபெற 1 வருடம் எடுக்குமெனவும் இன்னமும் அது முடியவில்லை எனவும் போலியான ஆதாரங்களை சமர்ப்பித்தால் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அந்த வீடியோ நீள்கிறது!

ஆனால், அதன் நம்பகத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

வீடியோவில் அமெரிக்க அதிகாரி கதைக்கும் விதத்தைப் பார்க்கும் போது பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.

Link to comment
Share on other sites

1 hour ago, போல் said:

கோத்தா அமெரிக்க குடியுரிமையை துறந்து விட்டு துறக்காத மாதிரியும் நடிக்கலாம். அல்லது உண்மையாகவே இன்னும் அதற்கு காலம் தேவைப்படலாம்.

ஆனால் நீங்கள் பார்த்த வீடியோ போலி.

EJay0gkUEAAVOo1?format=jpg&name=large

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.