Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலை புறக்கணிக்க மறுத்த யாழ் மக்கள்! த.தே.ம.முன்னணியின் பதில் என்ன?

Featured Replies

சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை இம்முறை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தார்கள்.

ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததைவிட 0.22 வீதம் அதிகமாக இம்முறைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள்.

கடந்த(2015) தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 66.28 வீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள்.

ஆனால், தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சாரம் த.தே.மக்கள் முன்னணியினரால் பலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இம்முறை 66.5 வீதம் மக்கள் யாழ் மாவட்டத்தில் வாக்களித்துள்ளார்கள்.

த.தே.ம.முன்னணியினரின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை யாழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுகின்றார்கள் யாழ் ஊடகவியலாளர்கள்.

யாழில் சூடுபிடித்த வாக்கு பதிவு! தமிழ் மக்களின் மனங்கள் என்ன சொல்கின்றது...?

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் இன்றைய தினம் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற்று முடிந்துள்ளது.

இந்த தேர்தலில் குறிப்பாக தமிழ் மக்கள் அதிகளவானோர் வாக்களித்துள்ளனர் என இதுவரையில் கிடைத்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அவற்றை எண்ணும் பணிகளும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் யாழில் இருந்து மக்களின் மனங்கள் என்ன சொல்கின்றது? குறிப்பாக இந்த தேர்தலில் கடந்த ஜனாதிபதி தேர்தலை விட வாக்கு வீதங்கள் அதிகரித்துள்ளதாகவும் தமிழ் பேசும் மக்கள் வாக்களித்து அசத்தியுள்ளனர் என இதுவரை கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் யாழில் இருந்து தேர்தல் தொடர்பில் மக்களின் கருத்துக்கள் காணொளி வடிவில்

https://www.ibctamil.com/srilanka/80/131356

 

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கூட்டமைப்பின்ர சொல்லுக்கும் போடேல, முன்னணியின் சொல்லையும் கேக்கேல. தங்களுக்குள் பேசி பேசியே அன்னப்பட்சிக்கு வாக்களித்துள்ளார்கள்.
நாளை தெரிய வரும் தானே!

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் மூன்று தலைமுறைகளாக நிராகரிக்கப்பட்ட குடும்ப அரசியலை செய்து வருபவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இவருடைய முக்கியமான பிரச்சினை தன்னை போன்ற இன்னும் ஒரு கொழும்பு சட்டத்தரணியான சுமேந்திரன் மீதான பொறாமை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இங்கிலாந்தில் சட்டம் படித்தவர். சுமேந்திரன் கொழும்பில் படித்தவர். சட்டத்துறையிலும், அரசியலிலும் சுமேந்தரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை ஓரம் கட்டிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மக்கள் கூட்டமைப்பின்ர சொல்லுக்கும் போடேல, முன்னணியின் சொல்லையும் கேக்கேல. தங்களுக்குள் பேசி பேசியே அன்னப்பட்சிக்கு வாக்களித்துள்ளார்கள்.
நாளை தெரிய வரும் தானே!

இது தான் உண்மை.மக்கள் தமிழ் அரசியல் வாதிகளை னுறக்கனிக்க தொடங்கி வெகு நாளாச்சு.மற்றும்பn வெற்றி தோல்வி வேறு விடையம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கட்சி உரிமை தமிழ் வடக்குக் கிழக்கு இணைப்பு போர்க்குற்றம் எனச் சொல்லி அரசியல் செய்வதைவிட அரசாங்கத்துடன் சேர்ந்து ஏதாவது பதவியப்பெற்று காசு சம்பாதிக்கலாம். அல்லது இருக்கிற காசு போதும் என நினைத்து சேர் பொன் அருனாசலம் அவர்களது மைத்துணர் வீடு (இது முன்பு இப்போ கஜேந்திரகுமார் விலைக்கு வாங்கிவிட்டினம்ந நினைக்கிறன்)  குயீன் வீதி வீட்டில் காலுக்கு மேல் காலைப்போட்டுக்கொண்டு ஜாலியாய் வாழ்நாளைப்போக்கலாம்.

குதிரைக்கஜன் அரசாங்கத்தில ஆரையாவது பிடித்து மத்திய வங்கியில் வேலை வாங்கி, இனிவரும் காலத்தைக் கொழும்பில கழிக்கலாம்.

புலம்பெயர் தமிழர்களே முக்கினது போதும் அவையவை சோலிகளைப்பாருங்கோ. தாயகத் தமிழர்களுக்கு எங்களைவிட நிறையவே அரசியல் தெரியும். 

விருப்பமெண்டால் கார்த்திகை மாதத்தில் வரும் மாவீரர்தினம் திலீபன் நினைவுதினம் அன்னைபூபதி தினம் இவைகளை எதுவித எதிர்பார்ப்பும் இல்லாது கொண்டாடிவிட்டு உங்கட கடமை முடிந்தது என அடுத்த அலுவலைப்பார்க்கவும்.

அப்படியிருந்தாலும் புலம்பெயர் தேசங்களில் நாம் சும்மா எல்லாம் விட முடியாது எனக்கூறி சிலர் கிச்சுக் கிச்சு மூட்டுவினம் நல்லா பகிடி விடுகினம் எனச்சொல்லிவிட்டு விலத்திப்போயிடுங்கோ.

10 hours ago, Elugnajiru said:

குதிரைக்கஜன் அரசாங்கத்தில ஆரையாவது பிடித்து மத்திய வங்கியில் வேலை வாங்கி, இனிவரும் காலத்தைக் கொழும்பில கழிக்கலாம்.

குதிரைக் கஜனை நம்ம்பிபி யார் பொறுப்பான வேலை குடுக்கப் போகீனம்?  

குவீன்ஸ் ரோட்டுல கஜேந்திரகுமாரின் தெருப் பிள்ளையாருக்கு பூசை செய்ற வேலை குடுக்கலாம்!

  • தொடங்கியவர்

கஜேந்திரகுமார் இலண்டன் போய்த்தான் தங்களின் தேர்தல் புறக்கணிப்பு வெற்றிகள் பற்றிய அடுத்த அறிவிப்பை விடுவார் போல இருக்கிறது.

மொத்த வாக்காளர்கள்: 2,629,080
 
யாழ்ப்பாணம் – 475,176
கிளிநொச்சி – 89,538
மன்னார் – 89,403
வவுனியா – 117,333
முல்லைத்தீவு – 75,383
திருகோணமலை – 281,114
மட்டக்களப்பு – 398,301
அம்பாறை – 503,790
புத்தளம் - 599,042
 

புறக்கணித்த மொத்த வாக்காளர்கள்: 649,004
 
யாழ்ப்பாணம் – 161,560
கிளிநொச்சி – 24,175
மன்னார் – 25,927
வவுனியா – 29,333
முல்லைத்தீவு – 18,092
திருகோணமலை – 47,789
மட்டக்களப்பு – 91,609
அம்பாறை – 100,758
புத்தளம் - 149,761
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:
மொத்த வாக்காளர்கள்: 2,629,080
 
யாழ்ப்பாணம் – 475,176
கிளிநொச்சி – 89,538
மன்னார் – 89,403
வவுனியா – 117,333
முல்லைத்தீவு – 75,383
திருகோணமலை – 281,114
மட்டக்களப்பு – 398,301
அம்பாறை – 503,790
புத்தளம் - 599,042
 

புறக்கணித்த மொத்த வாக்காளர்கள்: 649,004
 
யாழ்ப்பாணம் – 161,560
கிளிநொச்சி – 24,175
மன்னார் – 25,927
வவுனியா – 29,333
முல்லைத்தீவு – 18,092
திருகோணமலை – 47,789
மட்டக்களப்பு – 91,609
அம்பாறை – 100,758
புத்தளம் - 149,761

ஐயா வோட்டுப் போடாதவர் எல்லாம் புறக்கணித்தவர் இல்லை ஐயா.

ஒரு போதும் 100% வாக்கு பதிவாவதில்லை. மிஞ்சி போனால் 85%. 

இதில் வெளிநாட்டில் வாழும் இரட்டை குடியுரிமையாளர், மத்திய கிழக்கில் வேலை செய்பவர், பிற மாவடங்களில் வேலை செய்வோர், சோம்பேறிகள், தேர்தல் அன்று கடும் வயிற்றுப் போக்கால் பாதிப்படைந்தோர் என பலரும் அடங்குவர்.

 

On 11/17/2019 at 12:29 PM, Rajesh said:

குதிரைக் கஜனை நம்ம்பிபி யார் பொறுப்பான வேலை குடுக்கப் போகீனம்?  

குவீன்ஸ் ரோட்டுல கஜேந்திரகுமாரின் தெருப் பிள்ளையாருக்கு பூசை செய்ற வேலை குடுக்கலாம்!

கஜேந்திரன் குவீன்ஸ் ரோட்டுல கால்வைக்கவே கஜேந்திரகுமார் விடமாட்டார். 🤣😂🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.