Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சன் ராமநாயக்க கைது

Featured Replies

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ranjan.jpg

சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/72515

ரஞ்சன் வீட்டில் பொலிஸார் சோதனை

 

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை செய்துவருகிறார்கள்.

தனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியோடு பொலிஸார் தனது வீட்டுக்கு வந்திருப்பதாக டுவிட் செய்துள்ள முன்னாள் பிரதி அமைச்சர், தான் எந்தவொருக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

எனினும் தான் கைது செய்யப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லாது,  சிறைக்கு செல்வேனெனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தனது வீட்டில் இருப்பதாகவே சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரஞசன-வடடல-பலஸர-சதன/150-243469

  • தொடங்கியவர்

கைதுகள் பலவிதம் இது புதுவிதம் 🙂 

 

https://www.facebook.com/real.rr/videos/818805718545852/

  • கருத்துக்கள உறவுகள்

விஜய கலா ஆன்ரிக்கு உள்ளூர நல்ல கப்பியா இருக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஒரு நல்ல நடிகர் என்று நிரூபித்து இருக்கிறார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

கைதுகள் பலவிதம் இது புதுவிதம் 🙂 

 

https://www.facebook.com/real.rr/videos/818805718545852/

என்ன இந்தாள் ஏதோ வெளிநாடு பயணம் போறமாதிரி இருக்கு.

யோவ் யெயிலுக்கு கொண்டு போறாங்கையா.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல சிங்கள நடிகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி-யுமான ரஞ்ஜன் ராமநாயக்க கைது - யார் இவர்?

ரஞ்ஜன் ராமநாயக்கபடத்தின் காப்புரிமைRANJAN RAMANAYAKE / FACEBOOK Image captionரஞ்ஜன் ராமநாயக்க

இலங்கையின் பிரபல சிங்கள நடிகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்பிற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்காத குற்றச்சாட்டின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த துப்பாக்கிக்கான அனுமதிப் பத்திரம் 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் புதுப்பிக்கப்படாமை மற்றும் துப்பாக்கி ரவைகள் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆசு மாரசிங்க தெரிவிக்கின்றார்.

கைது செய்யப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவின் வீட்டிலிருந்து பெருந்தொகையான இருவெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் வீடு நேற்று மாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ரஞ்ஜன் ராமநாயக்கபடத்தின் காப்புரிமைRANJAN RAMANAYAKE / FACEBOOK

வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.

வீட்டை சோதனை செய்வதற்காக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவில், சோதனை செய்வதற்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்திருந்தார்.

Presentational grey line Presentational grey line

'நான் எந்தவித தவறையும் செய்யவில்லை. எனினும், ஏதேனும் சந்தர்ப்பத்தில் நான் கைது செய்யப்படும் பட்சத்தில் சிறைச்சாலைக்கு செல்வேனே தவிர, வைத்தியசாலைக்கு செல்ல மாட்டேன். நான் சிறந்த உடல் அரோக்கியத்துடன் உள்ளேன். உண்மையைப் பேசியமைக்கான எந்தவொரு எதிரொலிகளையும் சந்திக்கத் தயார்," என ரஞ்ஜன் ராமநாயக்க தனது ட்விட்டர் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.

'எமது தனிப்பட்ட கணினி, எனது வீட்டில் இருந்த சீ.டி. மற்றும் டீ.வி.டி ஆகியவற்றை அவர்களின் பொறுப்புக்கு எடுத்துள்ளனர். வசிம் தாஜுடீனின் கொலை தொடர்பில் என்னிடமிருந்த ஆவணங்களையும் அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்"" எனவும் ரஞ்ஜன் ராமநாயக்க ட்விட்டர் ஊடாக அறிவித்துள்ளார்.

ரஞ்ஜன் ராமநாயக்கபடத்தின் காப்புரிமைTWITTER / RANJAN RAMANAYAKE

இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக, நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்களான பட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் ராஜித்த சேனாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் பின்னர் பிணையில் செல்ல நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தை ரஞ்ஜன் ராமநாயக்க தொடர்ச்சியாக விமர்சித்திருந்தார்.

குறித்த அரசாங்கம் தொடர்பில் நிதி மோசடியை விசாரணை செய்யும் பொலிஸாரிடம் ரஞ்ஜன் ராமநாயக்க பல்வேறு சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/sri-lanka-50997005

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ் DVD க்களை வைத்திருந்தமை உள்ளிட்ட ரஞ்சன் மீது 4 குற்றச்சாட்டுக்கள்

81979728_599228730832658_5318002968031657984_o.jpg

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
1, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய, 
 
2, சட்டவிரோத துப்பாக்கியை கைவசம் வைத்திருத்தல், 
 
3, மில்லி மீற்றர் 9 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 100க்கும் அதிகமான தோட்டாக்களை சட்டவிரோதமாக வைத்திருத்தல், 
 
4, ஆபாச காணொளிகள் அடங்கிய டீ.வி.டிக்களை வைத்திருத்தல் 
 
போன்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இன்று- 04- மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் மேற்கொள்ளபபட்ட தேடுதலின் போதே இந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
 
ஹிரு தொலைக்காட்சி
  • தொடங்கியவர்

பிணையில் விடுதலையானார் ரஞ்சன் ராமநாயக்க ; வெளிநாடு செல்லத்தடை !

கைதான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

20200105_175705.jpg

பொலிஸாரினால் நேற்றையதினம் கைதுசெய்ப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்றையதினம் நுகோகொடை நீதிமன்றில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

20200105_175838.jpg

சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த நேற்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/72558

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, colomban said:

ஆபாச காணொளிகள் அடங்கிய டீ.வி.டிக்களை வைத்திருத்தல் 

 வீட்டிலை வைச்சிருந்தாலும் குற்றமா ஐயா? 😂

Bildergebnis für ஆபாச காணொளிகள்"

9 hours ago, குமாரசாமி said:

 வீட்டிலை வைச்சிருந்தாலும் குற்றமா ஐயா? 😂

Bildergebnis für ஆபாச காணொளிகள்"

இவர் வைத்திருந்த ஆபாச காணொளியில் சனத் ஜெயசூரியாவினுடைய காணொளியும் இருந்ததாக ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இதைகேள்விபட்டவுடன் ஒரு முக்கியமான பிரபலமான டிவி நடத்துபவர் அதிர்ச்சியடைந்துவிடடார். இந்த டிவி தான் ரஞ்சனுக்கு எதிராக பரப்புரை செய்து வந்தது. உங்களில் எத்தனைபேருக்கு ஏன் என்று  விளங்குதோ தெரியவில்லை.

  • தொடங்கியவர்

ரஞ்சன் ராமநாயக்க - ஷானி  அபேசேகரவின் குரல் பதிவுகள் தொடர்பில் நடுநிலையான விசாரண‍ை அவசியம் - ரோஹித 

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பானர் ஷானி அபேசேகரவும் உரையாடியதாக குறிப்பிடப்படும் குரல் பதிவுகள் தொடர்பில்  பதில் பொலிஸ்மா அதிபர் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என  சக்திவலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்ட போது பொலிஸார் செயற்பட்ட விதமும் கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தையும், நேற்று நீதிவான் நீதிமன்றிற்கு சமர்ப்பித்த பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் நேற்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதவான் நீதிமன்றம்  பிணை வழங்கியதை தொடர்ந்து  சமூக  வலைத்தளங்களில் பல விடயங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.   

குறிப்பாக ஷானி அபேசேகரவும், ரஞ்சன் ராமநாயக்கவும் உரையாடிய   குரல் பதிவுகள் பல வெளியாகியுள்ளன. மரண தண்டனை  கைதியான துமிந்த சில்வாவை சிறைக்கு அனுப்பும் நோக்கம் தொடர்பில்     இருவரும் அதிகாரததில் இருந்த வண்ணம் உரையாடியுள்ளார்கள். 

இவ்விடயம் தொடர்பில் உரிய  விசாரணைகளை மேற்கொள்வதை விடுத்து பொலிஸார்  சொற்ப விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது.   

அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க   நீதிபதிகளுடன்  தொலைபேசியில் தொடர்புக் கொண்டு உரையாடிய குரல் பதிவுகளையும் தொடர்ந்து ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவேன் என்றும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/72641

  • தொடங்கியவர்
1 hour ago, Vankalayan said:

இவர் வைத்திருந்த ஆபாச காணொளியில் சனத் ஜெயசூரியாவினுடைய காணொளியும் இருந்ததாக ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இதைகேள்விபட்டவுடன் ஒரு முக்கியமான பிரபலமான டிவி நடத்துபவர் அதிர்ச்சியடைந்துவிடடார். இந்த டிவி தான் ரஞ்சனுக்கு எதிராக பரப்புரை செய்து வந்தது. உங்களில் எத்தனைபேருக்கு ஏன் என்று  விளங்குதோ தெரியவில்லை.

முன்பு ஒரு செய்து வந்திருந்தது - அதாவது கூகிளின் பாலியல் பற்றிய தேடலில் இலங்கை முதல் இடத்தில் இருப்பதாக. எனவே, அந்த தேடலில் விளைவுகள் என ஏதாவது இருந்தாகத்தானே வேண்டும்? 

அத்துடன், அடிக்கடி காணும் இன்னொரு செய்தி : ' விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டது' ; ' முகநூலுடனான 'பார்ட்டி' , ஐஸ் போதைப்பொருள் .. ' என. எனவே இவற்றால் சாதாரண மக்கள் மட்டுமல்ல பிரபலங்களும் மாட்டுப்படலாம். ஆனால், அவர்கள் பொதுவாக தண்டிக்கப்பட மாட்டார்கள்.

இங்கே, அரசியல் பழிவாங்கலே. ஆனால் கிணறு வெட்ட வெளிக்கிட்டு புதையல் எடுத்த கதையா?  இல்லை பூதம் வந்த கதையா? 

On 1/5/2020 at 9:44 AM, ஏராளன் said:

வசிம் தாஜுடீனின் கொலை தொடர்பில் என்னிடமிருந்த ஆவணங்களையும் அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்

அது தான் முக்கிய கரணம்!

ராஜபக்ச குடும்பம் செய்த அட்டூழியங்களை அறிந்தவர்கள் கைது செய்யப்படுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Vankalayan said:

இவர் வைத்திருந்த ஆபாச காணொளியில் சனத் ஜெயசூரியாவினுடைய காணொளியும் இருந்ததாக ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இதைகேள்விபட்டவுடன் ஒரு முக்கியமான பிரபலமான டிவி நடத்துபவர் அதிர்ச்சியடைந்துவிடடார். இந்த டிவி தான் ரஞ்சனுக்கு எதிராக பரப்புரை செய்து வந்தது. உங்களில் எத்தனைபேருக்கு ஏன் என்று  விளங்குதோ தெரியவில்லை.

சனத்தின் காணொளியால் அவருக்கு ஏன் அதிர்ச்சி?...அவர்[சனத்] பொம்பிளை விசயத்தில்  எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும் 😊

7 hours ago, ampanai said:

முன்பு ஒரு செய்து வந்திருந்தது - அதாவது கூகிளின் பாலியல் பற்றிய தேடலில் இலங்கை முதல் இடத்தில் இருப்பதாக. எனவே, அந்த தேடலில் விளைவுகள் என ஏதாவது இருந்தாகத்தானே வேண்டும்? 

அத்துடன், அடிக்கடி காணும் இன்னொரு செய்தி : ' விபச்சார விடுதி சுற்றி வளைக்கப்பட்டது' ; ' முகநூலுடனான 'பார்ட்டி' , ஐஸ் போதைப்பொருள் .. ' என. எனவே இவற்றால் சாதாரண மக்கள் மட்டுமல்ல பிரபலங்களும் மாட்டுப்படலாம். ஆனால், அவர்கள் பொதுவாக தண்டிக்கப்பட மாட்டார்கள்.

இங்கே, அரசியல் பழிவாங்கலே. ஆனால் கிணறு வெட்ட வெளிக்கிட்டு புதையல் எடுத்த கதையா?  இல்லை பூதம் வந்த கதையா? 

இது எப்ப?...பாலியல் பற்றிய தேடலில் இந்தியா தான் முன்னுக்கு நிற்குது 
 

  • தொடங்கியவர்
2 minutes ago, ரதி said:

இது எப்ப?...பாலியல் பற்றிய தேடலில் இந்தியா தான் முன்னுக்கு நிற்குது 

https://www.emirates247.com/news/sri-lanka/sri-lanka-is-no-1-nation-in-sex-searches-on-google-india-s-bangalore-tops-among-cities-2012-12-27-1.488799

Not many will doubt that one of the most sought after keyword on Internet is “sex”. And Sri Lankans, it seems, are the most search savvy when it comes to Googling that term.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

https://www.emirates247.com/news/sri-lanka/sri-lanka-is-no-1-nation-in-sex-searches-on-google-india-s-bangalore-tops-among-cities-2012-12-27-1.488799

Not many will doubt that one of the most sought after keyword on Internet is “sex”. And Sri Lankans, it seems, are the most search savvy when it comes to Googling that term.

நம்ப முடியவில்லை ...இணைப்பிற்கு நன்றி 
 

7 hours ago, ரதி said:

சனத்தின் காணொளியால் அவருக்கு ஏன் அதிர்ச்சி?...அவர்[சனத்] பொம்பிளை விசயத்தில்  எப்படிப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும் 😊

இது எப்ப?...பாலியல் பற்றிய தேடலில் இந்தியா தான் முன்னுக்கு நிற்குது 
 

சனத்தைப்பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்போல இருக்குது. நீங்கள் சொன்னது சரி. இருந்தாலும் அந்த டிவி சொந்தக்காரர் ஏன் அதிர்ச்சியடையவேண்டும். இந்த இடத்தில எழுதுவது சரியாக இருக்காதென்பதால் அதை தவிர்த்திருக்கிறேன். அங்கு சனத்தினதும் பாலியல் சம்பந்தமான வீடியோ பிடிபட்டுள்ளது. அதில் உள்ள பெண்---------

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

இங்கே, அரசியல் பழிவாங்கலே. ஆனால் கிணறு வெட்ட வெளிக்கிட்டு புதையல் எடுத்த கதையா?  இல்லை பூதம் வந்த கதையா? 

எனக்கென்னவோ.... கிணறு வெட்ட, பூதம்  வந்த கதை மாதிரிதான் தெரியும்.
ரஞ்சன் ராமநாயக்காவின்  கைதின் பின்.... அவரின் வாக்கு வாங்கி அதிகரித்துள்ளதாகவும்,
தம்மையும் கைது செய்யும் படி, சில அரசியல்வாதிகள்  விரும்புகின்றார்களாம்.

3 hours ago, தமிழ் சிறி said:

எனக்கென்னவோ.... கிணறு வெட்ட, பூதம்  வந்த கதை மாதிரிதான் தெரியும்.
ரஞ்சன் ராமநாயக்காவின்  கைதின் பின்.... அவரின் வாக்கு வாங்கி அதிகரித்துள்ளதாகவும்,
தம்மையும் கைது செய்யும் படி, சில அரசியல்வாதிகள்  விரும்புகின்றார்களாம்.

இப்போ பெரிய பூதம் வெளிக்கிட்டிருக்கு. இவர் பொலிஸ் அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகளுடன் பேசிய பேச்சுக்கள் எல்லாம் ஒலி வடிவில் வந்துகொண்டிருக்கிறது. அவனை உள்ளே தள்ளு, இவனுக்கு மரண தண்டனை கொடு எண்டு பேசியது எல்லாம் வெளி வந்து கொண்டிருக்கிறது. அதாவது இவருடன் தொடர்பு வைத்தவர்கள் எல்லோரையும் கட்டிக்கொடுத்துவிடடார். இப்படியாக முக்கியமான சிடிக்களை கவனயீனமாக வைத்திருந்தது இவருடைய அறிவீனத்தை காட்டுகிறது. இந்த செய்திகள் இங்கு இப்போது பூதகரமாகிக்கொண்டிருக்கிறது. இவர் மீண்டும் கைது செய்யப்படடால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விஜயகலா ஆன்ரி இந்தக் கைது குறித்து.. மூச். ஆனால் ஆன்ரியை உள்ளதள்ள இவர் பட்ட பாடு...??! 

  • தொடங்கியவர்

முன்னாள் நீதிபதிக்கு எதிராக முறைப்பாடு

படுகொலை செய்வதற்கு ஊக்கமளித்தல் மற்றும் கொலை சம்பவங்களுக்காக நீதி அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்தியதாக தெரிவித்து முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்கவுக்கு எதிராக நீதித்துறைச் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களை அடிப்படையாக கொண்டு, சிங்களே அமைப்பினால் மேற்படி முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.

குறித்த முறைப்பாட்டில் 8 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/tamil/231773/முன்னாள்-நீதிபதிக்கு-எதிராக-முறைப்பாடு

  • தொடங்கியவர்

அழுத்தங்கள் ஊடாக வழங்கப்பட்ட தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது அரசியல் அழுத்தங்கள் ஊடாக வழங்கப்பட்டவை என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் கிடைத்த குரல்பதிவுகளில் இருந்து உறுதியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அரசியல் வாதிகளுக்கு மாத்திரம் இன்றி நீதித்துறையினர், காவற்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையானது அவரிடம் இருந்த துப்பாக்கி தொடர்பானதல்ல. 

பல்வேறு முக்கியமான குரல் பதிவுகளை பெற்றுக்கொள்வதற்காகவே.

அவ்வாறான குரல் பதிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அந்த குரல் பதிவுகள் தொடர்பில் காவற்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்டோரின் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே இந்த நாட்டின் நீதித்துறை கடந்த கால செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இதன்மூலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்;ட தீர்ப்பானது அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டவை என உறுதியாவதாக அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/231746/அழுத்தங்கள்-ஊடாக-வழங்கப்பட்ட-தீர்ப்பு

  • தொடங்கியவர்

ஷானி அபேசேகர உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம்!

சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் காலி பிரதி பொலிஸ்மாதிபரின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றும்  ஷானி அபேசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய உரையாடல் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

shani.jpg

https://www.virakesari.lk/article/72741

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/6/2020 at 10:52 AM, Vankalayan said:

இவர் வைத்திருந்த ஆபாச காணொளியில் சனத் ஜெயசூரியாவினுடைய காணொளியும் இருந்ததாக ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார். இதைகேள்விபட்டவுடன் ஒரு முக்கியமான பிரபலமான டிவி நடத்துபவர் அதிர்ச்சியடைந்துவிடடார். இந்த டிவி தான் ரஞ்சனுக்கு எதிராக பரப்புரை செய்து வந்தது. உங்களில் எத்தனைபேருக்கு ஏன் என்று  விளங்குதோ தெரியவில்லை.

 எனக்கு ஏன் என்று விளங்கவில்லை. கொஞ்சம் விளங்கப்படுத்தி சொல்லமுடியுமா?

  • தொடங்கியவர்

என்னை கொல்ல ரஞ்சனை ஏவிவிட்டது ரணில் ; சபையில் மஹிந்தானந்த ஆவேசம், மெளனம் காத்தார் சஜித்!

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

என்னை கொலை செய்யுமாறு ரஞ்சன் ராமநாயகவிற்கு  முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆணையிடும் குரல்பதிவு வெளியாகியுள்ளது. என்னை கொலைசெய்யும்படி ரஞ்சன் ராமநாயகவை ஏவிவிட்டது ரணில் விக்கிரமசிங்க என்பது தெளிவாக தெரிகின்றது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சபையில் கூறினார். 

அத்துடன் இது குறித்து பொலிஸில் முறையிடவுள்ளதாகவும் சபாநாயகர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இது குறித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என சபையில் தெரிவித்தும் எதிர்க்கட்சி தலைவர் மௌனம் காத்தார். 

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினை  முன்வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய நிமல் லான்சா கூறுகையில்:-  பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கு வழங்கப்படும் சட்ட பூர்வமான துப்பாக்கியில் 10 அல்லது  9 தோட்டாக்கள் மட்டுமே கொடுக்க சட்ட அங்கீகாரம் உள்ளது. ஆனால் ரஞ்சன் ராமநாயகவிற்கு மட்டும் 150 தோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு வழங்கப்பட்டது? இது குறித்து தெளிவான விளக்கம் ஒன்று வழங்கப்பட வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் தெளிவான பதில் ஒன்றினை கூற வேண்டும் என்றார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கூறுகையில்:- இந்த செயற்பாடு மிகவும் மோசமானது, ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான் தெளிவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  எனினும் சபையில் இருந்த எதிர்க்கட்சி தலைவர் இது குறித்து எந்தவித கருத்தையும் முன்வைக்காது மௌனமாக இருந்தார். 

https://www.virakesari.lk/article/72744

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.