Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தலைவர்கள் விட்டுக்கொடுத்து செயற்படவேண்டும் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் தலைவர்கள் விட்டுக்கொடுத்து செயற்படவேண்டும் - சுமந்திரன்

சி.வி.விக்கினேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கெ­தி­ராகக் கூறும் மாற்றுத் தலைமை என்னும் கோசம் எம்மை வலு­வி­ழக்கச் செய்யும் சதியே எனத்­தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரான சுமந்­திரன் குறிப்­பிட்­டுள்ளார். காரணம், தமி­ழரின் பிரச்­சி­னை­பற்றி எவ­ரோடு பேசு­வது என அரசு கைவி­ரிக்கும் நிலை வேண்டாம். 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­போடு மட்­டுமே பேச வேண்டும் என்னும் ஆணையை வழங்­குங்கள். எமது அடிப்­படை பிரச்­சி­னை­யான தமிழ் தேசிய பிரச்­சினை என்ன? இந்­நாட்டில் நாம் எத்­த­கைய பிர­ஜை­க­ளாக வாழ்­கிறோம். சம பிர­ஜை­க­ளா­கவா, இரண்டாம் மூன்றாம் தரப் பிர­ஜை­க­ளா­கவா? உரி­மை­க­ளோடு வாழ வேண்­டுமா? அவற்றைக் கேட்கக் கூடாது என்னும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளோமா? இவை தாம் எமது அடிப்­படைப் பிரச்­சி­னைகள் எனவும் அவர் கூறி­யி­ருந்தார்.

அவர்­ மேலும் குறிப்­பி­டு­கையில், முன்பு ஒரு மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கையில் இப்­போது வேறு மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. அதா­வது 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த மாற்­றத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்­தி­ருக்­கி­றது. இதைத் தவிர்க்­கவே நாம் பல முயற்­சி­க­ளையும் எடுத்தோம். நல்­லாட்சி அரசு எம்மை ஏமாற்­றி­யது என்னும் உண்ணம் எமது மக்­க­ளிடம் இருப்­பதில் சில உண்­மைகள் இருக்­கலாம். எனினும் அதில் புதிய யாப்பை உரு­வாக்கப் பாரிய முயற்சி நிக­ழவே செய்­தது. அதற்­கெனப் புதிய யாப்­புக்­கு­ரிய வரைபும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அது முடி­வு­றும் ­தறு­வாயில் இரு பெருங்­கட்­சி­களும் பிரிந்து சாதா­ரண பெரும்­பான்­மையும் கூட கிடைக்­காத நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.

தற்­போது இந்­நாடு பிள­வு­படப் போகி­றது. இஸ்­லா­மிய குடி­ய­ர­சாகப் போகி­றது என்­றெல்லாம் பிர­சாரம் செய்தே பேரி­ன­வாதக் கருத்­துக்­களை முன்­வைத்துப் பெரும்­பான்­மை­யி­னரை அச்­சு­றுத்­தியே தெற்கில் வெற்றி பெற்­றுள்­ளார்கள். இத்­த­கைய சூழலில் நாம் எவ்­வாறு தமி­ழரின் தேசியப் பிரச்­சி­னையைக் கையா­ளு­வது என்னும் சவால் எமக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்­நி­லை­யில்தான் தற்­போது எதிர்க்­கட்­சி­யாக இருக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி வலு­வின்றி திசை தெரி­யாது மறு­தேர்­தலில் 50 ஆச­னங்­க­ளை­யேனும் பெறுமா என சந்­தே­கிக்க வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­யுள்­ளது என்றார்.

sumanthirannn.jpg

தொடர்ந்தும் சுமந்­திரன் எம்.பி. குறிப்­பி­டு­கையில், மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெறு­வார்­களா என்னும் இக்­கட்­டான நிலை­யி­லேயே எதிர்­வரும் பொதுத் தேர்­தலை நாம் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. தெற்கின் அர­சி­யலை முழு­தாக தீர்­மா­னிக்க முடி­யாது. அது எமது கட்­டுப்­பாட்டை மீறிய விட­ய­மாகும். சில விட­யங்­களில் எம்மால் தாக்கம் செலுத்த முடிந்­த­போதும் அதை மீறிய விட­யத்தில் எமது இருப்­பையே சிந்­திக்கும் சூழல் இருக்­கி­றது.

சில முன்­னேற்­றங்­களை நாம் சிறி­தாகக் கண்­ட­போதும் இறு­தியில் எதுவும் நிக­ழ­வில்லை. அதற்­காக நாம் இப்­போது பின்­வாங்கும் சூழல் இருக்­கி­றதா? அவ்­வாறு பெற்ற அடை­வு­களைக் காத்துக்கொண்டே முன்­னே­று­வது எப்­படி என்றும் கடின கேள்­வி­க­ளுக்கு நாம் விடை தேடு­கிறோம். ஒன்று மட்டும் எமக்குத் தெளிவு. பொதுத் தேர்தல் முடி­வுகள் வெளி­யாகும்போது எந்த செய்­தியை ஜனா­தி­பதித் தேர்­தலில் பறை­சாற்­றி­யி­ருந்­தோமோ அதே செய்­தி­யையே முடி­வு­க­ளாக உறு­திப்­ப­டுத்த வேண்டும். ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு கிழக்கு, நுவ­ரெ­லியா, கொழும்பு நகரம், நீர்­கொழும்பு தவிர்ந்த இடங்­களில் கோத்­தபா­யவே பெளத்­தரின் வாக்­கு­களால் வெற்­றி­பெற்­றி­ருந்தார்.

இது அவ­ருக்கு ஒரு இழுக்­கே­யாகும். காரணம், சிறு­பான்­மைகள் நம்­ப­மு­டி­யாத ஒரு தலை­வ­ரா­கவே அவர் இருக்­கிறார். தமி­ழரின் அபி­லா­ஷை­களை சுமந்த கட்சி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பே­யாகும். அதைத் தவிர்த்து வேறு எவ­ரோடும் பேசி முடி­வு­காண முடி­யாது. எம்­மோடு பேச வைப்­பதே எமக்கு முன்­னா­லுள்ள பெரும் சவா­லாகும். காரணம் என்ன தெரி­யுமா? யாருடன் பேசு­வது? எமக்குத் தெரி­யாது உங்­க­ளிடம் ஐந்­தாறு கட்­சிகள் இருக்­கின்­றனவே என அரசு சொல்­லி­விடக் கூடாது.

ஒரே அணி­யாக இது­வரை தமி­ழரின் அர­சியல் அபி­லா­ஷை­களைக் கட்டிக் காத்து வந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மட்­டுமே பல­மான அணி­யாக பாரா­ளு­மன்­றத்தில் இருக்க வேண்டும். காரணம் யாருடன் பேசு­வது என அரசு கைவிரிக்கும் நிலைக்கு நாம் ஆளாகக் கூடாது. மாற்றுத் தலைமை என்னும் கோசம் அவ்­வாறு எம்மை வலு­வி­ழக்கச் செய்யும் ஒரு சதித்­திட்­ட­மே­யாகும். அதற்கு எமது மக்கள் துணை­போ­கக்­கூ­டாது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பல குறை­பா­டுகள் இருக்­கலாம் எனவும் அவர் தனது தற்­போ­தைய அர­சியல் நிலைப்­பாட்டை தெளி­வாக முன்­வைத்­தி­ருந்தார்.

வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றாக ஓர் அணியை உரு­வாக்கியுள்ளார். அர­சி­யலில் 2013 ஆம் ஆண்­டுக்கு முன் ஒதுங்­கி­யி­ருந்த இவரை அப்­போது நிகழ்ந்த வட­மா­காண சபைத் தேர்­தலில் முத­ல­மைச்­ச­ருக்­கான அபேட்­ச­க­ராகத் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் எம்.பியே கொண்டுவந்­தி­ருந்தார். காரணம் இவர் ஓர் உயர் நீதி­ய­ரசர். அர­சியலில் சக்­திக்கும் எதிர்­கால செயற்­பா­டு­க­ளுக்கும் உந்­து­சக்­தி­யாக இருப்பார் என்னும் எண்­ணத்­தி­னா­லே­யாகும். எனினும் சில மாற்று தரப்பு தமிழ்க் கட்­சி­களை விடவும் இவரே உள்­ளி­ருந்து கொண்டே பாரிய சவா­லுக்­குட்­ப­டுத்தி வந்தார்.

அப்­போ­தும்­கூட தமிழர் அர­சியல் ரீதியில் பாரிய பிளவை சந்­திக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக சம்­பந்தன் எம்.பி.எதுவும் பேச­வில்லை. சி.வி.விக்கினேஸ்­வரன் பதவிக் காலம் முழுதும் இருந்­து­விட்டுப் பிற­குதான் கொள்கை பிழை எனக் கூறிக் கொண்டு போட்டித் தலை­மையை உரு­வாக் ­கியிருக்கிறார். இப்­போது இவர் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மா­கவும் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத்­த­லை­வ­ரு­மா­கவும் இருக்­கிறார்.

இவர் வெகு­கா­ல­மா­கவே சம்­பந்தன் எம்.பி.யோடும் சுமந்­திரன் எம்.பி.யோடும் முரண்­பட்டு வந்­தி­ருக்­கிறார். எனினும் வட­மா­கா­ண­ச­பையின் காலம் முடி­யும்­வரை உள்­ளூர புழுங்கிக்கொண்­டி­ருந்­து­விட்டு இப்­போது பகி­ரங்­க­மா­கவே ஒரு மாற்று அணியை உரு­வாக்கியுள்ளார். நாம் 2013 ஆம் ஆண்டின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை ஆத­ரித்தோம். அதை தற்­போ­தைய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை புறக்­க­ணித்­த­தா­லேயே தலை­மையை எதிர்க்கும் நிலை ஏற்­பட்­டது. இது கொள்கை ரீதி­யான எதிர்ப்பு காலக்­கி­ர­மத்தில் வேட்­பாளர் பகிர்வு நிகழும். முயல் வேக­மாக முன்னால் ஓடு­வதால் அதுவே வெல்லும் என்று இல்லை. அது ஓரி­டத்தில் உறங்­கி­விடும். ஆமை அப்­ப­டி­யல்ல நிதா­ன­மா­கவே உரிய இலக்கை அடையும் என சம்­பந்­த­னையும் தன்­னையும் சி.வி.விக்கினேஸ்­வரன் பாலர் பாடப்­படி உவமை காட்­டு­கிறார்.

புலி­களின் போராட்டம் அழிக்­கப்­பட்­டது நல்ல விடயம் என அண்­மையில் சம்­பந்தன் எம்.பி. குறிப்­பிட்­டி­ருந்தார் அல்­லவா? அது இப்­போது வெறும் வாய்க்கு அவல் கிடைத்­தது போல் ஆகி­விட்­டது. புலி­க­ளதோ தமிழ் இளை­ஞர்­க­ளதோ போராட்­டங்கள் தாமாக உரு­வா­க­வில்லை. மத்­திய அரசைக் கவிழ்க்க உரு­வா­க­வு­மில்லை. சிங்­களப் பேரின அர­சுகள் தொட­ராக நீதி­யின்றி தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ராக செயற்­பட்­ட­தாலும் அடக்­கு­மு­றைக்­குட்­ப­டுத்­தி­ய­தா­லுமே புலிகள் உரு­வாகக் கார­ணங்கள் அமைந்­தன.

ஆக புலிகள் தமி­ழரின் உரி­மைக்­காகப் போரா­டினர் என்­பதே உண்­மை­யாகும். புலி­களை அழித்­தது நல்­லது என்போர் 2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும், 2017 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும், 2018 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும் என்­றெல்லாம் கூறி 5 ஆண்­டு­க­ளாக ஏமாற்­றி­யதைத் தவிர அவர்­களால் எதைச் சாதிக்க முடிந்­தது. இத்­த­கையோர் என்­றேனும் ஒருநாள் பாரா­ளு­மன்­றத்தை விட்டும் விரட்­டப்­பட்டால் அதை ஒரு நல்ல விடயம் எனத் தமிழ்ச் சமூகம் நிச்­சயம் கூறும் என எதிர்­பார்க்­கலாம் என சி.வி.விக்கினேஸ்­வரன் தீர்க்­க­மாகக் குறிப்­பி­டு­கிறார். சம்­பந்தன் ஓய்வு பெற்­றால்தான் இவர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் இணை­வாராம்.

சம்­பந்­தனும் விக்கினேஸ்­வ­ரனும் அறிவில் முதிர்ச்சி பெற்­ற­வர்கள். தற்­போ­தைய இக்­கட்­டான கால­கட்­டத்தில் தமிழ் சமூ­கத்­துக்கு இரு கண்­களைப் போல் வழி­காட்ட வேண்­டி­ய­வர்கள். புலி­களை இக­ழு­வதும் புக­ழு­வ­துமா தற்­போ­தைய உட­னடி தேவை? இக­ழப்­ப­டு­வதும் புக­ழப்­ப­டு­வதும் இயல்­பு­தானே எனவும் விட்­டு­வி­ட­மு­டி­யாது. புலி எதிர்ப்பு, புலி ஆத­ரவு என இரு பிரி­வு­க­ளாக தமிழ்ச் சமூகம் பிள­வு­ப­டு­வது அவர்­களின் இருப்­பையே கேள்­விக்­கு­றி­யாக்­கி­விடும் அல்­லவா?

புலி­களின் மீதான சம்­பந்­தனின் எதிர்ப்பு நிலை தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் அவ­ருக்கு வெகு­ஜன ஆத­ரவைக் குறைத்­து­வி­டு­மாயின் அது ஒரு வியூ­க­மான செய­லல்ல என்றே நான் கூறிக்­கொள்வேன்.

அதுபோல் தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் சி.வி.விக்கினேஸ்­வ­ரனின் முன்­னெ­டுப்­பும்­கூட வியூ­க­மல்ல. இரு­வரும் ஒன்­றி­ணைந்து பரஸ்­பரம் விட்­டுக்­கொ­டுத்து ஒரு­மு­கப்­பட்டு செயற்­பட வேண்டும். இவர்கள் மத்­தி­யி­லேயே இணக்கம் இல்­லா­விட்டால் சிங்­கள மக்­களை இணக்­கத்­துக்குக் கொண்­டு­வ­ரு­வது எவ்­வாறு? தமிழ், முஸ்லிம் இணக்கம் கைகூடுமா?

தற்­போது பேசப்­பட்டு மட்டும் வரும் தமி­ழ­ருக்­கான தீர்வும்கூட தட்­டத்தில் வைத்துத் தரப்­பட்­ட­தல்ல. போராட்­டத்தின் விளை­வா­க­வே­யாகும். இதுவும் பேசப்­ப­டு­கி­றது. எனினும் எதிர்­ம­ன­நிலை இணக்­கப்­பாட்­டுக்கு முர­ணா­ன­தாகும் என்­பதும் புரிந்து கொள்­ளப்­ப­ட­வேண்டும். தெற்கில் பேரி­ன­வாதம் தலை­தூக்கி நிற்­கையில் வடக்கு, கிழக்கில் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஒரே அணி­யாக இருக்க வேண்­டிய தமிழ் மக்­களைப் பிள­வு­ப­டுத்தும் நோக்கம் இருக்­கு­மாயின் அது ஒரு வர­லாற்றுத் துரோகம் என்றே நான் சொல்லிக் கொள்வேன். 

ஆனந்தசங்­க­ரியும் இவ­ரோடு இணைந்தால் கேட்­கவே வேண்டாம். எல்­லோரும் ஒரே அணி­யாக இருக்க வேண்­டிய இக்­கா­ல­கட்­டத்தில் தற்­போ­துள்ள அணியா? மாற்று அணியா? தமிழர் தீர்­மா­னிப்­பார்கள் என சி.வி.விக்கினேஸ்­வரன் கூறி­யுள்­ளாரே. இது பிள­வு­ப­டுத்தும் செயற்­பாடு அல்­லவா? தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி.க்களை இவர் விமர்­சிக்­கையில் வடக்கு, கிழக்கில் பிறந்து கொழும்பில் சொகு­சாக வாழ்ந்து பலர் தேர்­தல்­களின் போது வடக்கு, கிழக்­குக்கு வந்து கூடா­ர­மிட்டுத் தங்­கி­விட்டு தேர்தல் முடிந்­ததும் பறந்­து­வி­டு­வார்கள். 

பின்பு அடுத்த தேர்­த­லுக்கே திரும்பி வரு­வார்கள் என்­கிறார். கட்சி சார்­பற்ற நடு­நிலைச் சிந்­த­னை­யோடு பார்ப்­போ­மாயின் பாரா­ளு­மன்றம் கொழும்பில் இருக்­கையில் அடிக்­கடி தூர பயணம் போக­மு­டி­யாது என்­ப­தா­லேயே எம்.பி.க்கள் கொழும்பில் தங்­கி­யி­ருந்து இடைக்­கி­டையே ஊர்­க­ளுக்குப் போக வேண்­டி­யி­ருக்­கி­றது. கொழும்பு வாழ்­வையே சி.வி.விக்கினேஸ்­வரன் சொகுசு வாழ்வு என்­கிறார். எந்த எம்.பி.யானாலும் அவ­ருக்குத் தனது சொந்த ஊர் போல் வராது. பிறந்த ஊரில் வாழ்­வ­தையே பெரிதும் விரும்­பு­வார்கள். ஊர் துறந்து வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் கொழும்பில் வாழ்­வதைத் தியாகம் என்றே நான் கூறிக்கொள்வேன். மேலும் விக்கினேஸ்­வரன் குறிப்­பி­டு­கையில்,

 நாம் கொள்­கையின் அடிப்­ப­டையில் பய­ணிக்க விரும்­பு­கிறோம். தமிழ் மக்கள் கொள்­கைக்கு முத­லி­ட­ம­ளித்­தா­லேயே மாற்றுத் தலைமை ஏற்­படும். இன்றேல் இவர்­களை தெய்­வமே காப்­பாற்ற வேண்டும் எனக் கூறி­விட்டு நாம் ஒதுங்கிக்கொள்வோம். கொள்­கையைப் புறக்­க­ணிக்கத் தலைமை முற்­பட்டால் மாற்று அணிக்­கான இடை­வெளி கட்­டாயம் ஏற்­ப­டவே செய்யும். மாற்று அணியே பொது மக்­களின் விருப்­ப­மாகும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிக்க வேண்டும் என்­பதே அத்­த­கைய அணியை விரும்­பு­வோரின் நோக்­க­மாகும். எனவே, தமிழ் மக்கள் சரி­யா­னவர்களை நிச்­சயம் அடை­யாளம் காணு­வார்கள் எனவும் குறிப்­பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வரப்­பி­ர­சா­தங்­க­ளுக்­கா­கவும் வாழ்வு வச­தி­க­ளுக்­கா­கவும் பெருந்­தே­சியக் கட்­சி­களின் பேரி­ன­வா­தி­க­ளிடம் அடிப்­படை உரி­மை­களைத் தாரை­வார்க்­கின்­றது என்­பதே இவ­ரது வலு­வான குற்­றச்­சாட்டு என நான் நினைக்­கிறேன். சி.வி.விக்கினேஸ்­வரன் போர்க்­கால மன­நி­லையைப் பிர­தி­ப­லிக்­கிறார். அந்த மன­நி­லை­யோடு தோல்­வி­யுற்ற தரப்பு வெற்­றி­பெற்ற தரப்­போடு நல்­லி­ணக்க முயற்­சியை மேற்­கொள்­வ­தென்­பது உசி­த­மே­யல்ல என்­பதே உண்­மை­யாகும்.

இல்­லாத பிரச்­சி­னையை உரு­வாக்கிப் புதிய அழிவில் சிக்கவைக்கும் முயற்சி மிகவும் ஆபத்­தா­ன­தாகும். இதைப்போல் ஒன்­றுதான் முஸ்­லிம்கள் பற்­றிய விட­ய­மு­மாகும். அது பற்றி நான் முன்பே கூறி­யி­ருக்­கிறேன். முஸ்­லிம்­களைத் தவிர்த்துக் கொண்டு சிங்­க­ளவர் தமி­ழ­ருடன் மட்டும் பேசியோ தமிழர் சிங்­க­ள­வ­ருடன் மட்டும் பேசியோ மூவினம் பூர்­வீ­க­மாக வாழும் இலங்­கையில் பிர­தேச அதி­காரப் பர­வலைப் பகிர்ந்துகொள்ள முடி­யாது. 

இது பின்னால் வேறு பிரச்­சி­னைக்கு வித்­திட்­டு­விடும் சிங்­க­ளத்­த­ரப்பு மத்­திய அரசை முழு­மை­யாக வைத்­துக்­கொண்டு தமிழ்த் தரப்­புக்கும் முஸ்லிம் தரப்­புக்கும் பிர­தேச அதி­காரப் பர­வல்­க­ளை­யும்­கூடத் தரா­ம­லி­ருக்­கி­றது. ஒற்­றை­யாட்சி என்னும் சொல்­லுக்குள் தனது ஏக­போ­கத்­தையே வைத்துக் கொண்­டி­ருக்­கி­றது. பேரின ஒற்­றை­யாட்சி வேறு, பல்­லின ஒற்­றை­யாட்சி வேறு. இது பேரின ஒற்­றை­யாட்­சி­யாகும். சிறு­பான்­மை­க­ளுக்கும் பிர­தேச அதி­காரப் பர­வல்­களை வழங்கி அமை­வதே பல்­லின ஒற்­றை­யாட்­சி­யாகும்.

சிங்­களத் தரப்பும் தமிழ் தரப்பும் முஸ்லிம் தரப்­புக்­கான பிர­தேச அதி­காரப் பரவல் பற்றி கலந்­து­பே­சு­வ­தில்லை. சிங்­களத் தரப்பு கவனம் செலுத்­து­வ­தில்லை. அது தமிழ் தரப்பின் பிர­தேச அதி­காரப் பர­வ­லுக்­கும்­கூட உத்­த­ர­வாதம் வழங்­கு­வ­தில்லை. தமிழ்த் தரப்பு முஸ்லிம் தரப்­புக்கு உத்­த­ர­வாதம் வழங்­கி­ய­போதும் அத­னிடம் அதற்­கான அதி­காரம் இல்லை. மூவி­னத்­தி­னரும் இலங்­கையில் பர­வ­லாக இணைந்து வாழ்­வதால் தீர்வு மூவி­னத்­துக்கும் பொது­வாக அமை­ய­வேண்டும். 

இன்றேல் முஸ்­லிம்­களை ஒதுக்கு­வ­தா­கவே அமையும். விக்கினேஸ்­வ­ரனின் சொல்­லா­டல்கள் தமிழ்– முஸ்லிம் உற­வுக்கு பாதிப்­பா­கவே அமைந்­தன. பெளத்­த­ரையும் குழப்­பி­ய­டித்­தன. இவை தீர்க்­கப்­பட வேண்­டிய தமி­ழரின் நீண்­ட­கால அடிப்­படைப் பிரச்­சி­னையை மத சார்பு நிலைப்­பாட்­டுக்குக் கொண்­டுபோய் குழப்­பி­ய­டிக்கும் செயல்­வ­டி­வங்­க­ளாகும். சி.வி.விக்கினேஸ்­வரன் அதையும் கையா­ளு­கிறார்.

பெளத்த பேரி­ன­வா­திகள் தற்­போது மதப்­போர்­வை­யால்தான் சிறு­பான்­மை­களை இன ஒடுக்­கு­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பார்க்­கி­றார்கள். இந்­நி­லையில் தமிழ் தரப்பு தனது மதத்தை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தா­னது முடி­வுற வேண்­டிய ஓர் இலக்கை வேறு வழியில் திருப்பிப் புதிய விளைவை ஏற்­ப­டுத்­திக்­கொண்டு இருக்கும் பிரச்­சி­னைக்­கான தீர்வை இழந்து விடு­வ­து­மாகும். ஏற்­க­னவே 21/4 குண்­டு­வெ­டிப்பு நிகழ்வு பெளத்த மேலா­திக்­கத்­துக்கு வித்­திட்டு முழு­மை­யான பேரின ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கையில், விக்கினேஸ்­வ­ரனின் முந்­திய மதம் எது என்னும் ஆராய்ச்சி வெளி­யீடு நீறு­பூத்த தணலில் காற்­ற­டிப்­பது போன்றே அமைந்­தி­ருந்­தது. 

இப்­போது எந்த மதத்­துக்கு இலங்கை சொந்தம் என்­பதா பிரச்­சினை. இதனால் வடக்கு–கிழக்கைப் பேரி­ன­வா­திகள் ஆக்­கி­ர­மிப்­ப­தோடு பிக்­கு­களும் ஆக்­கி­ர­மிக்கும் நிலையே ஏற்­படும். வடக்கு–கிழக்­குக்கு வெளி­யே­யுள்ள தமி­ழரின் இடங்­க­ளிலும் விகா­ரைகள் கட்­டப்­பட்டு கோயில்­க­ளுக்கும் இடை­யூறு ஏற்­ப­டலாம். எனவே உள்ள பிரச்­சி­னைக்­கான தீர்வைக் குழப்­பி­ய­டித்­து­விடும் இத்­த­கைய செயற்­பாடு ஆபத்­தா­ன­தாகும்.

உள்­நாட்டு விட­யத்தில் மட்­டு­மன்றி சர்­வ­தே­சத்­துக்கும் முகம் கொடுக்க வேண்­டிய இந்த முக்­கிய கால­கட்­டத்­தி­லும்­கூட ஏட்­டிக்குப் போட்­டி­யான செயற்­பா­டு­களும் ஒத்தொ­ரு­மித்த கொள்­கையும் இல்­லா­தி­ருப்­பது பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழப்­ப­தற்கே வழி­வ­குக்கும். கருத்­துக்­களை கலந்­து­பேசி ஒத்­தொ­ரு­மி­யுங்கள். ஒன்றே செய் நன்றே செய் இன்றே செய் என்னும் வகையில் அணு­க­வேண்டும்.

பரஸ்­பரம் ஒரு­வ­ரோடு ஒருவர் அன்­போடும் மரி­யா­தை­யோடும் நோக்க வேண்டும். கருத்­துக்­களைப் பரி­மா­றும்­போது இங்­கி­த­மா­கவும் நளி­ன­மா­கவும் அர்த்­த­முள்­ள­தா­கவும் அமைய வேண்டும். விதண்­டா­வாதம் பேசி சுய நலத்துக்காக குறுக்­கீ­டுகள் செய்து பிள­வு­ப­டுத்­தக்­கூ­டாது. யுத்­தத்­திலும் சமா­தா­னத்­திலும் பின்­ன­டை­வு­களைக் கண்­ட­தற்­காக மேலும் பல கூறு­க­ளாகப் பிளவுபடுவது மேலும் அழிவையே தரும்.

சி.வி.விக்கினேஸ்வரனிடம் வடக்கு–கிழக்கு தமிழரின் தாயகக் கோட்பாடு இருக்கிறது. அதையே அவர் வடமாகாண முதலமைச்சராக இருக்கையில் நிறைவேற்றியிருந்தார். அதன் பிறகு இவர் எதற்காக அஸ்கிரிய பீடத்தைக் கண்டு கொள்கை விளக்கம் செய்ய வேண்டும். இது கட்சியுடன் கூட்டிணைவற்ற தனிவழிப்போக்காகும். அதன் பிறகு இவர் அங்கு மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக விமர்சனமும் செய்திருந்தார். இவர் ஏன் இணக்கம் பேச அஸ்கிரிய பீடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்? யாப்பில் பெளத்தமத சாசன முன்னுரிமைகள் இருப்பதாலா? முஸ்லிம்களின் கடைகளில் உண்ணவேண்டாம் அவர்களின் கடைகளில் ஆடைகள் வாங்கி அணிய வேண்டாம் எனக்கூறியவர்தான் இந்த அஸ்கிரிய பீடாதிபதி அல்லவா?

கிழக்கில் முஸ்லிம்களின் இனப்பெருக்கம் அதிகம். அதிக வளங்களும் முஸ்லிம்களின் வசம் என அதுரலியே ரதன தேரர் தன்னிடம் கூறியதாக ஒரு முறை சி.வி.விக்கினேஸ்வரன் கூறினாரே?

தெற்கு முஸ்லிம்கள் அரபிகளின் சந்ததிகள். அதனால்தான் வடக்கு–கிழக்கு இணைப்பை எதிர்க்கிறார்கள். வடக்கு–கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் பரம்பரையினர். அதனால்தான் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரிக்கின்றார்கள் எனவும் ஒருமுறை கூறினாரே இது முஸ்லிம்களை சீண்டிவிடும் கருத்து அல்லவா?

இந்துக்களே இலங்கையின் முதற்குடிகள். பெளத்தரல்லர் என விக்கினேஸ்வரன் கூறி சில பெளத்த மத மேலாதிக்க பிக்குகளைக் கிளறியிருந்தாரே. இது தேவைதானா?

தந்தை செல்வாவின் போராட்டம் இனவெறியால் ஏற்பட்டதல்ல. இன ஒடுக்குமுறைக்கு எதிரானதாகும். எனவே முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்திப் பேரினவாதமற்ற சிங்கள மக்களின் மனங்களையும் கவரவேண்டும்.

- ஏ.ஜே.எம்.நிழாம்

https://www.virakesari.lk/article/75612

  • கருத்துக்கள உறவுகள்

இவர் லண்டனில் இன்று ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்து மக்களால் அடித்து திரத்த பட்டார் என்று கேள்விப் பட்டேன்...உண்மையா 
 

இவர் ஓர் நம்பிக்கை துரோகி ஐனாதிபதி சட்டத்தரணி இப்போது இலங்கையில் தமிழர் உயிருடன் விளையாடுவது பணம் கொளிக்கும் வியாபாரம்

  • கருத்துக்கள உறவுகள்

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

ஐயா.. இது என்ர வேட்டி..

சிலர் மேல்
கொண்ட
நம்பிக்கைகள்


சித்திரமாக
முதுகில்...
 

வாழ்க்கையின்
பாடங்களில்
சில...

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

FCF3-FA6-B-637-D-4667-9620-1-FEE35-DF749

  • கருத்துக்கள உறவுகள்

இவரையும் சம்பந்தனையும் வீட்டுக்கு அனுப்பினாலே.. பலர் ஒன்றிணைய வாய்ப்புள்ளது. 

தமிழர்கள் இந்த முறையாவது கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் விக்கியின் கட்சிக்கு வாக்களிக்கலாம்...விக்கி நன்மை செய்யாவிடிலும் போட்டியாவது ஏற்படும்;இலங்கை தமிழரின் அரசியல் தோல்விக்கு காரணம் ஏக போக உரிமை, இதை உடைத்தாலே தமிழருக்கு விமோசனம் பிறக்கும்.முஸ்லீம்களை பாருங்கள் அவர்களது அரசியல் எதிர்காலம் என பார்க்கப்பட்ட ரிஷாடும்,ஹிஸ்புல்லவும் கிட்டதட்ட செல்லாக்காசாகி விட்டார்கள்; அதே போல் துவண்டு போய் இருந்த ஹக்கீம் மற்றும்  சேகுதாவுத் போன்ற மதவாதம் பெரியளவில் இல்லாதவர்கள் மீண்டும் முன்னிலைக்கு வருகின்றனர். இவ்வாறான நெகிழ்வு போக்கு முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு காலமும் தீர்வு எடுத்தாச்சு.இனியாவாது  அபிவிருத்தி நடவடிக்கைளையும் கொஞ்சம் கவனியுங்கோ.இல்லாட்டில் சம் சும் விக்கி எல்லாரும் வீட்டிலதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.