Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, Justin said:

அண்ணை,

அனுபவம் என்றால் எத்தனை பேரின் அனுபவம் உங்களுக்கு சரியான ஆலோசனையைத் தரும் என நினைக்கிறீர்கள்? 3, 30, 300? ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரது உடல் வாசி என்கிற genotype ஐப் பொறுத்து ஒவ்வொரு மாதிரியான அனுபவம் இருக்கும்! இதை சமன் செய்து ஒரு முடிவை அணுகத் தான் ஆயிரக் கணக்கானோரின் மருத்துவத் தகவல்களை திரட்டி ஆய்வுகள் செய்வது. அந்த ஆய்வுகளின் படி நீங்கள் குறிப்பிடும் இந்த நாடுகளில் மக்கள் இதய ஆரோக்கியத்தோடு வாழ்வதாக ஒரு ஆய்வு முடிவும் இல்லை! 

இதைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக நான் எழுதிய நாட்களில் , ஒவ்வொரு பகுதியையும் எழுதி முடிக்க ஒரு மணிநேரம் பிடிக்கும். தகவல்களைச் சரிபார்க்க  இன்னுமொரு மணிநேரம் எடுக்கும்! மற்றவர்களின் உடல் நலத்திற்கு நிறுவப் பட்ட விஞ்ஞானத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டுமென்று எடுத்துக் கொண்ட என் முயற்சி இங்கே மூன்று பேர் கெக்கலி கொட்டிச் சிரிக்கும் ஜோக்காக இருந்திருக்கிறது என்பது எனக்கு ஒரு eye-opener ! 

இதை வெளிக்கொணர்ந்த உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்! 


உங்களை போன்றவர்களுக்கே இந்த பிந்திய    ஆய்வு தெரியவும் , அதை அணுகவும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால், நீங்கள் அவைகளை இங்கே  நேரடியாக இணைப்பதோ, அல்லது அதன் அடிப்படையில் உங்கள் தொழில் முதிர்ச்சி சார்ந்த மற்றும் அனுபவங்களை கொண்டு, விஞ்ஞான அடிப்படையில், உ.ம். தேங்காய் எண்ணை evidenced based research இன் அடிப்படையில், ஒப்பீட்டளவில், உடல் நலத்திற்கு saturated fat ஐ அதிகரிக்க செய்யும் என்பதை தவிர்க்க தேவையும் இல்லை.

நீங்கள் சொல்லும் genotype ஓர் காரணமாக இருக்கலாம்.

ஆனால், இப்பொது மேற்றகில் தேங்காய் எண்ணெய் பிரபல்யம் அடைந்து வருகிறது, ஒன்று சந்தைப்படுத்துதலினால், மற்றது health benefits என்று,  , அனால் இதுவரையில் விஞ்ஞான evidence based research  அடிப்படையில் மறுதலிக்கப்பட்டும், உடல் நலத்திற்கு saturated fat ஐ அதிகரிக்கபதால் நன்மைகளை விட தீங்கே அதிகம் என்று விஞ்ஞானத்தை அதிகளவில் ஏற்றுக்கொள்ளும் மேற்கிலும், நம்பிக்கையூட்டல் மூலமும்.

தனிப்பட்ட கருத்து, தேங்காய் மற்றுன்ம் எண்ணெய் பெருமளவில் பாவிக்கும் நாடுகளில் உள்ள diet உம்,   வேண்டப்படாத saturated fat ஐ பரந்தளவில் சனத்தொகையை பாதிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம்.

சராசரி வருமானத்தில், தேங்காய் பாவிக்கும் நாடுகளில், saturated fat உள்ள வேறு உணவுவகைகளை, முக்கியசமாக விலங்கு உணவுகளை  கிரமமாக (ஏறத்தாழ தினம்தோறும்), மேற்கில் ஒவொரு தனி நபராலும்  உண்ணப்படும் அளவிற்கு afford  பண்ணுவது சமாளிக்க முடியாதது.

saturated fat உடலுக்கு தேவை என்பதால், தேங்காய் பாவனை அதை ஈடு செய்யலாம்

 தேங்காய் மற்றும் என்னை கூட தங்கை பாவனை  நாடுகளில், மேற்றகில் ஒப்பிடக் கூடிய  crEAM மற்றும்  Chesse போன்றவற்றின் கிரமமாக பாவிக்கப்படும் அளவு கூட, அந்த நாடுகளில் தேங்காய் பாவிப்பு  இல்லை என்றே சொல்லவேண்டும்.  இதனால் பரந்த சனத்தொகையில் பாதிப்பும், பாதிக்கப்படும் அளவும் மிக மிக குறைவாக  இருக்கலாம்.

அந்த நாடுகளை அவதானமாக  வைத்துக் கொண்டு, தேங்காய் எண்ணெய் மேற்கிலும், நன்மை இல்லாவிட்டாலும், வேண்டப்படாத saturated fat ஐ (மேற்கில் எடுக்கப்படும் வேறு உணவுகளோடு  சேர்த்து) கூட்டாது என்று சொல்ல முடியாது, சயின்டிபிக் evidence உம் அதையே சொல்வதால்.

மேற்கில்இருக்கும் எம்மவர்கள் இப்போதும் அவர்கள் புலம் பெயர்ந்த பொது இருந்த இலங்கை  diet இல் இருந்தால், தேங்காய் எண்ணெய்  பாவனை saturated fat ஐ அதிகளவில் அதிகரிக்காமல் இருக்கலாம். 

 

18 hours ago, குமாரசாமி said:

நீங்கள் விஞ்ஞான/மருத்துவ ரீதியாக ஆராய்ச்சிகள் செய்து சரி பிழை நிறுவிவிட்டாலும் அனுபவம் என்பது முன்னிலையில் தான் நிற்கும்.இலங்கை இந்தியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில்  தேங்காய் சார்ந்த உணவு வகைகளையே மக்கள் மூன்று வேளையும் உண்கிறார்கள்.இறக்கும் வரைக்கும் சுத்தம் சுகாதாரமாகத்தான் வாழ்கின்றார்கள்.

உங்கள் ஆராய்ச்சிகளின் படி விளைவுகள் என்று பார்த்தால் தேங்காய் திண்டவன் எல்லாம் இத்தடிக்கு செத்திருக்க வேணும்😋

உங்களைப்போன்றவர்களின் ஆராய்ச்சியாளர்கள் வியாபார

 

  • Replies 391
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

nilmini

தைரொய்ட்  குறைபாடும்  அதற்கான நிவர்த்திகளும்  தைரொய்ட் சுரப்பி வண்ணத்தி பூச்சி போன்ற அமைப்பில் கழுத்தடியில் உள்ளது. இது சுரக்கும் தைரொக்சின் எமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒவ்வொரு நிமிடமும

nilmini

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்

nilmini

விட்டமின் D பொதுவாக எல்லோருக்கும் ஒவ்வொருநாளும் தேவையான ஒன்று. இது இல்லாமல் உடல் இயக்கங்கள் எதுவும் சரிவர நடக்காது. எமது உடல் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தனது  இயக்கங்களை எப்படியோ செய்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 14/6/2020 at 10:53, ரதி said:

எங்கட தமிழ்,இந்திய கடைகளில் விற்கும் தே.எண்ணெய் பாவிக்கலாமா?
 

உண்மையான தேங்காய் எண்ணையெண்டால்  குளிர் காலத்தில் கட்டியாகி வெள்ளை நிறமாக இருக்கும். உருகின தேங்காய் எண்ணெய் நிறமற்று இருக்கவேண்டும். மஞ்சள் கலர் அடித்தால் கலப்பட எண்ணெயென்று அர்த்தம். Cold pressed Virgin coconut  எண்ணெய்  மிகவு நல்லது. வாசமும் கூட. Refined எண்ணெய் வாங்கவேண்டாம். தமிழ் கடைகளில் விக்கும் எண்ணையில் இப்படி ஒன்றும் போட்டிருக்காது . ஆனால் அவை virgin oil தான். இந்தியன் கடைகளில் விக்கும் எண்ணெய்களில் லேபிலில்  விபரம் இருக்கும் எண்டு  நினைக்கிறன். இங்கு Costco எண்ணெய் சுலபமாக கிடைப்பதால் ( அமெரிக்கர்களிடையே மிகவு பிரபலம்) நான் மற்ற எண்ணெய்களை கவனிக்கவில்லை . 

On 14/6/2020 at 04:17, குமாரசாமி said:

இலங்கை இந்தியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில்  தேங்காய் சார்ந்த உணவு வகைகளையே மக்கள் மூன்று வேளையும் உண்கிறார்கள்.இறக்கும் வரைக்கும் சுத்தம் சுகாதாரமாகத்தான் வாழ்கின்றார்கள்.

உங்கள் ஆராய்ச்சிகளின் படி விளைவுகள் என்று பார்த்தால் தேங்காய் திண்டவன் எல்லாம் இத்தடிக்கு செத்திருக்க வேணும்

60, 70 களில் வெள்ளவத்தை உருத்திரா மாவத்தை  எண்ணெய் கடையில் தான் தேங்காய் எண்ணெய் வேண்டுகிறது. கடைக்கு பின்னாலேயே கொப்பரா போட்டு எண்ணெய்  எடுப்பார்கள். அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் நல்லெண்ணெய் சரியான விலை. அதனால் தேங்காய் எண்ணெய் தான் சமையலுக்கு அதிகம்  பாவித்தோம். 80 களில்  வெளிநாட்டில் இருந்து மரக்கறி எண்ணெய் வரத்தொடங்கியதும் தேங்காய் எண்ணெய் உடலுக்கு கூடாது என்று வதந்திகளை பரப்பி சனம் எல்லாம் தேங்காய் எண்ணையை விட்டிட்டு மரக்கறி எண்ணெய் வாங்கத்துடங்கிட்டுது . பேப்பர்களில் வெளி நாட்டு ஆய்வாளர்களின் கட்டுரைகள் தேங்காய் எண்ணெய்தான் இலங்கை மக்களை கொல்லுகிறது  என்று கூறியது. எமது அப்பா இவற்றையெல்லாம் நம்பவேண்டாம் , நாங்கள் தேங்காய் எண்ணெயே பாவிப்போம் என்று சொன்னார். அந்த நேரங்களில் தேங்காய் எண்ணெய் தான் மலிந்த எண்ணெய் ஆகவும் இருந்ததால் எமக்கு சாதகமாக இருந்தது. இப்ப மேலை தேசங்களில் தேங்காய் எண்ணெய்தான்  விலை கூடிய எண்ணெய் . 

Edited by nilmini
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/6/2020 at 03:11, Justin said:

அண்ணர் குறிப்பிட்டது என்னைத் தான் என்று நினைக்கிறேன்! தேங்காய் எண்ணை இதய நலனுக்கு நல்லது என்று நிறுவும் எந்த நம்பகமான  ஆய்வுகளும் இது வரை வரவில்லை!

தேங்காய் எண்ணை தீமை பற்றி நீங்கள் முன்பே எழுதி இருந்தீர்களா 👍

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தேங்காய் எண்ணை தீமை பற்றி நீங்கள் முன்பே எழுதி இருந்தீர்களா 👍

நல்ல காலம் நீங்க காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 24/5/2020 at 11:44, nilmini said:

ஓம் குமாரசாமி அண்ணை , தேங்காய் எண்ணெய் மற்றும் நித்திரை பற்றிய விடயங்களை எழுதிக்கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் பிராக்கு கூடிப்போச்சு. புதன் கிழமை போடுவேன். அக்குபஞ்சர் நல்ல இண்ட்ரஸ்டிங் தலைப்பு நிச்சயம் அலுப்புக்கேள்வி இல்லை 😂 . நல்ல  பதிவு ஒன்று போடுகிறேன்

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்து அலபாமாவுக்கு கேட்டுது.

நான் நினைக்கிறேன் உங்கள் மூட்டு வலிக்கும் தசை வலிக்கும் சம்மதம் இருக்குது எண்டு. உதாரணத்துக்கு Hamstring, Calf muscles போன்ற தசைகள் இறுகுவது முழங்கால் மூட்டு நோகும்.

நிறைய வாசித்துப்பார்த்தேன். அக்குபஞ்சரினால் பக்க விளைவுகள் இருப்பதாக தெரியவில்லை. மிகவும் வீரியம் கூடிய மருந்துகளை எடுப்பவர்களுக்கு மட்டும் கூடாது. 

Vitamin C, D, E, கல்சியம் உள்ள உணவுகள் (இவை நாம் அன்றாடம் சாப்பிடும் மீன், பழங்கள், நட்ஸ், மரக்கறி போன்றவற்றில் இருக்கு. வெண்டிக்காய் , பொட்டுக்கடலை நிறைய சாப்பிடுங்கள், சின்ன மீன்கள் நல்லம்) வல்லாரை கிடைத்தால் நல்லம் . Fish oils, Evening Primrose oil. சீனாவில் Tripterygium என்ற மூலிகை மூட்டு வலிகளுக்கு பாவிக்கப்படுகிறது.

மூட்டு வலி உடல் நிறை கூடுதல், கல்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்மை, நரம்பு தசை பிடிப்பு, ஹோமோன் மாற்றங்கள், செமிபாடு, வாய்வு இவற்றாலும் வரும்

மூட்டுகள் தேய்ந்து போவது என்று அலோபதி வைத்தியம் சொல்ல அக்குபஞ்சர் வைத்தியம் சொல்வது மூட்டுகளுக்கு தேவையான சத்துக்கள் அங்கு போய்  சேருவதில்லை என்று.  முழங்கால் மூட்டு தான் முதல் தொடக்கம். எது எப்பதோ தொடங்கி பல வருடங்களுக்கு பிறகுதான் வெளிப்படும். சத்துக்கள் போய் சேர ரத்த ஓட்டம் கூட வேண்டும் . மூட்டுகளை அதிகமாக பாவிக்காததால் தான் அதிகம் வருகிறது. சப்பாணி கட்டி இருந்தால் நல்லம். ஒரு காலை  கொஞ்சம் உயரத்தில் இருந்தால் நல்லம்.

இந்தப்படத்தில் இருக்கும் Sciatic nerve போகும் பாதை முன்புறம் பின்புறம் நீடிக்கும் தசைகளை மசாஜ் செய்யவேணும் (விரல்களால் நீவ வேணும்). குப்புற படுத்துக் கொண்டு கால்களை மடித்து நிமிர்த்த வேண்டும். அதேமாதிரி நின்றுகொண்டு முழங்கால் முடியை கையால் பிடித்துக்கொண்டு  முழங்காலுக்கு கீழ் காலை மடித்து நிமிர்த்தவேணும். நடு விரலின் நடுவில் இருக்கும் ரேகை பகுதியில் மற்ற கையின் பெருவிரல் மற்றும் நடு   விரலால்   சுற்றிவர ஒரு நிமிடம் வரை அமுக்கி விடவும். இப்படி இரண்டு ஒருநாளைக்கு முறை செய்யவும்.

Type 2 Collagen என்ற குளுசையை 6 மாதத்துக்கு எடுத்துப்பார்க்கவும். இது தசை பிடிப்பு மூட்டு நோ இரண்டுக்கும் நன்றாக வேலை செய்வதாக வாசித்தேன்

இந்தியாவுக்கு போய் ஒரு மாதம் இருந்து சிகிச்சை செய்ய முடிந்தால் கேரள வைத்தியம் நல்லா வேலை செய்யும். எனது மச்சாள் கேரளா தான். அவவின் அப்பாவை கொண்டு உண்மையான பரம்பரை வைத்தியர் ஒருவரை பார்க்கலாம். இந்த தமிழ் நாட்டு வைத்தியர்களும் நல்லம். Yogam health . செந்தில்ராஜன்,  இயற்கை மருத்துவமனை, சேலம்.

அக்குபஞ்சர் பற்றி ஒரு கேள்வி பதில் வாசித்தேன். நிறய விடயங்களை தெரிந்துகொண்டேன். அதனால் அதையும் இந்த பதிவுடன் இணைக்கிறேன்.

அகுபங்சர் சித்தாந்தம் கூறுகிறது, நமது உடலானது, பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகும். இக்கூட்டமைப்பிலான 12 உள் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் தோல் மூலமாக தத்தம் சக்தி நாளங்கள் வழியாக புறச் சூழலில் உள்ள பஞ்ச பூதங்களின் சக்தியை நிலையை சமன்படுத்துகின்றன. ஒவ்வொரு சக்தி நாளத்திலும் உள்ள அகுபங்சர் புள்ளிகள்தாம் இந்த வேலையைச் செய்கின்றன. அந்தப் புள்ளிகளின் வேலை சீர்கெடும்போதுதான் நோய்கள் உருவாகின்றன.

உடலில் ஏதேனும் ஒரு பாகத்தில் நோய் தோன்றினாலும், அது உடல் முழுமையையும் தாக்குகிறது. ஒருவர் ஒரு சமயத்தில் எத்தனை கஷ்டங்களைக் கூறினாலும், அதற்குக் காரணம், உடல் உறுப்புக்கள் அனைத்தையும் பிரதிபலிக்கும் 12 அகுபங்சர் சக்தி நாளங்களில் உள்ள அகுபங்சர் புள்ளிகளில் ஒன்றே ஒன்றின் இயக்கக் குறைபாடுதான்.

அகுபங்சர் நாடிப் பரிசோதனையைப் பற்றி அறியாத பட்சத்தில் தான் குறிப்பிட்ட அகுபங்சர் புள்ளியைத் தேர்ந்தெடுக்க முடியாமல், பத்து கல்லில் ஒரு மாங்காய் அடிக்கும் கதையாக, ஒரே சமயத்தில் பத்து ஊசிகள், பதினைந்து ஊசிகள் என்று போடுகிறார்கள். நாடிப் பரிசோதனை தெரியாததால் அரை மணி நேரம் அல்லது அதற்கு மேலாக ஒவ்வொரு வைத்தியத்தின் போதும் படுக்க வைத்து விடுகின்றனர். வியாதியின் போக்கைக் கணிக்கத் தெரியாமல் போவதால் தொடர்ந்து 7 நாட்கள், 10 நாட்கள், 15 நாட்கள் கொண்டது ஒரு கோர்ஸ் என்று கண்மூடித்தனமாக வைத்தியம் அளிக்கிறார்கள்.

நமது உடலிலுள்ள 12 சக்தி நாளங்களும்தான் எந்த நோயையும் குணப்படுத்துவதற்கான இரகசியங்களைத் தன்னகத்தே அடக்கியுள்ளன.

Dr wu wei-ping “ஒரு நோயாளி ஒரு சமயத்தில் கூறக்கூடிய அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான ஒரே ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் சுகமளிக்க முற்படுபவர் மட்டுமே உண்மையான அகுபங்சர் நிபுணர் ஆவார்.” “அது மட்டுமல்லஅந்தப் புள்ளியின் ரகசியத்தை அறிந்து, ஊசியை அதனுள் செலுத்தும் முறையையும், பின்னர் ஒரு சில நிமிடங்களில் எடுக்கும் முறையையும் கற்றுணர்ந்து தேறாத வரையில் அகுபங்சர் முழுமையான பயனை அளிக்காது. கற்றுத் தேர்ந்து விட்டால் மனித சமுதாயத்திற்கு இதைவிடச் சிறந்த மருத்துவம் என்று ஒன்று இருக்க முடியாது.”

சீன மருத்துவத்தில் அகுபங்சர் பெரும்புகழ் வாய்ந்ததாக இருக்கிறது. மற்ற சீன மருத்துவங்கள் நமது இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதம், வர்மம், இயற்யை வைத்தியம் போன்றவைகளைக் காட்டிலும் சிறந்தது என்று கூற முடியாது. சீன மருந்துகளைக் காட்டிலும் இந்திய மருந்துகள் உலகப் புகழ் பெற்றவையாக விளங்குகிறது.

மனிதக் கடிகாரம், ஒரு நாளைக்கு 24 மணி 11 நிமிடங்கள் என்ற அளவுச் சுற்றுப்படி இயங்குகிறது என்று, தற்போதைய அலோபதி ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால், ஐயாயிரம் ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் அகுபங்சர் வைத்திய சித்தாந்தம், உடலின் உள்ளுறுப்புக்கள் எந்தெந்த நேரத்தில் இயங்கி, ஒரு நாளின் சுற்றை முடிக்கின்றன என வரையறுத்துக் கூறியுள்ளது. பன்னிரெண்டு உள்ளுறுப்புக்களான வயிறு, மண்ணீரல், இருதயம், சிறுகுடல், சிறுநீர்ப்பை, பெருங்குடல், பெரிகார்டியம், உடல் உஷ்ணக் கட்டுப்பாட்டு உறுப்பு, கல்லீரல், நுரையீரல், பித்தநீர்ப்பை, சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புக்கள் பூரணமாக இயங்கும் நேரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அகுபங்சர் கடிகாரமும் உள்ளுறுப்புக்களின்  இயக்கங்களும்!
காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை - வயிறு,
காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை - மண்ணீரல்,
காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை - இருதயம்,
மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை - சிறுகுடல்,
மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை - சிறுநீர்ப்பை,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை - சிறுநீரகம்,
இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை - பெரிகார்டியம்,
இரவு 9 மணி முதல் இரவு 11 மணி வரை ஸ்ரீ உடல் உஷ்ணக் கட்டுப்பாட்டு உறுப்பு
இரவு 11 மணி முதல் இரவு 1 மணி வரை - பித்தநீர்ப்பை,
இரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை - கல்லீரல்,
அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை - நுரையீரல்,
அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை - பெருங்குடல்.

அகுபங்சர் என்றால் என்ன?

அகுபங்சர் என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஓரிரு ஊசிகளைக் கொண்டு உடலில் ஏற்பட்டுள்ள நோய்களைக் களையக் கூடிய மருத்துவ முறையாகும்.

ஊசிகள் மூலமாக மருந்துகள் எதுவும் செலுத்தப்படுவதில்லை. இந்த மருத்துவத்தில் மருந்துகளுக்கோ, மாத்திரைகளுக்கோ வேலையே கிடையாது. மேலும் நோய் என்ன என்பதைக் கண்டறிய செய்யப்படும் மலம், சிறுநீர், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, பரிசோதனைகளுக்கும் இம்முறையில் அவசியம் இல்லை.

அகுபங்சர் வைத்தியத்தில் நோய் இன்னதென்று எவ்வாறு கண்டுபிடிக்கப் படுகிறது?

அகுபங்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் நோயின் தன்மையை ஓரிரு நிமிடங்களில் எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

அகுபங்சர் நாடிப் பரிசோதனை எப்போது செய்வீர்கள்?

அகுபங்சர் நாடிப் பரிசோதனை விடியற்காலை 8 மணிக்கு முன்பாகப் பார்ப்பது நல்லது.

நாடிப் பரிசோதனையின் போது நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஏதேனும் உண்டா?

ஆம். நோயாளிகள் முந்திய இரவு வரை எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் காலையில் எழுந்தபிறகு எதுவும் சாப்பிடாமல் நாடி பார்ப்பது நல்லது. காலை கடன்களை முடித்துக் கொண்டு, வெறுமனே முகத்தைக் கழுவிக் கொண்டால் போதுமானது. குளிப்பதையும் நாடிப் பரிசோதனைக்குப் பிறகே வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களிடம் வருவதற்கு முன்பாக ஆங்கில வைத்திய முறையில் நிறைய டெஸ்ட்டுகள் அதன் ரிப்போர்ட்டுகள் வைத்திருக்கிறோம். அது உங்களுக்கு உபயோகப்படுமா?

கண்டிப்பாக உபயோகப்படாது. அது தேவையுமில்லை.

நாடிப் பரிசோதனை செய்த பிறகு எப்போது வைத்தியம் செய்ய ஆரம்பிப்பீர்கள்?

நாடிப் பரிசோதனைக்குப் பிறகு வைத்தியம் ஆரம்பிப்பதற்கு முன் ஏதேனும் இலேசான டிபன் எடுத்துக் கொண்ட பிறகு உடனே வைத்தியம் செய்ய ஆரம்பித்து விடலாம்.

ஒரு சமயத்தில் எத்தனை ஊசி போடுவீர்கள்?

ஒன்று அல்லது இரண்டு ஊசிகள்தான் போடப்படும்.

வலிக்குமா?

நிச்சயமாக வலியே இருக்காது. ஊசி போட்ட பிறகு கூட இன்னமும் ஏன் போடவில்லை என்ற எண்ணத்தில்தான் இருப்பீர்கள். அவ்வளவு மென்மையாக இருக்கும். ஊசி போடும்போது தோலில் ஏதோ ஒன்று வைக்கப்படுவது போலத்தான் உணருவீர்கள்.

ஊசி வைத்ததும் எவ்வளவு நேரம் படுத்திருக்க வேண்டும்?

ஊசியைத் தோலில் செருகியதும் அதே இடத்தில் சிறிது நேரம் கழித்து ஏதோ ஒன்று இருப்பது போன்று உணர்ச்சி ஏற்படும். ஓரிரு நிமிடங்களில் வைத்தியம் முடிந்துவிடும். வைத்தியத்தின்போது படுத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. படுத்திருந்தால் வசதியாக இருக்கும். அவ்வளவுதான்.

பொதுவாக ஒரு நோய்க்கு வைத்தியம் முடிய எத்தனை நாட்களாகும்?

ஓரிரு முறை வைத்தியத்திற்குப் பிறகு நோயின் தீவிரத்திலிருந்து நீங்கள் விடுபடுவதை உணருவீர்கள். 60 சதவீதம் 70 சதவீதம் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்வரை வைத்தியம் மேற்கொண்டாலே போதுமானது. மீதமுள்ள நோயின் தீவிரம் தானே மறைந்துவிடும். எனவே முழுமையாகத் தீரும் வரை வைத்தியம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நோயிலிருந்து குணமடைவது நிச்சயம். எத்தனை நாளில் குணமாகும் என்பதை இன்றைக்கே நிச்சயிக்க முடியாது.

தினம், தினம் வைத்தியம் செய்வீர்களா?

15 நாளைக்கு ஒருமுறை வைத்தியம் செய்வது தினமும் வைத்தியம் செய்வதைவிட நல்ல பலனளிக்கும்.

கண்டிப்பாக 15 நாளைக்கு ஒருமுறை அவசியம் தவறாமல் வைத்தியம் எடுத்துக் கொள்ள வேண்டுமா? ஏதேனும் சந்தர்ப்பத்தால் ஒருமுறை அல்லது இருமுறை வைத்தியம் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டால் நோயிலிருந்து குணம் பெற முடியாமல் போய்விடுமா?

ஒவ்வொரு முறை செய்யப்படும் வைத்தியமும் நீங்கள் நோயிலிருந்து விடுபட வழிவகுக்கிறது. ஓரிரு முறை சந்தர்ப்ப சூழ்நிலையால், வைத்தியம் தவறி விடுவதால் ஏற்கனவே பார்த்த வைத்தியத்தின் பலன் குறைந்துவிடாது.

விடுபட்டுவிட்ட வைத்தியத்திலிருந்து இரண்டு, மூன்று மாதங்கள் கழித்துக்கூட தொடர்ந்து செய்து கொள்ளலாம்.இன்னும் சொல்லப் போனால் ஒரு வைத்தியத்திற்கும், அடுத்த வைத்தியத்திற்கும் நிறைய நாட்கள் இடைவெளி இருப்பது நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

டெஸ்ட்டுகள், பரிசோதனைகள் எதுவும் அவசியம் இல்லை என்கிறீர்கள். இந்த நிலையில் நோய் குணமாகிவிட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது?

ரொம்பவும் சுலபம். நோயாளி சில கஷ்டங்களைக் கூறுகிறார். கஷ்டங்களும், தொந்தரவுகளும் குறையும்பொழுது, “இப்போது தேவலாம்என்று அவரே கூறப்போகிறார். இதற்கு மேல் டெஸ்ட்டுகளுக்கும், பரிசோதனைகளுக்கும் அவசியமே இல்லை.

ஒரு நோயாளியின் மூளையை மட்டுமே நூற்றுக்கு நூறு நம்ப முடியும். அது என்ன கூறுகிறதோ அதுதான் உண்மை. பரிசோதனைக் கருவிகளையும், டெஸ்ட்டுகளையும் ஒரு நோயாளியின் மூளைக்கு ஈடாகக் கருத முடியாது.

சுமார் எத்தனை நாட்களில் குணம் தெரியும்?

சிலருக்கு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே குணம் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து திடீரென மாறுதல்கள் தெரிய ஆரம்பிக்கும்.

ஒருமுறை வைத்தியம் செய்தால் அது எத்தனை நாட்களுக்கு வேலை செய்யும்?

உடலில் உள்ள நோய்களுக்கு ஏற்றவாறு ஒருமுறை வைத்தியம் செய்வதன் மூலம் பூரண குணம் அடைபவர்களும் உண்டு. ஒரு சிலருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அத்துடன் நின்றுவிடும். மேலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் அடுத்த வைத்தியத்தைத் தொடர்வது நல்லது.

சில வைத்தியங்களில் நோய் அதிகமாகிப் பிறகு குறையும் என்கிறார்களே? இந்த வைத்தியத்திலும் அப்படி ஏதாவது உண்டா?

நூற்றுக்கு 2 அல்லது 3 பேருக்கு ஏற்கனவே இருக்கும் தொந்தரவுகள் சற்று அதிகமாகலாம். இது கவலைக்குரிய விஷயமல்ல. ஆம், ஒரு சிலரின் உடல்வாகுக்கு ஏற்ப முதலில் தொந்தரவுகள் தற்காலிகமாக அதிகமாகி, சீக்கிரமாகவே தொந்தரவுகள் வெகுவாக குணமடைய ஆரம்பிக்கும். ஏற்கனவே இருக்கும் தொந்தரவுகள் அதிகமாகுதல் ஒரு நல்ல அறிகுறியே.

உங்களிடம் வருவதற்கு முன் எல்லோரும் மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டு வருபவர்கள்தாம். அகுபங்சர் வைத்தியம் தொடங்கிய பிறகும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாமா?

மருந்து, மாத்திரைகள் நிறுத்திவிடுவது நல்லது. ஆனால் நீண்ட காலம் மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டுப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்குப் படிப்படியாக, சிறிது சிறிதாக, வைத்தியம் ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நிறுத்திவிடலாம்.

மருந்து, மாத்திரைகள் நோயின் தொந்தரவுகள் நம் மூளையையும், நரம்பு மண்டலத்தையும் எட்டாதவாறு செய்கின்றன. மற்றபடி நோயைக் குறைப்பதில்லை. நோயானது அதன் போக்கில் வளர்ந்து கொண்டேதான் போகிறது. எனவே மாத்திரைகளை நிறுத்தி விடுவதனால் எந்தப் பாதககும் இல்லை. நன்மையே. உண்மையான நோயின் தன்மையையாவது உணர்ந்து கொள்ள முடியும்.

சில சமயங்களில் நோயின் தொந்தரவுகள் அதிகமானால் தேவையான மாத்திரைகள் சாப்பிட்டுக் கொள்ளலாமா?

தாராளமாக. ஆவசியம் ஏற்பட்டால் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளலாம். கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. முன்பு போல மாத்திரைகளை வேளா வேளைக்குக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

அகுபங்சர் வைத்தியத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய பத்தியங்கள் ஏதேனும் உண்டா?

பத்தியங்கள் என்று எதுவும் கிடையாது.

அகுபங்சர் வைத்தியத்தால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா?

ஒரே ஒரு விளைவுதான் ஏற்படும். அது நோயிலிருந்து குணமாகும் நல்ல விளைவு ஒன்றுதான். பக்க விளைவுகள் ஏற்பட சாத்தியமே கிடையாது.

6 அல்லது 8 முறைக்கு மேல் வைத்தியம் மேற்கொண்ட பிறகும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்று கூறுபவர்களுக்கு இந்த முறை வேலை செய்யவில்லை அல்லது வேலை செய்கிறது என்று கருதலாமா?

மிகச் சிலருக்கே இந்த நிலை ஏற்படுகிறது. உடலில் சக்தி நிலை (நோய் எதிர்ப்புச் சக்தி) மிகக் குறைவாக இருப்பவர்களுக்கு வைத்தியம் பிடிபட சில மாதங்கள் ஆகி விடுகின்றன.

நிச்சயமாக அகுபங்சர் இவர்களுக்கு வேலை செய்யும். அவர்களை அறியாமலேயே திடீரென்று நோய்களிலிருந்து விடுதலை பெறுவார்கள்.

அகுபங்சர் வைத்தியம் மேற்கொண்டிருக்கும் போது திடீரென்று காய்ச்சல், பேதி என்று ஏதேனும் வந்தால் மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமா?

கவலைப்படாமல் எடுத்துக் கொள்ளுங்கள். சரியானதும் நிறுத்தி விடுங்கள். ஒரு கோர்ஸ் மாத்திரைகளை சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கட்டாயமில்லை. மறுமுறை அகுபங்சர் வைத்தியத்தின் போது சாப்பிட்ட மருந்துகளினால் ஏற்படும் பாதிப்புக்களை நீக்கி விடலாம்.

எந்தவிதமான நோய்களை அகுபங்சர் முறையில் குணப்படுத்தலாம்?

அகுபங்சர் சித்தாந்தப்படி குணப்படுத்த முடியாத நோய் என்று ஒன்று கிடையாது. அகுபங்சர் வைத்தியத்தில் அதற்கான சாத்தியக் கூறுகள் முழுமையாக உள்ளன.

கண்கள் சம்பந்தமான நோய்கள், இருதயம் சம்பந்தமான நோய்கள், தலைவலி, சிறுநீரகக் கோளாறுகள், சளி, சைனஸ், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், வாய்வு, வயிற்றில் புண், குடல் பூச்சிகள் போன்ற வியாதிகள் இன்னும் என்ன என்ன வியாதிகள் உண்டோ அத்தனைக்கும் அகுபங்சர் மருத்துவத்தில் குணப்படுத்துவதற்கு வழி இருக்கிறது.

குறிப்பாக எந்த வயதினர் இந்த சிகிச்சையினால் பலன் பெற முடியும்?

பிறந்த குழந்தை முதல், முதியோர் வரையில் எந்த வயதினருக்கும் இந்த சிகிச்சை பலனளிக்கும்.

குழந்தைகளுக்குப் பொதுவாக மஸாஜ் செய்வது ஒன்றே போதுமானது. அவர்களுக்கு ஊசி வைக்கவேண்டிய அவசியமில்லை.

அகுபங்சர் வைத்தியத்தில் அழகுபடுத்தக் கூடிய வைத்தியமும் செய்வதாக கூறுகிறீர்களே? அழகுபடுத்துதல் முறையில் என்னென்ன செய்கிறீர்கள்?

முகத்தில் அதிகமாக சுருக்கங்கள் விழுவது, சிறு வயதினருக்கு அதிகமாக முடி கொட்டுதல், அதிகமான வியர்வை வெளியேறுதல், உடல் பருமனாதல், வியர்வையில் துர்நாற்றம் உண்டாகுதல், பருக்கள் அதிகமாக ஏற்படுதல், தோல் நோய்கள், வியர்க்குரு ஏற்படுதல், வெய்யிலில் சென்றால் தோல் கறுத்துப் போதல், முகத்தில் திட்டு திட்டாக கருமை படர்தல், படர்தாமரை, தேமல், கன்னங்கள் ஒட்டிப்போய் இருத்தல், அக்குள் பகுதியில் அதிகமாக வியர்த்தல், உள்ளங்கை, உள்ளங்கால் அதிகமாக வியர்த்தல், தலைப்பொடுகு, வெள்ளைப்படுதல் ஆகியவைகளும் மேலும் இதில் விட்டுப் போனவைகளும் இதில் அடங்கும்.

நோயாளி ஒருவருக்கு 10 குறைகள் உள்ளன. ஆனால் அவர் 5 மட்டுமே கூறுகிறார். அவர் சொல்ல மறந்த உபாதைகளும் குணமாகுமா?

அகுபங்சர் நாடிப் பரிசோதனையின் சிறப்பம்சமே இதுதான். நீங்கள் சொன்ன கஷ்டங்கள் மட்டுமல்லாமல் மறந்த கஷ்டங்களும் சேர்ந்தே குணமாகின்றன. அது மட்டுமல்லாமல் நீங்கள் உணர முடியாத, வரப்போகும் நோய்களும் இன்றே தவிர்க்கப்படுகின்றன. உதாரணமாக குடும்பத்தில் இரத்த அழுத்தம், கண்ணாடி அணிதல், ஒற்றைத் தலைவலி போன்றவைகள் குடும்ப நோயாக இருக்கும். இதை வரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்துவிட முடியும்.

இந்த வைத்தியத்தின் சிறப்பம்சம் என்ன?

ஒருவர் கூறும் கஷ்டங்களை வைத்தே நோயின் தன்மையை ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.சிறிய தொந்தரவோ, பெரிய கஷ்டங்களோ அவ்வளவுக்கும் அகுபங்சர் முறையில் தெளிவான அர்த்தம் உண்டு.

உதாரணமாக ஒருவனைப் பார்த்து, “அவன் படு சோம்பேறிஎன்று யாரேனும் கூறினால் அதற்கு அர்த்தம், யார் திட்டினாலும், அடித்தாலும் அவன் சோம்பேறியாகத்தான் இருக்க விரும்புகிறான் என்பதல்ல. அவன் உழைக்க ஆசைப்பட்டாலும் அவன் உடம்பில் உள்ள சக்தியின்மை அவனை உழைக்க விடாமல் செய்கிறது.  அகுபங்சர், சக்தியை அடிப்படையாகக்
கொண்டிருக்கும் ஒரு வைத்திய முறை உடலில் சக்தி நிலையில் மாற்றங்கள் ஏற்படும்போது தான் நோய் உருவாக ஆரம்பிக்கிறது. நோயில் இந்த ஆரம்ப நிலையில் ஏற்படும் தொந்தரவுகளை இங்கே பார்ப்போம்.

1. அதிகப்படியான தூக்கம்.
2.
தூக்கத்தின்போது அடிக்கடி கனவுகள்.
3.
தூங்கி எழும்போது சுறுசுறுப்பின்மை.
4.
அசதி, தூங்கவேண்டும்போல் இருக்கும். ஆனால் படுத்தால் தூக்கம் வராது.
5.
சிறு சத்தமும் தூக்கத்தைக் கலைத்துவிடும்.
6.
தூக்கத்தின் நடுவில் விழித்துவிட்டால் திரும்ப தூக்கம் வராது.
7.
தூங்கி எழுந்ததும் தலைவலி.
8.
பசியில்லாமை.
9.
கொஞ்சம், கொஞ்சமாக அடிக்கடி பசி எடுத்துக்கொண்டே இருக்கும்.
10.
சாப்பிட்டதும் வயிறு அடைத்தது போன்றிருத்தல்.
11.
சாப்பிட்டதும் வயிற்றில் கல்லைப் போட்டது போன்ற உணர்வு.
12.
சாப்பிட்டதும் மலஜலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு.
13.
சாப்பிட்டதும் தூக்கம் வருதல்.

-போன்ற இவை ஆரம்ப கால நோயின் அறிகுறிகள். இவை இன்றே தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் 5 அல்லது 10 வருடங்களில் குறிப்பிட்ட உறுப்பில் நோயானது வளர்ந்துவிடக் கூடும்.

அகுபங்சர் முறையின் சிறப்பம்சம் என்னவெனில் நோயின் ஆரம்ப நிலையிலேயே அதனைக் களைந்துவிட முடியும். நோய் முற்றிவிட்ட நிலையிலும் வேரோடு குணப்படுத்த முடியும். இது ஒரு முழுமையான வைத்திய முறை.

மனநோய்களைக் குணப்படுத்த முடியுமா?

மனநோய்கள் மூளை சம்பந்தப்பட்டதல்ல. நன்றாக பசித்திருக்கும் ஒருவருக்கு சாப்பிடுவதற்கு முன் துயரமான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. உடனே பசி அடங்கி விடுகிறது. மற்ற உறுப்புக்களான நுரையீரல், இருதயம், சிறுநீரகம் போன்ற அனைத்து உறுப்புக்களும் வேலை செய்தவண்ணம் இருக்கும்போது வயிற்றின் இயக்கம் மட்டும் முழுமையாக அடங்கி விடுகிறது. அதாவது துக்கம், கவலை போன்ற மனக்கஷ்டம் வயிற்றின் இயக்கக் குறைவினால் ஏற்படுகிறது.

இவ்வாறு ஒருவரின் மனநிலையை வைத்தே அவருடைய நோயின் இருப்பிடத்தை அறிய முடியும். அந்த உறுப்புக்குத் தேவையான சக்தியை அளித்து மீண்டும் பாதிப்புக்குள்ளான உறுப்பை பழைய நிலையில் இயங்க வைப்பதன் மூலம் மனக் கஷ்டங்களைக் குணப்படுத்த முடியும்.

மன நோய்கள் மூளை சம்பந்தப்பட்டதல்ல.உடல் உறுப்புக்களில் சக்தி குறையும்போது மன நிலையில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. இதுவே ஒரு நோயின் ஆரம்ப நிலை. இந்த நிலையிலேயே பிற்காலத்தில் ஒரு உறுப்பில் ஏற்படக் கூடிய நோயை இன்றே தவிர்த்துவிட முடியும். இது அகுபங்சர் மருத்துவத்தின் இன்னுமொரு சிறப்பம்சம்.

முதன்முதலாக உங்களுக்கு எப்போது ஆங்கில மருத்துவத்தில் அதிருப்தி ஏற்பட்டது?

எம்.பி.பி.எஸ். மூன்றாவது ஆண்டில்பார்மகாலஜிஅதாவது அனைத்து மருந்து, மாத்திரைகள் சம்பந்தப்பட்ட படிப்பு.

அதில் முதலாவது பாடம், ~மருத்துவத் துறையின் தந்தை| என்றழைக்கப்படும் ஹிப்போக்ரேட்டிஸ்-ஐப் பற்றியதாகும். அவர் நமக்குக் கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது

நீங்கள் வைத்தியம் பார்க்கும்போது வைத்தியம் பலனளிக்காமல் போனாலும் பரவாயில்லை@ நோயாளியின் கஷ்டத்தை அதிகமாக்கி விடாதீர்கள்என்பதே. ஆனால் நாங்கள் படித்ததோ அதற்கு நேர் மாற்றமானது. பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது. ஒவ்வொரு மருந்தும் பலவிதமான கஷ்டங்களைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது.

ஆங்கில மருத்துவத்தின் உண்மையான இந்த நிலையைக் கண்கூடாகப் பார்த்த பின்பே அதன்மீது அதிருப்தி ஏற்படத் துவங்கியது.

துவங்கியது என்றால்?

ஆம், இது அதிருப்தியின் ஆரம்பம்தான். ஆங்கில மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகும். இவை மேலும் மேலும் அதிருப்தியை அதிகமாக்கியது.

கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா?

முதலாவது (தத்துவம்)

நமது உடம்பில் பாக்டீரியாக்கள் (கிருமிகள்) எப்போதும் இருக்கின்றன. அவை நமது உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து நமக்கு நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது என்பதாகும்.

இரண்டாவது (தத்துவம்)

கிருமிகள் (பாக்டீரியாக்கள்) தான் நோய்களுக்குக் காரணம். நோய்களிலிருந்து நிவாரணம் பெற பாக்டீரியாக் கொல்லி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது.

ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருக்கும் மேலே சொன்ன முதலாவது, இரண்டாவது தத்துவங்களை மீண்டும் படித்துப் பாருங்கள்.

மருத்துவப் படிப்பு இறுதி ஆண்டில்தான் எப்படி ஒரு நோயைக் கண்டுபிடிப்பது என்பதைச் சொல்லிக் கொடுப்பார்கள்.

எப்படி என்றால் ஒரு நோயாளி தான் அனுபவிக்கும் கஷ்டங்களைக் கூறுகிறார். அந்தக் கூற்றை வைத்து அவருடைய நோயை அறிவுப+ர்வமாக உணரக்கூடாது.

மாறாக நோயைப் பார்த்த பிறகே நோயாளியின் கூற்றை நம்ப வேண்டும். அதுதான் விஞ்ஞான பூர்வமானது என்று கூறுகிறது ஆங்கில மருத்துவ முறை.

அதாவதுநோய் உருவாவதைத் தவிர்ப்பது, நோய் உருவானபின் குணப்படுத்த முயலுவதைக் காட்டிலும் சிறந்ததுஎன்பது உலகறிந்த உண்மை.

நோயின் ஆரம்பம் தெரியாமல் ஒரு நோயினைத் தவிர்க்கவும் முடியாது@ குணமாக்கவும் முடியாது.

நோயின் ஆரம்பத்தை ஒருவர் தன் அறிவாற்றலைக் கொண்டு ஊகித்து உணரத்தான் முடியுமே தவிர, பரிசோதனைக் கருவிகளின் உதவியைக் கொண்டு பார்க்கவும் முடியாது@ கண்டுபிடிக்கவும் முடியாது.

ஆங்கில மருத்துவம் நோயைக் கண்கூடாகப் பார்த்த பின்பு தான் நம்ப வேண்டும் என்கிறது.

ஆனால் அகுபங்சர் மருத்துவ முறை கூறுகிறது, பரிசோதனைக் கருவிகளின் உதவியைக் கொண்டு நீங்கள் பார்ப்பது, கண்டுபிடிப்பது அனைத்தும் நோயின் விளைவுகளைத்தான். காரணம், நோயைப் பார்க்க முடியாது.

உதாரணமாக முழங்கால் வலிக்கிறது என்று சொன்னால் உடலில் வேறொரு இடத்தில் உள்ள நோயின் விளைவுதான் முழங்காலில் வலியாகத் தெரிகிறதே தவிர, முழங்காலிலேயேதான் நோயும் இருக்கிறது என்பது தவறு.

ஆனால், ஆங்கில மருத்துவம், தவறான இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகிறது.

இதன் காரணமாகத்தான் எந்த ஒரு விளைவையும், அது உடலில் எந்தப் பாகத்திலுள்ள வலியாகட்டும்@ தலைவலியாகட்டும், சைனஸ் வலியாகட்டும், அல்லது உடல் உறுப்புக்கள் சம்பந்தமான விளைவுகளாகட்டும் (உதாரணமாக இரத்தக் கொதிப்பு, டயாபடீஸ், சிறுநீரகக் கோளாறு, வயிற்றுத் தொந்தரவுகள்) எதனையுமே ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடிவதில்லை.

ஆக, மொத்தத்தில் நோயைப் பார்ப்பதாக எண்ணிக் கொண்டு அதன் விளைவுகளைத்தான் பரிசோதனைக் கருவிகள் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிலேயே தன் முழு நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறது, ஆங்கில மருத்துவம்.

நோயானது அதன் தீவிரத்தில் வளர்ந்துகொண்டு போகும்போது அதன் விளைவுகளும் தீவிரமடைகிறது. இதனால்தான் மருந்துகள் மூலமாக நோயின் விளைவுகளைக் கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ முடிவதில்லை.

ஆங்கில மருத்துவம் விஞ்ஞான ரீதியாக வெகுவேகமாக முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

இதற்குப் பதிலாக ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் கூறினால் போதுமானது. நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

ஒரு குறிப்பிட்ட நோயைக் குணப்படுத்த முன்பு 10 நாட்கள் தேவைப்பட்டன. இன்று இரண்டு நாட்களில் குணப்படுத்த முடிகிறதென்றால் அது முன்னேற்றம். இப்போது முன்பைக் காட்டிலும் குறைவான அளவே மருந்து, மாத்திரைகள் தேவைப்படுகின்றன என்றால் அது முன்னேற்றம். முன்பெல்லாம் ஒரு நோயைக் கண்டுபிடிக்க நிறைய டெஸ்ட்டுகள், பரிசோதனைகள் எல்லாம் தேவைப்பட்டன. இப்போது இந்தத் தேவைகள் எல்லாம் குறைந்துவிட்டன என்றால் அது அறிவுபூர்வமான முன்னேற்றம்@ முன்பு மருந்து மாத்திரைகளுக்குப் பக்க விளைவுகள் ஏற்பட்டன. இன்று அந்தக் குறைகள் நீக்கப்பட்டு விட்டன என்றால், அது விஞ்ஞான பூர்வமான முன்னேற்றம் என நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் கண்கூடாக நாம் பார்க்கும் இன்றுள்ள நிலை நேர் மாற்றமானது.

நோய் என்றால் என்ன? நோயின் விளைவுகள் என்றால் என்ன? கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

உடல் உழைப்புக்குத் தேவை சக்தி என்பது எல்லோருக்கும் தெரியும். சக்தியின் அளவு உடலில் குறையும்போது உறுப்புக்கள் சோர்வடைகின்றன. இது நோயின் முதல் நிலை. உடலில் பல்வேறு உறுப்புக்களின் இயங்கும் திறன் குறையும்போது, உடலும் சோர்வடைகிறது. சோம்பேறித்தனம் தோன்ற ஆரம்பிக்கிறது. இதுவே நோயின் ஆரம்பநிலை.

நோயின் தன்மை இவ்வாறு உடல் முழுமையையும் வியாபிக்கிறது. இந்நிலையில் நோயை ஒட்டுமொத்தமாக முழுமையாகத்தான் உணர முடியும். பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு பார்த்து கண்டுபிடிக்க முடியாது.

உடலில் ஏற்பட்டுள்ள சோர்வின் காரணமாக உடலில் உள்ள உறுப்புக்கள் தத்தம் வேலைகளைச் சீராகச் செய்ய முடிவதில்லை.

வயிறு மற்றும் ஜீரண உறுப்புக்களின் வேலைகளில் குறைபாடு ஏற்படும்போது, உணவிலிருந்து ஜீரணித்து கிரகிக்கப்படும் சக்தியிலும் குறைபாடு ஏற்படுகிறது. இதனை உடல் உழைப்புக்கேடான சக்தியாகவும் கொள்ளலாம். இந்தக் கெட்ட சக்தி (னுளைநயளந குழசஉந) உடல் முழுமையிலும் பரவுகிறது. இது நோயின் இரண்டாம் நிலை.

ஒவ்வொரு மனிதனிடத்திலும் பிறவியிலேயே பலவீனமான உறுப்புக்கள் சில இருக்கும். நல்ல சக்தியானது கிடைத்துக் கொண்டிருக்கும் வரையில் இவ்வுறுப்புக்கள் ஓரளவுக்குக் கெட்டுப் போகாமல் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் ~கெட்ட சக்தி|யானது இவ்வுறுப்புக்களை அடையும்போது இவ்வுறுப்புக்கள் சேதமடையத் துவங்குகின்றன. இந்த நிலைதான்நோயின் விளைவுகளைத் தோற்றுவிக்கும் கடைசி நிலையாகும்.

இந்த கடைசி நிலையில்தான் ஒரு நோயாளி ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அங்கு ஏதோ தொந்தரவு இருப்பதாகக் கூறுகிறார்.

உடனே, ஆங்கில மருத்துவம் அந்த இடத்தில் பரிசோதனைக் கருவிகள் மூலமாக சேதமடைந்த உறுப்புக்களைப் பார்த்துவிட்டுநோயைகண்டுபிடித்து விட்டோம் என்கிறது.

உண்மையில் அவர்கள் பார்ப்பது நோயின் விளைவுகளைத்தான்.

நோயின் விளைவுகளுக்குக் காரணமான, உடலில் வியாபித்து நிற்கும் ~கெட்ட சக்தி|யின் தன்மையினை உணர்ந்தறிந்து, அதை நீக்கும் வழியறியாத வரையில் நோயாளியின் எந்த ஒரு கஷ்டத்தையும் தீர்க்க முடியாது. இதுதான் ஆங்கில மருத்துவத்தின் உண்மையான இன்றைய நிலை.

அறுவை சிகிச்சையைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இந்தப் பிரிவின் வளர்ச்சி பாராட்டுக்குரியது அல்லவா?

ஒரு உறுப்பில் நோயின் விளைவுகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. நோய் இன்னதென்று புரியாத நிலையில், அவ்வுறுப்பில் நோயின் விளைவுகள் தீவிரமடைந்து அவ்வுறுப்பை நாளடைவில் சேதப்படுத்துகிறது. இந்த நிலையில்தான் பரிசோதனைக் கருவிகளும் ~ஸ்கேனர்| போன்ற ~டெஸ்ட்டுகளும்| சேதமடைந்த பகுதிகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இப்போது சேதமடைந்து விட்ட பகுதியை, அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடுகிறார்கள்.

ஒரு உறுப்பில் ஏற்பட்டுள்ள நோயை நீக்க டாக்டரிடம் சென்றால் அந்த உறுப்பையே அகற்றி விடுவார்கள்.

உதாரணமாக,

ஒரு சிறுவனுக்கு தொண்டையில் சளியும், ~டான்ஸில்ஸ்| வலியும் ஏற்படுகிறது. ~டான்ஸில்|ஸை நீக்கிவிடலாம் என்கிறார்கள்.

முழங்காலில் வலி என்று போனால் பல வருடங்கள் வைத்தியம் பார்த்த பிறகுஉங்களுக்கு மூட்டு தேய்ந்து விட்டது. அந்த மூட்டை நீக்கி வேறு மூட்டு பொருத்த வேண்டும்என்று கூறி விடுகிறார்கள்.

சாதாரண வாய்வுத் தொல்லையைக் கூட குணப்படுத்த முடிவதில்லை. வயிற்றில் புண்ணாக (ரடஉநச) மாறிய பிறகு வெட்டியெடுத்து விடுகிறார்கள்.

~அப்பென்டிஸைட்டிஸ்| என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அது திடீரென ஏற்படுவதில்லை. பல வருடங்கள் லேசான வலி அடி வயிற்றில் வந்து வந்து போகும். அது முற்றிய பிறகு ~எமர்ஜன்சி ஆபரேஷன்| செய்து விடுகிறார்கள்.

பெண்களுக்கு கர்ப்பப்பைக் கோளாற்றை சீர்செய்ய வழி தெரியாமல் கர்ப்பப் பையையே ஆபரேஷன் மூலமாக அகற்றி விடுகிறார்கள்.

இவ்வளவுக்குப் பிறகு நோயைக் குணப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறார்கள். ஒரு உறுப்பையே உடலைவிட்டு நீக்கிய பிறகு, உறுப்பிலுள்ள நோயைக் குணமாக்கி விட்டோம் (நோயாளியை குணப்படுத்தி விட்டோம்) என்ற பேச்சுக்கே இடமில்லை. மாறாக, நோயின் தீவிரம் உடலிலேயே தங்கி விடுகிறது. இன்னும் உடலிலுள்ள பிற உறுப்புக்களையும் வெகுவேகமாக பாதிக்க ஆரம்பிக்கிறது.

ஒரு நோயின் விளைவுகளுக்குக் காரணம் தெரியவில்லை என்றால் அதைத் தவிர்க்கவும் முடியாதல்லவா?

கண்டிப்பாக முடியாது.

அப்படியானால் முத்தடுப்பு ஊசி, போலியோ, டிஃப்தீரியா, டெட்டனஸ் போன்ற வியாதிகளுக்குச் சொட்டு மருந்து போடுகிறார்களே? அது இளம்பிள்ளை வாதம், தொண்டையடைப்பான் நோய் போன்றவை வராமல் நம்மைக் காப்பாற்றத்தானே செய்கிறது?

சொட்டு மருந்து, முத்தடுப்பு ஊசி போன்றவை ஹோமியோபதி மருத்துவ சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.

மற்றபடி இது ஆங்கில மருத்துவ தத்துவத்தின் அணுகுமுறையல்ல.

எய்ட்ஸ் போன்ற வியாதிகளுக்கு நிறைய ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்களே?

ஆராய்ச்சிகள் செய்யட்டும். வரவேற்க வேண்டும்.

~வைரஸ்| என்ற நுண்ணிய கிருமிதான் இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள். அதுபோன்றே, ரொம்பவும் பலவீனமான வேறொரு சாதாரண ~வைரஸ்|தான் ஜலதோஷம், தும்மல், சளி போன்றவற்றையும் ஏற்படுத்துகிறது. இந்த சாதாரண, பலவீனமான வைரஸ் நோய்க்கே மருந்து, மாத்திரைகள் கண்டுபிடித்த பாடில்லை.

ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிகள் பாதை மாறிச் சென்று கொண்டிருக்கிறது.

மற்ற மருத்துவங்கள் உதாரணமாக சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவம் போன்றவை ~எய்ட்ஸ்| நோயைக் குணப்படுத்த முடியும் என்று தைரியமாகக் கூறும்போது, ஆங்கில மருத்துவம் இத்தனை வருடங்களில் இறந்து விடுவார் என்று ஆரூடம் கூறுகிறது.

ஆங்கில மருத்துவத்தின் திசை மாறிப் போய்விட்ட ஆராய்ச்சிகள், எய்ட்ஸ் நோயாளியைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையை இவர்களுக்குத் துளியளவும் அளிக்கவில்லை.

மற்ற மருத்துவங்கள் இந்நோயைக் குணமாக்க முடியும் என்று தைரியமாகக் கூறுகின்றன. இம்மருத்துவங்கள் எந்த முறையில் ~எய்ட்ஸ்| நோயை அணுகுகிறது?

பாக்டீரியாக்கள் தாம் நமது உடலில் ~நோய் எதிர்ப்புச் சக்தி|யை உருவாக்குகிறது, வளர்க்கிறது, உறுதிப்படுத்துகிறது.

~பாக்டீரியாக் கொல்லி|கள் உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து விடுகிறது. இதன் காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது.

நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது எந்த நோய் வேண்டுமானாலும் உருவாகலாம். இதுதான் ஒரு நோய்க்கு அடிப்படை. அது கான்ஸர் ஆகட்டும், எய்ட்ஸ் ஆகட்டும். நோய்க்குப் பெயர் முக்கியமல்ல. காரணம்தான் முக்கியம்.

இதே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்போது அல்லது உறுதிப்படுத்தும்போது, உடலில் எந்த நோயாகட்டும், அது எங்கிருந்தாலும் குணமாகத்தான் வேண்டும் என்பது நியதி.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதிலும், புதுப்பிப்பதிலும், உறுதிப்படுத்துவதிலும்தான் மற்ற மருத்துவங்கள் பலவாறாகச் செயல்பட்டு வருகின்றன. எனவேதான் இம் மருத்துவங்கள் குணமாக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றன.

தைராய்டு, டயாபிடீஸ் (நீரிழிவு நோய்) போன்றவற்றை ஆங்கில மருத்துவ முறையில் மட்டும்தானே கவனிக்க முடிகிறது?

கவனிக்க மட்டும் தானே முடிகிறது? ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்திவிட்டதாக சரித்திரமே கிடையாதே.

காரணம் என்ன?

தைராய்டு, ~பான்க்கிரியாஸ்| போன்றவை உடலிலுள்ள சில உறுப்புக்கள். எந்த ஒரு உறுப்பும் வேலை செய்யவில்லை என்றால் அதற்குத் தேவையான சக்தி அவ்வுறுப்பினுள் இல்லை என்பதுதான் பொருள்.

டாக்டர் என்ற முறையில் நாம் செய்ய வேண்டியது அவ்வுறுப்புக்களுக்கு தேவையான சக்தியை அளித்து அதன் வேலையைப் புதுப்பிப்பது ஒன்றுதான். அத்துடன் தைராய்டு சம்பந்தமான நோயாகட்டும், அல்லது வேறு எந்தவிதமான நோயாகட்டும் நோய் நீங்குவது நிச்சயம்.

சக்தியை அடிப்படையாகக் கொண்ட மருத்துவங்களில் ஹோமியோபதியும், அகுபங்சரும் மிகச் சிறந்தவையாகும்.

சக்தியை அடிப்படையாகக் கொண்ட மருத்துவம் ஹோமியோபதியும், அகுபங்சரும் என்றால் நீங்கள் ஏன் இரண்டையும் கற்கவில்லை?

இரண்டையும் தான் கற்றிருக்கிறோம். இன்னும் இவை இரண்டும் ஒரு நோயைத் தீர்ப்பதில் ஒன்றுக்கொன்று இணக்கமாகச் செயல்படுகிறது. இவை இரண்டில் ஏதேனும் ஒன்றைக் கற்பதைக் காட்டிலும், இரண்டையும் சேர்ந்தே கற்பதே சிறந்தது.

பிறகு ஏன் நீங்கள் அகுபங்சர் வைத்தியத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து வைத்தியம் புரிகிறீர்கள்?

ஹோமியோபதிக்கும், அகுபங்சர் வைத்தியத்திற்குமுள்ள ஒரே ஒரு வித்தியாசம் இதுதான். ஹோமியோபதி வைத்தியம் செய்ய வேண்டுமென்றால் நோயாளிக்குத் தெரிந்த தொந்தரவுகள் இருக்க வேண்டும். ஆனால் அகுபங்சர் வைத்தியத்தில் இந்த தொந்தரவுகள் ஏற்படும் முன்னமேயே, அகுபங்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் அறிந்து தொந்தரவுகள் உருவாவதற்கு முன் அவற்றை நீக்கிவிட முடியும்.

ஹோமியோபதியைக் காட்டிலும், அகுபங்சர் ஒரு படி மேல். அவ்வளவுதான்.

நோயாளிகள் அனைவருக்கும் ஹோமியோபதி மருந்தையும் சேர்த்துக் கொடுப்பது அவசியம்தானே?

ஆறு, அல்லது 12 வைத்தியத்திற்குப் பிறகும் ஓரிருவருக்கு உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியாது. அப்படிப்பட்ட நோயாளிக்கு மட்டும் ஹோமியோபதி மருந்தைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும். முன்னேற்றம் ஏற்பட்டவுடன் மருந்தை முற்றிலும் நிறுத்தி விடலாம். நூற்றில் ஓரிருவருக்கே இந்த நிலை ஏற்படுகிறது. அதற்குக் காரணம் பலமுறை மருந்துகளை (அல்) யுவெiடிழைவiஉள பல வருடங்களாக தொடர்ந்து சாப்பிட்ட நிலையில் இருந்தாலும்,  பிறவியிலேயே மிகவும் சக்தி குறைந்த நிலையில் இருப்பவர்களுக்கும் அளவுக்கு அதிகமாக சக்தியை விரயம் செய்தவர்களுக்கும் இந்த நிலை ஏற்படலாம். மற்றபடி யாருக்கும் ஹோமியோபதி மருந்துகள் கொடுப்பது கிடையாது@ தேவையுமில்லை. அகுபங்சர் வைத்தியம் ஒன்றே போதுமானது.

அகுபங்சர் நாடிப் பரிசோதனையில் நீங்கள் நோயின் தன்மையினை எப்படி அறிந்து கொள்கிறீர்கள்?

நமது உடலில் மிக மிக முக்கியமான உறுப்புகள் 12 உள்ளன.

அவையாவன: வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, பித்தநீர்ப்பை, சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், பெரிகார்டியம் , இருதயம் போன்றவை.

இவை ஒவ்வொன்றிலும் அவற்றின் இயக்கத்திற்குத் தேவையான சக்தி (நுநெசபல) இருக்கிறதா? எந்த உறுப்பில் சக்தியானது அதிகமாகத் தேங்கி நிற்கிறது? இதன் காரணமாக எந்த உறுப்புக்குச் சக்தியானது குறைவாகச் செல்கிறது? அதைச் சீர்செய்ய என்ன செய்ய வேண்டும் என்ற முழு விவரத்தையும் அறிந்து கொள்ள முடியும். அதுவும் ஓரிரு நிமிடங்களில்!

இந்த நாடிப் பரிசோதனையின் அடிப்படையில்தான் உடலில்சக்தி ஓட்டத்தைசீர்படுத்தி நோயின் தன்மைகளைக் களைகிறது அகுபங்சர் வைத்திய முறை.

பரம்பரை வியாதிகள் என்கிற சில நோய்களான ஒற்றைத் தலைவலி, ஆஸ்துமா, பி.பி, சர்க்கரை நோய், சரும நோய்கள் போன்றவைகளைக் கண்டுபிடிக்கவோ அவற்றை நீக்கவோ சாத்தியக் கூறுகள் அகுபங்சர் வைத்தியத்தில் உள்ளதா?

ஜனன உறுப்புக்களின் வளர்ச்சிக்கும் இனவிருத்தி நல்ல முறையில் ஏற்படுவதற்கும் சிறுநீரகம் என்னும் உறுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகத்தின் சக்தி குறைவினால் இந்த நோய் ஏற்பட்டால் அது பரம்பரை நோயாக மாற வழிவகுக்கிறது. எனவே சிறுநீரகத்திற்கு சக்தி அளிப்பதன் மூலமாக ஆணுக்கோ, பெண்ணுக்கோ, குழந்தைகளுக்கோ எந்த நோயானாலும் நாடி மூலமாக கண்டுபிடித்து அதை நிவர்த்தி செய்துவிட முடியும்.

கர்ப்பமுற்ற நிலையில் 6-ம் மாதத்திலும் 9-ம் மாதத்திலும் தோலில் உள்ள சிறுநீரகத்தை உறுதிப்படுத்தக் கூடிய சில முக்கியமான அகுபங்சர் புள்ளிகளை வெறும் விரல்களால் மசாஜ் செய்வதன் மூலம் பரம்பரை நோய்களைக் குழந்தைகளுக்குப் பரவாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். மேலும் திடகாத்திரமான, ஆரோக்கியமான, நோய்களை எதிர்க்கும் சக்தியுடன் கூடிய குழந்தைகள் பிறக்கவும் அகுபங்சர் வைத்தியம் உதவி செய்கிறது.

பி.பி.யை (இரத்தக் கொதிப்பு) அகுபங்சரால் குணப்படுத்த முடியுமா?

பி.பி.யை மிகவும் சுலபமாகக் குணப்படுத்தி விடலாம். காரணம் பி.பி. என்பது ஒரு நோயே அல்ல.

மேற்சொன்ன உடல் உறுப்புக்களில் ஏதேனும் ஒரு உறுப்பில் சேதம் ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்ய அந்த உறுப்புக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ~இருதய இயக்கமும்| (ர்நயசவ சுயவந) இரத்த அழுத்தமும் அதிகரிக்காமல் இது சாத்தியமில்லை.

அதிக இரத்த அழுத்தம் (இரத்தக் கொதிப்பு) என்பது உடல் உறுப்புக்களில் ஏதோ ஒன்றில் சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் நமக்கு அறிவுறுத்துகிறது.

அந்த உறுப்பை நாடிப் பரிசோதனையின் மூலம் துல்லியமாக அறிய முடியும். அதற்குத் தேவையான சக்தியை அளிப்பதன் மூலம் அதிக இரத்த ஓட்டத்திற்கு அவசியமில்லாமல் செய்து செய்து விடலாம். இருதய இயக்கமும், இரத்த அழுத்தமும் தானாகவே சீரான நிலைக்கு வந்துவிடும்.

உதாரணமாக, சிறுநீரகத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டால் கை, கால்கள், முகம் வீங்குகிறது. இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. வயிற்றில் வாய்வுத் தொல்லைகள் மிகுதியாகும்போது பி.பி.யும் ஏற்படுகிறது. அளவுக்கதிகமான குடியினால் கல்லீரல் கெடும்போது கோபமும், பி.பி.யும் தலைதூக்குகிறது.

ஆக, பி.பி. என்பதுஇருதய நோய்அல்ல.

உடலில் ஏதோ ஒரு உறுப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நீங்கும் வரையில் அதிக இரத்த ஓட்டம் (இரத்தக் கொதிப்பு) அந்த உறுப்பினுள் நடைபெற்றாக வேண்டும். இது அவசியம்.

இதற்கு நேர்மாறாக, ஆங்கில மருத்துவம் பி.பி.யை ஒரு இருதயம் சம்பந்தமான நோயாகவே கருதுகிறது. இயற்கையான போக்குக்கு மாறாக இரத்த ஓட்டத்தைக் குறைக்கவும், இருதய இயக்கத்தைக் குறைக்கவும் படாதபாடு படுகிறது. இதன் காரணமாக மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே இரத்த அழுத்தம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆங்கில மருத்துவத்தின் இந்தச் செயல் பழுதடைந்து வரும் ஒரு உறுப்பில் மேலும் பாதிப்பினை அதிகப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இருதயமும் சோர்வடைய வழிவகுக்கிறது.

ஒரு நோயைக் குணப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை@ வைத்தியத்தின் மூலம் மேலும் மேலும் மோசமாக்கி விடாதீர்கள்..” என்பதுநவீன மருத்துவத்தின் தந்தைஎன்றழைக்கப்படும் ஹிப்போக்ரேட்டிஸ் (ர்ippழஉசயவநள) நமக்குக் கூறும் அறிவுரைகளில் மிக முக்கியமானதாகும். ஆங்கில மருத்துவம் செயல் முறையில் அறியாமலேயே பெருந் தவறிழைத்துக் கொண்டிருக்கிறது.

அகுபங்சர் வைத்தியத்தில் டயாக்னோஸிஸ் என்பதற்கு விளக்கம் உண்டா?

அகுபங்சர் வைத்தியத்தில் பி.பி. இருக்கிறது. சுகர் தொந்தரவு உள்ளது. தைராய்டு கஷ்டங்கள் இருக்கின்றன என்பன அர்த்தமற்றவையாகும். இந்த ஆங்கில டயாக்னோஸிஸ்க்கு எந்த மதிப்பும் கிடையாது. ஆனால் பி.பி. உள்ளவர் தன் உடலில் உள்ள உபாதைகளைக் கூறுவதன் மூலமும், சர்க்கரை நோய் உள்ளவர் தன் கஷ்டங்களைக் கூறுவதன் மூலமும், தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள் தன் உடலில் உள்ள நோய்களைக் கூறுவதன் மூலமும் நாடிப் பரிசோதனையினையும் அடிப்படையாகக் கொண்டு நோய்க் கூறுகளின் தன்மையும் இணைத்து வைத்தியம் செய்வதன் மூலம் டயக்னோஸிஸ் என்ற ஒன்றே தேவையில்லாமல் செய்துவிடலாம். எல்லா பி.பி.யும் ஒரே மாதிரியில்லை. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கோணங்களில் அவரவர் நாடித் துடிப்புக்கு ஏற்றவாறு வைத்தியம் செய்தாக வேண்டும். நாளடைவில் நோயாளிகளே ஆங்கிலப் பரிசோதனைகள் டயக்னோஸிஸ் எல்லாம் தேவையற்ற பெயர்கள் என்பதைப் புரிந்து கொள்வார்கள். வைத்தியம் மேற்கொள்ளும் போது மாத்திரைகளின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு, நோய்களின் கஷ்டங்கள் இயற்கையாகக் குறையும்போது, பி.பி., சுகர், தைராய்டு போன்ற நோய்களும் உடலிலிருந்து படிப்படியாக வெளியேறுகின்றன. இவ்வாறு நோயாளிகள் கூறும் தொந்தரவுகளும், உபாதைகளும் மட்டுமே டயாக்னோஸிஸ் ஆகக் கருதப்படுகிறது.
ழுசுபுயுN வுசுயுNளுPடுயுNவு

ஒரு உறுப்பு பழுதடைந்து விட்டால் வேறொருவருடைய உறுப்பை மாற்றி சிகிச்சை அளிக்கிறார்களே?

நோயின் காரணமாக ஏற்படும் விளைவுதான் ஒரு உறுப்பில் ஏற்படும் சேதம். அந்த உறுப்பை நீக்குவதென்பது, நோயின் ஒரு விளைவை நீக்குவதாகத்தான் பொருள்!

நோயின் தன்மை உடலினுள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைச் சீர்செய்யாத வரையில் எத்தனை முறை உறுப்பு மாற்றம் செய்தாலும் அவையும் பழுதடையத்தான் செய்யும்.

இப்போது அவசரசிகிச்சைப் பிரிவுஎன்று ஒன்று இருக்கிறது. அடிபட்டு கை, கால் முறிந்து விடுகிறது. உடனடியாக சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுகிறார்கள். அகுபங்சர் மருத்துவத்திலோ அல்லது மாற்று மருத்துவத்திலோ உயிரைக் காப்பாற்றக் கூடிய அளவுக்கு ஆங்கில மருத்துவத்திற்கு ஈடாக செய்ய முடியுமா?

அடிபட்டு கை, கால் முறிவு, ஆக்ஸிடென்ட் போன்ற சமயங்களில் தற்காலிகமாக உயிரைக் காக்கக் கூடிய அவசர சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவத்திற்கு ஈடாக எதுவும் இல்லை.

ஆனால் அவசர நிலையைத் தாண்டிய பிறகு, காயமடைந்த பகுதிகளை, ரணங்களை ஆற்றுவதற்கு மாற்று மருத்துவத்திற்கு இணையாக ஆங்கில மருத்துவம் நிற்க முடியாது.

காயமடைந்த பகுதிகள் ஆறுவதற்குத் தேவையான சக்தியை மாற்று மருத்துவம் அளிக்கிறது. ஆங்கில மருத்துவத்திற்கு இம்முறை தெரியாததால் காயமடைந்த பகுதிகள் ஆற நீண்ட நாட்களாகிறது.

உதாரணமாக, அடிபட்டு கை எலும்பு முறிந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். முறிந்த எலும்பை ஒன்று சேர்த்து மாவு கட்டு போடுகிறார்கள். எலும்புகள் ஒன்று சேர குறைந்தது 6 அல்லது 8 வாரங்கள் ஆகும். ஆனால் அகுபங்சர் முறையில் 3 வாரங்களுக்குள்ளாகவே குணமாக்கிவிட முடியும்.

மூட்டு வலியால் நிறையப் பேர் அவதிப்படுகிறார்கள். ஆங்கில மருத்துவப் பரிசோதனைகள் மூட்டு தேய்ந்து விட்டதாகக் கூறுகிறது. இந்நிலையில் அகுபங்சர் இந்த நோயைத் தீர்க்க முடியுமா?

கண்டிப்பாக, மூட்டுக்கள் தேய்ந்து விட்ட நிலையிலும், தேய்ந்து போன மூட்டுக்களுக்குத் தேவையான சக்தியை அளிப்பதன் மூலம் அவற்றைப் புதுப்பிக்க முடியும்.

அகுபங்சர் சிகிச்சையின் அணுகுமுறை எந்த விதத்தில் ஆங்கில மருத்துவத்திலிருந்து வித்தியாசப்படுகிறது?

ஒரு நோயாளி ஒரு இடத்தில் வலி இருப்பதாகக் கூறினால், நோய் அங்குதான் இருக்கிறது என்று கூறுகிறது ஆங்கில மருத்துவம். ஆனால் அகுபங்சர் மருத்துவம் நோயாளி காட்டும் இடத்தில் நோயின் தோற்றம் கிடையாது என்கிறது.

உணவிலிருந்து சக்தியை கிரகிக்கும் பொறுப்பு ஜீரண உறுப்புக்களுடையது. இவ்வாறு பெறும் சக்தி உடல் உழைப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது. உடல் உழைப்புக்குப் பயன்படுபவை தசைகளும், எலும்புகளும், மூட்டுக்களும்தான்.

ஜீரண உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உணவிலுள்ள சக்தியைக் கிரகித்து அளிக்கிறது.

எந்த ஜீரண உறுப்பு எந்தப் பாகத்திற்கு சக்தியளிக்கிறது என்பதைப் பார்ப்போம்.

1. வயிறு, மண்ணீரல் - இடுப்பு, விலாப் பகுதி ஆகியவற்றின் அசைவுகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கிறது.
வயிறும், மண்ணீரலும் அவற்றின் வேலையில் சோர்வுறும் போது இடுப்பு, விலாப் பகுதியில் அசைவுக்குத் தேவையான சக்தியை உணவிலிருந்து கிரகிக்க முடிவதில்லை. இதன் காரணமாக இடுப்பு விலாப் பகுதியில் வலி எடுக்க ஆரம்பிக்கிறது. அங்கு அளவுக்கு மீறிய ஊளைச் சதையும் போட ஆரம்பிக்கிறது.
2.
சிறுநீரகம் - முழங்காலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. ஒருவருக்கு முழங்காலில் ~ஆர்த்ரைட்டிஸ்| இருக்கிறதென்றால், அவர் சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்துள்ளது என்பதுதான் அர்த்தம். முழங்கால் மூட்டு வலி முழங்காலில் அல்ல. சிறுநீரகத்தின் செயலை உறுதிப்படுத்தாத வரையில் முழங்கால் மூட்டு வலியைக் குணப்படுத்த முடியாது. நாளடைவில் சிறுநீரகக் கோளாறு தலைதூக்கும்.
3.
சிறுநீர்ப்பைகழுத்து முதல் அடி முதுகுத் தண்டு வரை உள்ள மூட்டுக்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.
எனவே, கழுத்து, பிடரி வலி (ஊநசஎiஉயட ளுpழனெலடழளளை) அடிமுதுகுத் தண்டில் வலி (டுரஅடியச ளுpழனெலடழளளை) அடிமுதுகில் வலி ஆரம்பித்து பின் தொடை வழியாக, கால் வரை வலி பரவுதல் (ளுஉயைவiஉய) போன்றவை முதுகுத் தண்டில் ஏற்படும் கோளாறினால் அல்ல. நரம்பு மண்டலத்துடன் சம்பந்தப்பட்டதும் அல்ல.
சிறுநீர்ப்பைக்குத் தேவையான சக்தியைக் கொடுப்பதன் மூலம் மட்டுமே இந்த அனைத்துத் தொந்தரவுகளையும் குணப்படுத்த முடியும்.
4.
கல்லீரல் - உடல் தசைகள் அனைத்திற்கும் வேண்டிய சக்தியை அளிக்கிறது. தலைவலி, உடல்வலி போன்றவற்றை குணப்படுத்த கல்லீரலுக்கு சக்தி அளிக்க வேண்டும்.
5.
இருதயம் - முழங்கைக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. முழங்கை வலி இருதயம் பழுதடைந்து வருவதை அறிவிக்கிறது.
6.
தோள்பட்டையில் வலி ஏற்படுதல் நுரையீரல் பலவீனத்தைக் காட்டுகிறது.

அகுபங்சர் வைத்தியம் மேற்கொண்ட பிறகு உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கணிப்பது எப்படி?

உதாரணத்திற்கு ஒருவர் பத்து விதமான உடல் தொந்தரவால் வைத்தியம் எடுத்துக் கொள்கிறார் என வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு முறையும் வைத்தியம் செய்யும் பொழுதும் சில கஷ்டங்கள் குறையாமல் இருக்கலாம். ஒரு சிலருக்கு சில நாட்கள் குறைந்து மீண்டும் சில நாட்கள் கழித்து மீண்டும் ஆரம்பிக்கலாம். இதனால் நோய்கள் திரும்பி விட்டன என அர்த்தம் கிடையாது. தொடர்ந்து சிகிச்சை அளிக்க அவை நல்ல முறையில், நிரந்தரமாக மறையத் தொடங்கும். திரும்பத் திரும்ப வருவதன் மூலம் நாடியின் மாறுதலுக்கு ஏற்ப அந்த நோய்களை நல்ல முறையில் வேருடன் களைய முடியும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த சிகிச்சை முறை ஏன் இன்னும் பிரபலமாகவில்லை?

அகுபங்சர் டாக்டர்களின் திறமைக் குறைவுதான் இதற்குக் காரணம்.

அகுபங்சர் சித்தாந்தம் கூறுகிறது, உண்மையான திறமை என்னவென்றால், ஒரே ஒரு ஊசியைக் கொண்டு 10,000 உடல் குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பதாகும்.

 

spacer.pngspacer.pngspacer.png

Edited by nilmini
  • Like 3
  • Thanks 5
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nilmini said:

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்து அலபாமாவுக்கு கேட்டுது.

நில்மினி! மிக்க நன்றி. உங்கள் ஆலோசனையும் ,பிரயோசனம் நிறைந்த கேள்வி பதில் கட்டுரையும் பல தடவைகள் வாசித்தேன்.எனக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கின்றது. அத்துடன் நான் அக்குபஞ்சர் சிகிச்சையை ஆரம்பித்து விட்டேன்.அவர் ஒரு சீன இயற்கை பெண் மருத்துவர்.
அது பற்றி ஓரிரு நாட்களில் விரிவாக எழுதுகின்றேன்.

மீண்டுமொரு முறை மிக்க நன்றி நில்மினி.🙏🏽

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:
5 hours ago, nilmini said:

ஒரு மாதத்துக்கும் மேலாக பொறுமையாக இருந்த குமாரசாமி அண்ணாவுக்கு வணக்கம். எங்க மூட்டு நோ எல்லாம் உச்சத்துக்கு போனப்பிறகுதான் நில்மினி பதில் போடுவா என்று நீங்கள் வீட்டில் சொன்னது எனக்கு ஜேர்மனியில் இருந்து அலபாமாவுக்கு கேட்டுது.

நில்மினி! மிக்க நன்றி. உங்கள் ஆலோசனையும் ,பிரயோசனம் நிறைந்த கேள்வி பதில் கட்டுரையும் பல தடவைகள் வாசித்தேன்.எனக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கின்றது. அத்துடன் நான் அக்குபஞ்சர் சிகிச்சையை ஆரம்பித்து விட்டேன்.அவர் ஒரு சீன இயற்கை பெண் மருத்துவர்.
அது பற்றி ஓரிரு நாட்களில் விரிவாக எழுதுகின்றேன்.

மீண்டுமொரு முறை மிக்க நன்றி நில்மினி.🙏🏽

பெரியதொரு விளக்கத்திற்கு மிகவும் நன்றி.
சரி அக்குபங்சர் செய்வதற்கு சரியான ஆளை எப்படி கண்டுபிடிப்பது?

ஐயா குமாரசாமி எப்படி அக்குபங்சர் டாக்ரரை கண்டுபிடித்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

பெரியதொரு விளக்கத்திற்கு மிகவும் நன்றி.
சரி அக்குபங்சர் செய்வதற்கு சரியான ஆளை எப்படி கண்டுபிடிப்பது?

ஐயா குமாரசாமி எப்படி அக்குபங்சர் டாக்ரரை கண்டுபிடித்தீர்கள்?

தெரிந்த ஆட்கள் மூலமாகத்தான் போகவேணும். கனடாவில் நல்ல Chinese clinic குகள் இருக்கு. அனுபவம் நிறைந்த சீனாவில் பயிற்சி எடுத்த வைத்தியராக இருக்க வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nilmini said:

தெரிந்த ஆட்கள் மூலமாகத்தான் போகவேணும். கனடாவில் நல்ல Chinese clinic குகள் இருக்கு. அனுபவம் நிறைந்த சீனாவில் பயிற்சி எடுத்த வைத்தியராக இருக்க வேணும். 

நன்றி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

நீங்கள் அக்கறையாக, உங்கள் நேரத்தை பாவித்து ஆராய்ந்து , அதை சலிக்காமல் எழுதுவதற்கு உங்களிடம் உள்ள சேவை மனப்பான்மைக்கு நன்றி.  


 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி நில்மினி, நேரமிடுத்து இவ்வளவு தகவல்களை தந்ததிற்கு. பலருக்கும் பயன்படும், அங்குபஞ்சர் & யுனானி இரண்டும் நல்ல மருத்துவ முறைகள்,

மெட்ராஸ் ஐ நோய்க்கு எதிலும் மருந்தில்லை என நினைக்கின்றேன் ஆனா யுனானி மருத்துவத்திலிருக்கு. என் மச்சான் இதுதான் படித்தவர் கொழும்பில், அவர் எனக்கு கண் நோய் வந்த போது தந்தார் 2-3 மணித்தியாலத்தில் போன இடம் தெரியவில்லை 👍

தீர்க்க முடியா பல வியதிகளை யுனானி, ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவ முறை மூலம் இயன்றவரை தீர்கின்றார்கள் (கொரோணா விதிவிலக்கு). நல்ல பொதுநாலம் உள்ளவர் யார் என்ன உதவி கேட்டாலும் நேரம் பாராது உதவி செய்வார். அவரைப்பற்றி கனக்க எழுதலாம், அப்படி உதவி வாற போற எல்லோருக்கும், யாரென்றில்லை. இப்ப கைதடியில் தான் வேலை - யாரவது கள உறவுகளுக்கு அவரின் மருத்துவ உதவி ஊரில் தேவையென்றால் கூறுங்கள், அவரை அறிமுகப்படுத்தி விடுகின்றேன்

கைதடியில் ஒரு வயது போன வன்னி ஆச்சிக்கு வைத்தியம் பார்த்திகிட்டு இருந்தவர், அவரும் பேரனும் மட்டும்தான், மகள் மருமகன் கடைசி சண்டையில் இறந்துவிட்டார்கள், உறவினர்களும் குறைவு, பாட்டி இறந்துவிட யாரும் பொறுப்பேற்க்கவில்லை, இப்ப தானே த த்து எடுத்து தன் மகன்களுடன் வளர்க்கின்றார்.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, உடையார் said:

தீர்க்க முடியா பல வியதிகளை யுனானி, ஆயுர்வேதம், ஆங்கில மருத்துவ முறை மூலம் இயன்றவரை தீர்கின்றார்கள் (கொரோணா விதிவிலக்கு). நல்ல பொதுநாலம் உள்ளவர் யார் என்ன உதவி கேட்டாலும் நேரம் பாராது உதவி செய்வார். அவரைப்பற்றி கனக்க எழுதலாம், அப்படி உதவி வாற போற எல்லோருக்கும், யாரென்றில்லை. இப்ப கைதடியில் தான் வேலை - யாரவது கள உறவுகளுக்கு அவரின் மருத்துவ உதவி ஊரில் தேவையென்றால் கூறுங்கள், அவரை அறிமுகப்படுத்தி விடுகின்றேன்

தகவலுக்கு நன்றி உடையார். எனக்கு சில Allergy issues இருக்கு. மகனுக்கும் சில பிரச்சனைகள்.  கைத்தடி வைத்தியரின் விலாசம் தொலைபேசி இலக்கம் இருந்தால் பகிரவும். கோரோனோ பிரச்சனை தீர்ந்தால் வருட இறுதியில் போகலாம் என்று இருக்கிறேன் .

2018 இல் இந்த சித்த வைத்தியசாலையை பார்க்க போயிருந்தேன். அரசு நடத்தும் இலவச மருத்துவமனை. ஆனால் எமது மக்களுக்கு இதில் ஆர்வம் இல்லை. எல்லோரும் ஆங்கில மருத்துவதையே விரும்புதாக அங்கு வேலை செய்வோர் சொன்னார்கள். மூலிகை செடி எல்லாம் வளர்த்து நல்ல சுத்தமாக வைத்திருக்கிறார்கள். நான் போகும்போது இருவர் மட்டுமே சிகிச்சைக்காக தங்கி இருந்தார்கள். 25 பேர்வரை தங்கி இருக்கக்கூடிய நல்ல வசதியான மருத்துவமனை. இப்படியே போனால் விரைவில் மூடி விடுவார்கள்.

spacer.png

spacer.png

spacer.pngspacer.png

spacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.pngspacer.png

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nilmini said:

ஆனால் எமது மக்களுக்கு இதில் ஆர்வம் இல்லை. எல்லோரும் ஆங்கில மருத்துவதையே விரும்புதாக அங்கு வேலை செய்வோர் சொன்னார்கள்.

இது ஏன் வெளிநாட்டில் உள்ள எம்மவர்களுக்கு ஆலோசனை, மற்றும் மருந்துகளை விநியோகிப்பது பற்றி யோசிக்கவில்லை?

பரீட்சாத்த முயற்சியாக செய்து பார்க்கலாம், கோரானவால்  வந்த remote working இன் அனுபவத்தை பாவித்து.   

ஆனால், விருப்பம் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, nilmini said:

தகவலுக்கு நன்றி உடையார். எனக்கு சில Allergy issues இருக்கு. மகனுக்கும் சில பிரச்சனைகள்.  கைத்தடி வைத்தியரின் விலாசம் தொலைபேசி இலக்கம் இருந்தால் பகிரவும். கோரோனோ பிரச்சனை தீர்ந்தால் வருட இறுதியில் போகலாம் என்று இருக்கிறேன் .

2018 இல் இந்த சித்த வைத்தியசாலையை பார்க்க போயிருந்தேன். அரசு நடத்தும் இலவச மருத்துவமனை. ஆனால் எமது மக்களுக்கு இதில் ஆர்வம் இல்லை. எல்லோரும் ஆங்கில மருத்துவதையே விரும்புதாக அங்கு வேலை செய்வோர் சொன்னார்கள். மூலிகை செடி எல்லாம் வளர்த்து நல்ல சுத்தமாக வைத்திருக்கிறார்கள். நான் போகும்போது இருவர் மட்டுமே சிகிச்சைக்காக தங்கி இருந்தார்கள். 25 பேர்வரை தங்கி இருக்கக்கூடிய நல்ல வசதியான மருத்துவமனை. இப்படியே போனால் விரைவில் மூடி விடுவார்கள்.

நில்மினி தனிமடலில் அனுப்பிவிடுகின்றேன் விபரங்களை , அவர்கள் ஆயுர்வேத முறையில் மசாஜும்  செய்கின்றார்கள். நல்ல இடம் எம்மவர்கள்தான் பாவிப்பதில்லை

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/6/2020 at 17:25, குமாரசாமி said:

நில்மினி! மிக்க நன்றி. உங்கள் ஆலோசனையும் ,பிரயோசனம் நிறைந்த கேள்வி பதில் கட்டுரையும் பல தடவைகள் வாசித்தேன்.எனக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கின்றது. அத்துடன் நான் அக்குபஞ்சர் சிகிச்சையை ஆரம்பித்து விட்டேன்.அவர் ஒரு சீன இயற்கை பெண் மருத்துவர்.
அது பற்றி ஓரிரு நாட்களில் விரிவாக எழுதுகின்றேன்.

மீண்டுமொரு முறை மிக்க நன்றி நில்மினி.🙏🏽

பதில் போட்டுவிட்டேன் என்று நினைத்தேன். நீங்கள் சிகிச்சை ஆரம்பித்தது மிகவும் நல்லது. அனுபவம் மிகுந்த சீன மருத்துவர்களே நல்லது. கட்டாயம் உங்கள் அனுபவங்களை பகிருங்கள். ஏற்கனவே முன்னேற்றம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு ஒவ்வொரு வருடமும் சமருக்கு ஒரு பக்கம் கன்னம் ,பல் எல்லாம் நோகிறது ...சாப்பிடுறது கஸ்டமாய் இருக்கு...இது எதுக்கு வருகுது. என்ன செய்யமாம் என்று சொல்வீர்களா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, ரதி said:

எனக்கு ஒவ்வொரு வருடமும் சமருக்கு ஒரு பக்கம் கன்னம் ,பல் எல்லாம் நோகிறது ...சாப்பிடுறது கஸ்டமாய் இருக்கு...இது எதுக்கு வருகுது. என்ன செய்யமாம் என்று சொல்வீர்களா 

நிச்சயம் பதிவிடுகிறேன் ரதி 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, ரதி said:

எனக்கு ஒவ்வொரு வருடமும் சமருக்கு ஒரு பக்கம் கன்னம் ,பல் எல்லாம் நோகிறது ...சாப்பிடுறது கஸ்டமாய் இருக்கு...இது எதுக்கு வருகுது. என்ன செய்யமாம் என்று சொல்வீர்களா 

கனக்க  கதைச்சாலும் வாய் நோகும் 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nilmini said:

நிச்சயம் பதிவிடுகிறேன் ரதி 

நன்றி ...நேரம் இருக்கும் போது பதிவிடுங்கள் ...இடது பக்க கன்னம் ,காது ,வாய் ,அந்த பக்கம் இருக்கும் சில பற்களும் நோகின்றன ...இதெல்லாம் சமருக்கு நல்ல வெக்கையான நேரத்தில் மட்டும் தான் வருகுது ...நான் மருந்துக்கள் எடுப்பதில்லை .
 

13 minutes ago, Kapithan said:

கனக்க  கதைச்சாலும் வாய் நோகும் 😂😂

ஹாஹா... நான் யாரோடையும் அதிகம் கதைக்க போறதில்லை ...அமைதியான பொண்ணாக்கும்...நான் யாழில் எழுதுவதை என் சகோதரங்கள் பார்த்தால் அவர்களுக்கு ஹாட் அட்டாக் வந்தாலும் வரும் 😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரதி said:

நன்றி ...நேரம் இருக்கும் போது பதிவிடுங்கள் ...இடது பக்க கன்னம் ,காது ,வாய் ,அந்த பக்கம் இருக்கும் சில பற்களும் நோகின்றன ...இதெல்லாம் சமருக்கு நல்ல வெக்கையான நேரத்தில் மட்டும் தான் வருகுது ...நான் மருந்துக்கள் எடுப்பதில்லை .
 

ஹாஹா... நான் யாரோடையும் அதிகம் கதைக்க போறதில்லை ...அமைதியான பொண்ணாக்கும்...நான் யாழில் எழுதுவதை என் சகோதரங்கள் பார்த்தால் அவர்களுக்கு ஹாட் அட்டாக் வந்தாலும் வரும் 😀

😂😂

நம்பீட்டோம். 😜😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 23/6/2020 at 12:52, nilmini said:

பதில் போட்டுவிட்டேன் என்று நினைத்தேன். நீங்கள் சிகிச்சை ஆரம்பித்தது மிகவும் நல்லது. அனுபவம் மிகுந்த சீன மருத்துவர்களே நல்லது. கட்டாயம் உங்கள் அனுபவங்களை பகிருங்கள். ஏற்கனவே முன்னேற்றம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறன் 

நன்றி நில்மினி.

அக்குபஞ்சர் என்றவுடன் எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. இருந்தாலும் வலியின் அவதியாலும் அதற்கு எடுக்கும் குளிசையின் பக்கவிளைவாலும் ஒரு முடிவோடு அக்குபஞ்சர் யாத்திரையை தொடங்கி விட்டேன். :grin:

அவர் ஒரு சீன மருத்துவர். மூன்று வருடங்கள் ஆங்கில மருத்துவம் படித்ததாகவும் இரண்டு வருடங்கள் அக்குபஞ்சர் மருத்துவம் படித்ததாகவும் கூறினார். முதல் நாள் போகும் போது எனது வைத்தியசாலை வரலாற்று பைலை அவரிடம் சமர்ப்பித்தேன். எடுக்கும் மருந்துகளின் விபரங்களையும் காட்டினேன்.எல்லாவற்றையும் பார்த்து விட்டு அவர் தனது அறிக்கையை சொன்னார். அதாவது வலிகளை குறைக்க 100% முடியாது.ஆனால் குறைக்க முயற்சி செய்யலாம்.பத்து தடவைகள் செய்ய வேண்டும்.படிப்படியாக  முன்னேற்றம் தெரியலாம் என்றார்.நானும் சரிப்பட்டவுடன் முதல் நாள் சிகிச்சை ஆரம்பமானது.

முதலில் இடுப்பு முதுகு வளைவுகளை விரலால் தடவி அளவெடுப்பது போல் இருந்தது.பின்னர் தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் இடப்பக்கம் வலப்பக்கம் என இஞ்சிக்கணக்கில் அமத்தி பார்த்தார்.சில இடங்களில் உருவி விடுவது போல் உருவி விட்டு நாடி பிடித்து பார்த்தார். நாக்கின் அடிப்பக்கத்தை முக்கியமாக பலதடவைகள் பார்த்தார். நானும் ஏனென்று கேட்கவில்லை.முதுகு தசைகள் இறுக்கமாக இருப்பதாக கூறி ஒரு சில  பயிற்சி முறைகளை செய்து காட்டினார். முழங்கால் தசைகளும் மிக இறுக்கமாக  இருப்பதாக கூறினார். அதற்கும் ஒரு சில பயிற்சி முறைகளை செய்து காட்டினார்.அக்குபஞ்சரோடு நிற்காமல் காட்டித்தந்த பயிற்சி முறைகளையும் தினசரி செய்ய வேண்டுமென அறிவுறுத்தினார்.

பின்னர் வயிற்று பக்கமாக படுக்க விட்டு  கழுத்திற்கு கீழிருந்து  கால் வரைக்கும்14 ஊசிகள் ஏற்றினார். நினைத்த அளவிற்கு பெரிதாக வலி தெரியவில்லை.இருந்தாலும்  சில இடங்களில் சுள்ளென இருந்தது.அரை மணி நேரத்தின் பின் ஊசிகள் அனைத்தையும் அகற்றி விட்டு இரத்தம் வருகின்றதான் என பார்த்தார்.  பின்னர் முதுகுப்பக்கமாக படுக்க சொல்லி விட்டு வயிற்றை சுற்றி பல ஊசிகள். முழங்காலிலும்  முழங்காலுக்கு கீழும் பல ஊசிகள்.முழங்காலில்  ஊசி குத்தும் போது இயமன் முன்னால் நின்ற உணர்வு.ஒவ்வொரு ஊசிக்கும் உச்சி பிளக்கும் வலி....😖

இப்ப எனக்கு எழுதினதிலை கை வலி மிச்சத்தை பேந்து எழுதுறன்....😎

Edited by குமாரசாமி
இறுக்கமாக 😎
  • Like 1
  • Thanks 1
  • Haha 1
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

நன்றி நில்மினி.

அக்குபஞ்சர் என்றவுடன் எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது. இருந்தாலும் வலியின் அவதியாலும் அதற்கு எடுக்கும் குளிசையின் பக்கவிளைவாலும் ஒரு முடிவோடு அக்குபஞ்சர் யாத்திரையை தொடங்கி விட்டேன். :grin:

இப்ப எனக்கு எழுதினதிலை கை வலி மிச்சத்தை பேந்து எழுதுறன்....😎

நன்றி குமாரசாமி அண்ணா. மேலும் எழுதுங்கள். இந்தமாதிரியான வைத்தியமுறைகள் நேரமெடுக்கும் ஆனால் பக்க விளைவுகள் இல்லாமால்  குணப்படுத்தும்.ஆங்கில வைத்திய முறையின் பிரச்சனையே பக்க விளைவுகள்தான். பெரும்பாலான ஆங்கில மருந்துகள்  நோய் இருக்கும் இடத்தை மட்டும் அணுகாமல் உடலின் ஒரு பரந்த இடத்தையோ அல்லது முழு உடலுக்கும்  மருந்தின் பாதிப்பு இருக்கும். பலரும் ஆங்கில வைத்திய முறையை மட்டும் தெரிவு செய்வதின் காரணம் உடனடி நிவாரணம், கஸ்டமில்லாத மருத்துவ சிகிச்சை. இந்தமாதிரியான, வலிகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்தமாதிரியான பழமையான இயற்கை வைத்தியம் தான் சிறந்தது. சத்திர சிகிச்சை, மற்றும் பாரதூரமான நோய்களுக்கு ஆங்கில மருத்துவமுறைதான் ஒரே வழி . எனவே இதை கைவிடாமல் (பல்லை கடித்துக்கொண்டு) தொடர்ந்து செய்து முடியுங்கள் . அசுபஞ்சரால கை  நோகுதோ அல்லது எழுதி நோகுதோ ?

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 1/7/2020 at 05:37, nilmini said:

நன்றி குமாரசாமி அண்ணா. மேலும் எழுதுங்கள். இந்தமாதிரியான வைத்தியமுறைகள் நேரமெடுக்கும் ஆனால் பக்க விளைவுகள் இல்லாமால்  குணப்படுத்தும்.ஆங்கில வைத்திய முறையின் பிரச்சனையே பக்க விளைவுகள்தான். பெரும்பாலான ஆங்கில மருந்துகள்  நோய் இருக்கும் இடத்தை மட்டும் அணுகாமல் உடலின் ஒரு பரந்த இடத்தையோ அல்லது முழு உடலுக்கும்  மருந்தின் பாதிப்பு இருக்கும். பலரும் ஆங்கில வைத்திய முறையை மட்டும் தெரிவு செய்வதின் காரணம் உடனடி நிவாரணம், கஸ்டமில்லாத மருத்துவ சிகிச்சை. இந்தமாதிரியான, வலிகள் மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்தமாதிரியான பழமையான இயற்கை வைத்தியம் தான் சிறந்தது. சத்திர சிகிச்சை, மற்றும் பாரதூரமான நோய்களுக்கு ஆங்கில மருத்துவமுறைதான் ஒரே வழி . எனவே இதை கைவிடாமல் (பல்லை கடித்துக்கொண்டு) தொடர்ந்து செய்து முடியுங்கள் . அசுபஞ்சரால கை  நோகுதோ அல்லது எழுதி நோகுதோ ?

இன்றுடன் 6வது நாள் போய் வந்து விட்டேன். நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. 

20 வயதிலை ஓடித்திரிஞ்ச மாதிரி இனி ஏலாது எண்டு நினைக்கிறன் :grin:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

இன்றுடன் 6வது நாள் போய் வந்து விட்டேன். நல்ல முன்னேற்றம் தெரிகின்றது. 

20 வயதிலை ஓடித்திரிஞ்ச மாதிரி இனி ஏலாது எண்டு நினைக்கிறன் :grin:

மகிழ்ச்சி. தொடர்ந்து செல்லுங்கள். என்னதான் அக்குபஞ்சர் செய்தாலும் பழைய என்ஜின் தானே. 20 வயசு இனி அடுத்த ஜன்மம் ஒன்று இருந்தால்தான். சும்மா பகிடிக்கு சொன்னேன். எல்லாம் மனம் தான். மனம் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருந்தால் என்று இளமை தான் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, nilmini said:

மகிழ்ச்சி. தொடர்ந்து செல்லுங்கள். என்னதான் அக்குபஞ்சர் செய்தாலும் பழைய என்ஜின் தானே. 20 வயசு இனி அடுத்த ஜன்மம் ஒன்று இருந்தால்தான். சும்மா பகிடிக்கு சொன்னேன். எல்லாம் மனம் தான். மனம் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருந்தால் என்று இளமை தான் 

பழைய எஞ்சினுக்கு  ஒரு டிங்கர் வேலை செய்தாச்சு. இப்ப மிச்ச டிங்கர் வேலை நடக்குது......பாப்பம் என்ன நடக்குதெண்டு???????
ஞாபக மறதிக்கும் எங்கையாவது குத்திகித்தி புதுப்பிக்கலாமோ எண்டொருக்கால் கேட்டுப்பாப்பம் எண்டு யோசிச்சிருக்கிறன். 😎

  • Haha 1



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.