Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உடம்புக்கு நல்லதெண்டால் சாப்பிடத்தான்  வேணும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு. 😎

சீ வேண்டாம் விட்டுடூங்கோ 

  • Replies 391
  • Views 59.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

உடம்புக்கு நல்லதெண்டால் சாப்பிடத்தான்  வேணும்.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு. 😎

அவ பாவம் என்று சொன்னது நாயையும் பாம்பையும்தான்.....!  🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உங்கள் பதிலிற்கு மிக்க நன்றி.

இன்னுமொரு சிறிய கேள்வி.
நாய் இறைச்சி மற்றும் பாம்பு இறைச்சி தசைப்பிடிப்புகளுக்கு நல்லதென கேள்விப்பட்டேன்.உண்மையா?

இதென்ன சீனாக்காரன் மாதிரி நிற்பன, பறப்பன , மிதப்பன  எண்டு எல்லாத்தையும் சாப்பிட்டு கோரோனோ மாதிரி வைரஸ் தான் கிடைக்கும். அது எல்லாம் உண்மை இல்லை. தசைக்கு தேவை நல்ல ஒட்சிசன் (அதுதான் சுவாசப் பயிற்சி என்று சொன்னேன்)புரதம், கொழுப்பு, விட்டமின் , மினெரல்ஸ், detoxifying food  மற்றும் படுப்பதுக்கு நல்ல firm ஆன  மெத்தை போன்றவை. தசைக்கு ஒட்சிசன் பத்தாட்டி  நோ அதிகமாகும்

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nilmini said:

அந்த 'சேவற்கொடியோன் தாத்தா' சேவலையே சாப்பிட மாட்டார், நீங்க வேறை அவரின் பகிடியை சீரியசாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறீர்களே..? 🤩

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2020 at 15:25, பாலபத்ர ஓணாண்டி said:

கோடி நன்றிகள் டாக்டர்.. பெரிய ஒரு மனப்பயம்போனது.. இன்றைக்கு சேவை செய்யும் மருத்துவ உலகம் வியாபார உலகமாகிவிட்ட நிலையில் ஒரு ஆலோசனை பெறக்கூட பணம்கட்டி காத்திருந்து அப்பொயிண்ட்மெண்ட் எடுக்க வேண்டி இருக்கும் நிலையில் நீங்கள் உங்கள் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியில் நேரமொதுக்கி அதுவும் மினக்கெட்டு இருந்து ரைப்பண்ணி அதுவும் எமது தாய்மொழியில் பதில் அளிக்கிறிர்கள்.. இதற்கு ஒரு மனம் வேண்டும்.. உங்களை மட்டும் வளர்த்துகொண்டு உங்கள் வேலையை பார்த்துகொண்டு போகாமல் உண்மையில் நீங்கள் உங்கள் இனத்திற்கு செய்யும் அளப்பரிய சேவை இது..

ஆங்கிலம் பேசாத வேறு மொழிபேசும் வெளிநாடுகளில் வாழும் உறவுகள் அந்த நாட்டு மொழி தெரியாவிட்டால் விசா இல்லாதவர்கள் வைத்திய ஆலோசனை சந்தேகம் இருந்தால் இந்த திரியை பயன்படுத்தி பயன்பெறுங்கள்..

இந்த திரியை யாழ் இணையம் கைலைட் பண்ணி விட்டால் எப்போதும் வேறு திரிகளால் பின்னுக்கு தள்ளப்படாமல் முன்னுக்கே இருக்கும்.. மருத்துவ ஆலோசனைகள் தேவைப்படும்போதெல்லாம் திரியை தேடித்திரியாமல் உடனே படித்தும் ஆலோசனை கேட்கவும் பெரிதும் உதவியாக இருக்கும்.. இந்த திரியின் பெறுமதிக்கு ஈடில்லை.

யாழ் இணையமும் கள உறவுகள் நாமும் என்ன தவம் செய்தமோ உங்களை இங்கு உறுப்பினராக பெற..

கோடான கோடி நன்றிகள் டாக்டர்.. உங்களையும் உங்கள் குடும்பத்தையும் எல்லாம் வல்ல இயற்கை காத்து நிக்கும்..

சரியாக சென்னீர்கள் பாலபத்திர ஓணாண்டி. Nilmini உங்கள் பதிவுகள் & ஆலோசனைகள் பலருக்கும் உதவும்,

உங்களுக்கும் பல  வேலை குடும்ப பளு இருக்கின்ற போதிலும்; நல்ல உள்ளம் கொண்டவர்களே தன்னலமிற்றி இப்படி செய்யவார்கள்.  யாழுடன் தொடர்ந்து இணைத்திருங்கள்

On 11/4/2020 at 18:47, nilmini said:

மிகவும் நன்றி. இது நான் மிகவும் விரும்பி செய்யும் பங்களிப்பு. உண்மைதான் . ஆங்கிலம் பேசாத நாடுகளில் வாழும் எமது மக்களுக்கு இது மிகவும் உதவும். அத்துடன் எங்கும் இதே நிலை தான். சிலவேளை ஒரு சிறிய பிரச்சனைக்கு டொக்டரிடம் appointment வைத்து மணிக்கணக்காக காத்திருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

சரியாக சென்னீர்கள் பாலபத்திர ஓணாண்டி. Nilmini உங்கள் பதிவுகள் & ஆலோசனைகள் பலருக்கும் உதவும்,

உங்களுக்கும் பல  வேலை குடும்ப பளு இருக்கின்ற போதிலும்; நல்ல உள்ளம் கொண்டவர்களே தன்னலமிற்றி இப்படி செய்யவார்கள்.  யாழுடன் தொடர்ந்து இணைத்திருங்கள்

மிகவும் நன்றி உடையார். எமக்காக மட்டும் வாழாமல் மற்றவர்கள் தேவைகளையும்  கொஞ்சமாவது உணர்ந்து செய்வது மிகுந்த மன நிறைவை தருகிறது. 

10 hours ago, ராசவன்னியன் said:

அந்த 'சேவற்கொடியோன் தாத்தா' சேவலையே சாப்பிட மாட்டார், நீங்க வேறை அவரின் பகிடியை சீரியசாக எடுத்துக்கொண்டு பதில் சொல்கிறீர்களே..? 🤩

அண்ணை நல்ல பகிடிக்காரன் என்று தெரியும். என்றாலும் தப்பித்தவறி பாம்பை சாப்பிட்டாலும் என்றுதான் ........

  • கருத்துக்கள உறவுகள்

கை விரல்கள் விறைப்பது எதற்காக என்று சொல்ல முடியுமா?...இரத்த ஓட்டம் இல்லா விடின் தான் விறைக்கும் என்று படித்துள்ளேன் ...எதற்காக அப்படி நடக்குது என்று சொல்ல முடியுமா?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

கை விரல்கள் விறைப்பது எதற்காக என்று சொல்ல முடியுமா?...இரத்த ஓட்டம் இல்லா விடின் தான் விறைக்கும் என்று படித்துள்ளேன் ...எதற்காக அப்படி நடக்குது என்று சொல்ல முடியுமா?
 
விரல் நுனி நரம்புகள் அல்லது குருதிக் குழாய்கள் பாதிப்படைந்தால் இப்படியான விறைப்பு வரும். சிலருக்கு இது அப்பப்ப வந்து போகும். ஆனால் தொடர்ந்து இருந்து வழமையான வாழ்க்கை முறையை பாதித்தால் இதற்கு பல வகையான காரணங்கள் இருக்கலாம். 
டயபெடீஸ் உள்ளவர்களுக்கு விரல் நுனி நரம்புகள் பாதிக்கப்பட்டு விறைப்பு ஏற்படும் (“peripheral neuropathy”) நரம்புகள் தாக்கப்பட்டால் திரும்பி உயிர்பெறும். ஆனால் முற்றாக பாதிக்கப்பட்டால் திரும்ப வரவே வராது. அதனால் தான் நரம்பு சம்பந்தமான எந்த நோயையும் மாற்றமுடியாது.  antidepressants, anticonvulsants, skin creams போன்ற மருந்துகள் விறைப்பை உணராமல் இருக்க உதவும். 
Carpal Tunnel Syndrome: மணிக்கட்டில் ஒரு சிறு இடைவெளி மூலம்தான் கை விரல்களுக்கு செல்லும் நரம்புகளும் , குருதிக்குழாய்களும்  செல்லும். இதனால் மணிக்கட்டுக்கு அழுத்தம் தரக்கூடிய வேலைகளை தொடர்ந்து நீண்ட நேரம் செய்வதால் வருவது (computer keyboard , packing , cutting ) 
இவை தவிர தசைகள் இழுபடுவதாலும் , குருதிக்குழாய்கள் இழுபடுவதாலும் மிகச்சிறிய கட்டிகள் உருவாவதாலும் விறைப்பு ஏற்படலாம். இதற்கு சத்திரசிகிச்சை முறைகள் இருக்கு. 
Alcoholic polyneuropathy: மதுபானம் அதிகமாக குடிப்பவர்களுக்கு வரும் விறைப்பு 
Fibromyalgia: விரல் நுனி விறைப்போடு மட்டுமல்ல தசைகளை பாதித்து உடல் முழுதும் நோ எடுக்கும். 
விட்டமின் B 12  அதிகமாக இருக்கும், கோழி, ஈரல், salmon , tuna மீன் , நண்டு, கணவாய், oyster , clams பால், சீஸ். தயிர் , முட்டை போன்றவை பொதுவாக விறல் நுனி விறைப்பை குறைக்க உதவும்.

Edited by nilmini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/4/2020 at 21:41, nilmini said:

வலிக்கு தந்துள்ள மருந்து மோசமானதல்ல. ஓபியம் போன்ற drug  வகைகளை ஆய்வு கூடத்தில் தயாரித்து விற்பது. இந்த மருந்து எடுத்து 15 - 20 நிமிடங்களில் தான் வேலை செய்யத்தொடங்கும். எனவே வலி இருந்தாலே ஒழிய ஒவ்வொரு நாளும் எடுக்க தேவை இல்லை. உண்மையில் உங்களுக்கு வலி இருக்கு ஆனால் Tilidin  அதை மறைப்பதால் மூளைக்கு வலி இருப்பது தெரியாது. என்றபடியால் இந்த சுலபமான மூச்சு பயிற்சியை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது செய்யவும்.

உங்களின் விளக்கமான பதிலுக்கு மீண்டுமொருமுறை நன்றி...
நீங்கள் கூறியபடி  வலிகளுக்கு எடுக்கும் Tilidin மாத்திரை கொஞ்சம் வித்தியாசமானதுதான். அந்த குளிசை எடுத்து 10 நிமிடத்தில் உடம்பு முழுவதும் இனம் புரியாத வெப்பம் பரவும்.எந்தவித வலிகளும் தெரியாமல் உடம்பு முழுவதும் காற்றுப்போல் இருக்கும்.20 வயது வாலிப புத்துணர்ச்சி, உற்சாகம் இருக்கும்.இந்த மாத்திரை உடம்புக்கு பக்கவிளைவுகள் கெடுதல் இல்லாவிட்டால் தொடர்ந்து எடுக்கலாம் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

Opium drug, poppy  செடிகளின் காய்களில் இருந்து தான் எடுத்து போதை பொருளாக பாவிப்பார்கள். உண்மையில்  இது அளவாக பாவித்தால் நன்மையே ஒழிய தீமை இல்லை. ஆனால் போதைக்கு அடிமையாகிறவர்களே அதிகம். இந்த drug வலியை  வாங்கி மூளைக்கு அனுப்பும் செய்முறையை தடுப்பதோடு மட்டும் அல்லாது, Dopamine எனப்படும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு இரசாயனத்தையும் மூளையில் இருந்து சுரக்கத்தூண்டும் ( இப்ப விளங்கும் ஏன் 20 வயது பொடியன் மாதிரி உற்சாகம் வருகுது என்று)🕺

எனவே இயற்கையான ஓபியம், Tilidin மாதிரியான செயற்கை ஓபியம் மருந்து வகைகள் உடலுக்கு தீங்கு விளைவிக்காது . அமெரிக்கா போன்ற நாடுகள் ஓபியம் போதை கூடியது என்று Heroin என்ற drug ஐ கண்டு பிடித்தார்கள். ஆனால் Heroin ஒப்பியத்தை விட மிக அதிகமான போதையை கொடுப்பதுடன், மிக அதிகமான dopamine ஐ சுரக்கத்தூண்டி மகிழ்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு போகும். அதனால் அதை எடுப்பவர்களுக்கு நமக்கு ஏற்படும் சிறிய மகிழ்ச்சிகள் எல்லாம் அவர்களால் உணரமுடியாது. Heroin ஐ எடுத்து அதிகமான dopamine சுரந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். கடைசியில் உண்மையில் heroin மருந்து தேவைப்படுபவர்களை விட போதைக்கு அடிமையானவர்கள் தான் அதிகமாக எடுக்கிறார்கள். spacer.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, nilmini said:

பலரும் விளங்கக்கூடிய வகையில் நல்லதொரு விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்.🙏🏿

இருந்தாலும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் என்னை மன்னித்தருளுக.:(

வலிகள் தெரியாமல் இருக்க குளிசைகள் எடுக்கின்றோம்.அந்த வலிகள் தெரியாத படியால் உடற்பயிற்சிகள் சுகமாக செய்ய முடிகின்றது.கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் சுகமாக (தாண்டித்தாண்டி இல்லாமல்) நடக்க முடிகின்றது.இன்னும் பல.....
இதனால் வலியுள்ள அந்த பகுதிகள் அதாவது முழங்கால் மற்றும் மூட்டுப்பகுதிகளுக்கு மேலும் பாதிப்புகள் வராதா? அல்லது இந்த வலி நிவாரணிகளால் குறிப்பிட்ட மூட்டுவலிகள் குணமாக சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 18:34, Nathamuni said:

நல்லெண்ணெய், எள்ளு எண்ணெய் இரண்டும் ஒண்டு தானே...? 

நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது 

On 9/4/2020 at 22:48, உடையார் said:

விரிவாக விளக்கியுள்ளீர்கள், நன்றி.  வல்லாரை மூட்டு வலிக்கு நல்லதா? யாரோ சொல்லி கேள்விப்பட்டேன் தொடர்ந்து மூன்று மாதம் பாவித்தால் , மூட்டு வலி குறையுமென்று

பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை  சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது  உறுதி.

அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும்.

Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும்.

பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும்  உதவும்.

பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு  பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது

Edited by nilmini

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பலரும் விளங்கக்கூடிய வகையில் நல்லதொரு விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்.🙏🏿

இருந்தாலும் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கும் என்னை மன்னித்தருளுக.:(

வலிகள் தெரியாமல் இருக்க குளிசைகள் எடுக்கின்றோம்.அந்த வலிகள் தெரியாத படியால் உடற்பயிற்சிகள் சுகமாக செய்ய முடிகின்றது.கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் சுகமாக (தாண்டித்தாண்டி இல்லாமல்) நடக்க முடிகின்றது.இன்னும் பல.....
இதனால் வலியுள்ள அந்த பகுதிகள் அதாவது முழங்கால் மற்றும் மூட்டுப்பகுதிகளுக்கு மேலும் பாதிப்புகள் வராதா? அல்லது இந்த வலி நிவாரணிகளால் குறிப்பிட்ட மூட்டுவலிகள் குணமாக சந்தர்ப்பங்கள் உள்ளனவா?
 
இப்ப வேலையும் குறையத்தானே. அத்துடன் எனக்கு இந்த பதிவுகள் இடுவது மகிழ்ச்சியே. வலி என்று ஒரு உணர்வு இருப்பதே எமது உடலை நாமே காயப்படுத்தாமல் இருப்பதுக்குத்தான் (இப்ப மேலை நாடுகளிலும் எமது உயர்மட்ட மக்களினதும்  Cosmetic surgery விசரால் காது மூக்கு எல்லாம் வெட்டி சரி செய்வதுபோல கை காலையும் வெட்டி சரி பார்க்க நிற்பார்கள்)    நடைப்பயிற்சி  போன்ற அன்றாட வேலைகளினால் பெரிய பாதிப்பொன்றும் வராது. ஒன்று ரெண்டு நாளைக்கு மருந்தை எடுக்காமல் விட்டு முந்தின வலியிலும்  பார்க்க மிகவும் அதிகமான வலி இருக்கா என்று பார்க்கலாம். அத்துடன் இரண்டு மூண்டு  வருடங்களில் டோசை கூட்டுவார்கள். ஏனெனில் உடல் இந்த டோசுக்கு பழகிப்போய் மருந்து எடுத்தாலும் வலிக்கும்.

Edited by nilmini

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நில்மினி நீண்டகால குழப்பம் உங்கள் மூலமாகவாவது தெளிவடையலாம் என எதிர்பார்க்கிறேன்.

தேங்காய்
தேங்காய் எண்ணெய்

இந்த இரண்டையும் பல டாக்ரர்மாரே குளப்பியடிக்கிறார்கள்.
இதன் நன்மை தீமை பற்றி ஆறுதலாக ஆராந்து ஒரு பதிவை தாருங்கள்
மிகவும் நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 18/4/2020 at 21:45, nilmini said:

வணக்கம் நில்மினி!

தினசரி சுடு தண்ணீர் பருகுவதால் உடலுக்கும் மூட்டு வலிகளுக்கும் நல்லதென பல வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். இது எந்தளவிற்கு உண்மை?
அத்துடன் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் சுடு தண்ணீர் அருந்தலாமா?
மருந்துகள் பாவிப்பவர்கள் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உண்ணலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

வணக்கம் நில்மினி!

தினசரி சுடு தண்ணீர் பருகுவதால் உடலுக்கும் மூட்டு வலிகளுக்கும் நல்லதென பல வலைத்தளங்களில் பகிர்கின்றார்கள். இது எந்தளவிற்கு உண்மை?
அத்துடன் மருந்து மாத்திரைகள் எடுப்பவர்கள் சுடு தண்ணீர் அருந்தலாமா?
மருந்துகள் பாவிப்பவர்கள் மஞ்சள், இஞ்சி போன்றவற்றை உண்ணலாமா?

ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nilmini said:

ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன் 

இருவருக்கும் அவசரமில்லாத பிரச்சனை .ஆனபடியால் ஆறுதலாக எழுதுங்கள்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மருத்துவ அம்மணி,

எனக்கு மதியம் 3 மணியானால் கண்களை சொக்கிகொண்டு தூக்கம் வந்துவிடுகிறது.. இரவு 8 மணிக்குத்தான் எழுவது. சாப்பிட்டு, வீட்டில் கதைத்துவிட்டு, அலுவலக வேலையை கொஞ்சம் பார்த்துவிட்டு யாழில் கும்மியடிப்பது.

பின்னர் நள்ளிரவில் ஒரு மணிக்கு தூங்கச் சென்று, மறுபடியும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தயார் செய்து 7 மணிக்குள் அலுவலகம் செல்கிறேன். இது கடந்த 21 வருடமாக பழகிபோச்சுது..

விடுமுறைக்கு ஊருக்கு சென்றால், வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிற்பகலானால் கண் அசந்துவிடும். "தூங்காதே தாத்தா..வா, என்னோட விளையாடு..!" என என் முகத்தில் அறைந்து பேரன் ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப சங்கடமாக உள்ளது. :innocent:

வீட்டிலுள்ளவர்களை சமாளித்தாலும் பேரனை சமாளிக்க இயலவில்லை..😟

இந்த பழக்கத்தை மாற்ற முயற்சித்தும் முடியவில்லை..! 🙃

ஏதாவது வழி இருக்கா..?

  • கருத்துக்கள உறவுகள்
On 18/4/2020 at 22:24, nilmini said:

நல்லெண்ணெய் பச்சை எள்ளு. Sesame எண்ணெய் கருக வறுத்த எள்ளு. Sesame எண்ணெய் பொரிக்க உதவாது. புகை வரும். சமயல் செய்யும் போது நடுவில் அல்லது இறுதியில் சேர்ப்பது 

பதில் பதிவிட நேரமாகி விட்டது. வல்லாரையில் உள்ள ஏதோ ஒரு இரசாயனப் பொருள் Collagen எனப்படும் நார் பொருள் உற்பத்தியை பெருகும். இந்த கொலாஜென் இல்லாத இடமே நம் உடலில் இல்லை. உடல் உறுப்புக்களை  சுற்றி பார்சல் மாதிரி சுற்றி பாதுகாக்கும். குருதிக்குழாய்கள் மற்றும் நரம்புகளை சுற்றி இருந்து அவை திறம்பட செயல்பட உதவும். எமது தோலுக்கும் மிகவும் அவசியம். சிகரெட் குடிப்பதால் கொலாஜென் நார்கள் வெடித்து விரைவில் தோல் சுருங்கும். 60 வயதுக்கு மேல் எல்லோருக்கும் கொலாஜென் அளவு குறையும். எமது வன் , மென் எலும்புகளில் நிறய கொலாஜென் உண்டு. அவை இல்லாமல் எமது எலும்புகள் தூள் போல உதிர்ந்து விடும். அத்துடன் எலும்பு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் மென் எலும்பு (cartilage) மிகவும் முக்கியமானது ஒன்று. ஆர்த்ரிடிஸ் அல்லது வேறு காரணங்களால் கார்டிலேஜ் பாதிக்கப்பட்டால் மாறுவது கடினம். ஏனென்றால் அவைக்கு தனிப்பட்ட குருதி குழாய்கள் கிடையாது. சுற்றிவர உள்ள குருதிக்குழாய்கள் மூலம் தான் கார்டிலேஜ் வளர உதவும் உணவுப்பொருட்கள், திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் கிடைக்கப்பெறும். அதை பாவித்து ஏற்கனவே இருக்கும் கார்டிலேஜ் இல் உள்ள கார்டிலேஜ் முன்னோடிகளில் இருந்து புதிய கார்டிலேஜ் வளரும். அதற்கு வல்லாரை போன்ற உணவுகள் மிகவும் உதவுகின்றன என்று ஆய்வு மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். எனவே ஒவ்வொரு நாளும் சில வல்லாரை இலைகளை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைப்பது  உறுதி.

அத்துடன் நெருப்பால் ஏற்பட்ட அல்லது மிகவும் நாள் எடுத்த மாறக்கூடிய புண்கள் இருக்குபோது வல்லாரை சாப்பிட்டால் விரைவில் புண் ஆற உதவும். நாள் எடுத்து மாறும் காயங்கள் ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தும். ஏனென்றால் குருதியில் இருக்கும் திருத்துவத்துக்கு தேவையான பொருட்கள் காயத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர நேரம் எடுப்பதால் எமது உடல் வடுக்களை ஏற்படுத்தி மாற்றப்பாக்கும் . வல்லாரை போன்ற உணவுகள் இரத்தத்தில் இருந்து இந்த மூலப்பொருட்கள் விரைவில் காயத்தை வந்தடைந்து வடு இல்லாமல் மாற்ற உதவும்.

Chemotherapy செய்பவர்களுக்கு கொஞ்சம் மூளை செயல்பாடுகள் குறைந்து வரும். அதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்ய வல்லாரை உதவும்.

பண்டைய காலத்தில் வல்லாரைக்கு யோசனை வல்லி என்று பெயர் (ஞாபக சக்தியை கூட்டுவதால்). Alzheimer's நோயை கொஞ்சமாவது குறைக்கவும் உதவும். நரம்பு சம்பந்தமான எந்த நோயுமே காலம் போக அதிகரித்துக்கொண்டே போகும். மனஉளைச்சலை போக்கவும் , நித்திரையின்மையை போக்கவும்  உதவும்.

பக்டீரியா , வைரஸ், மற்றும் ஒட்டுண்ணிகள் (urinary tract infection(UTI), shingles, leprosy, cholera, dysentery, syphilis, the common cold போன்ற நோய்களுக்கு  பண்டைய காலந்தொட்டு வல்லாரை மருந்தாக பயன் படுகிறது

மன்னிகவும் நில்மினி, உங்கள் பதிவை தவறவிட்டுவிட்டேன். நன்றி பயனுள்ள தகவல்களுக்கு. நான் இப்ப காலை எழுந்தவுடன்  முருங்கை வல்லாரை இலைகளை பொடி செய்து குளிசைகளாக எடுக்கின்றேன், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றேன். இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா? குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் கிடைக்கா, அதனால் இப்படி எடுக்க நினைத்தேன். வீட்டுக்குள் தான் காய வைத்தது 

20200506-155202.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

வணக்கம் மருத்துவ அம்மணி,

எனக்கு மதியம் 3 மணியானால் கண்களை சொக்கிகொண்டு தூக்கம் வந்துவிடுகிறது.. இரவு 8 மணிக்குத்தான் எழுவது. சாப்பிட்டு, வீட்டில் கதைத்துவிட்டு, அலுவலக வேலையை கொஞ்சம் பார்த்துவிட்டு யாழில் கும்மியடிப்பது.

பின்னர் நள்ளிரவில் ஒரு மணிக்கு தூங்கச் சென்று, மறுபடியும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து தயார் செய்து 7 மணிக்குள் அலுவலகம் செல்கிறேன். இது கடந்த 21 வருடமாக பழகிபோச்சுது..

விடுமுறைக்கு ஊருக்கு சென்றால், வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போதே பிற்பகலானால் கண் அசந்துவிடும். "தூங்காதே தாத்தா..வா, என்னோட விளையாடு..!" என என் முகத்தில் அறைந்து பேரன் ரொம்ப சிரிக்கிறார். ரொம்ப சங்கடமாக உள்ளது. :innocent:

வீட்டிலுள்ளவர்களை சமாளித்தாலும் பேரனை சமாளிக்க இயலவில்லை..😟

இந்த பழக்கத்தை மாற்ற முயற்சித்தும் முடியவில்லை..! 🙃

ஏதாவது வழி இருக்கா..?

வணக்கம். இது Circadian rhythm சம்பந்தப்பட்டது. இதைப்பற்றி விரைவில் விரிவாக விளக்கம் தருகிறேன். 

குறிப்பு: நான் MD இல்லை. PhD .மருத்துவ கல்லூரியில் படிப்பிப்பதனாலும், research செய்வதனாலும்   எனக்கு தெரிந்த சில விடயங்களை பதிவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, nilmini said:

ஈழப்பிரியன், குமாரசுவாமி இரண்டு அண்ணாக்களுக்கும் விரைவில் பதில் அளிக்கிறேன் 

எனக்கு அந்த சுடுதண்ணி (Hot water ) மேட்டர் கொஞ்சம் அர்ஜன்ட் கண்டியளோ....😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

மன்னிகவும் நில்மினி, உங்கள் பதிவை தவறவிட்டுவிட்டேன். நன்றி பயனுள்ள தகவல்களுக்கு. நான் இப்ப காலை எழுந்தவுடன்  முருங்கை வல்லாரை இலைகளை பொடி செய்து குளிசைகளாக எடுக்கின்றேன், பிள்ளைகளுக்கும் கொடுக்கின்றேன். இதனால் ஏதும் பக்கவிளைவுகள் உண்டா? குளிர் காலங்களில் இவற்றின் இலைகள் கிடைக்கா, அதனால் இப்படி எடுக்க நினைத்தேன். வீட்டுக்குள் தான் காய வைத்தது 

வணக்கம். விரைவில் பதில் போடுகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்ட உடனே கிறீன் டீ குடிப்பது உடம்பிற்கு நல்லதா /கூடாதா  என்றும் சொல்லுங்கள் நில்மினி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

சாப்பிட்ட உடனே கிறீன் டீ குடிப்பது உடம்பிற்கு நல்லதா /கூடாதா  என்றும் சொல்லுங்கள் நில்மினி 

குடிக்கலாம் ரதி. மேலும் விரிவாக பதில் தருகிறேன் 

அக்காவின் கற்பித்தல் பற்றியும்  அவாவின் பண்புகள் பற்றியும், அவாவின் மாணவர்களின் கருத்துக்களை  பார்த்தேன். மிகவும் பெருமையாக இருந்தது, இப்படிப்படட ஒரு சிறந்த ஆசானுடன் தொடர்பில் இருப்பதுபற்றி 

அக்கா  உங்களை போன்றவர்களின்  சேவை தமிழ் சமூகத்துக்கு தேவை , உங்களின்   ஓய்வுக்காலத்தில், தமிழ்ச்சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம்..

அக்காவை பற்றி மாணவர்களின் கருத்துக்கள் 

BIOL4100
😎awesome
Aug 5th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Grade: A
Textbook: Yes
By far the best Biology professor I have had at AUM. She truly cares about you understanding the information and welcomes questions. I would take her again without any questions asked. My understanding of Developmental Biology has expanded thanks to Dr. V. If there is one thing I want you to take from this rating would be to take her!

BIO2110
😎awesome
Aug 24th, 2017
For Credit: Yes
Attendance: Mandatory
Would Take Again: Yes
Textbook: No
I love love love love love love love Dr. V. If I could take her for the rest of my classes that I needed to graduate, I would! She is so caring and sweet. She is VERY helpful! She will meet with you outside of class and she's easy accessible. She really wants her students to achieve. She really knows how to explain what you need to know also!

அக்கா உங்களின் பசிதீர்க்கும் பணியும் தொடரட்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.