Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நில்மினியின்  மருத்துவ  ஆலோசனைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎06‎-‎2020 at 05:54, nilmini said:

மிகவும் பிந்திய பதிலுக்கு  மன்னிக்கவும் ஈழப்பிரியன்  அண்ணா 

தேங்காய் எண்ணெயில் (கொலெஸ்ட்ரோலை  கூட்டும்  Saturated Oil அதிகமாக இருந்தாலும் , கணிசமான அளவு medium-chain triglycerides saturated oil இருக்கு. இது பட்டர் மற்றும் கொழுப்பு உணவுகளுடன் ஒப்பிடும்போது ஓரளவு நன்மை   தரக்கூடிய கொழுப்பு. அத்துடன் தேங்காய் எண்ணெயில் உள்ள medium-chain triglycerides saturated oil,  HDL ( நல்ல கொலெஸ்ட்ரோல்) அளவை கூட்டும்  என்று ஆய்வுகள் கூறுகின்றன - ஆதாரம் Mayoclini . ஒலிவ், கனோலா , ஒமேகா 3 போன்ற கொழுப்பு வகைகளின் நன்மை பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் பற்றி இப்போதுதான் ஆராய்ச்சி செய்கிறார்கள். கொலெஸ்ட்ரோல் நாம் சாப்பிடும் உணவில் இருந்து வருவதில்லை. எமது ஈரல் தான் அதை உற்பத்தி செய்கிறது. Saturated மற்றும் trans fat  உள்ள உணவுகள் சாப்பிடும்போது ஈரல் அதனை பாவித்து கொலெஸ்டெராலை உற்பத்தி செய்யும்.

முட்டையில் மிகக்குறைந்த saturated fat  தான் உள்ளது. அதனால் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது (இதயத்துக்கும் சேர்த்து). lutein and zeaxanthin  போன்ற நோயெதிர்ப்பு  காரணிகளும் முட்டையில் உள்ளது. Omega 3 supplement எடுக்காமல் Omega 3 கூடிய உணவுகளை சாப்பிடவும் (supplements பொதுவாக அவ்வளவு வேலை செய்வதில்லை)

கொழுப்புக்கள் fatty acids இனால் ஆனவை . தேங்காய் எண்ணெயில் உள்ள Luaric fattyacid மற்ற கொழுப்புகளை மாதிரி அதிகம் சேகரிக்கப்படாமல்  உடலில் எரிந்து விடும்  என்று  ஆய்வுகள் கூறுகின்றன.  இதனால் உடல் நிறை குறைவதற்கு தேங்காய் எண்ணெய் உதவும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பாக்டீரியா போன்ற நுண் உயிர்களை எதிர்க்கவும் உடல் உள்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. தினமும் தேங்காய் எண்ணெய் பாவித்து உடற்பயிற்சியும் செய்வதால் உயர் குருதி அழுத்தம் குறைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

Pacific islanders,  60விகிதத்துக்கும்  அதிகமான கொழுப்பை தேங்காய் எண்ணெயில் இருந்து பெற்றாலும் அவர்களின் கொலெஸ்டெரோல் அளவோ அல்லது இதய நோய்களோ மிகவும் குறைவானவர்களுக்கே வருகிறது.

முடிவு என்னவென்றால், தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயை  பரம்பரையாக பாவித்து வரும் உலகின் பலவேறு பாகங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு இதய நோய் , பக்க வாதம், High LDL போன்ற  பிரச்சனைகள்  மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

பிரச்னை என்னவென்றால் சோயா, சூரியகாந்தி, ஒலிவ் போன்ற எண்ணெய்களை பற்றிய ஆய்வுகள் கூடிப்போய் தேங்காய் எண்ணெயை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டார்கள். ஆனால் தேங்காய் எண்ணெயின் பெரும்பான்மையான  நன்மைகள் அதை பாவிப்பதால் வெளிப்படையாக பலனளிப்பதால் இப்போ மேலை நாடுகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் மிகவும் அதிகமாக விரும்பப்படுகிறது ( நோயெதிர்ப்பு, உடல், குடல் புண், நிறை குறைதல், ஆரோக்கியமான தலை முடி, தோல் )

தேங்காய் எண்ணெயின் மிகப்பெரிய குழப்பம் அதில் இருக்கும் அதிகப்படியான saturated oil. அதே நேரம் அந்த saturated oil  மற்ற எண்ணெய்களிலும்  ஒரு வித்தியாசமான fattyacid  ஆல்  ஆனதால் அது நல்ல கொலெஸ்டெராலை (HDL ) கூட்டுதல், கூடாத (LDL ) கொலஸ்டரோலை குறைத்தல் , மற்றைய saturated fat களிலும் பார்க்க அதிகமாகவும் விரைவாகவும் உடலில் எரிந்து சக்தி தருதல், உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் அதிகம் சேகரிக்க படாமை போன்ற தன்மைகளை கொண்டுள்ளது.

இந்த ஆதாரங்களை  human research மூலம் அதிகம் நிரூபிக்கப்படாததால் தான் வைத்தியர்களிடையில் இவ்வளவு குழப்பம். நான் வைத்தியர் இல்லாவிட்டாலும் மருத்துவ மாணவர்களை படிப்பிப்பவர் என்ற முறையிலும் ஒவ்வொரு நாளும் என்னுடன் வேலை செய்யும் மருத்துவருடன் கதைப்பதாலும் அறிந்து கொண்டது என்னவெண்டால் எல்லாவற்றுக்கும் மருத்தவரிடம்  போய் ஆலோசனை கேட்டால் அவர்களுக்கு  நோய்க்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்று தெரியுமே ஒழிய இப்படியான விடயங்கள் அவர்களுக்கு நிச்சயமாக கூறமுடியாமல் தான் இருக்கும். எனக்குத்தெரிந்த nutritionist களுக்கே இந்தமாதிரியான விடயங்களுக்கு சரியான பதில் தெரியாது.

எனது அனுபவத்திலும், அவதானிப்பிலும் நான் அறிந்தது தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் இரண்டுமே உடலுக்கு நல்லது. ஆனால் வயது போக போக அதன் பாவனை அளவை குறைக்கவேண்டும். அவைகளை தினமும் பாவிக்கும்போது உடற்பயிற்சி செய்யவேண்டும். எமது உடலுக்கு நிறைய என்னை கொழுப்பு தேவை. ஏனென்றால் எமது உடல் காலங்களின் சுவர்கள் கொழுப்பால் ஆனவை. என்றபடியால் மற்ற உணவுகளை குறைத்து போல வயது போக போக எண்ணெய் வகையை குறைத்து ஆனால் தினமும் பாவிப்பதே நல்லது. (பின்குறிப்பு: 3 மாதத்துக்கு தேங்காய், தேங்காய் எண்ணெய்  மட்டும் சமையலுக்கு பாவித்து விட்டு medical checkup ஒன்று செய்து பார்த்தால்  உண்மை விளங்கி விடும்)

நானும் குடும்பத்தவரும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் மட்டும்தான் எப்பவுமே பாவிக்கிறோம். மற்ற எண்ணெய்கள் பாவிப்பது மிகவும் குறைவு. ஒருவருக்கும் ஒரு பிரச்சனையும் இதுவரைக்கும் பெரிதாக இல்லை

என்னோட வேலை செய்யும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் என்னிடம் நல்ல  தேங்காய் எண்ணெய் எங்கே வாங்கலாம் என்று கேட்டார் ...ஏன் என்று கேட்டதிற்கு  உடம்பிற்கும்,முகத்திற்கும் பூசுவதற்கும் அத்தோடு டயட்டிற்கும் நல்லது என்று சொன்னார் ...பூசினால் உடம்பு மிணுங்குமாம்😅 ...இந்த காணொளியையும் பாருங்கள்

  • Replies 391
  • Views 59.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, ரதி said:

என்னோட வேலை செய்யும் ஐரோப்பிய நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் என்னிடம் நல்ல  தேங்காய் எண்ணெய் எங்கே வாங்கலாம் என்று கேட்டார் ...ஏன் என்று கேட்டதிற்கு  உடம்பிற்கும்,முகத்திற்கும் பூசுவதற்கும் அத்தோடு டயட்டிற்கும் நல்லது என்று சொன்னார் ...பூசினால் உடம்பு மிணுங்குமாம்😅 ...இந்த காணொளியையும் பாருங்கள்

தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ? :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

பதிவுக்கு நன்றி ரதி. தேங்காய் எண்ணெயும் மற்ற எல்லா எண்ணெய்கள் போல saturated fat உள்ளதுதான். ஆனால் அந்த saturated fat இல் கணிசமான அளவு medium-chain triglycerides fatty acids (Lauric acid ) இந்த  காரணத்தால்  தேங்காய் எண்ணெயை உணவுடன் சேர்க்கும்போது எமது உடல் அதனை உடனடியாக பாவித்து எரித்துவிடும் (Energy requirement ). எனவே  தேங்காய் எண்ணெய் கொழுப்பு உடலில் உள்ள கொழுப்பு கலங்களில் சேகரிக்கப்படுவது குறைவு. அதனால்தான் எடை கூடாது. ஆனால் அத்துடன் சேர்த்து நிறைய மாச்சத்து சாப்பிட்டால் பலன் அவ்வளவு கிடைக்காது. மீன், முட்டை, இறைச்சி, சோயா, பால் உணவுகளுடன் சாப்பிட்டால் தான் பலன் கிடைக்கும். அத்துடன் தேங்காய் எண்ணெய்   நல்ல கொலஸ்டரோலை (HDL) கூட்டி  கூடாத கொலஸ்டரோலை (LDL) குறைகின்றது. நான் நினைக்கிறன் இன்னும் ஒரு 10 வருடங்களில் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் எல்லாம் Clinical trials மூலம் நிரூபித்து விடுவார்கள். 
அத்துடன் இந்த வீடியோவில் அடிக்கடி உடற்பயிற்சி இல்லாமல் மெலியலாம் என்று அடிக்கடி சொல்கிறார்கள். அது பிழை. ஒன்றி சாப்பாடு மிகக்குறைவாக சாப்பிட வேண்டும் அல்லது மிகுந்த உடல் உழைப்பு இருக்க வேண்டும். அல்லது உடல் நிறை குறையாது 

6 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ? :grin:

குத்தி முறிஞ்சவர் பாடு இப்ப எப்படி? 

On 11/6/2020 at 00:25, குமாரசாமி said:

தேங்காய் எண்ணை விளக்கத்திற்கு நன்றி நில்மினி.

அக்குபஞ்சர் கேள்விக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன் அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nilmini said:
7 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ? :grin:

குத்தி முறிஞ்சவர் பாடு இப்ப எப்படி? 

ஓம் ஓம்
இன்னும் சுகமாக இருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓம் ஓம்
இன்னும் சுகமாக இருக்கிறேன்.

அய்யய்யோ அது நீங்களா அண்ணா? சிரிப்பு தாங்க முடியவில்லை . நான் யாரோ தெரியாத ஒரு கள உறுப்பினர் என்று நினைத்தேன் 

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி....
கைத்தொலை பேசியை...  இதயத்திற்கு அருகில் உள்ள, 
சட்டை  "பொக்கற்றில்"  வைக்கக் கூடாது என்கிறார்கள்.
இது உண்மையா? வதந்தியா?

ஆறுதலாக... விரிவான, பதில் தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

நில்மினி....
கைத்தொலை பேசியை...  இதயத்திற்கு அருகில் உள்ள, 
சட்டை  "பொக்கற்றில்"  வைக்கக் கூடாது என்கிறார்கள்.
இது உண்மையா? வதந்தியா?

ஆறுதலாக... விரிவான, பதில் தாருங்கள்.

மூளையை பழுதாக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.

அது சரி தம்பி எத்தனையாவது நம்பர்?ஊரவர் என்றா நம்பர் எடுக்காம வரலாமோ?கொஞ்சம் அமைதியா பின்னால நில்லும் காணும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

மூளையை பழுதாக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.

அது சரி தம்பி எத்தனையாவது நம்பர்?ஊரவர் என்றா நம்பர் எடுக்காம வரலாமோ?கொஞ்சம் அமைதியா பின்னால நில்லும் காணும்.

பொங்கல் பரிசுக்கு நீண்ட கியூ ...

அந்த வரிசையில்.... 13´வது ஆளாக, 
சிவப்பு சீலை  கட்டிய பெண்மணிக்கு முன் நின்று  போட்டு,
ஒரு அவசர  அலுவலாக... வெளியிலை போட்டு, 
திரும்ப வந்து... என்ரை இடத்திலை  நிக்கலாம் என்றால்...  
அந்த மனிசி....  என்னைப்  போய்.. பின்னுக்கு  நிக்கட்டாம் என்று,  கண்டபடி திட்டுது....  :grin: 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

அய்யய்யோ அது நீங்களா அண்ணா? சிரிப்பு தாங்க முடியவில்லை . நான் யாரோ தெரியாத ஒரு கள உறுப்பினர் என்று நினைத்தேன் 

எனக்கும் தான் 🤣

நன்றி நில்மினி, நல்ல விரிவான விளக்கம், பலருக்கு உபயோகமாக இருக்கும், நானும் இனி தேங்காய் எண்ணை தான் கூட பாவிக்கனும், இதுவரை canola தான் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

நில்மினி....
கைத்தொலை பேசியை...  இதயத்திற்கு அருகில் உள்ள, 
சட்டை  "பொக்கற்றில்"  வைக்கக் கூடாது என்கிறார்கள்.
இது உண்மையா? வதந்தியா?

ஆறுதலாக... விரிவான, பதில் தாருங்கள்.

விரைவில் பதில் தருகிறேன் சிறி 

11 hours ago, ஈழப்பிரியன் said:

மூளையை பழுதாக்கும் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்.

அது சரி தம்பி எத்தனையாவது நம்பர்?ஊரவர் என்றா நம்பர் எடுக்காம வரலாமோ?கொஞ்சம் அமைதியா பின்னால நில்லும் காணும்.

தம்பிக்கு மூன்றாம் நம்பர். நித்திரை  பிரச்சனைக்கும் அக்குபஞ்சர் பிரச்சனைக்கும் பிறகுதான். ஊர் மட்டுமில்ல உறவும் தான். எண்டாலும் விதிமுறையின் படி போய்ட்டா பிரச்னை இல்லைதானே .😬

10 hours ago, தமிழ் சிறி said:

பொங்கல் பரிசுக்கு நீண்ட கியூ ...

அந்த வரிசையில்.... 13´வது ஆளாக, 
சிவப்பு சீலை  கட்டிய பெண்மணிக்கு முன் நின்று  போட்டு,
ஒரு அவசர  அலுவலாக... வெளியிலை போட்டு, 
திரும்ப வந்து... என்ரை இடத்திலை  நிக்கலாம் என்றால்...  
அந்த மனிசி....  என்னைப்  போய்.. பின்னுக்கு  நிக்கட்டாம் என்று,  கண்டபடி திட்டுது....  :grin: 🤣

😂 சரியாத்தான் எண்ணி இருக்கிறீர் சிறி. நடுவுக்குள்ள ஒருஆள் அடையாளமே தெரியாமல் இருட்டோடு இருட்டா நிக்குது. எதுக்கும் லைன விட்டுட்டு போகேக்க சொல்லிட்டு போயிருந்தால் பிரச்னை இல்லாமல் இருந்திருக்கும் 

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

😂 சரியாத்தான் எண்ணி இருக்கிறீர் சிறி. நடுவுக்குள்ள ஒருஆள் அடையாளமே தெரியாமல் இருட்டோடு இருட்டா நிக்குது. 

இப்ப என்ன தான் சொல்ல வருகிறீர்கள் சிறி என்ன சட்டி கறுப்பா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்ப என்ன தான் சொல்ல வருகிறீர்கள் சிறி என்ன சட்டி கறுப்பா?

சீ சிறியிண்ட நிறம் பருவாயில்லை . நான் சொன்னது லைனில நடுவில நிக்கிற ஆளை 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! முந்தி கொஞ்சநாள் இஞ்சை ஒராள் தேங்காய் எண்ணை கூடாது எண்டு குத்தி முறிஞ்சவர். ஞாபகமிருக்கோ? :grin:

15 hours ago, ஈழப்பிரியன் said:

ஓம் ஓம்
இன்னும் சுகமாக இருக்கிறேன்.

அண்ணர் உங்களை குறிப்பிடவில்லை என்று நான் நினைக்கிறேன் 😉
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அண்ணர் உங்களை குறிப்பிடவில்லை என்று நான் நினைக்கிறேன் 😉
 
அண்ணர் குறிப்பிட்டது என்னைத் தான் என்று நினைக்கிறேன்! தேங்காய் எண்ணை இதய நலனுக்கு நல்லது என்று நிறுவும் எந்த நம்பகமான  ஆய்வுகளும் இது வரை வரவில்லை! உடலின் மேற்பரப்பான தோலுக்கு தேங்காய் எண்ணை நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் saturated fat தோலில் இலகுவாகத் தங்கி மினு மினுப்பூட்டும்! இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேங்காயெண்ணையில் இருக்கும் saturated fat கொலஸ்திரோலை அதிகரிக்கும் என்பதே இது வரையில் கண்டறியப் பட்ட தகவல். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் அபிப்பிராயம் கீழே: 

https://www.health.harvard.edu/heart-disease-overview/coconut-oil-heart-healthy-or-just-hype#:~:text=It is said that coconut,attack and other cardiovascular events.

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்த ஆண்டின் ஜனவரியில் அமெரிக்காவின் நம்பிக்கையான AHA அமைப்பின் Circulation என்ற விஞ்ஞான சஞ்சிகையின் 16 ஆய்வுகளை செய்த meta-analysis முடிவு: 

https://www.ahajournals.org/doi/10.1161/CIRCULATIONAHA.119.043052

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, உடையார் said:

எனக்கும் தான் 🤣

நன்றி நில்மினி, நல்ல விரிவான விளக்கம், பலருக்கு உபயோகமாக இருக்கும், நானும் இனி தேங்காய் எண்ணை தான் கூட பாவிக்கனும், இதுவரை canola தான் 

நன்றி உடையார். கட்டாயமாக தேங்காய் எண்ணெயை பாவியுங்கோ. virgin coconut oil தான் நல்லது. refined சரியில்லை. வெள்ளயல் சிலருக்கு தேங்காய் எண்ணெய் மணம் பிடிக்காததால் refined எண்ணெய் பாவிக்கிறார்கள். அத்துடன் தேங்காய் எண்ணெயின் நல்ல பலன்கள்  (தோல் மினுக்கம் உற்பட) Virgin Coconut oil இல் தான் இருக்கு 

spacer.png

Edited by nilmini

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, ரதி said:

அண்ணர் உங்களை குறிப்பிடவில்லை என்று நான் நினைக்கிறேன் 😉
 
7 hours ago, Justin said:

அண்ணர் குறிப்பிட்டது என்னைத் தான் என்று நினைக்கிறேன்! தேங்காய் எண்ணை இதய நலனுக்கு நல்லது என்று நிறுவும் எந்த நம்பகமான  ஆய்வுகளும் இது வரை வரவில்லை! உடலின் மேற்பரப்பான தோலுக்கு தேங்காய் எண்ணை நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் saturated fat தோலில் இலகுவாகத் தங்கி மினு மினுப்பூட்டும்! இதய ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தேங்காயெண்ணையில் இருக்கும் saturated fat கொலஸ்திரோலை அதிகரிக்கும் என்பதே இது வரையில் கண்டறியப் பட்ட தகவல். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் அபிப்பிராயம் கீழே: 

https://www.health.harvard.edu/heart-disease-overview/coconut-oil-heart-healthy-or-just-hype#:~:text=It is said that coconut,attack and other cardiovascular events.

அப்பாடா......இப்பதான் அளவான சிங்கம் வந்திருக்கு....🎩

நீங்கள் விஞ்ஞான/மருத்துவ ரீதியாக ஆராய்ச்சிகள் செய்து சரி பிழை நிறுவிவிட்டாலும் அனுபவம் என்பது முன்னிலையில் தான் நிற்கும்.இலங்கை இந்தியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில்  தேங்காய் சார்ந்த உணவு வகைகளையே மக்கள் மூன்று வேளையும் உண்கிறார்கள்.இறக்கும் வரைக்கும் சுத்தம் சுகாதாரமாகத்தான் வாழ்கின்றார்கள்.

உங்கள் ஆராய்ச்சிகளின் படி விளைவுகள் என்று பார்த்தால் தேங்காய் திண்டவன் எல்லாம் இத்தடிக்கு செத்திருக்க வேணும்😋

உங்களைப்போன்றவர்களின் ஆராய்ச்சியாளர்கள் வியாபார ரீதியாக ஆய்வுகளை செய்யும் போது சுத்தமான காற்றும் நஞ்சாகத்தான் தெரியும்.

குளம் குட்டையிலை நிக்கிற தண்ணியை குடிச்சு வராத வருத்தங்கள் எல்லாம் போத்தில்லை அடைச்சு வாற சுத்திகரிக்கப்பட்ட தண்ணியாலை வருது கண்டியளோ! அதுக்குள்ளை விற்றமீன் நிரம்பியிருக்கெண்டு வேறை அடிச்சு விடுறாங்கள்.😎

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

நன்றி உடையார். கட்டாயமாக தேங்காய் எண்ணெயை பாவியுங்கோ. virgin coconut oil தான் நல்லது. refined சரியில்லை. வெள்ளயல் சிலருக்கு தேங்காய் எண்ணெய் மணம் பிடிக்காததால் refined எண்ணெய் பாவிக்கிறார்கள். அத்துடன் தேங்காய் எண்ணெயின் நல்ல பலன்கள்  (தோல் மினுக்கம் உற்பட) Virgin Coconut oil இல் தான் இருக்கு 

spacer.png

இந்த brand தேடினேன் கிடைக்கவில்லை, அடுத்த கடையில் பார்க்கனும். நேற்று தேங்கய் எண்ணை வாங்கி மீன் பெரித்து சாப்பிட்டோம், மணமும் சுவையும் ஊரில் சாப்பிட்ட மாதிரி,  இதுவரை பயத்தில் பாவிப்பதில்லை, இனி இதுதான்

தேங்காய் எண்ணை விலை அதிகமிங்கு 2L - AUD16/-

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

இந்த brand தேடினேன் கிடைக்கவில்லை, அடுத்த கடையில் பார்க்கனும். நேற்று தேங்கய் எண்ணை வாங்கி மீன் பெரித்து சாப்பிட்டோம், மணமும் சுவையும் ஊரில் சாப்பிட்ட மாதிரி,  இதுவரை பயத்தில் பாவிப்பதில்லை, இனி இதுதான்

தேங்காய் எண்ணை விலை அதிகமிங்கு 2L - AUD16/-

உடையார் இது கொஸ்கோ பிரான்ட்.கொஸ்கோவில் முயற்சி பண்ணுங்கள்.

5 hours ago, குமாரசாமி said:

நீங்கள் விஞ்ஞான/மருத்துவ ரீதியாக ஆராய்ச்சிகள் செய்து சரி பிழை நிறுவிவிட்டாலும் அனுபவம் என்பது முன்னிலையில் தான் நிற்கும்.இலங்கை இந்தியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில்  தேங்காய் சார்ந்த உணவு வகைகளையே மக்கள் மூன்று வேளையும் உண்கிறார்கள்.இறக்கும் வரைக்கும் சுத்தம் சுகாதாரமாகத்தான் வாழ்கின்றார்கள்.

          இங்கு மலையாளிகள் கிழமைக்கு கிழமை அள்ளிக் கொண்டு போவார்கள்.சிலருடன் கதைத்த போது ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு தேங்காய் பாவிப்பார்களாம்.
          இங்கு ஜஸ்ரின் இணைப்பிலும் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி தரவுகளைக் கொடுத்து உலகை நம்ப வைத்து நன்மை என்ற பெயரில் தீமையே செய்கிறார்கள்.
          இயற்கை விவசாயத்தையே அழித்தவர்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அப்பாடா......இப்பதான் அளவான சிங்கம் வந்திருக்கு....🎩

நீங்கள் விஞ்ஞான/மருத்துவ ரீதியாக ஆராய்ச்சிகள் செய்து சரி பிழை நிறுவிவிட்டாலும் அனுபவம் என்பது முன்னிலையில் தான் நிற்கும்.இலங்கை இந்தியா தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில்  தேங்காய் சார்ந்த உணவு வகைகளையே மக்கள் மூன்று வேளையும் உண்கிறார்கள்.இறக்கும் வரைக்கும் சுத்தம் சுகாதாரமாகத்தான் வாழ்கின்றார்கள்.

உங்கள் ஆராய்ச்சிகளின் படி விளைவுகள் என்று பார்த்தால் தேங்காய் திண்டவன் எல்லாம் இத்தடிக்கு செத்திருக்க வேணும்😋

உங்களைப்போன்றவர்களின் ஆராய்ச்சியாளர்கள் வியாபார ரீதியாக ஆய்வுகளை செய்யும் போது சுத்தமான காற்றும் நஞ்சாகத்தான் தெரியும்.

குளம் குட்டையிலை நிக்கிற தண்ணியை குடிச்சு வராத வருத்தங்கள் எல்லாம் போத்தில்லை அடைச்சு வாற சுத்திகரிக்கப்பட்ட தண்ணியாலை வருது கண்டியளோ! அதுக்குள்ளை விற்றமீன் நிரம்பியிருக்கெண்டு வேறை அடிச்சு விடுறாங்கள்.😎

அண்ணை,

அனுபவம் என்றால் எத்தனை பேரின் அனுபவம் உங்களுக்கு சரியான ஆலோசனையைத் தரும் என நினைக்கிறீர்கள்? 3, 30, 300? ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரது உடல் வாசி என்கிற genotype ஐப் பொறுத்து ஒவ்வொரு மாதிரியான அனுபவம் இருக்கும்! இதை சமன் செய்து ஒரு முடிவை அணுகத் தான் ஆயிரக் கணக்கானோரின் மருத்துவத் தகவல்களை திரட்டி ஆய்வுகள் செய்வது. அந்த ஆய்வுகளின் படி நீங்கள் குறிப்பிடும் இந்த நாடுகளில் மக்கள் இதய ஆரோக்கியத்தோடு வாழ்வதாக ஒரு ஆய்வு முடிவும் இல்லை! 

இதைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக நான் எழுதிய நாட்களில் , ஒவ்வொரு பகுதியையும் எழுதி முடிக்க ஒரு மணிநேரம் பிடிக்கும். தகவல்களைச் சரிபார்க்க  இன்னுமொரு மணிநேரம் எடுக்கும்! மற்றவர்களின் உடல் நலத்திற்கு நிறுவப் பட்ட விஞ்ஞானத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டுமென்று எடுத்துக் கொண்ட என் முயற்சி இங்கே மூன்று பேர் கெக்கலி கொட்டிச் சிரிக்கும் ஜோக்காக இருந்திருக்கிறது என்பது எனக்கு ஒரு eye-opener ! 

இதை வெளிக்கொணர்ந்த உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nilmini said:

நன்றி உடையார். கட்டாயமாக தேங்காய் எண்ணெயை பாவியுங்கோ. virgin coconut oil தான் நல்லது. refined சரியில்லை. வெள்ளயல் சிலருக்கு தேங்காய் எண்ணெய் மணம் பிடிக்காததால் refined எண்ணெய் பாவிக்கிறார்கள். அத்துடன் தேங்காய் எண்ணெயின் நல்ல பலன்கள்  (தோல் மினுக்கம் உற்பட) Virgin Coconut oil இல் தான் இருக்கு 

spacer.png

எங்கட தமிழ்,இந்திய கடைகளில் விற்கும் தே.எண்ணெய் பாவிக்கலாமா?
 
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

அண்ணை,

அனுபவம் என்றால் எத்தனை பேரின் அனுபவம் உங்களுக்கு சரியான ஆலோசனையைத் தரும் என நினைக்கிறீர்கள்? 3, 30, 300? ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அவரது உடல் வாசி என்கிற genotype ஐப் பொறுத்து ஒவ்வொரு மாதிரியான அனுபவம் இருக்கும்! இதை சமன் செய்து ஒரு முடிவை அணுகத் தான் ஆயிரக் கணக்கானோரின் மருத்துவத் தகவல்களை திரட்டி ஆய்வுகள் செய்வது. அந்த ஆய்வுகளின் படி நீங்கள் குறிப்பிடும் இந்த நாடுகளில் மக்கள் இதய ஆரோக்கியத்தோடு வாழ்வதாக ஒரு ஆய்வு முடிவும் இல்லை! 

இதைப் பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக நான் எழுதிய நாட்களில் , ஒவ்வொரு பகுதியையும் எழுதி முடிக்க ஒரு மணிநேரம் பிடிக்கும். தகவல்களைச் சரிபார்க்க  இன்னுமொரு மணிநேரம் எடுக்கும்! மற்றவர்களின் உடல் நலத்திற்கு நிறுவப் பட்ட விஞ்ஞானத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டுமென்று எடுத்துக் கொண்ட என் முயற்சி இங்கே மூன்று பேர் கெக்கலி கொட்டிச் சிரிக்கும் ஜோக்காக இருந்திருக்கிறது என்பது எனக்கு ஒரு eye-opener ! 

இதை வெளிக்கொணர்ந்த உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்! 

இதில ஆத்திரப்படுறத்திற்கோ ,கோபப்படுறத்திற்கோ எதுவும் இல்லை யஸ்டின் ..முந்தி இங்கு தேங்காய் பாலோ ,தேங்காயோ சுப்ப மாக்கெட்டில் காண கிடைக்காது. பாவிக்கவே கூடாது என்று சொல்லிச்சினம்  ...ஆனால் இப்ப சான்விச் ,ஸ்நாக்ஸ் இருக்கும் பக்கம் தேங்காய் சொட்டு பக் பண்ணி விக்கிறான் ...கோப்பி கடைகளுக்கு போனால் தே. பாலில் கோப்பி கேட்க்கினம் ...எதை விற்பது/கூடாது என்று தீர்மானிப்பது காப்பிரேட் கொம்பனிகள் தான் ...அதைத் தான் என்ர அண்ணரும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
பசுப்பால் கூட எல்லோருக்கும் ஒத்துக்க கொள்ளாது...அதுக்காக பொதுவாய் பாலே கூடாது என்ற முடிவுக்கு வர கூடாது அல்லவா

தங்கச்சி நீங்கள் நம்புறியளோ இல்லையோ .. எனக்கு ஒரு டாக்குத்தர் சொன்னதை சொல்லுறன். என்ரை மூட்டு வலிகளுக்கு பாலும் அது சம்பந்தப்பட்ட பால் தயாரிப்புகளையும் பாவிக்க வேண்டாம் எண்டு சொன்னவர். நானும் ஒருமாதம் எடுக்காமல் விட்டுப்பாத்தன் அரைப்பங்கு வலிகள் குறைஞ்சிட்டுது. பாலில் கெட்டுப்போகமல் இருக்க பாவிக்கப்படும் இரசாயனப்பொருள் தான் வலிகளுக்கு முக்கிய காரணமாம். அது போலதான் பன்றி இறைச்சியும். தோல் வெடிப்புகளுக்கு வெள்ளையள் இப்ப தேங்காய் எண்னை பூச வெளிக்கிட்டினம்.
இப்ப புதினம் என்னெண்டால் வெள்ளையள் எங்களை விட உறைப்பு சாப்பிட வெளிக்கிட்டினம். உறைப்பு புது எனர்ஜியை தருதாம்.😀

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

உறைப்பு புது எனர்ஜியை தருதாம்.😀

எதில எங்கே ஐயா எனேர்ஜி?இதுகளை எங்களோடு பகிரக் கூடாதோ?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் இது கொஸ்கோ பிரான்ட்.கொஸ்கோவில் முயற்சி பண்ணுங்கள்.

          இங்கு மலையாளிகள் கிழமைக்கு கிழமை அள்ளிக் கொண்டு போவார்கள்.சிலருடன் கதைத்த போது ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு தேங்காய் பாவிப்பார்களாம்.
          இங்கு ஜஸ்ரின் இணைப்பிலும் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற மாதிரி தரவுகளைக் கொடுத்து உலகை நம்ப வைத்து நன்மை என்ற பெயரில் தீமையே செய்கிறார்கள்.
          இயற்கை விவசாயத்தையே அழித்தவர்கள் அல்லவா?

நன்றி ஈழப்பிரியன் தரவிற்கு, அங்கு வாங்குகின்றேன் அடுத்த முறை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.