Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்து மூன்று தினங்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாள் வருத்தம் வந்தால் எப்படி இருந்தோமோ அவ்வாறான ஓர் ஒழுங்கை கடைப்பிடித்தாலே இதை முற்றாக குணமாக்கலாம்.

நம் முன்னோர்கள் கூறிய,

செருப்புடன் வீட்டிற்குள் சொல்லாதே

வெளியே சென்று வந்தால் கால் கழுவி குளித்து ஆடைகளை தோய்

எலுமிச்சையை கரைத்து குடி

இன்று உலகமே இதைதான் செய்கிறது.

  • Replies 89
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

அம்மாள் வருத்தம் வந்தால் எப்படி இருந்தோமோ அவ்வாறான ஓர் ஒழுங்கை கடைப்பிடித்தாலே இதை முற்றாக குணமாக்கலாம்.

நம் முன்னோர்கள் கூறிய,

செருப்புடன் வீட்டிற்குள் சொல்லாதே

வெளியே சென்று வந்தால் கால் கழுவி குளித்து ஆடைகளை தோய்

எலுமிச்சையை கரைத்து குடி

இன்று உலகமே இதைதான் செய்கிறது.

இவ்வளவும் சரிதான்.

அதுக்காக செத்தல் மிளகாயையும் சுட்டு நாவூறு கழிக்கவும் வேண்டும் என்று கேட்கக்கூடாது😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இவ்வளவும் சரிதான்.

அதுக்காக செத்தல் மிளகாயையும் சுட்டு நாவூறு கழிக்கவும் வேண்டும் என்று கேட்கக்கூடாது😂🤣

சொல்றன் எண்டு கோவிக்க கூடாது.....

அதிலும் ஏதாவது காரணம் கட்டாயம் இருக்கும்

நாம் அம்மாள் வருத்தத்தை எவ்வாறு கையாண்டமோ அதேபோல் இதனை உலகமே கையாளவேண்டும்.

1 hour ago, MEERA said:

1 hour ago, கிருபன் said:

இந்த உலகம்  முழுவதும் மக்கள் வாழ்ந்தனர் அவர்களின் முன்னோர்களும் வாழ்ந்தனர். அந்த மக்களின் பட்டறிவுக்கு ஏற்ப இயற்கை  வைத்தியமும் உலகம் முழுவதும்  வாழ்ந்த்த மக்களால் கண்டு பிடிக்கப்பட்டது. இது இயல்பானது.  மக்களின் தேவையோடிணைந்த‍து. அந்த முன்னோர்களில்   சிறு பகுதியான எம‍து முன்னோர்களும் அடக்கம். காலம் செல்ல செல்ல அறிவு வளர அந்த முன்னோர்கள் தமது வாழக்கைபழக்கங்களில் இருந்த மூடத்தனங்களை களைந்து தம்மை காலத்திற்கேற்ப வாழ தலைப்படனர். இதுவும் இயல்பானது.  தமது முன்னோரிடம்  இருந்து நல்லவிடயங்களை கற்று அதை தமது பட்டறிவுடன் அவற்றை மேம்படுத்தி அவற்றை அடுத்த சந்ததிக்கு கொடுத்தனர். அடுத்த சந்ததி அதை மேலும் மேம்படுத்தி   அறிவியல் வளர்சியை எட்டினர். இவ்வாறே ஒவ்வொரு சந்த‍தியியும் படிப்படியாக  தமது முன்னோரை விட அறிவியல் வளர்ச்சியில் மேலோங்கி சாதனைகளை புரிந்தனர். முன்னோர்களிடம் இருந்து பெற்ற அறிவை தமது அறிவின் மூலம் மேம்படுத்தி  அடுத்த கட்ட‍த்திற்கு அதை நகர்த்தி வந்த‍தே இன்றைய மானிட வரலாறு.

நிலைமை இவ்வாறிருக்க சிலர்  தமிழருக்கு மட்டும் தான் உலகில் முன்னோர்கள் இருந்த‍து போலவும் எமது முன்னோர்கள் மட்டுமே உலகில் அதி சிறந்தவர்கள் போலவும் தாமாக கற்பனை செய்து கற்பனை உலகத்தில் மிதப்ப‍தோடு சமூக வலை தளங்களிலும் தவறான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.  உலக முன்னோர்களை போலவே எமது முன்னோரகளில் சிறந்த விடயங்களும் இருந்த‍ன. அடி முட்டாள்தனமான பழக்கங்களும் இருந்தன. இதில் எது எதை கடைப்பிடிக்கலாம் எதை தூக்கி தூர வீசலாம்  என்பது இன்றைய எம‍து அறிவே தீர்மானிக்க முடியும். அதை விடுத்து இவ்வாறான எமது முன்னோர் புராணத்தை நாமே பாடி நாமே திருப்தி கொள்வது  அறிவு கண்ணை மூடிக்கொண்டு முன்னோர் சொன்ன எல்லாம் சரி என்று கிறுக்கு தனமாக வாதாடுவது எம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் செயலே அன்றி வேறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் சும்மா ரெனசன் படாதையுங்கோ.லைவ் ஸ் வெரி சோட் நன்பா.😁

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, tulpen said:

நான் எழுதுவது இன்றைய நிலமை, உலகமே இன்று தமிழன் சொன்னதை தான் செய்கிறது.

LOCKDOWN என்று ஆங்கிலத்தில் சுலபமாக கூறலாம், ஆனால் தீட்டு அல்லது துடக்கு என்று நம்முன்னோர்கள் தூர விலத்தி இருந்தது தான் அது. தற்போது சட்டம் போட்டே அதனை கடைப்பிடிக்க முடிகிறது. பெயர் தான் மாற்றமே தவிர தீர்வு ஒன்றுதான்.

உங்கள் அறிவியல் வளர்ச்சியை வைத்து இதற்கு  மருந்து கண்டுபிடிக்கலாமே?????

பிகு: எனது வீட்டைச் சுற்றி இருப்பது வயதான பிரித்தானியர்கள். எனது வீட்டிலிருந்து நலாவது வீட்டுக்காரருக்கு வயது 93.

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள் ...

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது ...
மழை அதன் போக்கில் பெய்கின்றது ... வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை ...

மான்கள் துள்ளுகின்றன ...
அருவிகள் வீழ்கின்றன ...
யானைகள் உலாவுகின்றன ...
முயல்கள் விளையாடுகின்றது ...
மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌ ...

தவளை கூட துள்ளி ஆடுகின்றது ... பல்லிக்கும் பயமில்லை ...
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன ...
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை ...

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ...
சக மனிதனையும் அதனால் நேசிக்கத் தயங்குகின்றது ...
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது ...

முடங்கியது உலகமல்ல ...
மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம் ...

அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் ... அவன் மட்டும் ஆடினான் ... அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான் ...

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை ...

உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் என்னன்னெவோ 
உலக நியதி என்றான் ...

உலகம் பிறந்ததும், 
உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான் ...

ஆடினான் ...
ஆடினான் ...
அவனால் முடிந்த மட்டும் ஆடினான் ...

ஓடினான் ...
பறந்தான் ...
உயர்ந்தான் ... 
முடிந்த மட்டும் சுற்றினான் ...

கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் 
அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது 
அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான் ...

ஒரு கிருமி ...
கண்ணுக்கு தெரியாத 
ஒரே ஒரு கிருமி ...
சொல்லி கொடுத்தது பாடம் 

முடங்கி கிடக்கின்றான் மனிதன் ... கண்ணில் தெரிகின்றது பயம் ... நெஞ்சில் தெரிகின்றது கலக்கம் ...

அவன் வீட்டில் முடங்கி கிடக்க ... வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம் ...
கொஞ்சி கேட்கின்றது சிட்டு ...
கரைக்கு வந்து சிரிக்கின்றது மீன் ...

தெருவோர நாய் பயமின்றி நடக்க ... வீட்டில் ஏழு பூட்டோடு முடங்கி கிடக்கின்றான் மனிதன் ...

தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல ...

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில் ...

வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு ...

அவமானத்திலும் 
வேதனையிலும் 
கர்வம் உடைந்து ...
கவிழ்ந்து கிடந்து ...
கண்ணீர் விட்டு ...
ஞானம் பெறுகின்றது 
மானிட இனம் ... !

சும்மாவா சொன்னான் ஆடி அடங்கும் வாழ்கையடா🙏🙏

நன்றி whatsApp

Edited by MEERA
மூலம்

29 minutes ago, MEERA said:

நான் எழுதுவது இன்றைய நிலமை, உலகமே இன்று தமிழன் சொன்னதை தான் செய்கிறது.

LOCKDOWN என்று ஆங்கிலத்தில் சுலபமாக கூறலாம், ஆனால் தீட்டு அல்லது துடக்கு என்று நம்முன்னோர்கள் தூர விலத்தி இருந்தது தான் அது. தற்போது சட்டம் போட்டே அதனை கடைப்பிடிக்க முடிகிறது. பெயர் தான் மாற்றமே தவிர தீர்வு ஒன்றுதான்.

உங்கள் அறிவியல் வளர்ச்சியை வைத்து இதற்கு  மருந்து கண்டுபிடிக்கலாமே?????

பிகு: எனது வீட்டைச் சுற்றி இருப்பது வயதான பிரித்தானியர்கள். எனது வீட்டிலிருந்து நலாவது வீட்டுக்காரருக்கு வயது 93.

உலகம் தமிழன் சோன்னதை செய்கிறதா? உங்ஹாகளுக்கே சொல்லும் போது சிரிப்பு வரவில்லை? ஹாஹாஹாஹா 😂😂😂😂😂

இப்படியே தமிழர்கள் தமக்குள்  கற்பனையில் கிறுக்குத்தனமான இப்படி  எழுதி  தமக்குள்ளேயே பரப்பி தாமே  லைக் போட்டு விட்டு அதன் பின்னர் நிஜ உலகில் அடுத்தவன் நாடுகளில்  அவன்  சொல்லுவதையும் ஏன் சொந்த நாட்டிலேயே அடுத்தவனின் கீழ் அவனுக்கு  அடிமையாக  இருக்க வேண்டியதுதான். 

19 minutes ago, MEERA said:

இந்த திரி தனது மையக் கருத்தில் இருந்து மாங்குயிலின் கருத்தோடு விலகுகின்றது. 

//கோரோனோ வைரஸ், அடுத்த மாதம் ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து, உலகத்தில் இருந்து விடை பெறும்//

நாம்  இந்த திரியில் ஊரடங்கு சட்டத்தில் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன முன்னர் இலங்கை அரசு ஊரடங்கு சட்டத்தை எவ்வாறு பயன்படுத்தியது என திரிக்கு ஏற்ப கருத்துக்களை எழுதலாம்.  தனிமனித நம்பிக்கை சார்ந்த கருத்துக்களை வேறு ஒரு திரியை  தொடங்கி  எழுதுவது பொருத்தமானது.  என்பதை முதலில் கூறி  நீங்கள் குறிப்பிடும் தீட்டு என்பது சாதீயம்  தீண்டாமை  பெண்ணடிமைத்தனம்  ஆணாதிக்கம்  என பல வரலாறுகளுடன் பிணைந்தது . இவைகளை தற்போதைய உலகளாவிய தொற்று நோய் விசயத்தில் பொருத்தி நியாப்படுத்துவது எவ்வகையிலும் ஆரோக்கியமாக அமையாது 

  •  

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, சண்டமாருதன் said:

தீட்டிற்கும் நீங்கள் குறிப்பிட்டவற்றிற்கும் வேறுபாடு உங்களுக்கு புரியவில்லை..

52 minutes ago, tulpen said:

உலகம் தமிழன் சோன்னதை செய்கிறதா? உங்ஹாகளுக்கே சொல்லும் போது சிரிப்பு வரவில்லை? ஹாஹாஹாஹா 😂😂😂😂😂

இப்படியே தமிழர்கள் தமக்குள்  கற்பனையில் கிறுக்குத்தனமான இப்படி  எழுதி  தமக்குள்ளேயே பரப்பி தாமே  லைக் போட்டு விட்டு அதன் பின்னர் நிஜ உலகில் அடுத்தவன் நாடுகளில்  அவன்  சொல்லுவதையும் ஏன் சொந்த நாட்டிலேயே அடுத்தவனின் கீழ் அவனுக்கு  அடிமையாக  இருக்க வேண்டியதுதான். 

நான் மேற்கோள் காட்டியது இந்த மூன்றையும் தான் 

4 hours ago, MEERA said:

அம்மாள் வருத்தம் வந்தால் எப்படி இருந்தோமோ அவ்வாறான ஓர் ஒழுங்கை கடைப்பிடித்தாலே இதை முற்றாக குணமாக்கலாம்.

நம் முன்னோர்கள் கூறிய,

செருப்புடன் வீட்டிற்குள் சொல்லாதே

வெளியே சென்று வந்தால் கால் கழுவி குளித்து ஆடைகளை தோய்

எலுமிச்சையை கரைத்து குடி

இன்று உலகமே இதைதான் செய்கிறது.

அன்று தீட்டு என்று மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் உடைகளை தோய்ந்து குளித்தார்கள். இன்று உலகமே வெளியே சென்று வந்தால் குளிக்கிறது.

வீட்டிற்குள் காலணிகளுடன் உலவியவர்கள் இன்று வாசலில் கழட்டி விடுகிறார்கள். (தமிழர்கள் அல்ல)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அடங்கி கிடக்கின்றது உலகம் என்கின்றார்கள் ...

சூரியன் அதன்போக்கில் உதிக்கின்றது ...
மழை அதன் போக்கில் பெய்கின்றது ... வழக்கமான உற்சாகத்துடன் அடிக்கின்றது அலை ...

மான்கள் துள்ளுகின்றன ...
அருவிகள் வீழ்கின்றன ...
யானைகள் உலாவுகின்றன ...
முயல்கள் விளையாடுகின்றது ...
மீன்கள் வழக்கம் போல் நீந்துகின்றன‌ ...

தவளை கூட துள்ளி ஆடுகின்றது ... பல்லிக்கும் பயமில்லை ...
எலிகளும் அணில்களும் அதன் போக்கில் ஓடுகின்றன ...
காக்கைகளும் புறாக்களும் மைனாக்களும் சிட்டு குருவிகளும் ஏன் குளவிகளும் கூட அஞ்சவில்லை ...

மானிட இனம் அஞ்சிகிடக்கின்றது ...
சக மனிதனையும் அதனால் நேசிக்கத் தயங்குகின்றது ...
கூட்டை மூடி பூட்டு போட்டு அடங்கி கிடக்கின்றது ...

முடங்கியது உலகமல்ல ...
மானிடன் கண்டு வைத்த கற்பனை உலகம் ...

அதில் அவன் மட்டும் வாழ்ந்தான் ... அவன் மட்டும் ஆடினான் ... அவனுக்கொரு உலகம் சமைத்து அதுதான் உலகமென்றான் ...

மாபெரும் பிரபஞ்சத்தில் தானொரு தூசி என்பது அவனுக்கு தெரியவில்லை ...

உழைப்பென்றான் சம்பாத்தியமென்றான் விஞ்ஞானமென்றான் என்னன்னெவோ 
உலக நியதி என்றான் ...

உலகம் பிறந்ததும், 
உயிர்கள் பிறந்ததும் எனக்காக , நதியும் கடலும் எல்லாமும் எனக்காக என்றான் ...

ஆடினான் ...
ஆடினான் ...
அவனால் முடிந்த மட்டும் ஆடினான் ...

ஓடினான் ...
பறந்தான் ...
உயர்ந்தான் ... 
முடிந்த மட்டும் சுற்றினான் ...

கடவுளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் 
அவனால் உயிரை படைக்க முடியும் என்னால் முடியாது 
அதனால் என்ன விரைவில் கடவுளை வெல்வேன் என மார்தட்டினான் ...

ஒரு கிருமி ...
கண்ணுக்கு தெரியாத 
ஒரே ஒரு கிருமி ...
சொல்லி கொடுத்தது பாடம் 

முடங்கி கிடக்கின்றான் மனிதன் ... கண்ணில் தெரிகின்றது பயம் ... நெஞ்சில் தெரிகின்றது கலக்கம் ...

அவன் வீட்டில் முடங்கி கிடக்க ... வாசலில் வந்து நலம் விசாரிக்கின்றது காகம் ...
கொஞ்சி கேட்கின்றது சிட்டு ...
கரைக்கு வந்து சிரிக்கின்றது மீன் ...

தெருவோர நாய் பயமின்றி நடக்க ... வீட்டில் ஏழு பூட்டோடு முடங்கி கிடக்கின்றான் மனிதன் ...

தெரு நாயினை விட அவன் ஒன்றும் இப்பொழுது உயர்ந்தவன் அல்ல ...

மரத்தில் கனியினை கடித்தபடி இதை பார்த்து சிரிக்கின்றது அணில் ...

வானில் உயர பறந்து கொரோனா நோயாளியினை உண்டாலும் எனக்கும் பயமில்லை என்கின்றது கழுகு ...

அவமானத்திலும் 
வேதனையிலும் 
கர்வம் உடைந்து ...
கவிழ்ந்து கிடந்து ...
கண்ணீர் விட்டு ...
ஞானம் பெறுகின்றது 
மானிட இனம் ... !

சும்மாவா சொன்னான் ஆடி அடங்கும் வாழ்கையடா🙏🙏

மீராவா இதை எழுதியது ?
 
5 minutes ago, MEERA said:

தீட்டிற்கும் நீங்கள் குறிப்பிட்டவற்றிற்கும் வேறுபாடு உங்களுக்கு புரியவில்லை..

நான் மேற்கோள் காட்டியது இந்த மூன்றையும் தான் 

தீட்டை விடுங்கள் அது முட்டாள்தனமானது. மிகுதியாக  நீங்கள் கூறிய விடயங்கள்  சுத்தத்தை கடைப்பிடித்தல் என்பதை தமிழர்கள தானா உலகிற்கு அறிமுகப்படுத்தினாரகள் ? அப்படியானால் உலகில் வாழும் மற்றய இனத்தவர்கள் அசுத்தமானவர்கள?  அவ்வாறெனில்  தமிழர்கள் வாழும் இலங்கை, இந்தியா  ஆகிய நாடுகளில்  உள்ள தமிழர் நகர தெருக்களில்  சுத்தம் அறவே கடைப்பிடிக்கப்படுவதில்லையே . ஏன் ? தெருவில் கண்டபடி வெத்திலை  போட்டு துப்புவதும் பொதுகழிப்பறைகளை துப்பரவாக  வைத்திருகாமையும்   சுத்தமான செயல்களா? பிரான்ஸில் தமிழர்களின்  வர்த்தக மையமான லா சப்பல் ஒப்பீட்டு ரீதியில் பிரெஞ்சு மக்கள் வாழும் இடங்களை விட அசுத்தமாக உள்ளதே ஏன்?  இந்த வைரஸ் பிரச்சனை உலகம் முழுவதுக்குமான பொதுவான அச்சுறுத்தல்.இதனை உலக மக்களுடன் இணைந்து நாம் எதிர் கொள்ள வேண்டுமே தவிர  சும்மா பழம் வீண்  பெருமை பேசுவது அற்பத்தனமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

மீராவா இதை எழுதியது ?
 
இல்லை... Whatsapp வந்தது...

30 minutes ago, tulpen said:

தீட்டை விடுங்கள் அது முட்டாள்தனமானது. மிகுதியாக  நீங்கள் கூறிய விடயங்கள்  சுத்தத்தை கடைப்பிடித்தல் என்பதை தமிழர்கள தானா உலகிற்கு அறிமுகப்படுத்தினாரகள் ? அப்படியானால் உலகில் வாழும் மற்றய இனத்தவர்கள் அசுத்தமானவர்கள?  அவ்வாறெனில்  தமிழர்கள் வாழும் இலங்கை, இந்தியா  ஆகிய நாடுகளில்  உள்ள தமிழர் நகர தெருக்களில்  சுத்தம் அறவே கடைப்பிடிக்கப்படுவதில்லையே . ஏன் ? தெருவில் கண்டபடி வெத்திலை  போட்டு துப்புவதும் பொதுகழிப்பறைகளை துப்பரவாக  வைத்திருகாமையும்   சுத்தமான செயல்களா? பிரான்ஸில் தமிழர்களின்  வர்த்தக மையமான லா சப்பல் ஒப்பீட்டு ரீதியில் பிரெஞ்சு மக்கள் வாழும் இடங்களை விட அசுத்தமாக உள்ளதே ஏன்?  இந்த வைரஸ் பிரச்சனை உலகம் முழுவதுக்குமான பொதுவான அச்சுறுத்தல்.இதனை உலக மக்களுடன் இணைந்து நாம் எதிர் கொள்ள வேண்டுமே தவிர  சும்மா பழம் வீண்  பெருமை பேசுவது அற்பத்தனமானது. 

தற்போது உலகம் தமிழன் கூறியதை தான் செய்கிறது.... தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வரை இதையே செய்யும்.....

6 hours ago, MEERA said:

அம்மாள் வருத்தம் வந்தால் எப்படி இருந்தோமோ அவ்வாறான ஓர் ஒழுங்கை கடைப்பிடித்தாலே இதை முற்றாக குணமாக்கலாம்.

நம் முன்னோர்கள் கூறிய,

செருப்புடன் வீட்டிற்குள் சொல்லாதே

வெளியே சென்று வந்தால் கால் கழுவி குளித்து ஆடைகளை தோய்

எலுமிச்சையை கரைத்து குடி

இன்று உலகமே இதைதான் செய்கிறது.

ம்ம்ம் நீங்க சொல்றது 100க்கு 100 உண்மை!

அந்த காலத்தில கொரோனா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டதால பல சம்பிரதாயங்கள் தமிழர் மத்தில உருவாகியிருக்க வேணும்.

விபரமறியா தொற்றுநோய் வந்தா அம்மனுக்கு காப்பு கட்டி ஊர் மக்கள் வெளியூர் செல்ல ஏலாது. வெளியூர் மக்கள் இங்க வர ஏலாது போன்ற நடைமுறைக்கள் இருந்தமை.

செத்த வீடுகளுக்கு சென்று வந்தா குளிக்கிறது. ஆட்கள் அங்க ஏதாவது சாப்பிட்டா, செத்தவீட்டு நெருங்கின உறவுகள் துடக்கு என்டு 30 நாள் கோவில் போன்ற பொது இடங்களுக்கு போகாம இருக்கிறது. இறப்பு ஏற்பட்ட சரியான காரணம் தெரியாம ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா இருக்கலாம். இப்ப உள்ளது போன்ற ஆய்வு முறைகள் குறைவா இருந்தபடியா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பிரதாயமா மாறி இருக்கலாம்.

குழந்தை பிறந்தா செய்கிற நடைமுறைகள்.

மஞ்சள் நீர் தெளிக்கிறது, வேப்பம் இலை கட்டுறது.

இப்படி தமிழர் பின்பற்றிய அனுபவ அறிவுகள் பலதை அடுக்கிக் கொண்டே போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரை விஞ்ஞானம் அறிவு வளர்ச்சி என்று பீத்திக்கவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.... முன்னர் தமிழன் அன்றாடம் கடைப்பித்த பழக்கவழக்கங்களை செய்ய சொல்கிறார்கள் 

14 minutes ago, Rajesh said:

நான் நம் முன்னோர் என்று தான் எழுதி வருகிறேன் ஆனால் சிலர் தொடர்ச்சியாக அதனை சமயத்துடன் இழுத்துக்கட்டி விட முண்டியடிக்கிறார்கள்.

4 minutes ago, MEERA said:

நான் நம் முன்னோர் என்று தான் எழுதி வருகிறேன் ஆனால் சிலர் தொடர்ச்சியாக அதனை சமயத்துடன் இழுத்துக்கட்டி விட முண்டியடிக்கிறார்கள்.

பச்சை கண்ணாடி போட்டா எல்லாம் பச்சையா தெரிற மாதிரி மதவெறி என்ட கண்ணாடி போட்ட ஆட்கள்   அதுக்கு மத சாயம் பூசாட்டி அவங்களுக்கு தூக்கம் வராது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Rajesh said:

பச்சை கண்ணாடி போட்டா எல்லாம் பச்சையா தெரிற மாதிரி மதவெறி என்ட கண்ணாடி போட்ட ஆட்கள்   அதுக்கு மத சாயம் பூசாட்டி அவங்களுக்கு தூக்கம் வராது.

9 hours ago, MEERA said:

இன்று வரை விஞ்ஞானம் அறிவு வளர்ச்சி என்று பீத்திக்கவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.... முன்னர் தமிழன் அன்றாடம் கடைப்பித்த பழக்கவழக்கங்களை செய்ய சொல்கிறார்கள் 

நான் நம் முன்னோர் என்று தான் எழுதி வருகிறேன் ஆனால் சிலர் தொடர்ச்சியாக அதனை சமயத்துடன் இழுத்துக்கட்டி விட முண்டியடிக்கிறார்கள்.

செத்த வீட்டுக்கு போட்டு அதே உடுப்பு சப்பாத்தோடை வீட்டுக்குள்ளை வந்து சோபாவிலை இருந்து கோப்பி குடிக்கிற சனம் எங்களுக்கு பாடம் எடுக்குதுகள்.
**** ******

1 hour ago, Rajesh said:

ம்ம்ம் நீங்க சொல்றது 100க்கு 100 உண்மை!

அந்த காலத்தில கொரோனா போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டதால பல சம்பிரதாயங்கள் தமிழர் மத்தில உருவாகியிருக்க வேணும்.

விபரமறியா தொற்றுநோய் வந்தா அம்மனுக்கு காப்பு கட்டி ஊர் மக்கள் வெளியூர் செல்ல ஏலாது. வெளியூர் மக்கள் இங்க வர ஏலாது போன்ற நடைமுறைக்கள் இருந்தமை.

செத்த வீடுகளுக்கு சென்று வந்தா குளிக்கிறது. ஆட்கள் அங்க ஏதாவது சாப்பிட்டா, செத்தவீட்டு நெருங்கின உறவுகள் துடக்கு என்டு 30 நாள் கோவில் போன்ற பொது இடங்களுக்கு போகாம இருக்கிறது. இறப்பு ஏற்பட்ட சரியான காரணம் தெரியாம ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா இருக்கலாம். இப்ப உள்ளது போன்ற ஆய்வு முறைகள் குறைவா இருந்தபடியா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்பிரதாயமா மாறி இருக்கலாம்.

குழந்தை பிறந்தா செய்கிற நடைமுறைகள்.

மஞ்சள் நீர் தெளிக்கிறது, வேப்பம் இலை கட்டுறது.

இப்படி தமிழர் பின்பற்றிய அனுபவ அறிவுகள் பலதை அடுக்கிக் கொண்டே போகலாம்.

 ஒரு கேள்வி இவ்வளவு அறிவான முன்னோர்கள. நீங்களே சொன்ன இப்ப இருக்கிற ஆய்வு முறையில ஒன்று கூட கண்டு பிடிக்காதது ஏன்?  அப்படி அறிவியல் வளர்ந்து இப்போதும் அந்த பத்தாம் பசலி கிறுக்குதனங்களை கடைப்பிடிப்பபது ஏன்? 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

 ஒரு கேள்வி இவ்வளவு அறிவான முன்னோர்கள. நீங்களே சொன்ன இப்ப இருக்கிற ஆய்வு முறையில ஒன்று கூட கண்டு பிடிக்காதது ஏன்?  அப்படி அறிவியல் வளர்ந்து இப்போதும் அந்த பத்தாம் பசலி கிறுக்குதனங்களை கடைப்பிடிப்பபது ஏன்? 

இப்ப இருக்கிற ஆய்வு முறையினால் இன்னமும் கொரோனாவிற்கு மருந்து கண்பிடிக்காதது ஏன்???

பத்தாம் பசலி கிறுக்குத்தனங்களை கடைப்பிடிக்க சொல்வதே அறிவியலில் வளர்ந்தவர்கள்.

உ+ம் வீட்டிற்குள் இருத்தல்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையப்பா அந்தப் பூட்டு.

6 hours ago, MEERA said:

இப்ப இருக்கிற ஆய்வு முறையினால் இன்னமும் கொரோனாவிற்கு மருந்து கண்பிடிக்காதது ஏன்???

பத்தாம் பசலி கிறுக்குத்தனங்களை கடைப்பிடிக்க சொல்வதே அறிவியலில் வளர்ந்தவர்கள்.

உ+ம் வீட்டிற்குள் இருத்தல்

மருந்து கண்டுபிடித்தல் ஒன்றும் மதக்க்கூடங்களில் ஒதும் மந்திரமல்ல. நெடுங்காலமாய் பெற்ற நோய் தொடபான அறிவு, நுண்ணுயிரகளின் வகைப்படுத்தல்கள், அவற்றின் உடலியங்கல், தொற்றும் முறைகள், அவற்றை முன்கூட்டியே தடுக்கும் மருந்துகள்வந்த பின்னரும் குணமாக்கும் மருந்துகள், இவற்றுக்குரிய மேம்பட்ட ஆய்வுகூடங்கள், அவற்றிற்கு ஒதுக்கப்படும் பணம், உரிய ஆய்வறிஞர்கள், ஆக இவை எல்லாம் சார்ந்து ஆய்வை முடித்தலுக்கான நேரம் எவ்வளவு என்பதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் முடியும். 

சொன்னதையே திரும்ப திரும்ப கூறும்கிளிப்பிள்ளை போல்  இந்த பத்தாம் பசலிகள் கூறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இதுபற்றி எல்லாம் கவலை இல்லை. அறிவியலால் நன்மை வரும்வரை அறிவியலை தூற்றிக்கொண்டே இருப்பார்கள். அறிவியலால் நன்மை பயக்கும் போது அது இறைவன் ஆற்றல்லினீல் நடந்தது எமது முன்னோர் இதையே வெறுவழியில்  சொன்னார்கள் என்று சொந்தம் கொண்டாடுவர். இது தான்  காலம் காலமாக நடைபெறுகின்றது.  

Edited by tulpen
எழுத்து பிழை திருத்தம்

12 hours ago, சுவைப்பிரியன் said:

துல்பன் சும்மா ரெனசன் படாதையுங்கோ.லைவ் ஸ் வெரி சோட் நன்பா.😁

இல்லை நண்பா நான் ரென்சன் படவில்லை. இப்படியான ****** கருத்துக்களுக்கு நிதானமாக பதிலளித்து வாழ்க்கையை  எஞ்ஜோய் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

மருந்து கண்டுபிடித்தல் ஒன்றும் மதக்க்கூடங்களில் ஒதும் மந்திரமல்ல. நெடுங்காலமாய் பெற்ற நோய் தொடபான அறிவு, நுண்ணுயிரகளின் வகைப்படுத்தல்கள், அவற்றின் உடலியங்கல், தொற்றும் முறைகள், அவற்றை முன்கூட்டியே தடுக்கும் மருந்துகள்வந்த பின்னரும் குணமாக்கும் மருந்துகள், இவற்றுக்குரிய மேம்பட்ட ஆய்வுகூடங்கள், அவற்றிற்கு ஒதுக்கப்படும் பணம், உரிய ஆய்வறிஞர்கள், ஆக இவை எல்லாம் சார்ந்து ஆய்வை முடித்தலுக்கான நேரம் எவ்வளவு என்பதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் முடியும். 

சொன்னதையே திரும்ப திரும்ப கூறும்கிளிப்பிள்ளை போல்  இந்த பத்தாம் பசலிகள் கூறிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இதுபற்றி எல்லாம் கவலை இல்லை. அறிவியலால் நன்மை வரும்வரை அறிவியலை தூற்றிக்கொண்டே இருப்பார்கள். அறிவியலால் நன்மை பயக்கும் போது அது இறைவன் ஆற்றல்லினீல் நடந்தது எமது முன்னோர் இதையே வெறுவழியில்  சொன்னார்கள் என்று சொந்தம் கொண்டாடுவர். இது தான்  காலம் காலமாக நடைபெறுகின்றது.  

44 minutes ago, tulpen said:

இல்லை நண்பா நான் ரென்சன் படவில்லை. இப்படியான ******  கருத்துக்களுக்கு நிதானமாக பதிலளித்து வாழ்க்கையை  எஞ்ஜோய் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன். 

இங்கு ******* எழுதுவது நீங்கள். நான் எழுதுவது நம் முன்னோர்கள் கூறியது பற்றி, ஆனால் தாங்களே ஓதும் மந்திரம் & இறைவன் என்று மதச்சாயம் பூச முற்படுகிறீர்கள்.

இந்த திரியில் எந்த இடத்திலாவது மதம் இறைவன் என்ற சொற்களை உபயோகித்து இருக்கிறேனா? 

இன்று உலம் பூரா

வெளியே சென்று வந்தால் கைகளை நன்றாக

கழுவு உடைகளை தோய்

வீட்டிற்குள் இரு

இது தான்...... 

இதை தான் நம்முன்னோர்கள் காலங்காலமாக செய்து வந்தார்கள்.

37 minutes ago, MEERA said:

அதை எமது முன்னோரகள் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்த முன்னோர்கள் எல்லோரும்  செய்தார்கள். எம்மை விட உடலியலில் ஆரோக்கியமான சமுதாயம் உலகில் பல உண டு என்பதே அதற்கான ஆதாரம். 
 
கொரோனாவுக்கான மருந்து ஏன. அறிவியல் கண்டுபிடிக்கவல்லை என்ற உங்கள் கேள்விக்கான பதிலையே அங்கு குறிப்பிட்டிருந்தேன். அந்த பதிலை விளங்கிக்  கொண்டதற்கு நன்றி 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

அதை எமது முன்னோரகள் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருந்த முன்னோர்கள் எல்லோரும்  செய்தார்கள். எம்மை விட உடலியலில் ஆரோக்கியமான சமுதாயம் உலகில் பல உண டு என்பதே அதற்கான ஆதாரம். 

அதுதான் Spanish flu வந்து கொத்து கொத்தாக மடிந்தார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.