Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்????? கொரோனாவைத் தடுக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளே!

பலரும் இப்போது வீடுகளில் வேலைவெட்டி இல்லாது சும்மா தான் இருப்பீர்கள். அதனால் உங்கள் கருத்துக்களைப் பதிவதற்கான போதிய நேரம் உங்களுக்கு இருக்கும். கொரோனாவிலிருந்து தப்புவதற்கு நீங்கள் என்ன வழிமுறைகளைக் கையாளகிண்றீர்கள் என்று பதிவிடுங்கள். அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.சிலநேரம் உங்களுக்கும் உதவக்கூடியதாக இருக்கும்.

நானும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு  செல்வது குறைவு. கணவர் மட்டும் இன்னும் வேலைக்குச் செய்கிறார். வீட்டில் நிற்கச் சொன்னானும் கேட்கிறார் இல்லை. தான் ஆட்களுடன் நெருக்கமாக நின்று வேலை செய்வதில்லை என்று சாட்டுப்போக்குச் சொல்கிறார். அவர் வீட்டுக்குள் வந்தவுடன் நேரே  கைகளையும் முகத்தையும் காதையும் நன்கு கழுவிய பின்னர் தான் தன் கோட்டைக் கழற்றுகிறார். பின்னர் மேலேசென்று உடைகளைக்கலைந்து குளித்துவிட்டு வந்தபின்தான் அவர் வரவேற்பறையில் அமர அனுமதி. அவர் வந்தபின் நான் முன் வாசல் கைப்பிடியை கையுறை போட்டு சோப் போட்டு நன்கு துடைத்துவிடுகிறேன். ஆனால் அவரின் கோட்டைத் தினமும் துவைக்க முடியாதுதானே??? அதற்கு சிறிது நேரம் கெயாறையர் பிடித்துவிட்டுக் கொழுவி விடுகிறேன். எல்லோரும் ஒவ்வொருநாளும் குளித்த்துச் சுத்தமாக இருக்கிறோம்.நாள் உணவுகளை சமைத்து உண்கிறோம். வேறென்ன செய்யவேண்டும் என்று நீங்கள் தான் கூறவேண்டும் ??????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேறென்ன செய்யவேண்டும் என்று நீங்கள் தான் கூறவேண்டும் ??????

நான் ஜேர்மனிக்கு வந்தநாள் தொடக்கம் என்ன செய்தனோ அதைத்தான் இப்பவும் செய்து கொண்டிருக்கிறன்

சாப்பாடு / உணவு பொருட்கள். : இவற்றை பாதுகாப்பாக வீட்டிற்குள் கொண்டுவருவது பாதுகாப்பு அரணின் ஒரு பலவீனமான ஓட்டை. அதையும் முடிந்தளவு பலப்படுத்தினால் சிறப்பு. 

வீட்டை விட்டு வெளியே போய் வருபவர் குரும்பத்தில் ஒருவராகவும் அவர் அந்த எண்ணிக்கைகளை குறைப்பதும் நன்று 

  • கருத்துக்கள உறவுகள்

காலம்பர பாத்தரம் கழுவுறதுல பிஸி!!

மதியானம் சோறாக்கிட்டு இருக்கிறன்..

அப்புறம் சாப்ட்டுட்டு சத்த கண்ண மூடணும்..

இன்னைக்கு சாயந்திரம் வரை    கொறணோ எதிர்ப்பிலவ்பிசி மாப்ள..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்தநாள் தொடக்கம் என்ன செய்தனோ அதைத்தான் இப்பவும் செய்து கொண்டிருக்கிறன்

பரிமளத்துக்கு கடிதாசி எழுதுறதை சொல்லுறாரோ..?

400cbabbb86ffa873c054783af5a3b1b.gif

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர் வீட்டுக்குள் வந்தவுடன்

கதவின் கைபிடி உலோகம் என்றால், ஆகப் பிந்திய பரிந்துரையின் படி நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

உலோகத்தால் அடைக்கப்பட்ட உணவை வாங்கினால், அவையும் துடைக்கப்பட வேண்டும்.

bathroom, toilet இல் உள்ள  உலோக tap, cistern, shower போன்றவை ஒவொரு நாளும் நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

தலையில் தோய்வதே நல்லது. அல்லது SHOWER CAP ஐ அணியுமாறு துணையை வேண்டவும் (பிறர் சிரித்தால் , I would rather have unblocked wind pipe என்ற ஏதாவது ஓர் குதர்க்க பேச்சை  சிரிப்பவரின் மண்டையை இடிக்கும் படி  கைவசம் வைத்திருக்குமாறு சொல்லவும்).

ஜாக்கட் மற்றும் உடைகளை நுரைக்கும் சவர்க்கரத்தில், அதி கூடிய வெப்பத்தில் தோய்ப்பதே நல்லது.

குறிப்பாக, இளையோர் மொபைல் போன் அல்லது tablet பார்த்துக் கொண்டு உண்பது நிறுத்தப்பட வேண்டும்.  

இது மரணச் சடங்கு வீட்டில் நடைபெற்றாலும், இப்படி கவனம் எடுக்க தேவை இல்ல்லாத அளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது.

இப்படியாக, உங்கள் வாழ்கை முறையை சிந்தித்து பழக்கவழக்கத்தில் கொண்டு வர முயற்சிகவும்.

கீழ் உள்ள இணைப்பை வாசித்து, சிந்தித்து  பழக்கவழக்கத்தில் கொண்டு வர முயற்சிகவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ராசவன்னியன் said:

பரிமளத்துக்கு கடிதாசி எழுதுறதை சொல்லுறாரோ..?

400cbabbb86ffa873c054783af5a3b1b.gif

சும்மா தமாஷ் பண்ணாதீங்க அண்ணே...:cool:

Bildergebnis für gowndamani senthil

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பங்கர் வெட்டிட்டு இருக்கம். பதுங்கத்தான். இல்லப் போனா அப்படியே மூடி பதுக்கி விடுவாங்க. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்தநாள் தொடக்கம் என்ன செய்தனோ அதைத்தான் இப்பவும் செய்து கொண்டிருக்கிறன்

அப்ப வேலைக்கும் போறதில்லையோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

சாப்பாடு / உணவு பொருட்கள். : இவற்றை பாதுகாப்பாக வீட்டிற்குள் கொண்டுவருவது பாதுகாப்பு அரணின் ஒரு பலவீனமான ஓட்டை. அதையும் முடிந்தளவு பலப்படுத்தினால் சிறப்பு. 

வீட்டை விட்டு வெளியே போய் வருபவர் குரும்பத்தில் ஒருவராகவும் அவர் அந்த எண்ணிக்கைகளை குறைப்பதும் நன்று 

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

காலம்பர பாத்தரம் கழுவுறதுல பிஸி!!

மதியானம் சோறாக்கிட்டு இருக்கிறன்..

அப்புறம் சாப்ட்டுட்டு சத்த கண்ண மூடணும்..

இன்னைக்கு சாயந்திரம் வரை    கொறணோ எதிர்ப்பிலவ்பிசி மாப்ள..

இது நீங்கள் வளமையாகச் செய்வதுதானே. புதிதாகக் கொரோனா பாதுகாப்புக்கு உண்பதையும், பாத்திரங்கள் கழுவுவதையும், தூங்குவதையும் விட என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.😀

கையோட இந்த எழுத்துக்களை எப்படிப் பெரிதாக்கினீர்கள் என்றும் கூறுங்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

இது நீங்கள் வளமையாகச் செய்வதுதானே. புதிதாகக் கொரோனா பாதுகாப்புக்கு உண்பதையும், பாத்திரங்கள் கழுவுவதையும், தூங்குவதையும் விட என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.😀

கையோட இந்த எழுத்துக்களை எப்படிப் பெரிதாக்கினீர்கள் என்றும் கூறுங்கள்???

எந்த கடை???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

பரிமளத்துக்கு கடிதாசி எழுதுறதை சொல்லுறாரோ..?

அதுதான் வேறை என்ன ?? ஒருவருஷமாயும் எழுதி முடியேல்லை .😀

3 minutes ago, MEERA said:

எந்த கடை???

Lidil

3 hours ago, Kadancha said:

கதவின் கைபிடி உலோகம் என்றால், ஆகப் பிந்திய பரிந்துரையின் படி நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

உலோகத்தால் அடைக்கப்பட்ட உணவை வாங்கினால், அவையும் துடைக்கப்பட வேண்டும்.

bathroom, toilet இல் உள்ள  உலோக tap, cistern, shower போன்றவை ஒவொரு நாளும் நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

அல்லது தலையில் தோய்வதே நல்லது.SHOWER CAP ஐ அணியுமாறு துணையை வேண்டவும் (பிறர் சிரித்தால் , I would rather have unblocked wind pipe என்ற ஏதாவது ஓர் குதர்க்க பேச்சை  சிரிப்பவரின் மண்டையை இடிக்கும் படி  கைவசம் வைத்திருக்குமாறு சொல்லவும்).

ஜாக்கட் மற்றும் உடைகளை நுரைக்கும் சவர்க்கரத்தில், அதி கூடிய வெப்பத்தில் தோய்ப்பதே நல்லது.

குறிப்பாக, இளையோர் மொபைல் போன் அல்லது tablet பார்த்துக் கொண்டு உண்பது நிறுத்தப்பட வேண்டும்.  

இது மரணச் சடங்கு வீட்டில் நடைபெற்றாலும், இப்படி கவனம் எடுக்க தேவை இல்ல்லாத அளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது.

இப்படியாக, உங்கள் வாழ்கை முறையை சிந்தித்து பழக்கவழக்கத்தில் கொண்டு வர முயற்சிகவும்.

எழுதுவதை வாசிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஒவ்வொரு நாளும் தோய்ந்தால் சன்னி அல்லா வந்திடும்.
இது இயல்பில்லாதது செய்து மண்டை தட்டப் போகுது.

சீனி மாப் பைகளைத் தவிர மற்ற எல்லாமே கழுவக் கூடியதுதான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

நாங்கள் பங்கர் வெட்டிட்டு இருக்கம். பதுங்கத்தான். இல்லப் போனா அப்படியே மூடி பதுக்கி விடுவாங்க. 

சின்னனா வெட்டாமல் அகலமா வெட்டுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சின்னனா வெட்டாமல் அகலமா வெட்டுங்கோ

ஏன் ஆள் அவ்வளா உருப்படியோ?😲

46 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

இது நீங்கள் வளமையாகச் செய்வதுதானே. புதிதாகக் கொரோனா பாதுகாப்புக்கு உண்பதையும், பாத்திரங்கள் கழுவுவதையும், தூங்குவதையும் விட என்ன செய்கிறீர்கள் என்றுதான் கேட்டேன்.😀

கையோட இந்த எழுத்துக்களை எப்படிப் பெரிதாக்கினீர்கள் என்றும் கூறுங்கள்???

ஒண்டொண்டா புடிச்சு இதுக்குள்ள 👇போட்டு நங்கு நங்கெண்டு இடிக்கிறனான்.

metalural.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடிவா வாசிக்க வேணும். கொரோனாப் பாதுகாப்புக்கு எண்டு போட்டிருக்கிறன் ஓணாண்டி 😃

16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏன் ஆள் அவ்வளா உருப்படியோ?😲

ஒண்டொண்டா புடிச்சு இதுக்குள்ள 👇போட்டு நங்கு நங்கெண்டு இடிக்கிறனான்.

வடிவா வாசிக்க வேணும். கொரோனாப் பாதுகாப்புக்கு எண்டு போட்டிருக்கிறன் ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எழுதுவதை வாசிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் ஒவ்வொரு நாளும் தோய்ந்தால் சன்னி அல்லா வந்திடும்.

தலைமயிரை 2-4 நாட்களுக்கு விலை குறைந்த after shave அல்லது perfume ஆல் fragrance அற்ற wipe அல்லது tissue இல் ஊற்றி துடைக்கவும்.

1-2 நாட்களுக்கு தோயல்.

நான் அப்படித்  தான் செய்தேன்

ஆனால் நான் வெளியில் செல்வது முன்பு 3-4 நாட்களாக இருந்தது, இப்பொது 1-2 நாட்களாக குறைத்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு நான் இன்ரெநெற்றில ஓடர்பண்ணின சாப்பாட்டு மேசை பார்சல் வந்தது.. வீட்டை டிலிவரி கொண்டுவந்தவன் வீட்டு பெல் அடிச்சான் நான் கதவை திறந்து வெளீலபோகமுன்னம் பார்சலபோட்டிட்டு சைனும் வேண்டேல்ல கொரோனோ பயத்தில ஓடீட்டான்.. ஆர் கொண்டுவந்தான் எண்டே தெரியா பார்சல் மட்டும் வாசலுக்க கிடந்துது.. நான் பிறகு கையுக்கு கிளவுட்ஸ் எல்லாம் போட்டு ரோட்டிலையே வச்சு காட்போட் மட்டை எல்லாரையும் உடைச்சு குப்பைவாளிக்க போட்டுட்டு உள் உடன மட்டும் வீட்டுக்க எடுத்துக்கொண்டு போன்னான். வீட்டை போய் பொருத்தேக்கதான் பாத்தன் மேட் இன் சைனா எண்டிருக்கு. மேசைக்கு எல்லாம் அன்ரிபயோட்டிக் ஊத்தி கழுவி காயப்போட்டிருக்கிறன். மேசை பூட்டேக்க போட்டிருந்த உடுப்பெல்லாம் தோச்சு காயப்போட்டு குளிச்சுட்டு இருக்கிறன். லேசா உள்ளுக்க பயமாயும் இருக்கு.

என்னடா இது வீட்டுக்க ஒளிச்சிருக்க சனியன் வீடுதேடி வந்திருக்கப்பா..😢🤦🏻‍♂️

2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு அருகில் இருக்கும் கடை திறக்கும் நேரம் சென்றால் ஒரு இருப்பது பேர் வரிசையில். நான் தள்ளி நின்று என்ன நடக்குது என்று பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு எல்லோரும் உள்ளே சென்று இரண்டு நிமிடத்தின் பின்னர் சென்று கோழி, பால், சொசேச், கரட் , தோடம்பழம் இத்தனையும் வாங்கிவந்து எல்லாவற்றையும் நீரில் அலசி பிளாஸ்டிக் பையை குப்பை வாளியில் போட்டுவிட்டு கையையும் கழுவியபின் எல்லாவற்றையும் குளிரூட்டியில் வைத்துவிட்டு மீண்டும் கையைக் கழுவினேன். இதை விட என்ன தான் செய்வது ???

குளிர்சாதன பெட்டியின் கை பிடியை துடைக்க மறந்து விட்டீர்களே ?🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

குளிர்சாதன பெட்டியின் கை பிடியை துடைக்க மறந்து விட்டீர்களே ?🤣

அய்யய்யோ மறந்திட்டனே முக்கியமானதை 😂

1 hour ago, Kadancha said:

தலைமயிரை 2-4 நாட்களுக்கு விலை குறைந்த after shave அல்லது perfume ஆல் fragrance அற்ற wipe அல்லது tissue இல் ஊற்றி துடைக்கவும்.

1-2 நாட்களுக்கு தோயல்.

நான் அப்படித்  தான் செய்தேன்

ஆனால் நான் வெளியில் செல்வது முன்பு 3-4 நாட்களாக இருந்தது, இப்பொது 1-2 நாட்களாக குறைத்து விட்டேன்.

அது நல்லதுதான்

20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இண்டைக்கு நான் இன்ரெநெற்றில ஓடர்பண்ணின சாப்பாட்டு மேசை பார்சல் வந்தது.. வீட்டை டிலிவரி கொண்டுவந்தவன் வீட்டு பெல் அடிச்சான் நான் கதவை திறந்து வெளீலபோகமுன்னம் பார்சலபோட்டிட்டு சைனும் வேண்டேல்ல கொரோனோ பயத்தில ஓடீட்டான்.. ஆர் கொண்டுவந்தான் எண்டே தெரியா பார்சல் மட்டும் வாசலுக்க கிடந்துது.. நான் பிறகு கையுக்கு கிளவுட்ஸ் எல்லாம் போட்டு ரோட்டிலையே வச்சு காட்போட் மட்டை எல்லாரையும் உடைச்சு குப்பைவாளிக்க போட்டுட்டு உள் உடன மட்டும் வீட்டுக்க எடுத்துக்கொண்டு போன்னான். வீட்டை போய் பொருத்தேக்கதான் பாத்தன் மேட் இன் சைனா எண்டிருக்கு. மேசைக்கு எல்லாம் அன்ரிபயோட்டிக் ஊத்தி கழுவி காயப்போட்டிருக்கிறன். மேசை பூட்டேக்க போட்டிருந்த உடுப்பெல்லாம் தோச்சு காயப்போட்டு குளிச்சுட்டு இருக்கிறன். லேசா உள்ளுக்க பயமாயும் இருக்கு.

என்னடா இது வீட்டுக்க ஒளிச்சிருக்க சனியன் வீடுதேடி வந்திருக்கப்பா..😢🤦🏻‍♂️

விதி ஆரைத்தான் விட்டுது ???😂

எதுக்கும் மனிசி பிள்ளைகளை இரண்டு கிழமை ஒரு மீற்றர்  இடைவெளியிலை நிப்பாட்டி வையுங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்

கார் வைத்திருந்தால், இயலுமானவரை நன்றாக சூரிய வெளிச்சம் மற்றும் வெய்யில் கார் இந்த உள்ளே வருமாறு நிறுத்தவும்.

sun roof இருந்தால் கண்ணாடியை திறக்காமல், screen ஐ திறந்து விடவும்.

இதை வீட்டிற்கும் பொருந்தும். நெட் திரையை curtain போலெ வரைக்கும் உயர்த்தி அதில் கொழுவி விட்டு யன்னலை நீக்கலாக திறந்து வெய்யிலை உள் விடவும்.

வெய்யில் உள்ளபோது வெளியில் சென்றால், வெய்யில் போக முதலே வீடு திரும்பி, சூரிய குளியலை உங்கள் ஒவொரு பகுதிக்கும் 3-5 நிமிடங்கள் வரை எடுங்கள்.

முக்கியமாக தலை மயிரும், முகம், காது முன் பின் கழுத்து, ஜாக்கெட் trouser போன்றெவற்றிற்கு முன், பின், மற்றும் பக்கங்கள், உட்பக்கங்கள் என்பவற்றை ஒவொன்றாக expose பண்ணி சூரிய குளியல் கொடுக்கவும்.   

உங்கள் purse, நாணயங்கள், debit கார்ட், கார் சாவி     போன்றவற்றிட்ற்கும் சூரிய குளியல் கொடுக்கவும்.

shoe ஐ வெய்யில் தாளு மட்டும், வெய்யிலில் காய விட்டேன்.

இன்று London weather ஐ பார்த்து, நான் ஷாப்பிங் உம் சூரிய குளியலும் செய்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

ஏன் சூரிய குளியல்??

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்னடா இது வீட்டுக்க ஒளிச்சிருக்க சனியன் வீடுதேடி வந்திருக்கப்பா..😢🤦🏻‍♂️

யோவ் ஓணாண்
வைப்புசெப்புகளை யாருக்காவது சொல்லி வையுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

ஏன் சூரிய குளியல்??

சீன மருத்துவர்களின் பரிந்துரை படி, சூரிய வெய்யில் வைரஸ் ஐ கொல்லக் கூடியது.  

ஆனால் வீட்டில் அல்லது ஆள் அரவம் இல்லாத இடத்தில எடுங்கள்.

ட்டில் உடுப்பு காய போடலாம் என்றால் இன்னும் நல்லது, வெளியில் சென்று வெய்யில் போக முன் திரும்பி எல்லா உடுப்பையும் வீட்டு வசாலிட்ற்குள் அல்லது பின் புறம் மறைவாக கழட்டி, தோய்க்க வேண்டிய உடை ஒன்றை உடுத்தி, போட்ட உடுப்பை வெய்யிலில் நீண்ட நேரம் உலர்த்தலாம்.

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Kadancha said:

முக்கியமாக தலை மயிரும், முகம், காது முன் பின் கழுத்து, ஜாக்கெட் trouser போன்றெவற்றிற்கு முன், பின், மற்றும் பக்கங்கள், உட்பக்கங்கள் என்பவற்றை ஒவொன்றாக expose பண்ணி சூரிய குளியல் கொடுக்கவும். 

நாளைக்கும் வெய்யில் தானே....பல்கனியிலை நிண்டு அபிநயம் செய்யத்தானிருக்கு....:cool:
தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

சீன மருத்துவர்களின் பரிந்துரை படி, சூரிய வெய்யில் வைரஸ் ஐ கொல்லக் கூடியது.  

ஆனால் வீட்டில் அல்லது ஆள் அரவம் இல்லாத இடத்தில எடுங்கள்.

ட்டில் உடுப்பு காய போடலாம் என்றால் இன்னும் நல்லது, வெளியில் சென்று வெய்யில் போக முன் திரும்பி எல்லா உடுப்பையும் வீட்டு வசாலிட்ற்குள் அல்லது பின் புறம் மறைவாக கழட்டி, தோய்க்க வேண்டிய உடை ஒன்றை உடுத்தி, போட்ட உடுப்பை வெய்யிலில் நீண்ட நேரம் உலர்த்தலாம்.

அப்படியானால் இலங்கை இந்தியாவில் பரவுகிறதே???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.