Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை ரஷ்யா வழங்கியுள்ளது- ட்ரம்ப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை ரஷ்யா வழங்கியுள்ளது- ட்ரம்ப்

 

 

     by : Litharsan

Trump-and-Putin.jpg

மருத்துவ உபகரணங்களை வழங்கியதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பங்களிப்பை ரஷ்யா அளித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி ஆலோசனைக்குப் பின்னர் ரஷ்யாவிடம் இருந்து வென்ரிலேற்றர் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க அமெரிக்க ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், அதிகப்படியான மருத்துவ உதவிகளைத் தருவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்திருந்ததாகவும் அதனை தான் ஏற்றுக்கொள்வதாக பதிலளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக ரஷ்யா செய்யும் பிரசாரங்கள் பற்றி தனக்குக் கவலையில்லை எனக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், சீனா மற்றும் பிற நாடுகளிடம் இருந்தும் மருத்துவ உதவிகளைப் பெற்றுள்ளதாகவும் பல நாடுகளுக்கு உதவி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/கொரோனாவுக்கு-எதிரான-போரா/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு சிறந்த பங்களிப்பை ரஷ்யா வழங்கியுள்ளது- ட்ரம்ப்

 

 

சீனாவிலை இருந்து ஜேர்மனிக்கு வந்த முகக்கவசங்கள் எல்லாத்தையும் அமெரிக்கா ஒரே அமுக்காய் அமுக்கீட்டுதாம்.

A delivery of protective masks destined for Germany will probably never arrive ....

The USA intercepted the delivery on the way to Germany and redirected it to its own country. Health Minister Jens Spahn (CDU) confirmed this to BILD.

The "Tagesspiegel" had previously reported about it.

According to information from "rbb24", this should be an order from the Berlin police. The masks had been ordered from the 3M company.

The American manufacturer also has its masks made in China. 3M is one of the largest providers of respiratory masks for industry and healthcare. The delivery was to be reloaded in Bangkok and transported from there to Germany by air freight. In Bangkok, the delivery was then "redirected" to the USA, the Berlin police confirmed.

https://www.bild.de/regional/berlin/berlin-aktuell/bericht-schutzmasken-lieferung-fuer-berlin-von-den-usa-abgefangen-69824084.bild.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சீனாவிலை இருந்து ஜேர்மனிக்கு வந்த முகக்கவசங்கள் எல்லாத்தையும் அமெரிக்கா ஒரே அமுக்காய் அமுக்கீட்டுதாம்.

நீங்கள் பீட்சா என்னிடம் ஓடர் செய்துகிறீர்கள் நான் உங்களிடம் டெலிவரி செய்ய வரும் போது மனம் மாறியோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டுகாரர் கேட்டு கொண்டதிற்காகவோ பிட்சாவை அவரிடம் ஒப்படைத்தால் தவறு என்னுடையதும் தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் பீட்சா என்னிடம் ஓடர் செய்துகிறீர்கள் நான் உங்களிடம் டெலிவரி செய்ய வரும் போது மனம் மாறியோ அல்லது உங்கள் பக்கத்து வீட்டுகாரர் கேட்டு கொண்டதிற்காகவோ பிட்சாவை அவரிடம் ஒப்படைத்தால் தவறு என்னுடையதும் தானே

முதலாளிமார் டெலிவரி செய்யுறது குறைவு.அதுக்கெண்டு ஆக்கள் இருப்பினம்.டெலிவரி செய்யிறவன் அமெரிக்கனாய் இருந்தால்?????

அமெரிக்கன் வாழ்ந்தால் தான் பிரெஞ்சும் ஜெர்மனியும் கனடாவும் வாழும்.

அமேரிக்கா வீழ்ந்து சீனா வென்றால், எங்களுக்கும்  நாயும், எலியும் வவ்வாலும் தான்   😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, ampanai said:

அமெரிக்கன் வாழ்ந்தால் தான் பிரெஞ்சும் ஜெர்மனியும் கனடாவும் வாழும்.

அமேரிக்கா வீழ்ந்து சீனா வென்றால், எங்களுக்கும்  நாயும், எலியும் வவ்வாலும் தான்   😁

அமெரிக்காவின்ரை வரலாறு சில நூறு வருடங்கள் தான்....
சீனாவின்ரை வரலாறு பல ஆயிரம் வருடங்கள்...
இப்பவும் அமெரிக்காவுக்கு சீனாதான் கை கொடுக்குது....ரஷ்யாவும் எண்டது வேறை விசயம்.
ஐரோப்பாவிலை இங்கிலாந்தை தவிர மற்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு வரையறையோடை சீனாவை ஆதரித்து சமாளித்துத்தான் நடக்கின்றார்கள்.ரஷ்யாவுடன் இன்னும் அதிகம்
போன கிழமையும் சைனா வைரஸ் சைனா வைரஸ் எண்டு கத்திப்போட்டு இப்ப சீனாவின்ரை காலிலை விழுந்து போய் கிடக்கிறார் டொனால்ட் ரம்ப்.🤣

படிப்பை விட அனுபவம் முக்கியம் ராசா....அதுதான் இப்ப வேலை செய்யுது.😎

3 minutes ago, குமாரசாமி said:

அமெரிக்காவின்ரை வரலாறு சில நூறு வருடங்கள் தான்....
சீனாவின்ரை வரலாறு பல ஆயிரம் வருடங்கள்...

சீனா அதிகாரத்தில் இருந்த நாடு. பின்னர் வீழ்ந்தது. 

அமெரிக்க - சின்ன பொடியன் தான் - ஆனால்,இன்னும் வீழ வில்லை  👏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சீனாவிலை இருந்து ஜேர்மனிக்கு வந்த முகக்கவசங்கள் எல்லாத்தையும் அமெரிக்கா ஒரே அமுக்காய் அமுக்கீட்டுதாம்.

இப்ப உங்களுக்கு முக கவசம் இருக்குதா இல்லையா 😎

ஊரில கனபேர் துவாயுடன் தான் செல்கிறார்கள் வயசுக்காரர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப உங்களுக்கு முக கவசம் இருக்குதா இல்லையா 😎

ஊரில கனபேர் துவாயுடன் தான் செல்கிறார்கள் வயசுக்காரர்கள் 

வெளியில் போயிற்று வந்து துவாயை துவைச்சு போடினமோ ?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

வெளியில் போயிற்று வந்து துவாயை துவைச்சு போடினமோ ?

அது தெரியல ஆனால் முகக்கவசங்களை  பாவிப்பவர்களை காணகுறைவு ஒரு துணி மாத்திரம் தான் கட்டியுள்ளார்கள் இலங்கையில் இருப்பவர்கள் அனைவரும் அரச வேலையோ பணக்காரரோ கிடையாது நாள் தோறும் வயலுக்கும் , கடலுக்கும் ,குளத்துக்கும் , ஆறுக்கும், விவசாயத்துக்கும் ,(பயிர்செய்கை) செல்ல வேண்டும் குறிப்பாக கிழக்கில் இவர்களை தங்களைகூட கவனிக்கல தங்கள் குடும்பம் வாழணும் என நினைப்பவர்கள் ஒருத்தரை இடைமறித்து கேட்ட போது எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்றார் நான் சொன்னேன் இது உங்களுக்கு வந்தால் உங்கள் குடும்பமும் பாதிப்படையும் என்று சொன்னேன் அதற்கு அவர் அது வர முதல் பசி வந்து செத்துடுவோம் என சொல்லி கடந்து போனார்

* அரசு கொடுத்த 5000 ரூபாயில் கூட 3000 மட்டுமே கொடுத்து மீதி இரண்டாயிரத்தை சேமிப்பு என சொல்லி வங்கியில் வைத்திருக்கும் சமுர்த்தி ஊழியர்களும் 

* அரசு வழங்கிய நிதியில் பழுதாகிய மரக்கறிகளை வாங்கி கொடுக்கும் அதிகாரிகள் இருக்கும் வரைக்கும் நாம் நாங்கள் வாழ போராடத்தான் வேண்டும் இங்கே

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

அது தெரியல ஆனால் முகக்கவசங்களை  பாவிப்பவர்களை காணகுறைவு ஒரு துணி மாத்திரம் தான் கட்டியுள்ளார்கள் இலங்கையில் இருப்பவர்கள் அனைவரும் அரச வேலையோ பணக்காரரோ கிடையாது நாள் தோறும் வயலுக்கும் , கடலுக்கும் ,குளத்துக்கும் , ஆறுக்கும், விவசாயத்துக்கும் ,(பயிர்செய்கை) செல்ல வேண்டும் குறிப்பாக கிழக்கில் இவர்களை தங்களைகூட கவனிக்கல தங்கள் குடும்பம் வாழணும் என நினைப்பவர்கள் ஒருத்தரை இடைமறித்து கேட்ட போது எனக்கு எது நடந்தாலும் பரவாயில்லை என்றார் நான் சொன்னேன் இது உங்களுக்கு வந்தால் உங்கள் குடும்பமும் பாதிப்படையும் என்று சொன்னேன் அதற்கு அவர் அது வர முதல் பசி வந்து செத்துடுவோம் என சொல்லி கடந்து போனால் 

* அரசு கொடுத்த 5000 ரூபாயில் கூட 3000 மட்டுமே கொடுத்து மீதி இரண்டாயிரத்தை சேமிப்பு என சொல்லி வங்கியில் வைத்திருக்கும் சமுர்த்தி ஊழியர்களும் 

* அரசு வழங்கிய நிதியில் பழுதாகிய மரக்கறிகளை வாங்கி கொடுக்கும் அதிகாரிகள் இருக்கும் வரைக்கும் நாம் நாங்கள் வாழ போராடத்தான் வேண்டும் இங்கே

தனி அந்த 3000 மும் இன்னும்நிறைய பேருக்கு குடுபடேலை

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாதவூரான் said:

தனி அந்த 3000 மும் இன்னும்நிறைய பேருக்கு குடுபடேலை

ம்ம் எப்போது சுனாமி வந்து ஏழைகளுக்கு வந்த வளங்களை சுரண்டினார்களோ அதே போல இந்த கொரோனோ வந்தும் சுரண்டுகிறார்கள்.

நான் திருமணமான பின்னர் எங்கள் கிராம சேவகருக்கு  கடிதம் கொடுத்து நான் கல்யாணம் கட்டி விட்டேன் அதனால் மாமியாருக்கு வாக்காளர் இடாப்பை பிரித்து மச்சினன் , மாமி ,மாமா அவர்கள் வேறு என கடிதம் கொடுத்தும் அவர் இன்னும் பிரிக்காமலும் சமுர்த்தி கொடுக்காமலும் இருந்திருக்கிறார் கேட்டபோது உங்கள இன்னும் பிரித்து பதியவில்லை என்று சொல்லிவிட்டார் இதுவரைக்கும் அவர்களுக்கு எந்த உதவியுக் கிடைக்கல. 

காரணம் அந்த கிராம சேவகர் அவரின் அலட்சிய போக்கு என்ன செய்யலாம் இதுதான் அரச வேலை பார்க்கும் அதிகாரி

  • கருத்துக்கள உறவுகள்

ரஷியா வழங்கிய மருத்துவ உபகரணங்கள் பல அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் - டிரம்ப்

 

ரஷியா அதிபர் புதின் நம் நாட்டுக்கு வழங்கியுள்ள மருத்துவ உபகரணங்கள் பலரது உயிரை காப்பாற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷியா வழங்கிய மருத்துவ உபகரணங்கள் பல அமெரிக்கர்களின் உயிரை காப்பாற்றும் - டிரம்ப்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்
 
வாஷிங்டன்:
 
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 59 ஆயிரத்து 128 இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர்.
 
குறிப்பாக அமெரிக்காவில் கொரோனா தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 
 
 
அந்நாட்டில் தற்போதைய நிலவரப்படி, 2 லட்சத்து 76 ஆயிரத்து 37 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதல் காரணமாக 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 
 
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வைரஸ் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
 
இதற்கிடையில், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தத்தளித்துவந்த அமெரிக்காவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உதவ முன் வந்தார். 
 
அமெரிக்காவுக்கு ரஷிய வழங்கிய மருத்துவ உபகரணங்கள்
 
இதற்காக அதிநவீன மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு ரஷியாவில் இருந்து மிகப்பெரிய சரக்கு விமானம் அமெரிக்காவுக்கு புறப்பட்டது. 
 
அந்த விமானம் கடந்த வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அந்த மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அனுப்பிய மருத்துவ உபகரணங்கள் பலரது உயிர்களை காப்பாற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது:-
 
டிரம்ப் மற்றும் புதின்
 
‘'அமெரிக்காவுக்கு மருத்துவ உபகரணங்களை ரஷிய அதிபர் புதின் அனுப்பியது மிகவும் நல்ல உபசரிப்பு. ரஷியா அளித்த உதவியை நான் வாங்காமல் வேண்டாம் நன்றி என கூறியிருக்கலாம் அல்லது வாங்கிக்கொண்டு நன்றி என கூறியிருக்கலாம். 
 
புதின் மிகப்பெரிய விமானத்தில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை அனுப்பியுள்ளார். இந்த உபகரணங்கள் அமெரிக்காவில் பலரது உயிர்களை காப்பாற்றும். ஆகையால், நான் அதை ஏற்றுக்கொண்டேன்’’ என்றார். 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.