Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்காவில் சட்ட ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் வாதிட்ட சுமந்திரன்

Featured Replies

இலங்கையில் சட்டரீதியான முறையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் எனினும் நாட்டில் காணப்படும் சுகாதாரம் தொடர்பான நிலைமையில் அந்த ஊரடங்குச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன், இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை என வாதிட்டதை அடுத்து, நீதவான், ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை மீறியமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு தடையேற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஊடகங்களிடம் மேலும் கருத்து வெளியிட்ட சுமந்திரன்,

“ வழக்கின் ஆரம்பத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஊரடங்குச் சட்டத்தை மீறியதாகவும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தல் வாகனத்தை கொண்டு வந்தனர் என குற்றம் சுமத்த பொலிஸார் முயற்சித்தனர்.

எனினும் நாட்டிற்குள் சட்டரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இல்லை, நாட்டில் காணப்படும் நிலைமை காரணமாக அதனை பின்பற்றி வருகிறோம் என நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

இதனால், அனுமதிப்பத்திரம் இல்லை, ஊரடங்குச் சட்டத்தை மீறினார் என குற்றம் சுமத்துவது சட்டவிரோதமானது.

பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட்டு இவர்களை கைது செய்து, தடுத்து வைக்க முடியாது என்பதை வலியுறுத்தினோம். இதனையடுத்து ரஞ்சனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது.

நாட்டில் காணப்படும் சுகாதாரம் தொடர்பான நிலைமையில் அனைவரும் ஊரடங்குச் சட்டத்தை பின்பற்ற வேண்டும். எனினும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்ட ரீதியானது அல்ல.

சட்டரீதியான ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த முடியும் என்ற போதிலும் அரசாங்கம் ஊடக அறிக்கை மூலம் அதனை செய்து வருகிறது.” என கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/141592

  • Replies 61
  • Views 4.4k
  • Created
  • Last Reply
5 minutes ago, போல் said:

நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன், இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை என வாதிட்டதை அடுத்து, நீதவான், ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தரணி சுமந்திரன் தொடர்ந்தும் சிங்கள மக்களுக்காக குரல் கொடுத்து, தமிழ் மக்களை விட்டு முழுமையாக  செல்வது சிறப்பு. 

இன்றைய பொன்னம்பலம் இராமநாதன் !

ssssssuuu.jpg

இந்த ஸ்பீட்ல இறங்கின சுமந்திரன் இதுக்கு ஏதாவது காசு வாங்கி இருப்பாரோ?

இல்லை சிங்கள மந்திரித்துமா என சும்மா போயிருப்பாரோ?

தமிழருக்கு பிடிக்காத ஒரு விடயம் சுமந்திரன் இப்படியாக தனது மூளையை பாவித்து  வென்று வருவது। ஸ்ரீதரன் எம்பீ நடத்தும் ஜேவிபி நியூஸ் இணையத்தளத்தில் இவருக்கு எதிரான , பொய்யான செய்திகளை நிறைய காணலாம்। அதட்காக மற்றைய இனைய தளம் எல்லாம் உண்மையான செய்திகளை வெளியிடுகிறது என்பதல்ல। 

தமிழினப் படுகொலைகாரர்களை மட்டுமே வெல்லவைக்கும் சுமந்திரனின் நரித் திறமை மேல சிலருக்கு கொள்ளை பிரியமாம். அப்ப அவையள் எப்பிடியானவை என்டு புரிந்துகொள்ளலாம்.

நான்  மேலே எழுதின கருத்து எவ்வளவு உண்மை என்று வாசிப்பவர்களுக்கு விளங்கும்। மிருசுவில் படுகொலை வழக்கிலும் இப்போது இவர் தோன்ற இருக்கிறார்। அதட்கு என்ன எழுதப்போகிறார்கள் என்று பார்ப்போம்।

நான் அண்மையில் சுமந்திரன் அவர்களுடன் கதைக்கும்போது இணையதளங்களில் அவருக்கு எதிராக எழுத்துவத்தைப்பற்றி கதைத்தேன்। அது தனக்கு தெரியும் என்று கூறினார்। அவர் ஒரு கிறிஸ்தவர் ஆனபடியால் சில காரியங்கள்பற்றி பேச வேண்டி இருந்தது। அவை எல்லாம் இங்கு எழுத முடியாது।

இன்னும் அவர் தான் ஒரு தமிழன் என்ற ரீதியில்தான் என்னுடன் பேசினார்। எல்லாவற்றிலும் நான் அவருடன் ஒத்துப்போக விடடாலும் தொடர்ந்து பேச இருக்கிறேன்। எனவே பின்வரும் காலங்களில் நிச்சயமாக அதன் முடிவுகளை பதிவிடுவேன்।

On 20/4/2020 at 18:11, Kali said:

இந்த ஸ்பீட்ல இறங்கின சுமந்திரன் இதுக்கு ஏதாவது காசு வாங்கி இருப்பாரோ?

இல்லை சிங்கள மந்திரித்துமா என சும்மா போயிருப்பாரோ?

சுமந்திரன் ஒரு திறமையான வழக்கறிஞர். தனது உழைப்புக்கு ஊதியம் வாங்கி இருப்பார். அது இயல்பானது. ஆனால் ஒரு அரசியல் வாதியாக அவரின் நடவடிக்கைகள் சிலவற்றில்  என்னால் ஒத்து போக முடியவில்லை. தமிழ் மக்கள் சார்பாக சிறப்பாக செயற்படும் திறமை அவருக்கு இருந்தும் அதை அவர் சரியாக செய்யவில்லை.  தனது சொந்த அஜெண்டாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாதாரண தமிழ் அரசியல்வாதிக்குணம் அவருக்கும் தொற்றிக்க கொண்டதாகவே எனக்கு படுகிறது.  எனது அனுமானம் மட்டுமே.

Edited by tulpen

15 hours ago, tulpen said:

Tulpen , நீங்கள் எழுதியது உண்மை। அரசியல்வாதியாக அவரது நடவடிக்கைகள் எனக்கும் முரண்பாடு உண்டு। இவர் அரசியல்வாதியாக வருமுன்னரே அவரை அறிவேன்। நிறைய காரியங்களை விவாதிப்போம்। நிச்சயமாக இங்கு வாழும் தமிழ் மக்கள் நிராகரித்தால் அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவார்।

மற்றைய அரசியல் வாதிகளிபோல உழைப்புக்காக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை। நானும் அவரை அரசியலில் இருந்து வெளியேறும்படி வலியுறுத்துவது உண்டு। அநேகமாக நல்ல முடிவு விரைவில் வரும்। எமது இணையதள போராளிகளுக்கும் நல்ல செய்தியாக இருக்கும்।

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

மற்றைய அரசியல் வாதிகளிபோல உழைப்புக்காக அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை। நானும் அவரை அரசியலில் இருந்து வெளியேறும்படி வலியுறுத்துவது உண்டு। அநேகமாக நல்ல முடிவு விரைவில் வரும்। எமது இணையதள போராளிகளுக்கும் நல்ல செய்தியாக இருக்கும்।

இப்படி எங்களுக்கு ஆசை காட்டிவிட்டு அம்பிகா சற்குணநாதனையும் கொண்டு வந்து பாராளுமன்ற  கதிரையில்  ஏத்தப்படாது சொல்லிட்டம் ...

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை என்னவென்றால்.. இந்த தமிழ் பேசும் சட்டாம்பிகள்.. இப்ப தங்கட சிங்கள எஜமானர்களுக்காக சமூகத்துக்கு தேவையான ஊரடங்குச் சட்டத்தை எதிர்த்துக் கத்துகிறார்கள்.

இதே ஊரடங்குச் சட்டங்கள்.. மாதக் கணக்காக.. அவசரகாலச் சட்டத்தின் கீழ் தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்ட போது.. சம்பந்தன் வகையறாக்கள் எதிர்த்துப் பேசியதே கிடையாது. அப்படி பேசிய ஒருவர் என்றால்.. அது ஜோசப் பரராஜசிங்கம் மட்டுமே. 

26 minutes ago, nedukkalapoovan said:

வேடிக்கை என்னவென்றால்.. இந்த தமிழ் பேசும் சட்டாம்பிகள்.. இப்ப தங்கட சிங்கள எஜமானர்களுக்காக சமூகத்துக்கு தேவையான ஊரடங்குச் சட்டத்தை எதிர்த்துக் கத்துகிறார்கள்.

சரியா சொன்னீங்க!
சிங்கள எஜமானர் கால்களில தவமிருக்கிறது தானே இவங்களோட பிரதான வேலை.

16 hours ago, அக்னியஷ்த்ரா said:

இப்படி எங்களுக்கு ஆசை காட்டிவிட்டு அம்பிகா சற்குணநாதனையும் கொண்டு வந்து பாராளுமன்ற  கதிரையில்  ஏத்தப்படாது சொல்லிட்டம் ...

இது ஒரு தவறன வேலை என்று நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன்। அப்படி நடக்க சந்தர்ப்பம் வராது।

இருந்தாலும் சிலருக்கு சில மன சஞ்சலத்தினால் என்ன எழுதுவதே என்று தெரியாமல் எழுதிக்கிறார்கள்। சந்திரனை பார்த்து நாய் குறைப்பதால் சந்திரனுக்கு ஒன்றுமே நடக்கப்போவதில்லை।

கொள்ளைக் கோஷ்டிக்கு போதை தலைக்கேறினா தங்களையும் சந்திரனா நினைக்கிறது ஒன்டும் புதுசில்லை.

தொப்பி அளவாக இருக்கிறவர்கள் போட்டுக்கொண்டே போக வேண்டியதுதான்। முதலில் நான் எழுதின கருது அவ்வளவு உண்மை என்பது வாசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு விளங்கும்।

  • கருத்துக்கள உறவுகள்
On 23/4/2020 at 13:53, அக்னியஷ்த்ரா said:

இப்படி எங்களுக்கு ஆசை காட்டிவிட்டு அம்பிகா சற்குணநாதனையும் கொண்டு வந்து பாராளுமன்ற  கதிரையில்  ஏத்தப்படாது சொல்லிட்டம் ...

அப்ப மட்டக்களப்பில வந்த அந்த அக்காவையும் தூக்கிட்டாங்கள் அம்பிகா வந்தாலும் ஆண்டாள் வந்தாலும் ஆப்பு நமக்குத்தானே பாய் 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 09:41, தனிக்காட்டு ராஜா said:

அப்ப மட்டக்களப்பில வந்த அந்த அக்காவையும் தூக்கிட்டாங்கள் அம்பிகா வந்தாலும் ஆண்டாள் வந்தாலும் ஆப்பு நமக்குத்தானே பாய் 

ஆனாலும் திரும்பத்திரும்ப அவிங்க தானே நமக்கு தேவைப்படுகிறது  பாய் ...
எப்போதாவது கிணற்றை விட்டு வெளியே எட்டி பார்த்திருக்கிறோமா ...?
அவனுக்கே குத்துவது பிறகு கிடந்து கத்துவது... 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஆனாலும் திரும்பத்திரும்ப அவிங்க தானே நமக்கு தேவைப்படுகிறது  பாய் ...
எப்போதாவது கிணற்றை விட்டு வெளியே எட்டி பார்த்திருக்கிறோமா ...?
அவனுக்கே குத்துவது பிறகு கிடந்து கத்துவது... 

நான் குத்தி வருசமாகிறது அதற்க்காக பேக் ஐடி வேற திறந்து களமாடம் தொடர்கிறது இவங்களை ஓட்டுறம் அப்படி கிழக்கில் ஓரளவு குறைச்சாச்சு இன்னும் கொஞ்ச செம்புகள் இருக்கு அதற்கும் கொஞ்ச வேலைகள் செய்யணும் 

On 27/4/2020 at 14:18, தனிக்காட்டு ராஜா said:

நான் குத்தி வருசமாகிறது அதற்க்காக பேக் ஐடி வேற திறந்து களமாடம் தொடர்கிறது இவங்களை ஓட்டுறம் அப்படி கிழக்கில் ஓரளவு குறைச்சாச்சு இன்னும் கொஞ்ச செம்புகள் இருக்கு அதற்கும் கொஞ்ச வேலைகள் செய்யணும் 

நீங்கள் மாற்றத்தை கொண்டு வரலாம்। மாற்றமென்று சொல்லி சோனவனை கொண்டுவரமாடதீர்கள் என்று உறுதிப்படுத்தமுடியுமா? இன்று எத்தனை தமிழ் கடசிகள் அம்பாறையில் கேட்க்கிறார்கள் । இங்கு கத்தியை மட்டுமல்ல புத்தியையும் தீடட வேண்டும்। கிழக்கை பற்றி எழுதவேண்டாமென்று சிலர் கூறினாலும் என்னால் எழுதாமல் இருக்கமுடியவில்லை। 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Vankalayan said:

நீங்கள் எழுதலாம் கருத்தாடல் தானே தமிழர்களை விட (தமிழ் அரசியல் வாதிகளை விட) சிங்கள அரசியல் வாதிகளும் , முஸ்லீம் அரசியல் வாதிகள் அவரவர் மக்கள் சார்ந்து செயற்படுகிறார்கள் கிழக்கில்  தமிழ் அரசியல் வாதிகள் அப்படி இல்லை 

நான் ஒரு கடிதம் வாங்க  அலைந்தேன் ரான்ஸ்பர் வாங்க  அலைந்தேன்  விடை இதுதான் விடை ஐயாவ பார்க்க இயலாது 

சிங்கள அமைச்சரிடம் செல்ல கடிதமும் கிடைத்தது  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் எழுதலாம் கருத்தாடல் தானே தமிழர்களை விட (தமிழ் அரசியல் வாதிகளை விட) சிங்கள அரசியல் வாதிகளும் , முஸ்லீம் அரசியல் வாதிகள் அவரவர் மக்கள் சார்ந்து செயற்படுகிறார்கள் கிழக்கில்  தமிழ் அரசியல் வாதிகள் அப்படி இல்லை 

நான் ஒரு கடிதம் வாங்க  அலைந்தேன் ரான்ஸ்பர் வாங்க  அலைந்தேன்  விடை இதுதான் விடை ஐயாவ பார்க்க இயலாது 

சிங்கள அமைச்சரிடம் செல்ல கடிதமும் கிடைத்தது  

அதுதான் தமிழன், பந்தா கட்டுவது அலையவிடுவது, இதே சிங்களவர் முஸ்லிம்கள் என்றால் வாலை சுருட்டி எட்டா வளைந்திருப்பார்கள் நம்மவர். சிங்களவர் பலர் நேர்மையாக உதவி செய்வார்கள்; அவர்களுடன் இலகுவாக வேலை செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

அதுதான் தமிழன், பந்தா கட்டுவது அலையவிடுவது, இதே சிங்களவர் முஸ்லிம்கள் என்றால் வாலை சுருட்டி எட்டா வளைந்திருப்பார்கள் நம்மவர். சிங்களவர் பலர் நேர்மையாக உதவி செய்வார்கள்; அவர்களுடன் இலகுவாக வேலை செய்யலாம்

மொழிதான் பிரச்சினை உடையார் மொழி தெரிந்திருந்தால் பல விடயங்களை சாதிக்கலாம் ஆனால் பிரச்சினை முடிந்தால் அரசியல் செய்ய முடியாது 

பியசேன என்ற அயோக்கியனிடம் சென்ற போது இனத்தையே அசிங்கமாக பேசினவன் அவன் எம்பியாக இருக்கும் போது

18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் எழுதலாம் கருத்தாடல் தானே தமிழர்களை விட (தமிழ் அரசியல் வாதிகளை விட) சிங்கள அரசியல் வாதிகளும் , முஸ்லீம் அரசியல் வாதிகள் அவரவர் மக்கள் சார்ந்து செயற்படுகிறார்கள் கிழக்கில்  தமிழ் அரசியல் வாதிகள் அப்படி இல்லை 

நான் ஒரு கடிதம் வாங்க  அலைந்தேன் ரான்ஸ்பர் வாங்க  அலைந்தேன்  விடை இதுதான் விடை ஐயாவ பார்க்க இயலாது 

சிங்கள அமைச்சரிடம் செல்ல கடிதமும் கிடைத்தது  

நான் தமிழ் அரசியல் வாதிகளை நன்றாக சேவை செய்பவர்கள் என்றோ மக்களின் அன்றாட பிரச்சினைகளில் முன்னின்று செயட்படுபவர்கள் என்றோ சொல்லவில்லை। திரும்பவும் அதே அரசியல்வாதிகளைத்தானே தெரிவு செய்யப்போகின்றோம்। எனவே மக்களுக்கும் இப்படியான தவறுகளுக்பிழையான mகு பங்கிருக்கின்றது। நாங்கள் மாற்று வழியை  நாடப்போகிறோமென்று போய் பிழையான முடிவுகளை எடுக்கக்கூடாது। விசேடமாக கிழக்கில் பிழையான தீர்மானங்களை எடுக்கும்போது மாற்று இனத்தவருக்கு சந்தர்ப்பத்தை ஏட்படுத்தி கொடுத்ததாக அமையும்। அம்பாறையில் இம்முறை தமிழ் பிரதி நிதித்துவதை காப்பாற்ற முடியுமா? சிலவேளைகளில் பியசேனாவை தெரிவு செய்தால் தமிழ் பிரதிநிதியைவிட அதிக சேவையாற்றலுடன் , அரசுடன் முஸ்லிம்களுக்கு எதிராகவும் போராடலாம்। இருந்தாலும் நீங்கள் இதுபற்றி அரசியல்வாதிகளுடன் பேசி முடிவெடுப்பது நல்லது। 

23 hours ago, உடையார் said:

அதுதான் தமிழன், பந்தா கட்டுவது அலையவிடுவது, இதே சிங்களவர் முஸ்லிம்கள் என்றால் வாலை சுருட்டி எட்டா வளைந்திருப்பார்கள் நம்மவர். சிங்களவர் பலர் நேர்மையாக உதவி செய்வார்கள்; அவர்களுடன் இலகுவாக வேலை செய்யலாம்

இதற்கு காரணம் சிங்களவரும் முஸ்லீமும் தமது பிரதி நிதிகளை மாற்ற தயங்கமாட்டார்கள். எங்கட அரசியல்வாதிகளுக்கு தமிழ் தேசியம் காணும் எல்லாத்துக்கும். கூட்டமைப்பு விக்கியை கண்டு அஞ்ச அது தான் காரணம் இவர்களது தமிழ் தேசிய தனி உரிமைக்கு போட்டி வந்து விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.