Jump to content

நிவேதாவின் சமையல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஊரில் இருக்கும் போது குரக்கன் புட்டு ஒடியல் புட்டு அனேகமாக இருக்கும்.சோற்றுடன் சிறிது சேர்த்து சாப்பிடுவோம்.ஒடியல் புட்டை நீத்துபெட்டியில் அவித்து உடையாமல் வைப்போம்.சாப்பிடும் நேரம் திருகுவலையில் தேங்காய் திருவினமாதிரி திருவ தேங்காய்ப் பூ மாதிரி வரும் சோற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம்.
குரக்கன் புட்டுக்கு பாராட்டுக்கள்.

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 23/6/2020 at 08:32, உடையார் said:

இரண்டு வீடியோகளுகளும் பார்த்துவிட்டேன், இப்ப கன பேர் பார்க்கின்றார்கள் உங்கள் பதிவை👍

நன்றி உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரதி said:

நொன் ஸ்டிக் பாத்திரங்கள் பாவிக்க கூடாது என்று சொல்லினம் ...உண்மையா ?
 
ஏனாம் ??? எனக்குத் தெரியவில்லை. கண்டசாவைத்தான் கூப்பிடவேணும்.

16 hours ago, Kadancha said:

non-stick எவ்வளவு நுண்ணிய உற்பத்தி  முறை ஆயினும் (விலை கூடும் உற்பத்தி  முறை நுண்ணிய தன்மை கூடும் போது), ஏலவே சொன்னது போல துவாரங்கள், இடைவெளிகள், மற்றும் தவலிப்புகள் இருக்கும்.    

பாவனையின் போது இவை பெரிதாகும், metal-safe என்று metal utensils பாவித்தால் இன்னும் அது துரிதமாகும்.  

சமைக்கும் உணவு ஒட்டுதல் தன்மை அதிகரிக்கும். அதை உரசி அகற்றும் போது மிகவும் non-stick ஐ மிக மிக நுண்ணிய அளவில் பாதிக்கும் அல்லது உரசி  அகற்றப்படும். 

இது பௌதிக இராசாயனத்தோடு  தொடர்பு பட்ட விடயம்.

மற்றது, நீங்கள் இந்த pans ஐ பாவிக்காமல் வைத்து இருந்ததாக சொன்னீர்கள்.

2015 இற்கு முதல் என்றால், இவற்றில் PFOA and PTFE இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. இவை நோய்களை, குறிப்பாக புற்று நோய்களை தூண்டுவதாக ஓர் consensus வளர்ந்துள்ளது.  இதை பற்றி தேடிப்பாருங்கள்.

https://www.cancer.org/cancer/cancer-causes/teflon-and-perfluorooctanoic-acid-pfoa.html

இப்பொது ceramic, stone, marble coating பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஓர் காரணம்.   

ரெஸ்ட்ராரென்ட் தலைமை chef சொன்னது, ரெஸ்ட்ராரென்ட் இல் இருக்கும் நடைமுறை, ஏனெனில் ரெஸ்ட்ராரென்ட் இல் பாவிப்பது carbon steel, cast iron அல்லது ஸ்டெயின்லெஸ் steel. 

எதுவும் உங்கள் விருப்பம்.
 
Image may contain: food

இந்தச் சட்டியின் வயது 31. இதுவரை எப்பிரச்சனையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இடியப்பம் - String hoppers

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ரதி said:

நொன் ஸ்டிக் பாத்திரங்கள் பாவிக்க கூடாது என்று சொல்லினம் ...உண்மையா ?

non-stick என்பதை உற்பத்தி செய்வதற்கு  பாவிக்கப்படும் PFOA, PFTE புற்று நோயை தூண்டுவதாக ஓர் கருத்தொருங்குப்பாடு மருத்துவ விஞ்ஞான சமூகத்தில் உருவாகி உள்ளது.

இதை நீங்களாக தேடிப்பார்ப்பதற்கு ஆரம்ப உசாத்துணையாக:

https://www.cancer.org/cancer/cancer-causes/teflon-and-perfluorooctanoic-acid-pfoa.html

இப்பொது    PFOA, PFTE அற்ற non-stick pans  என்று நீங்கள் வாங்கலா.

இப்பொது ceramic, stone, marble coating உள்ள non-stick பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஓர் காரணம்.

மற்றது, எந்த pans ஆயினும் Western Europe இல் வாங்குங்கள். ஏனெனில் ஆசிய manufacturing மற்றும் material standard இற்கும், European, north american   manufacturing மற்றும் material standard இற்கும் இடையில் வித்தியாசம் உண்டு. உ.ம். ஆசியா standard இல் cadmium அனுமதிக்கப்படுகிறது, ஆனால்  European, north american இல் பொதுவாக இல்லை.

ஏலவே சொன்னது போல துவாரங்கள், இடைவெளிகள், மற்றும் தவாளிப்புகள் இருக்கும், எந்த non-stick எவ்வளவு நுண்ணிய உற்பத்தி  முறை ஆயினும் (விலை கூடும் உற்பத்தி  முறை நுண்ணிய தன்மை கூடும் போது).

பாவனையின் போது இவை பெரிதாகும், metal-safe என்று metal utensils பாவித்தால் இன்னும் அது துரிதமாகும்.  

சமைக்கும் உணவு ஒட்டுதல் தன்மை அதிகரிக்கும். அதை உரசி அகற்றும் போது மிகவும் non-stick ஐ மிக மிக நுண்ணிய அளவில் பாதிக்கும் அல்லது உரசி  அகற்றப்படும். 

அதனால், metal-safe non-stick என்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தாலும், metal utensils ஐ non-stick இல் பாவிப்பது தவிர்க்கப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில், மரத்தாலான அகப்பைகளே non-stick இற்கு மிகவும் பொருத்தமானது, உடல் நலத்திற்கும் தீங்கு இல்லாதது. 
     
எந்த non-stick ஆயினும் அல்லது வேறு விதமான pans ஆயினும், வெறுமையாக சூடாக்குதல் தவிர்க்கப்பட வேண்டும் . இது non-stick ஐ பாதிக்கும்.

இது பௌதிக இராசாயனத்தோடு  தொடர்பு பட்ட விடயம்.   

இப்படியான பல காரணகளுக்கும், எந்த விதமான pans ஆயினும், நீண்ட காலா பாவனைக்கும், முக்கியாமாக உணவு நேரடியாக pans இன் மேற்ப்பரப்பை நேரடியாயன தொடுகை இல்லாமலும் மற்றும் ஒட்டுதலை கூடிய அளவு தவிர்ப்பதற்கும், இரும்பு ஆயின் துரு பிடித்தலை குறைபதற்கும், தாமதம் செய்வதற்கும்,   செய்வது தான் seasoning. இது சாதாரணமாக  எவராலும் செய்யக் கூடியது.

ஆனால், இரும்பால் (carbon steel, cast iron)  ஆன pans, seasoning செய்யப்பட்டு இருந்தாலும், சமைத்த பின், கழுவி துடைத்து, மிக சிறிதளவில் எண்ணெய் பூசி வைப்பதே மிகச் சிறந்த பராமரிப்பு முறையாகும்.  

pan seasoning, non-stick pans உட்பட, எப்படி செய்வது என்பதை youtube இல் பாருங்கள்., விளங்கப்படுத்துவது எழுத்தை கூட்டும்.

சுருக்கமாக எண்ணையை pans உள்ளே மேற்பரப்பில் துணியால்  பூசி, ஓரளவு எண்ணெய் புகைக்கும் (smoke point) வரைக்கும் சூடாக்கி, இயல்பாக ஆறவிடுவது.   இது எண்ணையில் இருக்கும் கொழுப்புகளின் மிகவும் மெலிய, கண்ணுக்கு தெரியாத, மிகவும் உறுதியான, எண்ணெய்யின் கொதிநிலை  வரைக்கும் தாக்கு பிடிக்க கூடிய   படலத்தை உருவாக்கும், இடைவெளி, தாவலிப்புகள் நிரவும்.    எதனை தரம்  மீளவும் செய்ய முடியுமோ  அவ்வளவு நல்லது, பொதுவாக 4-10 முறை. seasoning செய்வதை பொறுமையாக செய்யுங்கள், அவசரப்படாமல்.

unrefined avacado oil ஐ பாவியுங்கள் seasoning செய்வதற்கு. ஏனெனில் அதன் smoke point  (கொதி நிலை) 270 செல்சியஸ்.      

seasoning ஐ எமது முன்னோரும் (பாட்டன், பாட்டியும், அதற்கு முதலும்),  எனது பெற்றோரும், மண் சட்டிக்கு கூட செய்து வந்தனர். புதிய மண் சட்டி வாங்கி முதல் பாவனையின் முன்பு தண்ணீர் நிரப்பி கொதிக்கவைத்து, ஆற விட்டு, பின் தேங்காய் எண்ணெய் பூசி புகைக்கும் வரைக்கும் சூடாக்கி, ஆற விடுவார்கள். இது ஒரு வகையான seasoning ஆகும். உலோக சட்டி என்றால், தேங்காய் என்னை பூசி புகைக்கும் வரைக்கும் சூடாக்கி, ஆற விடுவார்கள்.     மற்றும், மண் சட்டியில் சமைக்கும் போது பொதுவாக கூட்டிய பின்பே அடுப்பில் ஏற்றுவார்கள், எண்ணெய் கொதிப்பதற்கு உட்பட.  வெறுமையாக எந்த விதமான சட்டியும், குறிப்பாக மண் சட்டி அடுப்பில் காய்வது வீட்டுக்கு கூடாது என்ற நம்பிக்கையும் இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, Kadancha said:

மிகவும் பயனுள்ள தகவல்கள்👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தச் சட்டியின் வயது 31. இதுவரை எப்பிரச்சனையும் இல்லை.

விஞ்ஞான அடிப்படியிலான காரணங்களை சொல்லி விட்டேன்.

நீங்கள் அதன் ஓட்டுதல்  தன்மையில் சொல்லலாம். ஏனெனில், 2-3 கோட்டிங் non-stick உண்டு.

ஆனால், நுண்ணிய அளவு non-stick அகற்றப்படவில்லை என்று சொல்ல முடியுமா? 

உண்மையான ஒட்டுதல் தன்மை அறிய, எண்ணெயோ அல்லது வெறு எந்த சமைக்கும் liquid இல்லாமல், ஓரிரு முட்டைகளை பொரித்து (bulls eye) எடுத்து பாருங்கள். வாங்கிய போது இருந்த  ஓட்டுதல் இல்லாத தன்மை இப்போதும் இருக்கிறதா என்று பாருங்கள்.    
 
பார்வைக்கு non-stick coating விளிம்பில் உராயப்பட்ட தன்மை தெரிகிறது. 

இப்போது தான் PFOA, PFTE பற்றிய புரிதல் வந்துள்ளது, 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்டாலும்.

seasoning என்பதின் நோக்கம், pans இன் மேற்பரப்பில் நேரடியாக உணவு தொடுகை இல்லாமல் சமைப்பதற்கும் உட்பட. எனவே ஏலவே பயன்பாட்டில் இருக்கும் pans இற்கும் பொருந்தும், கைவிட விருப்பம் இல்லை என்றால்.
  
இவை facts. 

pans இப்போதும் உங்களினதோ அல்லது எவரினதோ பாவனைக்கு உகந்ததாக உள்ளதா என்ற போட்டி அல்ல. அதில் எனக்கு அக்கைறையும் இல்லை.   

எதுவும் உங்களின் விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆகா என்ன ஒரு முன்னேற்றம் குரலில், இப்பதான் எனோதானோ என்றில்லாமல் நன்றக ஒலி/ஒளிப்பதிவுகள் செய்து உள்ளீர்கள், வாழ்த்துக்கள். 

கொஞ்சம் நல்லெண்ணை விட்டு குழைத்தால் கன நேரத்திற்கு காயமல் அப்படியே இறக்கிய மாதிரி மென்மையாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொதி - Sothi

Image may contain: food

3 minutes ago, உடையார் said:

ஆகா என்ன ஒரு முன்னேற்றம் குரலில், இப்பதான் எனோதானோ என்றில்லாமல் நன்றக ஒலி/ஒளிப்பதிவுகள் செய்து உள்ளீர்கள், வாழ்த்துக்கள். 

கொஞ்சம் நல்லெண்ணை விட்டு குழைத்தால் கன நேரத்திற்கு காயமல் அப்படியே இறக்கிய மாதிரி மென்மையாக இருக்கும்

மிக்க நன்றி உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இடியப்பம் - String hoppers

Image may contain: food

நேற்று இரவு எமது வீட்டிலும் இடியாப்பம், சொதி, சம்பல் ,வாழைப்பழம்.
நன்றாக இருக்கிறது சுமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

நேற்று இரவு எமது வீட்டிலும் இடியாப்பம், சொதி, சம்பல் ,வாழைப்பழம்.
நன்றாக இருக்கிறது சுமே.

வருகைக்கு நன்றி அண்ணா. பிட்டுடன் வாழைப்பழம் தெரியும். இடியப்பத்துடன் சாப்பிடுவதை இப்பதான் கேள்விப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Kadancha said:

non-stick என்பதை உற்பத்தி செய்வதற்கு  பாவிக்கப்படும் PFOA, PFTE புற்று நோயை தூண்டுவதாக ஓர் கருத்தொருங்குப்பாடு மருத்துவ விஞ்ஞான சமூகத்தில் உருவாகி உள்ளது.

இதை நீங்களாக தேடிப்பார்ப்பதற்கு ஆரம்ப உசாத்துணையாக:

https://www.cancer.org/cancer/cancer-causes/teflon-and-perfluorooctanoic-acid-pfoa.html

இப்பொது    PFOA, PFTE அற்ற non-stick pans  என்று நீங்கள் வாங்கலா.

இப்பொது ceramic, stone, marble coating உள்ள non-stick பிரபல்யம் அடைவதற்கு இதுவும் ஓர் காரணம்.

மற்றது, எந்த pans ஆயினும் Western Europe இல் வாங்குங்கள். ஏனெனில் ஆசிய manufacturing மற்றும் material standard இற்கும், European, north american   manufacturing மற்றும் material standard இற்கும் இடையில் வித்தியாசம் உண்டு. உ.ம். ஆசியா standard இல் cadmium அனுமதிக்கப்படுகிறது, ஆனால்  European, north american இல் பொதுவாக இல்லை.

ஏலவே சொன்னது போல துவாரங்கள், இடைவெளிகள், மற்றும் தவாளிப்புகள் இருக்கும், எந்த non-stick எவ்வளவு நுண்ணிய உற்பத்தி  முறை ஆயினும் (விலை கூடும் உற்பத்தி  முறை நுண்ணிய தன்மை கூடும் போது).

பாவனையின் போது இவை பெரிதாகும், metal-safe என்று metal utensils பாவித்தால் இன்னும் அது துரிதமாகும்.  

சமைக்கும் உணவு ஒட்டுதல் தன்மை அதிகரிக்கும். அதை உரசி அகற்றும் போது மிகவும் non-stick ஐ மிக மிக நுண்ணிய அளவில் பாதிக்கும் அல்லது உரசி  அகற்றப்படும். 

அதனால், metal-safe non-stick என்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்தாலும், metal utensils ஐ non-stick இல் பாவிப்பது தவிர்க்கப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில், மரத்தாலான அகப்பைகளே non-stick இற்கு மிகவும் பொருத்தமானது, உடல் நலத்திற்கும் தீங்கு இல்லாதது. 
     
எந்த non-stick ஆயினும் அல்லது வேறு விதமான pans ஆயினும், வெறுமையாக சூடாக்குதல் தவிர்க்கப்பட வேண்டும் . இது non-stick ஐ பாதிக்கும்.

இது பௌதிக இராசாயனத்தோடு  தொடர்பு பட்ட விடயம்.   

இப்படியான பல காரணகளுக்கும், எந்த விதமான pans ஆயினும், நீண்ட காலா பாவனைக்கும், முக்கியாமாக உணவு நேரடியாக pans இன் மேற்ப்பரப்பை நேரடியாயன தொடுகை இல்லாமலும் மற்றும் ஒட்டுதலை கூடிய அளவு தவிர்ப்பதற்கும், இரும்பு ஆயின் துரு பிடித்தலை குறைபதற்கும், தாமதம் செய்வதற்கும்,   செய்வது தான் seasoning. இது சாதாரணமாக  எவராலும் செய்யக் கூடியது.

ஆனால், இரும்பால் (carbon steel, cast iron)  ஆன pans, seasoning செய்யப்பட்டு இருந்தாலும், சமைத்த பின், கழுவி துடைத்து, மிக சிறிதளவில் எண்ணெய் பூசி வைப்பதே மிகச் சிறந்த பராமரிப்பு முறையாகும்.  

pan seasoning, non-stick pans உட்பட, எப்படி செய்வது என்பதை youtube இல் பாருங்கள்., விளங்கப்படுத்துவது எழுத்தை கூட்டும்.

சுருக்கமாக எண்ணையை pans உள்ளே மேற்பரப்பில் துணியால்  பூசி, ஓரளவு எண்ணெய் புகைக்கும் (smoke point) வரைக்கும் சூடாக்கி, இயல்பாக ஆறவிடுவது.   இது எண்ணையில் இருக்கும் கொழுப்புகளின் மிகவும் மெலிய, கண்ணுக்கு தெரியாத, மிகவும் உறுதியான, எண்ணெய்யின் கொதிநிலை  வரைக்கும் தாக்கு பிடிக்க கூடிய   படலத்தை உருவாக்கும், இடைவெளி, தாவலிப்புகள் நிரவும்.    எதனை தரம்  மீளவும் செய்ய முடியுமோ  அவ்வளவு நல்லது, பொதுவாக 4-10 முறை. seasoning செய்வதை பொறுமையாக செய்யுங்கள், அவசரப்படாமல்.

unrefined avacado oil ஐ பாவியுங்கள் seasoning செய்வதற்கு. ஏனெனில் அதன் smoke point  (கொதி நிலை) 270 செல்சியஸ்.      

seasoning ஐ எமது முன்னோரும் (பாட்டன், பாட்டியும், அதற்கு முதலும்),  எனது பெற்றோரும், மண் சட்டிக்கு கூட செய்து வந்தனர். புதிய மண் சட்டி வாங்கி முதல் பாவனையின் முன்பு தண்ணீர் நிரப்பி கொதிக்கவைத்து, ஆற விட்டு, பின் தேங்காய் எண்ணெய் பூசி புகைக்கும் வரைக்கும் சூடாக்கி, ஆற விடுவார்கள். இது ஒரு வகையான seasoning ஆகும். உலோக சட்டி என்றால், தேங்காய் என்னை பூசி புகைக்கும் வரைக்கும் சூடாக்கி, ஆற விடுவார்கள்.     மற்றும், மண் சட்டியில் சமைக்கும் போது பொதுவாக கூட்டிய பின்பே அடுப்பில் ஏற்றுவார்கள், எண்ணெய் கொதிப்பதற்கு உட்பட.  வெறுமையாக எந்த விதமான சட்டியும், குறிப்பாக மண் சட்டி அடுப்பில் காய்வது வீட்டுக்கு கூடாது என்ற நம்பிக்கையும் இருந்தது. 

கண்டசா இப்போதுதான் இணையவழித் தேடலின் பின்னர்எனக்கு நீங்கள் கூறிய விடயம் பிடிபட்டது. நல்லதொரு விடயத்தைத்தான் கூறியுள்ளீர்கள். என்னிடம் டைட்டானியம் சமையல் பாத்திரங்கள் மரக்கறிச் சமையலுக்காக இருக்கின்றன. பொரிப்பதற்கான ஒரு சட்டிதான் வாங்கவேண்டும். எங்களூர் இரும்புச் சட்டிகள் பயன்பாட்டுக்கு உகந்ததா??? என்னிடம் அவை நிறைய உண்டு.

58 Best shoping images | Make it yourself, National gift, Coimbatore

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சொதி - Sothi

Image may contain: food

உதென்ன பத்தியகாரருக்கு குடுக்கிற சொதி மாதிரி கிடக்கு. இரண்டு நெத்தலி போட்டு விட்டால் சொதி கம கமக்குமெல்லொ 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ண்டசா இப்போதுதான் இணையவழித் தேடலின் பின்னர்எனக்கு நீங்கள் கூறிய விடயம் பிடிபட்டது. நல்லதொரு விடயத்தைத்தான் கூறியுள்ளீர்கள். என்னிடம் டைட்டானியம் சமையல் பாத்திரங்கள் மரக்கறிச் சமையலுக்காக இருக்கின்றன. பொரிப்பதற்கான ஒரு சட்டிதான் வாங்கவேண்டும். எங்களூர் இரும்புச் சட்டிகள் பயன்பாட்டுக்கு உகந்ததா??? என்னிடம் அவை நிறைய உண்டு.

உண்மையில் இரும்பு பாத்திரங்கள் பொதுவாக உடல் நலத்திற்கு பிரச்னை இல்லாதவை. ஆனால் அதிகளவு ஓட்டுதல் தன்மையினாலும் மற்றும்  பராமரிப்பாலேயே இவை அதிகம் விரும்பப்படுவதில்லை. seasoning ஆள் ஓட்டுதல் தன்மையை மிகவும் குறைக்கலாம். 

இரும்பு சத்து அளவுக்கதிகமாக உடம்பில் சேகரிக்கப்படும் உடல் நல  பிரச்னை உள்ளவர்களுக்கே இரும்பு பாத்திரத்தில் சமைப்பது தவிர்க்கப்பட வேண்டும்.   

பார்வைக்கு, உங்களுடைய பாத்திரத்தில் ஏதோ ஓர் எண்ணெய்யை கொதி நிலை வரைக்கும் பல தரம் சூடாக்கி  பாவித்ததால் ஆக்காங்கே தொட்டம்  தொட்டமாக ஏற்கனவே (நீங்கள் பாவித்த எண்ணையினால் உருவாகும்) seasoning இருப்பதாக தோற்றம் இருக்கிறது.  இவை அநேகமாக கரடு முரடாக இருக்கும்.

உங்களிடமுள்ள பாத்திரத்தை இனி unrefined avacado oil ஆல்  season செய்யுங்கள். அப்படி செய்யும் போது பாத்திரம் வெள்ளி தன்மை உள்ளதால் மேற்பரப்பில் கறுப்பாக  உண்டாகும் படை வெளிப்படையாக தெரியாத தொடங்கும்.
 
பாத்திர அளவுக்குக்கு பார்வைக்கு ஆக குறைந்தது 7-8 தரம் எண்ணெய் பூசி, அடுப்பேற்றி புகைக்க விட்டு, இயல்பாக ஆற விட வேண்டும்.

முன்பு சொன்னது போலவே unrefined avacado oil ஐ பாவியுங்கள், 270 செல்சியஸ் கொதிநிலையால் (புகைக்கும் நிலை). 

நான் அறிந்த  வரையில் மற்ற  எண்ணெய்கள் 250 செல்சியஸ் ஐ தாண்டாது புகைப்பதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Kadancha said:

இது இணையத்தில் வந்த பாத்திரம். என் பாத்திரம் புதிதாகவே பயன்படுத்தாமல் நான்கு ஆண்டுகளாக இருக்கு 😂

15 hours ago, குமாரசாமி said:

உதென்ன பத்தியகாரருக்கு குடுக்கிற சொதி மாதிரி கிடக்கு. இரண்டு நெத்தலி போட்டு விட்டால் சொதி கம கமக்குமெல்லொ 😁

உங்கட ஊர்ல பத்தியக்காரருக்கு சொதியும் குடுக்கிறவையே. எங்கள் ஊரிலில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பன்னீர் கறி - Paneer Curry

Image may contain: food

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பன்னீர் கறி - Paneer Curry

Image may contain: food

எனக்கென்னவோ, உந்த பண்ணீர் (கடும்பு) பிடிப்பதில்லை. 

உது வடவர் கறி தானே. நம்மூரில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Nathamuni said:

எனக்கென்னவோ, உந்த பண்ணீர் (கடும்பு) பிடிப்பதில்லை. 

உது வடவர் கறி தானே. நம்மூரில் இல்லை.

ஒரு சதத்துக்கும் உதவாத கறி.வாயிலையும் வைக்கேலாது. உதோடை சாப்பிடுற நேரம் இரண்டு பச்சை மிளகாயும்  எங்கடை சின்ன வெங்காயத்தோடையும் நாலு கவளம் சோறு திண்டுட்டு போகலாம்.பத்தியப்பட்ட மாதிரியும் இருக்கும். :grin:
இனிப்பாருங்கோ அக்காவின்ரை அடுத்தகறி அன்னாசிப்பழ கறியாய்த்தானிருக்கும்.😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பன்னீர்  பிடிக்காத ஆக்களெல்லாம் ஒருக்கா இதை செய்து பாருங்கோ

திருநெல்வேலி சொதி/ மாப்பிள்ளை சொதி

மேலச்சேவல் கிராமம் திருநெல்வேலி சைவப்பிள்ளை ,பண்ணையார் குடும்பத்தை சேர்ந்த ராமலிங்கம் பிள்ளை, பொன்னம்மாள் அவர்களின் செய்முறை. சைவப்பிள்ளை பரம்பரை ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து போனதாக வரலாறு. மாப்பிள்ளை முதன் முதலாக உறவினர் வீட்டுக்கு போகும்போது செய்வார்களாம். அத்துடன் மாப்பிள்ளை சம்பா என்று ஒரு சோறும் காச்சுவார்களாம். அத்துடன் இஞ்சி  தொகையிலும் கூட. இது தேங்காய் பாலில்  உள்ள கொழுப்பை உடைக்க உதவுமாம். திருநெல்வேலி சொதி அல்லது மாப்பிள்ளை சொதி : சகோதரர்கள் எல்லோரும் செய்து பார்த்து நல்லா இருக்கென்று சொல்லிச்சினம். நான் இன்னும் செய்யவில்லை. படத்தில் இருப்பது அக்கா செய்த குரக்கன் இடியப்பமும்  திருநெல்வேலி சொதியும் .

செய்முறை : பயறு கொஞ்சம் அவித்து வைக்கவும். மிக சிறிய அளவு நீட்டா வெட்டின கரட் , உருளைக்கிழங்கு, போஞ்சி (மைக்ரோ வேவில் ஸ்டீம் பண்ணி வைக்கவும்) முதலாம் ரெண்டாம் தேங்காய் பால் வைத்திருக்கவும்.

முதலில் சூடாகின தேங்காய் எண்ணெயில் சீவிய இஞ்சியை வதக்கவும்.பிறகு நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு இரண்டையும் ஓரளவுக்கு பொரியிற மாதிரி வதக்கவும் இறக்கி அருவாள் நேருவளாக அரைக்கவும். அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கருவேப்பிலையை போடு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பச்சை மிளகாயை சேர்க்கவும். ஸ்டீம் பண்ணிய மரக்கறியையும் ரெண்டாம் பாலையும் விட்டு மூடி அவிக்கவும் . இப்ப அவித்த பாசிப்பயறு சேர்த்து உப்பையும் சேர்க்கவும். கடைசியில் முதல் பாலை விடவும்.  ஆற விட்டு  தேசிக்காய் புளி விடவும்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பன்னீர் கறி - Paneer Curry

நானும் இரண்டு முறை வாங்கி செய்தேன் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை, இந்த முறையில் செய்து பார்ப்போம் அடுத்த முறை வாங்கும் போது. 

5 hours ago, nilmini said:

பன்னீர்  பிடிக்காத ஆக்களெல்லாம் ஒருக்கா இதை செய்து பாருங்கோ

திருநெல்வேலி சொதி/ மாப்பிள்ளை சொதி

மனைவிக்கு சொதி or சம்பல் தான் இடியப்பதிற்கு. மாப்பிளை சொதியை மனைவிக்கு காட்டனும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, உடையார் said:

நானும் இரண்டு முறை வாங்கி செய்தேன் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை, இந்த முறையில் செய்து பார்ப்போம் அடுத்த முறை வாங்கும் போது. 

மனைவிக்கு சொதி or சம்பல் தான் இடியப்பதிற்கு. மாப்பிளை சொதியை மனைவிக்கு காட்டனும். 

காட்டினியள் எண்டால், மாப்பிளை போல சாப்பிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, nilmini said:

பன்னீர்  பிடிக்காத ஆக்களெல்லாம் ஒருக்கா இதை செய்து பாருங்கோ

திருநெல்வேலி சொதி/ மாப்பிள்ளை சொதி

மேலச்சேவல் கிராமம் திருநெல்வேலி சைவப்பிள்ளை ,பண்ணையார் குடும்பத்தை சேர்ந்த ராமலிங்கம் பிள்ளை, பொன்னம்மாள் அவர்களின் செய்முறை. சைவப்பிள்ளை பரம்பரை ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து போனதாக வரலாறு. மாப்பிள்ளை முதன் முதலாக உறவினர் வீட்டுக்கு போகும்போது செய்வார்களாம். அத்துடன் மாப்பிள்ளை சம்பா என்று ஒரு சோறும் காச்சுவார்களாம். அத்துடன் இஞ்சி  தொகையிலும் கூட. இது தேங்காய் பாலில்  உள்ள கொழுப்பை உடைக்க உதவுமாம். திருநெல்வேலி சொதி அல்லது மாப்பிள்ளை சொதி : சகோதரர்கள் எல்லோரும் செய்து பார்த்து நல்லா இருக்கென்று சொல்லிச்சினம். நான் இன்னும் செய்யவில்லை. படத்தில் இருப்பது அக்கா செய்த குரக்கன் இடியப்பமும்  திருநெல்வேலி சொதியும் .

செய்முறை : பயறு கொஞ்சம் அவித்து வைக்கவும். மிக சிறிய அளவு நீட்டா வெட்டின கரட் , உருளைக்கிழங்கு, போஞ்சி (மைக்ரோ வேவில் ஸ்டீம் பண்ணி வைக்கவும்) முதலாம் ரெண்டாம் தேங்காய் பால் வைத்திருக்கவும்.

முதலில் சூடாகின தேங்காய் எண்ணெயில் சீவிய இஞ்சியை வதக்கவும்.பிறகு நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு இரண்டையும் ஓரளவுக்கு பொரியிற மாதிரி வதக்கவும் இறக்கி அருவாள் நேருவளாக அரைக்கவும். அதே எண்ணெயில் சின்ன வெங்காயம், கருவேப்பிலையை போடு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்த இஞ்சி பச்சை மிளகாயை சேர்க்கவும். ஸ்டீம் பண்ணிய மரக்கறியையும் ரெண்டாம் பாலையும் விட்டு மூடி அவிக்கவும் . இப்ப அவித்த பாசிப்பயறு சேர்த்து உப்பையும் சேர்க்கவும். கடைசியில் முதல் பாலை விடவும்.  ஆற விட்டு  தேசிக்காய் புளி விடவும்

spacer.png

நானும் கட்டாயம் செய்து பார்க்கவேணும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Nathamuni said:

காட்டினியள் எண்டால், மாப்பிளை போல சாப்பிடலாம்.

காலம் மலையேறிவிட்டது, நினைதாலும் முடியாது 😂

Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் கட்டாயம் செய்து பார்க்கவேணும்

இராசவள்ளிக்கிழங்கு களி -  சமைத்தவுடன் காணவில்லை🤔🤔

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, உடையார் said:

நானும் இரண்டு முறை வாங்கி செய்தேன் பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை, இந்த முறையில் செய்து பார்ப்போம் அடுத்த முறை வாங்கும் போது. 

 அப்ப நீங்கள் சுவையாகச் செய்யவில்லை போல 🤣

10 minutes ago, உடையார் said:

காலம் மலையேறிவிட்டது, நினைதாலும் முடியாது 😂

இராசவள்ளிக்கிழங்கு களி -  சமைத்தவுடன் காணவில்லை🤔🤔

 வருது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராசவள்ளிக் களி - Itasavallik Kali

Image may contain: food

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.