Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

samaiyal.jpg

நேற்று காலையில் பாலைவனத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்யும்போது மனதில் ஒரே தவிப்பு..!

'நாளை ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்போகுதே.. ஒரு பயலும் கடையை திறக்க மாட்டானுக..சாப்பாட்டுக்கு என்ன செய்வது..?'  emboubli2.gif

இங்கே ரமலான் நோன்பு மாதத்தின்போது தினமும் உணவகங்கள் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சில கடைகள் திறந்தாலும் திறக்கும், ஆனால் மறுபடியும் எட்டு மணிக்கு கொரானா ஊரடங்கால் மூடிவிட வேண்டும்..!

காலை பத்து மணியிலிருந்து தமிழகத்திலிருக்கும் என் மனைவியிடமிருந்து எனக்கு அடிக்கடி தொலைபேசியில் பல அறிவுறுத்தல்கள், சமையல் குறிப்புகள், கெஞ்சல்கள்..!

"சரி.. சரி..சரியம்மா.. வேலை முடிந்தவுடன் போய் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிடுறேன்.. வேலையில் இருக்கிறேன், நீ போனை வையம்மா.." என அலுப்புடன் துண்டித்தேன்..

ஒப்பந்தகாரர்களின் நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் அன்பர்கள், "என்ன சார், வீட்டம்மாவிடம் நல்ல 'டோஸ்'ஸா.. சமையல் ரொம்ப ஈஸிதான் சார்.. சிரமமாக இருந்தால் எங்க வீட்டுக்கு வாங்க.." என அன்புடன் அழைத்தனர்.

"இல்லையப்பா.. நானே முயற்சிக்கிறேன்.. அழைப்பிற்கு நன்றி.." என கூறிவிட்டு வேலையில் மூழ்கிவிட்டேன்..

மாலை வீட்டுக்கு வந்ததும் 'சரி, சமையலறையில் என்னதான் பொருட்கள் இருக்கின்றன..?' என உருட்டி தேடினேன்.. பாத்திரங்கள், அலமாரி தட்டுகளில் பழைய மளிகை பொருட்கள்.. எல்லாம் தூசி படிந்து காய்ந்திருந்தன..லுங்கியை மடித்துக்கட்டி தேவையான பாத்திரங்களை சோப் தண்ணிரில் ஊறவைத்து கழுவினேன்..

வீட்டம்மா 'வாட்ஸ்அப்'பில் அனுப்பிய குறிப்புகளின்படி தேவையான மளிகை பொருட்களை வாங்கிவந்தேன்..வாங்கி வந்த மளிகை பொருட்களை அடுக்கிவிட்டு ஓய்ந்து, யாழ்ப் பக்கம் வந்தேன்..

யாழ்க்களத்தில் 'சுமே மேரியம்மா'வின் படங்கள் பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைத்தேன்..! internet02.gif

இரவில் வீட்டில் பேசும்பொழுது 'காலையில் இட்லிக்கு எப்படி தயார் செய்வது..?' என பெரிய விளக்க உரையை மனைவியிடம் முழித்தவாறே கேட்டு புரிந்த மாதிரி தலையாட்டினேன்..மனதிற்குள் தோன்றியது, 'இந்த இமய மலையில்கூட ஏறி சிகரம் தொட்டுவிடலாம், புரிபடாத இந்த சமையலை எப்படி கற்றுத் தேறுவது..?' மலைப்புடன் யூடுயூபில் "இதயத்தில் நீ.." படம் பார்க்க ஆரம்பித்தேன்.. அப்படியே தூங்கியும் விட்டேன்..!

காலையில் மனவியிடமிருந்து அழைப்பு..

"என்ன, இன்னமுமா தூங்கிறீங்க.. எழுந்து சமையல் வேலையை நான் சொன்ன மாதிரி செஞ்சி எனக்கு போட்டோ அனுப்புங்கள்..!" என அன்புக் கட்டளை. தட்டிக்கழிக்க முடியுமா..?

"அட இரும்மா..நீ சொன்னமாதிரி நான் சமையல் செய்யுறேன், நீ பேரனை கவனி.." எனக் கூறிவிட்டு மடமட குளித்துவிட்டு சமையல் வேலைகளை தொடங்கினேன்..

பல நாட்கள் கேஸ் ஸ்டவ் பயன்படுத்தாததால் அது மக்கர் செய்தது.. சரிசெய்துவிட்டு 'ஒழுங்காக வேலை செய்கிறதா..?' என உறுதிபடுத்தினேன்..

ஃப்ரிட்ஜிலிருந்து இட்லி மாவு பாக்கெட்டை உடைத்து, இட்லி அடுக்கில் ஊற்றி குக்கரில் வைத்து அடுப்பை இயக்கினேன்.. அது பாட்டுக்கு வேக ஆரம்பித்தது..

அடுத்து 'தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி எப்படி தயார் செய்வது..?'

இது எனக்கு மிகப் பெரிய சவால்..!

இவ்விசயத்தில் மனைவி சொல்லே மந்திரம்..!

அவர்கள் சொன்ன அறிவுறைகளின்படி ஒருவழியாக கண்ணீருடன்(?) சட்டினியை தயாரித்து, இட்லியை வேகவைத்து சமையலை முடித்தேன்..!

IMG-20200424-073449.jpg   IMG-20200424-075541.jpg   Idli.jpg 

சூடாக இருந்த இட்லி குக்கரின் மூடியை திறந்து, இட்லியை இறக்க முயன்றபோது கையில் சூடுபட்டு சிவந்துவிட்டது.. ஒருவழியாக துணிகளை சுற்றி பிடித்துக்கொண்டு மூடியை திறந்தபோது, பலநாள் பசியாய் இருந்து சாப்பாட்டைக் கண்டது மாதிரி ஒரே மகிழ்ச்சி..

உங்கள் மொழியில் "சொல்லி வேலையில்லை..!"   mange7.gif

'ஆகா நாமளும் இட்லி அவித்துவிட்டோம்.. சாப்பாட்டுக்கு அலையாமல் இந்த ரமலான், கொரானா கடை அடைப்புகளை சமாளித்து வெல்ல முடியும்' என்ற நம்பிக்கை வந்தது..!

'ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள்' என்பது எவ்வளவு யதார்த்தம் என்பதை இந்த சிறிய விடயத்தில் உணர முடிந்தது..!

என் மனைவிக்கு நன்றி..!!  vil-donnecoeur.gif

"இது குழந்தை பாடும் தாலாட்டு.." என  என் சமையல் கலை(??????)யை பொறுமையாக வாசித்த உங்களுக்கும் நன்றி..!!!  5.gif

.

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றியை ரம்லானுக்கும், கொரானாவுக்கும் சேர்த்துச் சொல்லவேண்டும் வன்னியரே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Will Smith Thanksgiving GIF - Find & Share on GIPHY EntertainMent: LifeStyle Street;21 Struggles Only People Who Are ...

வன்னியன் உலகின் அத்தனை கண்டுபிடிப்புகளுக்கும் அத்திவாரமே பசிதான். ஒரு சின்னஞ்சிறு கொரோனா உங்களுக்கு சமையலைக் கற்றுத்தந்து விட்டது.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பல்லி , பாம்பு ,வவ்வால் என்று உங்களின் நளபாகத்தை விஸ்தரிக்க வாழ்த்துக்கள்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜவன்னியன், சமைக்கத் தொடங்கி விட்டதால்... 
டுபாயில்.... சரவணபவன்,  அஞ்சப்பர்,  முனியாண்டி  விலாஸ்  எல்லாத்துக்கும் 
இனி,  வருமானம் குறையப்  போகுது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Paanch said:

நன்றியை ரம்லானுக்கும், கொரானாவுக்கும் சேர்த்துச் சொல்லவேண்டும் வன்னியரே!

அதென்னவோ உண்மைதான் திரு.பாஞ்.

27 minutes ago, suvy said:

வன்னியன் உலகின் அத்தனை கண்டுபிடிப்புகளுக்கும் அத்திவாரமே பசிதான். ஒரு சின்னஞ்சிறு கொரோனா உங்களுக்கு சமையலைக் கற்றுத்தந்து விட்டது.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பல்லி , பாம்பு ,வவ்வால் என்று உங்களின் நளபாகத்தை விஸ்தரிக்க வாழ்த்துக்கள்......!   👍

unnamed.png

வாழ்த்துக்களுக்கு நன்றி..திரு.சுவி.

இன்று மதியம் தான் சோறு சமைக்கணும், நம்பிக்கை நிறைய இருக்கு..! :)

கொரானா, பூமியில் வந்தாலும் வந்தது.. அனைவரின் வாழ்க்கையிலும் சடுதியில் பல மாற்றங்கள்,அழுத்தங்கள்..!

உயிர்வாழ வேறு வழியில்லை..! :innocent:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொஞ்சம் நில்லுங்க வன்னியன்.......சோறு சமைக்கிறம் என்று மனிசிமார் சொல்வதெல்லாம் புருஷனை ஏமாத்துற பக்கா பிளான்.......!   அது ஒன்றும் பெரிய வேலையில்லை. ரைஸ் குக்கரில் அரிசியை கழுவி பின் போட்டு அதில் அரிசி மூழ்கும் அளவுக்கு தண்ணி ( பச்சத் தண்ணி) விடுங்கள்.....எவ்வளவு என்றால் அரிசியில் இருந்து  உங்களின் ஆள்காட்டி விரல்  அளவு போதும்......அடுத்த அரைமணி நேரத்தில் யாரும் சமைக்காமலேயே அது சோறாகிவிடும்.......!    😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, suvy said:

நன்றி சுவி..!

'ரைஸ் குக்கரில்' வேக வைப்பதைவிட, பாத்திரத்தில் தண்ணீரில் வேக வைத்து வடித்து சாப்பிடுவது நல்லதாமே..? :innocent:

எப்படி அரிசியை சமைப்பது என குழப்பம்..! இலகுவான வழி, 'ரைஸ் குக்கர்' மூலம் செய்வது என நினைக்கிறேன்.

இன்னொரு சந்தேகம், சோற்றுக்கு உப்பை, தண்ணீரில் அரிசியுடன் கலந்து ஊற்றி வேக வைத்துவிடலாம்தானே? தோராயமாக உப்பு போட்டு சமைக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோற்றுக்கு உப்பு போடவேண்டும் என்று அவசியமில்லை.தேவையென்றால் 1/2  தேக்கரண்டி உப்பும் , ஒரு மேசைக்கரண்டி எண்னை  அல்லது நெய்  அல்லது பட்டர் போடலாம். சோறு ஒட்டாமல் வரும்.ஆரம்பத்திலேயே போடலாம்.....!

பாத்திரத்தில் சோறு ஆக்குவதென்றால் முன்பு சொல்லிய அளவில் வைத்தீர்கள் என்றால் அரைமணித்தியாலத்தில் கஞ்சி வடிக்கத் தேவையில்லை......, கஞ்சி வேண்டும் என்றால் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்க வேண்டும் .அவ்வளவுதான்.....!  

பாசுமதி அரிசி என்றால் சீக்கிரம் வெந்து விடும் கவனம் தேவை......!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தஞ்சாவூர் பொன்னி (புழுங்கல்) அரிசியை 1 1/2 கப் போட்டு, நன்கு கழுவி, ரைஸ் குக்கரில் நீங்கள் சொன்ன மாதிரி தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் உப்பை சேர்த்து குக்கரில் வேக வைத்துள்ளேன்..சுவி..!

ஆனால் பாருங்கோ, இந்த 'பனாசோனிக்(National Panasonic) குக்கர்' என்னை மாதிரியே பழசு..! ஸ்விட்ச் ஆன் செய்தவுடன் சிவப்பு பல்ப் எரியுது, ஆனால் 'டப் டப்' என எகிறுவதுபோல சத்தம் வருது..ஒருவேளை சூடு ஏற ஏற அப்படி சத்தம் வரும் போல தெரியுது.

சோறாகி வருமா, அரிசியாகவே இருக்குமா என இன்னும் சில நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும்..ஆனாலும் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருக்கும் மாணவன் போல சமையல் ஒரே த்ரில் தான்..! 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ராசவன்னியன் said:

அரிசியை நன்கு கழுவி, ரைஸ் குக்கரில் 1 1/2 கப் பொட்டு, நீங்கள் சொன்ன மாதிரி தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் உப்பை சேர்த்து குக்கரில் வேக வைத்துள்ளேன்..சுவி..!

ஆனால் பாருங்கோ, இந்த 'பனாசோனிக்(National Panasonic) குக்கர்' என்னை மாதிரியே பழசு..! ஸ்விட்ச் ஆன் செய்தவுடன் சிவப்பு பல்ப் எரியுது, ஆனால் 'டப் டப்' என எகிறுவதுபோல சத்தம் வருது..ஒருவேளை சூடு ஏற ஏற அப்படி சத்தம் வரும் போல தெரியுது.

சோறாகி வருமா, அரிசியாகவே இருக்குமா என இன்னும் சில நிமிடங்களில் முடிவு தெரிந்துவிடும்..ஆனாலும் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருக்கும் மாணவன் போல சமையல் ஒரே த்ரில் தான்..! 😎

அநேகமான குக்கர்களில் சுவிட்ச் போட்டதும் அதில்  இருக்கும் ஒரு சின்ன லிவரை கீழே அமத்தி விட வேண்டும். அப்போதுதான் சோறாகும் இல்லையென்றால் சேறாகும். கவனித்துப் பாருங்கள். அதுக்கும் ஒரு லைட் எரியும்.சோறாகியவுடன் அது தானாகவே ஆஃபாயிடும்.....! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, suvy said:

எலெக்ட்ரானிக்ஸ் எந்திரங்களை நாடி பிடித்து பரிசோதிக்கும் அனுபவ கைகளை, இந்த குக்கர் எந்திரம் சோதிக்குது..!

ஆ.. சூடேறி ஆவி வருது..! நிச்சயம் சோறாகி விடும்.. பசியும் ஆற்றிவிடும்..!!

rural-indian-man-cooking-food-at-vintage-kitchen-picture-id1158390349?s=2048x2048

ஏறக்குறைய என்னுடைய நிலைமையும், இப்போது மேலேயுள்ள படத்திலுள்ளது போலத்தான்..! 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

35 Very Funny Asian Pictures And Photos

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Lunch.jpg

ஒரு வழியாக மதிய சாப்பாடு, கற்றறிவில் தட்டுத்தடுமாறி சொந்த சமையலில் இனிதே நிறைவுற்று மனமும், வயிறும் நிறைந்தன..! 0burger.gif

வழிகாட்டலுக்கு நன்றி சுவி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்களெல்லாம் நாசாவுக்கே வழி காட்டுற ஆட்கள். இதெல்லாம் ஜுஜுபி வன்னியன்.....சாதம் செமையாய் வெந்து வந்திருக்குது போல.....இனிமேல் இந்த முறையில்தான் நானும் சமைக்க வேண்டும்.....!

டிஸ்கி:  --- அரிசி போடும்போது ஒரு பிஞ் (சிட்டிகை) மஞ்சள் போட்டால் பிரியாணி சோறுபோல் மஞ்சள் நிறத்தில் வரும்.

--- வாசம் வேண்டுமென்றால் ஒரு துண்டு கறுவாபட்டை  அல்லது ரெண்டு கராம்பு அல்லது ரெண்டு ஏலக்காய் போடுங்கள்..சூப்பராய் இருக்கும்......! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏனுங்க மதுரகாரரே! உங்க ரெடிமேட் சாப்பாடு ஏதும் இல்லீங்களா? 😁

Read this and you'll never eat a ready meal again | Daily Mail Online

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

வன்னியர் சுவியர் உங்களை எலி ரேஞ்சில் வைத்து சோதிக்கிறார் போல் உள்ளது.எதுக்கும் கவனம்.

Posted

ஆகா ராஜவன்னியன் அண்ணாவும் சமைக்க பழகிட்டார் ! 👏👌

உங்களிடம் என்னென்ன மரக்கறி வகைகள் மற்றும் சமையல் பொருட்கள் இருக்கு என்று கூறினால் ஆளாளுக்கு இலகுவாக செய்யக்கூடிய செய்முறைகள் எடுத்துவிடுவார்கள்.

சோறே சமைத்து விட்டீர்கள் இனி பிரச்சனையில்லை இலகுவாக எல்லாம் பழகிடலாம்   :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னட்ட திண்ணையில் வாங்கின பேச்சு😉 நீங்கள்  சமைக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டு இருக்குது...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

..சாதம் செமையாய் வெந்து வந்திருக்குது போல.....இனிமேல் இந்த முறையில்தான் நானும் சமைக்க வேண்டும்.....!

சாதம் கொஞ்சம் குழைஞ்சிடிச்சி..! அடுத்த முறை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.

2 hours ago, குமாரசாமி said:

ஏனுங்க மதுரகாரரே! உங்க ரெடிமேட் சாப்பாடு ஏதும் இல்லீங்களா? 😁

Read this and you'll never eat a ready meal again | Daily Mail Online

இப்படியெல்லாம் "ரெடிமேட் சாப்பாடுகள்" இருக்கா என்ன..கு.சா..?

இங்கே கேரிஃபோரில் தான் வார இறுதியில் நானும் என் மனைவியும் சென்று வாங்குவதுண்டு..நான் இம்மாதிரி பார்த்ததில்லையே..? 😮

2 hours ago, சுவைப்பிரியன் said:

வன்னியர் சுவியர் உங்களை எலி ரேஞ்சில் வைத்து சோதிக்கிறார் போல் உள்ளது.எதுக்கும் கவனம்.

வலு கவனமாகத்தான் இருக்குறேன். வயசு ஏற ஏற உணவில் மிகுந்த கவனம் தேவைதானே? இருந்தாலும் சுவி அப்படி செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையுண்டு.

2 hours ago, தமிழினி said:

ஆகா ராஜவன்னியன் அண்ணாவும் சமைக்க பழகிட்டார் ! 👏👌

உங்களிடம் என்னென்ன மரக்கறி வகைகள் மற்றும் சமையல் பொருட்கள் இருக்கு என்று கூறினால் ஆளாளுக்கு இலகுவாக செய்யக்கூடிய செய்முறைகள் எடுத்துவிடுவார்கள்.

சோறே சமைத்து விட்டீர்கள் இனி பிரச்சனையில்லை இலகுவாக எல்லாம் பழகிடலாம்   :)

ஊக்கத்திற்கு நன்றி.

நேற்றுதானே குறைந்த அளவு மளிகை பொருட்கள் வாங்கி வந்தேன்.

அதில் 30 பச்சை மிளகாய்கள், மூனு இஞ்சு துண்டுகள், பத்து வெள்ளைப் பூண்டுகள் மற்றும் கொஞ்சம் கறிவேப்பிலை இலைகள்.. இவைகள் தான் என்னிடம் இப்பொழுது உள்ள மரக்கறிகள்..! 🤩

இனிமேல்தான் சமையல் பழக வேணும்..

வீட்டம்மா இங்கே இருக்கும்போது கடைகளுக்கு இருவரும் சேர்ந்து போவதுண்டு, ஆனால் இந்த மளிகை, காய்கறிகள் வாங்குவதில் எதிலும் தலையிடுவதில்லை..ட்ராலியை உடன் தள்ளிக்கொண்டு சென்று கவுண்டரில் பணம் செலுத்துவதோடு சரி.

சிவனேன்னு ஓட்டலில் பிடிச்ச உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இந்தக் கொரானா வந்து எல்லாத்தையும் குழப்பிவிட்டது. :)

சமாளிப்போம்..!

1 minute ago, ரதி said:

என்னட்ட திண்ணையில் வாங்கின பேச்சு😉 நீங்கள்  சமைக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டு இருக்குது...

அப்படியா..? நீங்கள் நல்லதுக்குதானே சொல்லியிருக்கிறீர்கள்..! :100_pray:

இல்லையென்றால் சமையலறை பக்கமே சென்றிருக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, ராசவன்னியன் said:

இரவில் வீட்டில் பேசும்பொழுது 'காலையில் இட்லிக்கு எப்படி தயார் செய்வது..?' என பெரிய விளக்க உரையை மனைவியிடம் முழித்தவாறே கேட்டு புரிந்த மாதிரி தலையாட்டினேன்..

இப்போதைக்கு சமையல் தெரிந்து கொள்வது போல் இருக்கும். வேலையில் ஓய்வு கிடைத்து ஊருக்குப் போனால், ஐயாதான் மூன்று நேரமும் சமைக்க வேண்டி வரும். ஏதோ என்னால் முடிந்த அறிவுரை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Kavi arunasalam said:

இப்போதைக்கு சமையல் தெரிந்து கொள்வது போல் இருக்கும். வேலையில் ஓய்வு கிடைத்து ஊருக்குப் போனால், ஐயாதான் மூன்று நேரமும் சமைக்க வேண்டி வரும். ஏதோ என்னால் முடிந்த அறிவுரை.

ச்சே..சே, அப்படியெல்லம் இருக்காது..!

ஏதோ அவசரத்துக்கு நானே அல்லுபுல்லு சமையல் செய்யுறேன், சகித்துக்கொண்டு பசியை போக்குகிறேன், நீங்க வேறை..! இருந்தாலும் உங்களின் அனுபவக் கருத்துக்களை கவனத்திலெடுக்கிறேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, ராசவன்னியன் said:

ஆனால் பாருங்கோ, இந்த 'பனாசோனிக்(National Panasonic) குக்கர்' என்னை மாதிரியே பழசு..! ஸ்விட்ச் ஆன் செய்தவுடன் சிவப்பு பல்ப் எரியுது, ஆனால் 'டப் டப்' என எகிறுவதுபோல சத்தம் வருது..ஒருவேளை சூடு ஏற ஏற அப்படி சத்தம் வரும் போல தெரியுது.

Rolls-Royce Power Systems helps 100 engineers gain electrical ... ELCB & RCCB – Buy ELCB & RCCB Online in India| Bestofelectricals.com

ஆஹா... Electrical Engineer க்கு இப்படி ஒரு சோதனை வரப் படாது. :grin:
ராஜ வன்னியன்....  "ரைஸ் குக்கரில்" உள்ளே,  அரிசி  வேகும் சட்டியின்.... 
வெளிப் பகுதியில் அல்லது  அடிப்பாகத்தில் உள்ள தண்ணீரை... 
நன்றாக துடைக்காமல்,  "ஸ்விட்ச் ஆன்"
செய்தாலும்...
'டப் டப்' என்று சத்தம் கேட்கும். அத்துடன் அது,  ஆபத்தானது.
வீட்டின் Trip Switch விழவும்  சந்தர்ப்பம் உள்ளது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ராசவன்னியன் said:

30 பச்சை மிளகாய்கள், மூனு இஞ்சு துண்டுகள், பத்து வெள்ளைப் பூண்டுகள் மற்றும் கொஞ்சம் கறிவேப்பிலை இலைகள்.. இவைகள் தான் என்னிடம் இப்பொழுது உள்ள மரக்கறிகள்..! 🤩

Fruchtknall Kartoffeln Marabel vorw. fest 5 kg: Amazon.de ... meine ernte: Zwiebeln anbauen, pflegen, ernten und lagern

ஐயா.... வன்னியரே,
உங்கள் வீட்டில், உள்ள மரக்கறி வகைகளை பார்த்த போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை. :grin:
ஒரு வீட்டில்... உருளைக் கிழங்கும், வெங்கயாமும் கட்டாயம்   இருக்க வேண்டிய பொருட்கள்.
முதலில், அதை போய்... வாங்கி வையுங்கள் ஐயா.... :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ரதி said:

என்னட்ட திண்ணையில் வாங்கின பேச்சு😉 நீங்கள்  சமைக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டு இருக்குது...

ஒவ்வொரு ஆணின் சமையலுக்குப்  பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் .........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

ELCB & RCCB – Buy ELCB & RCCB Online in India| Bestofelectricals.com

ஆஹா... Electrical Engineer க்கு இப்படி ஒரு சோதனை வரப் படாது. :grin:
ராஜ வன்னியன்....  "ரைஸ் குக்கரில்" உள்ளே,  அரிசி  வேகும் சட்டியின்.... 
வெளிப் பகுதியில் அல்லது  அடிப்பாகத்தில் உள்ள தண்ணீரை... 
நன்றாக துடைக்காமல்,  "ஸ்விட்ச் ஆன்"
செய்தாலும்...
'டப் டப்' என்று சத்தம் கேட்கும். அத்துடன் அது,  ஆபத்தானது.
வீட்டின் Trip Switch விழவும்  சந்தர்ப்பம் உள்ளது. :rolleyes:

நான் வசிக்கும் வீட்டில் RCCB பொருத்தியுள்ளார்கள். பாதுகாப்பானதுதான்.

பாத்திரத்தை ஈரமில்லாமல் துடைச்சி வச்சாலும் இந்த ரைஸ் குக்கர் சூடேறும்பொழுது சத்தம் வருது, பழசா போயிடிச்சி.

பருப்பு, காய்கறி வேக வைக்க இன்னொரு  குக்கரும் உண்டு. அதில்தான் இனி சமைக்கோணும்.

4 hours ago, தமிழ் சிறி said:

Fruchtknall Kartoffeln Marabel vorw. fest 5 kg: Amazon.de ... meine ernte: Zwiebeln anbauen, pflegen, ernten und lagern

ஐயா.... வன்னியரே,
உங்கள் வீட்டில், உள்ள மரக்கறி வகைகளை பார்த்த போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை. :grin:
ஒரு வீட்டில்... உருளைக் கிழங்கும், வெங்கயாமும் கட்டாயம்   இருக்க வேண்டிய பொருட்கள்.
முதலில், அதை போய்... வாங்கி வையுங்கள் ஐயா.... :)

சூப்பர் மேன்,

நான் சமையலில் இன்னமும் அரிச்சுவடியில்தான் இருக்கிறேன், அதற்குள் சமையலில் பட்டப்படிப்பு படித்தளவிற்கு நிபுணத்துவம் வந்த மாதிரி வீட்டில் காய்கறி வாங்கி வைக்க முடியுமா..?

பயன்படுத்தாமல் அழுகிப்போய் குப்பையில் கொட்டும் நிலை வரக்கூடாது ஐயா..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.