Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்க ஊழியர்களின் மே மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க வேண்டுகோள் .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்க ஊழியர்களின் மே மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள்.! 

brand.gif

ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஜெயசுந்தேரா அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஒரு தனிப்பட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் சில உள்ளடக்கங்கள் இங்கே..

நாட்டின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையையும் நாடுகளின் கடன் நிர்வாகத்தையும் குறைக்கும் முயற்சியில், மே மாதத்திற்கான சம்பளத்தை அல்லது அதன் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குமாறு அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்த அரசாங்கத்திற்கு குறைந்தது ரூ .100 பில்லியன் தேவைப்படுகிறது,”
வெளிநாடுகளிலிருந்து கடன், நன்கொடைகள் பெற்றுக்கொள்ளும் அதே வேளை எமது சக்தியையும் நாம் பிரதிபலிக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர், அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அரச வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

“சிலர் தங்கள் முழு மாத சம்பளத்தையும் நன்கொடையாக வழங்குவது கடினம். ஆகையால், குறைந்தது பாதி, ஒரு வார சம்பளம் அல்லது ஒரு நாளின் ஊதியத்தை பங்களிக்க முடியும் என்று நான் நம்புகிறேன், ” என்று ஜனாதிபதி செயலாளர் ஒரு நீண்ட 4 பக்க கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

http://puthusudar.lk/2020/05/07/அரசாங்க-ஊழியர்களின்-மே-ம/

தமிழர் ஒருசதமும் கொடுக்கக் கூடாது. 

ஏன்னென்றால் இந்த நிதியால் தமிழர்களுக்கு பயன் கிடைக்கவே கிடைக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி  பெரிசாய் அறிக்கை விடேக்கை நினைச்சேன், சுரண்டல் ஒன்று நடக்கும் என்று, சரியாய்ப்போச்சு. உத்தியோகத்தர் வயிற்றில் முதல் அடி. மாதம் முழுக்க உழைத்து பயன் கைக்கு வரும்போது  கொள்ளை போகும் அவலம்.  இது தொடர்வதோடு, வெளிநாட்டுக்காரர் ஊர்வந்தால், வேறு, வேறு பெயரில் பகற்கொள்ளை. எச்சரிக்கை! தேர்தல் பின்போவதால், வேறு வழியின்றி வெளியிட்டுவிட்டார்கள், நாட்டின் வங்குரோத்து நிலையை. இலங்கையைப்  பொறுத்த வரையில் அடாவடிகளை வெளிக்கொண்டு வருவதற்கு  கொரோனாவை பயன்படுத்தும் இறைவனுக்கு அல்லேலூயா/ நன்றி.  

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கோவிடம் இல்லாத பணமா, கொள்ளையடிக்கின்றார்கள் இன்னும், வடக்குகிழக்கில் யாரும் கொடுக்க கூடாது, கூட்டமைப்பு இதனை பகிரங்கமாக கூறனும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

மகிந்த கோவிடம் இல்லாத பணமா, கொள்ளையடிக்கின்றார்கள் இன்னும், வடக்குகிழக்கில் யாரும் கொடுக்க கூடாது, கூட்டமைப்பு இதனை பகிரங்கமாக கூறனும்

இதை ஏற்கத்தானே மகிந்தவிடம் போனவை....இதிலை கால் பங்கு கேட்கிற பைல் தான் அது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இதை ஏற்கத்தானே மகிந்தவிடம் போனவை....இதிலை கால் பங்கு கேட்கிற பைல் தான் அது..

Image may contain: 1 person, indoor

அட... ஆமா.... இது என்ன "பைல்" என்று யோசித்தேன். இப்ப புரிந்து விட்டது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சை எடுக்க வச்சிடுவானுகள் போல் இருக்கே இப்போதே அரச ஊழியர்கள் என ஒன்றும் இல்லை பிறகு ஏன்டா அரச ஊழியர்களின் சம்பளங்களை வெட்ட போறிங்கள் 

விடுமுறையில் நானும் வேற வேலைக்குத்தான் போகிறேன் 

7 hours ago, உடையார் said:

மகிந்த கோவிடம் இல்லாத பணமா, கொள்ளையடிக்கின்றார்கள் இன்னும், வடக்குகிழக்கில் யாரும் கொடுக்க கூடாது, கூட்டமைப்பு இதனை பகிரங்கமாக கூறனும்

அருமையான கருத்து!

இதுவரை சொறிலங்கா அரச கோஷ்டிக்கு முண்டு குடுத்து தமிழ் மக்களை ஏமாற்றிய சம்பந்தன்-சுமந்திரனின் கூத்தமைப்பு, இப்ப மட்டும் எதையாவது உருப்படியா செய்யும் சாத்தியம் இல்லை.

நடந்த சந்திப்பில நிவாரணங்களில் தமிழர் பகுதி பெருமளவில் புறக்கணிக்கப்பட்ட விஷயத்தையே கதைக்காம விட்ட சம்பந்தன்-சுமந்திரனின் கூத்தமைப்பு இப்ப எதையும் செய்யாது.

மரத்தால் விழுந்தனை மாடு முட்டுவது போல அரச ஊழியர்கள் மீது அழுத்தம் – சுனில் சாடல்!

In இலங்கை     May 8, 2020 5:26 am GMT     0 Comments     1315     by : Benitlas

பி.பி. ஜயசுந்தர என்ற தனிநபரின் கோரிக்கைக்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோபூர்வ கடிதத் தலைப்பை எவ்வாறு பயன்படுத்த முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி செயலாளர் P.B ஜயசுந்தர அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் நிலைமை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், அனைத்து அரச ஊழியர்களுக்கும் அவர்களது நிறுவனத் தலைவர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று(வியாழக்கிழமை) காணொளி ஒன்றின் ஊடாக சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

1. பி.பி. ஜயசுந்தர என்ற தனிநபரின் கோரிக்கைக்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோபூர்வ கடிதத் தலைப்பை எவ்வாறு பயன்படுத்த முடியும்?

2. கடிதம் பிரமரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலளர் என உத்தியோககபூர்வமாக அரச இயந்திரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒரு நபரின் கடிதத்தை ஏன் அரச உயர் நிறுவனங்களின் செயலாளர்களுக்கு அனுப்ப வேண்டும்?

3. கடிதத்தின் பிரதிகள் நீதிபதிக்கும், பிரதான கணக்காளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தனிப்பட்ட ஒருவரின் கடிதத்தை ஏன் நீதிபதிக்கும், கணக்காளருக்கும் அனுப்ப வேண்டும். அதற்கான தேவை தான் என்ன? இதன் அர்த்தம் சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதா? இதன் தர்க்க ரீதியான நியாயம் யாது?

4. இது அரச அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் ஒரு காரியம். மிகத் தெளிவாக இதனை அனைவரும் நிராகரிக்க வேண்டியதொரு ஆவணம்

இதே பீ.பி ஜயசுந்தர சம்பந்தப்படும் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கான சொகுசு வாகனங்களை, சொகுசு இல்லங்களை குறைக்க முடியாது, ஆனால் மரத்தால் விழுந்தனை மாடு முட்டுவது போல அரச ஊழியர்கள் மீது திணிக்கப்படும் அழுத்தத்தை முழு சமூகமும் எதிர்க்க வேண்டும்.

அரச ஊழியர்கள் சுய விருப்பில் தமது தியாகங்களை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் தம்மால் முடிந்த தியாகங்களை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்“ என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மரத்தால்-விழுந்தனை-மாடு/

ஊழியர்களிடம் பிச்சையெடுக்கும் நிலைக்கு தாழ்ந்துள்ள சிங்கள-பௌத்த இராஜபக்ச கொள்ளைக் கும்பலுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்றால் அதைவிட்டு ஒதுங்குவதே பொருத்தமானது.

On 8/5/2020 at 05:13, உடையார் said:

மகிந்த கோவிடம் இல்லாத பணமா, கொள்ளையடிக்கின்றார்கள் இன்னும், வடக்குகிழக்கில் யாரும் கொடுக்க கூடாது, கூட்டமைப்பு இதனை பகிரங்கமாக கூறனும்

பலர் இதைக் கண்டித்தும் கூத்தமைப்பு இன்னும் அமைதியாகவே இருக்கு. அமைச்சு பதவி மோகம் எங்க போய் முடியுமோ தெரியல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியரிடம் வாங்குவதை விட தேவையில்லாமல் வடகிழக்கில் குந்தி இருக்கும் முப்படைகளும் சம்பளம் இல்லாமல் மூன்று மாதம் வேலை  செய்ய சொல்லலாம் .

எது நடக்க வேணுமோ அது நன்றாகவே நடக்கிறது .

நேரடியாய் சொல்ல வேண்டியதுதானே அரசை  நடத்துவதுக்கு  பணம் இல்லையென்று . 

உலகில் ஒவ்வொரு கொள்ளை நோய்  வந்து போன பின் பஞ்சம் வருவது இயல்பு பழைய ஆட்களிடம் கேட்டால் நிறைய கதைகள் சொல்லுவினம் பல நாட்க்கள் முசுட்டை இலை  யை அவித்து அதில் கொன்சூண்டு புல்லரிசி யை போட்டு கஞ்சி காய்ச்சி குடித்து உயிர்  தப்பியுள்ளார்கள்  1918ல் ஸ்பானிஸ் காய்ச்சல் சிலோனையும் தாக்கி இருந்தது .

Edited by பெருமாள்

ஜனாதிபதியின் செயலாளர் செய்தது தவறு

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 54 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டு வருவதாக மத்தியவங்கி மற்றும் நிதி அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் விசேட கொடுப்பனவுகளுக்காக மாதாந்தம் 100 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மத்தியவங்கி மற்றும் நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமைய பார்க்கையில் 54 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டு வருவதாக கணக்கறிக்கை தெரிவிக்கின்றது.

தற்போது மேலதிக கொடுப்பனவும், விசேட கொடுப்பனவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதனால் 34 பில்லியன் ருபாய் அளவிலே செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை தடுத்துவைக்காமல் பொருளாதார செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

பி.பீ.ஜயசுந்தர தனது தனிப்பட்ட கருத்தை ஜனாதிபதி செயலகத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட கடித உறையில் வெளியிட்டிருந்தமை தவறாகும்.

இருந்த போதிலும் அவரது வேண்டுகோளுக்கிணங்க யார் வேண்டும் என்றாலும் அவர்களின் சம்பளத்தை தியாகம் செய்யலாம். ஆனால் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் தொடர்பில் அவருக்கு விளக்கமளிக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/142816?ref=ibctamil-recommendation

ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது - செல்வம்

Selvam-Adaikkalanathan.jpg

ஆசிரியர்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுடைய ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலைமையால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்துத் தரப்பினரும் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், தனியார் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. இந்நிலையில் ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு தற்போது ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோரியுள்ளார்.

அரச அதிகாரிகள் ஆசிரியர்கள் என அனைவரும் வங்கி கடன் சுமைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கடனை மீளச் செலுத்தும் காலம் பிற்போடப்பட்டு இருந்தாலும் அந்தக்கடன் தொகைக்கான வட்டி தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.

அரசாங்கம் வட்டியை நிறுத்துவதாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஆசிரியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோரும் நிலைப்பாட்டை மாற்றி அவர்களின் சம்பளத்தை முழுமையாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/ஆசிரியர்களின்-ஒரு-மாத-சம/

On 10/5/2020 at 13:37, போல் said:

ஆசிரியர்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுடைய ஒரு மாத சம்பளத்தை ஜனாதிபதியின் செயலாளர் கோருவது நியாயமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

சம்பளம் கேட்டது ஆசிரியர்களிடம் மட்டுமில்ல. சகல அரச ஊழியர்களிடமும்.

முழுநேர அரசியல்வாதியா இருக்கிற செல்வம் அடைக்கலநாதனுக்கு இந்த சிம்பிள் விஷயத்தை கூட புரிந்துகொள்ளும் மூளைத் திறன் இல்லாம இருக்கிறது டெலோவின் வங்குரோத்து நிலைய காட்டுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.