Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கூட்டமைப்பு யாருடைய பின்னணியில் உருவாக்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது - சுமந்திரன் செவ்வி

Featured Replies

20 hours ago, Kapithan said:

DBS ஐ இன்னமுமா நம்புகிறீர்கள். 😂

இவருடன் ஒப்பிடும்போது Dayan Jeyathilaka எவ்வளவோ மேலானவர். அவர் கூறுவது உண்மையோ பொய்யோ , ஆனால் அவர் தனது இனத்திற்கு விசுவாசமாக இருக்கிறார். 🙂

ஆனால் இந்த மனிதனை சொந்த மனைவி பிள்ளைகளே நம்பப் போவதில்லை. ☹️

பூகோள அரசியலைக் கொஞ்சம் கவனியுங்களப்பூ. எல்லாம் புரியும் 😀

மாற்றம் ஒன்றே மாறாதது. 😎😎😎😎

நாங்கள் உலக நாடுகள், இந்தியாவை நம்பும்போது DBS ஐ நம்புவதில் பிழை ஒன்றுமில்லை.

பூகோள அரசியலின்படி இங்கு ஈழம் கிடைக்க சந்தர்ப்பமே இல்லை. மேட்கு நாடுகளை விடுங்கள். சீன ஈழத்தை ஆதரித்தாலும் இந்தியா அதட்கு விட்டுக்கொடுக்கப்பபோவதில்லை.

காஸ்மீரை தக்கவைப்பதட்கே படாத பாடு படுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரையும் கைப்பற்ற திடடமிடுபவர்கள் ஈழம் கிடைப்பதட்கு அனுமதிப்பார்களா. சவுத் ப்ளாக் அமைப்புதான் இலங்கை சம்பந்தமான தீர்மானத்தை எடுக்கும் . அங்கு உள்ளவர்கள் எல்லோரும் மலையாளிகளும் , வேற்று மாநிலத்தவரும். எனவே ஈழம் என்பது கனவிலும் கிடைக்காத ஒன்று.

மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் நிச்சயமாக ஈழம் கிடைக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

DBS ஐ சிலாகிப்பது உங்களுடைய விருப்பம். அதற்கு நான் ஒன்றும் கூறமுடியாது😀

ஆனால் பறட்டைக் காட்டுக்கு, கறட்டை ஓணான் ராஜா என்பது DBS க்கு நன்கு பொருந்தும். பேனைப் பெருமாளாக்குதல் என்பதை இவரிடம் அனுபவத்தில் கண்டவன். 😂

தமிழ்ச் சமூகத்தில் திறமைமிக்க ஆய்வாளர்கள் இல்லை என்கின்ற குறைபாட்டை இவர்போன்றவர்களைக் கொண்டு நிரப்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம். ☹️

இவர் எழுதிய கட்டுரைகள் பலவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியவுடன் ஓடி ஒழிந்தவர். இவை என் சொந்த அனுபவம். ☹️

ஈழம் கிடைக்காது என்று உறுதியாகக் கூறுவதற்கு எப்போது குடுகுடுப்பைக்காறனாக மாறினீர்கள் 😂 ஈழம் கிடைப்பது அல்ல வெல்வது. அதனை வெல்வதற்கான தகுதி வரும்போது அது எங்கள் கைகளில் தவழும். 👍

மலையாளிகளையும் செளத் புளக்கும் எமக்கு ஒரு நேர உணவையே தப்போவதில்லை என்கின்றபோது எப்படி தனிநாட்டை அமைக்க அனுமதிப்பார்கள் 🤔

போராடாமல் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா 🤔

சிரிப்பை மூட்டாதீர்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

வாழைப் பழத்தில்.... ஊசி ஏற்றுவது மாதிரி,   நோகாமல் சொல்லி உள்ளீர்கள். :grin:
புரிந்துகொண்டவர்கள்... பிஸ்தா.... 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

போராடாமல் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா 🤔

சிரிப்பை மூட்டாதீர்கள் 😂

சிங்கப்பூர் - சிரிக்காதீர்கள். 

1965 ஆகஸ்ட் மாதம் 9ம் நாள்   லீ குவான் யூ மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இரத்தம் சிந்தாமல், தேர்தல் வாக்குப்பலத்தையும், இராஜதந்திர பேச்சுவார்த்தையையும் பயன்படுத்தி சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார். அப்போது சிங்கப்பூர் இலங்கையிலும் பார்க்க ஏழை நாடாக இருந்தது. சுதந்திர நாளன்று பேசுகையில் லீ குவான் யூ, எமது மக்கள் ஏழைகள், ஆனால் நான் உங்களை கொழும்பிலும் பார்க்க சிறந்த துறைமுகத்து மக்களாக ஆக்குவேன் என்று அழுதவாறு வாக்குறுதி கொடுத்தார் என்று சிங்கப்பூர் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதாக எனது சிங்கப்பூர் நண்பர்கள் தெரிவித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

கருத்தின் சாரத்தைத் தவற விட்டுவிட்டீர்கள்.

சிங்கப்பூர் தன்னை மலேசியாவிலிருந்து பிரிப்பதை விரும்பவில்லை. பிரித்துக் கொடுப்பதற்கு மிக முக்கிய காரணங்களிலொன்று அதன் வறுமை.  🙂

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா சிங்கப்பூரை கழட்டி விட்டதற்கான காரணங்களில் சில:

  • சிங்கப்பூரில் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட பெரும்பான்மை சீன குடிமக்களை மலேசியாவின் முடியரசாளர்கள் விரும்பவில்லை.
  • எவ்வித இயற்கை வளமுமில்லாத சிங்கப்பூர் தீவிற்கு குடி தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும் மலேசியாவே செய்யவேண்டிய நிலை
  • மலேசியாவின் பொருளாதாரத்தையும், வளங்களையும் மட்டுமே நம்பியிருந்த பகுதி சிங்கப்பூர் தீவு.
  • மலேசியாவின் மலேயர்களுக்கு மட்டுமே அனைத்திலும் முன்னுரிமை என்பதை சிங்கப்பூர் பகுதி ஏற்கவில்லை.
  • ஆகவே தமக்கு எல்லாவிதத்திலும் பாரமாக இருக்கும் சிங்கப்பூரை, அது பிரிந்து போக விரும்பாவிட்டாலும் 126-0 என்ற பெரும்பான்மை பாராளுமன்ற வாக்கெடுப்பில் வென்று, சிங்கப்பூரை கழுத்தைப் பிடித்து நாட்டைவிட்டு வெளியே தள்ளியது மலேசியா.

ஆகவே உலகிலேயே விரும்பாமல் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு, சிங்கப்பூர் மட்டுமே..! :innocent:

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
3 minutes ago, ராசவன்னியன் said:

ஆகவே தமக்கு எல்லாவிதத்திலும் பாரமாக இருக்கும் சிங்கப்பூரை, அது பிரிந்து போக விரும்பாவிட்டாலும் 126-0 என்ற பெரும்பான்மை பாராளுமன்ற வாக்கெடுப்பில் வென்று, சிங்கப்பூரை கழுத்தைப் பிடித்து நாட்டைவிட்டு வெளியே தள்ளியது மலேசியா.

இன்று உலகிலேயே மிக முன்னேற்றமான நாடுகளில் சிங்கையூரும் ஒன்று. அதில், தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு இடமும் உனது என்பது பெருமை.

சிங்களத்திற்கு ஈழமும் பொருளாதார ரீதியாக பாரமாக இருக்காதது தான் பிரச்சனை 😁

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ampanai said:

இன்று உலகிலேயே மிக முன்னேற்றமான நாடுகளில் சிங்கையூரும் ஒன்று. அதில், தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறப்பு இடமும் உனது என்பது பெருமை.

சிங்களத்திற்கு ஈழமும் பொருளாதார ரீதியாக பாரமாக இருக்காதது தான் பிரச்சனை 😁

சிங்கப்பூரில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்க முக்கிய காரணங்களில்,

அனைத்து தொழிற்சங்ககளிலும் தமிழர்கள் அங்கத்தினர்களாகவும் சீனத் தலைவர்களுக்கு அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் பங்கெடுத்து உற்ற துணைகளாக தோளோடு தோளாக நின்றவர்கள். அதில் சில ஈழத்தமிழர்களும் உண்டு.

பின்னாளில் தொழிற்சங்கமாக இருந்து அரசியல் கட்சியாக பி.ஏ.பி(People's Action Party) உருவாகியபோது சிங்கப்பூரின் அனைத்து வளர்ச்சியிலும், போராட்டத்திலும் பங்கெடுத்தவர்கள் தமிழர்கள்.

சிங்கப்பூரின் அனைத்து பொருளாதார மேம்பாட்டிற்கும், வணிகத்திற்கும் தமிழர்கள் உறுதுணையாக விளங்கினர்.

சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கினை அங்கீகரிக்கும் விதமாகவே தமிழ் அங்கே ஆட்சி மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Vankalayan said:

சவுத் ப்ளாக் அமைப்புதான் இலங்கை சம்பந்தமான தீர்மானத்தை எடுக்கும் . அங்கு உள்ளவர்கள் எல்லோரும் மலையாளிகளும் , வேற்று மாநிலத்தவரும். எனவே ஈழம் என்பது கனவிலும் கிடைக்காத ஒன்று.

அப்படி சவுத் புளக்கில் இந்திய தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தங்கள் இந்திய நலனையே முதன்மைபடுத்துவார்கள். ஈழம் கிடைக்க அனுமதிக்க மாட்டார்கள்.

7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அப்படி சவுத் புளக்கில் இந்திய தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தங்கள் இந்திய நலனையே முதன்மைபடுத்துவார்கள். ஈழம் கிடைக்க அனுமதிக்க மாட்டார்கள்.

சரியாக சொன்னீர்கள். அடுத்த இனங்களை வெறுப்ப‍து தான் தமிழ் தேசியம் என்று சமீப காலத்தில் ஒரு நோய் ஒன்று பரப்ப‍படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

அடுத்த இனங்களை வெறுப்ப‍து தான் தமிழ் தேசியம் என்று சமீப காலத்தில் ஒரு நோய் ஒன்று பரப்ப‍படுகிறது. 

உண்மை.அடுத்த இனங்களை எந்தளவுக்கு நாம் வெறுக்கின்றோமோ அந்தளவுக்கு தமிழின பற்றுதல் கொண்டவர்களாம் 🥵 மிகவும் வருத்தபட வேண்டிய மனித வெறுப்பு நோய்.

20 hours ago, Kapithan said:

DBS ஐ சிலாகிப்பது உங்களுடைய விருப்பம். அதற்கு நான் ஒன்றும் கூறமுடியாது😀

ஆனால் பறட்டைக் காட்டுக்கு, கறட்டை ஓணான் ராஜா என்பது DBS க்கு நன்கு பொருந்தும். பேனைப் பெருமாளாக்குதல் என்பதை இவரிடம் அனுபவத்தில் கண்டவன். 😂

தமிழ்ச் சமூகத்தில் திறமைமிக்க ஆய்வாளர்கள் இல்லை என்கின்ற குறைபாட்டை இவர்போன்றவர்களைக் கொண்டு நிரப்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறோம். ☹️

இவர் எழுதிய கட்டுரைகள் பலவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கியவுடன் ஓடி ஒழிந்தவர். இவை என் சொந்த அனுபவம். ☹️

ஈழம் கிடைக்காது என்று உறுதியாகக் கூறுவதற்கு எப்போது குடுகுடுப்பைக்காறனாக மாறினீர்கள் 😂 ஈழம் கிடைப்பது அல்ல வெல்வது. அதனை வெல்வதற்கான தகுதி வரும்போது அது எங்கள் கைகளில் தவழும். 👍

மலையாளிகளையும் செளத் புளக்கும் எமக்கு ஒரு நேர உணவையே தப்போவதில்லை என்கின்றபோது எப்படி தனிநாட்டை அமைக்க அனுமதிப்பார்கள் 🤔

போராடாமல் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாட்டை உங்களால் காட்ட முடியுமா 🤔

சிரிப்பை மூட்டாதீர்கள் 😂

எல்லோரும் நீங்கள் நினைக்கிறபடி அல்லது உங்களுக்கு ஏற்றபடி எழுதவேண்டுமென்று நினைக்கிறதை பார்க்கும்போது எனக்கும் சிரிப்பாக வருகின்றது. மற்றவர்கள் எழுதுவது பிழை , நீங்கள் எழுதுவது சரி என நினைப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. அவர்களின் கருத்துக்களின் உண்மைத்தன்மை கேள்விக்குறி என்றால் நீங்கள் உங்கள் கருத்தை வைக்கலாம்.

அவர் மட்டுமல்ல இன்று எத்தனையோபேர் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். அதட்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றது. என்ன செய்வது உயிரை பாதுகாப்பதட்காக ஓடி ஒழிய வேண்டி இருக்கிறது. அதட்காக அவர்கள் கோழைகள் இல்லை. புரிந்தால் சரி.

சிலவேளைகளில் உண்மை கசக்கத்தான் செய்யும். யாருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஈழம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். நான் சொல்லித்தான் இது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மேலயும் நிறையபேர் கருது தெரிவித்திருக்கிரார்கள். போராடித்தான் பார்த்தோமே. இன்றுடன் அது முடிவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகின்றது. 

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

அப்படி சவுத் புளக்கில் இந்திய தமிழர்கள் இருந்தாலும் கூட அவர்கள் தங்கள் இந்திய நலனையே முதன்மைபடுத்துவார்கள். ஈழம் கிடைக்க அனுமதிக்க மாட்டார்கள்.

இது தெரிஞ்சுமா சம்பந்தன்-சுமந்திரன் கோஷ்டி இந்தியாக்கு காலம் காலமா முண்டு குடுக்கீனம்?

என்ன சலுகைகளை வாங்கிக்கொண்டு முண்டு குடுக்கீனம்? ஓ! உறவினர்களுக்கு வீசாவும் கல்லூரிகளில் படிக்க இடமும் என்டு யாரோ சொன்ன ஞாபகம்.

சம்பந்தன் கோஷ்டி தமிழினத்துக்கு துரோகம் செய்ற மிக மோசமான கோஷ்டி என்கிறது உங்களுக்கு விலகி இருக்கோணுமே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Vankalayan said:

எல்லோரும் நீங்கள் நினைக்கிறபடி அல்லது உங்களுக்கு ஏற்றபடி எழுதவேண்டுமென்று நினைக்கிறதை பார்க்கும்போது எனக்கும் சிரிப்பாக வருகின்றது. மற்றவர்கள் எழுதுவது பிழை , நீங்கள் எழுதுவது சரி என நினைப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. அவர்களின் கருத்துக்களின் உண்மைத்தன்மை கேள்விக்குறி என்றால் நீங்கள் உங்கள் கருத்தை வைக்கலாம்.

அவர் மட்டுமல்ல இன்று எத்தனையோபேர் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். அதட்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றது. என்ன செய்வது உயிரை பாதுகாப்பதட்காக ஓடி ஒழிய வேண்டி இருக்கிறது. அதட்காக அவர்கள் கோழைகள் இல்லை. புரிந்தால் சரி.

சிலவேளைகளில் உண்மை கசக்கத்தான் செய்யும். யாருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஈழம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். நான் சொல்லித்தான் இது தெரிய வேண்டிய அவசியம் இல்லை. மேலயும் நிறையபேர் கருது தெரிவித்திருக்கிரார்கள். போராடித்தான் பார்த்தோமே. இன்றுடன் அது முடிவுக்கு வந்து 11 வருடங்கள் ஆகின்றது. 

ஐயா,

நீங்கள் DBSஐ  சிலாகிப்பது உங்களைப் பொறுத்தது. அதனை வேண்டாமென்று கூறுவதற்கு நான் யார் 🤔

எனது விருப்பத்திற்கேற்றபடி எழுத வேண்டுமென உங்களை நான் எதிர்பார்க்கவே முடியாதபோது எப்படி நிர்ப்பந்திக்க முடியும் 🤔

எனது கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நான் நிச்சயமாக எதிர்பார்க்க மாட்டேன். 👍

DBS ஐ கோழை என்று யார் கூறியது ? அவர்து எழுத்து நடை பலராலும் விரும்பப்படுவது. ஆனால் அவர் எழுதுவதில் பெருமளவு தவறான தகவல்கள் அடங்கியுள்ளன. அவற்றை உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் போல் நிறுவ முயற்சிப்பார். பிழையானவற்றை சுட்டிக்காட்டும்போது ஓடி ஒழிவது ஏற்கத்தக்கது அல்ல. ☹️

ஈழம் கிடைக்கும் கிடைக்காது எறு உறுதிபடக் கூருவதற்கும்  மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நீங்கள் ஏற்பதாகக் கூறுவதற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டினேன். 👍 (சிரிப்பை மூட்டாதீர்கள் என்றது அதற்காகத்தான் 😀)

(நிற்க, 

ஒருவரது எழுத்தை வைத்து அவரை judgement தீர்ப்பிடுவதில்லை. எனவே நீங்கள் எந்தவிதமான தன்னிலை விளக்கமும் எனக்கு தர வேண்டிய அவசியமில்லை 👍)

20 hours ago, Kapithan said:

ஐயா,

நீங்கள் DBSஐ  சிலாகிப்பது உங்களைப் பொறுத்தது. அதனை வேண்டாமென்று கூறுவதற்கு நான் யார் 🤔

எனது விருப்பத்திற்கேற்றபடி எழுத வேண்டுமென உங்களை நான் எதிர்பார்க்கவே முடியாதபோது எப்படி நிர்ப்பந்திக்க முடியும் 🤔

எனது கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நான் நிச்சயமாக எதிர்பார்க்க மாட்டேன். 👍

DBS ஐ கோழை என்று யார் கூறியது ? அவர்து எழுத்து நடை பலராலும் விரும்பப்படுவது. ஆனால் அவர் எழுதுவதில் பெருமளவு தவறான தகவல்கள் அடங்கியுள்ளன. அவற்றை உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகள் போல் நிறுவ முயற்சிப்பார். பிழையானவற்றை சுட்டிக்காட்டும்போது ஓடி ஒழிவது ஏற்கத்தக்கது அல்ல. ☹️

ஈழம் கிடைக்கும் கிடைக்காது எறு உறுதிபடக் கூருவதற்கும்  மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நீங்கள் ஏற்பதாகக் கூறுவதற்கும் இடையில் உள்ள முரண்பாட்டை சுட்டிக்காட்டினேன். 👍 (சிரிப்பை மூட்டாதீர்கள் என்றது அதற்காகத்தான் 😀)

(

சிவராமுக்கு நடந்தது தெரியும்தானே. அதுதான் அவர் நாடடை விட்டு போயிருப்பார். அவர் பொய்யை எழுதி இருந்தால் அவருக்கு எதிர் கருத்தை வைத்திருக்க வேண்டும். அதைவிட்டுப்போட்டு ஆயுதத்தை காட்டி பயமுறுத்த முடியாது. இப்படி அநேகர் நாடடை விட்டு ஓடி இருக்கிறார்கள்.  

நிற்க, 

ஒருவரது எழுத்தை வைத்து அவரை judgement தீர்ப்பிடுவதில்லை. எனவே நீங்கள் எந்தவிதமான தன்னிலை விளக்கமும் எனக்கு தர வேண்டிய அவசியமில்லை  - இது எல்லோருக்கும் பொருந்தும். 

👍)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.