Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

பகலவன் சொன்னது உண்மையா பொய்யா என்று எனக்குத் தெரியாது,அது பற்றி எனக்குக் கருத்தெதுவும் இல்லை. 

ஆனால், பகலவனின் பின்னணி தேடுகிறோம் என்று அவரை அவமதிக்கிற மாதிரி எழுதிய கருத்துகள் தவறு என்று நினைக்கிறேன். பல்கலையில் படித்து வேலை செய்து கொண்டே போராட்டத்தில் உறுப்பினராகவும் இருந்த பலர் இருக்கிறார்கள். அது போல இறுதிவரை வன்னியில் நின்று சிங்களவர்களின் ஊழலால் கண்ணறைபோல இருந்த பாதுகாப்பு வேலிகளைத் தாண்டி நாட்டை விட்டு வெளியேறிய போராளிகள் பலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எப்படி சாகாமல் வெளியே வந்தார்கள் என்று பொதுத் திரிகளில் வெளிப்படுத்த நிர்ப்பந்திப்பது ஆபத்தானது! 

யார் மீதான பக்தியும் தனிப்பட்ட உரிமை, ஆனால் அது மற்றவர்களை ஏறி மிதிக்காமல் வெளிப்பட்டால் நல்லது!

இது? தொப்பியைப் போட்டுக் கொண்டது மட்டுமே நீங்கள்!  

  • Replies 777
  • Views 64.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

இது? தொப்பியைப் போட்டுக் கொண்டது மட்டுமே நீங்கள்!  

என்னை quote பண்ணி எழுதிவிட்டு இப்போ தொப்பி கதை எழுதுகிறீர்கள்... கதை தானே எழுதுங்கள் தாராளமாக........

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, குமாரசாமி said:

பந்தயத்தில் முன்னுக்கு ஓடும் குதிரையில் தான் எல்லோரும் கண் வைப்பார்கள். அது  இப்போதைக்கு சீமான் மட்டுமே.:cool:

my foot......

இவர் ஒரு நொண்டிக்குதிரை, மற்றவர்களுடைய புகழையும் / எண்ணக்கருக்களையும் தான்  திருடி வாழும் ஒருவர். திரு.பிரபாகரன் எனும் ஆளுமை இல்லாவிட்டால் இவர்கள் எல்லோரும் எங்கே இருப்பார்கள்? 
சிங்கள சொலவடையில் சொல்வதானால் "அபே ஹம யனவா,ஊகே நம யனவா"  என்ற கதைதான். மற்றவர்களின் முயற்சியிலும் / கடும் உழைப்பிலும் சவாரி செய்பவர்கள். தனக்கென ஒரு brand ஐ கட்டியெழுப்ப முடியாதவர்கள்.
 
சீமான் எனப்படும் செபஸ்டியன் கிறிஸ்தவ மக்களை தன்னுடைய கருத்துக்காளால் மிகவும் மன உழைச்சலுக்குள்ளாக்குவர். இவர் போன்றவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். 

சரத் பொன்சேக சொன்னதுபோல் "தமிழ் நாட்டு அரசில்வாதிகள் எல்லோரும் கோமாளிகளே"  
 
பக‌லவனது / நந்தனது எழுத்துகள் அவர்கள் போராட்டத்தில் பட்டவலிகளை காட்டுகின்றது. இழப்புக்களை
பிரதிப‌லிக்கின்றது. பகலவன் நோர்வேயில் இருக்கின்றார் என நினக்கின்றேன். யுத்த காலத்தில் நோர்வே பல முக்கிய தலைவர்களுக்கு நேரடி அகதி விசா கொடுத்து அவர்களை பாதுகாப்பாக‌ அந்தாட்க்குள் உள்வாங்கியது.
 
30 minutes ago, MEERA said:

சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் இலங்கையில் 14வது ஆக வந்துள்ளார் என்று கூறி உள்ளாரே? இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன? 

கபொத சாதாரண தர பரீட்சையில் 14 இடத்திற்கு வந்திருக்கும் ஒருவர் சீமானின் ஆதரவாளராக இருப்பது கஷ்ரமான விடயம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

நீங்கள் சீமானின் அரசியலை விடுத்து கறி இட்லியை வேடிக்கை காட்டுவது போல் என்கிறீர்களா?

அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்🤠. அண்ணன் சீமான் ஈழத்தமிழர்களின் அரசியல் பற்றி விகடன் பேட்டியில் ஒன்றும் சொல்லாமல் வன்னியில் சாப்பிட்ட கதைகளைத்தானே சொன்னார்.

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி திராவிடக்கட்சிகளான அதிமுக, திமுக கும்பல்களை விரட்டி வெற்றிவாகை சூடும்போது அண்ணன் சீமானின் அரசியல் வியூகங்களை கண்டிப்பாக அலசலாம்😄

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நான் உங்களை சீமான் பக்தன் என்று எங்கேயும் சொல்லவில்லை! பகலவனின் பின்னணியை நீங்கள் மட்டும் ஆராயவில்லை! நாதமும், பையனும் கூட சில தங்களுக்கே புரியாத தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திருக்கின்றனர். 

மீண்டும் பாருங்கள் , மேல் என் கருத்து உங்களை நோக்கி மட்டுமல்லாமல் பொதுவாகத் தான் நான் கூறியிருக்கிறேன்! 

அண்ணா வ‌ண‌க்க‌ம் ,
உங்க‌ளுக்கும் என‌க்கும் க‌ருத்துக்க‌ள‌த்தில் பெரிசா ச‌ரி வ‌ராது , வ‌ய‌தில் மூத்த‌ நீங்க‌ள் த‌ம்பி என்ற‌ முறையில் உங்க‌ளுக்கு சுறுக்க‌மாக‌ ஒன்றை சொல்ல‌ விரும்புகிறேன் /

2009 ச‌ர‌ன் அடைந்த‌ பொது ம‌க்க‌ளை முள்ளு க‌ம்பி போட்ட‌ முகாமுக்கை ப‌ல‌ மாத‌மாய் வைத்து இருந்து விசார‌னை செய்திட்டு தான் வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் , 

இறுதிக்க‌ட்ட‌ போரில் எம்ம‌வ‌ர்க‌ள்  சொந்த‌ இன‌த்த‌வ‌ர்க‌ளை காட்டி கொடுத்து சிங்க‌ள‌வ‌ன் ப‌க்க‌மும் நின்ற‌வை , 

ஊட‌க‌ துறையில் ப‌ணி புரிந்த‌  இசைப்பிரியாவுக்கே அந்த‌ நிலை என்றால் , சூசை அண்ணா கூட‌ நின்ற‌வைக்கு என்ன‌ நிலையாய் இருக்கும் , சாதார‌ன‌ போராளிக‌ளை கூட‌ க‌ண்ணைக் க‌ட்டி போட்டு சுட்ட‌ காணொளிக‌ளை நீங்க‌ள் பார்த்து இருப்பிங்க‌ள் , பெரிய‌ பொருப்பில் இருந்த‌ த‌ள‌ப‌திக‌ளின் உடுப்பை க‌ல‌ட்டி போட்டு அவ‌ர்க‌ளின் கையை க‌ட்டி போட்டு ப‌டு கொலை செய்த‌ சிங்க‌ள‌ம் , 

சூசை அண்ணாவுட‌ன் இறுதிக் க‌ட்ட‌ போரில் நின்று பிற‌க்கு ச‌ர‌  அடைந்து  உட‌ன‌ வெளியில் வ‌ந்து பாஸ்போட் எல்லாம் செய்து ஒரு வ‌ருட‌த்துக்குள் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்து , யாழ்க‌ள‌த்தில் உறுப்பின‌ர் ஆகி க‌ருத்து  ப‌திவிடும் அள‌வுக்கு ப‌க‌ல‌வ‌னுக்கு சிங்க‌ள‌வ‌ன் வ‌ன் கொடுமை எல்லாம் செய்யாம‌ உட‌ன‌ வெளியில் விட்டு இருக்கிறாங்க‌ள் , அப்ப‌ சிங்க‌ள‌வ‌ன் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ங்க‌ள் போல‌ கோத்த‌பாய‌ ம‌ட்டும் தான் அப்ப‌ கெட்ட‌வ‌ன் ,

என்ர‌ ந‌ண்ப‌னும் தான் ச‌ர‌ன் அடைந்து சிறைக்குள் இருந்தான் , அவ‌ன் சிறைக்குள் க‌ருணாவின் ஆட்க‌ளிட்ட‌ வேண்டின‌ அடி கொஞ்ச‌ம் இல்ல‌ , 

சூசை அண்ணாவின் க‌தை வ‌ந்த‌ பிற‌க்கும் ம‌ற்றும் அண்ண‌ன் சீமானை த‌ர‌ம்தாழ்த்தி எழுதின‌ கையோட‌ தான் ப‌க‌ல‌வ‌ன் மேல் ப‌ல‌ருக்கு சந்தேக‌ம் வ‌ந்த‌து 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பகலவன் said:

நான் சொல்கிறேன் மீரா. இலங்கையில் ஒரு சில காலம் சாதரண தர பரீட்சையில் முதலிடங்களில் வரும் மாணவர்களை ஜனாதிபதி அழைத்து கௌரவிப்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. 

அப்படி ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். சில கேள்விகளுக்க நான் பதிலளிக்க தவிர்ப்பதால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகி விடாது. 

இல்லை நான் எனது கல்வி நிலையை அம்மாவுக்காக எழுதிய பதிவில் மற்றவர்களை ஏமாற்ற பொய்யாக எழுதி இருக்கிறேன் என்று நீங்கள் கருதினால் உங்கள் கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.

நான் யாழ்களத்தில் எத்தனையோ பதிவுகளை எழுதி இருக்கிறேன். எல்லாவற்றையும் போய் வாசித்துவிட்டு நான் யார் என்ற உண்மை நிலைக்கு வாருங்கள். 

இது உங்கள் கேள்விக்கான பதில் மட்டுமே. 

நன்றி மீரா உங்கள் புரிதலுக்கு.

உங்கள் பதிவுகள் பலவற்றை வாசித்ததால் தான் சிலது தூசி தட்ட முடிந்தது.

✳️புலமைப் பரீட்சையில் இலங்கையில் மூன்றாவது

✳️சாதாரண தரப் பரீட்சையில் இலங்கையில் பதின்நான்காவது

✳️உயர் தரப் பரீட்சையில் எண்பத்தி இரண்டாவது

✳️பொறியியலாளர்

✳️விரிவுரையாளர்

🐯புலனாய்வு போராளி

🐯சேரலாதனின் நண்பர்

🐯2009 இல் சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது அருகாமை

✳️மூன்று நாட்டு ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் முகாமைத்துவ பொறுப்பு

ஒரு பொறியியலாளரை, விரிவுரையாளரைஓர் சாதாரண வேவுப் புலியாக வைத்திருந்தார்களா?

இவை தான் சில நெருடல்களை உருவாக்குகின்றன...

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

நான் உங்களை சீமான் பக்தன் என்று எங்கேயும் சொல்லவில்லை! பகலவனின் பின்னணியை நீங்கள் மட்டும் ஆராயவில்லை! நாதமும், பையனும் கூட சில தங்களுக்கே புரியாத தரவுகளை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்திருக்கின்றனர். 

மீண்டும் பாருங்கள் , மேல் என் கருத்து உங்களை நோக்கி மட்டுமல்லாமல் பொதுவாகத் தான் நான் கூறியிருக்கிறேன்! 

ஜஸ்டின்,

உங்களுக்கு புரிய வைக்க முனைகிறேன்.

நீங்கள் சீமானுக்கு எதிராக கருத்து எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த கருத்துக்கு வலு சேர்க்க, நீங்கள் ஒரு இடத்தில குறித்த ஒரு நபருடன் நான் இருந்தேன் என்று சொல்கிறீர்கள்.

வேறு ஒரு திரியில், உங்களது சொந்த பதிவுகள் அதனை மறுதலிக்கும் என்றால், அதனை ஒரு கள உறுப்பினர் சுட்டிக் காட்டினால், நீங்கள் நேர்மையாளராக இருந்தால் என்ன செய்வீர்கள்?

ஒன்று சீமானுக்கு எதிரான சொன்ன பதிவில், நீங்கள் யாருடன் நினறதாக சொன்னீர்களோ அது தவறு என்று சொல்லவேண்டும் அல்லது, வேறு ஒரு திரியில் சொன்னது தவறு என்று சொல்ல வேண்டும்.

இரண்டையுமே மறுதலிக்காமல், இருந்தால் எப்படி? 

அதுதான், நானும், மீராவும், பையனும் சொல்வது.

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்🤠. அண்ணன் சீமான் ஈழத்தமிழர்களின் அரசியல் பற்றி விகடன் பேட்டியில் ஒன்றும் சொல்லாமல் வன்னியில் சாப்பிட்ட கதைகளைத்தானே சொன்னார்.

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி திராவிடக்கட்சிகளான அதிமுக, திமுக கும்பல்களை விரட்டி வெற்றிவாகை சூடும்போது அண்ணன் சீமானின் அரசியல் வியூகங்களை கண்டிப்பாக அலசலாம்😄

அண்ண‌ன் சீமான் ஈழ‌த‌மிழ‌ர‌ ப‌ற்றி ஊட‌க‌ பேட்டியில் ப‌ல‌த‌ட‌வை சொல்லி இருக்கிறார் , நீங்க‌ள் அண்ண‌ன் சீமான் மீது வாந்தி எடுப்ப‌த‌ நிப்பாட்ட‌ போர‌து இல்ல‌ , நீங்க‌ளும் ஒருசில‌ரும் வாந்தி எடுப்ப‌தால் அவ‌ர் அவ‌ரின் கொள்கையை விட‌ப் போர‌தும் இல்லை , அவ‌ரின் த‌ம்பிக‌ள் அண்ண‌ன் சீமானை த‌ள்ளி வைக்க‌ போர‌தும் இல்ல‌ 😁

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

கபொத சாதாரண தர பரீட்சையில் 14 இடத்திற்கு வந்திருக்கும் ஒருவர் சீமானின் ஆதரவாளராக இருப்பது கஷ்ரமான விடயம் தான்.

உண்மைதான் இனி விடுதலைப்புலிகளுக்கு கல்வி அறிவு இல்லை என்று சொல்லேலாது 😜

பி.கு: சீமானின் பின்னால் நிற்பவர்களின் கல்வி நிலை உங்களுக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை எச்சரிக்கும் கிறிஸ்தவ அமைப்பு போஸ்டரால் பரபரப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

அப்படியும் எடுத்துக்கொள்ளலாம்🤠. அண்ணன் சீமான் ஈழத்தமிழர்களின் அரசியல் பற்றி விகடன் பேட்டியில் ஒன்றும் சொல்லாமல் வன்னியில் சாப்பிட்ட கதைகளைத்தானே சொன்னார்.

உண்மையில் சீமான் அந்த பேட்டியில் முழுமையாக என்ன சொன்னார் தெரியாது.

ஊடகங்கள் TRP க்காக எதுவும் செய்வார்கள்

11 minutes ago, கிருபன் said:

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி திராவிடக்கட்சிகளான அதிமுக, திமுக கும்பல்களை விரட்டி வெற்றிவாகை சூடும்போது அண்ணன் சீமானின் அரசியல் வியூகங்களை கண்டிப்பாக அலசலாம்😄

கண்டிப்பாக நடக்கப் போவதில்லை 😆

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, colomban said:

சீமானை எச்சரிக்கும் கிறிஸ்தவ அமைப்பு போஸ்டரால் பரபரப்பு!

கொழும்பான்.... நீங்கள் தேவை இல்லாத மதவாதத்தினை இங்கே பரப்ப முனைகிறீர்கள். இது ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

கொழும்பான்.... நீங்கள் தேவை இல்லாத மதவாதத்தினை இங்கே பரப்ப முனைகிறீர்கள். இது ஆபத்தானது.

அவர் அவருடைய வேலையை செய்கிறார்.. காணாமல் இருங்கள் தானாக போய் விடுவார்..

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் தலைமை உணவு விடயத்தில் எப்படி என்பதற்கு இந்தச் செவ்வி நல்ல உதாரணம்..

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி’! - பிபிசி ஆனந்தி

27 Jun,2018

news_98763_untitled---singa---r.png

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, பிபிசியின் சார்பில் முதன் முதலாக சந்தித்து நேர்காணல் செய்ய மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசத்துடனான நேர்காணல் ஒன்றை இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
  
லண்டனிலிருந்து கொழும்பு சென்றதுமே இலங்கை அரசின் கெடுபிடி ஆரம்பித்து விட்டது. எனது பயணத்திட்டம் என்ன, பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்தார்கள். என்னைத் தொடர்ந்து கண்காணிக்கவும் செய்தார்கள். அப்போது கிட்டதட்ட வவுனியாவுக்கு முன் வரை மட்டுமே இலங்கை படைகளின் ஆதிக்கம் இருக்கும். அதுவரை சென்றேன். அதன் பிறகு புலிகளின் ஆதிக்கப்பகுதி. அதற்குள் வருவதற்குள் பல்வேறு தடைகள். அதையெல்லாம் மீறி புலிகள் ஆதிக்கப்பகுதிக்கு வந்தேன். பிறகு யாழ்ப்பாணம் சென்றேன். அங்குதான் அப்போது பிரபாகரன் இருந்தார்.

யாழ்ப்பானத்தில் அப்போது ஞானம் என்ற ஒரே ஒரு உணவு விடுதிதான் இருந்தது. அங்கே அறை எடுத்தேன். குளித்து முடித்து, புலிகளுக்க தகவல் சொல்லலாம் என்பது எனது திட்டம். நான் குளித்து வருவதற்கும், கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருந்தது.
திறந்தால், சுப. தமிழ்ச்செல்வன் உட்பட சில புலிகள் நிற்கிறார்கள். என்னைக்குறித்து விசாரிக்கிறார்கள். நான் ஆச்சரிப்பட்டுப் போனேன். நான் வந்த தகவல் அதற்குள் அவர்களுக்கு சென்றுவிட்டது.

இதிலிருந்து ஒரு விடயத்தை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஈழ மக்கள், புலிகளின் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். புதிதாக ஒருவர் வந்தால், புலிகளுக்கு தகவல் தெரிவித்து விடுவார்கள்.

பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது?
பிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்கச் சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார். பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்த போது கூட ரசித்து சிரித்தார். தானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.

தனக்கு எதிராக வைக்கப்படும் கேள்விகளை அவர் எப்படி எதிர்கொண்டார்?
விமர்சனங்களை அவர் வரவேற்றார். சந்திரிகா- புலிகள் குறுகிய கால சமாதானப் பேச்சுக் காலத்திலும் வன்னிக்குச் சென்று பிரபாகரனை சந்தித்தேன். அவரிடம் சில கேள்விகள் கேட்கணும் என்றுதான் நானும் போனேன். ஆனால், அங்கு அவர் கட்டி வைத்திருந்த “செஞ்சோலை குழந்தைகள் இல்ல”த்தைப் பார்த்த பிறகு எனக்குள்ளேயே என்னையுமறியாத ஒரு மாற்றம் ஏற்பட்டது.

தாய் தந்தையரை உறவுகளை இழந்த குழந்தைகளுக்காக எத்தனை அக்கறையுடன் அந்த இல்லதைப் பிரபாகரன் அமைத்திருந்தார்! நெஞ்சு முழுக்க ஈரம் உள்ள மனுசனால் மட்டுமே அப்படி அமைக்க முடியும்!
அந்த செஞ்சோலை இல்லத்தை கண்டபோதே, என் மனதில் இருந்த கசடுகள் எல்லாம் கழுவப்பட்டு புதிதாக பிறந்த உணர்வு ஏற்பட்டது. வன்னியிலிருந்து திரும்பியதும், பி.பி.சியில் செஞ்சோலை பற்றிய நிகழ்ச்சி தயாரித்து “என் தெய்வம் வாழும் திருக்கோயில் நின்றேன்’ என்றுதான் தலைப்பிட்டேன்.

பிரபாகரன் ஒரு அதிசயப் பிறவி. என்ன வசீகரமென்றே எனக்கு விளங்கவில்லை. நேரில் சந்தித்தபோது இவரா இத்தனை பெரிய போராளி அமைப்பின் தலைவர்.. குழந்தை முகமாக இருக்கிறாரே என்றுதான் தோன்றும்.
அவரை சந்தித்தபோது, “உங்கள் போராட்டத்தில் எத்தனை மக்களுக்கு, குழந்தைகளுக்கு கஷ்டம்” என்றுகூட கேட்க நினைத்தேன். ஆனால் அவரைப் பார்க்கும் போது அந்த கேள்வியே எழவில்லை.
சரி, புலிகளின் ஆதிக்கத்தில் ஈழம் இருந்தபோது சர்வாதிகாரம் நிலவியதாக ஒரு விமர்சனம் உண்டு!
உண்மை அதுவல்ல. போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான அன்பு, உறவு இருந்தது. மக்கள் தலைமை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் மிக உறுதியானது. அங்குள்ளவர்களிடம் பேசியபோது ஒரு தகவல் கிடைத்தது.
எப்போதாவது உணர்ச்சி வசப்பட்டு போராளிகள் பொதுமக்களை அடித்தால் கூட “தலைவர் உங்களை இப்படி அடிக்கச் சொல்லித் தந்தவரோ?’ என்றுதான் கேட்பார்கள். அந்தளவுக்கு தலைமை மீது மக்களுக்கு நம்பிக்கை உண்டு.
அது மட்டுமல்ல.. போராளியாக இருப்பவர் தனது ஆயுதங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் உடனடியாக அமைப்பிலிருந்து நீக்கப்படுவார். அதோடு, அவர் தமிழீழ சிவில் நிர்வாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். சிவில் சட்டங்களின் படி அவருக்குத் தண்டனை வழங்கப்படும்.
பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர்., இந்திரா ஆகியோரிடம் மிகுந்த மரியாதை உண்டு என்று சொல்லப்படுவது உண்டு!

ஆமாம்.. எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பற்று வைத்திருந்தவர் பிரபாகரன். ஈழ மக்கள் அனைவருமே அப்படித்தான். எம்.ஜி.ஆர். இறந்தபோது, ஈழமக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. அதே போல இந்திராகாந்தி மறைந்த போதும் ஈழமக்கள் மிகுந்த துயர் அடைந்தார்கள்.

உங்களது ஈழப்பயணங்களின் போது வியக்க வைத்தது எது?
பல விடயங்களைச் சொல்லலாம். முக்கியமாக நான் ஈழ மக்களிடம் கேட்க விரும்பியது, சந்திரிகாவின் ஐந்தாண்டு கால தொடர் போர் மற்றும் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பதைத்தான்.
அதற்கு அம்மக்கள் கொடுத்த விடை நெகிழ்வூட்டியது. “ இப்படிப்பட்ட சூழலை தலைவர் பிரபாகரன் முன்னதாகவே அனுமானித்தார். தனக்கு அடுத்தபடியாக இருந்த இயக்க தலைவர்களை அழைத்தார். அப்போது அவர் முதலில் பேசியது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் விவசாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் கவனத்துடன் கணக்கெடுத்தோம். பணப்பயிர்களைத் தடை செய்தோம். விதை நெல்கள் சேமித்தோம். இயற்கை விவசாயத்துக்கு பழகினோம். மேலும், எமது ஐந்து லட்சம் மக்களுக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகாவின் கொடுமை யான பொருளாதாரத் தடையினை வெற்றி கண்டோம்” என்றனர்.
புலிகளை ஏதோ வன்முறையாளர் என்றே உருவகம் கொடுத்திருக்கும் பெரும்பாலான ஊடகங்களுக்கு இது தெரியாது. புலிகள், விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை என்று பல்வேறு துறைகளில் திட்டமிட்டு அரசாகவே இயங்கினர் என்பதே உண்மை
 
Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, colomban said:

my foot......

இவர் ஒரு நொண்டிக்குதிரை, மற்றவர்களுடைய புகழையும் / எண்ணக்கருக்களையும் தான்  திருடி வாழும் ஒருவர். திரு.பிரபாகரன் எனும் ஆளுமை இல்லாவிட்டால் இவர்கள் எல்லோரும் எங்கே இருப்பார்கள்? 
சிங்கள சொலவடையில் சொல்வதானால் "அபே ஹம யனவா,ஊகே நம யனவா"  என்ற கதைதான். மற்றவர்களின் முயற்சியிலும் / கடும் உழைப்பிலும் சவாரி செய்பவர்கள். தனக்கென ஒரு brand ஐ கட்டியெழுப்ப முடியாதவர்கள்.
 
சீமான் எனப்படும் செபஸ்டியன் கிறிஸ்தவ மக்களை தன்னுடைய கருத்துக்காளால் மிகவும் மன உழைச்சலுக்குள்ளாக்குவர். இவர் போன்றவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். 

சரத் பொன்சேக சொன்னதுபோல் "தமிழ் நாட்டு அரசில்வாதிகள் எல்லோரும் கோமாளிகளே"  
 
பக‌லவனது / நந்தனது எழுத்துகள் அவர்கள் போராட்டத்தில் பட்டவலிகளை காட்டுகின்றது. இழப்புக்களை
பிரதிப‌லிக்கின்றது. பகலவன் நோர்வேயில் இருக்கின்றார் என நினக்கின்றேன். யுத்த காலத்தில் நோர்வே பல முக்கிய தலைவர்களுக்கு நேரடி அகதி விசா கொடுத்து அவர்களை பாதுகாப்பாக‌ அந்தாட்க்குள் உள்வாங்கியது.
 
நீங்கள் கொழும்புகாரர். சிங்களத்திலும், சிங்களவர் சரத்தின் கருத்துடனும் வந்து இங்கே ஒட்டு மொத்த தமிழர்களையும் மடையர்கள் ஆக்குகிண்றீர்கள்.

சீமானை செபாஸ்டியன் என்று சொல்லிக் கொண்டே, அவருக்கு எதிரான கிறிஸ்தவர் போஸ்டர்களை போடுகிறீர்கள்.

உங்களுக்கு சிங்களவர்கள் மேன்மையானவர்களாக இருக்கலாம்.  எங்களுக்கு அப்படி இல்லை. சிங்கள அரசியல்வாதிகள் பெரும்பாலானோர் கொலைகாரர்கள். தமது இளைஞர்களையே உயிருடன் டயருக்குள் போட்டு எரித்தவர்கள்.

நோர்வே அகதி விசா கொடுத்து உள்வாங்கியது.... நீங்க பார்த்தீங்க...

அட போங்க சார்... தமாசு பண்ணாம...

கடைசி நேரத்தில், நோர்வேகாரர்கள் அனைவரையும், விசா கான்சல் பண்ணி, ஏத்தி அனுப்பினார் கோத்தா எண்டது தெரியுமா?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, MEERA said:

உங்கள் பதிவுகள் பலவற்றை வாசித்ததால் தான் சிலது தூசி தட்ட முடிந்தது.

✳️புலமைப் பரீட்சையில் இலங்கையில் மூன்றாவது

✳️சாதாரண தரப் பரீட்சையில் இலங்கையில் பதின்நான்காவது

✳️உயர் தரப் பரீட்சையில் எண்பத்தி இரண்டாவது

✳️பொறியியலாளர்

✳️விரிவுரையாளர்

🐯புலனாய்வு போராளி

🐯சேரலாதனின் நண்பர்

🐯2009 இல் சூசை அவர்களின் அந்த உரையாடலின் போது அருகாமை

✳️மூன்று நாட்டு ஆயிரக்கணக்கான பணியாளர்களை வழிநடத்தும் முகாமைத்துவ பொறுப்பு

ஒரு பொறியியலாளரை, விரிவுரையாளரைஓர் சாதாரண வேவுப் புலியாக வைத்திருந்தார்களா?

இவை தான் சில நெருடல்களை உருவாக்குகின்றன...

புல‌னாய்வுதுறையில் இருந்த‌வ‌ர்க‌ளுட‌னும் தான் ப‌ழ‌க்க‌ம் என்று ஒரு திரியில் எழுதி இருந்தார் ப‌க‌ல‌வ‌ன்  , கொழும்பில் வெடித்த‌ குண்டுக‌ள் எல்லாம் பொட்டு அம்மானின் ஆட்க‌ள் தான் வைச்ச‌து 

கொழும்பில் ஒரு குண்டு வெடிச்சாலே சிங்க‌ளவ‌ன் 1997 இந்த‌ கால‌ப் ப‌குதியில் த‌மிழ‌ர்க‌ளை கொழும்பில் வைத்து கைது செய்த‌து , அப்போது நான்
 சின்ன‌ பெடிய‌ன்  என்னை கைது செய்ய‌ வில்லை , என‌து மாமாவை கைது செய்து விட்டு அடுத்த‌ நாள் தான் வெளியில் விட்ட‌வ‌ங்க‌ள் ,1997ம் ஆண்டு தெய்வ‌லையில் ரெயிலுக்கை குண்டு வைச்சு ப‌ல‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் இற‌ந்து போன‌வை , த‌மிழ‌ர்க‌ள் வாழும் இட‌ங்களில் எல்லாரையும் கைது செய்த‌வ‌ங்க‌ள் / 

இப்ப‌டி என‌க்கும் ப‌ல‌ உண்மை நில‌வ‌ர‌ம் தெரியும் இது எல்லாம் என் க‌ண்ணால் க‌ண்ட‌ நான் ,

மீரா இந்த‌ நூற்றாண்டில் யாரையும் அதிக‌ம் ந‌ம்ப‌ வேண்டாம் , இதை தான் என்னால் சொல்ல‌ முடியும் 😓

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nedukkalapoovan said:

பிரபாகரனுடனான சந்திப்பு எப்படி இருந்தது?
பிரபாகரனை அவரது வீட்டில் வைத்து சந்திக்கச் சென்றேன். வாசலுக்கே வந்து அன்போடு வரவேற்றார். பலரும் நினைப்போது போல அவர் எப்போதுமே சீரியஸ் ஆன பேர்வழியாக இருப்பதில்லை. சகஜமாக பழகுவார். சில முறை நான் ஜோக் அடித்த போது கூட ரசித்து சிரித்தார். தானே எனக்கு நண்டு, இறால் என கடல் உணவுகளை சமைத்துக்கொடுத்தார். மிக அன்பான மனுசர் அவர்.

இதை ஆனந்தி சொன்னாரா என்று கேட்கவும் இப்ப ஆக்கள் இருக்கினம்.  500 தோசை சுட்டு அடுக்கி வைச்சது.. அதை காயக் காய புலிகள் உண்டனர். அதுதான் அங்கு நிலைமை என்று சொல்லும் கிறுக்கர்களின் சொல் தான் முற்றுமுழுதான உண்மை என்று நம்புபவர்களுக்காக மட்டும்... இந்த மேற்கோள்...!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, colomban said:

my foot......

இவர் ஒரு நொண்டிக்குதிரை, மற்றவர்களுடைய புகழையும் / எண்ணக்கருக்களையும் தான்  திருடி வாழும் ஒருவர். திரு.பிரபாகரன் எனும் ஆளுமை இல்லாவிட்டால் இவர்கள் எல்லோரும் எங்கே இருப்பார்கள்? 
சிங்கள சொலவடையில் சொல்வதானால் "அபே ஹம யனவா,ஊகே நம யனவா"  என்ற கதைதான். மற்றவர்களின் முயற்சியிலும் / கடும் உழைப்பிலும் சவாரி செய்பவர்கள். தனக்கென ஒரு brand ஐ கட்டியெழுப்ப முடியாதவர்கள்.
 
சீமான் எனப்படும் செபஸ்டியன் கிறிஸ்தவ மக்களை தன்னுடைய கருத்துக்காளால் மிகவும் மன உழைச்சலுக்குள்ளாக்குவர். இவர் போன்றவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். 

சரத் பொன்சேக சொன்னதுபோல் "தமிழ் நாட்டு அரசில்வாதிகள் எல்லோரும் கோமாளிகளே"  
 
பக‌லவனது / நந்தனது எழுத்துகள் அவர்கள் போராட்டத்தில் பட்டவலிகளை காட்டுகின்றது. இழப்புக்களை
பிரதிப‌லிக்கின்றது. பகலவன் நோர்வேயில் இருக்கின்றார் என நினக்கின்றேன். யுத்த காலத்தில் நோர்வே பல முக்கிய தலைவர்களுக்கு நேரடி அகதி விசா கொடுத்து அவர்களை பாதுகாப்பாக‌ அந்தாட்க்குள் உள்வாங்கியது.

அப்ப‌ ஏன் ஊட‌க‌த்துறையில் ப‌ணி புரிந்த‌ இசைப்பிரியாவை சிங்க‌ள‌ம் மிக‌ கொடுமையாய் கொன்று குவிச்ச‌து ,

த‌லைவ‌ரின் க‌ட‌சி ம‌க‌ன் அந்த‌ சிறுவ‌ன் என்ன‌ பாவ‌ம் செய்த‌து , அந்த‌ சிறுவ‌னை ஏன் நோர்வே நாடு காப்பாற்ற‌ த‌வ‌றிய‌து /

சிங்க‌ள‌வ‌னுக்கு முட்டு கொடுத்த‌து போதும் 😉

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, colomban said:

my foot......

இவர் ஒரு நொண்டிக்குதிரை, மற்றவர்களுடைய புகழையும் / எண்ணக்கருக்களையும் தான்  திருடி வாழும் ஒருவர். திரு.பிரபாகரன் எனும் ஆளுமை இல்லாவிட்டால் இவர்கள் எல்லோரும் எங்கே இருப்பார்கள்? 
சிங்கள சொலவடையில் சொல்வதானால் "அபே ஹம யனவா,ஊகே நம யனவா"  என்ற கதைதான். மற்றவர்களின் முயற்சியிலும் / கடும் உழைப்பிலும் சவாரி செய்பவர்கள். தனக்கென ஒரு brand ஐ கட்டியெழுப்ப முடியாதவர்கள்.
 
சீமான் எனப்படும் செபஸ்டியன் கிறிஸ்தவ மக்களை தன்னுடைய கருத்துக்காளால் மிகவும் மன உழைச்சலுக்குள்ளாக்குவர். இவர் போன்றவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள். 

சரத் பொன்சேக சொன்னதுபோல் "தமிழ் நாட்டு அரசில்வாதிகள் எல்லோரும் கோமாளிகளே"  
 
பக‌லவனது / நந்தனது எழுத்துகள் அவர்கள் போராட்டத்தில் பட்டவலிகளை காட்டுகின்றது. இழப்புக்களை
பிரதிப‌லிக்கின்றது. பகலவன் நோர்வேயில் இருக்கின்றார் என நினக்கின்றேன். யுத்த காலத்தில் நோர்வே பல முக்கிய தலைவர்களுக்கு நேரடி அகதி விசா கொடுத்து அவர்களை பாதுகாப்பாக‌ அந்தாட்க்குள் உள்வாங்கியது.
 
My foot 

அப்படியா....அந்த முக்கிய தலைவர்களை யார் என்று சொல்றது..

  • கருத்துக்கள உறவுகள்
On ‎04‎-‎06‎-‎2020 at 15:18, Maruthankerny said:

தனது திறமையால் அரசியல் செய்யாமல் ,காலத்திற்கு காலம் புலிகளை இழுத்து, தனது பிழைப்பிற்காய் கதைப்பதே ஒரு அரசியல் தான் ...அதுவும் உண்மையை சொல்லாமல் பச்சை பொய் சொல்வது கேடு கெட்ட அரசியல் ...உந்த அரசியலைத் தான் விடச் சொல்கிறோம்...கடைசியாய் கிருபன் இணைத்த கட்டுரையையும் வாசித்து பார்க்கவும்...அந்த கட்டுரையை பற்றி ஒருத்தரும் வாய் திறக்காமல் இருக்கினம் 
பொட்டர் உங்களுக்கு போனை போட்டு சொன்னவரா கருணா ,காசை அடித்துக் கொண்டு பெட்டையளோடு ஓடிட்டான் என்று ,ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.
கருணா , புலிகளையோ/ தலைவரையோ  வைத்து அரசியல் செய்யவில்லை...அவர் இயக்கத்தில் இருந்தவர் ...பாதியில் விட்டுட்டு ஓடினாலும் அவர் புலிகளுக்காய் செய்தது இல்லை என்றாகி விடாது.
யார் வந்து ஆயிரம் சப்பை காரணங்கள் சொன்னாலும், எங்கள் மக்கள் சாவதை பார்த்து கொண்டு இருந்து விட்டு அதை வைத்து அரசியல் செய்யும் தகுதி தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டும் இல்லை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை.
அப்படி என்ன கொள்கை ,போராட்டம் ,புலிகளுக்காய் /ஈழத் தமிழருக்காய்  தற்போது சீமான் தொடர்கிறார் என்று தெளிவுபடுத்துகிறீர்களா?

On ‎04‎-‎06‎-‎2020 at 08:39, குமாரசாமி said:

புலிகள் ஆயுதங்களை மௌனித்த பின்னர்தானே முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தது. அந்த போர் குற்றத்திற்கு கால அவகாசம் கேட்ட உங்கள் தலைவர் சுமந்திரனை என்னவென்பது?

சுமத்திரன் என் தலைவரா 🤯
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

தனது திறமையால் அரசியல் செய்யாமல் ,காலத்திற்கு காலம் புலிகளை இழுத்து, தனது பிழைப்பிற்காய் கதைப்பதே ஒரு அரசியல் தான் ...அதுவும் உண்மையை சொல்லாமல் பச்சை பொய் சொல்வது கேடு கெட்ட அரசியல் ...உந்த அரசியலைத் தான் விடச் சொல்கிறோம்...கடைசியாய் கிருபன் இணைத்த கட்டுரையையும் வாசித்து பார்க்கவும்...அந்த கட்டுரையை பற்றி ஒருத்தரும் வாய் திறக்காமல் இருக்கினம் 
பொட்டர் உங்களுக்கு போனை போட்டு சொன்னவரா கருணா ,காசை அடித்துக் கொண்டு பெட்டையளோடு ஓடிட்டான் என்று ,ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.
கருணா , புலிகளையோ/ தலைவரையோ  வைத்து அரசியல் செய்யவில்லை...அவர் இயக்கத்தில் இருந்தவர் ...பாதியில் விட்டுட்டு ஓடினாலும் அவர் புலிகளுக்காய் செய்தது இல்லை என்றாகி விடாது.
யார் வந்து ஆயிரம் சப்பை காரணங்கள் சொன்னாலும், எங்கள் மக்கள் சாவதை பார்த்து கொண்டு இருந்து விட்டு அதை வைத்து அரசியல் செய்யும் தகுதி தமிழ்நாட்டில் சீமானுக்கு மட்டும் இல்லை எந்த அரசியல்வாதிக்கும் இல்லை.
அப்படி என்ன கொள்கை ,போராட்டம் ,புலிகளுக்காய் /ஈழத் தமிழருக்காய்  தற்போது சீமான் தொடர்கிறார் என்று தெளிவுபடுத்துகிறீர்களா?

நாங்க‌ள் இணைத்த‌ காணொளிக‌ள் பார்க்காத‌ நீங்க‌ள் கிருப‌ன் அண்ணா இணைத்த‌ ப‌திவை ப‌ற்றி எழுதுறீங்க‌ள் , 
கிருப‌ன் அண்ணா இணைத்த‌ ப‌திவுக்கு மேல‌ த‌மிழ் சிறி அண்ணாவும் ஒரு ப‌திவு இணைத்து இருக்கிறார் அதை வாசியுங்கோ , 

நீங்க‌ளோ உங்க‌ட‌ அண்ணாவோ ஒட்டு மொத்த‌ சிங்க‌ள‌வ‌ரே சொன்னாலும் அண்ண‌ன் சீமான் கையில் எடுத்த‌ அர‌சிய‌ல‌ ஒரு போதும் கை விட‌ மாட்டார் /

எங்க‌ட‌ ஆத‌ர‌வை அண்ண‌ன் சீமானுக்கு நாங்க‌ள் கொடுத்துட்டு தான் இருப்போம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

ஜஸ்டின்,

உங்களுக்கு புரிய வைக்க முனைகிறேன்.

நீங்கள் சீமானுக்கு எதிராக கருத்து எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த கருத்துக்கு வலு சேர்க்க, நீங்கள் ஒரு இடத்தில குறித்த ஒரு நபருடன் நான் இருந்தேன் என்று சொல்கிறீர்கள்.

வேறு ஒரு திரியில், உங்களது சொந்த பதிவுகள் அதனை மறுதலிக்கும் என்றால், அதனை ஒரு கள உறுப்பினர் சுட்டிக் காட்டினால், நீங்கள் நேர்மையாளராக இருந்தால் என்ன செய்வீர்கள்?

ஒன்று சீமானுக்கு எதிரான சொன்ன பதிவில், நீங்கள் யாருடன் நினறதாக சொன்னீர்களோ அது தவறு என்று சொல்லவேண்டும் அல்லது, வேறு ஒரு திரியில் சொன்னது தவறு என்று சொல்ல வேண்டும்.

இரண்டையுமே மறுதலிக்காமல், இருந்தால் எப்படி? 

அதுதான், நானும், மீராவும், பையனும் சொல்வது.

புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், நன்றி.

இரண்டு பதிவுகளுமே உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகள் என்ன? பூச்சியமா? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

நாங்க‌ள் இணைத்த‌ காணொளிக‌ள் பார்க்காத‌ நீங்க‌ள் கிருப‌ன் அண்ணா இணைத்த‌ ப‌திவை ப‌ற்றி எழுதுறீங்க‌ள் , 
கிருப‌ன் அண்ணா இணைத்த‌ ப‌திவுக்கு மேல‌ த‌மிழ் சிறி அண்ணாவும் ஒரு ப‌திவு இணைத்து இருக்கிறார் அதை வாசியுங்கோ , 

நீங்க‌ளோ உங்க‌ட‌ அண்ணாவோ ஒட்டு மொத்த‌ சிங்க‌ள‌வ‌ரே சொன்னாலும் அண்ண‌ன் சீமான் கையில் எடுத்த‌ அர‌சிய‌ல‌ ஒரு போதும் கை விட‌ மாட்டார் /

எங்க‌ட‌ ஆத‌ர‌வை அண்ண‌ன் சீமானுக்கு நாங்க‌ள் கொடுத்துட்டு தான் இருப்போம் 😁

பையா , பாலன் என்பவர் திமுக போன்ற கட்சிகளுக்கு எதிராய் எழுதி வருபவர் ...அவர் எப்படி எழுதுவார் என்றும் தெரியும் ...நீங்கள் யாரை ஆதரித்தாலும் எனக்கு கவலையில்லை ...நீங்களே பட்டு தெளியுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போர் சமயத்தில் முதலில் சீமான் கைது செய்யப்பட்டது ஐப்பசி 19, 2008. விடுதலை செய்யப்பட்ட நாள் ஐப்பசி 31, 2008 (இணைப்புகள் போகமாட்டுது).

பின்னர் மாசி 2009 இல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி உள்ளார். இடையில் நடந்த விவரங்களை திரட்டினால்தான் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.