Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளாவில் கர்ப்பிணி யானை பலி: அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்த கொடூரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இம்ரான் குரேஷி பிபிசி இந்தி
மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லைபடத்தின் காப்புரிமை MOHAN KRISHNAN / FACEBOOK Image caption மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை

கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து, அதை கர்ப்பமாக இருந்த யானைக்கு சிலர் கொடுத்ததில், அதை உண்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அடையாளம் அறியப்படாத நபர்களின் இந்தக் கொடூரச் செயலுக்கு உள்ளான, அந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த யானையின் வாய் மற்றும் தும்பிக்கை பகுதி மூன்று நாட்களாக நீருக்குள்ளேயே இருந்துள்ளது.

"அந்த யானைக்கு எங்கு அடிபட்டது என்பதை எங்களால் கண்டறிய முடியவில்லை. வலி தெரியாமல் இருக்க, அந்த யானை நிறைய தண்ணீர் குடித்திருக்கும் என்று நினைக்கிறேன். வாயின் இரு பக்கங்களிலும் பல காயங்கள் இருந்தன. பற்கள் இருக்கவில்லை," என்கிறார் இதுகுறித்து பிபிசி இந்தி சேவையிடம் பேசிய, சைலன்ட் வேலி தேசிய பூங்காவின் வனக் காப்பாளர் சாமுவேல்.

இந்த யானை தொடர்பாக வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட பிறகுதான் இந்த முழு சம்பவமும் வெளிச்சத்திற்கு வந்தது.

கேரளாவில் கர்ப்பிணி யானை பலிபடத்தின் காப்புரிமை MOHAN KRISHNAN / FACEBOOK

வலியோடு அந்த யானை அருகில் உள்ள கிராமத்தின் வீதிகளில் உதவிக்காக சுற்றி திறிந்தபோது கூட, ஒரு மனிதரையும் அது தாக்கவில்லை என்று உணர்ச்சிபூர்வமாக அவர் எழுதியிருந்தார்.

அந்த கர்ப்பிணி யானையில் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்.

"வலியுடன் தண்ணீரில் நின்று கொண்டிருந்த யானையை மீட்க, விரைவுக்குழுவோடு, இரண்டு கும்கி யானைகளையும் பயன்படுத்தினோம். அங்கிருந்து யானையை வெளியே கொண்டுவந்தால், அறுவை சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், அநத் யானை அதற்கு ஒத்துழைக்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு தயார் செய்யும் முன் இறந்துவிட்டது," என பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பிரிவு வன அலுவலர் சுனில் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

மே 27ஆம் தேதியன்று தண்ணீரில் நின்றபடியே அந்த யானை இறந்திருக்கிறது. பின்னர் அதன் உடல் அருகில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

அப்போதுதான் அந்த யானை கர்ப்பமாக இருந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

கேரளாவில் கர்ப்பிணி யானை பலிபடத்தின் காப்புரிமை MOHAN KRISHNAN / FACEBOOK

பின்னர் அந்த யானை புதைக்கப்பட்டு, அதற்கு இறுதி மரியாதையையும் அதிகாரிகள் செலுத்தினர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய சாமுவேல், இதற்கு யார் காரணம் என்பதை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களில் மனித - விலங்கு மோதல் சம்பவங்கள் இதற்கு முன்னரே பல முறை நிகழ்ந்திருந்தாலும், இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/india-52901532

  • கருத்துக்கள உறவுகள்

கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொன்ற சம்பவம்: விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு; அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

kerala-govt-orders-probe-into-wild-elephant-death-centre-seeks-report ஆற்றுநீரில் நின்றவாறு உயிரிழந்த பெண் யானை

திருவனந்தபுரம்

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சைலண்ட் பள்ளத்தாக்கு பகுதியில் கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொன்ற வழக்கில் விசாரணை நடத்த வனவிலங்கு குற்றவிசாரணைப்பிரிவுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்தசம்பவத்தில் முழுமையான அறிக்கையை கேரள அரசு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவி்ட்டுள்ளது.

பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திருந்த கர்ப்பிணி பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழக்கை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப்பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானை தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதமடைந்தன.

இந்த சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றுத்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்றநிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. அந்த யானையைக் காப்பாற்ற வனத்துறையினர் இரு யானைகள் மூலம் முயன்றும் பலனளிக்கவில்லை.

1591241002756.jpg

அந்த பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யாைனயைக் கொன்ற சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி்க்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் என பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து கேரள முதல்வர் பினராயிவிஜயன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ மண்ணார்காடு வனச்சரகத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர கோழிக்கோட்டிலிருந்து வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்துக்கு விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

1591241020756.jpg யானையைக் காப்பாற்ற இரு யானைகள் முயன்ற காட்சி

இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் கேரள அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “கேரளாவில் யானைக்கு அளிக்கப்பட்ட அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து அதை கொலை செய்த சம்பவம் கொடூரமானது. இந்த தவறைச் செய்வர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான முழுமையான அறிக்கையை கேரள அரசிடம் இருந்து கேட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்

இதுகுறி்த்த மண்ணார்காடு வனச்சரகத்தின் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ வேளாண் பயிர்களை சேதம் செய்கிறது என்று எண்ணி விவசாயிகள் யாரேனும் இதுபோல் அன்னாசிப்பழத்தில் வெடிமருந்து வைத்து யானையைக் கொன்றிருக்கலாம். விசாரணை தொடங்கிவிட்டது விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார்” எனத் தெரிவித்தார்

 

https://www.hindutamil.in/news/india/557799-kerala-govt-orders-probe-into-wild-elephant-death-centre-seeks-report-1.html

 

எப்படிப்பட்ட கொடூரமானவர்கள்😡😡😡

  • கருத்துக்கள உறவுகள்

100981076_166713908194769_50619281959813120_n.jpg?_nc_cat=106&_nc_sid=825194&_nc_eui2=AeHZWKpEJFxucTY2EN6znt7E8Dcp9uINM5vwNyn24g0zm8rFGIAi6eUVeEVIwPvPhd6PsHtgxpw8a_gtrVo5kfLg&_nc_ohc=3GCzPnVkww0AX-rU6N7&_nc_ht=scontent-frt3-1.xx&oh=6741a4be3fb31e874fb36a0bbd71c9a2&oe=5EFECA9A

  • கருத்துக்கள உறவுகள்

101475753_3078943312199769_2388877942659743744_o.jpg?_nc_cat=1&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeGrbUy7Plc_Xkvq58gCX8G4qmJ-jqH-XYiqYn6Oof5diC5V4w6hoFRy38cqUJSJUYBzE7ksLPVfh0TJMZaXIGkT&_nc_ohc=UQYvoNKzJ6wAX-q_Q8U&_nc_ht=scontent-frx5-1.xx&oh=bcf6fc649a6eec1584fffebfdc5f7e0a&oe=5EFFB9BE

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனை காப்பாற்றும், 🐘 இப்படிப் பட்ட ஒரு  விலங்கினத்தை... 
கொல்ல, எப்படி மனம் வந்தது?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேடு கெட்ட கொலைகளை செய்யும் மலையாளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் யானையை வைத்து பிழைப்பு காட்டும் திரிச்சூர் பூரம் போன்ற நிகழ்வுகள் தடை செய்யணும் அப்பத்தான் வழிக்கு  வருவான்கள் .

இந்த பீட்டா போண்றதுகள் ஜல்லிக்கட்டுக்கு மாத்திரம் தாங்களும் மாடுகள் போல் தமிழ்நாட்டில் முட்டி மோதிக்கொள்வார்கள் கேரளப்பக்கம்  இந்த யானை விடயங்களில் தலை வைத்தும் படுக்க மாட்டினம் தமிழன் இளிச்சவாய் என்று தெரிந்து விட்டுத்தாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

விலங்குகளிடம் அன்பாக இருங்கள்: சச்சின், கோஹ்லி வேண்டுகோள்

elephant, Sachin tendulkar, Indian cricket captain Virat Kohli, Palakkad news, Kohli, Kerala, kerala elephant death,   சச்சின், கோஹ்லி, யானை

 

மும்பை : ''நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளிடம் அன்பாக இருங்கள்,'' என கேப்டன் கோஹ்லி தெரிவித்தார்.

கேரளாவில் பட்டாசு மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசிபழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை, பலத்த காயமடைந்து மரணம் அடைந்தது.


latest tamil news


 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'கேரளாவில் நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டேன். தயவு செய்து நம்மை சுற்றியுள்ள விலங்குகளை அன்பாக நடத்துங்கள், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,' என தெரிவித்தார்.

 

 

latest tamil news


 

இந்திய கிரிக்கெட் 'ஜாம்பவான்' சச்சின் கூறுகையில்,''அடையாளம் தெரியாத நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நீதி கிடைக்க கேரளா வனத்துறைக்கு நமது ஆதரவையும், உதவியையும் வழங்குவோம்,'' என்றார்.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2551687

  • கருத்துக்கள உறவுகள்

யானைக்கு உணவில் பட்டாசு வைத்து வெடித்து கொல்லவது இந்திய கலாச்சாரம் இல்லை - பிரகாஷ் ஜவடேகர் கடும் கண்டனம்

யானைக்கு உணவில் பட்டாசு வைத்து வெடித்து கொல்லவது இந்திய கலாச்சாரம் இல்லை - பிரகாஷ் ஜவடேகர் கடும் கண்டனம்

 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம்  சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதனைப் பார்த்து பயந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என எண்ணி, யானையை விரட்ட அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர். மனிதர்கள் வழங்கிய உணவை அந்த யானை சாப்பிட்டதும் வாயில் வெடி மருந்து வெடித்தது. இதனால் அந்த கர்ப்பிணி யானைக்கு தாள முடியாத வலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த கர்ப்பிணி யானை தண்ணீரில் நின்றபடியே தனது உயிரை விட்டது.

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் மலப்புரத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டதை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கவனித்துள்ளது. இந்த சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கேரளாவில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். யானைக்கு உணவில் பட்டாசு வைத்து வெடித்து கொல்லவது போன்று செய்வது இந்திய கலாச்சாரம் இல்லை என பதிவிட்டுள்ளார்

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/04151144/This-is-not-an-Indian-culture-to-feed-fire-crackers.vpf

 

யானையை கொன்றவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு

யானையை கொன்றவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு

கடவுளின் தேசம் என புகழப்படும் கேரளாவில் யானைகளும் தெய்வமாக வணங்கப்படுகிறது.

 
கேரளாவில் அனைத்து கோவில்களிலும் நடைபெறும் விழாக்களில் தெய்வங்களின் சிலைகளை ஏந்தி செல்லும் பொறுப்பு யானைகளுக்கே வழங்கப்படும். இதனால் கேரளாவில் எப்போதும் யானைகளுக்கு தனி மரியாதை உண்டு. கேரளாவின் அரசு இலச்சினையிலும் 2 யானைகள் இடம் பெற்றிருக்கும். இப்படி யானைகளுக்கு மரியாதை அளிக்கும் கேரளாவில் மனிதாபிமானம் அற்ற முறையில் ஒரு யானையை வெடி வைத்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

கோவில் யானைகளுக்கு அளிக்கப்படும் மரியாதை காட்டு யானைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அவைகள் விவசாயிகளின் நிலங்களை நாசப்படுத்தி பயிர்களை சேதப்படுத்துவதால் அவற்றை விரட்டுவதிலேயே ஆர்வம் காட்டுவார்கள்.

அப்போதும் ஒலி எழுப்பியும், வெடிகளை வெடிக்க வைத்தும் விரட்டுவார்கள். சில நேரங்களில் கும்கி யானைகள் மூலமும் காட்டு யானைகளை துரத்தும் பணி நடக்கும். இவையெல்லாம் சாதாரணமாக நடக்கும் செயல்கள். ஆனால் கேரளாவின் திருவனந்தபுரம் வனப்பகுதிக்குட்பட்ட கூத்தப்பாடம் கிராமத்தில் புகுந்த காட்டு யானைக்கு நடந்த சம்பவம்தான் வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மே மாதம் கடைசி வாரத்தில் வன அதிகாரி ஒருவர் இங்குள்ள காட்டு பகுதிக்கு ரோந்து சென்றார். அப்போது காட்டாறு ஒன்றில் யானை ஒன்று பிளிறியபடி நின்றது. தும்பிக்கையை உயர்த்தியபடி நீரில் மூழ்குவதும், பின்னர் எழுந்து நின்று பிளிறுவதுமாக இருந்தது.

யானைகளை பற்றி நன்கு அறிந்திருந்த வன அதிகாரி, அந்த யானைக்கு ஏதோ காயம் இருக்கிறது, அதனால்தான் அது வலியில் துடிக்கிறது என்பதை புரிந்து கொண்டார். இதை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அவர்கள் அனுமதி பெற்று கும்கி யானைகளை வரவழைத்தார்.

அந்த யானைகள் மூலம் காட்டாற்றில் கதறி கொண்டு நின்ற காட்டு யானையை மீட்க முயன்றார். மே மாதம் 27-ந்தேதி வரை அந்த யானை தண்ணீரை விட்டு வெளியே வரவில்லை. ஆற்றுக்குள்ளேயே நின்று கொண்டிருந்த யானை திடீரென ஒரு பக்கமாக சரிந்து விழுந்தது. பின்னர் எழுந்திருக்கவே இல்லை.

கும்கிகள் உதவியுடன் வன அதிகாரி காட்டு யானையை கரைக்கு தூக்கி வந்தார். கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் யானையை பரிசோதித்தனர். அப்போது யானையின் வாய் பகுதி வெந்துபோய் புண்ணாகி இருப்பதும், இதனால் உணவு அருந்த முடியாமல் வேதனையில் தவித்து யானை இறந்திருப்பதும் தெரிய வந்தது. அந்தயானை கர்ப்பமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. வன அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் யானை விரும்பி உண்ணும் அன்னாசி பழத்தில் யாரோ மர்மநபர்கள் வெடி மருந்தை மறைத்து வைத்து உண்ண கொடுத்ததும், யானை உண்ண தொடங்கியதும் வெடி, வெடித்து யானையின் வாய் பகுதி சிதைந்து போனதும் தெரிய வந்தது.

காட்டு யானைக்கு நடந்த அநியாயம் பற்றி அந்த அதிகாரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதமாக்கும் யானைகளை விரட்ட எத்தனையோ வழிகள் இருக்க இப்படியா... அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானையை கொல்வது என்று தன் வேதனையை பதிவிட்டிருந்தார்.

வன அதிகாரியின் இந்த பதிவு மின்னல் வேகத்தில் நாடு முழுவதும் பரவியது. வன ஆர்வலர்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். யானையை கொன்றவர்கள் மனிதர்கள் அல்ல... மனித மிருகங்கள் என்று பதிவிட்டனர்.

இவர்களுக்கு கடும் அபராதம் விதிப்பதை விட மறக்க முடியாத தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

யானை கொல்லப்பட்ட தகவல் முதல்-மந்திரி பினராயி விஜயன் கவனத்திற்கும் சென்றது. அவர், உடனே வனத்துறை மந்திரியை அழைத்து இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். யானையை கொன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் கூறினார்.

யானை கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் காடு மண்டல வன அதிகாரி சுனில்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

விலங்குகள் ஆர்வலரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மேனகாகாந்தியும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று வனத்துறை செயலர் மற்றும் மந்திரி பதவி விலக வேண்டும் என்றும் கூறி உள்ளார். இச்சம்பவம் குறித்து வயநாடு தொகுதியின் எம்.பி. ராகுல்காந்தி இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/04142815/1575854/Wildlife-SOS-announces-Rs-1-lakh-for-info-on-wild.vpf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யானையைக் கொன்ற வழக்கில் 3 பேரிடம் விசாரணை; திட்டமிட்டு அவதூறு பிரச்சாரம்; மாநிலத்தின் சுய மரியாதை கேள்விக்குள்ளாவதை ஏற்கமுடியாது: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

elephant-death-in-kerala-cm-says-3-suspects-under-scanner-rues-campaign-to-tarnish-state-s-image கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி அளித்த காட்சி : படம் | ஏஎன்ஐ.

திருவனந்தபுரம்

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சில்வர் வேலி வனப்பகுதியில் கர்ப்பிணி யானை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதேசமயம், இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி மாநிலத்தின் மரியாதையைச் சிதைக்கும் பிரச்சாரமும் நடக்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணிப் பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழக்கை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப்பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானையின் தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதமடைந்தன

இந்தச் சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றித்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்றநிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது. அந்த யானையைக் காப்பாற்ற வனத்துறையினர் இரு யானைகள் மூலம் முயன்றும் பலனளிக்கவில்லை. அந்த பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவத்துக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாஜக மூத்த தலைவர் மேனகா காந்தி, ஆளுநர் ஆஃரிப் கான் உள்ளிட்டோர் மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், மேனகா காந்தி, பிரகாஷ் ஜவடேகர் போன்றோர் சம்பவம் நடந்தது மலப்புரம் மாவட்டம் எனத் தெரிவித்தனர். ஆனால், பாலக்காடு மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

1591328703756.jpg

மேலும் பிரபலங்கள், வனவிலங்கு நல ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களும் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க கேரள வனத்துறையின் வனக்குற்றப்பிரிவு தனிப்படையை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த விசாரணையில் 3 பேர் மீது வலுத்த சந்தேகம் எழுந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, மேலும், இருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''யானையைக் கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டுபிடித்து தண்டிக்கப்படுவா்கள். அனைவரும் எழுப்பும் கவலைகள், அக்கறைகள் வீணாகாது. குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதுவரை 3 பேர் மீது வலுத்த சந்தேகம் அடைந்து அவர்களை வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், இருவரையும் தேடி வருகிறார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்துக் கொன்றது கண்டிக்கத்தது, கொடூரமானதுதான். ஆனால் இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மாநிலத்தின் நற்பெயரைக் கெடுக்கவும் மலப்புரம் மாவட்டத்தின் பெயரைக் கெடுக்கவும் திட்டமிட்டுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இதில் மத்திய அமைச்சரே ஈடுபட்டு அறிக்கை விடுகிறார். இது துரதிர்ஷ்டமானது.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். சம்பவம் நடந்தது மலப்புரம் மாவட்டத்தில் அல்ல, பாலக்காடு மாவட்டம். ஆனால், மலப்புரம் என்று பிரச்சாரம் செய்யபப்டுகிறது. ஆனால் இந்தத் தவறைச் சரிசெய்ய மத்திய அமைச்சர் கூட தயராக இல்லை. திட்டமிட்டுப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வெறுப்பைப் பரப்ப முயற்சிப்பதை சகிக்க முடியாது, ஏற்க முடியாது.

எங்கள் மாநிலத்தின் சுயமரியாதையைக் கேள்வி கேட்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. கரோனா வைரஸால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ள இந்தநேரத்தில் இவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. தவறு செய்தவர்கள் அதைச் சரிசெய்யத் தயாராக இல்லையென்றால், அது திட்டமிட்டு செய்யும் முயற்சியாகும்''.

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/india/557943-elephant-death-in-kerala-cm-says-3-suspects-under-scanner-rues-campaign-to-tarnish-state-s-image-2.html

  • கருத்துக்கள உறவுகள்

யானைகள் கொல்லப்படும் சம்பவத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்?- அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவு

யானைகள் கொல்லப்படும் சம்பவத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்? என்பது குறித்து மத்திய மற்றும் கேரள வனத்துறை அதிகாரிகள் குழு அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள் கொல்லப்படும் சம்பவத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்?- அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவு
உயிரிழந்த கர்ப்பிணி யானை
 
சென்னை:

கேரளாவில் அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். யானை கொல்லப்பட்ட விவகாரத்தை சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்தது. இந்த வழக்கை நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் விசாரித்தனர். பின்னர், தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
அன்னாசி பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்டது போன்று மீண்டும் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். யானையின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்வது குறித்தும், அவர்களிடம் இருந்து இழப்பீடு வசூல் செய்ய எடுத்த நடவடிக்கை குறித்தும் மத்திய மற்றும் கேரள வனத்துறை விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு வாரமாக எதுவும் சாப்பிடாத யானை: வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பரிதாபம்

kerala-elephant-murder  

வெடிகளால் நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை தின்றதால் வாயில் காயங்கள் துன்புறுத்த 2 வாரமாக எதையும் சாப்பிட முடியாமல் யானை இறந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலக்காடு மாவட்டம் அமைதிப் பள்ளத்தாக்கு பூங்காவைச் சேர்ந்த யானை உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்தது. அப்போது வெடிபொருட்கள் நிரம்பிய அன்னாசிப் பழத்தை அந்த யானை தின்றது, அப்போது வெடி வெடித்து அதன் நாக்கு, வாய் சிதறின. வேதனை தாங்க முடியாமல் தண்ணீருக்குள் போய் நின்றது.

கும்கி யானை உதவியுடன் இந்த யானையை மீட்டனர் ஆனால் யானை இறந்து போனது. இது நாடு முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்த அனைவரும் கண்டனங்களையும் வேதனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யானையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது, அதில், வெடிகள் வெடித்ததில் வாயில் ரணங்கள் ஏற்பட எரிச்சல் தாங்காமல் தண்ணீருக்குள் சென்று தண்ணீர் அருந்தியுள்ளது. இதில்தான் காயங்கள் சீழ்பிடித்துள்ளன. இதனால் 2 வாரங்களாக யானையால் எதையும் சாப்பிட முடியாமல் தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்துள்ளது.

பசி மயக்கம், காயத்தின் வலியால் மயங்கி விழுந்து தண்ணீரில் மூழ்கி யானை இறந்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பழத்தைத் தின்றதால்தான் யானைக்கு காயம் ஏற்பட்டது உறுதியாகத் தெரிகிறது., என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை கேரள அரசு கைது செய்துள்ளது, மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

https://www.hindutamil.in/news/india/558090-kerala-elephant-murder-1.html

  • கருத்துக்கள உறவுகள்

`அன்னாசிப் பழமல்ல... தேங்காய்; தேடப்படும் எஸ்டேட் உரிமையாளர், மகன்!’ -யானை மரணத்தில் என்ன நடந்தது?

இந்தக் குற்றத்தில் குறிப்பிட்ட மூவருக்கும் பங்கு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. வில்சனை மட்டும் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ - போலீஸார்

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட வழக்கில் தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் யானை மலப்புரம் மாவட்டத்தில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் அது பாலக்காடு மாவட்டம் என்று மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து நிரப்பி யானைக்கு கொடுக்கப்பட்டதாகத் தவல்கள் வெளியான நிலையில், `யாரும் யானைக்கு கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை. காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசிப் பழத்தை யானை எடுத்து சாப்பிட்டு இருக்கலாம்’ என கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், யானையின் உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், யானை வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசி பழம் சாப்பிட்டதற்கான சான்று இல்லை என்றும், அது உயிரிழப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் இந்த வெடிப்பு நடந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்தத் தகவல்களின் அடிப்படையில் வனத்துறையும், காவல்துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டது.

இந்த நிலையில், நேற்று வில்சன் என்னும் ரப்பர் எஸ்டேட் ஊழியர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட விஷயத்தை காவல்துறையும் மாநில வனத்துறை அமைச்சரும் உறுதி செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரப்பர் எஸ்டேட் உரிமையாளர் அப்துல் கரீம் என்பவரையும் அவரின் மகன் ரியாசுதீன் என்பவரையும் போலீஸார் தேடி வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட அந்த எஸ்டேட் அம்பலப்பரா என்னும் பகுதியில் இருக்கிறது. இது சைலன்ட் வேலி தேசியப் பூங்கா எல்லைப் பகுதியின் அருகிலேயே இருக்கிறது.

இதுதொடர்பாக பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், `தேங்காயில் வெடிமருந்துகளை நிரப்பி, காட்டுப்பன்றிகளுக்காக வைத்திருக்கிறார்கள். இந்தக் குற்றத்தில் குறிப்பிட்ட மூவருக்கும் பங்கு இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. வில்சனை மட்டும் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ என்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, வில்சனை குறிப்பிட்ட ரப்பர் எஸ்டேட்டுக்கு போலீஸார் மற்றும் வனத்துறை அழைத்துச் சென்றனர். அங்கு வெடிமருந்துகள் சட்டவிரோதமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

தொடர்ந்து போலீஸார், `மரணமடைந்த யானை மே மாதம் 12-ம் தேதி வெடிமருந்து நிரப்பப்பட்ட தேங்காயை சாப்பிட்டுள்ளது. அதன் காரணமாக அதன் வாயில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. நாங்கள் சந்தேகிக்கும் நபர்களுக்கு, யானை காயமடைந்தது அன்றைய தினமே தெரியும். அடுத்த இரு வாரங்களுக்கு யானை அங்கும் இங்கும் சுற்றித் திரிந்திருக்கிறது. கடுமையான வலியால் உணவு உண்ண முடியாமலும், தண்ணீர் அருந்த முடியாமலும் சிரமப்பட்டுள்ளது. பின்னர் 25-ம் தேதி யானை வெள்ளியார் ஆற்றின் அருகே காயங்களுடன் காணப்பட்டது. பொதுமக்கள் தகவல் அளித்ததும் வனத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

இரண்டு கும்கி யானைகள் மூலம் யானையை மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடைசியாக மே மாதம் 27-ம் தேதி யானை உயிரிழந்தது’ என்றனர்.

அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ``இங்கு காட்டு யானைகள் மற்றும் பன்றிகள் அடிக்கடி வரும். பயிர்களை நாசம் செய்வதால் இது தொடர்பாக பலமுறை வனத்துறையிடம் முறையிட்டுள்ளோம். ஆனால் அதற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்களைச் செய்ய மாட்டோம்” என்கின்றனர்.

 

https://www.vikatan.com/news/india/one-arrested-two-on-search-police-in-kerala-pregnant-elephant-death

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்று பலாப் பழம்; இன்று அன்னாசிப் பழம்- தொடரும் யானைகளின் துயரம்

elephant-killing-continues  

கேரளத்தில் அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட வெடியால் கர்ப்பிணி யானை காயமடைந்து உயிரிழந்த சம்பவம், மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. வெடி அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்டதா அல்லது தேங்காயில் வைக்கப்பட்டதா; யானைக்காக வைக்கப்பட்டதா அல்லது காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டதா எனும் விவாதம் தொடங்கி, ‘மதவாத’ அரசியல் வரை பல்வேறு விவாதங்கள் எழுந்திருக்கின்றன.

வன விலங்குகள் இப்படிப் பரிதாபமாக உயிரிழக்கும், காயமடையும் சம்பவங்கள் புதிதல்ல.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வனவிலங்கு ஆர்வலர் மசினக்குடி நைஜில் ஓட்டர், “17 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூர் வனப்பகுதியில் ஒரு யானை இறந்துகிடந்தது. அதன் போஸ்ட்மார்ட்டத்திற்கு வனத் துறை கால்நடை மருத்துவர்களுக்கு உதவ நானும் சென்றிருந்தேன். அந்த யானையின் தாடையைக் கிழித்து வாயை உள்நோக்கும்போது ஒரு விஷயம் புலப்பட்டது. நாக்கிலிருந்து தொண்டைக்குழி வரை கடுமையாக வெடித்துச் சிதறிக்கிடந்தன. ஏதோ ஒரு வெடிதான் அந்த யானையின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர்கள் அதை அப்போதைக்கு வெளிப்படுத்தவில்லை. அப்போதே யானைக்கென்றே குறிப்பிட்ட வெடி வைக்கும் வழக்கம் இருந்தது” என்றார்.

ண்டவாளத்தில் 19 மாத யானை சிசு

இன்றைக்கு, கர்ப்பத்தில் இருந்த ஒரு மாத யானை சிசு இறந்துகிடந்ததைப் பார்த்துப் பதறிய உள்ளங்கள் கோவை குரும்பபாளையத்தில் ரயிலில் சிக்கி இறந்த மூன்று யானைகளின் கதையையும், அவற்றின் புகைப்படங்களையும் பார்த்திருக்க முடியாது. அவற்றில் ஒரு யானை நிறை மாத கர்ப்பமாக இருந்தது. அந்தச் சமயத்தில் அப்பகுதியில் இருக்கும் கிராமத்துத் தோட்டங்காடுகளை ஒரு யானைக் கூட்டம் சூறையாடிக்கொண்டிருந்தது. இரவு நேரத்தில் மக்கள் பட்டாசு வெடித்தும், டமாரம் கொட்டியும் யானைகளை விரட்டிக்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் கேரள எக்ஸ்பிரஸ் வரும் நேரத்தில், குகை போன்ற ரயில் தண்டவாளத்திற்குள் இந்த யானைக் கூட்டத்தை உள்ளூர் மக்கள் விரட்டிவிட்டனர். படு வேகமாக வந்த ரயிலில் சிக்கிய நான்கு யானைகளில் ஒன்று மட்டுமே தப்பியது. மூன்று யானைகள் ரயிலில் அடிபட்டு மரணமடைந்தன. அதில் கர்ப்பிணி யானையின் வயிற்றில் இருந்த 19 மாத சிசு அப்படியே கனகாம்பரப்பூ நிறத்தில் பரிதாபமாகத் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்து தண்டவாளத்தில் கிடந்தது. அது பார்ப்பவர் கண்களைக் குளமாக்கியது. ‘இப்படியும் ஓர் அக்கிரமம் உண்டோ?’ என்று பலரும் வேதனைப்பட்டனர்.

துதிக்கை இழந்த ரிவோல்டா

கூடலூர் மாவனல்லா சீகூர் வனத்தில் தோட்டம் வைத்திருக்கும் ஒருவர், தன் தோட்டத்திற்குள் வரும் காட்டு யானைகளுக்கு தர்பூசணி, மற்றும் பலாப்பழத்தைப் போட்டு வைப்பார். யானைகளும் இரவு பகல் பாராது வந்து இப்பழங்களை விரும்பி உண்டு, தொட்டியில் உள்ள தண்ணீரைக் குடித்துவிட்டு செல்லுவது வழக்கமானது.

அதில் ஒவ்வொரு யானைக்கும் ஒரு பெயரிட்டிருந்தார் அந்தத் தோட்டக்காரர். ஒரு நாள் ‘ரிவோல்டா’ எனும் பெயர் கொண்ட யானை, கீழே கிடந்த தர்பூசணியைத் துதிக்கையால் உருட்டி மேலேற்றி சாப்பிட முடியாமல் தவித்தது. புல்லுக்கட்டை உதறி எடுக்க இயலவில்லை. உற்றுப்பார்த்த பிறகுதான் தெரிந்தது. அதன் துதிக்கை நிலத்தில் முட்டவில்லை. சுமார் 9 அங்குல நீளத்திற்கு அதன் முனை வெட்டுப்பட்டு காணாமல் போய் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. அந்தக் காயம் எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை.

அது சாப்பிட அவதிப்படுவது கண்டு தர்பூசணியைப் பெரிய கம்பில் கட்டி அதன் வாய் அருகில் கொடுத்தார் தோட்டக்காரர். யானை வாங்கிச் சாப்பிட்டது. அப்படியே அடுத்தடுத்த நாட்களும் சாப்பிட்டது. ஒரு நாள் துதிக்கைக்குக் கீழே நன்றாகவே சீழ்பிடித்துவிட்டது. தோட்டக்காரர் தனக்கு தெரிந்த வனத் துறை கால்நடை மருத்துவரை அழைத்தார் சிகிச்சைகள் செய்தார். ஒரு கட்டத்தில் ரிவால்டோவிற்கு புண் சரியாகிவிட்டது. ஆனால் எந்த உணவுப்பொருளையும் தன் துதிக்கையால் எடுத்து சாப்பிட இயலவில்லை. யாராவது மனிதர்கள் கொடுத்தால் வாங்கி சாப்பிடும்.

இரக்கமுள்ள அந்தத் தோட்டக்காரர் பின்னாளில் காலமானார். அதற்குப் பிறகு கூடலூர் மாவனல்லா சாலையில் குறுக்கே நின்று மனிதர்களிடம் பிச்சையெடுக்க ஆரம்பித்தது ரிவோல்டா. இப்போதும், அப்பகுதியில் துதிக்கை முனை முறிந்த காட்டுயானை சாலையில் உங்களைத் தடுத்து பழங்கள் வாங்கிச் சாப்பிடுகிறதென்றால் அது நிச்சயம் ரிவோல்டாவாகத்தான் இருக்கும்.

15915120921138.jpg

கடவாய் கிழிந்த கடமான்

17-18 ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம் இது. அது ஒரு பெரிய கடமான். கூடலூர் பாடந்துறை அருகே மக்கள் அதைப் பார்த்தார்கள். அதன் கீழ் தாடை சுத்தமாகக் கசகசத்துத் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் நாக்கு இரண்டடிக்கு வெளியே தெரிந்தது. கண்கள் வெளியே பிதுங்கிக்கொண்டிருந்தன.

“காய்வெடிதான் இதற்குக் காரணம். இதைச் செய்த யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்ய வேண்டும். கடமானால் எதுவும் சாப்பிடவும் முடியாது; தூங்கவும் முடியாது. எனவே அதைப் பிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று மக்கள் கோரிக்கையும் வைத்தனர். ஆனால், வன அதிகாரிகளோ அதைக் காப்பாற்ற முன்வரவில்லை. “அந்தக் காயம் நிச்சயம் வெடியினால் ஏற்பட்டதல்ல. சிறுத்தைகள் தாக்கியதால் ஏற்பட்டிருக்கலாம்” என்று பதில் சொல்லியே காலம் கடத்தினார்கள்.

மக்களும் சளைக்கவில்லை. “அந்தக் காயம் காய்வெடியால் ஏற்பட்டதுதான். இந்த வெடிகள் கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டில் ரூ.40, ரூ.50 விலையில் கிடைக்கின்றன. இதே வெடிகள் ஊட்டி, கல்லெட்டி கிராமத்தில் குறைந்த விலைக்குத் தயாரித்து விற்கப்படுகின்றன. இதன் பின்னணியில் இருப்பவர்களை வெடிமருந்து தடைச் சட்டத்தில் போலீஸாரோ, வனத் துறையினரோ கைது செய்யலாம்தான். ஆனால் செய்ய மாட்டார்கள். ஏனென்றால் அதில் வரும் மாமூல் தடைப்பட்டுவிடுமே” என்றெல்லாம் குற்றச்சாட்டினார்கள்.

ஒரு சில நாட்களில் அந்தக் கடமான் வனப் பகுதியில் செத்துக்கிடந்தது. அதை அடக்கம் செய்ததுடன், காய்வெடி சமாச்சாரத்தையும் ஆழக்குழி தோண்டி அடக்கம் செய்துவிட்டனர் வனத் துறையினர்.

15915121231138.jpg

கொதிக்கும் தாரை ஊற்றிய கொடூரர்கள்

இது 6 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை. காலை 11 மணி. 4-வது கொண்டை ஊசி வளைவின் முனையில் 3 யானைகள் நின்றிருந்தன. அங்கு பலாப் பழ வாசனை மூக்கைத் துளைத்தது. யானைகள் ஒவ்வொன்றும் துதிக்கையை உயர்த்தி அந்த வாசனையை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்தன. அதில் சின்ன குட்டிக்குப் படு உற்சாகம். தாய் யானையின் துதிக்கையைப் பிடித்துக்கொண்டு இழுத்தது. தாய்க்கும் வாயிலிருந்து எச்சில் வழிந்தது. அடுத்ததாக நின்ற சகோதரி யானையையும் அழைத்துக்கொண்டு அந்த வளைவில் இறங்கியது பெரிய யானை.

அடுத்த திருப்பத்தில் ஏராளமாய் கடைகள். அதில் கூறு போட்டு, குவிக்கப்பட்டிருக்கும் பலாப் பழங்கள். வெட்டி வைக்கப்பட்ட பழங்கள். அந்த பலாப்பழக் கடைகளை நோக்கித்தான் குன்றுகள் போன்று நகர்ந்தன யானைகள். அதைப் பார்த்ததும் டீக்கடை, பலசரக்கு கடை, உணவு விடுதிகளின் முன்பு நின்றவர்கள், வாகன ஓட்டிகள் எல்லாம் சிதறினர். ஆனால் அந்த பலாப்பழக் கடைக்காரர்களுக்கு மட்டும் உள்ளூரக் கெக்கலிப்பு. குவிக்கப்பட்டிருந்த பலாப் பழங்களுக்குப் பின்னே உயரமான மேஜை அமைத்து, அதற்கு பின்னே உயரமான தடுப்புச் சுவற்றின் மேடை மீது சிலர் அமர்ந்திருந்தார்கள். பக்கத்தில் எரியும் அடுப்பு. அதன் மீது ஒரு டப்பாவில் தார் கொதித்துக்கொண்டிருந்தது.

சுற்றுச்சுவர் மேடை மீது அமர்ந்திருந்தவரின் கையில் ஒரு பத்தடிக்கும் குறையாத சவுக்குக்குச்சி. அதன் முனையில் துணி சுற்றப்பட்டிருந்தது. யானைகள் கடையிலிருந்து பலாவை எடுத்ததுதான் தாமதம்… ஒருவர் தன் பக்கத்தில் கொதித்துக்கொண்டிருந்த தார் சட்டிக்குள் ஒரு கரண்டியைவிட்டு கொதிக்கும் தாரை எடுத்து யானைகளின் மீது வீசினார். சூடுபட்ட யானைகள் வேதனையில் பிளிறத் தொடங்கின. மறுபுறம் ஒருவர் சவுக்குக் குச்சி பந்தத்தைத் தாரில் விட்டு, தீயில் கொளுத்தி, பலாவை எடுத்துக்கொண்டிருந்த யானையின் துதிக்கை மீது அதை அப்படியே செருகினார். ஒரு யானையின் முதுகில் வீசப்பட்ட தார் துளிகள் தீப்பற்றிக்கொண்டது.

யானைகள் வேதனையில் ஓலமிட்டபடி ஓடின. சாலையில் நின்று துடித்தன. கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் அந்த சாலையில் நின்று துடித்துக்கொண்டிருந்தன யானைகள்.

நீலகிரியின் நுழைவு வாயிலாக விளங்கும் பர்லியாறு பாலத்தின் அருகே இதுபோன்ற கொடூரங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அரங்கேறிவந்தன. பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சியை மதிமாறன் என்ற புகைப்படக்காரர் எடுத்து செய்தியாக

வெளியிட, உடனே அங்கே பலாப்பழக் கடைகளைத் தடை செய்தார் நீலகிரி ஆட்சியர்.

அன்றைக்கு பலாப் பழம் சாப்பிட வந்த யானைகள் மீது கொதிக்கும் தாரை வீசிய மனிதன் இன்றைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி வைத்துத் தருகிறான் - அவ்வளவுதான் வித்தியாசம். இன்றைக்கு அன்னாசிப்பழ வெடியில் துவண்ட யானை தண்ணீரில் நின்று தன் சூட்டைத் தணித்து மூச்சை நிறுத்தியது. அன்றைக்குக் கொதிக்கும் தாரால் கருகிய யானைகள் எந்த ஆற்றில் நின்று சூட்டைத் தணித்தனவோ, எங்கே நின்று இறந்தனவோ, யார் கண்டார்?

https://www.hindutamil.in/news/blogs/558293-elephant-killing-continues-6.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Besserer Schutz für Kröten und Frösche | Wasserburg

  Tunnel rettet Population der Kröten - Main-Post

Frösche und Kröten unterwegs - N-LAND

ஜேர்மனியிலை தவளை,முயல்  வீதிக்கு வராமல்பாதுகாத்து வேலி,மதில் எல்லாம் கட்டுகிறார்கள்.அவ்வளவிற்கு பிற உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

இதுகள் என்னடாவெண்டால் மனச்சாட்சியே இல்லாமல் கொல்லுதுகள்.

சீமான் பிற உயிரினங்களின் முக்கியத்துவத்தை பிரச்சாரமாகவே செய்கின்றார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியிலை தவளை,முயல்  வீதிக்கு வராமல்பாதுகாத்து வேலி,மதில் எல்லாம் கட்டுகிறார்கள்.அவ்வளவிற்கு பிற உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

இதுகள் என்னடாவெண்டால் மனச்சாட்சியே இல்லாமல் கொல்லுதுகள்.

சீமான் பிற உயிரினங்களின் முக்கியத்துவத்தை பிரச்சாரமாகவே செய்கின்றார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

Aus dem Wald on Twitter: "Überflieger: Jetzt nutzen sogar #Vögel ...

 

Bayerische Staatsforsten | Pressemitteilungen

 

Grünbrücke gefordert | jagderleben.de

 

Wildbrücke bei Pichl

 

Grünbrücken in Deutschland - Bericht - WWF Jugend

மான்கள், காட்டுப் பன்றிகள் போன்ற.. வன விலங்குகள் விபத்து இல்லாமல், 
வீதியை  கடக்கவும்... முக்கியமான இடங்களில், அவற்றுக்கு என்று... மேம்பாலம் கட்டி இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாயில் இறுக்கமாக டேப் ஓட்டப்பட்டு இரண்டு வாரங்கள் வேதனையுடன் சுற்றித்திரிந்த நாய்.

 

திருச்சூர்

சமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய தேங்காயை சாப்பிட்டதால், வாயில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த துயர சம்பவத்தின் வடு ஆறுவதற்குள் கேரளாவில் மற்றோரு விலங்குக்கு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.


இந்த முறை அவர்களிடத்தில் சிக்கியது ஒரு தெரு நாய்....

இரண்டு வாரங்களுக் முன் திருச்சூர் விலங்குகள் நல அமைப்புக்கு போன் வந்துள்ளது அதில், ஒல்லூர் பகுதியில் தெருநாய் ஒன்றின்  வாயில் யாரோ டேப் ஓட்டி விட்டுள்ளதால் அதனால் தண்ணீர் குடிக்க கூட வாய் திறக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் கூறப்பட்டது.

விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் அந்த நாயை தேடி அலைந்தனர். பல நாள்கள் கழித்து சுமார் மூன்று வயதுடைய அந்த நாய் கடைசியாக திரிசூரில் உள்ள ஒல்லூர் சந்திப்பில் கண்டுபிடிக்கப்பட்டது, அவர்கள் அதை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 நாயின் வாயை சுற்றி பல அடுக்குகளாக பலமாக டேப் ஒட்டப்பட்டிருதுந்தது. இதனால், நாயால் வாயை திறக்க முடியவில்லை. உணவு சாப்பிட முடியாமல் தவித்துள்ளது.

டேப் அழுத்தி ஒட்டப்பட்டதால், அதன் நாசி எழும்புகள் முறிந்து போயுள்ளன. வாயின் மேல் தோல் பகுதியிலும் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.  விலங்குகள் நல அமைப்பினர் நாயை மீட்டு அதன் வாயிலிருந்த டேப்பை கழற்றினர். வாயிலிருந்த டேப்பை கழற்றியதும் சுமார் 2 லிட்டர் தண்ணீரை அந்த நாய் குடித்ததாக விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், ராமச்சந்திரன் கூறுகையில்,' உணவு , தண்ணீர் இல்லாமல் நாய்களால் சில வாரங்கள் வாழமுடியும். தற்போது, கால்நடை மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாயின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து விலங்குகளை துன்புறுத்தாதீர்கள் '' என கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/08152308/Dog-with-tape-wound-tight-around-its-mouth-for-almost.vpf

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் இந்தியாவில்தான் 

 

22 hours ago, குமாரசாமி said:

Besserer Schutz für Kröten und Frösche | Wasserburg

  Tunnel rettet Population der Kröten - Main-Post

Frösche und Kröten unterwegs - N-LAND

ஜேர்மனியிலை தவளை,முயல்  வீதிக்கு வராமல்பாதுகாத்து வேலி,மதில் எல்லாம் கட்டுகிறார்கள்.அவ்வளவிற்கு பிற உயிரினங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.

இதுகள் என்னடாவெண்டால் மனச்சாட்சியே இல்லாமல் கொல்லுதுகள்.

சீமான் பிற உயிரினங்களின் முக்கியத்துவத்தை பிரச்சாரமாகவே செய்கின்றார் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

 

இதே ஜெர்மனி மனிதர்களையும் ஏனைய விலங்குகளையும் கொன்றழிக்கும் பேரழிவு ஆயுதங்களின் ஏற்றுமதியில் 4 ஆவது இடத்தில் இருக்கின்றது.

https://www.army-technology.com/features/arms-exports-by-country/

https://en.wikipedia.org/wiki/Arms_industry

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இதே ஜெர்மனி மனிதர்களையும் ஏனைய விலங்குகளையும் கொன்றழிக்கும் பேரழிவு ஆயுதங்களின் ஏற்றுமதியில் 4 ஆவது இடத்தில் இருக்கின்றது.

இதே ஜெர்மனி சீனாவின் நட்புக்காக அதன் மனித உரிமை மீறல்களை எல்லாம் கண்டு கொள்வதில்லை.  .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நிழலி said:

இதே ஜெர்மனி மனிதர்களையும் ஏனைய விலங்குகளையும் கொன்றழிக்கும் பேரழிவு ஆயுதங்களின் ஏற்றுமதியில் 4 ஆவது இடத்தில் இருக்கின்றது.

https://www.army-technology.com/features/arms-exports-by-country/

https://en.wikipedia.org/wiki/Arms_industry

7 hours ago, விளங்க நினைப்பவன் said:

இதே ஜெர்மனி சீனாவின் நட்புக்காக அதன் மனித உரிமை மீறல்களை எல்லாம் கண்டு கொள்வதில்லை.  .

 

ஜேர்மனி  விவசாயத்துக்காக கிருமிநாசினி பொலிடோலையும் உற்பத்திசெய்து உலகம் முழுக்க விற்பனை செய்யுது. அதை சனம் குடிச்சு செத்தால் ஜேர்மனியையே குறை சொல்லுறது.😜

ஆயுத விற்பனையில் மக்களை எவ்விதத்திலும் கொலை செய்யக்கூடாது என்ற ஒப்பந்த அடிப்படையில் தான் ஆயுதங்களை விற்பனை செய்கின்றது. இப்படியான உரிமைகளை மீறிய படியினால்த்தான் துருக்கியுடன் பாரிய அரசியல் பிளவுகளை ஏற்படுத்தியது.அந்த பிரச்சனைகள் இன்றும் தொடர்கின்றது. அதே போல் சவூதிஅரேபியாவுடன் ஆயுத விற்பனை ஒப்பந்தந்தையும் நிறுத்தி விட்டது.

சீனாவின் மனித உரிமைவிடயத்தில் சீனாவின் எதிரி தலாய்லாமாவிற்கு முழு அரசமரியாதையையும் ஜெர்மனி கொடுத்துக்கொண்டேயிருக்கின்றது. கொங்கொங் மனித உரிமை விடயத்திலும் ஜேர்மனியின் பங்கு அளப்பெரியது.

எரிச்சலுக்கும் ஒரு அளவிருக்கு 😎

  • கருத்துக்கள உறவுகள்

102315741_783527588720155_2580784915545295524_o.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeEQ-k1uryayTmrpVeGnffiAPTE6fHA55xA9MTp8cDnnEG5ZeCCrSEIUg-CFJl5XuamCaDfSLjJozyNqPxsUX92B&_nc_ohc=P36iWP8zSGQAX8On5OY&_nc_ht=scontent-frt3-1.xx&oh=5d3e55b1398738703742a1c4b567c026&oe=5F0433AC

யானைகள்... சிலுவையை உடைத்துவிடக் கூடாதென்று, 
சிலுவையில்... கூரிய வாள்களை வைத்து செய்யும், 
இந்த பாதக செயலால்... தும்பிக்கை இழந்த யானைகளின் வேதனையை இறந்தவன் அறிவானா? 
இல்லை இதை செய்தவன் அறிவானா?

சுப்ரமணிய பிரபா

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2020 at 10:15, பெருமாள் said:

இவங்கள் யானையை வைத்து பிழைப்பு காட்டும் திரிச்சூர் பூரம் போன்ற நிகழ்வுகள் தடை செய்யணும் அப்பத்தான் வழிக்கு  வருவான்கள் .

இந்த பீட்டா போண்றதுகள் ஜல்லிக்கட்டுக்கு மாத்திரம் தாங்களும் மாடுகள் போல் தமிழ்நாட்டில் முட்டி மோதிக்கொள்வார்கள் கேரளப்பக்கம்  இந்த யானை விடயங்களில் தலை வைத்தும் படுக்க மாட்டினம் தமிழன் இளிச்சவாய் என்று தெரிந்து விட்டுத்தாக்கும் .

தமிழகம் ஆகக் கீழே உள்ளதால் கிந்தியன் முதல் மலையாளிவரை போட்டுத் தாக்கிறான். பீட்டாக்களுக்கு மாடுதான் பிடிக்குமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

102315741_783527588720155_2580784915545295524_o.jpg?_nc_cat=104&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeEQ-k1uryayTmrpVeGnffiAPTE6fHA55xA9MTp8cDnnEG5ZeCCrSEIUg-CFJl5XuamCaDfSLjJozyNqPxsUX92B&_nc_ohc=P36iWP8zSGQAX8On5OY&_nc_ht=scontent-frt3-1.xx&oh=5d3e55b1398738703742a1c4b567c026&oe=5F0433AC

யானைகள்... சிலுவையை உடைத்துவிடக் கூடாதென்று, 
சிலுவையில்... கூரிய வாள்களை வைத்து செய்யும், 
இந்த பாதக செயலால்... தும்பிக்கை இழந்த யானைகளின் வேதனையை இறந்தவன் அறிவானா? 
இல்லை இதை செய்தவன் அறிவானா?

சுப்ரமணிய பிரபா

நாங்கள் நாகரீகமடைய இன்னும் அதிக காலம் இருக்கிறது. 😢

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

யானைகள்... சிலுவையை உடைத்துவிடக் கூடாதென்று, 
சிலுவையில்... கூரிய வாள்களை வைத்து செய்யும், 
இந்த பாதக செயலால்... தும்பிக்கை இழந்த யானைகளின் வேதனையை இறந்தவன் அறிவானா? 
இல்லை இதை செய்தவன் அறிவானா?

இதுவும் வேறு நடைபெறுகிறதா 😟

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.