Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

70/80 களில்  யாழ்ப்பாணத்தில் இருந்த  Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1970 1980 களில்...

யாழ்ப்பாணத்தில்... இருந்த,  Restaurant களின்

பெயர் விபரமும்விலைப் பட்டியலும்:grin:

*கோட்டை முனியப்பகோயில்

தேங்காய்ச் சொட்டு.

 *பரணி ஹோட்டல்*                       

அப்பம்.

 *சிற்ரி பேக்கறி*                               

 கால், றாத்தல்... பாணும், பருப்பும்....

 *சுபாஸ் கபே*                                 

 ஐஸ்கிரீம்.

*றிக்கோ கோப்பி பார்*                            

 றோல்ஸ்கோப்பி.

 *மலாயன் கபே*                               

 உளுந்து வடை  போளி.

 *தாமோதர விலாஸ்*                      

 நெய் தோசை.

*சந்திரா ஐஸ் கிறீம்*                      

ஐஸ் சொக்.

 *கொழும்பு றெஸ் ரோறன்ட்*          

  இறால்கறி, குளம்பு.

 *பிளவ்ஸ்*                                         

 Beef றோஸ்.

(5 சதம்)         

 *மொக்கன் கடை*                             

 புட்டு, ஆணம், மட்டிச் சம்பல்.

*சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, 
கல்லாப்  பெட்டிக்குள், போட்டு விட்டு...
அவர் தாற,  மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.
:grin:

*முனீஸ்வரா கபே*                       

    புட்டு, இடியப்பம், புளிச்சொதி,  தாளித்த சம்பல் (கடுகு தூக்கல்).

(வெலிங்டன் சந்தி)

*லிங்கம் கூல்பார்*                             

 சர்பத் , இதரை வாழைப்பழம், பீடா..........

(வெலிங்டன் சந்தி)

*கபே பாரத்*                                            

 அப்பம், பிளேன் ரீ.

(ஆரிய குளம் சந்தி)                           

*ஒரியென்டல் பேக்கரி*                     

 சங்கிலிப் பாண்.

 *சொக்கன் கடை*                                   

கடலை வடை.

(3 - 5 சதம்பிளேன் ரீ

(கைலாச பிள்ளாயார் கோயில்)

உங்களுக்கு தெரிந்தகடைகளின் பெயரை... கூறுங்களேன்😁 :grin:

Edited by தமிழ் சிறி

  • Replies 56
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

ஓம்... ஈழப்பிரியன், அந்தக் கடையும் இப்ப தான், நினைவு வருகுது. :)

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கன் கடை, ரொட்டியும், மாட்டு இறைச்சி ரோஸ்டுக்கும் தானே பெயர் போனது.

  • கருத்துக்கள உறவுகள்

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

  • கருத்துக்கள உறவுகள்

பரீக்ஷித்து விலாஸ்.....!

தாமோதர விலாசுக்கு முன்பாக.

தோசை இடியப்பம்,சைவச் சாப்பாடு.....(முதலாளி ஒரு  மலையாளி. கடையின் பின்னால் அவரே எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் புக்கை கட்டுதல் முதலியன......காசு கொடுக்காமல் சாப்பிட்டாலும் பிரச்சினை இல்லை.அவரே முறித்து அவரே காட்டும் போட்டு விடுவார்)........!

சீதாஸ் கஃபே.....!

ராஜா தியேட்ட்ருக்கு முன், வின்ஸருக்கு அருகில்.....!

வழமையான உணவு வகைகள்.....!

லக்ஸ்மி விலாஸ் .....!

தாமோதர விலாசுக்கு அருகில்.....!

டிபன் சாப்பாடுகள் மற்றும் போண்டா,வடை ,சுசியம், போளி முதலியன.....!

👍  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மொக்கன் கடை, ரொட்டியும், மாட்டு இறைச்சி ரோஸ்டுக்கும் தானே பெயர் போனது.

தம்பி நாதமுனி... நீங்கள் சொல்வது, 1980´ களில்... இருந்திருக்கலாம். :)
ஆனால்.... 1970´ களில்...  "மொக்கன் கடை" யில், கோதம்ப மாவில்... 
தேங்காய்ப் பூ,  கலந்து  அவிக்கும் புட்டும், அவர்கள் வைக்கும்....
கறி, குழம்பு, சொதி.... எல்லாமே... பிரபல்யமாக இருந்தது.
அதனை... இப்ப, நினைத்தாலும்... நாக்கில்👅, ஜலம்  ஊறும். 😅

மொக்கன் கடையில்.. புட்டு, சாப்பிட வென்றே...  
சனம், பின்னேரம் 7 மணியிலிருந்து, "கியூ" வரிசையில்... காத்து இருப்பார்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

இங்கு அதிகம் போகவில்லை.நான் மட்டுமல்ல காகம் குருவியும்தான் தோழர். கிழவி (ஒளவையார்) கையில தடியோட நிக்குது.....!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

Suresh Doss on Twitter: "Rolex Hotel. A legendary hole-in-the-wall ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

6422516251_0985452a08_o.jpg

இந்த கொட்டல் 70/80 களில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவில்லையா தோழர்..? 

தோழர்  புரட்சி.... இந்தப் படத்தை, தேடி எடுத்தமைக்கு, மிக்க நன்றி. ❤️
யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு, நேரே முன்பாக உள்ள, உணவகங்களிலில்...
கண்ட படி, ஒருவரும்... சாப்பிட மாட்டார்கள்.

காரணம்...  "கிருமி"  தொத்தி விடும்... என்று, யாழ்ப்பாணத்தானுக்கு  பயம். 
அந்த, ஆஸ்பத்திரியில்... நோயாளர்களுக்கு, இலவசமாக கொடுக்கும் உணவையே...
பலர் சாப்பிடாமல், வீட்டில் இருந்து... இடியப்பமும், சொதியும், பத்தியக் கறியும்... 
கொண்டு வந்து... கொடுப்பார்கள்.

அந்த ஆஸ்பத்திரி... வாசலில், நிற்கும் காவலாளியை பார்க்க, பாவமாக இருக்கும்.
மத்தியானம்  12 மணிக்கு முன்னம், ஒருவரையும் உள்ளே விடப் படாது.

11 மணியிலேருந்தே.... நம்ம சனம், அவருடன், வாக்கு வாதத்தில் ஈடுபட தொடங்கி விடும்.
11:30 மணிக்கு.... அந்த வாசலில், ஆயிரம் சனம் அளவில் குவிந்து இருக்கும்.
எல்லாவற்றையும்... சமாளித்து,  அனுப்பும் அந்த மனிதர்களும் போற்றுதலுக்குரியவர்கள். 

பழையவற்றை...  மீண்டும் நினைக்கும் போது, 
ஆயிரம்,  துணை நினைவுகள்... மனதில் வந்து போகின்றது. :) ☺️

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 *மொக்கன் கடை*                             

 புட்டு, ஆணம், மட்டிச் சம்பல்.

*சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, 
கல்லாப்  பெட்டிக்குள், போட்டு விட்டு...
அவர் தாற,  மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.
:grin:

அதனாலோ அந்த பெயர் வந்தது மொக்கன் கடை என்று ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கறி, குழம்பு, சொதி.... எல்லாமே... பிரபல்யமாக இருந்தது.
அதனை... இப்ப, நினைத்தாலும்... நாக்கில்👅, ஜலம்  ஊறும். 😅

குறுமா, ரசம் பெயர் போனது.

கோட்டல் பரடைஸ் வண்ணாங்குளம் முன்பாக.
24 மணிநேரமும் திறந்திருக்கும்.

53 minutes ago, தமிழ் சிறி said:

தோழர்  புரட்சி.... இந்தப் படத்தை, தேடி எடுத்தமைக்கு, மிக்க நன்றி. ❤️
யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு, நேரே முன்பாக உள்ள, உணவகங்களிலில்...
கண்ட படி, ஒருவரும்... சாப்பிட மாட்டார்கள்.

இது சுபாஸ் கபே க்கு பக்கத்தில் என்று தான் ஞாபகம்.
விஜேகுமாரணதுங்க யாழ் வந்தநேரம் இங்கு தான் அடிக்கடி கூட்டி வருவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

பரீக்ஷித்து விலாஸ்.....!

தாமோதர விலாசுக்கு முன்பாக.

தோசை இடியப்பம்,சைவச் சாப்பாடு.....(முதலாளி ஒரு  மலையாளி. கடையின் பின்னால் அவரே எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் புக்கை கட்டுதல் முதலியன......காசு கொடுக்காமல் சாப்பிட்டாலும் பிரச்சினை இல்லை.அவரே முறித்து அவரே காட்டும் போட்டு விடுவார்)........!

சீதாஸ் கஃபே.....!

ராஜா தியேட்ட்ருக்கு முன், வின்ஸருக்கு அருகில்.....!

வழமையான உணவு வகைகள்.....!

லக்ஸ்மி விலாஸ் .....!

தாமோதர விலாசுக்கு அருகில்.....!

டிபன் சாப்பாடுகள் மற்றும் போண்டா,வடை ,சுசியம், போளி முதலியன.....!

👍  😁

சுவி... பரீக்ஷித்து விலாஸ்.... நன்று அறிமுகமுகமான பெயர்.
உள்ளே... போய் சாப்பிடும், சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.

தாமோதர விலாஸ்...      
யாழ். இந்துக் கல்லூரியில்... என்னுடன், ஒரே வகுப்பில்... படித்த,
சக மாணவனின்... தகப்பன் நடத்திய கடை என்பதாலும்,
அங்கு சென்றால், விசேட கவனிப்பு இருக்கும், என்பதாலும்....  
மற்ற சைவக் கடைகளுக்கு போகும், வாய்ப்பு அரிதாகவே... இருந்து விட்டது.

பிற் குறிப்பு:  "மலயான் கபே",  "சுபாஷ் கபே" ... "தாமோதர விலாஸ்"... என்று,
பிரபலபமான  சாப்பாட்டுக்கடை  முதலாளிகளின்  மகன் மாரும், 
என்னுடன்.... ஒரே...  வகுப்பில் தான் படித்தவர்கள்.  

அதனை... நினைக்க, ஆச்சரியமாக...  உள்ளது.   :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அதனாலோ அந்த பெயர் வந்தது மொக்கன் கடை என்று ?

ஓம்... பெருமாள்.  :)
முஸ்லீம்  இனத்தை.. சேர்ந்த ஒருவர், நடத்திய கடைதான்.. அது.
சமையல்... திறமாக செய்தாலும், கணக்கு.. வழக்கு பார்ப்பதில்.. சரியான "மொக்கன்." 

பிற் குறிப்பு: இப்ப... அவரின் பிள்ளைகள், இருந்தால்...
வட்டியும், குட்டியும்... சேர்த்து வசூலிப்பார்கள்.   :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

குறுமா, ரசம் பெயர் போனது.

கோட்டல் பரடைஸ் வண்ணாங்குளம் முன்பாக.
24 மணிநேரமும் திறந்திருக்கும்.

இது சுபாஸ் கபே க்கு பக்கத்தில் என்று தான் ஞாபகம்.
விஜேகுமாரணதுங்க யாழ் வந்தநேரம் இங்கு தான் அடிக்கடி கூட்டி வருவார்கள்.

ஈழப்பிரியன்....  குறுமா ரசத்தைத் தான்... 
வாசகர்கள். புரியும் படியாக, "சொதி"  என... குறிப்பிட்டேன். :)

அப்பவும், இப்பவும்... தமிழ் வீடுகளில்.... நமது  "இல்லத்து அரசிகள்"... 
"குறுமா ரசம்"  செய்வதைப் பற்றி கேள்விப்  படவில்லை. 

கஸ்தூரியார் வீதியில் இருந்த,   "கோட்டல் பரடைஸ்" நினைவில் வருகின்றது.
வல்வெட்டி துறையை சேர்ந்தவர்கள்,  நடத்திய கடை என கேள்விப் பட்டேன்.

அந்தக் கடை வாசலில்.... வாடிக்கையாளரை கவர்வதற்காக...
அவர்களுக்கு சொந்தமான, சிலோன் (---) என்ற வாகனத் தகட்டு  இலக்கத்தில் 
உதாரணத்துக்கு...  கண்ட நினைவு. 

"ஹோட்டல் பாரடைசுக்கு" முன்பாக... பெரிய குளம் ஒன்று, 
புற்களுடன் பசுமையாக  இருந்தது.
பலர்... அதில்,  உடுப்பு தோய்த்து.... அந்தப் புல் வெளியில் காய விட்டதை,
என் கண்ணால்... சிறு வயதில், பார்த்தும்  இருக்கின்றேன்.

நான்... வாலிப வயதை எட்டும் போதே... 
அந்தப் புல் வெளிகள்... காணமால் போய், அந்த இடத்தில்....
"பூம் புகார்" என்ற... உணவகம் வந்தது.

எமது... இயற்கை... எம் கண் முன்னே.... 
எப்படி, அபகரிக்கப் படுகின்றது, என்பதைக் காண வேதனையாக உள்ளது. 

யாழ். இந்துக் கல்லூரியில்.... கணபதிப்பிள்ளை  என்ற தமிழ் ஆசிரியர்,
மாணவராகிய எமக்கு.... பாடம் எடுக்கும் போது...   
தான்... சிறு வயதில் இருந்த போது.... 
வெலிங்டன் தியேட்டர் சந்தி (லிங்கம் கூல் பார்) அங்காலை, 
ஆரிய குளம் எல்லாம், வயல் வெளிகளாம்... என்று சொன்னவர்.

நாங்கள்.... எங்கள் மண்ணை, தினமும்... எவ்வளவு இழக்கின்றோம்.
என்பதை நினைக்க... வேதனை தான், மிஞ்சம். 😰

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஓம்... பெருமாள்.  :)
முஸ்லீம்  இனத்தை.. சேர்ந்த ஒருவர், நடத்திய கடைதான்.. அது.
சமையல்... நிறமாக செய்தாலும், கணக்கு.. வழக்கு பார்ப்பதில்.. சரியான "மொக்கன்." 

பிற் குறிப்பு: இப்ப... அவரின் பிள்ளைகள், இருந்தால்...
வட்டியும், குட்டியும்... சேர்த்து வசூலிப்பார்கள்.   :grin:

சில வியாபாரங்களில் விளம்பரம் செய்வதை விட விளம்பரத்துக்கு செய்யும் சிலவுக்கு விலையை குறைத்து கொடுப்பது ஒருவகையான விளம்பர உத்தி .அதே போல் மொக்கன் கடை மூணாவும் அநியாயத்துக்கு கணக்கு வழக்கு தெரியாத அப்பாவி போல் நடித்து தனது கடை வியபாரத்தை பெருக்கியும் இருக்கலாம் .அவரின் கடையில்  முஸ்லிம்கள் வாடிக்கையாளராக இருந்து இருந்தால் ஓரளவுக்கு நம்பலாம் .

மாட்டை உண்ணுவது இழுக்கு பாவம் எனும் ஊரில் தங்கள் உணவுக்கடைகள்  மூலம் மாற்றியமைத்த பெருமக்கள் அவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிகளா
யாழ் இந்து பெருமக்களா

பத்மாகபேயை எப்படி மறந்தீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

அட பாவிகளா
யாழ் இந்து பெருமக்களா

பத்மாகபேயை எப்படி மறந்தீர்கள்?

அதானே.... அந்தக் காலத்திலேயே.....
வடை, தோசை, இட்டலி... போன்றவைக்கு, தேவையான உளுந்தை அரைக்க,
மெசின் நெடுக, ஓடிக் கொண்டே இருக்கும்.
அந்தக் கடைக்குப் பின்... உளுந்து மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டு, 
சிறிய... ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி வந்தது.. பத்மா கபே.

கந்தர்மட சந்தியில்.... இருந்த, சின்னத்தம்பி கடையின் சுத்தம், சுகாதாரம்...
இலங்கையில்.. எங்கும் இருக்காது. அப்பிடி... எல்லாம், பளிச் என்று, மினுங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,

சிங்களவவர்களில் உணவகங்கள் அக்காலத்தி யாழில் இல்லையா? விகாரைகள்/சிங்கள பாடசாலைகள் அங்கு அக்காலத்தில் இருந்தனவே. அவர்களது சமையலான பருப்பு கறி, கருவாடு பிரட்டல், ஈர பிலாக்கை பால்கறி, கீரை சுண்டல் போன்றவை கிடைக்குமா?. மேலும் யாழில் சம்பா அரிசி உண்ணுவது குறைவு என்று நினக்கின்றேன். சிகப்பரிசியே சமைக்கப்படும் அது தடிப்பமாக இருக்கும். 

பேக்கரிகள் பொதுவாக சிங்களவர்களே நடத்தியிருப்பார்கள் என நினக்கின்றேன். சிரிமாவின் காலத்தில் அங்கும் மக்கள் கியூவில் நின்றார்களா?  ‌

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

நிறைய பேக்கரிகள் இருந்தன.சிறிய சிறிய தேநீர்க்கடைகள் இருந்தன.பெரிய கடைகள் என்று எதுவும் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தோழர்  புரட்சி.... இந்தப் படத்தை, தேடி எடுத்தமைக்கு, மிக்க நன்றி. ❤️
யாழ்ப்பாண பெரிய ஆஸ்பத்திரிக்கு, நேரே முன்பாக உள்ள, உணவகங்களிலில்...
கண்ட படி, ஒருவரும்... சாப்பிட மாட்டார்கள்.

காரணம்...  "கிருமி"  தொத்தி விடும்... என்று, யாழ்ப்பாணத்தானுக்கு  பயம். 
அந்த, ஆஸ்பத்திரியில்... நோயாளர்களுக்கு, இலவசமாக கொடுக்கும் உணவையே...
பலர் சாப்பிடாமல், வீட்டில் இருந்து... இடியப்பமும், சொதியும், பத்தியக் கறியும்... 
கொண்டு வந்து... கொடுப்பார்கள்.

அந்த ஆஸ்பத்திரி... வாசலில், நிற்கும் காவலாளியை பார்க்க, பாவமாக இருக்கும்.
மத்தியானம்  12 மணிக்கு முன்னம், ஒருவரையும் உள்ளே விடப் படாது.

11 மணியிலேருந்தே.... நம்ம சனம், அவருடன், வாக்கு வாதத்தில் ஈடுபட தொடங்கி விடும்.
11:30 மணிக்கு.... அந்த வாசலில், ஆயிரம் சனம் அளவில் குவிந்து இருக்கும்.
எல்லாவற்றையும்... சமாளித்து,  அனுப்பும் அந்த மனிதர்களும் போற்றுதலுக்குரியவர்கள். 

பழையவற்றை...  மீண்டும் நினைக்கும் போது, 
ஆயிரம்,  துணை நினைவுகள்... மனதில் வந்து போகின்றது. :) ☺️

சிறி,
இந்த கடை நாங்கள் திரிந்த 80 களின் கடைசியிலும் 90களிலும் மிகவும் பிரபல்யம். இவர்களது பிரியாணியும் மட்டன் ரோல்உம் சாப்பிடாமல் எங்களது Tuition  வாழ்க்கை போகாது. அந்த வயதில் எமது பார்ட்டிகள்கூட ஒன்று இங்கே அல்லது லிங்கம் கூல்பார் இல் தான் நடக்கும்   

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

சிறி,
இந்த கடை நாங்கள் திரிந்த 80 களின் கடைசியிலும் 90களிலும் மிகவும் பிரபல்யம். இவர்களது பிரியாணியும் மட்டன் ரோல்உம் சாப்பிடாமல் எங்களது Tuition  வாழ்க்கை போகாது. அந்த வயதில் எமது பார்ட்டிகள்கூட ஒன்று இங்கே அல்லது லிங்கம் கூல்பார் இல் தான் நடக்கும்   

நீர்வேலியான் இது இருந்த இடம் ஞாபகம் இருக்கிறதா?
ஆஸ்பத்திரி முன்பாக இருந்ததாக சிறி சொல்கிறார்.
ஆனால் சுபாசுக்கு போட்டியாக பஸ்நிலையம் முன்பாகவே இருந்ததாக நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

Suresh Doss on Twitter: "Rolex Hotel. A legendary hole-in-the-wall ...

தோழர் , மட்டன் சாப்ஸ் , முட்டை , இடியாப்பம் , தேங்காய் சம்பல்..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் இது இருந்த இடம் ஞாபகம் இருக்கிறதா?
ஆஸ்பத்திரி முன்பாக இருந்ததாக சிறி சொல்கிறார்.
ஆனால் சுபாசுக்கு போட்டியாக பஸ்நிலையம் முன்பாகவே இருந்ததாக நினைவு.

இது ஆஸ்பத்திரியில் இருந்து தள்ளியே இருந்தது, இப்பவும் அதே இடத்தில இருக்கிறது. கஸ்துரியார் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் இடத்தில இருந்தது, சுபாஷ் ஐஸ் கிரீம் கஃபே பக்கம்   

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலிருக்கும்போது கடைகளில் சாப்பிட்டது குறைவு. படிக்கும் போது பெடியளுட்ன் போய் சங்கானையிலிருக்கும் ஒரு சாப்பாட்டுக்கடையில் கொத்து ரொட்டி சாப்பிடுவது வழக்கம். கடைகளின் பெயர்கள் ஞபகமில்லை, வேறு கடைகளுக்கு போனாலும் பிளோன்ரி ஒரு வடை, அவ்வளவுதான், கொழும்பு வந்தபின்தான் கடைச்சாப்பாடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.