Jump to content

யாழ்ப்பாணத்திலிருந்து பாரம்பரிய சமையல் முறைகளை மையப்படுத்தி வெளியிடப்படும் யூடூப் காணொளிகள் உங்கள்ஆதரவுக்காக

Recommended Posts

Posted
18 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள்.. சாப்பிடும் போது, காளான் கறிக்குள் போட்ட கருவேப்பிலையை... 
ஏன்  கோப்பையின், கரையில்... எடுத்து வைத்தீர்கள்?  :grin:

நாங்கள்... கறிக்கு போட்ட, கறிவேப்பிலையையும்... சப்பி சாப்பிடுவோம்.  🤣

சில வருடங்களின் முன் ஒரு முகப்புத்தகபதிவில் கறிகளுக்குள் போடும் கறிவேப்பிலைகளை சாப்பிட கூடாது எனென்றால் கறிவேப்பிலைக்கு நச்சு தன்மைகளை உறிஞ்சும் திறன் உண்டு. அது காய்கறிகளில் உள்ள நச்சுக்களை உறிஞ்சுவதால் கறிக்குள்  போட்ட கறிவேப்பிலை சாப்பிட கூடாதென்று இருந்தது.அதிலிருந்து உண்பதில்லை. அந்த தகவலின் உண்மை தன்மை தெரியாது. பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடும் பழக்கம் இருக்குறது என்பதால் இதை தவிர்த்தே உண்பேன்.

  • Replies 146
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, Sanchu Suga said:

சில வருடங்களின் முன் ஒரு முகப்புத்தகபதிவில் கறிகளுக்குள் போடும் கறிவேப்பிலைகளை சாப்பிட கூடாது எனென்றால் கறிவேப்பிலைக்கு நச்சு தன்மைகளை உறிஞ்சும் திறன் உண்டு. அது காய்கறிகளில் உள்ள நச்சுக்களை உறிஞ்சுவதால் கறிக்குள்  போட்ட கறிவேப்பிலை சாப்பிட கூடாதென்று இருந்தது.அதிலிருந்து உண்பதில்லை. அந்த தகவலின் உண்மை தன்மை தெரியாது. பச்சையாக கறிவேப்பிலை சாப்பிடும் பழக்கம் இருக்குறது என்பதால் இதை தவிர்த்தே உண்பேன்.

இதென்ன புதுக்கதையாய் கிடக்கு....:shocked:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Sanchu Suga said:

நன்றி. கைத்தொலைபேசியில் யூரியூப் லிங்கை எடுத்து யாழில் போட்டால் Embed வியூ வராது. Desktop இல் போட்டால் வருகிறது.

கைத்தொலைபேசியில் இருந்தும் அதே மாதிரி முயற்சி பண்ணுங்கள்.
ஒரு தடவை முடியலை என்றால் எடிற்றை அழுத்தி மீண்டும் மீண்டும் முயற்சி பண்ணுங்கள்.

Posted
23 hours ago, தமிழ் சிறி said:

மழை காலங்களில்... வீட்டு  வளவுக்குள், பெரிய வெள்ளை நிற காளான் வளரும்.
அது பேய்க் காளான். கிட்ட போய் தொட்டுப் போடாதேங்கோ... 
என்று அப்பம்மா, பயப்பிடுத்துவா. :)

நானும் பார்த்திருக்கிறேன். பெரிய குடை போல மண்ணிறத்தில் மழைக்காலத்தில் வரும். அது விசத்தன்மை கொண்டது எனவும் சொல்லக்கேள்விப்பட்டிருக்கிறேன்.

19 hours ago, suvy said:

இடி இடித்து மலை பெய்யும் காலங்களில்தான் கருக்கலில் போனால் மொட்டுக்காளான் பார்த்து பார்த்து பிடுங்கிக் கொண்டு வரலாம்.பழைய இடிந்து கிடக்கும்  மண்சுவர் வீடுகளிலும் காளான் பூத்து இருக்கும்.இறைச்சி போலவும் அதைவிடவும் தனி சுவையுடன் இருக்கும்.....!

இப்பவும் வீட்டில் விசேஷமாய் எல்லோரும் மச்சம் மாமிசம் செய்து சாப்பிடும் நேரங்களில் மனிசிக்கு மனசு தாங்காது, (என்னை நினைத்துத்தான்.எல்லா விலங்குகளையும் வஞ்சகமின்றி விழுங்கின மனுஷன் இப்ப முயல் ஆடு போல இலை குலையும் கேரட்டும் தின்னுதே என்று ). உடனே அவவின் தெரிவு காளானும் அல்லது சோயா மீற்றும்தான்.அதை விதம் விதமாய் குழம்பும் வைத்து பொரித்தும் தருவா.....!  😁

ஏன் சைவத்துக்கு மாறினீர்கள்?

17 hours ago, யாழ் அரியன் said:

காளான் கறி. மம்மம்மம சாப்பிட்டதே இல்லை. சரி அக்கா அந்த கப்பியலுக்கு எண்ணை விடுங்கோ. அயலட்டையில் சனம் தூங்கேலாது.

முந்தி என்ர  வீட்டுக்குப் பக்கத்தில இருந்த நண்பன் விடிய 4 மணிக்கு எழும்பி படிக்க தொடங்கிடுவான். அவன் முகம் கழுவ தண்ணி அள்ளுற சத்தம் கேட்க அம்மா தொடங்கிடுவா "உங்கா அந்தப் பிள்ள படிக்க எழும்பிடுத்து" என  பிறகு ஒன்றும் செய்யேலாமல் நான் இரவு களவாக இறங்கி கப்பியலுக்கு எண்ணை ஊத்தினான். 

சமையல் நல்லாயிருக்கு. சிலவற்றில் கொஞ்சம் கவனமெடுங்க அக்கா. 

கப்பி சத்தத்தை அலாரம் மாதிரி யோசித்து எழும்பி படிக்காமல் எண்ணை ஊற்றி அடக்கியிருக்கிறியள் :)

எவற்றில் கவனம் எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் விபரமாக் சொல்லலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, தமிழ் சிறி said:

srithar20194: அறிவியல் அறிவோம்; கரையான் ...

உடையார்,  கறையான் புற்றுக்குள்.... பாம்பு இருக்காது என்பது, 100 வீதம் உண்மையா?
உண்மை என்றால்... இன்று, ஒரு புதிய தகவலை தெரிந்து கொண்டேன்.

11 hours ago, ஈழப்பிரியன் said:

கறையான் தான் புத்தொடுக்கும்.பின்னர் அந்தப் புத்துக்குள் பாம்பு போய் இருக்கும்.
என்று எண்ணுகிறேன்.
எமது வீட்டிலேயே இப்படி புத்து இருக்கும். மெழுகுவதற்கும் அடுப்பு செய்வதற்கும் வெட்டி எடுப்போம்.

அப்ப மூத்திர ஒழுங்கை.

நீங்கள் இருவரும் சொல்வது சரி, நான் சொல்ல வாறது, கறையான் இருந்தால் அந்த பக்கம் பாம்பு போகமாட்டாது, கறையான் காலிசெய்துவிட்டு போன புற்றுகளுக்குள் பாம்பு பதுங்கிவிடும்

"கரையான் புற்றெடுக்க, பாம்பு வந்து குடி கொண்டதே" என்ற பழமொழி முதல் கேள்விக்கு பதில் தந்தது...
 
புற்றில் பாம்பு இருக்குமா? என்றால் இருக்கலாம், இல்லாமலும் போகலாம்!
ஒரே குழப்பமா இருக்கே இந்த பதில்...
ஆமாங்க! பொதுவாக பாம்புகள் மறைந்து பதுங்கி வாழும் தன்மை கொண்டது. வெட்ட வெளிகளில் பார்ப்பது அறிது. அவைகள் மறைந்து கொள்ள ஒரு புதர், விறகு அல்லது கற் குவியல் போல இந்த புற்றும் உதவுகிறது.�
கறையான் இருக்கும் புற்று என்றால் கறையான்கள் ஒன்று சேர்ந்து பாம்பை விரட்டி விடும். ஆகையால் கரையான் விட்டு சென்ற புற்றுகளில் பாம்புகள் அவ்வப்போது பதுங்கி கொள்ளலாம்."

https://www.globalnaturefoundation.org/______-506.html

Posted
19 hours ago, Sanchu Suga said:

பாம்புகள் எங்கள் இடத்தில் அதிகம். அதற்காகவே சில "கினி கோழி" களை வளர்க்கிறோம். அவை குட்டிப்பாம்புகளை சாப்பிட்டுவிடும்.

ம்
நல்ல ஐடியா.
சாதாரண கோழிகள் கூட பாம்புக் குட்டிகளை சாப்பிடுவதை பார்த்திருக்கேன் 

  • 2 weeks later...
Posted

எள்ளுப்பாவும் வீடியோவும் சூப்பர்!

Posted
On 14/7/2020 at 21:48, Kali said:

எள்ளுப்பாவும் வீடியோவும் சூப்பர்!

மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/7/2020 at 03:59, Sanchu Suga said:

காணொளிகளில் தமிழிலும் எழுதினால் நன்றாக இருக்குமே?

ஒவ்வொரு தடவையும் லைக் போடும் போது மனதுக்கு நெருடலாக உள்ளது.

Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

காணொளிகளில் தமிழிலும் எழுதினால் நன்றாக இருக்குமே?

ஒவ்வொரு தடவையும் லைக் போடும் போது மனதுக்கு நெருடலாக உள்ளது.

இறுதியாக இணைத்த காணொளிகளை தமிழ் மொழியிலும் போட்டுள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/7/2020 at 13:28, Sanchu Suga said:

இறுதியாக இணைத்த காணொளிகளை தமிழ் மொழியிலும் போட்டுள்ளேன். 

இல்லையே🤔

என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க😂.

நன்றாக இருக்கு அப்படி தண்ணி வரும் முறை, மினக்கெட்டு எடுக்கின்றீர்கள், எடுத்தவுடன் யாழில் போட்டால் பலர் பார்ப்பார்கள்,

உங்கள் பல பதிவுகளை இன்னும் யாழில் காணவில்லை🤔.

உங்கள் தோட்டமும் அழகு. சின்னனில் குடித்த தேநீர், ஞாபக படுத்திவிட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/7/2020 at 22:28, Sanchu Suga said:
On 15/7/2020 at 19:52, ஈழப்பிரியன் said:

காணொளிகளில் தமிழிலும் எழுதினால் நன்றாக இருக்குமே?

ஒவ்வொரு தடவையும் லைக் போடும் போது மனதுக்கு நெருடலாக உள்ளது.

இறுதியாக இணைத்த காணொளிகளை தமிழ் மொழியிலும் போட்டுள்ளேன். 

இல்லை இல்லை இல்லை.
இப்போதும் முற்று முழுதாக ஆங்கிலத்திலேயே பதிகிறீர்கள்.

3 minutes ago, உடையார் said:
On 15/7/2020 at 22:28, Sanchu Suga said:

இறுதியாக இணைத்த காணொளிகளை தமிழ் மொழியிலும் போட்டுள்ளேன். 

இல்லையே🤔

Posted

On 22/7/2020 at 05:48, உடையார் said:

இல்லையே🤔

என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க😂.

நன்றாக இருக்கு அப்படி தண்ணி வரும் முறை, மினக்கெட்டு எடுக்கின்றீர்கள், எடுத்தவுடன் யாழில் போட்டால் பலர் பார்ப்பார்கள்,

உங்கள் பல பதிவுகளை இன்னும் யாழில் காணவில்லை🤔.

உங்கள் தோட்டமும் அழகு. சின்னனில் குடித்த தேநீர், ஞாபக படுத்திவிட்டீர்கள். 

யூரியூப்பில் தமிழ் மொழியை தெரிவு செய்தால் காணொளிகளின் தலைப்பு எல்லாம் தமிழிலேயே வரும் படி மாற்றிவிட்டேன். இனி வரும் காணொளிகளை மறக்காமல் கட்டாயம் தமிழிலும் போடுகிறேன்.

//என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க😂.//

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று செய்தது அது. "எல்லாம் பேய்க்காட்டு வேலை" என்று வீட்டிலிருக்கும் பெரிசுகளே சொல்லிவிட்டார்கள்.  😁

யாழில் தொடர்ந்து இணைப்பதில் சின்ன தயக்கம். உங்கள் ஆதரவுக்காக என்று எவ்வளவு நாளைக்குத்தான் கேட்பீர்கள் என்று யாராவது கோபப்பட்டாலும் என்று தான்.

On 22/7/2020 at 05:50, ஈழப்பிரியன் said:

இல்லை இல்லை இல்லை.
இப்போதும் முற்று முழுதாக ஆங்கிலத்திலேயே பதிகிறீர்கள்.

இப்போது யூரியூப்பில் தமிழை தெரிவு செய்தால் தமிழில் வரும் படி மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, Sanchu Suga said:

யூரியூப்பில் தமிழ் மொழியை தெரிவு செய்தால் காணொளிகளின் தலைப்பு எல்லாம் தமிழிலேயே வரும் படி மாற்றிவிட்டேன். இனி வரும் காணொளிகளை மறக்காமல் கட்டாயம் தமிழிலும் போடுகிறேன்.

//என்ன மா மரத்திலிருந்து தண்ணி வருது, எதற்கும் ஒரு உண்டியல் வைக்கவும், சனம் அள்ளுப்பட போகுது அதிசயத்தை பார்க்க😂.//

கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று செய்தது அது. "எல்லாம் பேய்க்காட்டு வேலை" என்று வீட்டிலிருக்கும் பெரிசுகளே சொல்லிவிட்டார்கள்.  😁

யாழில் தொடர்ந்து இணைப்பதில் சின்ன தயக்கம். உங்கள் ஆதரவுக்காக என்று எவ்வளவு நாளைக்குத்தான் கேட்பீர்கள் என்று யாராவது கோபப்பட்டாலும் என்று தான்.

இப்போது யூரியூப்பில் தமிழை தெரிவு செய்தால் தமிழில் வரும் படி மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்.

அப்படி ஒருவரும் நினைக்கவோ / கேட்கவோ மாட்டார்கள். நீங்கள் தொடர்ந்து இணையுங்கள்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வித்தியாசமாய் இருக்கு...அது சரி கோம்பை என்னத்துக்கு கட்டித்தூக்கியிருக்கு? 😎

Posted
On 28/8/2020 at 15:09, குமாரசாமி said:

வித்தியாசமாய் இருக்கு...அது சரி கோம்பை என்னத்துக்கு கட்டித்தூக்கியிருக்கு? 😎

வித்தியாசமா இருக்கடுமே என்று தான் :). அதுக்குள்ளே பூக்கண்டு வைத்து இருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்பமே கலக்கல்.
சமையல் காணெளியா அல்லது படம் ஏதாவது பார்க்கிறோமா என்று சிந்திக்க வைத்துவிட்டது.கணவன் கணனியில் கில்லாடி போல இருக்கு.நல்ல முன்னேற்றம்.
       மரத்தில் ஏறுவதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது.
        நானும் ஊர் போன போது பழைய நினைப்பில் பலாப்பழம் பிடுங்க மனைவி வேண்டாம் வேண்டாம் என்ற போதும் சோ காட்ட வெளிக்கிட்டு தொம்மென்று விழுந்தது தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாக  இருக்கிறது ...எங்கே உங்களை நீண்ட நாட்களாக காணவில்லை 

Posted
10 hours ago, ஈழப்பிரியன் said:

ஆரம்பமே கலக்கல்.
சமையல் காணெளியா அல்லது படம் ஏதாவது பார்க்கிறோமா என்று சிந்திக்க வைத்துவிட்டது.கணவன் கணனியில் கில்லாடி போல இருக்கு.நல்ல முன்னேற்றம்.
       மரத்தில் ஏறுவதைப் பார்க்க சிரிப்பாக இருந்தது.
        நானும் ஊர் போன போது பழைய நினைப்பில் பலாப்பழம் பிடுங்க மனைவி வேண்டாம் வேண்டாம் என்ற போதும் சோ காட்ட வெளிக்கிட்டு தொம்மென்று விழுந்தது தான் மிச்சம்.

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. இதெல்லாம் சின்ன மரம். இதை விட பெரிய மரங்களே சின்னனில ஏறி இருக்கிறேன் :)

நீங்கள் பலா மரத்தில் ஏறி விழுந்த கதையை ஏறக்கனவே யாழில் வாசித்ததாக ஞாபகம்.

5 hours ago, நிலாமதி said:

நன்றாக  இருக்கிறது ...எங்கே உங்களை நீண்ட நாட்களாக காணவில்லை 

இடையே கொஞ்சம் வேலைப்பழு. அது தான் வர முடியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.