Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஆரம்ப காலத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம் வலியுறுத்தி வந்தார்.

அவ்வாறான நிலையில் எமது கட்சி உருவாக்கம் பெற்ற பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இன்றுவரை எம்மை இணைத்துச் செயற்படவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கும் முரண்பட்ட கருத்துக்கள் எவையும் இல்லை. நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியா? எம்மைப் பயன்படுத்துகின்றனரா என வெளியில் பலர் கேள்வி கேட்கின்றனர்.

எம்மை யாரும் பயன்படுத்த முடியாது. தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கையான தொடர்பினை நாம் வைத்துள்ளோம்.

நாம் பங்காளிக் கட்சிகளாக இருந்ததில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கபலமாக இருப்போம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க பல சக்திகள் செயற்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வட.கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்.

எனவே நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் நாம் வட.கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்யவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். நாம் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிந்து நின்று எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது.

எனவே நாம் தாயகத்தில் பாதுகாப்பாக சுதந்திரமாக இருக்க ஒரே வழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதே ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.

https://newuthayan.com/கூட்டமைப்பினை-பலப்படுத்/

1 hour ago, பிழம்பு said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

இந்தியாட இனப்படுகொலை உரிமைகளை பலப்படுத்த இவங்களுக்கு உள்ள அக்கறையில ஒரு துளி கூட சொந்த தமிழ் மக்கள் மேல இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

திரு கதிர் அவர்களே கூட்டமைப்பிடம் கேளுங்களேன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்க்கான அட்டவணையில் முதல் மூன்று இலக்கத்துக்குள் முன்னால் போராளிகளில் ஒருவரது பெயரை முதன்மை வேட்பாளராகவும் அதே வேளை ஆகக்குறைந்தது ஒருவரையாவது தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்ய உங்களால் முடியுமா என.

ஆக மிஞ்சிப்போனால் முன்னால் போராளிகளுக்கு ஒரு ஜே பி பதவிதான் கிடைக்கும், அதற்கும் சுமந்திரனுக்கு வேட்டி தோச்சுக்கொடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை இந்த முறை எல்லாரும் சேர்ந்து குத்தமைக்கு வாக்குகள் முலம் பதில் கொடுப்போம்.வாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

திரு கதிர் அவர்களே கூட்டமைப்பிடம் கேளுங்களேன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்க்கான அட்டவணையில் முதல் மூன்று இலக்கத்துக்குள் முன்னால் போராளிகளில் ஒருவரது பெயரை முதன்மை வேட்பாளராகவும் அதே வேளை ஆகக்குறைந்தது ஒருவரையாவது தேசியப்பட்டியலில் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்ய உங்களால் முடியுமா என.

ஆக மிஞ்சிப்போனால் முன்னால் போராளிகளுக்கு ஒரு ஜே பி பதவிதான் கிடைக்கும், அதற்கும் சுமந்திரனுக்கு வேட்டி தோச்சுக்கொடுக்கவேண்டும்.

3 hours ago, Kali said:

இந்தியாட இனப்படுகொலை உரிமைகளை பலப்படுத்த இவங்களுக்கு உள்ள அக்கறையில ஒரு துளி கூட சொந்த தமிழ் மக்கள் மேல இல்லை. 

உண்மை.

இந்த சனநாயகப் போராளிகளிடம்(?) ஒரு வினா. இவளவு வெளிப்படையாக இயங்கும் நீங்கள் ஏன் சிறையிலுள்ள கைதிகளின் விடுதலைக்கான ஒரு சனநாயகப் போராட்டத்தைச் செய்யவில்லை. காணாமற்போன உறவுகளின் போராட்டத்தோடு இணையவேண்டாம், ஒரு அடையாளப்போராட்டத்தையாவது செய்யவில்லை ஏன்? புலிகளின் விலைபோன முன்னணித் தலைவர்கள் அரசியல் செய்யவும் சுகபோகமாக இருக்கவும் நீங்கள் அரசியல் பேசவும் (யாருக்கான அரசியல்  செய்கிறீர்கள் என்பது உங்களுக்கே வெளிச்சம் என்பது வேறுகதை) முடிகிறதென்றால்; ஏன் இன்னும் சிறையிலே அரசியல் கைதிகளை வைத்துள்ளீர்கள் என்று அரசையோ ஏன் விடுவிக்க முயலவில்லையென்று உங்கள் சகபாடிகளான த.தே.கூட்டமைப்பையோ கேட்கவில்லை. இவைபோன்ற விடயங்களே  நீங்கள் யாரென்பதைக் காட்டுவதற்கு போதுமானது.

தமிழினம் தலைமையற்ற பெருவெளியில் அவலத்தோடு நிலைதடுமாறி நிற்கிறது.அந்தத்  தடுமாற்றத்தை  அரசியற்காட்சிகள் தமக்கான பிழைப்புக்கு அவியல் செய்ய முனைவது எத்துணை கேவலம். இதற்குத் துணைபோகும் நீங்கள் முன்னாள் போராளிகள்?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பே – கதிர் தெரிவிப்பு!

20200616_111557-960x444.jpg?189db0&189db0

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட ஒரேயொரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலதுகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இ.கதிர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்,

‘இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்த பின்னர் கடந்த 2015ம் ஆண்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி உருவாக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளை அரசியலுக்குக் கொண்டுவரவே தனித்துவமாக எமது கட்சி உருவாகியது. ஆரம்ப காலத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டபோராளிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சிவஞானம் வலியுறுத்தி வந்தார்.

அவ்வாறான நிலையில் எமது கட்சி உருவாக்கம் பெற்ற பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைபபுடன் இணைந்து செயற்படவேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இன்றுவரை எம்மை இணைத்துச் செயற்பட வேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எமக்கும் முரண்பட்ட கருத்துக்கள் எவையும் இல்லை நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியா? எம்மைப் பயன்படுத்துகின்றனரா என வெளியில் பலர் கேள்வி கேட்கின்றனர்.

எம்மை யாரும் பயன்படுத்த முடியாது தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கையான தொடர்பினை நாம் வைத்துள்ளோம். தமிழரசுக் கட்சியலுள்ள சுமந்திரனுடன் கூட எமக்கு எவ்வித கருத்து முரண்பாடுகளும் இல்லை. நாம் பங்காளிக் கட்சிகளாக இருந்ததில்லை ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கபலமாக அனுசரணையாக இருப்போம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க பல சக்திகள் செயற்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வடகிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள். நடைபெறவுள்ள பொதுத்தேர்தலிலும் நாம் வடகிழக்கி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினை வெற்றியடையச் செய்யவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதன் ஊடாகவே எமதுஉரிமைகளை வென்றெடுக்க முடியும். நாம் ஒவ்வொரு பிரிவுகளாக பிரிந்து நின்று .எவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாது. ஆரம்ப காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியது தவறு அவர்கள் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுப்பதால் எம்மால் பேச முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்கள் இப்போது அந்த நிலைமாறி பேசுவதில் பயனில்லை போராட வேண்டும் என்கிறார்கள்.

நாம் ஆயுதம் ஏந்தியது அரசியல் தந்துரோபாயமே எனவே தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தலில் பல அணிகளாக பூதங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மணல் கொள்ளையர்கள் கிறீஸ் பூதங்கள் பெண்களை சீரழித்த குழுக்கள் இன்று மக்கள் முன்னிலையில் வாக்குக் கேட்கத் தெடங்கியுள்ளனர். எனவே நாம் தாயகத்தில் பாதுகாப்பாக சுதந்திரமாக இருக்க ஒரே வழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சிலவிமர்சனங்கள் இருக்கலாம்ஆனால் அவற்றை இப்போது கதைப்பதற்கான நேரம் அல்ல.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஜனநாயக அரசியல் போராட்டத்தை ஆரம்பிப்பதற்காகவே பல வருங்களுக்கு முன்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கினார். ஆயுதப்போராட்டத்தில் எவ்வாறான விளைவுகள் ஏற்படும் என்று எண்ணியதாலும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டமிடல்களை வைத்திருந்தமையினாலேயே பல வருடங்களுக்கு முன்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்போது முன்னாள் போராளிகள் என்ற பெயரில் பல கட்சிகள் உருவாகின்றன. அவ்வாறான கட்சிகளில் இருப்பவர்கள் திராணி இருந்தால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் எந்தப் படையணியில் எந்த இலக்கத்துடன் இருந்தார்கள் என்பதை வெளிப்படையாக கூறவேண்டும். எனவே போராளிகளின் பெயரில் உருவாகும் கட்சிகள் தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும்’ – என தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/தலைவர்-பிரபாகரனால்-உருவா/

  • கருத்துக்கள உறவுகள்

நான்கரை வருடத்தில் த.தே.கூ எதையும் சாதிக்கவில்லை’

எஸ். நிதர்ஷன்

தமிழ் அரசியல் கைதிகள் எவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகளினூடாக விடுவிக்கப்படவில்லை என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில், நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பை, அதிகபட்ச ஆசனங்களுடன், மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் மாற்று அணியோ, மாற்றுத் தலைமையோ தேவையில்லை என்றும், சில நாள்களுக்கு முன்னர், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில், த.தே.கூ பேச்சாளர் சுமந்திரன், மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தனர் எனக் கூறினார்.

நாட்டில் ஒரு இராணுவ ஆட்சி வரவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்துள்ள நிலையில், தாங்கள் மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்றால், மீண்டும் தாங்கள் எதிர்க்கட்சியாக வந்து, பல விடயங்களைச் சாதிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்கள் என்பதை அவர் குறிப்பிட்டார்.

ஆனால், நான்கரை வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்து, த.தே.கூ எதைச் சாதித்தது என்று வினவிய அவர், காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், புதிய அரசியல் சாசனம் ஆகிய எதிலும் அவர்கள் வெற்றிகொள்ளவில்லை என்பதே உண்மை என்றும் அவர் கூறினார்.

91 அரசியல் கைதிகளுக்கு மேலான வழக்குகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தாங்கள் சில அரசியல் கைதிகளை விடுவித்துள்ளோம் என்று த.தே.கூ கூறுவது, அப்பட்டமான பொய் என்றும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நனகர-வரடததல-த-த-க-எதயம-சதககவலல/71-252007

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தல் காலத்தில் யாரோ கதிர் அண்ணாவை குழப்பி விட்டுள்ளார்கள். அல்லது அவர்தான் தப்பாக புரிந்துகொண்டாரோ தெரியவில்லை.

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனித்த கட்சி கிடையாது அது பல பங்காளிக் கட்சிகளின்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட ஒரு  அரசியல் கூட்டணி என்பது ஞாபகமிருக்கட்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பலப்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் அதில் உள்ள ஒரு பங்காளிக்கட்சியை பலப்படுத்துவதன் ஊடாககத்தான் அதை செய்யமுடியும்.

அது போக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவுமில்லை. எனவே அதை கட்சி என்று அழைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 

பங்காளிக் கட்சிகள் என்று சொல்லப்போனால் இப்போது கூட்டணியில் அங்கம் வகிப்பவை இலங்கை தமிழரசு கட்சி(ITAK), EPRLF, PLOT, TELO. இப்போது சொல்லுங்கள் நீங்கள் இதில் எந்த கட்சி?

மதிப்புக்குரிய முன்னாள் போராளிகளின் கவனத்திற்கு: நீங்கள் அரசியலில் ஏதாவது செய்ய நினைத்தால் அதை தேர்தல் வரும்போதுதான் செய்ய வேண்டும் என்பதில்லை. அடுத்து வரும் தேர்தலில் கூட்டணியை பலப்படுத்தும்படி உங்களை யாராவது கேட்டிருந்தால் அதனால் அவர்கள் நாடாளுமன்றம் செல்லும் வாய்ப்பு அதிகமாகும் என்பதை விட தமிழினத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது அர்த்தமில்லை. அப்படி ஒரு தீர்வை கொண்டுவருவதற்கு எந்த தமிழ் அரசியல்வாதிக்கும் திராணியில்லை.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் முன்னாள் நீதிபதியின் இன்றைய நிலையை யோசித்துப் பார்த்தபின் முடிவை எடுங்கள். வெறும் கறிவேப்பிலையாய் ஆகிவிடாதீர்கள். சிங்கள கட்சிக்கு கோத்தா போல் இங்கு ஒரு சுமந்திரன். போனதடவை புலிகளை முன்னிலைப்படுத்தி  பிரச்சாரம் செய்து தான் வாக்கு கேட்கவில்லை என்று இந்த முந்திரிக்கொட்டை சொன்னது. இந்தமுறை சொன்னதையும் காதாரக் கேட்டிருப்பீர்கள். உங்களை வேண்டாம் என்று ஒதுக்குமுன் நீங்களாய் ஒதுங்குவது நல்லது. இவரை கொலை செய்ய முயற்சித்தார்கள், என்று உங்களில் சிலரை பிடித்தடைத்தார்கள். அந்தக் கூட்டை நீங்களாகவே போய் அடையப்போகிறீர்களா? உங்களை நீங்களே கொச்சைப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  

10 hours ago, பிழம்பு said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியுமென ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

சிங்கள இனப்படுகொலைகாரர்களுக்கு கடந்த 11 வருடங்களாக எடுபிடிகளாக இயங்கும் சம்மந்தன்-சுமந்திரன் கும்பலினால் தமிழினத்துக்கு விடுதலை என இன்னமும் கூற கைக்கூலிகளாகள் மட்டுமே முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

நான்கரை வருடங்களாக எதிர்க்கட்சியாக இருந்து, த.தே.கூ எதைச் சாதித்தது

 எஜமானைக் காப்பாற்றப்போய் எதிர்கட்சி ஆசனத்தை இழந்தார்கள். அது சாதனையில்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

திரு கதிர் அவர்களே தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என நீங்கள் கூறுகிறீர்கள் அக்கட்சியை இப்போ சம்பந்தனும் சுமந்திரனும் அடாத்தாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள் அப்படியே இருக்கட்டும் ஒருக்கால் சம்பந்தனது திருவாயால் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்தேசியக் கூட்டமைப்பு எனச் சோல்லச்சொல்லுங்கோ பார்க்கலாம்.

அப்படி அவர் சொல்லமுடியாஅது என்றால் 

சம்பந்தன் அவர்களே உங்களதும் உங்கள் சகபாடி சுமந்திரனதும் மாவை வகையறாக்களதும் தலைமத்துஅத்துடனேயே கூட்டமைப்பு இன்றுவரை நிண்டுபிடிக்கிறது என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஏன் இந்தப்பொல்லாப்பு  புலிகளும் பிரபாகரனும் பயங்கரவாதிகள் கொலையாளிகள் ஜனநாயகவிரோதிகள் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எல்லோரும் அதே பிரபாகரனாலும் அவர்சார்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தாலுமே தோற்றுவிக்கப்பட்டது எனச்சொல்லுகினம் ஆதலாம் அந்தகட்சியும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் நாங்கள் ஜனநாயக வாதிகள் அதைவிட புலத்திலும் புலம்பெயர்தேசத்திலும் தம்மை மேதாவிகள் எனக்கூறுவோரால் இராஜதந்திரம் மிக்க சாணாக்கியர்கள் மார்க்கியவல்லிகள் எனக் கூறிக்கொள்ளும் தகுதியுடையவர்கள் என்பதை நிரூபிக்க நாங்கள் இப்பவே ஒரு புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கப்போகிறோம் என அறிவியுங்கோ என வேண்டுகோள் விடுக்கலாமே.

உங்களுக்கு ஏதோ நெருக்கடி அது இந்தியா மூலமாகவோ அல்லது கொத்தா மூலமாகவோ இருக்கலாம் சரி நீங்கள் எல்லோரும் சரியான பாதையில் பயணித்தால் தமிழர்கள் உங்களுக்கு ஆதரவு தரப்போகிறார்களோ இல்லைத்தானே.

இப்போது தாயகத்தில் மக்கள் எல்லோரும் தங்களைத் தாங்கள் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டுமோ அதையே செய்து ஒரு பாதுகாப்பான சூழலுக்குள் வாழப்பழகிக்கொண்டார்கள் அப்படியான பாதுகாப்பான சூழல் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதல்தான் தானாக அமையும் அவர்கள்தான் போராட்டம் சத்தியாகிரகம் போர்குற்றம் சர்வதேசம் என எதையும் பேசாது எங்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாது அவர்கள்பாட்டுக்கு ஒரு ஓரமாக நிண்டு அரசியல் என எதாவது செய்வார்கள் நாங்கள் பையப்பைய எங்கட அலுவலைப்பார்ப்பம். அவர்களுக்கும் நாங்கள் வாக்களிபதற்கு விரும்புவதில்லை ஆனால் வாக்களிக்காதுவிட்டால் வேறை ஆக்கள் வந்து விட்டால் இப்போதைய பாதுகாப்பான சூழல் இல்லாதுபோய்விடும் அதுதான் நாங்கள் அவங்களுக்கு வாக்குப்போடுகிறம்.

இல்லாதுவிட்டால் எங்களுக்குத் தெரியாதே ஒவ்வொரு நாலு வருடத்துக்கும் ஒரு தேர்தல் வரும் அதில் இப்போது தெரிவுசெய்யப்பட்டவர்கள் தமிழர்கள் உரிமைதொடர்பாக எதுவும் செய்யாதுவிடின் இன்னுமொருவரை ஒரு பயங்காட்டவாவது தெரிவுசெய்வம்தானே.

எங்களுக்குத் தேவையானது சாராயக்கடை தொடர்ந்து திறக்கவேணும் மெகாதொடர் பார்க்க தொடர்ந்து மின்சாரம் கிடைக்கவேணும், கொழும்புக்கு நினைத்தமாத்திரத்தில் போய்வரவேண்டும் படிப்புச் சரிவரவில்லை என்Dஆல் வெளிநாடு போக ஒரு நல்ல ஏஜன்சிக்காரன் கிடைக்கவேணும். இந்தவேலைகளுக்கு மத்தியில் மிஸ்கோலில் மாட்டுற பெட்டையளை ஓரங்கட்டி ஜாலியாக இருக்கவேணும், கொரோணா வாந்திபேதி சுனாமி மழைபெய்யாட்டில் மழைவந்தால் இவைகளைச் சாட்டாக வெளிநாட்டிலிருக்கிறவையளிட்ட காசு வாங்கி கொத்துரொட்டிப் பாட்டி கூழ்பாட்டி இவைகளைச் சாராயப்போத்தலுடன் கொண்டாடவேணும். பராயமாகாத ஆனால் பூப்பெய்திய பெண்களது வீட்டைச் சுற்றி பெட்டைநாயைச் சுற்றும் கடுவன் நாய்களாகத் திரிந்து அதுகளை வசப்படுத்தி "லிவிங் டு கெதர்" வாழ்கை வாழவேண்டும்.  மாலை வேளைகளில் பண்ணைப்பாலம் தாண்டியவுடன் மண்டைதீவு அலுமேனியப் பக்ரறி அண்டிப்போகிற பாதையில் இருக்கும் கன்னாப்பத்தை, வடலிகள் இவைகளுக்கு கிடைக்கும் பெட்டைகளை கூட்டிக்கொண்டு போகவேணும் அதுக்கு ஒரு மோட்டார் சைகிள் வேணும். 

இப்படியானதுக்கு கூட்டமைப்புத்தான் சரி.

மவனே அடுத்தமுறை ஊருக்குப்போகேக்க உடனடியாக ஒரு என்பீல்ட் புல்லட் மோட்டார் சைக்கிளைக் கொழும்பிலையே வாங்கிக்கொண்டு போகவேணும் எங்கட ரேஞ்சுக்கு ஒரு நாறின நெத்தலி மீனாவது கிடைக்காதோ.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

ரொம்ப கொதித்துப் போயுள்ளீர்கள். காலத்தின் கோலம் தேற்றிக்கொள்ளுங்கள்.

நான்கரை வருடங்களாக த.தே.கூ எதைச் சாதித்தது என வாக்களிக்கும் மக்கள் கேட்டு  விடையை கண்டு தெரிவுகளை மேற்கொள்ளவேண்டும் : 

  • காணிகள் விடுவிப்பு
  • அரசியல் கைதிகள் விடுவிப்பு
  • காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்
  • புதிய அரசியல் சாசனம் 
     
  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2020 at 17:10, பிழம்பு said:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வட.கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள்.

இதனை முதலில் இன்றைய கூட்டமைப்பின் தலைகளான சம், சுங் காதுகளில் உரக்கச் சொல்லுங்கள், அதன்பின்பு உங்களைப் பக்கபலமாக இணைத்துக் கொள்வதா, இல்லையா என்று அவர்கள் முடிவெடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் நாட்டுக்காக போராட வெளிக்கிட்டு, இன்று எடுப்பார் கை பிள்ளையாய் போனார்கள். ஆதரவு கொடுத்தாலும் தொந்தரவு. கொடுக்காவிட்டாலும் தொந்தரவு. பல்லிழந்த பாம்பாகி விட்டார்கள். அவர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. சந்தர்ப்ப வாதிகள் மேற்தான் என் கோபமெல்லாம்.   இதுவரையில் அவர்கள் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி கொடுக்கவில்லை, நினைக்கவில்லை.  தங்களை தக்க வைக்க, ஒவ்வொருவரையும் காலத்துக்கு காலம் தேடிப்பிடித்து கொண்டுவந்து, காரியம் முடிய நாறடிக்கிற நாத்தல்க் கூட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் திட்டங்களில் ஒன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீதான மரியாதையுடனான பார்வையை எதிர்காலத்தில் மெல்ல மெல்ல சிதறடிப்பதே இது யாருக்குத் தேவையில்லையோ இந்தியாவுக்கும் சிங்களத்துக்கும் தேவை அந்த நிகழ்சித்திட்டத்தைச் செய்துமுடிக்கவே சுமந்திரன் சம்பந்தன் ஆகியோர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள்

இனிமேல் முன்னால் விடுதலைப் புலிப் போராளிகள் என்றால் அனைவர்க்கும் ஆயுதம் ஏந்திய போராட்டத்திலும் ஜனநாயக அரசியல் போராட்டத்திலும் தோல்வியடைந்த ஒரு வரது முகம்தான் தமிழர்கள் எண்ணத்தில் வரவேண்டும் என்பதே அனைவரதும் எண்ணம். அதுக்குத் தக்கதாக இவர்கள் ஆடுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.