Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே இரவில் மூவாயிரம் இராணுவ வீரர்களை கொன்றொழித்ததாக கருணா பெருமிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவை உடன் கைது செய்யுங்கள் – உயர் நீதிமன்றில் மனு!

1577683769-karuna-2-1.jpg?189db0&189db0

கருணா எனும் வி.முரளிதரனை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி கொழும்பு – கடுவளை நகர சபையின் உறுப்பினர் ஒருவர் இன்று (24) உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

புலிகளுடன் இருந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் கருணா தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

https://newuthayan.com/கருணாவை-உடன்-கைது-செய்யு/

Edited by உடையார்

  • Replies 225
  • Views 25.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் போட்ட பிச்சையில் தளபதி என்கிற பெயரெடுத்து, புகழோடு வாழ்ந்தது. அவர் உயிரோடு இருந்தவரை எதிரியின் விருந்தாளியாய் இருந்துது. அவரை காட்டிக்குடுத்து அமைச்சராகிச்சு. இனி இது தேர்தலில் வென்றால் பயன்படுத்துவார்கள், இல்லையென்றால் விதைத்ததை அறுக்க தயாராக வேண்டியான். காணாமற் போனோர் பட்டியலில் இருக்க வேண்டிய பெயர் அவரின் தயவால் பிரபலமாயிற்று. எல்லோரும் அம்மான் என்று கூப்பிடலாம். ஆனால் தலைவர் இவரை நம்பிய மாதிரி யாரும் இவரை நம்பப் போவதுமில்லை, காரியத்தை ஒப்படைக்கப் போவதுமில்லை. ஒருநாள் தான் செய்த துரோகத்தை எண்ணி வருந்த வேண்டி வரும், எல்லோராலும் கைவிடப்படும்போது. இவர் செய்த துரோகத்தை, இவரை பயன்படுத்தியவரே சொல்லிக் காட்டும்போது.

  • கருத்துக்கள உறவுகள்

இவரை இந்நாட்களில் பார்க்கும்போது முகம் விகாரமாகி, வீங்கியிருப்பதுபோலத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தான் அப்படித்தெரிகிறதா அல்லது உண்மையாகவே அவரது முகம் இப்படி மாறிவிட்டதா? கண்கள் முகத்தினுள் சிறிது சிறிதாகப் புதைந்து காணாமல்ப் போவதுபோலத் தோன்றுகிறது. தலையும் சிறிது சிறிதாக கழுத்துடன் சேர்ந்து உடம்பினுள் சுருங்குவதுபோலத் தெரிகிறது. புலிகளின் ராணுவத் தளபதி கருணா எங்கே இந்த மனிதர் எங்கே?? தவறுசெய்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

மஹிந்தவும் அப்படிதான் மாறிவிட்டார்.

களிமண்  குயவன் கையில் இருக்கும்போது அழகிய உருவங்களை தரும். இல்லையாயின் அது வெறும் களிமண்ணே.  குயவனுக்குத்தான் தெரியும் எந்த மண்ணை எப்படி உருவாக்கலாம் என்று. சில மண் எதுக்கும் உதவாது இருந்தாலும், குயவனின் கைத் திறமையால் சில நாட்களுக்காவது நல்ல உருவத்தில் தோற்றமளிக்க முடிகிறது. பின் உடைந்து தன் பழைய நிலைக்கே திரும்பி விடுகிறது. நல்ல கலைஞனால் நல்லதை உருவாக்க முடியும். அழிப்பவனால் உருவத்தை மாற்ற அல்ல, அழிக்கவே முடியும். அதற்கு இந்தப் புறம்போக்கு நல்ல உதாரணம். 

தீப்பந்தத்துடன் முன்னால போற திருடன்: “டேய், வழியில கட்டையொண்டு கிடக்குது பாத்து வாங்கோடா”.

கட்டை: “யார்ராவன், கட்டைர கையில பத்து சத காசிருக்குமாடா”

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

இவரை இந்நாட்களில் பார்க்கும்போது முகம் விகாரமாகி, வீங்கியிருப்பதுபோலத் தோன்றுகிறது. எனக்கு மட்டும்தான் அப்படித்தெரிகிறதா அல்லது உண்மையாகவே அவரது முகம் இப்படி மாறிவிட்டதா? கண்கள் முகத்தினுள் சிறிது சிறிதாகப் புதைந்து காணாமல்ப் போவதுபோலத் தோன்றுகிறது. தலையும் சிறிது சிறிதாக கழுத்துடன் சேர்ந்து உடம்பினுள் சுருங்குவதுபோலத் தெரிகிறது. புலிகளின் ராணுவத் தளபதி கருணா எங்கே இந்த மனிதர் எங்கே?? தவறுசெய்துவிட்டார்.

ஆள் அப்படித்தான் விகாரமாகியிருக்கிறார் ,
எப்ப பார்த்தாலும் புள் தண்ணி, புலிகளோடு இருந்த காலத்தில் சோமபானம் இல்லாமல் இருந்ததையும் சேர்த்து இப்போ மொத்தமாக உள்ள இறக்குகிறார். கதைக்க தொடங்கினால் வாய் வேற உளறுகிறது   

  • கருத்துக்கள உறவுகள்

கருணா விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தைக்கூடக் காட்டித்தரவில்லை – சரத் பொன்சேகா

செய்தி அலசல்: சிவதாசன்

கருணா அம்மான் அரசாங்கத்திடம் சரணடைந்த போது அவரால் இராணுவத்துக்கு எந்தவித உதவியும் கிட்டவில்லை. புதுக்குடியிருப்பு உட்பட வடக்கில் அவர் பலதடவைகள் தங்கியிருந்திருக்கிறார். அப்படியிருந்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது இருப்பிடத்தைக்கூட அவர் காட்டித்தரவில்லை என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரித்திருக்கிறார்.

“இராணுவத்திற்கு பலத்தைச் சேர்ப்பதில்கூட அவரால் உதவ முடியவில்லை. அவரோடு சரணடைந்தவர்கள் 150 பேர் தான். அவர்களில் 80 பேர் மட்டில் 13 வயதுக்கும் குறைந்தவர்கள். அப்படியான கருணா அம்மான் இப்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவுச் சமரில் தான் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொன்றேன் எனக் கருணா, சில நாட்களுக்குமுன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு நேற்று (24) அவர் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதே வேளை, இன்று காலை கருணா குற்ற விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலம் கொடுப்பதற்காக வந்துள்ளார் எனவும் அறியப்படுகிறது.

https://marumoli.com/போரின்போது-கருணாவினால்-எ/?fbclid=IwAR2orTe3lUYE_HSVenGORoyqs3xG18VnBz65jdNe58ICxH8GzPApWXcXR0s

  • கருத்துக்கள உறவுகள்

15 வருசத்துக்கு முந்தி இருந்த ரதியும் இப்ப இருக்கின்ற ரதியும் இன்னும் ஒரே மாதிரித் தான் இருக்கினம் என்று சொல்லி வைப்பம்...அப்பத் தான் லைக் கிடைக்கும்😄 
 
  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎06‎-‎2020 at 11:19, satan said:

தலைவர் போட்ட பிச்சையில் தளபதி என்கிற பெயரெடுத்து, புகழோடு வாழ்ந்தது. அவர் உயிரோடு இருந்தவரை எதிரியின் விருந்தாளியாய் இருந்துது. அவரை காட்டிக்குடுத்து அமைச்சராகிச்சு. இனி இது தேர்தலில் வென்றால் பயன்படுத்துவார்கள், இல்லையென்றால் விதைத்ததை அறுக்க தயாராக வேண்டியான். காணாமற் போனோர் பட்டியலில் இருக்க வேண்டிய பெயர் அவரின் தயவால் பிரபலமாயிற்று. எல்லோரும் அம்மான் என்று கூப்பிடலாம். ஆனால் தலைவர் இவரை நம்பிய மாதிரி யாரும் இவரை நம்பப் போவதுமில்லை, காரியத்தை ஒப்படைக்கப் போவதுமில்லை. ஒருநாள் தான் செய்த துரோகத்தை எண்ணி வருந்த வேண்டி வரும், எல்லோராலும் கைவிடப்படும்போது. இவர் செய்த துரோகத்தை, இவரை பயன்படுத்தியவரே சொல்லிக் காட்டும்போது.

தலைவர் என்ன முட்டாளா ?

On ‎23‎-‎06‎-‎2020 at 23:11, MEERA said:

நாதம்ஸ் நான் உங்களை சொல்லவில்லை. சிங்களவர்கள் எல்லாரும் திட்டம் போட்டு நடக்கிறார்கள். கடைசியில் கோட்டையில் சண்டை பிடித்ததும் கும்மான் என்பார்கள்.

யாழில் உள்ள, தாங்கள் முன்னாள் புலிகள் என்று வெளிப்படையாக எழுதுபவர்கள் தூங்குகிறார்களா....?

மீரா ,நன்கு விசயம் தெரிந்தவர்கள் வந்து எழுதவில்லை என்பதால் நீங்கள் சொல்வது ல்லாம் உண்மையாகி விடாது ....அவர்கள் எழுதாததற்கு காரணமே துரோகிப் பட்டம் கிடைத்து விடும் என்பதால் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎24‎-‎06‎-‎2020 at 06:05, Maruthankerny said:

கொம்மான் வைத்திருக்கும் பணமெல்லாம் 
கொழும்பில் கோப்பி கொட்டை வியாபாரம் பண்ணி சேர்த்த காசா?
கொஞ்சமும் கூச்சம் இல்லமால் இப்படி முழு பூசணிக்கையையே 
புதைக்கிறீரங்களே? 

இயக்கத்துக்கு காசு கொடுத்த ஒவ்வரு தமிழனும் கருணாவால் ஏமாற்றப்பட்டவர்கள்தான் 
இதில் நான் நீங்கள் என்று தனி தனியாக இனி பிரிக்க முடியாது 

இதை எழுதும் போது உங்களுக்கு கொஞ்சம் கூட சிரிப்பு வரேல்லையா?...இன்னும் தமிழ்த் தேசியம் கதைத்து கொண்டு புலிகளது பேரை சொல்லி அடித்த காசை வைத்து தங்களது குடுமபங்களை வளப் படுத்துவர்களை கேக்க வக்கில்லாத நாங்கள் அவரிடம் இருக்கும் காசு மட்டும் எங்களது என்று உரிமை கொண்டாட நினைக்கிறம்.
ஆகவே எங்களை பொறுத்த வரை தேசியம் கதைத்துக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ....நாங்கள் கேட்க மாட்டம் ...ஆனால்  விட்டுட்டு போனோமோ இருக்கு கதை .
அங்கேயிருக்கிற  கடைசி தமிழன் மட்டும் போராடி சாகோணும்.
நாங்கள் ,எங்கட குடும்பம் எல்லோரும் வெளிநாட்டிற்கு வந்துடணும் ..நான் சொல்றது சரி தானே மருதர் 

13 hours ago, nunavilan said:

கருணா விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தைக்கூடக் காட்டித்தரவில்லை – சரத் பொன்சேகா

செய்தி அலசல்: சிவதாசன்

கருணா அம்மான் அரசாங்கத்திடம் சரணடைந்த போது அவரால் இராணுவத்துக்கு எந்தவித உதவியும் கிட்டவில்லை. புதுக்குடியிருப்பு உட்பட வடக்கில் அவர் பலதடவைகள் தங்கியிருந்திருக்கிறார். அப்படியிருந்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது இருப்பிடத்தைக்கூட அவர் காட்டித்தரவில்லை என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரித்திருக்கிறார்.

“இராணுவத்திற்கு பலத்தைச் சேர்ப்பதில்கூட அவரால் உதவ முடியவில்லை. அவரோடு சரணடைந்தவர்கள் 150 பேர் தான். அவர்களில் 80 பேர் மட்டில் 13 வயதுக்கும் குறைந்தவர்கள். அப்படியான கருணா அம்மான் இப்போது அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவுச் சமரில் தான் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொன்றேன் எனக் கருணா, சில நாட்களுக்குமுன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு நேற்று (24) அவர் பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதே வேளை, இன்று காலை கருணா குற்ற விசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலம் கொடுப்பதற்காக வந்துள்ளார் எனவும் அறியப்படுகிறது.

https://marumoli.com/போரின்போது-கருணாவினால்-எ/?fbclid=IwAR2orTe3lUYE_HSVenGORoyqs3xG18VnBz65jdNe58ICxH8GzPApWXcXR0s

நான் இந்த செய்தியை யார் கொண்டு வந்து இணைகிறார்கள் பார்ப்போம் என்று காத்து கொண்டு இருந்தேன் ...கடைசியில் நீங்கள் கொண்டு வந்து இணைத்துள்ளீர்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

மீரா ,நன்கு விசயம் தெரிந்தவர்கள் வந்து எழுதவில்லை என்பதால் நீங்கள் சொல்வது ல்லாம் உண்மையாகி விடாது ....அவர்கள் எழுதாததற்கு காரணமே துரோகிப் பட்டம் கிடைத்து விடும் என்பதால் தான் 

கும்மான் ஆனையிறவில் (April 2000) ஆரம்பித்து சரத்தினால் முல்லைத்தீவு ( July 1996) வரை வந்தாச்சு.

ஆனால் மட்டக்களப்பில் நான் வளர்ந்ததே கும்மானை பார்த்துத்தான் என்னும் உங்களின் கருத்தை நினைக்க தான் சிரிப்பாக உள்ளது. 

அது யார் நன்கு விசயம் தெரிந்தவர்கள்? அவர்களுக்கு உள்ள சிறப்புரிமை என்ன?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

மீரா , உங்களது கருத்தின் முதல் வரி எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை....விளங்கப்படுத்துவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

தலைவர் என்ன முட்டாளா ?

 தகுதியற்ற விநாயக மூர்த்தி முரளீதரன்  மேல் வைத்த அசைக்கமுடியாத  நம்பிக்கை, அன்பு, நச்சுப்பாம்பின் நடிப்பு அவரை முட்டாளாக்கியது என்பது உண்மை.  எந்த வீரனுக்கும் ஒரு பெரிய பெலமுமுண்டு,  பெலயீனமுமுண்டு. அந்த பெலயீனத்தை எதிரி பயன்படுத்திக்கொண்டதே தலைவரின் வீழ்ச்சிக்கும், இனத்தின் அழிவுக்கும் காரணமாயிற்று. 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சரித்திரத்தில் சிறுவர் போராளிகள் கிடையாது! – கருணா

109748355_kamalgunarathnaandkaruna-itijtwtterphoto.jpg?189db0&189db0

தமிழீழ விடுதலைப் புலிகளின் சரித்திரத்தில் சிறுவர்கள் எவரும் போராட்டத்துக்காக சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்று கருணா எனும் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கருணாவிடம் சிறுவர் போராளிகள் ஆள்ச் சேர்ப்பு தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு கருத்து வெளியிட்டிருந்தது.

இது குறித்து ஊடக நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பியே போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘நாடகங்களில் புலிகளின் ஆடை அணிந்து நடித்த சிறுவர்களின் படங்களை வைத்துக் கொண்டே இப்போதும் குற்றம்சாட்டுகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களையே இயக்கத்தில் போராளிகளாக ஆள்ச் சேர்க்க வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் கட்டுப்பாடு வைத்திருந்தார்.’ – என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘விடுதலைப் புலிகள் தொடர்பில் நான் அரசுக்கு உதவி வழங்கவில்லை. சரத் பொன்சேகாவும் அதனை கூறியுள்ளார். அரசியல் ரீதியாக மட்டுமே அரசுடன் இணைந்திருந்தேன்.’ – என்றும் கூறியுள்ளார்.

https://newuthayan.com/புலிகளின்-சரித்திரத்தில/

கருணா 3000 பேரை கொல்லவில்லை; ஆனாலும் வழக்கு போடுங்கள் – சரத்

sarath.fonseka.jpg?189db0&189db0

கருணா எனும் வி.முரளிதரன் மீது விசாரணையின்றி உடனடியாக வழக்குத் தொடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்துடன்,

‘கருணா கூறும் வகையில் 3000 இராணுவ வீரர்ளை கொல்லவில்லை. முல்லைத்தீவில் 1200 பேர் மாத்திரமே உயிரிழந்தனர்.

இராணுவத்தினரைக் கொன்றதாக அவரே ஏற்றுக்கொண்டுள்ளதால், 7 மணி நேரம் விசாரிக்க வேண்டிய தேவை இல்லை. அரை மணித்தியாலத்தில் தீர்மானத்தை எடுத்து அவர் மீது வழக்குத் தொடுக்கலாம்’ – என்றும் தெரிவித்தார்.

https://newuthayan.com/கருணா-3000-பேரை-கொல்லவில்லை-ஆ/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 தகுதியற்ற விநாயக மூர்த்தி முரளீதரன்  மேல் வைத்த அசைக்கமுடியாத  நம்பிக்கை, அன்பு, நச்சுப்பாம்பின் நடிப்பு அவரை முட்டாளாக்கியது என்பது உண்மை.  எந்த வீரனுக்கும் ஒரு பெரிய பெலமுமுண்டு,  பெலயீனமுமுண்டு. அந்த பெலயீனத்தை எதிரி பயன்படுத்திக்கொண்டதே தலைவரின் வீழ்ச்சிக்கும், இனத்தின் அழிவுக்கும் காரணமாயிற்று. 

தலைவரை முட்டாளாக்கிய மற்றவர்கள்:

  1. மாத்தையா 
  2. கே. பி.
  3. புலம்பெயர்ந்த நாடுகளில் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்.
  4. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.
  5. நோர்வே நாட்டு அரசியல்வாதிகள்.
  6. ரணிலை ஜனாதிபதியாகாமல் தடுக்க பணம் கொடுத்துவிட்டு பின் முள்ளிவாய்க்காலில் முடிவுகட்டிய பங்காளி ராஜபக்‌ஷ. ராஜபக்‌ஷ வென்ற பின் மாவீரர் நாளில் தலைவர் ஆற்றிய உரையை படித்து பார்த்து புரிந்து கொள்ளலாம் எப்படி முட்டாளானார் என்று.

மற்றவர்களால் முட்டாளாக்க  முடியாத தலைவரே மக்களுக்கு தேவை. சிங்களவர்களுக்கு அப்படி ஒரு தலைவர் இருக்கிறார் - அவர் பெயர் கோத்தபாய ராஜபக்‌ஷ.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

சிங்களவர்களுக்கு அப்படி ஒரு தலைவர் இருக்கிறார் - அவர் பெயர் கோத்தபாய ராஜபக்‌ஷ.

அவரை முட்டாளாக்க முடியாது. காரணம்:மற்றவர் உழைப்பையும், புகழையும் அதிகாரத்தால் பறித்து தனதாக்கிக் கொள்பவர். அதற்கு உரியவர்களை மக்களின் மனதில் இருந்து துடைத்து எறிந்துவிடுவார், பயம் மூலம்.  மங்கள சமரவீர, சரத் பொன்சேகா பிரிவு அதற்கு சாட்சி. இன்னொருவர் பெயர் மறந்து போச்சு. கிழக்கு ஆபரேஷனில் பங்கு பற்றிய தளபதி.  சமர் முடிந்ததும் அவரை தூக்கி எறிந்ததோடு, அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பையும் விலக்கிக் கொண்டார். அவர் நீதிமன்றம் சென்று குறைந்தளவு பாதுகாப்பை மீண்டும்  பெற்றார். அவரின் நிலையை சரத் பொன்சேகா நினைத்து நடந்திருந்தால், பின்னாளில் வருந்த வேண்டி வந்திருக்காது.   கோத்தபாய  தனது பேராசைக்காக எதையும் செய்யத் தயங்காதவர். இவர்களாலேயே சிங்களம் அழியும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

  கோத்தபாய  தனது பேராசைக்காக எதையும் செய்யத் தயங்காதவர். இவர்களாலேயே சிங்களம் அழியும். 

அழித்து கொண்டிருக்கு இப்பவே

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

தலைவரை முட்டாளாக்கிய மற்றவர்கள்:

  1. மாத்தையா 
  2. கே. பி.
  3. புலம்பெயர்ந்த நாடுகளில் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்.
  4. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.
  5. நோர்வே நாட்டு அரசியல்வாதிகள்.
  6. ரணிலை ஜனாதிபதியாகாமல் தடுக்க பணம் கொடுத்துவிட்டு பின் முள்ளிவாய்க்காலில் முடிவுகட்டிய பங்காளி ராஜபக்‌ஷ. ராஜபக்‌ஷ வென்ற பின் மாவீரர் நாளில் தலைவர் ஆற்றிய உரையை படித்து பார்த்து புரிந்து கொள்ளலாம் எப்படி முட்டாளானார் என்று.

மற்றவர்களால் முட்டாளாக்க  முடியாத தலைவரே மக்களுக்கு தேவை. சிங்களவர்களுக்கு அப்படி ஒரு தலைவர் இருக்கிறார் - அவர் பெயர் கோத்தபாய ராஜபக்‌ஷ.

உங்களை நினைத்து பாவப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை. எப்படி இருந்த மனுசன் எதிர்ப்பு அரசியல் என்று எழுத தொடங்கி ?????

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

உங்களை நினைத்து பாவப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை. எப்படி இருந்த மனுசன் எதிர்ப்பு அரசியல் என்று எழுத தொடங்கி ?????

கருத்து வறுமையா? எழுதியதை படித்தும் புரியவில்லையா? அல்லது தலைவரை முட்டாளாக்கி தேசியத்தின் பெயரால் சுருட்டியதால் அது பற்றி எழுதியதில்  வரும் கோபமா? என்னவானாலும், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள பழகுங்கள் - தனிமனித தாக்குதல் நியூட்டனின் மூன்றாம் விதிப்படி     பூமரங் மாதிரி உங்களையே தேடிவரும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இன்னொரு தேசத்திலிருந்து வரவேற்பது சர்வசாதரணமாக நடைபெறுவது. இது கூட புரியாமல் சிலர்...

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, satan said:

 தகுதியற்ற விநாயக மூர்த்தி முரளீதரன்  மேல் வைத்த அசைக்கமுடியாத  நம்பிக்கை, அன்பு, நச்சுப்பாம்பின் நடிப்பு அவரை முட்டாளாக்கியது என்பது உண்மை.  எந்த வீரனுக்கும் ஒரு பெரிய பெலமுமுண்டு,  பெலயீனமுமுண்டு. அந்த பெலயீனத்தை எதிரி பயன்படுத்திக்கொண்டதே தலைவரின் வீழ்ச்சிக்கும், இனத்தின் அழிவுக்கும் காரணமாயிற்று. 

தகுதியற்ற கருணாவா?...அப்படியாயின் தலைவர் மட்டும் முட்டாள் அல்லவே...பொட்டம்மான் முதலாய் எல்லாத் தளபதிகளும் முட்டாள்களே ...அதை விட தகுதியற்ற கருணா இயக்கத்தை விட்டு இடையில் போய் விட்டார் என்று இன்னும் அழுது  புலம்பி குத்தி முறிகிறீர்களே உண்மையிலேயே யார் முட்டாள்?

உங்களுக்கு விளங்கும்படி எழுதுகிறேன்...கருணாவின் திறமை நன்கு தெரிந்த படியால் தான் தலைவர் அவரை பயன்படுத்தினார் ...தூக்கி தன் அருகில் வைத்தார் ...கருணாவும் விசுவாசமாய்த் தான் இருந்தார்.
பேச்சு வார்த்தைக்கு என்று வெளிநாடு வரும் போது அவருக்கு இனி மேல் போரினால் எதுவும் சாதிக்க முடியாது என்ற நிலைமை புரிந்தது.
தலைவர்,பேச்சு வார்த்தைக்கு என்று வெளிநாடு வந்து இருந்தாலும் இதே முடிவை எடுத்திருக்க கூடும்.
கருணா ,நிலைமையை விளங்கப்படுத்த முயன்ற போது தலைவர் விளங்கிக் கொள்ளவில்லை அல்லது சுத்தி இருந்தவர்கள் தலைவரை விளங்கிக் கொள்ளவிடவில்லை . உங்களைப் போன்றவர்களும் போர் ,போர் என்று உசுப்பேத்தி அவ்வளவு போரையும் சாகடித்து விட்டீ ர்கள்.

இங்கு கருணாவை அவமானப்படுத்துகிறேன் என்று தலைவரை முட்டாளாக்கி உள்ளீர்கள் ...இன்னும் போகப் போக என்னன்ன பரிசு அந்த மனுசனுக்கு கிடைக்க போகுதோ ஆண்டவா 
இந்த மனிசங்களுக்காகவா நீங்கள் கடைசி வரை போரீட்டீர்கள் ..உங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்தீர்கள்.
எங்கேயோ ஒரு மூலையில்  நீங்கள் இருந்தால் இந்த உலகம் எப்பேற்பட்டது என்று உங்களுக்கு விளங்கியிருக்கும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

மீரா , உங்களது கருத்தின் முதல் வரி எனக்கு உண்மையிலேயே விளங்கவில்லை....விளங்கப்படுத்துவீர்களா?

கும்மான் ஆனையிறவில் ( April 2000) தான் 2,000 பேரை கொன்றேன் என்றார், ஆனால் சரத்தோ ஆனையிறவில் அல்ல முல்லைத்தீவில் (July 1996) 1,200 பேரை கொன்றார் என்கிறார்.

ஆனால் நீங்களோ ஜெயந்தன் படையணியை வழி நடத்தியது கும்மான் என்கிறீர்கள். 

1 minute ago, ரதி said:

தகுதியற்ற கருணாவா?...அப்படியாயின் தலைவர் மட்டும் முட்டாள் அல்லவே...பொட்டம்மான் முதலாய் எல்லாத் தளபதிகளும் முட்டாள்களே ...அதை விட தகுதியற்ற கருணா இயக்கத்தை விட்டு இடையில் போய் விட்டார் என்று இன்னும் அழுது  புலம்பி குத்தி முறிகிறீர்களே உண்மையிலேயே யார் முட்டாள்?

உங்களுக்கு விளங்கும்படி எழுதுகிறேன்...கருணாவின் திறமை நன்கு தெரிந்த படியால் தான் தலைவர் அவரை பயன்படுத்தினார் ...தூக்கி தன் அருகில் வைத்தார் ...கருணாவும் விசுவாசமாய்த் தான் இருந்தார்.
பேச்சு வார்த்தைக்கு என்று வெளிநாடு வரும் போது அவருக்கு இனி மேல் போரினால் எதுவும் சாதிக்க முடியாது என்ற நிலைமை புரிந்தது.
தலைவர்,பேச்சு வார்த்தைக்கு என்று வெளிநாடு வந்து இருந்தாலும் இதே முடிவை எடுத்திருக்க கூடும்.
கருணா ,நிலைமையை விளங்கப்படுத்த முயன்ற போது தலைவர் விளங்கிக் கொள்ளவில்லை அல்லது சுத்தி இருந்தவர்கள் தலைவரை விளங்கிக் கொள்ளவிடவில்லை . உங்களைப் போன்றவர்களும் போர் ,போர் என்று உசுப்பேத்தி அவ்வளவு போரையும் சாகடித்து விட்டீ ர்கள்.

இங்கு கருணாவை அவமானப்படுத்துகிறேன் என்று தலைவரை முட்டாளாக்கி உள்ளீர்கள் ...இன்னும் போகப் போக என்னன்ன பரிசு அந்த மனுசனுக்கு கிடைக்க போகுதோ ஆண்டவா 
இந்த மனிசங்களுக்காகவா நீங்கள் கடைசி வரை போரீட்டீர்கள் ..உங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்தீர்கள்.
எங்கேயோ ஒரு மூலையில்  நீங்கள் இருந்தால் இந்த உலகம் எப்பேற்பட்டது என்று உங்களுக்கு விளங்கியிருக்கும் 
 
அப்படியாயின் கிழக்கிலிருந்து தமிழீழத்திற்காக போராடுவேன் என்று கூறியது....?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உங்களை நினைத்து பாவப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்வதிற்கில்லை. எப்படி இருந்த மனுசன் எதிர்ப்பு அரசியல் என்று எழுத தொடங்கி ?????

அண்ணா , நீங்கள் இதை ஜூட்டுக்கு எழுத முன் சாத்தான் எழுதியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா அல்லது இல்லையா என்று சொல்லுங்கோ 
பச்சை போட்டதன் மூலம் அக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன் ...பிறகு எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு ஜூட்டிடம் கேள்வி கேட்க்கிறீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

கும்மான் ஆனையிறவில் ( April 2000) தான் 2,000 பேரை கொன்றேன் என்றார், ஆனால் சரத்தோ ஆனையிறவில் அல்ல முல்லைத்தீவில் (July 1996) 1,200 பேரை கொன்றார் என்கிறார்.

ஆனால் நீங்களோ ஜெயந்தன் படையணியை வழி நடத்தியது கும்மான் என்கிறீர்கள். 

அப்படியாயின் கிழக்கிலிருந்து தமிழீழத்திற்காக போராடுவேன் என்று கூறியது....?

அவர் பிரியும் போது இனி மேல் போரே வேண்டாம் என்று சொல்லித் தன் படைகளை கலைத்து வீட்டுக்கு அனுப்பினார் 

மீரா ,நீங்கள் என்ன தான் குத்தி முறிஞ்சாலும் ஜெயந்தன் படையணியை யார் வழி  நடத்தினது என்பதை மாத்த முடியாது ...அங்கே அப்போது இருந்த சின்ன பிள்ளைக்கு கூட தெரியும் ..கருணா அங்கே எந்த போர்க்களத்தில் நின்றார்,எத்தனை போர்களுக்கு தலைமை தாங்கினார் என்பது தலைவருக்கு தெரியும் ,தளபதிகளுக்கு தெரியும் கூடப் போரிட்ட போராளிகளுக்கு தெரியும் . அங்கு இருந்த மக்களுக்கு தெரியும் ...என்ன தான் குத்தி முறிஞ்சாலும் வரலாற்றை மாத்த முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

நீங்க என்ன தான் குத்தி முறிஞ்சாலும் உண்மையை மறைக்க முடியாது...

ஜெயந்தன் படையணி எங்கு எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியுமா?

முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கும்மான் நின்றாரா?

அந்த சின்னப்பிள்ளைகளை கூட்டி வாருங்கள்

கும்மான் தலமை தாங்கிய போர்களை எழுதுங்கள்

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.