Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Hagia-Sophia-Istanbul-museum-reverts-to-mosque-720x450.jpg

இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா அருங்காட்சியகம் மசூதியாக மாறுகிறது- பாப்பரசர் கவலை

இஸ்தான்புல்லின் ஹாகியா சோபியா (Hagia Sophia) அருங்காட்சியகத்தை மீண்டும் மசூதியாக மாற்றுவதற்கு துருக்கி எடுத்த முடிவால் கவலையடைவதாக புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஹாகியா சோபியா அருங்காட்சியகம் விடயத்தில் துருக்கியின் முடிவு கவலைக்குரியது. இஸ்தான்புல்லின் சாண்டா சோபியாவைப் பற்றி நினைத்து கவலையடைகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹாகியா சோபியா அருங்காட்சியகம் சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ ஆலயமாக கட்டப்பட்டது. எனினும் 1453ஆம் ஆண்டில் ஓட்டோமான் (Ottoman) வெற்றியின் பின்னர் ஒரு மசூதியாக மாறியது.

பின்னர், 1934இல் துருக்கிய குடியரசின் ஸ்தாபக தந்தை அடதுர்க்கின் கீழ் ஒரு அருங்காட்சியகமாக மாறியது.

ஆனால், இந்த வார தொடக்கத்தில் துருக்கிய நீதிமன்றம் ஹாகியா சோபியாவின் அருங்காட்சியக நிலையை இரத்துச் செய்தது. அதனை மசூதியாகத் தவிர வேறு எதற்காகவும் பயன்படுத்துவது சட்டப்படி சாத்தியமில்லை என அறிவித்தது.

இந்நிலையில் வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஹாகியா சோபியாவில் இஸ்லாமிய தொழுகைகள் இடம்பெறும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/இஸ்தான்புல்லின்-ஹாகியா-ச/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாப்பரசர்கள் தொல்லை தாங்க ஏலாமல் கிடக்குது.

துருக்கியர் (முகம்மதியர்) கையிலிருக்கும், புனிததலம் ஜெரூசலத்தினை பிடியுங்கள் ஜரோப்பிய கிறிஸ்தவர்களே என்றார்... பதினொன்றாம் நூறாண்டில் ஒரு பாப்பரசர்.

பல நூறாண்டுகள் நீடித்த சிலுவை யுத்தம் ஆரம்பித்தது. ஜெரூசலம் யூதர்கள் கையில் சிக்கும் வரை தொடர்ந்தது.

இப்ப, அவர்கள் நாட்டில் இகுக்கும் மியூசியம், மசூதி ஆவது குறித்து கவலைப்படுவதேன்?

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.

38 minutes ago, Nathamuni said:

இப்ப, அவர்கள் நாட்டில் இகுக்கும் மியூசியம், மசூதி ஆவது குறித்து கவலைப்படுவதேன்?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.

சண்டை பிடித்து... ஜெரூசலத்தினை பிடித்த பிறகு இப்ப என்ன வேணுமாம்?

கோணேஸ்வரம்.... கோகர்ண... கதை மாதிரி தானே.

8 minutes ago, Kadancha said:

அது ஒரு church ஆகவே முதலில் தாபிக்கப்பட்டது என்ற வரலாறும் உள்ளது. அதன் அமைப்பும் அவரே தெரிகிறது.

உண்மை 5 ம் நூற்றாண்டுல் இருந்து கிறிஸ்தவ தேவாலயமாக இருந்த Hagia Sophia 1453 ல் ஒட்டமான் பேரரசு Constantinople ஐ கைப்பற்றிய போது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர் முதல் உலகப் போரினால்  ஒட்டமான் பேரரசின்  வீழ்சசியின் பின்னர் 1935 ல் அருங்காட்சியகமாக மாறியது. இப்போது எர்டோவான், மகிந்த பாணியில்  முஸ்லீம் மதவாதத்தை  ஊட்டி அரசியல் இலாபமடைவதற்காக மசூதியாக்குகிறார்.    

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ சட்டுப்புட்டு என்டு முடியுங்கோ.சேவர் தாங்காது.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏதோ சட்டுப்புட்டு என்டு முடியுங்கோ.சேவர் தாங்காது.

பிரச்சணை ஒண்டும் இல்லை பாருங்கோ...

நானும் இந்த தேவாலய சரித்திரம் வாசித்தனான்.... நடந்தது பிழை தான்.

இதை பத்தி குறை சொல்ல போப்பருக்கு அருகதை இல்லை. காரணம் சிலுவையுத்தம்.

கிறிஸ்தவ இஸ்லாமிய சிலுவையுத்தம் இன்றும் வேறு விதத்தில் தொடர்கிறது.

அதுதான்  எனது பாயிண்ட்....

இதை தவறு என்று பேசவேண்டியது, கிறிஸ்தவ நாடுகளின் ராஜதந்திரம். போப்பர் அல்ல....

98 வீதம் முஸ்லீம் மக்கள் உள்ள நாட்டில், மத வாத அரசியல் தேவையில்லையே. (கிறிஸ்தவர் 0.8%)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதே Theory ஐ இலங்கையிலும் apply பண்ணலாமா 🤥

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

இதே Theory ஐ இலங்கையிலும் apply பண்ணலாமா 🤥

இல்லையே....

இலங்கையில் 70% பௌத்தர்கள்.

தாங்களாக போர் செய்து பிடிக்க முடியாத ஐரோப்பியர்கள் பிடித்துக் கொடுத்ததால், தமிழர் நாட்டினை வைத்துக் கொண்டு, சிறுபான்மை என்று இந்துக்களை, இஸ்லாமியரை சொல்ல முடியுமா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இல்லையே....

இலங்கையில் 70% பௌத்தர்கள்.

தாங்களாக போர் செய்து பிடிக்க முடியாத ஐரோப்பியர்கள் பிடித்துக் கொடுத்ததால், தமிழர் நாட்டினை வைத்துக் கொண்டு, சிறுபான்மை என்று இந்துக்களை, இஸ்லாமியரை சொல்ல முடியுமா என்ன?

இதுவும் வரலாறுதானே. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

உண்மை 5 ம் நூற்றாண்டுல் இருந்து கிறிஸ்தவ தேவாலயமாக இருந்த Hagia Sophia 1453 ல் ஒட்டமான் பேரரசு Constantinople ஐ கைப்பற்றிய போது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர் முதல் உலகப் போரினால்  ஒட்டமான் பேரரசின்  வீழ்சசியின் பின்னர் 1935 ல் அருங்காட்சியகமாக மாறியது. இப்போது எர்டோவான், மகிந்த பாணியில்  முஸ்லீம் மதவாதத்தை  ஊட்டி அரசியல் இலாபமடைவதற்காக மசூதியாக்குகிறார்.    

மிகவும் உண்மை. 

நான் 2003ம் ஆண்டு இஸ்தான்புல்லில் இருக்கும் இந்த நூதனசாலைக்கு சென்றேன். மிகவும் அற்புமான‌ ஒரு இடம். இந்த நாட்டில் இருக்கும் எல்ல பள்ளிவாசல்களும் கிறிஸ்தவ ஆலய அமைப்பையே கொண்டுள்ளது. இதன் மினராட் எனப்படும் கோபுரம் பள்ளிவாசால் கோபுரம் போன்று இருக்காது. கிறிஸ்தவ ஆலாயத்தின் ஊசியான கூர்மை முனைபோல் இருக்கும். 

இங்கிருக்கும் இன்னொரு இடத்தின் பெயர் எபிசஸ் இதுதான் வேதாமத்தில் உள்ள ஒரு நிருபமான புனித பவுல் எபேசியரின் சபைக்கு எழுதிய நிருபம் எனப்படும்.

இங்கு வாழ்ந்தவர்கள் கிறிஸ்தவர்கள் அவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, colomban said:

அரசன் எவ்வழி,  குடிகள் அவ்வழி 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

உண்மை 5 ம் நூற்றாண்டுல் இருந்து கிறிஸ்தவ தேவாலயமாக இருந்த Hagia Sophia 1453 ல் ஒட்டமான் பேரரசு Constantinople ஐ கைப்பற்றிய போது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர் முதல் உலகப் போரினால்  ஒட்டமான் பேரரசின்  வீழ்சசியின் பின்னர் 1935 ல் அருங்காட்சியகமாக மாறியது. இப்போது எர்டோவான், மகிந்த பாணியில்  முஸ்லீம் மதவாதத்தை  ஊட்டி அரசியல் இலாபமடைவதற்காக மசூதியாக்குகிறார்.    

உண்மையை தெரிவித்திருக்கிறீர்கள் 👍

எர்டோகன் தன்னை ஒரு முஸ்லிம் மதவாத  ஆட்சியை நிறுவ போகும் தலைவராக  காட்டி மக்களிடம் செல்வாக்கை பெற நினைக்கிறார்.

18 hours ago, தமிழ் சிறி said:

வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஹாகியா சோபியாவில் இஸ்லாமிய தொழுகைகள் இடம்பெறும் என துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீன் போன்றவர்களை ஆதரித்து அவர்களிடம் அதிகாரம் வந்தால் நல்லுர் கோயிலுக்கும் Hagia Sophia ன் நிலை தான்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers-5.jpg

துருக்கியிலுள்ள புகழ்பெற்ற ‘ஹாகியா சோபியா’ இஸ்லாமிய வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாகியா சோபியா (Hagia Sophia) மாளிகை இஸ்லாமியர்களின் வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக இன்று திறக்கப்பட்டது.

குறித்த மாளிகை அருங்காட்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில் துருக்கிய நீதிமன்றம் அதனை மசூதியாக மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸ்தான்புல்லில் மக்கள் திரண்டுள்ளனர்.

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers.jpg

ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான இந்த மாளிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் 1934 இல் ஒரு அருங்காட்சியகமாக பதிவிட்டது.

இந்நிலையில், துருக்கிய நீதிமன்றம் அதன் நிலையை இரத்துச் செய்து, மசூதியைத் தவிர வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் அனுமதிக்க முடியாது எனவும் அது சட்டப்படி சாத்தியமில்லை என்றும் அறிவித்தது.

இந்நிலையில், துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன், உலகப் புகழ்பெற்ற இந்த ஹாகியா சோபியா மாளிகையை ஜூலை 24ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பயன்படுத்துவதாக அறிவித்தார்.

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers-3.jpg

இதன்படி, இன்று இந்த மாளிகை தொழுகைக்காக அனுதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் ஆயிரம் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் மூலம் அனுமதிக்கப்பட்டனர் என்பதுடன் ஏனையவர்கள் மாளிகைக்கு வெளியில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இதேவேளை, இந்த மாளிகையை மீண்டும் மசூதியாக மாற்றும் முடிவுக்கு உலகெங்கிலும் உள்ள மத மற்றும் அரசியல் தலைவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஹாகியா சோபியா, கிறிஸ்தவ தேவாலயமாக கட்டப்பட்டது என்பதுடன் இது கட்டப்பட்டு ஒன்பது நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு மசூதியாக மாற்றப்பட்டது.

Hagia-Sophia-Former-Istanbul-museum-welcomes-Muslim-worshippers-6.jpg

https://athavannews.com/துருக்கியிலுள்ள-புகழ்பெ/

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிக்கபபட்டுவரும் பாலஸ்தீனமும் இநதத் துருக்கியின் அடாவடியை ஆதரித்தே நிற்கிறது.  உலகமே ஆக்கிரமிப்பாளர் கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அங்கு நீதியென்பதை தேடுவதே மடமைத்தனமாகும். அது சீனா முதல் அமெரிக்காவரை விதிவிலக்கல்ல. ஒரு ஆக்கிமிப்பாளனால் இன்னொரு ஆக்கிரமிப்பாளனை நோக்கி வினா எழுப்ப முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.