Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன்

 

நிவேதா உதயராஜன்
 

உலகிலேயே மிகவும் கொடுமையான செயல்கள் எனப் பட்டியலிடப்பட்டால்  அதில் முதன்மையாக இருப்பது பாலியல் வன்கொடுமை என்பதாகத்தான் இருக்கும். அன்றுதொட்டே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவந்துள்ளனர்தான் எனினும் அண்மைக்காலங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கேள்விப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கான ஒரு சமத்துவம், சுதந்திரம் என்பன  பேணப்படாத நிலையில் வன்கொடுமை என்பதும் அதிகரித்து எத்தனையோ பேரின் வாழ்வைத் தினம் தினம்  சிதைத்தபடி இருக்கிறது.  அதிலும் சிறுவர் வன்கொடுமை என்பது மிகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உலக நாடுகளெல்லாம் எத்தனையோ சட்ட வரைபுகளைப் பெண்களுக்காக ஏற்படுத்தியுள்ளபோதும், பெண்களுக்கான , சிறுவர்களுக்கான பாலியல் துன்புறுத்துதல் இன்னும் தொடர்வதற்கான காரணம் அதுபற்றி உண்மைகள் வெளியே சரியானபடி தெரிவதில்லை. வெளியே சொல்ல வெட்கப்படுகின்ற பெண்கள்,  பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள், சமூகம் என பெரிய தடைகளைத் தாண்டும் மனோதிடம் பலருக்கும் இல்லாதிருப்பதே இத்தகைய செயலைச் செய்யும் காட்டுமிராண்டிகளை இனங்காண முடியாததாகவும் இருக்கிறது.

பெரிய பெண்கள் தமக்கு நடைபெறும் வன்கொடுமைகளை உணரவும் , எதிர்க்கவும் முடிகின்ற சூழலில் இருக்கின்றபோதும் அதையும் மீறி நடக்கின்ற வன்முறைகள் கொடுமைமிக்கது என்றால், எதுவும் தெரியாத சிறுவர்கள்  தமக்கு நடப்பது வன்முறை என்றே தெரியாது அதற்குப் பலியாகிப் போவது கொடுமையிலும் கொடுமை. அதற்குக் காரணம் இலகுவாக சிறுவயதினர் மிரட்டிப் பயன்படுத்தப்படுவதும், என்ன நடக்கிறது என்பது புரியாததாலும், இப்படியானது சாதாரணமாக எல்லோருக்கும் நடப்பது போன்று அவர்கள் நம்பவைக்கப்படுவதும் காலங்காலமாக நடந்துதான் வந்திருக்கிறது. அதிலும் தம் வீட்டில் இருக்கும் உறவினர், நண்பர்கள், வீட்டில் வாடகைக்குத் தங்கி இருப்போர், பாடசாலை ஆசிரியர்கள், ஏன் உரிமையாய் வீட்டுக்குள்ளேயே நடமாடும் தாயாரின் தந்தையாலோ அல்லது தந்தையின் தந்தையாலோ, அதைவிடக்கொடுமையாக பெற்ற தந்தையாலும் கூட பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியபடிதான் இருக்கின்றனர்.

இந்த விடயத்தில் முக்கியமாக கவனமாக இருக்கவேண்டியது பெற்றோரின் கடமைதான் எனினும் தந்தையை விடத் தாய்க்கே அந்தப் பொறுப்பு அதிகமாகிறது. ஒரு சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமையைத் தன்  தாய்க்குச் சொல்லக்கூடிய துணிவை அவர்கள் பெறும்படி பிள்ளைகளுடன் உறவைப் பேணுவது மிக முக்கியமானது. அதைவிட பல பிள்ளைகள் குற்றச்சாட்டுகளைக் கூறும்போது பல பெற்றோர் அதைக் காது கொடுத்துக் கேட்பதும் இல்லை. அந்தப் பிள்ளை கூறுவதை நம்புவதுமில்லை. எப்போது நாம் கூறுவதை என் பெற்றோர் கேட்க்கின்றனர், அவர்களிடம் நாம் எந்த விடயத்தையும் கூறலாம், அவர்கள் மட்டும் தான் எம்மைக் காப்பாறுவார்கள் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளிடம் ஏற்படுத்தவேண்டும். பிள்ளை கூறுவதை நம்பாமல் இவள்/ இவன் பொய் கூறுகின்றனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டு நாம் பிள்ளைகளைக் கடிந்துகொண்டால் , பெரியோர் எம்மை நம்பப்போவதில்லை என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை பிள்ளைகளுக்கு ஏற்பட்டு அவர்கள் அதன்பிறகு நடக்கும் தொடர் வன்முறைகளைக் கூட எம்மிடம் பகிர்ந்துகொள்ளாது தம்முள்ளேயே போட்டு மூடி, அவர்களை மீள முடியாத இக்கட்டில் தள்ளுவதற்கு ஏதுவாகிவிடும்.

பள்ளி சென்று வரும் உங்கள் பிள்ளைகளுடன் மனந்திறந்து உரையாடுங்கள், அவர்கள் சோர்வாகத் தெரிந்தால்  உரியவாறு அவர்களுடன் பேசிப் பிரச்சனை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களோ உறவினர்களோ வீட்டுக்கு வந்தால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள். உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள், நண்பர்களின் பெற்றோர், இன்னும் அவர்களுடன் தொடர்புடைய அனைத்து ஆண்பெண்களுடனும் அவதானமாக இருங்கள். நான் ஏன் பெண்களையும் என்று கூறுகிறேன் என்றால் சில பெண்கள் கூட தன் கணவனின் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர்கள் செய்யும் வன்கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

ஆகவே ஒவ்வொரு பெண்களும் விழிப்புடன் இருக்கவேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் ஆண்களைக்கூட அப்பப்போ அவதானிக்கவேண்டும். என் கணவர் தானே நல்லவர் என்னும் முட்டாள்தனமான நம்பிக்கையுடனேயே பலர் நடப்பவற்றைக் கண்டும் காணாமலும் அல்லது அதை வெளியே எப்படிச் சொல்வது எண்ணம் தயக்கத்தில் பேசாமல் இருக்கின்றனர். அது மிகவும் தவறான அணுகுமுறையாகும். உங்களுக்கு ஒரு விடயத்தில் சந்தேகம் ஒன்று ஏற்பட்டிருப்பின் உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் அந்த விடயம் பற்றி உரையாடித் தெளிவுபெறுவதும், சரியான முடிவை எடுத்து செயல்படுத்துவதும் மிக அவசியமான ஒன்றாகும். அதைவிடப் பாதிக்கப்பட்டவர்களின் வலியைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உடல், உளரீதியான ஒத்துழைப்பையும் பாதுகாப்பையும் ,நம்பிக்கையையும் கொடுக்கவேண்டியது மிகமிக முக்கியமானது. அதைவிடத் தவறு செய்தவர் யாராய் இருப்பினும் தண்டனை பெற்றுத் தரவேண்டியதும் மிக மிக அவசியமான ஒன்று.

எங்கள் பிள்ளைகளை எம்மைத் தவிர எவருமே பாதுகாக்க முடியாது. பணம் பணம் எனப் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்காது ஒரு குறிப்பிட்ட வயதுவரை உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் இருப்பதும், அவர்களை புரிந்துகொள்வதும், அவர்களுக்கு உங்கள்பல நம்பிக்கையை ஏற்படுத்துவதும் ஒரு ஆரோக்கியமான பிள்ளை இந்தச் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ வழிசெய்யும். உங்கள் வீடுகளில் கண்டவர்களையும் வாடகைக்கு அமர்த்தாது உங்கள் குழந்தைகள் ஓடிவிளையாடி சுதந்திரமாய் இருப்பதற்கான சுற்றுச் சூழலை உருவாக்குவது பிள்ளைகளை பெற்றவர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமை. புலம்பெயர் சூழலில் மற்றவர்களின் வாழ்க்கைத் தராததுக்கு எம்மையும் உயர்த்தவேண்டும் என்னும் பேராசை காரணமாகவே பல பெற்றோர்கள் இரு வேலை, இரவுநேர வேலை, பிள்ளைகளை வீட்டில் தனியாக விடுதல், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வது போன்ற தவறுகளை செய்கின்றனர். அதுவே பின்னர் பிள்ளைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாகிறது. பேராசை கொள்ளாத போதும் என்ற மனமும், மற்றவர் வாழ்வோடு ஒப்பிடாத நிலையும், எளிமையான ஆரோக்கியமான வாழ்வுமே எம் புலம்பெயர் சமூகத்தை உயர் நிலைக்குக் கொண்டுவரும்.

கொரோனாவின் பின்னாவது ஒவ்வொருவரும் உலக வாழ்வைப்பற்றிச் சிந்திக்க வேண்டும். எத்தனை பணம் வைத்திருந்தும் பயனின்றி இறந்தவர் எத்தனைபேர். நாம் எப்போதும் இறந்துபோகலாம். இறக்கும் வரை எப்படி வாழ்ந்தோம் என்பதில்தான் எம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து மனித நேயத்துடனும், அன்போடும், அகந்தை துறந்தும் வாழ்வோமானால் அதுவே உயரிய வாழ்வு.

நிவேதா உதயராஜன்-ஐக்கிய இராச்சியம்
 

https://naduweb.com/?p=14998

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை எழுதியவரும் யாழ் கள உறுப்பினர் தானே ! அவ கொண்டு வந்து இணைக்க மாட்டாவோ😠 ..நீங்கள் இவர்களுடைய பி/ஏ வா ?
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

கட்டுரையை எழுதியவரும் யாழ் கள உறுப்பினர் தானே ! அவ கொண்டு வந்து இணைக்க மாட்டாவோ😠 ..நீங்கள் இவர்களுடைய பி/ஏ வா ?
 

யாழில் இப்படியான சிந்திக்கவைக்கும் கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என்பதால்தானே சமையல் குறிப்புக்குள் போய்விட்டா😜 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

யாழில் இப்படியான சிந்திக்கவைக்கும் கட்டுரைகளுக்கு வரவேற்பு இருக்காது என்பதால்தானே சமையல் குறிப்புக்குள் போய்விட்டா😜 

அவ அதற்காக சமையலோடு நிக்கேல்ல ... உங்கள மாதிரி ஆட்கள் கொண்டு வந்து இணைப்பினம் என்று அவக்கு தெரியும் ...அத்தோடு யாழை மூலதனமாய்  வைச்சு சமையல் மூலமாகவும் தன்ட வருமானத்தை பெருக்கலாம் என்று பார்க்கிறா tw_lol:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை பற்றி சொல்ல வேண்டுமானால் காலத்திற்கேற்ப தேவையான கட்டுரை ...அண்மையில் இலங்கையில் கூட ஒரு பத்து வயதுப் பெண் தாயினது கள்ள புருசனால் சீரழிக்கப்பட்டு ,இரத்த போக்கு அதிகமாகி சாகும் தருவாயில் ஆஸ்பத்தியில் பாம்பு கடித்தது என்று சொல்லி சேர்த்திருக்கிறால் அந்த தாய் என்னும் பாதகி ...இதெல்லாம் அந்த பாதகிக்கு தெரிந்தே நடந்திருக்கு ...அந்த **** தப்பிட்டுது ...அந்த பெட்டையின் தம்பிமார் சாட்சி சொல்லி இருக்கினம் ...என்னை  பொறுத்த வரை செய்தவனை தண்டிக்கிறதை விட  அந்த தாய் என்னும் பாதகத்தியை தூக்கில் போட வேண்டும்.

தெரியாதவர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்குவதை விட தெரிந்த குடும்ப உறவுமுறைகளால் வன்முறைக்கு ஆளாகுவர்களே அதிகம்...ஒரு குடும்பத்தில் தாய் தான் குழந்தைகள் விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டும் என்று சுமோ சொல்வது சரி 
 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் இணைப்புக்கு

51 minutes ago, ரதி said:

அவ அதற்காக சமையலோடு நிக்கேல்ல ... உங்கள மாதிரி ஆட்கள் கொண்டு வந்து இணைப்பினம் என்று அவக்கு தெரியும் ...அத்தோடு யாழை மூலதனமாய்  வைச்சு சமையல் மூலமாகவும் தன்ட வருமானத்தை பெருக்கலாம் என்று பார்க்கிறா tw_lol:

நல்ல வருமானம். அதை வைச்சே ஒரு பெரிய பங்களா வாங்குவம் எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். 😀

 

38 minutes ago, ரதி said:

 

தெரியாதவர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்குவதை விட தெரிந்த குடும்ப உறவுமுறைகளால் வன்முறைக்கு ஆளாகுவர்களே அதிகம்...ஒரு குடும்பத்தில் தாய் தான் குழந்தைகள் விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டும் என்று சுமோ சொல்வது சரி 
 

யாழில் இதை இணைக்காததுக்குக் காரணம் நீங்கள் சொன்ன மாதிரி எப்படியும் கிருபன் இணைப்பார் என்பது😀 .ஒரு சிறுகதை எழுதி அரைகுறையாக இருக்கு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து.அதனாலதான் இதை இணைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி கிருபன் இணைப்புக்கு

காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு, நாங்கள் தான் பிள்ளைகளை கவனிக்க வேண்டும் கவனமாக,

வழும் புலத்தில் விழிப்பாக இருப்பது நன்று 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை........!   🤔

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றி கிருபன் இணைப்புக்கு

நல்ல வருமானம். அதை வைச்சே ஒரு பெரிய பங்களா வாங்குவம் எண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறன். 😀

எடுத்தவுடனேயே காசு கொட்டும் என்று  எதிர்ப்பார்க்க கூடாது ...செய்யும் சமையலை எப்படி மற்றவர்களிடம்  இருந்து வித்தியாசமாய் செய்யலாம் என்று யோசியுங்கோ tw_lol:

 

 

யாழில் இதை இணைக்காததுக்குக் காரணம் நீங்கள் சொன்ன மாதிரி எப்படியும் கிருபன் இணைப்பார் என்பது😀 .ஒரு சிறுகதை எழுதி அரைகுறையாக இருக்கு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து.அதனாலதான் இதை இணைக்கவில்லை. 

கதையையாவது பஞ்சி பாராமல் நேரத்திற்கு இணையுங்கோ ...இப்ப பாருங்கோ உங்களுக்கு விழ வேண்டிய பச்சையை கிருபன் வெட்கமில்லாமல் தானெடுத்து போட்டார்😂

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

  • கருத்துக்கள உறவுகள்

விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என உணர்த்தும் ஒரு கட்டுரை. சில விடயங்கள் அடிக்கடி பேசப்படும் பொழுது மக்களிடையே ஓரிரு மாற்றங்களாவது ஏற்படும் என்று நினைப்பதுண்டு. 

சில நாட்களுக்கு முன்பு “ சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு” பற்றிய ஒரு மொழிபெயர்ப்பை சமூக சாளரத்தில் இணைத்திருந்தேன். அந்த கட்டுரையில் இணைத்த இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையத்தின் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான படம் ஒன்றை மறுபடியும் இங்கே இணைக்கிறேன். வண்ணத்துப்பூச்சி போன்று பல வர்ணங்களில் பறக்கும் சிறுவர்களை துன்புறுத்தும் மனிதர்களின் பல வடிவங்கள் இவை.

F3-ED0-DAA-B981-4912-85-A3-96-AB2792989-

மேலும் இந்த பெண்கள் சிறுவர்கள் தொடர்பான துன்புறுத்தல்களுக்கு ஒட்டுமொத்தமாக தொழிநுட்ப வளர்ச்சியை கூற முடியாது என நினைக்கிறேன்.. ஒரு சிறு உதாரணம்: 
97/98ல் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி GELT எனும் ஆங்கில வகுப்பில் படித்த பொழுது, அந்த கற்கை நெறி முடியும் தறுவாயில் மாணவர்கள் ஒரு சிறு ஆய்வுக்கட்டுரையை (theory and presentation ) ஆங்கிலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனது வகுப்பில் என்னையும் இன்னொருவரையும் தவிர மற்றைய அனைவரும் மருத்துவ பீட மாணவர்கள் ஆகையால் நாங்கள் “ கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களில் உள்ள பெண்களின் உளவள மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி ஒரு சிறிய ஆய்வை போராசிரியர் தயா சோமசுந்தரம், Dr சிவசங்கர் மற்றும் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் அவர்களின் வழிநடத்தலில் மேற்கொண்டோம். அப்பொழுது இந்த பெண்களை பேட்டி கண்டபொழுதுதான் அவர்கள் எத்தகைய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. அவர்களில் சில பேருடைய கதைகள் இன்னமும் நினைவில் உள்ளது. ஆகையால் இந்த துன்புறுத்தல்கள் தொழிநுட்ப வளர்ச்சியால் மட்டும் வந்த ஒன்று இல்லை. காலங்காலமாக எங்களது சமூகத்தில் கலந்திருக்கும் சில மூடத்தனமான வழிகளாலும் வந்தவையாகும்.. 

உங்களது பிள்ளைகள் உங்களிடம் நம்பிக்கை வைத்து கதைப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், கெட்ட தொடுகை நல்ல தொடுகை பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்தல். பெண்கள் சரி ஆண்கள் சரி தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து சரியான வழிமுறைகளை பின்பற்றி அதற்கான உதவிகளை நாட ஊக்குவிக்குவித்தல் போன்ற வழிகளால் சில துயர் நிகழ்வுகளை தடுக்கலாம்..காயங்கள் மாறினாலும் வடுக்கள் மாறாதவை. 

இந்த கட்டுரையை எழுதிய சுமோ அக்காவிற்கும் இணைத்த கிருபன் அண்ணாவிற்கும் நன்றிகள். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை  தான்

ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே என்பதை  ஏற்கமுடியவில்லை

பதிலாக தொழில்  நுட்ப  வளர்ச்சியே அதை  அதிகம் வெளிக்கொண்டு  வந்துள்ளது

இதன்  காரணமாகத்தான் இவ்வகை குற்றங்கள்  அதிகரித்திருப்பதாக எண்ணத்தோன்று கிறது

ஆனால்  மாறாக  இதன் வளர்ச்சியினால் தான் அதிகம் பேசவும் பாதுகாக்கவும் முடிகிறது

எனவே எல்லாவற்றையும்  எதிர்மாறாக புரிந்து  கொள்ளவோ

எடுத்துக்கொள்ளவோ தேவையில்லை

நன்றி  கட்டுரைக்கும்  இணைப்புக்கும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2020 at 01:03, உடையார் said:

காலத்திற்கு ஏற்ற நல்ல பதிவு, நாங்கள் தான் பிள்ளைகளை கவனிக்க வேண்டும் கவனமாக,

வழும் புலத்தில் விழிப்பாக இருப்பது நன்று 

பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாததனால் தான் அதிக வன்முறைகள்

On 22/7/2020 at 01:09, குமாரசாமி said:

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

 

On 22/7/2020 at 09:39, suvy said:

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை........!   🤔

 

21 hours ago, சுவைப்பிரியன் said:

நல்லதொரு விழிப்புணர்வுக் கட்டுரை. 

நன்றி குமாரசாமி, நன்றி சுவி, அண்ணா நன்றி சுவைப்பிரியன்.

2 hours ago, பையன்26 said:

யூடுப்பை ப‌ற்றி ர‌திய‌க்காவுக்கு ஒன்றும் தெரியாது என்று இதில் இருந்து தெரியுது ஹா ஹா 😁😀

யூடுப்பில் ச‌ண‌ல் வ‌ள‌ர‌ முத‌ல் காசு வ‌ராது , குறைந்த‌து 20000ஆயிர‌ம் பேர் சுமெ அம்மாவின் யூடுப் ச‌ண‌ல subscribers செய்து இருக்க‌னும் , வார‌ம் ஒரு காணொளி போட்டாலும் குறைந்த‌து 8மாத‌த்துக்கு பிற‌க்கு தான் us dollar 200க்கு உள்ள‌ தான் வ‌ரும் , 

30ல‌ச்ச‌ம் subscribers வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் காசு ம‌ழையில் மித‌ப்பின‌ம் அக்கா 💪
 

நல்ல காலம் நீங்கள் சொன்னது. அல்லது நம்பவும் மாட்டா 😎

1 hour ago, குமாரசாமி said:

அப்பன்!
ரதி உங்களுக்கு அக்கா இல்லை அன்ரி. சுமேயும் அன்ரிதான்😎

தங்கச்சீட்டை நல்ல திட்டு வாங்கப்போறியள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நல்ல கட்டுரை  தான்

ஆனால் அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர்  தொழில் நுட்ப வளர்ச்சியே என்பதை  ஏற்கமுடியவில்லை

பதிலாக தொழில்  நுட்ப  வளர்ச்சியே அதை  அதிகம் வெளிக்கொண்டு  வந்துள்ளது

இதன்  காரணமாகத்தான் இவ்வகை குற்றங்கள்  அதிகரித்திருப்பதாக எண்ணத்தோன்று கிறது

ஆனால்  மாறாக  இதன் வளர்ச்சியினால் தான் அதிகம் பேசவும் பாதுகாக்கவும் முடிகிறது

எனவே எல்லாவற்றையும்  எதிர்மாறாக புரிந்து  கொள்ளவோ

எடுத்துக்கொள்ளவோ தேவையில்லை

நன்றி  கட்டுரைக்கும்  இணைப்புக்கும்

நீங்கள் கூறுவதும் சரிதான்.

காலத்துக்கு மிக அவசியமான நல்ல கட்டுரை. நன்றி நிவேதா. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/7/2020 at 21:31, கிருபன் said:

இறக்கும் வரை எப்படி வாழ்ந்தோம் என்பதில்தான் எம் வாழ்வின் வெற்றி அடங்கியுள்ளது. இதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து மனித நேயத்துடனும், அன்போடும், அகந்தை துறந்தும் வாழ்வோமானால் அதுவே உயரிய வாழ்வு.

சிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை

கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, வாத்தியார் said:

சிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை

கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்

கட்டுரையாளர்: மெசொபொத்தேமியா-சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

காலத்துக்கு மிக அவசியமான நல்ல கட்டுரை. நன்றி நிவேதா. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

அவசரத்தில் எழுதியது. நானும் பிறகு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம் என எண்ணினேன்.

9 hours ago, வாத்தியார் said:

சிறப்பான காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை

கட்டுரையாளர் இங்கேதான் நிற்கின்றார்

நன்றி வாத்தியார்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

தமிழ்நாடு கொழும்பில் நடந்த அனுபவங்களை பகிர்கின்றார் - எப்படியெல்லாம் சீரழிக்கின்றார்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு காணொளி. பலரும் இவரைப்போல் முன்வந்து சொன்னாலே பலர் பயத்தில் இப்படியான துன்புறுத்தல்களைச் செய்ய மாட்டார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணுக்குள் என்னை விட்டுப்பாதுகாக்க வேணும் ஒரு பதினைந்து ஆண்டுகளாவது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லதொரு காணொளி. பலரும் இவரைப்போல் முன்வந்து சொன்னாலே பலர் பயத்தில் இப்படியான துன்புறுத்தல்களைச் செய்ய மாட்டார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணுக்குள் என்னை விட்டுப்பாதுகாக்க வேணும் ஒரு பதினைந்து ஆண்டுகளாவது.

உண்மையாக எம் பிள்ளைகளை இந்த மிருகம்களிடம் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்கனும்.

ஊருக்கு போகும் போது கவனமாக இருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

உண்மையாக எம் பிள்ளைகளை இந்த மிருகம்களிடம் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்கனும்.

ஊருக்கு போகும் போது கவனமாக இருங்கள்

நான் ஏன் கவனமாக இருக்கவேணும் உடையார் ???

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் ஏன் கவனமாக இருக்கவேணும் உடையார் ???

உங்களை கண்டால் எல்லோரும் பத்தடி தூர ஓடிவிடுவார்கள்😂🤣, அவர்கள் தான் கவனமாக இருக்கனும்

சின்ன பிள்ளைகளுடன் ஊருக்கு போவோர் கவனமாக இருக்கனும் என்று தான் சொல்லவந்தேன், உங்களையால்ல தாயே 🙏

  • கருத்துக்கள உறவுகள்

Child sexual abuse /சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்/ Part 2

என்ன வாழ்கையடா🤔 :  பிள்ளைகள் செல்வதை காது கொடுத்து கேளுங்கள்;  யாரா இருந்தாலும் தூரவே வைத்திருங்கள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.