Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது சொத்து மதிப்பு விபரத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார்.

“இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 44 இலட்சத்து 24 ஆயிரத்து 724.24 ரூபாய் பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் (இலங்கை பெறுமதியில் 44 இலட்சத்திற்கு மேல்) பணமும் 1,210.33 டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 2 இலட்சத்திற்கு மேல்) பணமும் இருக்கின்றன.

இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7ல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன.”

https://newuthayan.com/சொத்து-மதிப்பு-விபரத்தை/

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு 7ல் இருக்கும் அவரது வீட்டின் சீவிய உரித்தில் ஏதாவது மாற்றம் செய்ய வசதி இருக்குமா 😛

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

கொழும்பு 7ல் இருக்கும் அவரது வீட்டின் சீவிய உரித்தில் ஏதாவது மாற்றம் செய்ய வசதி இருக்குமா 😛

மாப்பிளையான சரி😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

சொத்து மதிப்பு விபரத்தை வெளியிட்ட விக்னேஸ்வரன்

wicki.jpg?189db0&189db0

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தனது சொத்து மதிப்பு விபரத்தை இன்று (31) வெளியிட்டுள்ளார்.

“இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 44 இலட்சத்து 24 ஆயிரத்து 724.24 ரூபாய் பணமும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் 9,618.98 பவுண்டுகள் (இலங்கை பெறுமதியில் 44 இலட்சத்திற்கு மேல்) பணமும் 1,210.33 டொலர்கள் (இலங்கை பெறுமதியில் 2 இலட்சத்திற்கு மேல்) பணமும் இருக்கின்றன.

இவைதவிர, யாழ்ப்பாணத்திலுள்ள சண்டிலிப்பாய் இரட்டையபுலத்தில் ஒரு துண்டு காணியும் கொழும்பு 7ல் அவர் வசிக்கும் வீட்டின் மீது சீவிய உரித்தும் அவருக்கு இருக்கின்றன.”

https://newuthayan.com/சொத்து-மதிப்பு-விபரத்தை/

£ 9,618.98 என்றால் இன்றைய நிலையில் 23 இலட்சத்தி 36 ஆயிரம் தானே.

எப்படி 44 இலட்சம்????

1 hour ago, உடையார் said:

மாப்பிளையான சரி😀

அவருக்கு இருப்பதோ இரண்டு ஆண் பிள்ளைகள்; இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 🤣🤣🤣🤣🤣🤣

1 hour ago, MEERA said:

£ 9,618.98 என்றால் இன்றைய நிலையில் 23 இலட்சத்தி 36 ஆயிரம் தானே.

எப்படி 44 இலட்சம்????

இலங்கை தமிழ் ஊடகதுறையின் வங்குரொத்து நிலை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

£ 9,618.98 என்றால் இன்றைய நிலையில் 23 இலட்சத்தி 36 ஆயிரம் தானே.

எப்படி 44 இலட்சம்????

உதயன் அப்படி போடாவிட்டால்த்தான்  யோசிக்கணும்,

அப்ப  வீட்டுக்குள் இருக்கும் மற்றவை எப்ப கணக்கு காட்டப்போகினம் ? முக்கியம் சிறீதரன் அவயல்  காட்டமாட்டினம்  அதுகள் பணத்தை கண்டதே தமிழ்மக்களுக்கு அரசியல் செய்கிறம்  என்று வெளிக்கிட்டபின்தானே ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

அவருக்கு இருப்பதோ இரண்டு ஆண் பிள்ளைகள்; இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 🤣🤣🤣🤣🤣🤣

அட இது தெரியவில்லையே😂🤣

தத்துப் பிள்ளை அல்லது வாரிசாக .... ஏதாவது வழி இருக்கா ... யாராவது உதவணும் பிளீளீளீஸ். 😫

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

அட இது தெரியவில்லையே😂🤣

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி இலங்கை அரசில் போட்டியிடுகிறார். ஆயுத வினியோகத்தரும் வெளிநாட்டு நிதிக்குப் பொறுப்பாக இருந்தவரும் அரசின் பிரச்சாரத்தை ஒழுங்கமைக்கிறார். தனது இரண்டு மகன்களையும் சிங்களத்திற்கு மணம் முடித்தவர் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் முன்னணி வேட்பாளர்....

😫😫😫😫😫😫

ஒண்ணுமே புரியல உலகத்தில...

என்னமோ நடக்குது......

மர்மமாய் இருக்குது......

ஒண்ணுமே புரியல உலகத்தில.....

1 hour ago, Kapithan said:

தனது இரண்டு மகன்களையும் சிங்களத்திற்கு மணம் முடித்தவர் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் முன்னணி வேட்பாளர்....

😫😫😫😫😫😫

அதில் என்ன தவறு ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, MEERA said:

£ 9,618.98 என்றால் இன்றைய நிலையில் 23 இலட்சத்தி 36 ஆயிரம் தானே.

எப்படி 44 இலட்சம்????

ஆள்  கணக்கு வழக்கிலை சரியான விசயகாரன் போலை கிடக்கு :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

அதில் என்ன தவறு ??

கொஞ்சம் ஆள யோசியுங்கள். புரியும். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களுடன் வாழுவது வாழ்வின்  பெரும்பாக்கியம் என்று உருகி கொண்டாடுபவரை பார்க்கையில் இவர் 100 மடங்கு மேல் .

42 minutes ago, Kapithan said:

கொஞ்சம் ஆள யோசியுங்கள். புரியும். 🙂

அவரது இரண்டு புதல்வர்களும் கொழும்பில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்கள். கல்வி, வேலை என்று செல்லும் போது சிங்கள பெண்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்திருக்கும் அதில் தவறேதும் இல்லை. ஒரு வேளை தமிழ் பட வில்லன் போல விக்கியும் தனது பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடுகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Dash said:

அவருக்கு இருப்பதோ இரண்டு ஆண் பிள்ளைகள்; இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 🤣🤣🤣🤣🤣🤣

இலங்கை தமிழ் ஊடகதுறையின் வங்குரொத்து நிலை

4 hours ago, உடையார் said:

அட இது தெரியவில்லையே😂🤣

அந்த ஆண்பிள்ளைகள் தம்மை பறிகொடுத்தது சிங்கள அழகிகளில் - அவர்களில் ஒருவர் மொட்டுக்கட்சி வாசுதேவ நாணயக்காரவின் மகள். தமிழரின் தாயகம் கொழும்பு 7 பறிபோகிறது - அண்ணன் சீமானை கூப்பிடுங்கள் நீதியரசரை காப்பாற்ற.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

அவரது இரண்டு புதல்வர்களும் கொழும்பில் பிறந்து அங்கேயே வளர்ந்தவர்கள். கல்வி, வேலை என்று செல்லும் போது சிங்கள பெண்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்திருக்கும் அதில் தவறேதும் இல்லை. ஒரு வேளை தமிழ் பட வில்லன் போல விக்கியும் தனது பிள்ளைகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடுகிறீர்களா?

ஐயா,

கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள் என்றால் திரும்பவும் கொல்லைக்குள்ளேயா ? 

1) விகியின்ர பிள்ளைகள் யாரைத் திருமணம் செய்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதில் நான் தலையிட முடியாது.

2) தனது அடையாளத்தை தொலைத்த ஒருவர் எப்படி மற்றவர்களின் அடையாளத்தைக் காப்பற்ருவார். அப்படிக் காப்பாற்ற விரும்பினாலும் அது முரண் நகை அல்லவா 😁

3) தற்போது தங்களை தமிழர்களின் தலைமையாகக் கூறுவோரைப் பாருங்கள்.

வட மாகாணம்; விக்னேஸ்வரன்- தனது அடையாளத்தைத் தொலைத்தவர்

சுரேஸ் பிறேமச்சந்திரன்  - முன்னாள் EPRLF மண்டையன் குழுத் தலைவர்

சித்தார்த்தன்- PLOTE ல் இருந்துகொண்டு வவுனியாவில் செய்த அழிவு உலகப் பிரசித்தம்

செல்வம்  அடைக்கலநாதன்- போதைப் பொருள் இறக்குமதி, விற்பனையின் பங்காளி.

டக்ளஸ்- சொல்லவே தேவையில்லை

அங்கஜன்- வடமாகாணத்தை கூறுபோட்டு விற்கப்படும் என்பதை தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே போட்டவர்.

ஆனோல்ட்- தனது நலனுக்காக விக்கியிடமிருந்து  பிரிந்து  சுமந்திரனிடம் ஓடியவர். சுமந்திரனின் கருத்துக்கள் தனக்கு பாதகமாக அமையுமோ என்ற சந்தேகம் வந்தவுடன் சுமந்திரனுக்கெதிராக கருத்துரைத்தவர். தனது கருத்து தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாத்கமாக அமையும் என்றவுடன் சுமந்திரனிடம் சென்று மன்னிப்புக் கேட்டவர்

சிறீதரன்- தனது அரசியலுக்காக கிளிநொச்சி / யாழ்ப்பாணம் என்று பிரதேசவாதம் பேசுபவர்.

மென்மேலும்.....

கிழக்கில்..

சந்திரகாந்தன்- எல்லோருக்குமே தெரியும். நான் கூறவேண்டிய அவசியம் இல்லை

முரளீதரன்- விளக்கம் தேவையில்லை

மேலும் பல.....

இப்போ கூறுங்கள்,  எங்கேயோ  பிழைக்குதே..

நமது அரசியல் எங்கே நிற்கிறது..... 

நாம் எங்கே நிற்கிறோம் ...

😫😫😫😫

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சிங்களவர்களுடன் வாழுவது வாழ்வின்  பெரும்பாக்கியம் என்று உருகி கொண்டாடுபவரை பார்க்கையில் இவர் 100 மடங்கு மேல் .

😂😂

ஒருவர் சொல்லின் செல்வர்

மற்ரையவர், செயலின் செல்வர் 😫😫

சொல்லா ? செயலா ? 

😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

😂😂

ஒருவர் சொல்லின் செல்வர்

மற்ரையவர், செயலின் செல்வர் 😫😫

சொல்லா ? செயலா ? 

😜

அப்படி மற்றவர் என்னத்தை 10 வருடங்களாக செய்து கிழித்திருக்கிறார் என்று விளக்கலாமே?

1 hour ago, Eppothum Thamizhan said:

அப்படி மற்றவர் என்னத்தை 10 வருடங்களாக செய்து கிழித்திருக்கிறார் என்று விளக்கலாமே?

ஒண்டும் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

😂😂

ஒருவர் சொல்லின் செல்வர்

மற்ரையவர், செயலின் செல்வர் 😫😫

சொல்லா ? செயலா ? 

😜

அட முதலில் இருந்து ஆரம்பிக்கனுமா ?

அதான் சுமத்திரன் பத்துவருடமாய் தமிழ்மக்களுக்கு என்ன செய்தவர் என்றால் ஓடி ஒளிக்கிறீர்கள் இந்த முறையாவது ஓடாமல் விடை தருவீர்ர்களா ?

நல்லது தன்னும் செய்யவில்லை விட்டு விடலாம்  சுமத்திரன் செய்வது சிங்களவர்களுக்காக தமிழ் இனத்தின் இருப்பையே நாசம் பண்ணும் வேலைகள் யுத்த குற்ற விசாரணைகள் என்ற தமிழ்மக்கள் சார்ந்த பொதுவான இனம்சம்பந்தப்பட்ட வேலையை தன்னிஷ்ட்டபடி குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக பிய்த்து  உதறினவர் விசாரணை முடிந்துவிட்டது என்றும் இனி அதைப்பற்றி கதைக்க  கூடாது என்று சொல்ல இவர் யார் ?  பின் கதவால்  வீட்டுக்குள் புகுந்து வீட்டை உடைத்த ஆள் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

ஐயா,

கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள் என்றால் திரும்பவும் கொல்லைக்குள்ளேயா ? 

1) விகியின்ர பிள்ளைகள் யாரைத் திருமணம் செய்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதில் நான் தலையிட முடியாது.

2) தனது அடையாளத்தை தொலைத்த ஒருவர் எப்படி மற்றவர்களின் அடையாளத்தைக் காப்பற்ருவார். அப்படிக் காப்பாற்ற விரும்பினாலும் அது முரண் நகை அல்லவா 😁

3) தற்போது தங்களை தமிழர்களின் தலைமையாகக் கூறுவோரைப் பாருங்கள்.

வட மாகாணம்; விக்னேஸ்வரன்- தனது அடையாளத்தைத் தொலைத்தவர்

சுரேஸ் பிறேமச்சந்திரன்  - முன்னாள் EPRLF மண்டையன் குழுத் தலைவர்

சித்தார்த்தன்- PLOTE ல் இருந்துகொண்டு வவுனியாவில் செய்த அழிவு உலகப் பிரசித்தம்

செல்வம்  அடைக்கலநாதன்- போதைப் பொருள் இறக்குமதி, விற்பனையின் பங்காளி.

டக்ளஸ்- சொல்லவே தேவையில்லை

அங்கஜன்- வடமாகாணத்தை கூறுபோட்டு விற்கப்படும் என்பதை தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே போட்டவர்.

ஆனோல்ட்- தனது நலனுக்காக விக்கியிடமிருந்து  பிரிந்து  சுமந்திரனிடம் ஓடியவர். சுமந்திரனின் கருத்துக்கள் தனக்கு பாதகமாக அமையுமோ என்ற சந்தேகம் வந்தவுடன் சுமந்திரனுக்கெதிராக கருத்துரைத்தவர். தனது கருத்து தனது எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாத்கமாக அமையும் என்றவுடன் சுமந்திரனிடம் சென்று மன்னிப்புக் கேட்டவர்

சிறீதரன்- தனது அரசியலுக்காக கிளிநொச்சி / யாழ்ப்பாணம் என்று பிரதேசவாதம் பேசுபவர்.

மென்மேலும்.....

கிழக்கில்..

சந்திரகாந்தன்- எல்லோருக்குமே தெரியும். நான் கூறவேண்டிய அவசியம் இல்லை

முரளீதரன்- விளக்கம் தேவையில்லை

மேலும் பல.....

இப்போ கூறுங்கள்,  எங்கேயோ  பிழைக்குதே..

நமது அரசியல் எங்கே நிற்கிறது..... 

நாம் எங்கே நிற்கிறோம் ...

😫😫😫😫

சும்மின் மகனோ/ மகளோ கல்யாணம் கட்ட இன்னும் 7,8 வருசம் இருக்கும் ...அது வரைக்கும் இப்படி எழுதுவோம்.
சும் படித்தவர் ,ஆயுதம் தூக்கவில்லை ,கறை படியாத கைகள் எல்லாவற்றிற்கும் மேலாய் அவரது பிள்ளைகள் சிங்களவரை கட்டவில்லை... ஆகவே அவர் மட்டுமே சிறந்தவர் ...அவரால் மட்டுமே தமிழர்களை ரட்சிக்க முடியும் ...ஆகவே அவருக்கு வோட் போடுவீர் 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கு அசேலம் அடிப்பதற்கு அங்கு ஆயுதம் தூக்கி போராட போராளிகள் தேவையாயிருந்தார்கள்.
போராட்டம் முடிந்து விட்டது ...இங்கேயிருந்து கொண்டு அரசியல் செய்ய படித்த ,ஆயுதம் துக்காதவர்கள் தேவை 😠
 
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

சும்மின் மகனோ/ மகளோ கல்யாணம் கட்ட இன்னும் 7,8 வருசம் இருக்கும் ...அது வரைக்கும் இப்படி எழுதுவோம்.
சும் படித்தவர் ,ஆயுதம் தூக்கவில்லை ,கறை படியாத கைகள் எல்லாவற்றிற்கும் மேலாய் அவரது பிள்ளைகள் சிங்களவரை கட்டவில்லை... ஆகவே அவர் மட்டுமே சிறந்தவர் ...அவரால் மட்டுமே தமிழர்களை ரட்சிக்க முடியும் ...ஆகவே அவருக்கு வோட் போடுவீர் 

சுமந்திரனின் பெயரைப் போடவில்லை என்பதுதான் உங்கள் ஆதங்கமா 😁

அவரையும் போட்டுக்கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்று கூறியது. 😁

என்னுடைய சிறிய விளக்கம் உங்களை பயங்கரமாகக் குழப்புகிறதோ ☹️

உண்மையும் அதுதானே ரதி அக்கா. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அட முதலில் இருந்து ஆரம்பிக்கனுமா ?

அதான் சுமத்திரன் பத்துவருடமாய் தமிழ்மக்களுக்கு என்ன செய்தவர் என்றால் ஓடி ஒளிக்கிறீர்கள் இந்த முறையாவது ஓடாமல் விடை தருவீர்ர்களா ?

நல்லது தன்னும் செய்யவில்லை விட்டு விடலாம்  சுமத்திரன் செய்வது சிங்களவர்களுக்காக தமிழ் இனத்தின் இருப்பையே நாசம் பண்ணும் வேலைகள் யுத்த குற்ற விசாரணைகள் என்ற தமிழ்மக்கள் சார்ந்த பொதுவான இனம்சம்பந்தப்பட்ட வேலையை தன்னிஷ்ட்டபடி குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக பிய்த்து  உதறினவர் விசாரணை முடிந்துவிட்டது என்றும் இனி அதைப்பற்றி கதைக்க  கூடாது என்று சொல்ல இவர் யார் ?  பின் கதவால்  வீட்டுக்குள் புகுந்து வீட்டை உடைத்த ஆள் .

சுமந்திரனை இங்கே உள்ளடக்கவில்லை என்பதுதான் உங்கள் பிரச்சனை என்றால் அவரையும் உள்ளடக்குங்கள். வேண்டாம் என்றா கூறப்போகின்றேன் 😀

மேலே உள்ள ஒப்பீடு இயல்பாகப் போடப்பட்டதுதான். யாரையும் திட்டமிட்டு  உள்ளடக்கவுமில்லை,  விலத்தவுமில்லை. 👍

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

அப்படி மற்றவர் என்னத்தை 10 வருடங்களாக செய்து கிழித்திருக்கிறார் என்று விளக்கலாமே?

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டாதீர்கள் தமிழா.

நமது அரசியலில் நாம் எங்கே நிற்கிறோம் என யோசிப்பதற்கு எழுதப்பட்ட சிறிய விளக்கத்தை சுமந்திரன் என்கின்ற ஒரு மனிதனுடன் மட்டுப்படுத்திவிடாதீர்கள். 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.