Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனம் அம்பாறைக்கு வழங்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

போகிற போக்கில்.. விரைவில், கூட்டமைப்பிலிருந்து...
ரெலோ, புளொட், தமிழரசு கட்சியிலிருந்து  சிலரும்.. 
பிரிந்து சென்று விடுவார்கள் போலுள்ளது.

இல்லை அண்ணா, அப்படி பிரிந்து சென்றால் அவர்களின் அரசியல் வாழ்வு முற்றுப் பெற்று விடும் என்று அவர்களுக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தோற்ற கஜேந்திரன் போகலாம் என்றால் தோற்ற மாவையும் போகலாம்!

ஐந்து வருடம் கிடைக்கும் பதவியில் எவ்வளவோ செய்யலாம் (குடும்பத்திற்கும், கட்சிக்கு கொசுறாகவும்)

கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தோற்றவர்களுக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாது என்று உள்ளதாக ஞாபகம்.

21 minutes ago, தமிழ் சிறி said:

போகிற போக்கில்.. விரைவில், கூட்டமைப்பிலிருந்து...
ரெலோ, புளொட், தமிழரசு கட்சியிலிருந்து  சிலரும்.. 
பிரிந்து சென்று விடுவார்கள் போலுள்ளது.

எப்போதோ வெளியேறி இருப்பார்கள்.

நாயாக பேயாக செருப்பாக இருந்தாலும் வெற்றி வாய்ப்பு கூட்டணியில் இருந்தாலே கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இரா.சம்பந்தன் அவர்கள் தன்னிச்சையாக

இதனை இக்களத்தில் எத்தனை பேர் சொல்லி இருப்பார்கள். எத்தனை உறுப்பினர்களை கூட்டமைப்பு இழந்தது என்பதற்கு நல்ல  உதாரணம். ஜனநாயகம் என்று சொல்லி விட்டு வாய் கிழிய கத்துவதில் பிரயோசனம் இல்லை.

அம்பாறைக்கு ஒரு தமிழ் உறுப்பினர் (இப்போதைய நிலையில்) கிடைத்தால் அளவிலா மகிழ்ச்சி. கருணாவுக்கும் நல்ல ஒரு பதவி கிடைக்க இருப்பதாக கதை உலாவுகிறது. இதன் மூலம் முஸ்லிம்களின் கொட்டத்தை அடக்கலாமா தெரியவில்லை. தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆகாமலாவது இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இழுபறி இருப்பதால் சசிகலா ரவிராஜ் க்கு இந்த இடத்தைக் கொடுத்து பிரச்சனையை குழி தோண்டி புதைக்கப் போகிறார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

கஞ்சா அடைக்கலம் எதிர்த்ததால்தான் இடை நிறுத்தப்பட்ட்தாக அறியமுடிகிறது.

அம்பாறை மாவட்டத்திற்கு கொடுத்தது பிழை இல்லையாம் ஆனால் தன்னிடம் கலந்தாலோசிக்காமல் கொடுத்ததுதான் பிழையாம்.நல்ல விடயங்களை யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வருவது குறைவுதானே.ஐயோ ஐயோ

  • கருத்துக்கள உறவுகள்

உப்புடித்தான் முந்தி ஒரு தமிழ் பேசத் தெரிந்த சிங்களவரை வைச்சு.. சம் சும் கும்பல் காய் நகர்த்தப் போக.. அந்தாள் இவையை காய்வெட்டிட்டு மகிந்த பக்கம் ஓடினது.

அப்படி எல்லாம் இப்ப நடக்காது என்று நம்புவோமாக.

அம்பாறை மாவட்டம் முழுவதும் தீவிரமான எம்மவர்களின் பங்களிப்பு மட்டுமே அந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி சனநாயக விருப்பை உரிமையை முன்னிறுத்தி வாக்களிக்க ஊக்கு விக்கும்.

வறுமை.. வேலை வாய்ப்பின்மை.. சக இனங்களின் கெடுபிடிகள் மத்தியில் வாழ வைத்துவிட்டு.. இப்படி அப்படி இட்டு சரிக்கட்டுவதால் மட்டும்.. அந்த மக்கள் உரிமை குறித்து சிந்தித்து வாக்களிக்கச் செய்ய முடியாது.

இதே நிலை தான் டக்கிளசுக்கு வாக்குகளாகவும் விழுகிறது. டக்கிளசுக்கு வாக்களிக்கும் 90% மக்கள் வறுமைக் கோட்டில்.. நாளாந்த சம்பளத்தில் வாழ்க்கை ஓட்டும் ஏழைக் குடும்பங்கள். டக்கிளசுக்கு வாக்குப் போட்டால்.. பிச்சை அல்லது ஏதாவது சலுகைகள்.. கிடைக்கும் என்று நம்பி போடும் வாக்குகளே அவை. மற்றவர்கள் தம்மை கணக்கெடுக்கிறதே இல்லை என்ற ஒரு காரணமும்.. டக்கிளசிற்கான.. ஏழைகளது வாக்கு வங்கி வீழாமல் இருக்கிறது. அந்த மக்கள் உண்மையில் டக்கிளசால் பெரிய வாழ்வாதார முன்னேற்றங்களை அடையாத போதும்.. மற்ற எவருமே கவனிக்காத நிலையில் அவர்கள் டக்கிளசே கதி என்று இருக்க விடப்பட்டுள்ளனர். இதனை டக்கிளசும் தந்திரமாக பாவித்து வருகிறார்.. சிங்கள அரசின் அரச படைகளின் தயவோடு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முடிந்த வரை விரட்டிக்கொண்டே இருப்போம் இவர்களை அடுத்த எலக்சன் அதாவது மாகாண சபை எலக்சனுக்கு பிள்ளையான் கட்சியையும் இறக்க இருக்கிறோம் அம்பாறையில் 

அது உங்கள் பிரதேசம், அவர்கள்  உங்கள் தலைவர்கள், நீங்கள் அவர்களை ஏற்கலாம், இறக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நான் அதுபற்றிப் பேசவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TNA.jpg

தேசியப் பட்டியல் ஆசனம் – தமிழரசுக் கட்சிக்குள் நீடிக்கும் சர்ச்சை: சம்பந்தன் அவசரக் கடிதம்

தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை அனப்பிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறித்த கடிதத்தில், ‘தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதற்கான பதில் கடிதத்தை சம்பந்தனுக்கு நேற்று இரவு மாவை சேனாதிராஜா அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய ‘தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பாக பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேசி பொருத்தமான முடிவு எடுப்பேன்’ என்று தனது பதிலில் மாவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் புளொட், ரெலோ தலைவர்களுடன் மாவை சேனாதிராஜா இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தமிழரசுக் கட்சிச் செயலாளர் துரைராஜசிங்கம் நேற்று வெளியிட்ட இந்த அறிவிப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் எவ்வித கலந்துரையாடலையும் கட்சி தலைமைகள் மேற்கொள்ளவில்லை என தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியிருந்தார்.

அத்தோடு, கட்சித் தலைவரான தனக்கும் தெரியாமல்தான் தேசியப் பட்டியலுக்கு கலையரசனை நியமிப்பது என்ற முடிவு மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையிலேயே தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக மீண்டும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://athavannews.com/தேசியப்-பட்டியல்-ஆசனம்-த/

13 hours ago, தமிழ் சிறி said:

போகிற போக்கில்.. விரைவில், கூட்டமைப்பிலிருந்து...
ரெலோ, புளொட், தமிழரசு கட்சியிலிருந்து  சிலரும்.. 
பிரிந்து சென்று விடுவார்கள் போலுள்ளது.

நிச்சயமாக நடக்காது. ஒரு வேளை சித்தார்த்தன் பிரிந்து போய் தேர்தலில் தோற்றாலும் பிரச்சினை இல்லை . அவர் ஒரு படித்த மனிதன். எதாவது செய்து கொள்ளலாம்.

நிச்சயமாக அடைக்கலம் விட்டு போக மாட்டுது. அது போனால் அதோ கதிதான். மனுஷன் சாகுமட்டும் விட்டுப்போகாது. இப்பவே செய்யறது சுத்துமாத்து தொழில். ****

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Robinson cruso said:

நிச்சயமாக அடைக்கலம் விட்டு போக மாட்டுது. அது போனால் அதோ கதிதான். மனுஷன் சாகுமட்டும் விட்டுப்போகாது. இப்பவே செய்யறது சுத்துமாத்து தொழில். *** 

இவ்வளவு நாளா ஏதாச்சும் சேர்க்காமலா இருந்திருப்பார்?

4 hours ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு நாளா ஏதாச்சும் சேர்க்காமலா இருந்திருப்பார்?

சேர்க்காமல் என்ன? மாடி மனை, சொத்து சுகம் எல்லாம் தேடி விடடார்கள். இப்போது ஓய்வுக்காகத்தான் அரசியலில் இருக்கிறார்கள். இருந்தாலும் சித்தார்த்தன் ஒரு படித்தமனிதன் என்று சொல்ல வந்தேன். மற்றவரைப்பற்றி எழுதவே தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி உறுதியானது! அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
https://www.tamilwin.com/election/01/253224?ref=home-imp-parsely


வடை போச்சு

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Robinson cruso said:

சேர்க்காமல் என்ன? மாடி மனை, சொத்து சுகம் எல்லாம் தேடி விடடார்கள். இப்போது ஓய்வுக்காகத்தான் அரசியலில் இருக்கிறார்கள். இருந்தாலும் சித்தார்த்தன் ஒரு படித்தமனிதன் என்று சொல்ல வந்தேன். மற்றவரைப்பற்றி எழுதவே தேவை இல்லை.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவா என்பது முதுமொழி. 

அவரின் கடந்தகால செயற்பாடுகள் படித்த, பண்புள்ள என்பதற்குள் வரா ☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 07:48, nedukkalapoovan said:

உப்புடித்தான் முந்தி ஒரு தமிழ் பேசத் தெரிந்த சிங்களவரை வைச்சு.. சம் சும் கும்பல் காய் நகர்த்தப் போக.. அந்தாள் இவையை காய்வெட்டிட்டு மகிந்த பக்கம் ஓடினது.

அடுத்த பட்டியலில் சாணக்கியன்  சேரலாம்.

 

On 10/8/2020 at 07:48, nedukkalapoovan said:

டக்கிளசுக்கு வாக்களிக்கும் 90% மக்கள் வறுமைக் கோட்டில்.. நாளாந்த சம்பளத்தில் வாழ்க்கை ஓட்டும் ஏழைக் குடும்பங்கள்

தனது வாக்குத் தேவையை நிறைவு செய்வதற்காகவே, அவர்களை அப்படி தொடர்ந்து வைத்திருக்கிறார்.

முறைமைப்படி முதலமைச்சர் பதவி வரவேண்டியது எனக்குதான் என்று அன்று கத்தியவர்,  இன்று அவர்  தலைவர் பதவிக்கே ஆபத்து வந்துவிட்டுது. "வேலிக்கு வைச்ச முள்ளு காலைத் தைத்து விட்டது." 

7 hours ago, Kapithan said:

ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவா என்பது முதுமொழி. 

அவரின் கடந்தகால செயற்பாடுகள் படித்த, பண்புள்ள என்பதற்குள் வரா ☹️

 

நான் படித்த மனிதன் என்று மட்டுமே கூறினேன். ஏனையவற்றை எனக்கு  எழுத தேவை இருக்காது என நினைக்கிறேன்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.