Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் - மஹிந்த.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் - மஹிந்த.!

1597203316_2.jpg

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைப்பற்றிவிட்டோம். கூட்டமைப்பைவிட அதிக ஆசனங்களைப் பெற்றுத் தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம்."

- இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமராக நான்காவது தடவையாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று முற்பகல் சுபநேரத்தில் அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 9 ஆசனங்களை மட்டும் பெற்றுள்ளது. ஆனால், அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் அதன் பங்காளிக் கட்சிகளும் இணைந்து 11 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. அதாவது யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தலா 2 ஆசனங்களையும், அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் 4 ஆசனங்களையும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையும் நாம் இலகுவாகக் கைப்பற்றியுள்ளோம்.

மட்டக்களப்பில் பிள்ளையான் சிறைக்குள் இருந்துகொண்டே அம்மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார் என்பது மிகவும் விசேட அம்சமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையை நாம் கைப்பற்றியதன் ஊடாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் என்பது நிரூபணமாகியுள்ளது.

கூட்டமைப்பினர் மீது தமிழ் மக்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். அவர்கள் எம்மை நம்புகின்றனர். எனவே, அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சியில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனியாவது திருந்த வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் நீரோட்டத்தில் இருக்காமல் நாட்டினதும் மக்களினதும் நலன்களைக் கருத்தில்கொண்டு அவர்கள் இனிமேல் செயற்பட வேண்டும்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/08/12/15482/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் மனம் இப்ப வேலை செய்யாமல் விட்டு விட்டது என்று தெரியாமல் இந்த ஆள் இடைக்கிடை ஜோக் விட்டு வெறுப்பேத்திக் கொண்டிருக்கிறார் ...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 9 ஆசனங்களை மட்டும் பெற்றுள்ளது. ஆனால், அங்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் அதன் பங்காளிக் கட்சிகளும் இணைந்து 11 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. அதாவது யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தலா 2 ஆசனங்களையும், அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் 4 ஆசனங்களையும், திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தையும் நாம் இலகுவாகக் கைப்பற்றியுள்ளோம்.

iவடக்கு கிழக்கில தாங்கள் பெரும்பான்மையாம்

  • கருத்துக்கள உறவுகள்

உலகளவில் பெருத்த அவமானம், தமிழர் யாரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்காமை. அதை மறைக்க எங்களுக்கு தமிழர் வாக்குத் தேவையில்லை என வீறாப்புபேசினாலும், தோல்வி என்பதை மறைக்க முடியவில்லை. தீர்வு இல்லாமல் நீர்த்துபோகச் செய்யவும், தனக்கு தமிழர் ஆதரவு என்று காட்டவும் அள்ளி இறைத்து, போலிகளை உருவாக்கி, இளைஞரை மயக்கி ஒரு போலி விம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சுமந்திரனின் சுயநலமான பேட்டியோடு முழித்திருந்தால் இந்த வெட்க்கக் கேட்டிலிருந்து தப்பியிருக்கலாம். சுமந்திரன் வந்த வேலை முடிந்துவிட்டது, அதற்கான சன்மானமும் பெற்றிருப்பார். இன்னும் சுமந்திரனை அணைத்து வைத்திருந்தால் உதுகள் தமிழன் என்று சொல்வதற்கே லாயக்கில்லாத ஈனப்பிறவிகள். இல்லை விலகி மற்றவர்களுக்காவது இடம் விட்டிருக்கலாம். உளுத்துப்போன சம்பந்தன் இப்ப கையை கழுவி தப்பப் பாக்குது. உதுக்குத்தான் அடம்பிடிச்சு இவ்வளவு காலமும் இருந்தது.

பாவம் , சிலர் எதை எதையோ எழுதி தங்களை சமாதான படுத்தி கொள்ளுகிறார்கள். இதைத்தான் கையாலாகாத தானம் எண்டு சொல்லுவது. அப்படியாவது திருப்பதுபடட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது ஒன்றரை லட்சம் மக்களைக் கொன்று, ஆயிரக்கணக்கான பெண்களை கூட்டாகப் பாலியல்வன்புணர்வின் பின் கொலைசெய்து, தமிழரின் நிலங்களை அங்குலம் அங்குலமாக ஆக்கிரமித்து நிற்கும் ஒரு மிருகத்தனமான அரசினால் தாம் அழித்த மக்களின் மனங்களை இலகுவில் வென்றுவிட முடியுமா? அப்படி வெல்ல முடிகிறதென்றால், அப்படிப்பட்ட ஒரு இனத்திற்கு தேச விடுதலை என்பது தேவையற்றது.

ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. இன்று சிங்களப் போர்க்குற்றவாளிகளுக்கு தமிழ்ர் தாயகத்தில் கிடைக்கப்பெற்றுள்ள அதிகப்படியான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீது தமிழர்கள் கொண்டிருக்கும் கோபத்தினாலும் ஏமாற்றத்தினாலும் கிடைக்கப்பெற்ற வாக்குகள். 

கூட்டமைப்பு மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போவதற்குக் காரணம் ஒற்றை மனிதர்தான். அவரது தலைமையின் கீழ் கூட்டமைப்பு புலிநீக்கத்திலிருந்து ஆரம்பித்து, தேசிய நீக்கம் செய்து இன்று தமிழர்களை தலைமையற்ற மந்தைக் கூட்டமாக, துடுப்பில்லாத படகாக ஆக்கியிருக்கிறது.

இன்றிருக்கும் கூட்டமைப்பின் தலைமைப் பீடம் முற்றாக அகற்றப்பட்டு மக்கள் மீது உண்மையான அக்கறையும் , தமிழரின் தாயகம், சுயநிர்ணய உரிமை, அநீதிகளுக்கான விசாரணை, நிரந்தரமான அரசியல் தீர்வு ஆகியவற்றினை முன்வைக்கக்கூடிய உண்மையான, சோரம்போகாத தலைமை தேவை. 2009 இற்குப் பின்னர் இப்பதவி வெற்றிடமாகவே இருக்கிறது. 

இன்று எமதினம் அற்ப சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் விலைபோகும் இழிவான நிலையினை அடைந்திருக்கிறது. சொந்த லாப நட்டங்களை மட்டுமே கருத்திற்கொண்டு, மொத்த இனத்தின் நலன்களையும், இருப்பையும் துச்சமென மதித்து பேரினவாதத்துடன் சமரசம் செய்துகொள்ளும் மனப்பாங்கு இன்று பெருகி வருகிறது.

சிங்களப் பெரும்பான்மையினை ஆதரிக்க இக்குழுக்கள் கூறும் காரணங்கள் என்னவாக இருப்பினும், ஈற்றில் இவை யாவுமே எமது நிலையினை இன்றிருக்கும் நிலையிலிருந்து இன்னும் இன்னும் கீழ் நோக்கித் தள்ளும் செயற்பாடாக மட்டுமே பார்க்கமுடியும்.

தமிழரின் மனங்களை வென்றுவிட்டோம் என்றும், தமிழர்கள் எம்மோடு இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு இப்போது பிரச்சினைகள் இல்லையென்றும் பேரினவாதம் கூறுவது நிச்சயமாக தமிழரின் நிலையினை மேம்படுத்தப்போவதில்லை. எமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கு இருக்கக் கூடிய அனைத்து வழிகளையும் பேரினவாதத்தின் இப்படியான பிரச்சாரங்கள் அடைத்துவிடப் போகின்றன. ஆனால், தமிழர்களில் ஒருபகுதியினருக்கு இதன் தாக்கம் புரியப்போவதில்லை அல்லது அப்படிநடந்தாலும் அதுபற்றிக் கவலைப்படும் நிலையில் அவர்கள் இல்லை..

புலிநீக்கமும், தேசிய நீக்கமுமே இன்றைய தமிழரின் தாரகமந்திரம் என்று எண்ணிச் செயற்படும் தமிழர்கள் இருக்கும்வரையில் தமிழினத்திற்கு மீட்சியென்பது ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. எமது மொழி, கலாசார அடையாளங்களை முற்றாகத் தொலைத்துவிடக்கூடிய ஆபத்தில் தமிழர் தாயகத்தின் சில பகுதிகள் வரத் தொடங்கிவிட்டன. சிங்கள் பேரினவாத இனத்தினுள்ளும், பெளத்த மதத்தினுள்ளும் எம்மில் ஒரு பகுதியினர் காலவோட்டத்தில் உள்வாங்கப்படப்போகிறோம்.  எதிர்த்து நிற்பவர்கள் சிறுகச் சிறுக அழிக்கப்படுவோம் அல்லது துரத்தப்படுவோம். 

இதைத் தடுப்பதற்கான நேரிய தலைமை ஒன்றின் தேவை இப்போது மிக அவசியம். 

1 hour ago, ரஞ்சித் said:

 

ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. இன்று சிங்களப் போர்க்குற்றவாளிகளுக்கு தமிழ்ர் தாயகத்தில் கிடைக்கப்பெற்றுள்ள அதிகப்படியான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீது தமிழர்கள் கொண்டிருக்கும் கோபத்தினாலும் ஏமாற்றத்தினாலும் கிடைக்கப்பெற்ற வாக்குகள். 

 

அப்படி என்றால் மாற்றுதலைமைகளுக்கு மக்கள் அந்த வாக்கை போட்டிருப்பார்களே. அந்த மாற்றுதலைமைகளைவிட அதிகப்படியான வாக்குகளையும், வேட்ப்பாளர்களையும் எப்படி அரசு சார்பு கட்சிகள் பெற்றார்கள்?

கூட்ட்டமைப்பில் அவர்களுக்கு வெறுப்பு இருந்தாலும் மாற்றுத் தலைமைகளை ஒரேயடியாக ஏற்க மக்கள் தயாரில்லை என்பது வெளிப்படை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

இன்று எமதினம் அற்ப சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் விலைபோகும் இழிவான நிலையினை அடைந்திருக்கிறது. சொந்த லாப நட்டங்களை மட்டுமே கருத்திற்கொண்டு, மொத்த இனத்தின் நலன்களையும், இருப்பையும் துச்சமென மதித்து பேரினவாதத்துடன் சமரசம் செய்துகொள்ளும் மனப்பாங்கு இன்று பெருகி வருகிறது.

இதுதான் யதார்த்தம். சிங்களவனுடன் சேர்ந்து மக்களை முட்டாளாக்கிய கூட்டம், அவர்களோடு கூட்டுச் சேராத விக்கினேஸ்வரனை தனிமைப்படுத்தி, தங்கள் எஜமானருடன் சேர்ந்து நிதி திருப்பி அனுப்பப்பட்டது என ஒரு நாடகமாடி, பணத்தை அனுப்பாமலோ அல்லது குறித்த காலம் மட்டும் அபிவிருத்திகளை தடுத்து விட்டு நிதி மீள அனுப்பப்பட்டது என்கிற ஒரு போலிக் குற்றச் சாட்டை வைத்து, மக்களிடையே அவருக்கு வெறுப்பை உண்டாக்கி அரசியலில் இருந்து அவரை ஒதுக்குவதற்காக போடப்பட்ட நாடகத்தில் துரதிஷ்ட வசமாக அதே மாட்டிக்கொண்டதுதான் பரிதாபம். வெளிநாட்டுப்பணம், அரசாங்கப்பணம், சலுகைகள் கொட்டியும் தோல்வியில் இருந்து தப்ப முடியவில்லை. அயோக்கியர்களை நம்பி, நலிந்து இயலாதவர்கள் தங்கள் இயலாத் தன்மையை தங்களுக்கு தெரிந்த முறையில் வெளிப்படுத்துவதில் தப்பொன்றுமில்லை. தானும் அதே தோணியில் பயணம் செய்கிறேன் என்று உணராமல் நக்கல் அடிக்கும் கூட்டமும் உண்டு. பாபிலோன் எரியும் போது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் போன்று பலர் நம்மிடையே  இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நான் சிலோனுக்கு ரெலிபோன் எடுத்த போது ஒருவர் சொன்னார்.
இனிவரும் காலங்களில் தமிழர் பிரதேசங்களில் பெரிய அபிவிருத்திகளும்  சிங்கள குடியேற்றங்களும் அமோகமாக இருக்குமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்துவீடு வேண்டாம் என்று திருப்பி அனுப்பி இன்னும் இடம்பெயந்தவர்களுக்கு எந்த வீட்டு வசதியும் செய்யாமல் பணணியது இந்த “வீட்டுக்காரங்கள்” தான் கண்டியளோ😀

 

9 hours ago, குமாரசாமி said:

இன்று நான் சிலோனுக்கு ரெலிபோன் எடுத்த போது ஒருவர் சொன்னார்.
இனிவரும் காலங்களில் தமிழர் பிரதேசங்களில் பெரிய அபிவிருத்திகளும்  சிங்கள குடியேற்றங்களும் அமோகமாக இருக்குமாம்.

இதை நான் முன்னரும் எழுதி இருந்தேன். இரணைமடு குளத்துக்கு மகாவலி நீரை திசைதிருப்பிய கையுடன் இது அமோகமாக நடக்கப்போகின்றது. இதட்கு வடக்கு மாகாண சபையின் முதல்வரும், மாவையும், ஸ்ரீதரனும்தான் பொறுப்புக்கூற வேண்டும். கொண்டச்சி கஜூ பார்மில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கள குடியேற்றமும் ஆரம்பமாக நடவடிக்கை எடுப்பதாக அறியக்கிடைக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.