Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8 hours ago, பெருமாள் said:

நான் ஒரு அபலைப்பெண்ணின் வாக்குகளை களவெடுக்கவில்லையே ?

அப்படி யாராவது  சொன்னால் என் கைகள் சுத்தம் என்று அவ்விடத்திலே மறுபடியும் எண்ணி நிரூபித்து இருப்பன் .

எல்லாவற்றிக்கும் மேல் மிகவும் முக்கியமானது கொண்ட கொள்கையும்  சொன்ன வார்த்தையும் மாற்ற கூடாது அப்படி ஒரு கொள்கை இழப்போ அல்லது வாக்கு தவறினாலோ அதனால் பலபேர் பாதிக்கப்படுமானால் இறப்புத்தான் முடிவு .

உங்கள் பெயரை சித்தார்த்தன் என இன்றே மாற்றிவிடுங்கள். 😂(just for  fun பெருமாள்)

  • Replies 123
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் வாக்கு எண்ணும்போது ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளும் பிரசன்னமாயிருப்பர் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எல்லோரும் குறட்டை விட்டுக்கொண்டா இருந்தார்கள் என்றொரு கேள்வி எழுமல்லவா ? அதற்கான பதில் என்ன 😀

(அதிகாரிகளும் இதற்கு உடந்தை என்று கூறுகிறீர்கள் என்பதை மனதிலிறுத்துங்கள் ☹️)

தல
விருப்பு வாக்கு என்னுமிடத்தில் பெரும்பாலும் மற்றைய கட்சியினர் தலையை போடமாட்டார்களாம் 
கட்சிக்கு எத்தனை ஆசனங்கள் என்று உறுதியானவுடன் பெரும்பாலும் கழண்டுவிடுவார்களாம் , விருப்புவாக்கு எண்ணப்படும் போது எந்த கட்சியின் விருப்பு  வாக்கு எண்ணப்படுகிறதோ  அந்த கட்சியின் முகவர்கள் (சில வேட்பாளர்கள் தமக்கு நம்பிக்கையான பேர்வழியை தான் முகவராகவும்  வைப்பதுண்டாம் (!))மட்டுமே  மும்மூராமியிருப்பார்களாம்.
நன்றாக கவனியுங்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்தால் தான் சாத்தியம் என்று குறிப்பிட்டுள்ளேன் 
இது சாத்தியமே இல்லை என்றில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் பொது வெளியில் மக்களுக்கு சேவை செய்ய என்று வந்து பித்தலாட்டம் பண்ணும் ஒருவர் அப்படி பார்த்தால் விக்கியரில்  இருந்து சகல அரசியல்வாதிகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள் இதில் சுமத்திரன் மாத்திரம் விதி விலக்கானவர் கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

உங்கள் பெயரை சித்தார்த்தன் என இன்றே மாற்றிவிடுங்கள். 😂(just for  fun பெருமாள்)

சித்தார்த்தனை இவ்வளவு மோசமாய் கேவலப்படுத்தியது யாருமில்லை .

கொஞ்ச நாளைக்கு முதல் என்னை   றோ  ஆள் என்று குறிப்பிட்டீர்கள் நல்லகாலம் யாழை றோ  பார்த்து இருந்தால் விழுந்து விழுந்து சிரித்து இருப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

சித்தார்த்தனை இவ்வளவு மோசமாய் கேவலப்படுத்தியது யாருமில்லை .

கொஞ்ச நாளைக்கு முதல் என்னை   றோ  ஆள் என்று குறிப்பிட்டீர்கள் நல்லகாலம் யாழை றோ  பார்த்து இருந்தால் விழுந்து விழுந்து சிரித்து இருப்பார்கள் .

யோவ் பெருமாள் 

சித்தார்த்தன் என்று கூறியது plot சித்தார்த்தனை இல்லையய்யா 😂😂 புத்தபகவானைக் குறிப்பிட்டேன். ஏன்தான் உமது புத்தி குறுக்கால ஓடுதோ தெரியாது 😂😂

உங்களை எந்த இடத்திலும் RAW என்று குறிப்பிடவில்லை. அப்படி நான் எண்ணவுமில்லை. எமது ஆட்களில் பலர் RAW வினுடைய திட்டத்திற்கு தங்களை அறியாமலேயே ஒத்துப்போகிறார்கள் என்று எண்ணியிருக்கிறேன். அம்புட்டுதே 👍

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

நானும் அந்த புத்த பகவானைத்தான் நினைத்தேன்😀 குறட்டை  புகழ் சித்துவை அல்ல 

உண்மையான ரோ ஏஜெண்டு கள்ளவாக்கு சுமத்திரனைத்தான் எண்டு பலமுறை மீடியாவில் உருட்டுகிறார்கள்  உண்மையா ?

என்ன ஆச்சர்யம் என்றால் இலங்கையில் ஜனநாயகம் புகைப்பது போல நீதி மன்றம் போகலாம் என்கின்றனர். அங்கு போனால் மட்டும் ராஜபக்‌ஷ குடும்பம் தலையிடாமல் இருக்குமா இல்லை நீதி வழங்கிய நீதிபதியை மாற்றி தமக்கு தேவையான தீர்ப்பை பெற்றிருப்பார்கள்.

அனால் இதுவரை யாரிடமும்  முதல் 3 இடங்களுக்கு அண்மையில் கூட இருக்காத சுமந்திரன் எப்படி 2ம் இடத்துக்கு வந்தார்.

ஏன் வாக்கு முடிவை  அதிகாலை 2 மணிவரை வைத்து இழுத்தடித்தார்கள்.

இங்கே சசிகலா தரப்பு முடிவை பிழையான விளங்கி கொண்டார் என்ற வாதம் முன்வைக்கப்படுகுறது; ஆனால் 90% வாக்குகள் எண்ணி முடிந்த நிலையில்  முடிவையே முழுமையாக மாற்றும் நிலை வருவது கடினம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

மோசடி நடைபெற்றிருக்கிறது என்று அவர் கருதினால் உடனடியாகவே அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுதான் ச்ரியான அணுகுமுறை. அவரின் மகளும் சட்டத்துறையிலிருப்பவர். நாங்கள் அறிவுரை கூறவேண்டிய இடத்தில் அவர்கள் இருப்பதாக நான் நம்பவில்லை. 🙂

இனிமேல் எந்த சட்ட நடவடிக்கை எடுத்தும் பிரயோசனமில்லை.
புள்ளயிடக் கூடிய அத்தனை இடங்களிலும் சுமந்திரனின் பெயருக்கு புள்ளடி போட்டே பின்னர் எண்ணப்பட்டு அறிவித்திருப்பார்கள்.

அதனால்த் தான் அவ்வளவு நேரம் எடுத்திருக்கிறார்கள்.

இனி அங்கே இருந்த உத்தியோகத்தர்கள் வெளியே வந்து சொன்னாலத் தான் உண்டு.

உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
வாய் திறப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை விட வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. அந்த இடத்தில்  அதை செய்யாதது ஏன் என்று புரியவில்லை. 

வாக்குசீட்டுகளில் புள்ளடியிடப்பட்டபின் மறுவாக்கெண்ணி என்ன முடிவு மாறப்போகிறது! அறிவிலிகளே  சிந்தியுங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Eppothum Thamizhan said:

வாக்குசீட்டுகளில் புள்ளடியிடப்பட்டபின் மறுவாக்கெண்ணி என்ன முடிவு மாறப்போகிறது! அறிவிலிகளே  சிந்தியுங்கள்!!

அப்படி போடப்பட்ட கள்ளவாக்கே அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து நடாத்திய தடயமில்லா ஜனநாயக படுகொலை .

முடிந்தால் மீள் வாக்கு பதிவுக்கு கள்ளவோட்டு சுமத்திரன் தயாரா ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

அப்படி போடப்பட்ட கள்ளவாக்கே அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து நடாத்திய தடயமில்லா ஜனநாயக படுகொலை .

முடிந்தால் மீள் வாக்கு பதிவுக்கு கள்ளவோட்டு சுமத்திரன் தயாரா ?

பெருமாள் விரும்பியோ விரும்பாமலோ எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
இனிமேல் இதைப் பேசி பிரயோசனமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Eppothum Thamizhan said:

வாக்குசீட்டுகளில் புள்ளடியிடப்பட்டபின் மறுவாக்கெண்ணி என்ன முடிவு மாறப்போகிறது! அறிவிலிகளே  சிந்தியுங்கள்!!

அறிவில் ஆதவனே 😜 எ. தமிழா,

முடிவு மாறமாட்டாது என்று நீங்களே முடிவெடுத்த பின் எதற்காக கூக்குரலிடுகிறீர்கள் ? 

எங்கள் இனத்தின் பழக்க தோசமா அல்லது இயலாமையா 

😜😜😜

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அறிவில் ஆதவனே 😜 எ. தமிழா,

முடிவு மாறமாட்டாது என்று நீங்களே முடிவெடுத்த பின் எதற்காக கூக்குரலிடுகிறீர்கள் ? 

எங்கள் இனத்தின் பழக்க தோசமா அல்லது இயலாமையா 

ஜனநாயக படுகொலையை நடாத்தியபின் உயிர் திரும்பும் என்று யராவது கூறுவார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

ஜனநாயக படுகொலையை நடாத்தியபின் உயிர் திரும்பும் என்று யராவது கூறுவார்களா ?

அப்படியென்றால் என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் ? இலக்கில்லாமல் விரும்பியதைப் பேச முடியாதல்லவா ☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அப்படியென்றால் என்ன செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள் ? இலக்கில்லாமல் விரும்பியதைப் பேச முடியாதல்லவா ☹️

நீங்கள்  வாக்கு களவெடுத்தவனை மகாத்மா போல் பார்க்கிறியள்  நாங்கள் இல்லை வாக்கு திருட்டு சுமத்திரன் என்கிறேன் அதுக்கு இங்கேயே வெருட்டலும்  உருட்டலும்  செய்கிறீர்கள் வாக்கு சாவடியில் சுமத்திரனுக்கு பிடிக்காத ஆட்களை ஆமியை  ஏவி அடிப்போட வைக்கிறியள்  இதெல்லாம் தெரிந்தும் காணாதது போல் சுமத்திரனை  நல்லவர் போல் காட்ட வெளிப்படுவதை  என்னவென்று சொல்வது ?

1 hour ago, Eppothum Thamizhan said:

வாக்குசீட்டுகளில் புள்ளடியிடப்பட்டபின் மறுவாக்கெண்ணி என்ன முடிவு மாறப்போகிறது! அறிவிலிகளே  சிந்தியுங்கள்!!

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை நடைமுறைப்படுவது நீண்டகால நடைமுறை.  அத்தனை வாக்கெண்ணும் உத்தியோகஸ்தரையும் ஏமாற்றுவது கடினமாக இருக்கும். தவறு நடந்துருந்தால் உடனடியாக கண்டு பிடிக்கலாம்  என்பதாலேயே அக்கோரிக்கைக்கான உரிமை  உள்ளது.  அதுவும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்சசியில் நிச்சயமாக வாக்கெண்ணும் இடத்தில் கமரா வசதி இருந்திருக்கும். சுந்திரனின் அரசியலில் எனக்கும் முழுமையான உடன்பாடு இல்லை. ஆனால் குறிப்பிடளவு மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

அறிவில் ஆதவனே 😜 எ. தமிழா,

முடிவு மாறமாட்டாது என்று நீங்களே முடிவெடுத்த பின் எதற்காக கூக்குரலிடுகிறீர்கள் ? 

எங்கள் இனத்தின் பழக்க தோசமா அல்லது இயலாமையா 

😜😜😜

இதுக்கெல்லாம் அறிவின் ஆதவனாக ஒன்றும் இருக்கவேண்டியதில்லை. சாதாரண பொதுஅறிவு இருந்தாலே போதுமே!!

அதற்காக கள்ளனை கள்ளனென்று கூப்பிடும் அதிகாரம் எல்லோருக்கும் இருக்கிறதல்லவா?

இனத்தின் இயலாமை என்று கூறலாம்.ஏனெனில் 15, 20 அதிரடிப்படையுடன் வந்து சொல்வதை செய்யென்றால் யாரும் உயிருக்கு பயந்து செய்யத்தான் வேண்டும். ஆனால் அவருக்கு அப்பு இனித்தான் இறுகப்போகிறது !

6 minutes ago, tulpen said:

உடனடி மறுவாக்கு எண்ணிக்கை கோரிக்கை நடைமுறைப்படுவது நீண்டகால நடைமுறை.  அத்தனை வாக்கெண்ணும் உத்தியோகஸ்தரையும் ஏமாற்றுவது கடினமாக இருக்கும். தவறு நடந்துருந்தால் உடனடியாக கண்டு பிடிக்கலாம்  என்பதாலேயே அக்கோரிக்கைக்கான உரிமை  உள்ளது.  அதுவும் தற்போதைய தகவல் தொழில்நுட்ப வளர்சசியில் நிச்சயமாக வாக்கெண்ணும் இடத்தில் கமரா வசதி இருந்திருக்கும். சுந்திரனின் அரசியலில் எனக்கும் முழுமையான உடன்பாடு இல்லை. ஆனால் குறிப்பிடளவு மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

அப்போ ஆறுமணிக்கே எல்லா வாக்குகளும் எண்ணிமுடிக்கப்பட்டு முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் மானிப்பாய் வாக்குப்பெட்டி மாத்திரம் எப்படி தவறவிடப்பட்டது! அப்படி விடப்பட்டிருந்தாலும் 10 ஆயிரம் வாக்குகளை எண்ண ஏன்  7 மணித்தியாலங்கள் எடுத்தது??

அப்பாவைப்போல் நாங்களும் கொல்லப்பட்டுவிடுவோம் என்று ரவிராஜின் மகள்  கூறியதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதை அனுமானிக்க முடியவில்லையா??

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  வாக்கு களவெடுத்தவனை மகாத்மா போல் பார்க்கிறியள்  நாங்கள் இல்லை வாக்கு திருட்டு சுமத்திரன் என்கிறேன் அதுக்கு இங்கேயே வெருட்டலும்  உருட்டலும்  செய்கிறீர்கள் வாக்கு சாவடியில் சுமத்திரனுக்கு பிடிக்காத ஆட்களை ஆமியை  ஏவி அடிப்போட வைக்கிறியள்  இதெல்லாம் தெரிந்தும் காணாதது போல் சுமத்திரனை  நல்லவர் போல் காட்ட வெளிப்படுவதை  என்னவென்று சொல்வது ?

வாக்கு மோசடி செய்ததாக சிறீதரன் பகிரங்க வாக்குமூலம் கொடுத்தபின்பும் அவரை விட்டுவிட்டு  வாக்கு மோசடி செய்ததாக ஒரு யூகத்தின் அடிப்படையில் சுமந்திரனை மட்டும் இலக்காகாக் கொண்டு இழிவுபடுத்துவதன் நோக்கம் என்ன 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

வாக்கு மோசடி செய்ததாக சிறீதரன் பகிரங்க வாக்குமூலம் கொடுத்தபின்பும் அவரை விட்டுவிட்டு  வாக்கு மோசடி செய்ததாக ஒரு யூகத்தின் அடிப்படையில் சுமந்திரனை மட்டும் இலக்காகாக் கொண்டு இழிவுபடுத்துவதன் நோக்கம் என்ன 😂😂

யூகத்தின் அடிப்படை என்று திசை திருப்ப வேண்டாம் உங்க ஆளுக்கு மாயமந்திரம் தெரிந்து இருக்கு 😁பரவாயில்லை ஆறாவது இடத்தில இருந்தவர் கண்காணிப்பாளர்கள் போனபின் எப்படி மூன்றாம் இடத்துக்கு சாமத்தில்  வந்தார் ? இதுபற்றி பலகேள்விகள் பலதடவை கேட்டு விட்டேன் முடிந்தால் தேடிப்பிடித்து அந்த கேள்விகளுக்கு விடையை தரப்பாருங்கள்  இனிமேலாவது மக்கள் நம்ப கூடியவாறு பொய் சொல்ல பழகுங்கள் 😜

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

யூகத்தின் அடிப்படை என்று திசை திருப்ப வேண்டாம் உங்க ஆளுக்கு மாயமந்திரம் தெரிந்து இருக்கு 😁பரவாயில்லை ஆறாவது இடத்தில இருந்தவர் கண்காணிப்பாளர்கள் போனபின் எப்படி மூன்றாம் இடத்துக்கு சாமத்தில்  வந்தார் ? இதுபற்றி பலகேள்விகள் பலதடவை கேட்டு விட்டேன் முடிந்தால் தேடிப்பிடித்து அந்த கேள்விகளுக்கு விடையை தரப்பாருங்கள்  இனிமேலாவது மக்கள் நம்ப கூடியவாறு பொய் சொல்ல பழகுங்கள் 😜

தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓடவேண்டாம் பெருமாள்.

நிரூபிக்காமல் அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களை யூகம் என்றுதான் கூறமுடியும். 

ஒப்புதல் வாக்குமூலலளித்த சிறிதரனை விட்டுவிட்டு யூகத்தின் அடிப்படையில் இவரை மாத்திரம் நாற அடிப்பதன் நோக்கம் என்ன ☹️

எப்போதும் தமிழன் கவிழ்த்துக் கொட்டியதுபோன்று நீங்களும் கொட்டுங்கள். உண்மை வெளியே வரட்டும். 😀

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓடவேண்டாம் பெருமாள்.

நிரூபிக்காமல் அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களை யூகம் என்றுதான் கூறமுடியும். 

ஒப்புதல் வாக்குமூலலளித்த சிறிதரனை விட்டுவிட்டு யூகத்தின் அடிப்படையில் இவரை மாத்திரம் நாற அடிப்பதன் நோக்கம் என்ன ☹️

எப்போதும் தமிழன் கவிழ்த்துக் கொட்டியதுபோன்று நீங்களும் கொட்டுங்கள். உண்மை வெளியே வரட்டும். 😀

மீண்டும் வேதாளம் இறந்த உடலை தூக்கிக்கொண்டு மரத்தில் ஏறியது ...................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

ஒப்புதல் வாக்குமூலலளித்த சிறிதரனை விட்டுவிட்டு யூகத்தின் அடிப்படையில் இவரை மாத்திரம் நாற அடிப்பதன் நோக்கம் என்ன ☹️

எப்போதும் தமிழன் கவிழ்த்துக் கொட்டியதுபோன்று நீங்களும் கொட்டுங்கள். உண்மை வெளியே வரட்டும். 😀

சித்தார்தனின் காணாளியை  நீங்கள் பார்க்கவில்லையா! தான் வெளியேறும்வரை சுமந்திரன் முதல் ஐந்துக்குள்ளேயே இருக்கவில்லை என்று கூறினாரே ??

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

எப்போதும் தமிழன் கவிழ்த்துக் கொட்டியதுபோன்று நீங்களும் கொட்டுங்கள். உண்மை வெளியே வரட்டும்.

உண்மைதானே உங்களுக்கு வேணும் ?

பொதுவா தேர்தலில் உண்மையாகவே வென்றவர் என்றால் முகம் முழுக்க சிரிப்புடன் மக்களை நோக்கி நன்றி தெரிவித்து இருக்கணும் .

இப்ப அந்த காணொளியை பாருங்கள் செத்த சவம்  போல் முகம் பயத்தில் இருக்குது ஒரு நன்றி கூட தெரிவிக்காமல் உண்மையில் வென்று இருந்தால்தானே ? அதிரடிப்படை பாதுகாப்பில் அந்த இடத்தை விட்டு தலைதெறிக்க ஓடுவதை பார்க்க உங்களுக்கு என்ன மாதிரி தெரியுது ? இப்படியும் ஒரு மனிசன் பிழைக்கணுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தான் எம் இனத்தையும் மண்ணையும் போராட்ட விழுமியங்களையும் எமது இனத்தின் மீதான இனப்படுகொலையையும் கொச்சைப்படுத்தி பிழைப்பு நடத்தும் சுமந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோமே தவிர.. சுமந்திரன் தான் நீதியானவர் என்றால்.. முதலில் பொதுமக்கள் சார்பில்.. பொது வெளியில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்களுடன் அதனை நிராகரிக்க வேண்டும்... இன்றேல்.. ஏற்றுக் கொண்டு பதவி விலக வேண்டும். மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு மக்கள் பிரதிநிதி என்ற போர்வையை போர்க்க முடியாது. 

சுமந்திரன் தன்னை எமக்கான பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பொதுவாழ்வில் இருக்கும் அவர் தன் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும். நாம் எமக்கான பிரதிநிதியாக.. அவரைச் சொல்லச் சொல்லவில்லை. அதுமட்டுமன்றி எம் அழிவுகளை ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும்.. இவர் மீது தான் நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.!

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, பெருமாள் said:

மீண்டும் வேதாளம் இறந்த உடலை தூக்கிக்கொண்டு மரத்தில் ஏறியது ...................

ஐயா,

சிறிதரனை விட்டுவிட்டு இவரை மட்டும் ஏன் இலக்கு வைக்கிறீர்கள் 😀

பதில் இல்லை என்ன 🤥

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.