Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய வழங்கும் 3மில்லியன் வதிவிட உரிமை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹம்பந்தோட்டை குறித்த உங்கள் அவதானிப்பு வேறு விதமாக உள்ளதே.

இன்று நேற்று அல்ல. பல வருடங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தேன்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் போல, ஆசியாவில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தான் மேற்கின் பொருளாதார மையமாக இருக்க கூடிய சாத்தியம் உள்ளது. 

காரணம் இஸ்ரேல் போலவே, வடக்கு, கிழக்கில் மேற்கின் குடியுரிமை கொண்டவர்கள் பலர் வருவார்கள். தமது குடிமக்களான அவர்களை விட, நம்பிக்கை வைக்க கூடியவர்கள் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனம்.

இந்தியாவில் உற்பத்தி மையங்கள் உருவாகையில்,  வங்கியியலில் அந்நாடு பெரும் பின்தங்கியுள்ளதால், நமது பகுதியே, சிங்கப்பூர், ஹொங்கோங்க் ஸ்டைல் வங்கியியல் கட்டமைப்பு உருவாக்க வசதியான இடமாகும்.

ஹொங்கோங் கதை முடிந்தது. சிங்கப்பூர் சீனர்கள் 72%. மலேசியா, இந்தோனேஷியா இஸ்லாமிய நாடுகள். தாய்லாந்து அரசியல் உறுதி இல்லாத நாடு. தென்கொரியாவின் ஆப்பே, வட கொரியா தான். ஆகவே மேற்கு தேடும் அடுத்த பொருளாதாரமயமாக இலங்கையின் வடக்கு-கிழக்கு தான் அமையும். இதுவே எமது பலம். 

மறுபுறத்தே, சீனாவின் பணம், மகிந்தா கம்பெனிக்கு ஆறாக பாய்ந்து தேர்தலில் பெரு வெற்றி பெற வைத்தது. இதுவே அங்கயன் வெற்றிக்கும் காரணம்.

****

மேலும் ஹொங்கொங்கின் 3 மில்லியன் பேரும் முன்னரே பிரிட்டிஷ் கடல் கடந்த பிரதேச நாட்டு கடவுசீட்டுக்கள் (British Overseas Citizens) வைத்திருப்பவர்கள். 

அடுத்ததாக, 3 மில்லியன் பேரும், வீடு வாசல்களை விட்டு வரும் போது, பெரும் பணத்துக்கு விக்க முடியாது. 1983ல் இலங்கையில் நடந்தது போலவே panic selling ஆக இருக்கும்.

அவர்கள் அனைவரும் இஙேகே வர மாட்டார்கள் என்று பிரிட்டிஷ் அரசுக்கு தெரியும். ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, நியூஸிலாந்து போன்ற தெரிவுகளும் அவர்களிடம் உண்டு.

ஆயினும் பிரிட்டனின் இந்த கருத்து, சீனாவுக்கு, பிரிட்டனுடனான, ஹாங்காங் கையளிப்பு ஒப்பந்தம் குறித்து நினைவு படுத்தி விடுத்த சவால்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

இன்று நேற்று அல்ல. பல வருடங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தேன்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் போல, ஆசியாவில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தான் மேற்கின் பொருளாதார மையமாக இருக்க கூடிய சாத்தியம் உள்ளது. 

காரணம் இஸ்ரேல் போலவே, வடக்கு, கிழக்கில் மேற்கின் குடியுரிமை கொண்டவர்கள் பலர் வருவார்கள். தமது குடிமக்களான அவர்களை விட, நம்பிக்கை வைக்க கூடியவர்கள் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனம்.

இந்தியாவில் உற்பத்தி மையங்கள் உருவாகையில்,  வங்கியியலில் அந்நாடு பெரும் பின்தங்கியுள்ளதால், நமது பகுதியே, சிங்கப்பூர், ஹொங்கோங்க் ஸ்டைல் வங்கியியல் கட்டமைப்பு உருவாக்க வசதியான இடமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா யூடர்....

கனவு என்பது உங்கள் தூக்கத்தில் வருவது அல்ல. உங்களை தூங்க விடாமல் தடுப்பது.

இருந்து பாருங்கள்.... சீனாவின் உள்நுழைவினால் தான் எமக்கான விடுதலை வருகிறதா இல்லையா என்று.

ஒவொரு நாணயத்துக்கும் மறு பக்கம் உண்டு அல்லவா.
 
இந்தியா 1987ல் வந்தபோது, அவர்களை அடித்து விரட்டி, ராஜிவ் கதையினை முடித்து, சாதித்தது என்ன தெரியுமா?

சிங்களவர்களிடம் இருந்து, இந்தியர்களிடம் போன வடக்கு கிழக்கினை மீண்டும் சிங்களவனிடம் பறித்து கொடுத்தது... இல்லையா?

பறித்துக் கொடுத்து, கடைசியில் எல்லாம் இழந்து, நாம் மீண்டும் வந்து சேர்ந்தது சதுரம் ஒன்று தானே.  

இந்தியருடன் போரிட்டு இலங்கையின் சுதந்திரத்தினை மீட்டு தந்த வீரமிகு இலங்கையர் பிரபாகரன் என்று சிங்களத்தின் ஜனாதிபதி பிரேமதாச மகிழ்வுடன் சொல்லி வைத்தார்.

இந்தியா 1987ல் விரும்பிய, தடைகள் இல்லாத, அதாவது புலிகள் இல்லாத வடக்கு, கிழக்கு இன்று சாத்தியமாகி உள்ளது.

இலங்கை என்னும் அழகிய கன்னியை, தென் இந்திய ராசாக்கள் முதலிலும், பின்னர் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் கவர்ந்தார்கள்.

இப்போது கன்னி சீனாவினால் கவரப்பட்டுள்ளாள்...

தூரத்தில் இருந்து வருபவர்கள் எல்லாம் கவரும்போது, பக்கத்து வீட்டுக்காரன்.... விடுவானா?

இனி உங்கள் கனவுக்கு... 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

அருமையான பாட்டு ஒன்று தந்தீர்கள். சிலை வடிக்க கல் எடுத்தேன் சிற்றுழியால் செதுக்கி வைத்தேன் சிலைவடித்து  முடிக்கும் முன்னே   தலைவெடித்து போனது அம்மா🤣  ****

  • கருத்துக்கள உறவுகள்

சீனா செய்தது எல்லாமே, ஹாங் காங் இ சீனாவிடம் கையளிக்கும் சீன-பிரித்தானிய இருபக்க உடன்படிக்கை (treaty) மீறாமலேயே நடைபெற்றுள்ளது.

இவ்வளவு (நடிப்பாக) துள்ளும் பிரித்தானியா, rule of law, rule based order  என்று மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் பிரித்தானிய, சீன உடன்படிக்கையை மீறி  இருக்குமாயின், ICJ இல் ஓர் முறைப்பாடு கூட செய்யவில்லை.

ஏன்? 

இந்த US, UK மற்றும் அதன் வாலுகளுக்கு தெரியும், சீனா செய்தது எல்லாமே சட்டப் பிரகாரப் படி. உடன்படிக்கையை மீறவில்லை.      

18 hours ago, Nathamuni said:

ஹொங்கோங் கதை முடிந்தது.

யாருக்கு?

கவியழகன்,  3 மில்லியன் ஹாங் காங் வாசிகளுக்கு, பிரித்தானியா சொல்லிய வதிவிட உரிமை பற்றியதை, serious ஆக எடுத்து இந்த பதிவை செய்து உள்ளீர்கள்  என்பதை நம்ப முடியாமல் உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

யாருக்கு?

கவியழகன்,  3 மில்லியன் ஹாங் காங் வாசிகளுக்கு, பிரித்தானியா சொல்லிய வதிவிட உரிமை பற்றியதை, serious ஆக எடுத்து இந்த பதிவை செய்து உள்ளீர்கள்  என்பதை நம்ப முடியாமல் உள்ளது.  

பொன் முட்டையிடும் வாத்து குரல்வளை நசுக்கப்பட்டு சேடம் இழுக்கிறது.

ஒரு அருமையான பொருளாதார மையம், சீனாவின் முட்டாள்தனத்தினால் இல்லாமல் போகப்போகின்றது.

கொங்கொங் கதை முடிந்தது என்பதன் அர்த்தம், இதுதான்.

மேலும் கவியழகன் சொன்னதை எங்கே சீரியஸ் ஆக எடுத்தேன். எனது கருத்தை அல்லவா சொல்லி உள்ளேன்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருத்துக்கு எதிர்வாதம் எழுத தெரியாமல் நையாண்டியான பாட்டை போட்டு விட்டு ஓடுவது ஆதர இணைப்புக்கள் இல்லாமல் எதிர்வாதம் புரிவது குழுவாய் சேர்ந்து தங்கட ஐடிக்கு தாங்களே பச்சை குத்துவது இன்னும் என்னவெல்லாம் வருமோ ..................

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

பொன் முட்டையிடும் வாத்து குரல்வளை நசுக்கப்பட்டு சேடம் இழுக்கிறது.

ஒரு அருமையான பொருளாதார மையம், சீனாவின் முட்டாள்தனத்தினால் இல்லாமல் போகப்போகின்றது.

கொங்கொங் கதை முடிந்தது என்பதன் அர்த்தம், இதுதான்.

மேலும் கவியழகன் சொன்னதை எங்கே சீரியஸ் ஆக எடுத்தேன். எனது கருத்தை அல்லவா சொல்லி உள்ளேன்.

Hong Kong விடயத்தில் சீனா மிகுந்த பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்துகொள்வதாக எண்ணுகிறேன். அங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் என்பது ஏறக்குறைய ஆரம்ப நிலைக்  கிளர்ச்சி என்ற அடிப்படையிலேயே நோக்கப்படவேண்டும். ஏனென்றால் Hong Kong ன் கிளர்ச்சி என்பது மிகவும் இளையோராலும் அதீத பணக்காறர்களாலும் நடாத்தப்படுவது. அவர்களைத்ட் தூண்டிவிடுவது மேற்கு நாடுகளாகும். Hong Kong ன் வரலாறு இளையோர்களுக்கு புரிவதில்லை. புரிந்தால் தன்மான உணர்வுள்ள எவனும் மேற்குலகுக்கு குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளிக்க மாட்டான். செல்வந்தர்களோ தங்கள் செல்வத்தை சீன அரசின் மேற்பார்வைக்குள் வருவதை விரும்பப்போவதில்லை. 

தவிர, 

கிளர்ச்சி வெற்றிபெறுமானால் அடுத்ததாக வட கொரியா, தாய்வான், சீனாவின் வட மேற்கு மானிலங்கள் போன்றனவற்றிற்கு உந்து சக்தியாக அமையும். 

இறுதியில் சீனப் பிராந்தியம் முழுமையும் அமைதியின்மைக்கு ஆட்படும் ஆபத்துள்ளது. 🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

ஹொங்கொங்கின் போராட்டம் என்ன என்று கருதுகிறீர்கள்?

ஒரு முழு மேலை நாட்டு நாகரிகத்தில் இருந்த மக்களும், நாடும், முழுவதும் வேறான ஒரு கலாசாரத்தின் கீழ் கொண்டு வரப்படுவதை விரும்பவில்லை.

சீனா, 50 ஆண்டுகளுக்கு அந்த கலாச்சாரத்தினை தொடர ஒப்பந்தத்தினை செய்திருந்தாலும், அதனை மீற முயல்வதால் தான் சிக்கல் வருகின்றது.

முக்கியமாக அங்குள்ள மக்கள் கடந்த தேர்தலில் 90% மேலைத்தேய ஜனநாயக முறைக்கு சார்பாக வாக்களித்துள்ளார்கள்.

சீனாவில் ஜனநாயகம் இல்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

சீனாவுக்கு சனனாயகம் தேவையானதா ? அதனை எப்படி சீனர் அல்லாதோர் தீர்மானிப்பது ? 

சனனாயகம் என்பதே மேற்கின் உற்பத்திதானே ! ஒவ்வொரு கலாச்சாரங்களும் தங்களுக்கென்று பிரத்தியேக அடையாளங்களைக் கொண்டுள்ளபோது பிற கலாச்சாரங்கள் தங்கள் உற்பத்தியை எப்படி பிறருக்கு Suggestion செய்ய முடியும். அவ்வாறு செய்தல் சரியான செயற்பாடாக அமையுமா ?

🤔

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

புரியவில்லையே....

ஹாங்காங் மக்களின் முடிவு ஜனநாயகத்தினால் தெரிந்தது.

சீனா வேறு நாடு. தனது விழுமியங்களை திணிக்க முயல்வதால், பிரச்சனை வருகிறது.

இன்னொரு விடயம்: இலங்கையில் தமிழருக்கு இருக்கும் ஒரே துரும்பு இந்த ஜனநாயகம் தான்.

அதுதான், பணத்தினை வீசி எறிந்து, அதனை தனது பக்கம் இழுக்க சிங்களம் முனைகிறது. தமிழ் மக்கள் தன் பக்கம் என்கிறார் மகிந்தா.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

பொன் முட்டையிடும் வாத்து குரல்வளை நசுக்கப்பட்டு சேடம் இழுக்கிறது.

ஒரு அருமையான பொருளாதார மையம், சீனாவின் முட்டாள்தனத்தினால் இல்லாமல் போகப்போகின்றது.

கொங்கொங் கதை முடிந்தது என்பதன் அர்த்தம், இதுதான்.

ஹாங் காங் இற்கான சீனாவின் நிலைப்பாட்டையும், சீனாவுக்கான ஹாங் காங் இன் நிலைப்பாட்டையும் நீங்கள் இன்னமும் 1997 அறிந்த நிலையில் இருக்கிறீர்கள்.

நீங்கள் சொன்னது, 1997 இல் மிகச் சரியான, பொருத்தமான நிலைப்பாடு. 2020 இல் அல்ல. 

மற்றது, Capital markets அதை எவ்வாறு நோக்குகின்றது என்பதை பொறுத்தது நீங்கள் சொல்லிய பொன் முட்டை இடும் வாத்து என்பதற்கு  . பெரிதான மாற்றம் இல்லை. 

மற்றது, Capital markets அதை எவ்வாறு நோக்குகின்றது என்பதை பொறுத்தது நீங்கள் சொல்லிய பொன் முட்டை இடும் வாத்து என்பதற்கு  . பெரிதான மாற்றம் இல்லை. 

ஹாங் காங் சீனாவுக்கு, நவீன சர்வதேச நிதி சேவைகள், கொள்கலன் கப்பல் சேவைகள், துறைமுக இயக்கம், சேவைகள்  எவ்வாறு தொழிற்படுகிறது மற்றும் தாபிப்பது, இயக்கப்படுவது  போன்றவற்றை கற்க்கும், பரிசோதிக்கும் தளமாகும்.      

உ.ம். சீனாவின் ஷாங்காய் ஸ்டாக் exchange, ஹாங் காங்  இல் இருந்து காற்றுக்கு கொண்ட அனுபவத்தில் தொடங்கியது ,  ஹாங் காங் ஐ விட மிகவும் பெரியது,  

ஆனல் மேற்கு decoupling என்று நாண்டு பிடித்தால், எந்த நிறுவனங்களோ ஒரு பக்கம் மட்டுமே இருக்க முடியும். அதில் ஹாங் காங் உம் உள்ளடக்கம்.

இதை தவிர்ப்பதற்கு, சீன கடுமையாக முயல்வது உண்மை. ஆனால் decoupling என்பதை சீனா ஆரம்பிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

மேலும் கவியழகன் சொன்னதை எங்கே சீரியஸ் ஆக எடுத்தேன்.

நான் சொன்னது கவியழகனுக்கு. உங்கள் கருத்தின் கீழ் வந்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

ஒரு கருத்துக்கு எதிர்வாதம் எழுத தெரியாமல் நையாண்டியான பாட்டை போட்டு விட்டு ஓடுவது ஆதர இணைப்புக்கள் இல்லாமல் எதிர்வாதம் புரிவது குழுவாய் சேர்ந்து தங்கட ஐடிக்கு தாங்களே பச்சை குத்துவது இன்னும் என்னவெல்லாம் வருமோ ..................

இது எவரின் கருத்தை இலக்ககாக கொண்டு பதிந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

இது எவரின் கருத்தை இலக்ககாக கொண்டு பதிந்தீர்கள்?

உங்களுக்கு நாங்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு விடை  அளிப்பதில்லை அதே போலத்தான் இதுவும் படித்து தெரிந்துகொள்ளுங்கள் 😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.