Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேசுநாதரும் ஓர் இந்துத் துறவியே- கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து குறித்து வைத்தியர் யமுனாநந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, goshan_che said:

நீங்கள்தந்த முதலாவது இணைப்பே proto Dravidian கூட 4500 ஆண்டுகள் பழமையானது என்றே சொல்கிறது. ஆகவே proto Dravidian தான் தமிழ் ( அப்படி இல்லை) என எடுத்தாலும் இதற்கும் பனிக்கால முடிவுக்கும் இடையில் பல ஆயிரம் ஆண்டுகள் (7) உளன.

இணைப்பின் நோக்கம் இரண்டு.

ஒன்று 3000 வருடங்களுக்கு முன் அன்றைய வடிவில் தமிழ் இருந்தது. அவர்களே சொல்கிறார்கள், dravidan இல் தமிழே மூத்தது என்று.

ஆனால், 3500 வருடங்களுக்கு முதல் எத்தனை காலம் இருந்தது என்பதில், அவர்கள் முடிவு 3500 க்கு முதல் 1000 வருடங்கள் வரை. ஆனால் இது proto-dravidian இல் இருந்து dravidian மொழி கூட்ட பிரிவின் ஆரம்ப (அப்படி தமிழ் தோன்றி இருந்தால்) காலப் பகுதி ஆகும்.
 
இவை உங்களின் 3000 வருடங்களுக்கு முன்பு இல்லை என்பதில், ஆக குறைந்தது கேள்விக்கு உள்ளாக்க இருக்கும் தரவுகள்.

ஆனால்,அவர்கள் சொல்லும் பிரிவு, அதாவது dravidian இல் மிகவும் மூத்தது, proto-dravidian இல் இருந்து உருமாறியது, பாம்பு செட்டையை கழட்டுவது போல. இவர்கள் சொல்லுவது, இரண்டும் (proto-dravidian உம், தமிழும் வேறு, வேறு இரு பாம்புகள்).  

உண்மையில் proto-dravidam , திராவிடம் எனும் மொழி இருந்ததா?  அப்படி இருந்ததனால், திராவிடம் எனும் மொழி எது? 

உண்மையில் அப்படி இருந்த மொழியை,  அதாவது தமிழை, இவர்கள் (western linguists) proto-dravidian, dravidian  என்கிறார்கள். 

Dravidian இல் தமிழ் மூத்தது என்றால், proto-dravidian தமிழ் தானே. 

Western linguists சொல்வது,  proto-dravidian முதல் மொழி, ஆனால் அது தமிழ் அல்ல.    

 proto-dravidian, western linguists ஆல் புனையப்பட்ட அனுமான மொழியாகும், தமிழுக்கும் மற்ற திராவிட மொழிகளுக்கும் ஓர் ஊற்று மொழி இருந்தது என்று நிறுவுவதற்கு.   

நான் சொல்வது, dravidian என்பதும் proto-dravidian என்பதும் தமிழ் மொழியே , அந்தந்த கால வடிவில், அன்றி வேறு எந்த மொழியும் அல்ல.

சுருக்கமாக, இந்த   western linguists ஆல் தமிழ் உருவெடுத்ததில் இருந்தே அவ்வளவு காலம் மூத்த தனித்த மொழியாக இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

இதை ஏற்றுக் கொண்டால், இப்போதைய  இந்தோ-ஆரிய மொழிகள் எல்லாமே தமிழில் இருந்தே பிறந்ததாக வந்து விடும்.  

அதனால் தான் தமிழ் தான் திராவிடம் ஆக்கப்பட்டது  என்பதற்கு அம்பேத்காரின் விளக்கம் இணைக்கப்பட்டது, ஓர் சுட்டாக.

விரிவான ஆய்வு, https://royalsocietypublishing.org/doi/10.1098/rsos.171504#d3e475

வாசித்து முடிவு எடுக்கலாம். 

Edited by Kadancha
amend

  • Replies 71
  • Views 5.2k
  • Created
  • Last Reply
9 hours ago, Maruthankerny said:

கிருஸ்ணா தான் 
பின்பு கிறிஸ்து ஆனார் என்றும் 
கரே கிருஸ்ணா காரர்கள் எனக்கு சொல்லி இருக்கிறார்கள் 

(என்னுடைய கேள்வி உலகின் கடவுள் ஏன் 10 முறையும் மீண்டும் மீண்டும் இந்தியாவிலேயே பிறந்தார்? வேறு நாடுகள் பற்றி அவருக்கு கவலை இல்லையா? எனும்போது இவாறு ஒரு பதில் தந்தார்கள்) 
 
அல்லா கிறிஸ்து கிருஷ்ணர் எல்லாரும் ஒருவரே என்பது அவர்கள் வாதம் 

Jesus Was A Buddhist Monk (BBC Documentary)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எனது பதிலை எழுதி கொண்டிருக்கும் போதே உங்கள் பதில் வந்து வீழ்ந்தது.

15,000 வருடம் முன் என்றால் அவன் இடை-கற்கால மனிதன். கல்லானா ஆயுதங்களுடன், வேடுவர்களாக (hunter gatherers) அலைந்து திரிந்த காலம். மிகவும் அடிப்படையான உறையுள். நிலையான குடியிருப்பு இல்லை. 

15-12,000 வருடங்களுக்கு பின்னேதான் நிலையான குடியிருப்புகள் தோன்றுகின்றன. 

சில சமயங்களில் ஆராய்சிகளின் நோக்கம் ஆராய்சியல்ல வேறு எதுவோவாக இருக்கிறது.

Wiki ஐ மேலோட்டமாக பார்த்தால், அநேகமாக எல்லாம் ஓர் அனுமானிப்பே. இருந்ததான உறுதிப்பாடு மிகவும் குறைவு, அது கூட அநேகமாக குறிப்பிட்ட இடத்தில்.

Wiki ஐ மேலோட்டமாக பார்த்தால், அநேகமாக எல்லாம் ஓர் அனுமானிப்பே. இருந்ததான உறுதிப்பாடு மிகவும் குறைவு. அது கூட அநேகமாக குறிப்பிட்ட இடத்தில்.

இவை எல்லாமே Western narrative, proto-dravidian போல. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

இணைப்பின் நோக்கம் இரண்டு.

ஒன்று 3000 வருடங்களுக்கு முன் அன்றைய வடிவில் தமிழ் இருந்தது. அவர்களே சொல்கிறார்கள், dravidan இல் தமிழே மூத்தது என்று.

ஆனால், 3500 வருடங்களுக்கு முதல் எத்தனை காலம் இருந்தது என்பதில், அவர்கள் முடிவு 3500 க்கு முதல் 1000 வருடங்கள் வரை. ஆனால் இது proto-dravidian இல் இருந்து dravidian மொழி கூட்ட பிரிவின் ஆரம்ப (அப்படி தமிழ் தோன்றி இருந்தால்) காலப் பகுதி ஆகும்.
 
இவை உங்களின் 3000 வருடங்களுக்கு முன்பு இல்லை என்பதில், ஆக குறைந்தது கேள்விக்கு உள்ளாக்க இருக்கும் தரவுகள்.

ஆனால்,அவர்கள் சொல்லும் பிரிவு, அதாவது dravidian இல் மிகவும் மூத்தது, proto-dravidian இல் இருந்து உருமாறியது, பாம்பு செட்டையை கழட்டுவது போல. இவர்கள் சொல்லுவது, இரண்டும் (proto-dravidian உம், தமிழும் வேறு, வேறு இரு பாம்புகள்).  

உண்மையில் proto-dravidam , திராவிடம் எனும் மொழி இருந்ததா?  அப்படி இருந்ததனால், திராவிடம் எனும் மொழி எது? 

உண்மையில் அப்படி இருந்த மொழியை,  அதாவது தமிழை, இவர்கள் (western linguists) proto-dravidian, dravidian  என்கிறார்கள். 

Dravidian இல் தமிழ் மூத்தது என்றால், proto-dravidian தமிழ் தானே. 

Western linguists சொல்வது,  proto-dravidian முதல் மொழி, ஆனால் அது தமிழ் அல்ல.    

 proto-dravidian, western linguists ஆல் புனையப்பட்ட அனுமான மொழியாகும், தமிழுக்கும் மற்ற திராவிட மொழிகளுக்கும் ஓர் ஊற்று மொழி இருந்தது என்று நிறுவுவதற்கு.   

நான் சொல்வது, dravidian என்பதும் proto-dravidian என்பதும் தமிழ் மொழியே , அந்தந்த கால வடிவில், அன்றி வேறு எந்த மொழியும் அல்ல.

சுருக்கமாக, இந்த   western linguists ஆல் தமிழ் உருவெடுத்ததில் இருந்தே அவ்வளவு காலம் மூத்த தனித்த மொழியாக இருந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

இதை ஏற்றுக் கொண்டால், இப்போதைய  இந்தோ-ஆரிய மொழிகள் எல்லாமே தமிழில் இருந்தே பிறந்ததாக வந்து விடும்.  

அதனால் தான் தமிழ் தான் திராவிடம் ஆக்கப்பட்டது  என்பதற்கு அம்பேத்காரின் விளக்கம் இணைக்கப்பட்டது, ஓர் சுட்டாக.

விரிவான ஆய்வு, https://royalsocietypublishing.org/doi/10.1098/rsos.171504#d3e475

வாசித்து முடிவு எடுக்கலாம். 

1. மன்னிகவும் நானும் ஜஸ்டீனும் குறிப்பிட்ட விடயங்கள் western narratives (மேற்குலகின் கதைகள்) அல்ல. அவை உலககெங்கும் மனித வரலாற்று பயணம் பற்றி, தடயங்கள், ஆய்வுகள் அடிப்படையில் ஏற்று கொள்ளபட்டுள்ள கொள்கைகள். கற்கால மனிதர்கள், அவர்கள் வாழ்கைமுறை, எப்போது விவசாயம், நிலையான குடியிருப்புகள் மனித வாழ்வின் அங்கம் ஆகின. அதில் இருந்து எப்படி கூட்டு வாழ்கைமுறையும், பின்னர் நகர நாகரீகமும் உருவாகின என்பதெல்லாம் - உலகில் சகல பாகங்களிலும் உள்ள துறைசார் வல்லுனர்கள் ஏற்றுகொள்ளும் கொள்கைகள். ஆண்டு 3 இல் இருந்தே கற்பிக்கவும் படுவன.

2. Protolanguage என்பது ஒரு actual language அல்ல. அது ஒரு எண்ணகரு, concept. உங்களுக்கு 5 பிள்ளைகள், 5 சகோததர், உங்கள் தந்தைக்கும் 5 சகோதரர், இப்படி பத்து தலைமுறைகள் மேலே போனால் ஒரு பொது முப்பாட்டன் இருப்பாரல்லவா? அவர்தான் மொழி கூட்டங்களின் proto. நீங்கள்தான் தமிழ். உங்கள் பிள்ளைகள் ஏனைய தென்னிந்திய மொழிகள். ஆனால் நீங்கள் யாருமே 10 தலைமுறைக்கு முந்திய முப்பாட்டன் அல்ல. அப்படி உலகில் எந்த மொழியையும் ஏற்றுகொள்ள தக்க சான்றுகள் இல்லை.

Proto Dravidian மட்டும் அல்ல, proto Indo Aryan, proto Slavic இப்படி பல.

ஒரு மொழியின் தொன்மை சுவடுகளை வைத்தே முடிவாகும். தமிழை இதுவரை கிமு 600 வரை தள்ளலாம்.  இந்த காலத்தை classical age என்பர் அதனால்தான் தமிழ் செம்மொழி.

அதற்கு மேல் தள்ள இலக்கிய ஆதாரமும் இல்லை, தொல்லியல் ஆதாரமும் இல்லை.

எங்கள் ஆசையின் அடிப்படையில், எந்த ஆதாரமும் இன்றி எமது மொழி 15,000 வருடங்கள் மூத்தது என்று சொன்னால் நாம் மட்டும் அல்ல எமது மொழியும் கேலிக்கு உள்ளாகும்.

இங்கேதான் விக்கியின் விடய-தெளிவு பிரமிக்க வைக்கிறது.

இலங்கையில் தமிழ் சிங்களத்துக்கு முந்திய மொழி என்பதை அடித்து சொல்லியவர், உலகில் - இப்போ பேசபடும் மொழிகளில் மூத்த மொழிகளில் ஒன்று என்பதை மட்டுமே சொன்னார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, goshan_che said:

கோசான் சார் ஆபீசுக்கு வந்திட்டார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

கோசான் சார் ஆபீசுக்கு வந்திட்டார். 🤣

🤣🤣🤣

அனுசரணை வழங்குவோ திமுக IT Wing

இணை அனுசரணை - இலங்கை அரசாங்கம்

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2020 at 10:43, goshan_che said:

15,000 வருடங்கள் மூத்தது என்று சொன்னால் நாம் மட்டும் அல்ல எமது மொழியும் கேலிக்கு உள்ளாகும்.

எங்காவது  சொன்னேனா 15, 000 வருடங்களுக்கு முன்பு என்று.

Proto-language மீளமைப்பு  பற்றி  எழுதி இருக்க தேவை இல்லை. முன்பே சொல்லி விட்டேன் அது reconstruction என்று.

இப்போது, நான் சொன்னது proto-dravidian 7000 (அவர்களின் FIGURE 3 இன் படி)  வருடங்களுக்கு முதல் இருந்தது என்பது எவ்வாறு தெரிந்தது? 

proto-language அந்த language இன் மீளமைகப்பட்ட  கருதுகொள் மொழி (reconstruction) ஆயின், proto-dravidian இல் இருந்து உதித்த  dravidian (உண்மையில் இருந்திருக்க வேண்டும், மீளமைப்பு கருதுகொள் அல்ல, புழக்கத்தில் இருந்து அருகி அல்லது இல்லாமல் ஆகி இருக்கலாம் )  எனும் மொழி எது?

Dravidian  என்பது western linguists இன் ஓர் கருதுகோள்.

The actual term Dravidian was first employed by Robert A. Caldwell, who introduced the Sanskrit word dravida (which, in a 7th-century text, obviously meant Tamil) into his epoch-making A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages (1856).  - Encyclopedia Britannica

இதில் ஒரு கேள்வி வருகிறது, இந்த குறித்த 7ம் நூற்றாண்டு sanskririt சொல் சான்று மறைக்கப்பட்டு விட்டதா? 

ஆகவே, நீங்களோ அல்லது எவரோ, அந்த ஆய்வுடன், இதை சேர்த்தால், Proto-தமிழ் ஆகிறது proto-dravidian.

இப்பொது, ஓர் கருத்து ஒற்றுமை வந்திருக்கிறது,  Harapan மொழி proto-dravidian  என்று, ஆனால் தத்துவ அடிப்படையில் எந்தவொரு proto-language ஐயும் காண முடியாது, ஏனெனில் அது மீளமைக்கப்பட்ட  கருதுகோள் மொழி. 

ஆனால், இவர்கள் சொல்வதின் படி, proto-dravidian (or any proto-language for that matter) இன் வடிவத்தை காணமுடியும்.

https://scroll.in/article/936432/what-was-harappas-language-the-answer-remains-the-missing-piece-of-indians-ancestry-puzzle

"Historians and archaeologists have so far overwhelmingly backed up the idea that the language underlying the Harappan script was Proto-Dravidian, but the inability to break the code has left the question hanging, without a final resolution."

எதையும் எழுத முதல் நீங்கள் செய்ய வேண்டியது, dravidian (சமஸ்கிருதத்தில்) என்பதும் தமிழ் (தமிழில்) என்பதும் ஒன்றல்ல, வேறு வேறு அடையாளமும், கருத்தும் உள்ள  சொற்கள் என்பதற்கான ஆதாரத்தை  முன்வையுங்கள்.    

ஆக குறைந்தது, dravidian எனும் மொழியை எவராவது இது தான் dravidian  என்ற மொழியாகும் என்று அடையாளம் காட்டினால், அந்த ஆய்வில் சொல்லப்பட்ட 4500 வருடங்களிலும் குறைகிறது தமிழின் தொன்மை.      ஏனெனில், வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள், proto-dravidian ஐ இது தான் என்று ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையில் உள்ளார்கள். 

Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2020 at 07:29, Kadancha said:

1. 15000 வருடம் முதல் தமிழர் பூம்புகாரில்  - துறைமுகம் கட்டினர் என்றீர்கள். அப்போ அவர்கள் தமிழர் என்றால் என்ன மொழி பேசினார்கள்? உருதா? ஆகவேதான் சொன்னேன். 

2. Proto Dravidian இருந்த காலத்தில் பேசபட்ட மொழிதான் தமிழ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உங்களுடைய தியரிகள் எல்லாம் வராலாறு இல்லை. தமிழின் தொன்மையை, கீழடிக்கு பின்னாக தள்ள, இலக்கிய, அல்லது சார்பிலக்கிய அல்லது தொல்பொருள் ஆதராம் இல்லை. 

3. ஆகவே பனிகால முடிவில், தெற்காசியாவில் நிலம் கடலுள் அமிழ்ந்தபோது, அந்த பகுதியில் வாழ்தவர்கள் தமிழர் என்பதற்கு எமது speculations ஐ தவிர வேறு ஏந்த ஆதாரமும் இல்லை. எனவே இதுவரைக்கும் உள்ள ஆதாரப்படி, குமரிகண்டம்/லெமூரியா என ஒரு நிலப்பரப்பரப்பு இருந்தாலும் அதில் இருந்தவர் தமிழர் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. 

அம்புட்டுத்தான் மேட்டரு.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

Proto Dravidian இருந்த காலத்தில் பேசபட்ட மொழிதான் தமிழ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உங்களுடைய தியரிகள் எல்லாம் வராலாறு இல்லை. தமிழின் தொன்மையை, கீழடிக்கு பின்னாக தள்ள, இலக்கிய, அல்லது சார்பிலக்கிய அல்லது தொல்பொருள் ஆதராம் இல்லை. 

Elu, proto-Tamil என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா? 

Elu proto-தமிழ்.ஆயின் (அப்படி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிற நம்பப்படுகிற),  உங்களுடைய கருத்துப்படி Elu இற்க்கும் தமிழுக்கும் தொடர்ச்சி இல்லை.   

Dravidian எனும் மொழி எது? இதற்கு உங்களிடம் விடை இல்லை.

ஏன், Dravidian என்பது construct என்பதை கூட நீங்க மறுக்க முடியாது,  ஆதரத்தை  தாருங்கள். 
 
Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. 15000 வருடம் முதல் தமிழர் பூம்புகாரில்  - துறைமுகம் கட்டினர் என்றீர்கள். அப்போ அவர்கள் தமிழர் என்றால் என்ன மொழி பேசினார்கள்? உருதா? ஆகவேதான் சொன்னேன். 

2. Proto Dravidian இருந்த காலத்தில் பேசபட்ட மொழிதான் தமிழ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உங்களுடைய தியரிகள் எல்லாம் வராலாறு இல்லை. தமிழின் தொன்மையை, கீழடிக்கு பின்னாக தள்ள, இலக்கிய, அல்லது சார்பிலக்கிய அல்லது தொல்பொருள் ஆதராம் இல்லை. 

3. ஆகவே பனிகால முடிவில், தெற்காசியாவில் நிலம் கடலுள் அமிழ்ந்தபோது, அந்த பகுதியில் வாழ்தவர்கள் தமிழர் என்பதற்கு எமது speculations ஐ தவிர வேறு ஏந்த ஆதாரமும் இல்லை. எனவே இதுவரைக்கும் உள்ள ஆதாரப்படி, குமரிகண்டம்/லெமூரியா என ஒரு நிலப்பரப்பரப்பு இருந்தாலும் அதில் இருந்தவர் தமிழர் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. 

அம்புட்டுத்தான் மேட்டரு.

தமிழுக்கு முந்தி எந்த மொழியும் இல்லை இல்லை என்பதுக்கு ஆதாரம் உண்டு (அல்லது நிரூபிக்க ஆதாரம் இல்லை) 
தமிழுக்கு முந்திய புரோட்டோ தமிழ் எல்லை என்றால் ...
மனிதர்கள் ஒரு நாள் திடீரென நித்திரையால் எழும்பி தமிழ் பேச தொடங்கி இருக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திராவிட என்பதே மொத்த புனைவு 
இது கி பி 200 வரை எங்கும் இருக்கவில்லை. ஆரிய பார்பனியர்கள் 
சிந்து நதியை கடந்து தற்போதைய குஜராத் பகுதிக்கே வந்து சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்தார்கள் 
எதோ ஒரு சூழல் அந்த காலத்தில் அங்கு நிலை கொள்ள முடியாது போக 
இவர்கள் இரு குழுவாக பிரிந்து ஒன்று தெற்கு நோக்கியும் ஒன்று மேற்கு நோக்கியும் நகர தொடங்கினார்கள் 
இப்போதான் ஆதார ரீதியாக எழுத்தில் இந்த திராவிட என்ற சொல் வருகிறது இதை தெற்கு நோக்கி நகர்ந்த குழு திராவிட என்று அழைக்க பட்டார்கள். இவர்கள்தான் பின்பு சம்ஸ்கிருதத்தை பிராமி மொழியுடன் உருவாக்கினார்கள்.  சம்ஸ்கிருதத்தில் மட்டுமே திராவிட என்ற சொல் இருக்கிறது.
வேறு எங்கும் இது இல்லை இது ஒரு மொத்த புனைவு. 
 
கி மு க்கு முன்பு திராவிட என்பதே ஆதாரம் இல்லாத ஒரு புனைவு 
அதில் தொங்கிக்கொண்டு வரும் ஆய்வு எப்படி மெய்ப்படும்? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இந்த திராவிட என்பதே மொத்த புனைவு 
இது கி பி 200 வரை எங்கும் இருக்கவில்லை. ஆரிய பார்பனியர்கள் 

3 hours ago, goshan_che said:

2. Proto Dravidian இருந்த காலத்தில் பேசபட்ட மொழிதான் தமிழ் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உங்களுடைய தியரிகள் எல்லாம் வராலாறு இல்லை. தமிழின் தொன்மையை, கீழடிக்கு பின்னாக தள்ள, இலக்கிய, அல்லது சார்பிலக்கிய அல்லது தொல்பொருள் ஆதராம் இல்லை

இது உணர்ச்சி வசப்படவேண்டிய விடயமல்ல.

இப்பொது எழுத்தில் இருக்கும் தமிழ் இலக்கண, இலக்கியங்களில் எங்காவது Caldwell இற்கு முதல் 'திராவிடம்' எனும் சொல் புழக்கத்தில் இருக்கிறதா?

தமிழ் இலக்கண, இலக்கியத்தை நன்கு அறிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஏனெனில், இப்போதைய நிலையின் படி திராவிடம் எமது அடையாளம், உணர்ச்சி, அரசியல்,  எண்ணக்கரு என்று பல.

இப்படியான ஓர் சொல், ஏனைய (இப்போதைய) திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுவனவற்றில்  இலக்கண இலக்கியங்களில் Caldwell இற்கு முதல் இருக்கிறதா? 

இந்த கேள்விகளை, Max Plank இடமும் கேட்பதத்திற்கு தான் .

3 hours ago, goshan_che said:

1. 15000 வருடம் முதல் தமிழர் பூம்புகாரில்  - துறைமுகம் கட்டினர் என்றீர்கள். அப்போ அவர்கள் தமிழர் என்றால் என்ன மொழி பேசினார்கள்? உருதா? ஆகவேதான் சொன்னேன். 

3 hours ago, goshan_che said:

3. ஆகவே பனிகால முடிவில், தெற்காசியாவில் நிலம் கடலுள் அமிழ்ந்தபோது, அந்த பகுதியில் வாழ்தவர்கள் தமிழர் என்பதற்கு எமது speculations ஐ தவிர வேறு ஏந்த ஆதாரமும் இல்லை. எனவே இதுவரைக்கும் உள்ள ஆதாரப்படி, குமரிகண்டம்/லெமூரியா என ஒரு நிலப்பரப்பரப்பு இருந்தாலும் அதில் இருந்தவர் தமிழர் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. 

இவற்றை பிறகு தேடலாம். ஆனால், அந்த இடத்தில மனிதர்கள் வாழ்ந்தததற்கான ஓர் சுட்டியாகவே வழங்கப்பட்டது. 

Edited by Kadancha
amend

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kadancha said:

இது உணர்ச்சி வசப்படவேண்டிய விடயமல்ல.

இப்பொது எழுத்தில் இருக்கும் தமிழ் இலக்கண, இலக்கியங்களில் எங்காவது Caldwell இற்கு முதல் 'திராவிடம்' எனும் சொல் புழக்கத்தில் இருக்கிறதா?

தமிழ் இலக்கண, இலக்கியத்தை நன்கு அறிந்தவர்கள் சொல்லுங்கள்.

ஏனெனில், இப்போதைய நிலையின் படி திராவிடம் எமது அடையாளம், உணர்ச்சி, அரசியல்,  எண்ணக்கரு என்று பல.

இப்படியான ஓர் சொல், ஏனைய (இப்போதைய) திராவிட மொழிகள் என்று அழைக்கப்படுவனவற்றில்  இலக்கண இலக்கியங்களில் Caldwell இற்கு முதல் இருக்கிறதா? 

இந்த கேள்விகளை, Max Plank இடமும் கேட்பதத்திற்கு தான் .

இவற்றை பிறகு தேடலாம். ஆனால், அந்த இடத்தில மனிதர்கள் வாழ்ந்தததற்கான ஓர் சுட்டியாகவே வழங்கப்பட்டது. 

1. நான் இங்கே திராவிடம் தமிழுக்கு முந்தியது என எங்கும் சொல்லவில்லை. முன்பே சொன்னேன் - proto Dravidian என்பது ஒரு மொழியல்ல concept. அதே போல் Dravidian என்ற மொழி இருந்த அடையாளமும் இல்லை.  
2. கடைசி பனிக்கால முடிவில் லெமூரியா அமிழ்ந்த போது தமிழ் ஒரு மொழியாகிவிட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உங்கள் அனுமானம் எல்லாம் ஆதாரம் இல்லை. ஆகவே லெமூரியாவில் இருந்தது தமிழரே என்பது வெறும் அனுமானமே (ஆதாரம் வரும் வரை)

3. ஆதாரத்தை கொண்டு வாருங்கள் தொடர்ந்து பேசலாம். உணர்சிவசப்படவெல்லாம் இல்லை. Just annoyed. 

1 hour ago, Maruthankerny said:

இந்த திராவிட என்பதே மொத்த புனைவு 
இது கி பி 200 வரை எங்கும் இருக்கவில்லை. ஆரிய பார்பனியர்கள் 
சிந்து நதியை கடந்து தற்போதைய குஜராத் பகுதிக்கே வந்து சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்தார்கள் 
எதோ ஒரு சூழல் அந்த காலத்தில் அங்கு நிலை கொள்ள முடியாது போக 
இவர்கள் இரு குழுவாக பிரிந்து ஒன்று தெற்கு நோக்கியும் ஒன்று மேற்கு நோக்கியும் நகர தொடங்கினார்கள் 
இப்போதான் ஆதார ரீதியாக எழுத்தில் இந்த திராவிட என்ற சொல் வருகிறது இதை தெற்கு நோக்கி நகர்ந்த குழு திராவிட என்று அழைக்க பட்டார்கள். இவர்கள்தான் பின்பு சம்ஸ்கிருதத்தை பிராமி மொழியுடன் உருவாக்கினார்கள்.  சம்ஸ்கிருதத்தில் மட்டுமே திராவிட என்ற சொல் இருக்கிறது.
வேறு எங்கும் இது இல்லை இது ஒரு மொத்த புனைவு. 
 
கி மு க்கு முன்பு திராவிட என்பதே ஆதாரம் இல்லாத ஒரு புனைவு 
அதில் தொங்கிக்கொண்டு வரும் ஆய்வு எப்படி மெய்ப்படும்? 

ஒரு ஆய்வும் தேவை இல்லை. ஜஸ்டின் சொன்னதுதான். இருக்கு/இருந்தது என்பதைதான் நிறுவ வேண்டும்.

சிம்பிள் விடயம் இது.

கடைசி பனிக்காலத்தில் தமிழ் ஒரு மொழியாக இருந்தது என்ற ஆதாரத்தை கொண்டுவாருங்கள் - குமரி கண்ட தியரியை நிரூபிக்கும் முதல் படி அதுதான்.

மிச்சத்தை பிறகு கதைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

கடைசி பனிக்கால முடிவில் லெமூரியா அமிழ்ந்த போது தமிழ் ஒரு மொழியாகிவிட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இதை எப்போதாவது சொன்னேனா? அதாவது 10, 000 வருடங்களுக்கு முதல் என்றே நான் கதைக்கவில்லை.

ஏன் நீங்கள் முன்பு செல்கிறீர்கள்? 

இப்பொது கதைப்பது, ஆதாரம் வேண்டுமாகையால், Max Plank இன் வயது குறியீட்டை வைத்து.  

34 minutes ago, goshan_che said:

proto Dravidian என்பது ஒரு மொழியல்ல concept. அதே போல் Dravidian என்ற மொழி இருந்த அடையாளமும் இல்லை.  

Dravidian என்பதே construct ஆக இருக்கும் போது, Caldwell இன் construct, பின் எவ்வாறு proto-Dravidian என்ற concept இருக்க முடியும் ?

நீங்கள் சொல்வதின் படி, தமிழ் (இப்பொது இருக்கும் தொன்மை மொழிகள் எல்லாவற்றிற்கும் பொருந்தும்) construct ஆக இருக்க வேண்டும்,  proto-tamil concept ஆக இருக்கவேண்டும்.  

இதில் தான் western linguists இன் தடுமாற்றம். ஆனால் இது அவர்களின் narrative, அதாவது தமிழ் மொழிக்கு ஓர் ஊற்று மொழி இருந்தது, தனித்து தொடர்ச்சியாக இருக்கவில்லை என்று சாதிப்பதற்கு.  

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

கடைசி பனிக்காலத்தில் தமிழ் ஒரு மொழியாக இருந்தது என்ற ஆதாரத்தை கொண்டுவாருங்கள் - குமரி கண்ட தியரியை நிரூபிக்கும் முதல் படி அதுதான்.

சிங்களம் இருந்திருக்குமோ 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. நான் இங்கே திராவிடம் தமிழுக்கு முந்தியது என எங்கும் சொல்லவில்லை. முன்பே சொன்னேன் - proto Dravidian என்பது ஒரு மொழியல்ல concept. அதே போல் Dravidian என்ற மொழி இருந்த அடையாளமும் இல்லை.  
2. கடைசி பனிக்கால முடிவில் லெமூரியா அமிழ்ந்த போது தமிழ் ஒரு மொழியாகிவிட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உங்கள் அனுமானம் எல்லாம் ஆதாரம் இல்லை. ஆகவே லெமூரியாவில் இருந்தது தமிழரே என்பது வெறும் அனுமானமே (ஆதாரம் வரும் வரை)

3. ஆதாரத்தை கொண்டு வாருங்கள் தொடர்ந்து பேசலாம். உணர்சிவசப்படவெல்லாம் இல்லை. Just annoyed. 

ஒரு ஆய்வும் தேவை இல்லை. ஜஸ்டின் சொன்னதுதான். இருக்கு/இருந்தது என்பதைதான் நிறுவ வேண்டும்.

சிம்பிள் விடயம் இது.

கடைசி பனிக்காலத்தில் தமிழ் ஒரு மொழியாக இருந்தது என்ற ஆதாரத்தை கொண்டுவாருங்கள் - குமரி கண்ட தியரியை நிரூபிக்கும் முதல் படி அதுதான்.

மிச்சத்தை பிறகு கதைப்போம்.

தமிழ் மூத்தது என்றோ 
குமரிக்கண்டம் பற்றியோ நான் எழுதவில்லை 

தற்போதைய வராலாற்று முரண் பற்றியும் 
உங்கள் கருத்தில் இருக்கும் முன் பின் முரண் பற்றியுமே 
கேள்விகளை வைக்கிறேன். 

இந்த ப்ரோட்டோ திராவிடன் என்பதே ஒரு புனைவு என்பதுதான் 
நான் கூற வருவது ... அல்லது ஒரு முரணான ஆதாரமற்ற திருப்பு என்று நான் 
கூறவில்லை அதை சொல்பவர்களே முன் பின் முரனாக பேசுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

3. ஆதாரத்தை கொண்டு வாருங்கள் தொடர்ந்து பேசலாம். உணர்சிவசப்படவெல்லாம் இல்லை. Just annoyed. 

ஒரு ஆய்வும் தேவை இல்லை. ஜஸ்டின் சொன்னதுதான். இருக்கு/இருந்தது என்பதைதான் நிறுவ வேண்டும்.

சிம்பிள் விடயம் இது.

கடைசி பனிக்காலத்தில் தமிழ் ஒரு மொழியாக இருந்தது என்ற ஆதாரத்தை கொண்டுவாருங்கள் - குமரி கண்ட தியரியை நிரூபிக்கும் முதல் படி அதுதான்.

👍நியாயமான கருத்து.

பச்சை  இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இதை எப்போதாவது சொன்னேனா? அதாவது 10, 000 வருடங்களுக்கு முதல் என்றே நான் கதைக்கவில்லை.

ஏன் நீங்கள் முன்பு செல்கிறீர்கள்? 

இப்பொது கதைப்பது, ஆதாரம் வேண்டுமாகையால், Max Plank இன் வயது குறியீட்டை வைத்து.  

Dravidian என்பதே construct ஆக இருக்கும் போது, Caldwell இன் construct, பின் எவ்வாறு proto-Dravidian என்ற concept இருக்க முடியும் ?

நீங்கள் சொல்வதின் படி, தமிழ் (இப்பொது இருக்கும் தொன்மை மொழிகள் எல்லாவற்றிற்கும் பொருந்தும்) construct ஆக இருக்க வேண்டும்,  proto-tamil concept ஆக இருக்கவேண்டும்.  

இதில் தான் western linguists இன் தடுமாற்றம். ஆனால் இது அவர்களின் narrative, அதாவது தமிழ் மொழிக்கு ஓர் ஊற்று மொழி இருந்தது, தனித்து தொடர்ச்சியாக இருக்கவில்லை என்று சாதிப்பதற்கு.  

1. மேலே நாதமுனி கேட்ட கேள்வி. ஏன் குமரிகண்டத்தை ஏற்கிறீர்கள் இல்லை ?

2. நான் சொன்ன விளக்கம்.

அ. அப்படி ஒரு நிலப்பரப்பு இருந்து அது அமிழ்து இருந்தால் - அந்த நிகழ்வு 12,000 ஆண்டுக்கு முதல் நடந்து இருக்கும் (கடைசி பனிகாலமுடிவில்).

ஆ. தமிழின் தொன்மையை மிஞ்சி மிஞ்சி  போனால் 2600 ஆண்டுகள் மட்டுமே பின் தள்ள முடியும்.

3. ஆகவே அந்த நிலபப்ரப்பு தமிழர் நிலம் என்பதை சும்மா ஊகம் மூலம் கதை விடலாமே தவிர, இன்னும் நிறுவவில்லை.

இவ்வாறு - நான் கொடுத்த விளக்கத்தை quote பண்ணி, ஒரு 7 பக்க கட்டுரை, இன்னும் சில தரவுகளை தந்து நீங்கள்தான் எழுதினீர்கள் அந்த விளக்கம் சரி இல்லை என்று. 

இங்கே கேள்வி, Porto Dravidian பற்றியோ கால்டுவெல் பற்றியோ இல்லை. நீங்களும் மருதுவும் உலகமே proto Dravidian என்று அழைக்கும் concept ஐ. Proto tamil என்றும் அழையுங்கள். எனக்கு ஒன்றும் இல்லை.

எப்படி அழைத்தாலும் - proto tamil/Dravidian  இருந்த ஆதாரமும் இல்லை. ஏனென்றால் அது ஒரு கொன்செப்ட். மொழி அல்ல.

முதலில் ஹோமோ செபியன் செபியன் தனியே சத்ததை மட்டுமே எழுப்பி இருப்பான். 

ஊ...ஓ... இப்படி ஆகவே அதுதான் தமிழ் என்று வாதாடுவீர்களா? மருதர் வாதாடுவார்🤣.

ஆகவே என்றோ ஒரு காலத்தில் தமிழ் உருவாகி இருக்க வேண்டும். 

அது எப்போ? இப்போதைக்கு 2600 ஆண்டுகள் முன்பு வரைதான் ஆதாரம் உண்டு. நாளைக்கு இது 3500 ஆகலாம்.

உலகம் பூராவும் ஒரு நடைமுறை உண்டு ஒரு மொழியின் வயதை அறிய.  

அதுதான் கல்வெட்டு , இலக்கிய அல்லது ஏனைய மொழி இலக்கிய ஆதாரங்கள். இப்படி தமிழின் வயதை ஆககூடி கிமு 600 வரை பிந்தள்ளலாம். 

இல்லை,

குமரிகண்டம் தமிழர் நிலம் என்பவர்கள்தான் 12,000 ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஒரு மொழியாக இருந்தது என நிறுவ வேண்டும்.

இதற்கு மேல் இந்த திரியில் கவுண்டமணி வாழைப்பழ கொமெடி போல, எழும் கதைகளுக்கு விளக்கம் சொல்வதாக இல்லை. 

பாரதியார் சொன்னது போல் “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை திறமையான புலமை எனில் வெளி நாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்".

லெமூரியா/குமரிகண்டம் தமிழர் கண்டம் என்றால் அதை ஆதாரத்தோடு நிறுவுங்கள்.  நான் முதல் ஆளாக வந்து இரு மொழியிலும் பக்கம் பக்கமாக எழுதுகிறேன், உங்களை ஆதரித்து.

முடியாது விடில் நாம் 2600 களுக்கு முன்னே நகரம் கட்டி வாழ்ந்தவர் அப்போ குறைந்தது 4000 ஆண்டுகளாவது நம் நாகரீகம் பழையது என உண்மையா பெருமையை மார் தட்டிச் சொல்லுங்கள். அப்படி பார்த்தாலும் நாம் மூத்த குடிதான்.

நன்றி

வணக்கம்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு ஆய்வும் தேவை இல்லை. ஜஸ்டின் சொன்னதுதான். இருக்கு/இருந்தது என்பதைதான் நிறுவ வேண்டும்.

சிம்பிள் விடயம் இது.

கடைசி பனிக்காலத்தில் தமிழ் ஒரு மொழியாக இருந்தது என்ற ஆதாரத்தை கொண்டுவாருங்கள் - குமரி கண்ட தியரியை நிரூபிக்கும் முதல் படி அதுதான்.

மிச்சத்தை பிறகு கதைப்போம்.

இதற்கு இந்திய அரசு ஒரு போதுமே விடாது. சொறி சிங்களமும் இதையே  செய்கிறது.

அதாவது இல்லை என்ற விஞ்ஞான உறுதிப்பாடு வரும் வரையில், ஆனால், அதற்கு தொல்பொருள் ஆய்வு, விஞ்ஞான அடிப்படையில் நடத்தப்பட  வேண்டும்.

ஏனெனில், அந்த வரலாற்று கதையின் (narrative) போக்கை கிந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான், இப்போதைய  வரலாற்று கதை காப்பாற்றப்படும்.

கீழடிக்கு பின்  இன்னும் இறுக்கமாக இருக்கும் என்றே நினைக்கிறன்.  

2002 இல், ஓர் மேற்கு பேராசிரியர் (https://www.stephen-knapp.com/archeological_discoveries_of_2003.htm), தனியார் நிதி திரட்டி செய்வதற்கு முன்வந்ததை அடுத்து, இந்திய அரசு  Persona non grata வரை அவரை வெருட்டுவது நடந்தது. இதன் ஆரம்ப exploration  வீடியோக்கள் youtube இல் இருந்தது, பார்த்துளேன், அதில் இருக்கும் சில புவியியல் அமைப்பை மீனவர்கள் தமது சந்ததி வழியாக தெரியும் என்கிறார்கள். இப்போது வீடியோ youtube இருக்கிறதா தெரியவில்லை.         

இதனால் தான் இப்போதுது digital technology ஆல் முயற்சிக்கிறார்கள். 

சொறி சிங்களமும் இதையே செய்கிறது.

திராவிட (சம்ஸ்கிருத) நாகரித்துக்குரிய கல்லறை மற்றும் தாழிப் புதைகுழிகள் கொண்ட இடங்கள் தற்செயலாக 1990 இல் கலேவேலாவுக்கு அருகிலுள்ள இபன்காடுவாவிலும், மற்றொன்று 2016 இல் மினுவங்கோடாவின் தேவலாபோலாவிலும் கண்டுபிடிக்கப்பட்டதை மறைத்து,  அந்த இடங்களை சுற்றி மனித குடியேற்றங்கள் இருந்து இருபதற்கான தடயங்கள் இருந்தும் சிங்களம் அதை மூடி விட்டது. 
    
செட்டிகுளம் மற்றும் பெரிய மாடு இல் தற்செயலாக காணப்பட்ட,  திராவிட (சம்ஸ்கிருத) நாகரித்துக்குரிய பண்புகளை கொண்ட (புதை பொருள்) இடங்களை மூடிவிட்டது.

இதை ஓர் தர்க்கமாக கேட்கிறேன்.

இலங்கை தீவில் இவ்வளவு கரையோரங்கள் இருக்கும் பொது, விஜயன் வருகை உண்மை ஆயின், ஏன் இப்போதைய மன்னார் பகுதியில் விஜயன் தனது பரிவாரங்களோடு வந்து இறங்க வேண்டும்? 

சரி அப்படி இறங்கியது மன்னர் பகுதி என்றால், அங்கு அந்த நேரத்தில் விருத்தி அடைந்த குடியேற்றங்கள் இருந்திருக்க வேண்டும், சொறி சிங்களம் அங்கு ஆராய்ச்சி செய்ய தயாரில்லை.
 
இந்தியா விடாது, சிறிலங்கா விடாது என்பதற்காக நாம் கற்பனை அடிப்படையிலான யூரியூபை வைத்துக் கொண்டு ஆதி வரலாற்றை எழுத முடியாதென்று நினைக்கிறேன். இப்படிக் கற்பனைகளை அடுத்த சந்ததியிடம் கடத்தினால், தமிழின் நிறுவப் பட்ட தொன்மையைக் கூட அவர்கள் நக்கலுடன் குப்பைக் கூடையில் வீசி விட்டு நகரும் நிலை வரும் என்பதே என் அச்சம்! 
 
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

ஸ்ரீலங்கா இந்தியா இரு நாடுகளும் கற்பனை வாரலாறால் கட்டி அமைக்க பட்டுள்ளது 
ஆகவே அந்த மாயை திரையை அகற்ற அவர்கள் இடம் அளிக்க போவதில்லை 
நீங்கள் இங்கேவந்து சும்மா கருத்து கொட்டுகிறீர்களோ அல்லது உண்மையிலேயே இது பற்றி 
அறியும் ஆர்வம் இருந்து எதையாவது கொண்டிருந்தீர்களோ தெரியவில்லை. அப்படி இருப்பின் இந்தியா தடை போட்டிருக்கும் அகழ்வாராய்ச்சிகளுக்கு ஏன் தடை போட வேண்டும் என்ற கேள்வி வந்திருக்க வேண்டும்.

King Parakkrama, Portrait from Ceylon 10 Rupees 1975 Banknotes. An Old paper banknote, vintage retro. Famous ancient Banknotes. Collection.

Statue of Parakramabahu I in Polonnaruwa. Portrait from Ceylon 5 Rupees 1962 Banknotes. An Old paper banknote, vintage retro. Famous ancient Banknotes. Collection.

இது பராக்கிரமபாகு இல்லை என்பதுக்கு போதிய ஆதாரம் இருக்கிறது 
இது அறிவியல் தொல்லியல் ரீதியான சிங்களவருக்கு புரிகிறது.
ஆனால் இதை வெட்ட வெளியில் ஏற்றுக்கொள்வதில் பல சிக்கல் இருக்கிறது 

இது ஒரு தமிழர் என்பத்துக்கே எல்லா சாத்தியமும் இருப்பினும் 
இவர் ஒரு சிங்களவர் என்று ஏற்றுக்கொண்டாலும் கூட .... இவருடரைய 
வரலாறை தடம் ஒற்றினால் .... தற்போதைய வரலாறு ஒரு பொய் புரட்டு என்பது 
நிரூபணம் ஆகிவிடும். ஆகவே நாம் படித்த வரலாறு என்பது ... படித்தால் மட்டும் வரலாறு ஆகிவிடாது 
அதிலும் ஆதாரமற்ற புனைவுகள்தான் நிறைய உண்டு. 

தமிழிலும் தொன்மையான ஒரு மொழி இருந்ததுக்கு யாரிடமும் இன்று வரை ஆதாரம் இல்லை 
அப்படி ஏதும் இருந்தால் நீங்கள் அவற்றை பற்றித்தான் பேச வேண்டும். நீங்கள் இல்லாத பேய்யை காட்டி 
அச்சமூட்டுவது போல தான் இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Maruthankerny said:

தமிழிலும் தொன்மையான ஒரு மொழி இருந்ததுக்கு யாரிடமும் இன்று வரை ஆதாரம் இல்லை 
அப்படி ஏதும் இருந்தால் நீங்கள் அவற்றை பற்றித்தான் பேச வேண்டும். நீங்கள் இல்லாத பேய்யை காட்டி 
அச்சமூட்டுவது போல தான் இருக்கிறது 

மருதர், இது கோசான் சொன்னது போல கவுண்டமணியின் வாழைப்பழக்கதை தான் என நினைக்கிறேன்! இந்த "இல்லை" என்பதை நிறுவுதல் பற்றி நான் இத்திரியில் முதலாவதாய் எழுதிய பதிலில் இருக்கிறது, பார்க்கலாம் நீங்கள். 

தமிழ் தான் முதலில் வந்த மொழி என்று நீங்கள் நிறுவினால் மட்டுமே, "தமிழிலும் தொன்மையான மொழி இல்லை" என்ற கூறுவது சரியாகும். 

எனது எடுகோள் "தமிழ் முதல் மொழி அல்ல!" (null hypothesis) இதை நான் நிறுவ வேண்டிய தேவை இல்லை! default status! 

நீங்கள் சொல்வது: "தமிழ் தான் முதல் மொழி" (alternate hypothesis) இதை நீங்கள் தான் ஆதாரம் தந்து நிறுவ வேண்டும்! 

 இது நான் விஞ்ஞான மரபின் படி சொல்வது! அரசியல் கோஷங்கள், கற்பனைகள் பற்றி எனக்கு அக்கறையில்லை! உங்கள் alternate hypothesis இற்கு, ஆதாரம் இருந்தால் மேற்கொண்டு பேசலாம்! இல்லையெனில் மேலும் சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இப்போது கி மு 3000 ஆண்டளவிலான இலக்கிய சுவடு தமிழில் உண்டு 
அதுக்கு முந்திய ஒரு மொழி ஆதாரத்தை நீங்கள்தான் தரவேண்டும் 

கல்லில் பதிக்க பட்டிருக்கும் எழுத்துக்களே கி மு 400 வரையானவை 
இப்போதும் யுனெஸ்கோவின் கீழ் பாதுகாப்பில் உண்டு 
அதுக்கு முன்பு ஒரு வடிவத்துக்கு நீங்கள்தான் ஆதாரம் தரவேண்டும் 

இதுவரை இருக்கும் வரலாற்று தடங்கள் ஒன்றோடு ஒன்று முரணானவை 
எகிப்து பிரமிட்ட்டின் கால எல்லையை வைத்து முதல் நாகரீக மனிதர்கள் அங்குதான் 
இருந்தார்கள் என்ற போக்கில் தொடங்கியவை 
பின்பு அதே கால பகுதியில் மாயன்களின் சுவடுகளின் ஆதாரம் கிடைக்கும்போது 
இதில் இருந்து பின்வாங்கி இருக்கவேண்டும் .. அல்லது அதை ஒப்புக்கொண்டு இருக்கவேண்டும் 
யாரும் அதை செய்யவில்லை ... ஓகே அப்போ  மாயன்கள் இரண்டாவது 
என்ற முன் பின்  முரணான முடிவுகளைதான் முன் வைக்கிறார்கள் 

தமிழ் முதன்மை மொழி என்பது எனது வாதம் இல்லை 
அதுக்கு மூத்த மொழி என்ற ஒன்றுக்கு இன்னும் ஆதாரம் இல்லை என்பதுதான் 
இங்கு நான் கூறுவது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்தியா விடாது, சிறிலங்கா விடாது என்பதற்காக நாம் கற்பனை அடிப்படையிலான யூரியூபை வைத்துக் கொண்டு ஆதி வரலாற்றை எழுத முடியாதென்று நினைக்கிறேன்.

நான் சொன்னவற்றில் எது கற்பனை என்பதை சுட்டிக்காட்டினால், அதை மீட்டு பார்க்க முடியும் எதனால் கற்பனையாக இருக்கிறது  என்று. 

youtube இல் இருப்பதின் உண்மை தன்மையை தரம் பிரித்தறிந்தால், அறிவை அகட்டலாம், எல்லாவற்றையும் ஒதுக்கி விட முடியாது. 

இது மேற்கு பக்க ஆரம்ப  ஆய்வு. இப்படி கிழக்கு பக்கத்திலும் நடந்த ஆய்வுக்கான வீடியோ பார்த்த நினைவு, இப்பொது காணவில்லை. 

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/1768109.stm

https://grahamhancock.com/archive-review6/

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைக் குறித்து உங்களுக்குத் தேடலும் கேள்வியும் இருப்பின் அதைப் படித்தறிதல் அவசியம். குறிப்பாக தத்துவம் சார்ந்த சரியான கேள்வி கேட்கக் கூட அந்த தத்துவத்தைப் படிப்பது முன்நிபந்தனை! படிக்காமல் கேள்விகள் கேட்பது தகவல் சேகரிப்பே ஒழிய அறிவுத் தேடலுக்கு உதவாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.