Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வீடு – வேலைத்திட்டம் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

September 6, 2020

IMG_2985-1024x768.jpg

அனைவருக்கும் வீடு என்ற செயற்றிட்டத்திற்கு கீழ் யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடமைப்புக்கான உதவிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 113 குடும்பங்களுக்கு, 0.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுளை நிர்மாணிப்பதற்கான முதலாம் தவணை கொடுப்பனவு பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இதற்கான நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலகத்தில் (06)  காலை இடம்பெற்றது.

இதன்போது, 113 குடும்பங்களுக்குமான முதலாம் தவணை கொடுப்பனவுகளை நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும், யாழ்மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் யாழ் அரச அதிபரும் யாழ் ஒருங்கிணைப்பு சபையின் செயலாளருமான கணபதிபிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் மு.ரவீந்திரன், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், அரச அலுவலர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர். #அனைவருக்கும்வீடு #வேலைத்திட்டம் #யாழ்ப்பாணம் #வருமானம் #அங்கஜன்

IMG_2960-1024x768.jpgIMG_2967-768x1024.jpgIMG_2970-1024x768.jpgIMG_2981-1024x768.jpgIMG_2983-916x1024.jpg

https://globaltamilnews.net/2020/149703/

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். இந்தியா வீடு கட்டி கொடுக்கின்றது என்று காலத்துக்கு காலம் சொல்லி ஆசை காட்டினார்கள்.

வெளிநாட்டு உதவி இல்லாமல் அல்லது நல்ல வரும்படி இல்லாமல் சாதாரண நிலை குடும்பங்கள் வீடு கட்டுவது பெரும்பாடு. அனைத்தையும் அடகு வைத்தும், கடன்வாங்கியும் வீடு கட்ட தொடங்கி கடைசியில் வட்டியும் கட்டமுடியாமல் நாளாந்த வாழ்க்கையையும் ஓட்ட முடியாமல் அல்லலுறும் குடும்பங்கள் பல.

அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட பெரிய திட்டங்களை அரசு பாகுபாடின்றி செயல்படுத்துமா பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்ச்சிகளோ கபடஅரசியல் நரித்தனங்கள் மூலம் மக்களை ஏமாற்றாவிடில் எவர் குற்றியும் அரிசி ஆனால் சரி  

  • கருத்துக்கள உறவுகள்

6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா?

முடியாது தான்.ஆனால் வீட்டுதிட்டம் வன்னியில் பரவலாக கிடைக்கிறது.இனி அவர்களின் முயற்ச்சியும் கெட்டித்தனமும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

முடியாது தான்.ஆனால் வீட்டுதிட்டம் வன்னியில் பரவலாக கிடைக்கிறது.இனி அவர்களின் முயற்ச்சியும் கெட்டித்தனமும்.

வீட்டிற்காக அவர்ககள் கடனாளிகளாகக் கூடாது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லது செய்கிறார் போல்  தெரிகின்றது.  உளமார செய்தால் வரவேற்பு என்றும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

6 இலட்சத்தில் வீடா..??! கொட்டில் போடவும் காணாதே..??! 

காசைக் கொடுக்காமல்... வீட்டை இவர்களே பூரணமாகக் கட்டி குடியேறக் கூடிய வசதிகளுடன்.. கொடுக்கலாமே..!! 

வழக்கமாக இப்படியான நிகழ்வுகளில் வடக்கின்  அடாவடி மினிஸ்ட்டர் தான் முன்னுக்கு நின்றுகொண்டு புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி வழங்குவார்; அவர் வராதது ஒரு நல்ல விடயம்.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Dash said:

வழக்கமாக இப்படியான நிகழ்வுகளில் வடக்கின்  அடாவடி மினிஸ்ட்டர் தான் முன்னுக்கு நின்றுகொண்டு புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட மக்களுக்கு  உதவி வழங்குவார்; அவர் வராதது ஒரு நல்ல விடயம்.

யார்...பெரியவன் என்று,  இரண்டு பேரும்... முறுகல் நிலையில் உள்ளார்கள்.
அங்கஜனுக்கு.... மேலிடத்து செல்வாக்கு, அதிகம் உள்ளதால், 
டக்ளஸ்... பம்மிக் கொண்டு இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

6 இலட்சத்தில் வீடா..??! கொட்டில் போடவும் காணாதே..??! 

காசைக் கொடுக்காமல்... வீட்டை இவர்களே பூரணமாகக் கட்டி குடியேறக் கூடிய வசதிகளுடன்.. கொடுக்கலாமே..!! 

இராணுவம் கட்டிக்கொடுக்கும் பரவாயில்லையா

8 hours ago, சுவைப்பிரியன் said:

முடியாது தான்.ஆனால் வீட்டுதிட்டம் வன்னியில் பரவலாக கிடைக்கிறது.இனி அவர்களின் முயற்ச்சியும் கெட்டித்தனமும்.

அதுதான் ஆனால் குறைந்த வருவாய் பெறும் குடும்பம் அதிகம் 

அண்மையில் இராணுவம் கட்டிய வீடு பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டது 

மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்

10 hours ago, MEERA said:

6 இலட்சம் ரூபாவில் ஓர் வீட்டைக் கட்ட முடியுமா?

முடியாது ஆனால் அடுத்த முயற்சியில் அவர்கள் இறங்கினால் வீடு முழுமையாகும்

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இராணுவம் கட்டிக்கொடுக்கும் பரவாயில்லையா

மன்னாரில்.. வவுனியாவில்.. திருமலையில்.. நாவற்குழியில்.. சிங்கள மாதிரிக் கிராமங்களை அமைத்து.. வாழக் கூடிய குடிமனைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது சிங்கள அரசு. 

அப்படி இருக்க தீவகம் உட்பட பல பகுதிகளில் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்தான வீடமைப்புத் திட்டங்கள் சுவர் எழுந்து கூரையாக முடியாத நிலையில்.. பூண்டும் செடியும் கொடியும் படரும் இடங்களாக உள்ளனவே தவிர.. டக்கிளஸின் அடியாட்கள் வாழும் பகுதிகளில் மட்டும்.. கூரை எழுந்து நிற்கிறது.. மற்றைய இடங்களில் எல்லாம்.. என் கண்கண்ட சாட்சியமாக இதுவே நிலை.

வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கான இந்தத் திட்டத்தில் 6 இலட்சத்தை வீட்டைக் கட்டு என்று கொடுத்தால்.. கூலி யார் கொடுப்பார்.. மின்சார இணைப்பு யார் கொடுப்பார்.. பள்ளக் காணிகளை.. மற்றும் சுற்றயல் காணிகளை திருத்தி அமைக்க யார் கொடுப்பார்...??!

ஆனால்.. இராணுவத்திற்கு கடற்படைக்கு..  நீச்சல் தடாகங்கள்.. மாடி மனைகள்.. பூஞ்சோலைகள்.. விளையாட்டுத்திடல்களுடன் கூடிய பாரிய நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் செலவாகிற பணத்தை.. ஏன் முழுமையான வீட்டுத் திட்டமொன்றை சிங்களவர்களுக்கும் சிங்களப் படைகளுக்கும் அமைத்துக் கொடுப்பது போல்.. தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியவில்லை..??! இதனை எது தடுக்கிறது..??! 

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் உறவுகள் எத்தனை பேர் உண்மையாக வீடு கட்டப் போகினம்..தங்களின் பிற தேவைகளுக்கு எடுத்துட்டு மீளவும் ஒன்றுமேயில்லை என்று சொல்ல மாட்டார்களா..?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, யாயினி said:

இதில் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் உறவுகள் எத்தனை பேர் உண்மையாக வீடு கட்டப் போகினம்..தங்களின் பிற தேவைகளுக்கு எடுத்துட்டு மீளவும் ஒன்றுமேயில்லை என்று சொல்ல மாட்டார்களா..?

இல்லை.அப்படி செய்ய முடியாது.ஒவ்வரு கட்ட வீடு கட்டுமானத்தை பொறுத்து தான் காசு கொடுப்பார்கள்.மேலதிகமாக நீங்கள் ஏதாவது வசதி வீட்டுக்கு செய்தால் அது உரிமையாளரின் செலவு.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 00:37, nedukkalapoovan said:

மன்னாரில்.. வவுனியாவில்.. திருமலையில்.. நாவற்குழியில்.. சிங்கள மாதிரிக் கிராமங்களை அமைத்து.. வாழக் கூடிய குடிமனைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது சிங்கள அரசு. 

அப்படி இருக்க தீவகம் உட்பட பல பகுதிகளில் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் குறித்தான வீடமைப்புத் திட்டங்கள் சுவர் எழுந்து கூரையாக முடியாத நிலையில்.. பூண்டும் செடியும் கொடியும் படரும் இடங்களாக உள்ளனவே தவிர.. டக்கிளஸின் அடியாட்கள் வாழும் பகுதிகளில் மட்டும்.. கூரை எழுந்து நிற்கிறது.. மற்றைய இடங்களில் எல்லாம்.. என் கண்கண்ட சாட்சியமாக இதுவே நிலை.

வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்கான இந்தத் திட்டத்தில் 6 இலட்சத்தை வீட்டைக் கட்டு என்று கொடுத்தால்.. கூலி யார் கொடுப்பார்.. மின்சார இணைப்பு யார் கொடுப்பார்.. பள்ளக் காணிகளை.. மற்றும் சுற்றயல் காணிகளை திருத்தி அமைக்க யார் கொடுப்பார்...??!

ஆனால்.. இராணுவத்திற்கு கடற்படைக்கு..  நீச்சல் தடாகங்கள்.. மாடி மனைகள்.. பூஞ்சோலைகள்.. விளையாட்டுத்திடல்களுடன் கூடிய பாரிய நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் செலவாகிற பணத்தை.. ஏன் முழுமையான வீட்டுத் திட்டமொன்றை சிங்களவர்களுக்கும் சிங்களப் படைகளுக்கும் அமைத்துக் கொடுப்பது போல்.. தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியவில்லை..??! இதனை எது தடுக்கிறது..??! 

எது தடுக்கும் யார் தடுப்பார்கள் என நீங்கள் ஊகிக்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

எது தடுக்கும் யார் தடுப்பார்கள் என நீங்கள் ஊகிக்கிறீர்கள்

இன்னும் சிங்களவனையும் சிங்கள அடிவருடிகளையும் நம்பி இருப்பது தான் எமது வறுமைக்கு முதன்மைக் காரணம். நீங்கள் பட்டினி கிடந்து செத்தாலும்.. இந்தக் கூட்டம்.. எதுவும் செய்யாது. வேடிக்கை மட்டும் பார்க்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2020 at 22:45, nedukkalapoovan said:

இன்னும் சிங்களவனையும் சிங்கள அடிவருடிகளையும் நம்பி இருப்பது தான் எமது வறுமைக்கு முதன்மைக் காரணம். நீங்கள் பட்டினி கிடந்து செத்தாலும்.. இந்தக் கூட்டம்.. எதுவும் செய்யாது. வேடிக்கை மட்டும் பார்க்கும். 

தவறு  கொரானாவால் பாதித்த காலத்தில் வறிய சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 10000 அரசாால் வழங்கி வைக்கப்பட்டது 

அதை கூட கொடுக்க மறுத்த நம்ம சமுர்த்தி ஊழியர்கள் இங்கே உண்டு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.