Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 25/9/2020 at 04:34, goshan_che said:

தியாகம், நேர்மை, அற்புதமான  தலைமை சகலதும் இருந்தும் நோக்கை அடைய முடியாமல்  போனமைக்கு ஒரு சிலரை தவிர ஏனையோருக்கு  சித்தாந்த தெளிவின்மையும் ஒரு பெரிய காரணி.

ரஸ்யா, சைனா, வியடனாம் எங்கினும், சித்தாந்த வாதங்களுக்கு நேரம் ஒதுக்கிய, அதே சமயம் தனியே சித்தாந்தம் மட்டும் பேசாமல் செயலிலும் காட்டிய போராட்டங்களே வென்றுள்ளன.  

கருணா என்ற  துரோகியும் & உலக நாடுகள் ஒன்றினைந்து இலங்கைக்கு உதவியதுதான் எமது போராட்ட அழிவிற்கு காரணம்.

தலைவர் நினைந்த மாதிரியே சிங்களவன் புலி எது & பொதுமாக்கள் யார் என கடைசி நேரம் பார்க்கவில்லை.

சும்மா கதை எழுத வேண்டும் மென்பதற்கு கற்பனைகளை அள்ளிவிட வேண்டாம்

  • Replies 147
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

முதல்வன்

நான் இந்த திரியை திறப்பதற்கான நோக்கம் நாங்கள் ஈழத்தமிழரின் அரசியலையும் அவர்களின் வரலாறுகளையும் ஒரே திரியில் ஆரோக்கியமாக விவாதிக்கும் நோக்கம் மட்டும் தான்.  அது இனிவரும் சந்ததிக்கு பயன்படட்டும். ஒ

சண்டமாருதன்

சிங்களவனுடன் வாழலாம் என்பது மேற் கூறியவற்றை மறுத்து வாழலாம் என்பது பொருந்தாது . பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்களுடன் நாம் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். ஆனால் தேசத்தை முற்றாக மறந்து விட்டு வாழ்கின்றோம்

goshan_che

தரப்படுத்தல் - என் பார்வை தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும். தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், ப

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழருக்கு தடி இல்லாமல் எதையும் செய்ய முடியாது ஒருத்தர் கை காட்டணும் மற்றவர் பின் தொடரணும் அதுக்கு ஒரு பிரபாகரன் தோண்றணும் அதுவரை????? 

இன்று இரவும் அவருடன் பேசிக் கொண்டு இருப்பது போல் கனவு கண்டேன் அது நனவாகணும்.

Edited by விசுகு
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி தான்! முன்னர் யாரோ சொன்னது போல, இந்தத் திரிக்கும் சனி பிடித்து விட்டது! 

Posted
2 hours ago, விசுகு said:

தமிழருக்கு தடி இல்லாமல் எதையும் செய்ய முடியாது ஒருத்தர் கை காட்டணும் மற்றவர் பின் தொடரணும் அதுக்கு ஒரு பிரபாகரன் தோண்றணும் அதுவரை????? 

இன்று இரவும் அவருடன் பேசிக் கொண்டு இருப்பது போல் கனவு கண்டேன் அது நனவாகணும்.

விசுகு தடி மட்டும் இருந்தால் போதாது. தடியை உயோகித்து  எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்ற தெளிவும் தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, tulpen said:

விசுகு தடி மட்டும் இருந்தால் போதாது. தடியை உயோகித்து  எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்ற தெளிவும் தேவை. 

சும்மா கதை விடக்கூடாது செயலில் அப்படி ஒன்றை அல்லது ஒருத்தரை வழி மொழியுங்கள் பார்க்கலாம்

Posted
On 26/9/2020 at 03:53, tulpen said:

சண்ட மாருதன் நீங்கள் கூறிய தேசங்கள் கடந்து தமிழர்களை ஒன்றிணைத்தல் என்ற கருத்து மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் அதை செய்ய நாம் எம்மை தயார்ப்படுத்த வேண்டும். அது ஒரு நீண்ட பயணமாக இருக்கும். எமக்குள்  இருக்கும் குறுகிய மனப்பாங்குகளை களையவேண்டும். ஒரு ஊருக்குள்ளையே சாதி  வேறுபாடுகளால் மற்றவரை மதிக்காத ஒரு சமுதாயம் உலகளாவிய இனமாக பரிணமிப்பது சாத்தியமே இல்லை. மொழி என்ற தொடர்பாடல் ஒன்றாக இருந்தால் போதாது மனத்தளவில் பரந்த மனப்பாங்கு உள்ளவர்களாக மாற வேண்டும். உணர்சசி வசப்பட்ட பேச்சுககள் பாடல்கள் குறுகிய காலத்திற்கு இணைக்குமே தவிர concert முடிந்தபின்னர் கலைந்து போகும் பாரவையாளர் போல் போய்விடும். 

உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள்

எமக்குள் இருக்கும் பெரும் சிக்கல்களும் பின்னடைவுக்கான காரணங்களும் நீங்கள் சொல்ல வரும் விடயத்துக்குள்ளாகவே இருக்கின்றது. இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது சற்றேனும் நன்மை பயக்கும். 

 என்னுமொரு சந்தர்ப்பத்தில்  எனது கருத்துக்களை பதிகின்றேன். 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2020 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரான தமிழர் தாயக அரசியல் நிலைமைகள்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்களின் ஆற்றல் மேம்பாட்டிற்கு நான் வகுத்திருக்கும் திட்டம் இதுதான்’? -க.வி.விக்னேஸ்வரன்

 
1-105-696x440.jpg
 69 Views

‘தமிழ் மக்களின் ஆற்றல் மேம்பாட்டிற்கு நான் செய்யவிருப்பதும் அதனைப்பெற நான் வகுத்திருக்கும் திட்டமும்.’ என்ற தலைப்பில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன்,Consortium of Tamil Associations – Australia என்ற அமைப்பு நடத்திய Zoom கலந்துரையாடலில் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், க.வி.விக்னேஸ்வரன் அவர்களின் முழுமையான கருத்து பகிர்வு,

“தமிழ் மக்களின் ஆற்றல் மேம்பாட்டிற்கு நான் வகுத்திருக்கும் வரைபடமானது எமது அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருக்கும் தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்.

அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறுகின்றேன்.

தன்னாட்சி என்று கூறும் போது நாம் இதுவரை காலமும் கோரி வந்த தனிநாடு என்ற கோரிக்கைக்கு மாறாக முன்னர் தந்தை செல்வா கோரி வந்த சமஷ;டி முறையிலான தன்னாட்சி பெற்ற ஒரு அலகையே குறிப்பிடுகின்றோம். எமது உள்நாட்டு மற்றும் புலம்பெயர் உறவுகளும் சிங்கள சகோதரர்கள் பலரும் நாம் இன்னமும் தனிநாட்டைக் கோருவதாகவே கற்பனை பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

பூகோள அரசியலின் காரணமாக அவ்வாறான ஒரு நிலை ஏற்படக்கூடும் என்பது வேறு விடயம். ஆனால் நாம் எமது கொள்கையாகக், குறிக்கோளாக வகுத்திருப்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்னும் சமஷ;டி அமைப்பையே. அதனைச் சிங்கள மக்கள் நாட்டைப் பிரிப்பதாகக் கற்பனை பண்ணுகின்றார்கள். அவர்கள் மத்தியில் புரிந்துணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். எமது மக்களும் சில விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் சூழலுக்கு ஏற்றவாறு எமது கொள்கைகளை வகுத்தே முன்னேற வேண்டும். இலங்கை நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கொண்டு வரமுடியாது என்று எம்முள் பலர் முடிவெடுத்திருப்பது சென்ற கால நிகழ்வுகளின் அடிப்படையிலேயே. முன்னர் எமக்கு நடந்தவற்றிற்கு சிங்களப் பொது மக்கள் எந்தளவுக்குத் துணைபோனார்கள் என்பதை அவர்கள் அக்கால கட்டத்தில் மௌனிகளாக இருந்ததை வைத்தே எடைபோடுகின்றோம். ஆனால் அவர்கள் மௌனிகளாக இருந்ததற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக அவர்களுக்கு எம்மீது ஏற்படுத்தப்பட்ட தப்பபிப்பிராயங்கள் அவர்கள் மனதில் இதுகாறும் வேலை செய்துவந்தன.

இலங்கை சிங்கள பௌத்த நாடு, பௌத்தம் வரமுன் இன் நாடு அரை மனிதர்கள் வாழ்ந்த நாடு என்றெல்லாம் மகாவம்ச சிந்தனையில் சிங்கள மக்கள் இதுகாறும் வாழ்ந்து வந்துள்ளார்கள். தமிழர் சோழர் காலத்து வந்தேறுகுடிகள். தமக்கிருக்கும் உரித்துக்களுக்கு மேலதிகமாக அவர்கள் உரிமை கொண்டாடுகின்றார்கள் என்பது சிங்கள மக்களின் எண்ணம். இதையெல்லாம் மாற்றவே நான் இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தேன்.

ஆகவே சிங்கள மக்களுக்கு எதிரான ஒரு சிந்தனையில் பயணிக்காது உண்மையின் பாற்பட்டு நாம் பயணித்து எமக்குரிய தன்னாட்சியை சமஷ;டி அடிப்படையில் பெறவேண்டும் என்பதே எனது குறிக்கோள். இதற்கான வரைபடம் பல விதமாக, பல கோணங்களில் இருந்து தயாரிக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

முதலாவது அறிவு ரீதியான, அனுபவ ரீதியான கலந்துரையாடலின் அடிப்படையில் புலத்தில் உள்ளோர் புலம்பெயர்ந்துள்ளோர் மத்தியில் இருந்து புத்திஜீவிகளை தேர்ந்தெடுத்து உள்ளடக்கி குழுவொன்று அமைத்து வரைபடம் தயாரிக்கப்பட வேண்டும். எம் வசம் இருக்கும் சிந்தனைகளை அந்தக் குழுவை உரை கல்லாகப் பாவித்து தீட்டி எடுத்து முடிவு எடுக்கப்பட வேண்டும். முக்கியமாக அரசியலில் வெற்றிபெற நாம் எம் மக்களை அரசியலில் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வலுப்படுத்த வேண்டும். எவ்வாறு அதனைச் செய்வது என்று கலந்துரையாடி முடிவுக்கு வருவோம்.

நாம் இதுகாறும் நடந்தவாறு தனிப்பட்டவர்களின் தான்தோன்றித்தனமான நெறிப்படுத்தல்களுக்குக் கட்டுப்படாமல் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒரு கூட்டு ரீதியான பயணத்தில் பயணிக்க இருக்கின்றோம். எமது பலத்தையும் பலவீனங்களையும் எடைபோட்டு, எம்மிடையே இருக்கும் வளங்களையும் திறமைகளையும் ஆய்ந்தறிந்து முடிவுகளை எடுக்கவிருக்கின்றோம்.

எம்மைச் சார்ந்த கூட்டுக் கட்சிகளில் பல அனுபவமிக்க அரசியல்வாதிகள் உள்ளார்கள். அவர்களையும் உள்ளடக்கியே நாம் முன் செல்ல இருக்கின்றோம். இது தனிப்பட்ட பயணமாக இல்லாது புலத்தினதும் புலம்பெயர் மக்களினதும் கூட்டு நடவடிக்கையாகவே பரிமாணம் மாறி பரிணமிக்க இருக்கின்றது. எமது முதலீடு இனிமேல் அறிவாகவே இருக்கும். எமது ஆயுதங்கள் இனிமேல் அறிவாக மாறும்.
தன்னாட்சி என்ற அரசியல் இலக்கைப் பெற நாம் பாவிக்க இருக்கும் மற்றைய ஆயுதங்கள் தற்சார்பும் தன்னிறைவும் ஆவன. தற்சார்பு என்பது நாம் எம்மைச் சார்ந்து செயற்படுவது.

முதலில் அதற்கு எம்மிடையே அறிவுபூர்வமான ஒற்றுமை வேண்டும். வெறும் கட்சி நன்மைகளைப் பற்றியே கனவுகாணாமல் மக்கள் நலன்கருதி நாம் ஒன்றுபட வேண்டும். இது புலத்திலும் புலம்பெயர் நிலத்திலும் நடைபெறவேண்டும். நாம் சுயநலம் களையாவிட்டால் மக்கள் நலம் எம் கையைவிட்டுப் போய்விடும்.

யூதர்களைப் பார்த்து நாம் எம்மை ஒற்றுமைப்படுத்த, பலப்படுத்த முன்வரவேண்டும்.
எமது உரிமைகளை வென்றெடுக்க உலகளாவிய சிந்தனைக்கூடம் ஒன்றைக் கட்டி எழுப்ப வேண்டும். மேலும் அரசியல் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள், அபிவிருத்தி நிதியங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே தமிழ் மக்கள் நம்பிக்கைப் பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஊடாக சில அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் தான் இந்த நம்பிக்கைப் பொறுப்பு அமைப்புக்குப் பொறுப்பாக முன்னாள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகப் பதவி வகித்த, மேலும் சமாதானப் பேச்சு வார்த்தை காலத்தில் உடனடி மனிதாபிமான சேவைகளுக்கான உப குழுவுக்குப் பொறுப்பாக இருந்த நண்பர் செல்வின் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதனைச் சேவையாகக் கருதியே செயற்பட்டு வருகின்றார். Subcommittee for Immediate Humanitarian Needs என்பதை SIRHN என்று அழைத்தார்கள்.

நாம் எமது நடவடிக்கைகளில் இறங்கும் போது நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும். நிறுவனமயப்படுத்தப்பட்ட கூட்டுச் செயற்பாடுகளே இனி எமக்கு விடிவைக் கொடுக்கும். யூதர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட கூட்டுச் செயற்பாடுகளே அவர்களின் இன்றைய மேன்மை நிலைக்குக் காரணம்.

சமஷ்டிக்காக நாம் அரசியல் ரீதியாகப் பயணிக்கும் போது எமது பலம் குன்றிய சமூக அலகுகளையும் நாம் எம்முடன் கூட்டிச் செல்வது அவசியமாகும். இவற்றில் குறிப்பாக மக்கள் போராட்டங்களை மேற்கொள்வதும், அரசியலில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை உள்வாங்கி செயற்படுவதும் முக்கியமானவை. எமது புத்தி ஜீவிகளை உள்வாங்குவதும் முக்கியமானதாகும்.

தற்சார்பு என்று நாம் கூறும் போது வடக்கு, கிழக்கின் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தகவல்களை திரட்டுவதற்கும், ஆலோசனைகளை வழங்குவதற்கும், வாய்ப்புக்களை இனங்காண்பதற்கும் ‘பொருளாதார ஆய்வு நிலையம்’ ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக எமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தோம். இதற்குப் புலம்பெயர் தமிழ் மக்களின் நிதி உதவியும் நிபுணத்துவமும் அவசியம். இந்த நடவடிக்கையினை முடிந்தளவு விரைவில் நாம் மேற்கொள்வோம்.

முக்கியமாக கல்வி மேம்பாடு அவசியமானது. வடக்கு-கிழக்கில் வீழ்ச்சியடைந்துள்ள கல்வித்தரத்தை உயர்த்தி மீண்டும் அதனை முதல் இடத்துக்கு கொண்டுவருவதற்கான செயற்திட்டங்கள் மற்றும் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கும், கூடுதலான மாணவர்கள் அதனை பெறுவதற்குமான நடவடிக்கைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, விசேடமான தொழிற் கல்விநெறிகள், நிபுணத்துவ பாடநெறிகள், ஆங்கில கல்வி ஆகியவற்றை எமது மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும் பங்களிப்பை செய்யமுடியும். நவீன கணனி முறைகளைக் கூட இதற்காகப் பாவிக்கலாம்.

முன்னாள் போராளிகள் மற்றும் மாற்று வலுவுள்ளோருக்கு புலம்பெயர் தமிழ் மக்களே கணிசமான உதவிகளை அவர்களுக்குக் கடந்த காலங்களில் செய்துள்ளார்கள். இவர்களுக்கான விசேட திட்டம் ஒன்றை தயாரித்து முக்கியமான சில வெளிநாட்டு அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளையும் பெற்று நடைமுறைப்படுத்த ஆவன செய்வோம். மாற்றுவலுவுள்ளோர் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.

இந்த திட்டங்களை தமிழ் மக்கள் நம்பிக்கை பொறுப்பின் கீழ் மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகின்றோம். வடக்கு கிழக்கில் வாழ்ந்துவரும் 90,000 வரையிலான விதவைகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இருக்கின்றோம். இதற்கு முன்னோடியாக ‘தேவைகள் மதிப்பீடு’ ஒன்றை விதவைகள் மத்தியில் நாம் விரைவில் நடத்த இருக்கின்றோம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் முடிவடைந்துள்ளன.

முன்னர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் செய்த தேவைகள் மதிப்பீடு இப்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை ஆகிய மூன்று பிரதான தொழில்துறைகளிலும் நாம் மறுமலர்ச்சி காண்பதற்கு அதிகளவு முதலீட்டை கொண்டுவருவதுடன் நவீன தொழில்நுட்பத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நிலையையும் உருவாக்க வேண்டும்.

இவற்றை செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கக்கூடிய சிறப்பு வரப்பிரசாதங்களை சிறந்த முறையில் நாம் பயன்படுத்துவதுடன் தமிழக அரசாங்கம், தமிழக பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றினதும் தமிழக முதலீட்டாளர்களினதும் பங்களிப்புக்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை எல்லா தமிழ் தேசிய கட்சிகளும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்பையும் நான் வழங்குவேன்.

எமக்குக் கிடைக்கும் சிறிய வாய்ப்புக்களை பயன்படுத்தி எமது மாணவர்கள் தமது திறமைகளை அகில இலங்கை ரீதியிலும் சர்வதேச மட்டத்திலும் வெளிப்படுத்தி பல்வேறு சாதனைகளை புரிந்துவருகின்றார்கள். இவர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை இது காட்டுகின்றது. விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு திட்டங்களை புலம் பெயர் மக்களுடன் இணைந்து நாம் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

நான் முன்னர் கூறியது போல, எமது சமுகத்தின் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இளையோர்களின் காத்திரமான பங்களிப்பு அவசியம். இளையோர்களை முடிந்தளவுக்கு உள்வாங்கி அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து செயற்படுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராக இருக்கின்றது. நாம் முன்னெடுக்கவிருக்கும் நிறுவன ரீதியான செயற்பாடுகளில் இளையோர்கள் இணைந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எமது வலுவூட்டல் நடவடிக்கைகளில் நாம் மலையக மக்களையும் மறந்துவிடக்கூடாது. புலம்பெயர் தமிழ் மக்களின் உதவியைப் பெற்று மலையக அரசியல்வாதிகளுடன் இணைந்து அவர்களுக்கான சில அபிவிருத்தி செயற்திட்டங்களை நாம் முன்னெடுக்க முடியும் என்பது எமது நம்பிக்கை.

முக்கியமாக, தமிழக முகாம்களில் அகதிகளாக வாழும் பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் தாயகம் திரும்பவேண்டும் என்பதே எமது விருப்பம். ஆனால், எத்தகைய சமூக, பொருளாதார நிபந்தனைகளின் கீழ் அவர்கள் தற்போது வாழ்கின்றார்கள் என்பதை கவனத்தில் கொண்டே இதைச் செய்யவேண்டி இருக்கிறது. அங்குள்ள மக்களை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மீண்டும் வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேற நடவடிக்கைகள் எடுப்பது பல்வேறு வழிகளில் அவசியமானதாக இருக்கின்றது.

நான் இவ்வாறான புலம்பெயர் மக்களுடன் இந்தியாவில் வைத்துப் பேசியுள்ளேன். அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்லூரிகளில் கல்வி போதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். இது பற்றி நான் முதலமைச்சராக இருந்த போது அப்போதைய இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியிருந்தேன். மாணவர்கள் கல்வியைத் தொடரலாம் அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து தருவதாக அவர் ஒத்துக் கொண்டார். அதாவது குடும்பத்தவர்கள் இலங்கைக்குத் திரும்பினாலும் அவர்களின் மாணவ குழந்தைகளின் கல்வித் தொடர்ச்சியில் எந்த விதப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதி மொழி தந்தார்.

கடைசியாக நாம் கவனத்திற்கு எடுக்க வேண்டியது தன்னிறைவு என்ற மேம்பாட்டை. நாம் எம்மை வலுவூட்டும் அதே சமயம் மற்றவர்களையே எந்த நேரமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் எமது வழக்கத்தை நாம் மாற்ற வேண்டும். வீடுகள் நாளாந்த உணவுத் தேவைகளுக்காகத் தன்னிறைவு பெற உழைக்க வேண்டும். கிராமங்கள் அவ்வாறே செயற்பட வேண்டும். முழு தமிழர் கிராமங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு வைத்து பண்டமாற்றுகளுக்கு இடமளிக்க வேண்டும். இந்த விதத்தில் நாம் யாவரும் தமிழ்ப்பேசும் மக்கள் என்ற ஒரு எண்ணம் வலுப்பெறும். கூட்டு நடவடிக்கை பொருளாதாரத்திலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்படும்.

தற்சார்பு தன்னிறைவு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு வடக்கு கிழக்கின் வளங்களைப் பாதுகாப்பதோடு வளங்களை உச்சப்பயன்பாட்டிற்கு உட்படுத்தி எம்மவரின் வறுமையைப்போக்கிப் பலம் பொருந்திய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கும் வகையிலான ஆய்வுகளை, ஆலோசனைகளை வழங்குவதோடு முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கல்வி மேம்பாட்டிற்கு இன்றைய உலகின் அபிவிருத்தியை அடியொற்றியதான தொழில்நுட்பக் கல்விக்கான ஆலோசனைகளையும் முடிந்தால் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டும்.

எங்கள் பாரம்பரிய கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கும் வளர்ந்த சமூகங்களுக்குரிய புதிய கலை வடிவங்களை தோற்றுவிப்பதற்கான ஆலோசனைகளையும் வசதிகளையம் ஏற்படுத்தித் தரவேண்டும் உயிர்ப்புள்ள சமூகமாக நாம் மாற இவை அவசியம். இவைக்கெல்லாம் நிதியுதவி அவசியம். அன்மையில் எனது தேர்தல் செலவினம் பற்றிய முழு விபரங்களையும் வெளியிட்டிருந்தேன். கிடைக்கும் ஒவ்வொரு சதத்திற்கும் கணக்குக் காட்டி வருகின்றோம் நம்பிக்கைப்பொறுப்பும் அதையே செய்யும்.

O/L  A/L பரீட்சைப் பெறுபேறுகளை அளவு கோலாக வைத்து வடக்கு கிழக்கில் கல்வித் தரம் வீழ்ந்துவிட்டது என்று கணிப்பிடப்படுகின்றது. எனவே இப்பெறுபேறுகளை உயர்த்துவதற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் போல பரீட்சைக்கான தயார்படுத்தல் கல்வி நடவடிக்கையில் முழுஅளவில் நடைபெறவேண்டும். இதற்காக பாடசாலை ஆசிரியர்களும் பரீட்சை இலக்கு நோக்கிய கற்பித்தலில் கவனம் செலுத்தவேண்டும். அறிவுக்கான ஆய்வுகளுக்கான அடித்தளமிட வேண்டியிருக்கும் போது கல்வி இன்று வெறும் பரீட்சைக்கான கல்வியாக பரிணமித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுவிடவேண்டும் அதற்கான போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுவிடவேண்டும் என்பதனால் எமது கல்வி, பரீட்சை மையக் கல்வியாகியுள்ளது. எல்லாம் பல்கலைக்கழக இலவசக் கல்வியைப் பெறுவதற்கேயாகும்.

பல்கலைக்கழகத்தில் முஸ்லீம் மாணவர்களும் சிங்கள மாணவர்களும் படிப்படியாக அதிகரிப்பதற்கு மாவட்டகோட்டா அனுமதியும் அந்தந்த சமூகங்களின் ஊக்கமும் கல்வி பற்றிய விழிப்புணர்வும் காரணமாகின்றன. ஆனால் எமது இளம் சமூகம் கற்பதைவிட்டு களியாட்டங்களில் அதிக கரிசனைகாட்டுகின்றனர். இந் நிலையை நாம் மாற்ற வேண்டும்.

இவையெல்லாவற்றிற்கும் உங்கள் முதலீடு அவசியம். பெறுமதிசேர் உற்பத்திக்கான புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் தேவை. விவசாயக் கைத்தொழில் மேம்படுத்தப்பட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எமது உற்பத்திப் பொருட்களுக்கான கேள்வியை அதிகரிக்கவேண்டும்.

எமக்கு அவசியமான உயர்கல்வி புலைமைப்பரிசுகள் வழங்குதல் வேண்டும். இவையாவும் எம்மக்களைத் தன்னிறைவை நோக்கிக் கொண்டு செல்லும் தன்மை வாய்ந்தன. இவற்றையெல்லாம் நான் செய்து முடிக்க எனக்கு திறம்மிகு உதவியாளர்கள் தேவை. சுயநலம் களைந்த உதவியாளர்கள் தேவை. அவர்களின் துணைகொண்டு எமது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு நடவடிக்கைகளில் வெற்றி பெற முடியும் என்று நான் முற்றாக நம்புகின்றேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/தமிழ்-மக்களின்-ஆற்றல்-மே/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளடக்கம்:- ஆயுத போராட்டம் மெளனித்தபின் எமது தலைவர்கள் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க தவறிவிட்டார்கள். உலகத்திற்கு நாம் பகடை காய்கள், 93இல் தலை கூறிவிட்டார், சர்வதேசத்திற்கு எமது போராட்டதில் அக்கறையில்லை அவர்களின் நலன்தான் முன்னிலை, போராட்டத்தை அழித்த இந்திய அமெரிக்கா மீண்டும் எமது போராட்டத்தை கையில் எடுப்பது இலங்கை அரசின் சீன போக்கு. இளஞ்செழியனின், சுமந்திரன், மட்டகளப்பு பொலிசாரின் கொலை முயற்ச்சிகள் , தடையைப்பற்றி ஆய்வு ,

ஊடகவியலாளார் வித்தியாதரனின் தடையைப்பற்றிய வித்தியாசமான பார்வை -

உள்ளடக்கத்தை தொகுத்துவழங்கியவர் - உடையார்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்  
இரட்டைப் பிரஜாவுரிமை உடையோரும் தேர்தலில் போட்டியிடலாம்!- யாருக்கு என்ன நன்மை? 

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் தெரிவித்திருக்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்,  

இது பசில் ராஜபக்சவை உள்ளுக்குள் கொண்டு வருவதற்கானது என்பது எல்லாருக்கும் தெரியும். இதற்கு அவரின் சகோதரன் கோத்தபாய சொன்ன காரணம் என்னவென்றால், "இந்த இரட்டைப் பிரஜாவுரிமை எங்கள் குடும்பத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டது.  நாங்கள் இதனை முறியடிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நான் வெற்றி பெற்றனான் என்பதனை உறுதிப்படுத்தலாம்."  என சொல்லி தான் அந்த சரத்தை எதிர்த்த தன்னுடைய கட்சியை சேர்ந்தவர்களை அவர் சரிப்படுத்தியிருக்கிறார்.  இது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமில்லை. 

இரட்டைப் பிரஜாவுரிமை சம்பந்தப்பட்ட விடயம்  பசிலைக் கொண்டு வரத் தான் என்பதனை தெரிந்தும் கூட எங்கள் எதிர்க் கட்சிகள் என்ன சொன்னார்கள்?  புலம்பெயர்ந்த தமிழர்களை அவர்கள் நாட்டுக்குள் தேர்தலில் ஈடுபடுத்தப் போகிறார்கள் என்று  சொன்னார்கள். அதாவது புலம்பெயர் தமிழர்கள் தேர்தலில் ஈடுபடுவதற்கு இருக்கும் தடை அகற்றப்படுகிறது. 
புலம்பெயர்ந்த தமிழர்கள் என இவர்கள் யாரை சொல்ல வருகிறார்கள்? புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியை இன்னும்  வைத்திருப்பவர்கள். தமிழ் மக்களின் போராட்ட நெருப்பை அணைய விடாமல் வைத்திருப்பவர்கள்.  அவர்களை கொண்டு வந்து இறக்கினால் நாட்டைக் குழப்பிவிடுவார்கள். இந்த இடத்தில் கூட அவர்கள் இனவாதத்தை தான் கையில் எடுக்கிறார்கள். இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் பசில் ராஜபக்சவை உள்ளுக்குள் கொண்டு வருவதற்கென்று நன்றாக தெரிந்திருந்தும்  அதற்கெதிரான எதிர்ப்பை மக்கள் மயப்படுத்த அவர்கள் எடுத்துக் கொண்ட விடயம் இனவாதம். 

ஆனால், தமிழ்மக்கள் இந்த விடயத்தில் தங்கள் நோக்கு நிலையில் இருந்து சில விடயங்களை கவனிக்க வேண்டும். தமிழ்மக்களில் நான்கில் ஒரு பகுதி புலம்பெயர்ந்து விட்டது.  அதில் ஆயுதப் போராட்டத்தை ஏற்றவர்களும் இருக்கிறார்கள். ஏற்காதவர்களும் இருக்கிறார்கள்.  இவர்களெல்லாம் புலம்பெயர்ந்து போய் அங்கிருக்கும் ஜனநாயக சூழலுக்குள் ஒரு புதிய அனுபவ தொகுப்பை பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு  நாட்டை விட்டு வெளியேறிய பலர்   அங்கிருக்கும் ஜனநாயக சூழலுக்குள் பல விடயங்களை கற்றுத் தேர்ந்து முதிர்ச்சியானவர்களாக வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆயுதப் போராட்ட அனுபவத்தையும் கொண்ட   ஜனநாயக பண்புகள் நிறைந்த நாட்டில் வாழ்ந்த அனுபவங்களையும் கொண்ட இந்த இரண்டினதும் தொகுக்கப்பட்ட அனுபவங்களையும்  கொண்ட ஆளுமைகள் தமிழ் அரசியலில் ஈடுபட வேண்டும். 

இன்று தமிழ் மக்களுக்கு தலைமைத்துவப் பற்றாக்குறை உள்ளது. ஆயுதப் போராட்டம் ஒரு பக்கம் தலைமைகளை இல்லாமல் செய்து விட்டது.   இன்னொரு பக்கம் ஆயுதப் போராட்டத்தால்  தலைமைகள் அழிக்கப்பட்டு விட்டது.  ஒரு தொகுதி தலைமைகள் புலம்பெயர்ந்து விட்டது.  இதனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்து இங்கு வருவதில், ஒரு புது இரத்தம் பாய்ச்சப்பட முடியும் என்று சொன்னால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்கிருந்து பரசூட் மூலம் இறக்கப்படக் கூடாது. அவர்கள் நாட்டுக்குள் வந்திருந்து கீழிருந்து மேல் நோக்கி தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்பி தங்களையும் தலைவர்களாக கட்டியெழுப்ப வேண்டும். அவர்கள் கோடை விடுமுறைக்கு வந்து சிலநாள் இங்கே நின்றுவிட்டுப் போகாமல் ஒரு குறிப்பிட்ட ஆண்டு காலம் இங்கே வந்து நின்று  தங்களுடைய உலகளாவிய அனுபவங்களையும் இந்த மக்களுக்குப் போதித்து ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொகுக்கப்பட்ட  பாடங்களின் அடிப்படையில்  அவர்கள் தலைவர்களை பண்படுத்தி உருவாக்க வேண்டும். எங்களிடம் இப்போது பொருத்தமான தலைவர்கள் இல்லை. 

ஒரு மாற்று அணி தனக்குள் கூட்டுக்குள் போக முடியவில்லை என்றாலோ, கட்சிகளை ஒருங்கிணைப்பதில் கூட மகத்தான தலைமையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, ஒரு வெளிவிவகார கொள்கையை தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து  ஒரு பலமான கட்சிகளும் பிரதிநிதிகளும் அடங்கிய, புத்தியீவிகளு ஏனைய தரப்புக்களும் அடங்கிய ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை என்றாலோ  அதற்கெல்லாம் காரணம் எங்களிடம் தரிசனம் மிக்க பெருந்தலைவர்கள் இல்லை என்பது தான். தமிழ்மக்கள் மத்தியில் தலைமைத்துவத்துக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது. 

இறந்தகாலத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு நிகழ்காலத்தை தீர்க்க தரிசனமாக திட்டமிடக் கூடிய தலைமைகள்  எங்களுக்கு வேண்டும். எனவே இது விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் தரப்பில் இருக்கக் கூடிய ஒரு பகுதியினர் எங்களுக்கு உதவ முடியும். புலம்பெயர்ந்த பலத்தை அதன் சக்தியை யூதர்கள் எப்படி ஒன்று திரட்டினார்கள் என்பதனை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கே புலம்பெயர்ந்த ஆளுமை மிக்கவர்கள் எல்லாம் தேச உருவாக்கத்தில் பெரும் பங்களிப்பை செய்தார்கள். அதே போல் இங்கேயும் ஒரு தேச உருவாக்கத்தில், ஒரு தேசமாக எழுவதில் புலம்பெயர்ந்த தமிழ் ஆளுமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உள்ளடக்கம்: சாதகமாக மாறி வரும் பூகோள அரசியல் சூழலும் ஈழத்தமிழர்களின் கையறுநிலையும் 

அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டிக்குரிய நிலமாக இலங்கைத்தீவு மாறிவரும் நிலையில், தமிழ் மக்களுக்கு இந்நிலைமை சாதகமாகவே உள்ளது. ஆனால், இன்று எங்களிடம் ஒரு வலுவான அரசியல் தலைமை இல்லாததால் தமிழ்மக்கள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 

தமிழர் அரசியலில் பூகோள அரசியல் குறித்த உரையாடல்கள் மிகக் குறைந்தளவே  இடம்பெறுகின்றன. இந்நிலையில் எங்களுக்கு  வலுவான வெளிநாட்டுக் கொள்கை அவசியமாக உள்ளது. 

அமெரிக்க ராஜாங்க செயலாளரின் வருகையும் அதன் பின்னர் சீனா, இந்தியாவின் எதிர்வினைகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களையும் முன்வைக்கிறார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரச்சினைகளைக் கையாள துறைசார் நிபுணர் குழு – இந்தியா கூட்டமைப்புக்கு ஆலோசனை

 
TNA-600.png
 31 Views

தமிழ் மக்களின் பிரச்னைகளை விடயங்கள் சார்ந்து ஒன்றன் பின் ஒன்றாகக் கையாள துறைசார் நிபுணர் குழுவை நியமிக்குமாறு இந்திய இராஜதந்திர தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.

தொல்பொருள், பண்பாட்டு, கலாசார ரீதியாக ஆக்கிரமிக்கப்படும் செயல்பாடுகள் அல்லது திட்டமிட்டு மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடனான பல்வேறு தொடர்பாடல்கள் மற்றும் சந்திப்புக்களின் போது இராஜதந்திர தரப்புக்களிடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்தே தமது தரப்புக்களுடன் இணைந்து செயல்பட கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அப்பால் துறைசார் குழு ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் இராஜதந்திர தரப்புக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் விரைவில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. இந்தக் குழு, மக்கள் பிரச்னைகளை முக்கியத்துவ அடிப்படையில் உரிய தரவுகளுடன் கிரமமாக ஆவணப்படுத்தவுள்ளது.

இதில் மாகாண சபை முறைமையிலுள்ள குறைபாடுகள் மற்றும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தல், இனப்பிரச்னைக்கான தீர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களும் இடம்பெறவுள்ளன.

இதனைத்தொடர்ந்து இராஜதந்திர தரப்புக்களின் மூலம் அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகள் முன்னெடுப்பதை இலக்காகக்கொண்டு இந்த நிபுணர் குழு செயல்படவுள்ளது.

எனினும், தற்போது வரையில் இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பினுள் பரஸ்பர கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் விரைவில் இவ்விடயம் சம்பந்தமாக கூட்டமைப்பு கூடிப் பேசவுள்ளது எனக் கூறப்படுகின்றது.

https://www.ilakku.org/பிரச்சினைகளைக்-கையாள-துற/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்மக்களுக்கு இல்லாத ஜனநாயக உரிமைகள் சிங்கள - முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை 

அரசியலில் வைரஸாக கருதப்பட்ட 20 ஆவது திருத்தத்தை நாட்டுக்குள் கொண்டு வந்தபோது அதற்கெதிரான சிவில் எதிர்ப்பு திரளக் கூடாது என்பதற்காக கொவிட் 19 ஐ காரணம் காட்டி தான் அரசாங்கம் ஊர்வலங்களையும் மக்கள் கூடும் நிகழ்வுகளையும் தடை செய்தது. 

ராஜபக்சக்களின் வெற்றிக்குப் பின் பௌத்த மத, கிறிஸ்தவ மத சங்கங்கள் கூட வாய்திறக்கவில்லை.  சிங்கள எதிர்க்கட்சிகள் கூட அப்படியே வாயடங்கி போயின. மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தார்கள். அதற்கு பிறகு தான் சிங்கள எதிர்க்கட்சிகள் கூட தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். ராஜபக்சக்களின் பெரு வெற்றியின் பிறகு எல்லா சிவில் அமைப்புகளும் கூட அப்படியே அமிழ்ந்து போய்விட்டன என்பது தான் உண்மை. 

இதற்குள் ஒரு செய்தி இருக்கிறது. இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பதில் தமிழ்மக்களுக்கும் உள்ள பங்கு என்ன என்பது தெரியவருகிறது. தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் இருந்தால் தான் அதனை சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் அனுபவிக்கலாம். தமிழ்மக்களுக்கு இல்லாத ஜனநாயக உரிமை சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. இது விடயத்தில் தமிழ்மக்கள் தான் எதிர்ப்பை துலக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெனீவா விவகாரங்களைக் கையாள்வதற்காக ஆராய்வுக் குழு ஒன்றை அமைக்க விக்கி திட்டம்

cv-600.png
 39 Views

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவை விவகாரங்களைக் கையாள்வதற்காக நாங்கள் விரைவில் ஒரு முக்கியமான ஆராய்வுக் குழுவை நியமிக்க பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள்.”

இவ்வாறு கூறியிருக்கின்றார் தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன். பாராளுமன்றத்தில் இருந்து வெளியே வந்த போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குநீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பின்வருமாறு பதிலளித்தார்-

கேள்வி :- 2021 மார்ச் மாதம் வரவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் கலந்துகொள்வீர்களா? அதற்கான ஆயத்தங்கள் ஏதும் செய்துள்ளீர்களா?

பதில் :- தற்போதைய கொரோனா காலத்தில் திட்டமிடுவதும் அதனை நடைமுறைப்படுத்துவதும் சற்றுக் கடினமாகவே இருக்கின்றன. நான் கலந்துகொள்வது பற்றி பின்னர் அறிவிப்பேன். எனினும் நாங்கள் இது பற்றி தற்போது நினைத்திருப்பதைப் பற்றிக் கூறுகின்றேன்.

நாங்கள் விரைவில் ஒரு முக்கியமான ஆராய்வுக் குழுவை நியமிக்க பூர்வாங்க ஏற்பாடுகளில் இறங்கியுள்ளோம். குறித்த குழுவில் எம்மோடு சேர்ந்தவர்களை விட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், மனித உரிமை வல்லுனர்கள் போன்ற பலர் இடம்பெறுவார்கள். அக் குழு அங்கத்தவர்கள் குறித்த ஐக்கியநாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கும் நாடுகளின் பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் அலுவலர்களைச் சந்திப்பார்கள். சர்வதேச நிறுவன அதிகாரிகளைச் சந்திப்பார்கள். சந்தித்து ஏன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

அத்துடன் அவர்களுடன் சேர்ந்து ஒரு சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றி பேச வேண்டிய அவசியமும் எழுந்துள்ளது. அதாவது யுத்த குற்ற சான்றுகளைச் சேகரித்து பாதுகாப்பாக சேமித்து வைத்தல், எந்த வகையில் குற்றம் புரிந்த இலங்கையின் அரசியல் தலைவர்களையும், யுத்த கால படையணித் தலைவர்களையும் சர்வதேச நீதித்துறைப் பொறிமுறைகளுக்குள் கொண்டு செல்வது பற்றியும் ஆராய வேண்டியுள்ளது. போகப் போக விபரங்களை நான் தருவேன்.

 

https://www.ilakku.org/ஜெனீவா-விவகாரங்களைக்-கைய/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெளிவிவகாரக் கொள்கை கட்சிகளுக்கானதல்ல. ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதனை உருவாக்குவது பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும் 

இலங்கைத்தீவு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறி விட்டது. அரசைக் கையாள்வது தான் பேரரசுகளின் முதல் தெரிவாக  இருக்கும். 

இந்தியா உட்பட.   முதலில் இலங்கை அரசாங்கத்தைக் கையாளும், அப்படி அரசாங்கத்தை கையாள முடியாமல்  போகும் போது தமிழ்மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு இலங்கை அரசாங்கத்தைப் பணிய  வைக்கும். இதைத்தான் இலங்கை இந்திய உடன்படிக்கை வரையிலும் இந்தியா செய்தது.   திரும்பியும் அப்படியொரு நிலை தான் வரும். 

அரசைக் கையாள முடியாமல் போகும் போது அவர்கள் தமிழ்மக்களைக் கையாள்வார்கள். இந்த இடத்தில் தமிழ்மக்களை அவர்கள் கையாள முன் தமிழ் மக்கள் பொருத்தமான ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்பை உருவாக்க முன்வர வேண்டும். அப்படி  உருவாக்கினால் தான் தமிழ்மக்கள் எப்படி புத்திசாலித்தனமாக வெளித்தரப்பைக் கையாளலாம் என யோசிக்கலாம். 

வெளிவிவகாரக் கொள்கை கட்சிகளுக்கானதல்ல. ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதனை உருவாக்குவது பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன். அவர் மேலும் தெரிவித்த பல விடயங்கள் காணொளியில் வருமாறு,

 

 

Posted
2 hours ago, உடையார் said:

வெளிவிவகாரக் கொள்கை கட்சிகளுக்கானதல்ல. ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதனை உருவாக்குவது பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும் 

இலங்கைத்தீவு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறி விட்டது. அரசைக் கையாள்வது தான் பேரரசுகளின் முதல் தெரிவாக  இருக்கும். 

இந்தியா உட்பட.   முதலில் இலங்கை அரசாங்கத்தைக் கையாளும், அப்படி அரசாங்கத்தை கையாள முடியாமல்  போகும் போது தமிழ்மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு இலங்கை அரசாங்கத்தைப் பணிய  வைக்கும். இதைத்தான் இலங்கை இந்திய உடன்படிக்கை வரையிலும் இந்தியா செய்தது.   திரும்பியும் அப்படியொரு நிலை தான்.

1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி.

2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும்.

3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கற்பகதரு said:

1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி.

2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும்.

3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.

ஏதிராக நிற்பது சிங்கள அரசியல் வாதிகள்.

சிங்கள அரசியல் வாதிகள் நல்ல தீர்வை தரும்வரை இலங்கை ஒரு போதும் முன்னேறாது,

சிங்கள அரசியல் வாதிகளின் அடிமைகளாகதான் சிங்கள & சில தமிழ் மக்களும் இருப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் இலக்கை அடைய வழிவகுக்கும்  ஏழு கொள்கைகள் -சத்தியா சிவராமன்

 
1.jpg
 84 Views

ஓர் சுதந்திரமான, இறைமையுள்ள, பன்னாட்டுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் நாட்டை மீட்டெடுக்கின்ற தமிழீழ மக்களின் நீண்ட, கடினமான பயணம், தற்கால வரலாற்றில் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறது.

எழுபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையை விட்டு வெளியேற ஆயத்தமான பிரித்தானிய காலனீய அரசு, ஒன்றிணைக்கப்பட்ட சிறீலங்கா அரசிடம் தமிழீழ நாட்டைக் கையளித்த கணப்பொழுதிலிருந்து தமிழீழ மக்களின் விடுதலைக்கான இந்தப் பயணம் ஆரம்பமானது.

அதன் பின்னர் கொழும்பை நடுவமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இனவாதம் நிறைந்த, பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக தமிழ் மக்களின் நீதியும் மாண்பும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் வன்முறையற்ற, அமைதி வழிகளில் தமிழ் மக்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஈற்றில் இப்போராட்டம் ஒரு முழு அளவிலான விடுதலைப் போராகப் பரிணமித்தது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நீடித்த இப்போர், 2009 மே மாதத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையுடனும், ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கொடூரமாக அழிக்கப்பட்ட நிகழ்வுகளுடனும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இக்காலப் பகுதியில் போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் சிறீலங்கா அரச படைகளினால் இழைக்கப்பட்டன. மிகவும் கொடூரமான முறையில் இழைக்கப்பட்ட இக்குற்றங்களுக்கு எந்தவிதமான பொறுப்புக்கூறலும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. போர் நிறைவுற்ற போது, ஆயிரக்கணக்கான தமிழ் இளையோர் கைதுசெய்யப்பட்டு, ஒன்றில் கொல்லப்பட்டார்கள் அல்லது சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டார்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையான அப்பாவிப் பொதுமக்கள் தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் கொடூரங்கள் இழைக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்று, ஒருபுறம் கொழும்பில் ஆட்சியில் இருப்போரின் ஆணவத்தையும் மறுபுறத்தில் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழப் பிரதேசங்களையும் அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அநீதிகளுக்கான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு எந்தவிதத்திலும் அக்கறை காட்டாத பன்னாட்டுச் சமூகத்தையும் நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மனம் தளர்ந்து போவதும் நம்பிக்கையை இழப்பதும் இயல்பாகவே எதிர்பார்க்கக் கூடிய விடயங்கள் தான்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, ஊடகங்கள் கோலோச்சும் ஒரு காலப்பகுதியிலும் தொடர்பாடல் வசதிகள் உச்சக்கட்ட நிலையிலிருந்த ஒரு காலப்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பன்னாட்டுச் சமூகம் ஒரு அங்குலம் கூட அசையவில்லை. மனித உரிமைகள் பற்றியும் சனநாயகம் தொடர்பாகவும் ஓயாமல் கோசமெழுப்புகின்ற வல்லரசுகள், இந்த இனப்படுகொலையைப் புரிந்து விட்டு இன்றும் சிறீலங்காவின் ஆட்சிக் கதிரையில் இருக்கும் பாசிசவாதிகளைத் தண்டிப்பது தொடர்பாக எந்தவித சலனமும் இன்றி இருப்பதையும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

சிறீலங்காவை உற்று நோக்கும் போது, இராஜபக்சாக்களை தலைமையாகக் கொண்ட கொழும்பு அரசு, முழுத் தீவையுமே சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கிறது. பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட தமிழ்ப் பிரதேசங்களைச் சிஙகளமயமாக்கும் செயற்பாடு, ஈடுசெய்யப்பட முடியாத வகையில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. பல மொழிகளையும், பல சமயங்களையும், பல இனங்களையும் தன்னகத்தே கொண்ட சிறீலங்கா, ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடாக மாறுவதாயின், தமக்குரிய தனிநாடான தமிழ் ஈழத்துக்காகப் தொடர்ந்து போராடுவதைத் தவிர தமிழ்ஈழத் தமிழ்மக்களுக்கு வேறு எந்தத் தெரிவும் இல்லை.

உலகின் எல்லாத் திசைகளிலும் பரந்து வாழுகின்ற புலம் பெயர் தமிழ் சமூகத்தினூடாக, அமைதியான வழிகளிலும், முற்று முழுதாகச் சனநாயக வழிமுறைகளிலும், தமிழ் மக்களுக்கான மாண்பையும், நீதியையும், விடுதலையையும் அடைந்து கொள்ளும் தூரநோக்குடன் இன்றும் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இனப்படுகொலையை மேற்கொண்டவர்களுடன் சமரசம் செய்வதென்ற கேள்விக்கு எந்தவிதத்திலும் இடமில்லை என்பது மட்டுமன்றி தற்கால சனநாயகத்தின் அடிப்படைகள் பற்றியோ, மனித நாகரிகக் கொள்கைகள் பற்றியோ எந்தவிதப் புரிதலும் இல்லாதவர்கள் நடுவில் சிறுபான்மை மக்களாகக் ஈழத்தமிழ் மக்கள் காலாதிகாலம் வாழ்வதையும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் மேற்கொள்ளும் இந்தப் போராட்டத்தில், நாம் கைக்கொள்கின்ற தந்திரோபாயங்களை மட்டுமல்ல நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பாகவும், அந்த இலக்கை அடைவதற்குரிய வழிவகைகள் தொடர்பாகவும் இருக்கின்ற அடிப்படைக் கொள்கைகளையும், அனுமானங்களையும் தொடர்ச்சியாக மீளாய்வு செய்வது மிகவும் அவசியமானதொரு செயற்பாடாகும். அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட எந்தவொரு மக்களினத்தின் விடுதலையை நோக்கும் பொழுதும், அவர்கள் அந்த விடுதலைக்காக எப்படிப்பட்ட ஈகத்தைச் செய்திருந்தாலும், அரசியல், பொருண்மிய, சமூக, பண்பாட்டுத் தளங்களில் பூகோள ரீதியாக எவ்விடயங்கள் இன்று முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன என்ற தெளிவு இன்றி இவை எதுவுமே சாத்தியமாகாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

முதலாவதாக, நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பான ஒரு தூரநோக்குப் பார்வையை (vision) நாம் கொண்டிருப்பதோடு, அந்த இலக்குத் தொடர்பான விபரங்கள் வெளிப்படைத்தன்மையோடு வரையறை செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். எதிர்காலத்தை முற்றுமுழுதாக எதிர்காலத்தின் கைகளிலே விடுவதும், உணர்ச்சிவசப்பட்டு தெளிவற்ற நிலையில் இருப்பதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத விடயங்களாகும். நாம் அடைய வேண்டிய இலக்கு தொடர்பான ஒரு முழுமையான வரைபு தொடர்பாக இங்கு நாம் குறிப்பிடவில்லை. ஆனால் நாம் உருவாக்க விரும்புகின்ற நாட்டுக்கான கட்டமைப்பு, கொள்கைகள், நிறுவனங்கள், சட்டவிதிமுறைகள் என்பவை தொடர்பான முன்குறிப்புகளைப் பற்றியே இங்கு நாம் பேசுகின்றோம்.

இரண்டாவதாக, சமகாலத் தாயகம், பூகோள அரசியல் நிலைமை, கடந்த கால வரலாறு, எதிர்காலத்தில் முன்னுரிமை பெறக்கூடிய விடயங்கள் என்பவற்றைக் கவனத்தில் எடுத்து வரையப்படும் எமது நோக்கங்களை அடைவதற்கான ஒரு நல்ல வழிவரைபு (road map)  எமக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றது. அப்படிப்பட்ட ஒரு வழிவரைபை உருவாக்கும் பயணத்தில் உதவக்கூடிய சில கொள்கைகள் கீழே தரப்பட்டுள்ளன. இக்கொள்கைகள் மேலும் ஆய்வுசெய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்தக் கொள்கைகள் ஆலோசனைகளாக மட்டுமே தரப்படுகின்றன. விடுதலைக்கான பயணத்தில் ஈடுபடுகின்ற அனைவரதும் பங்களிப்புடன் இக்கருப்பொருட்களின் அடிப்படையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு கொள்கைகள் இறுதிசெய்யப்படலாம்.

கொள்கை ஒன்று: ஓர் உறுதியான பூகோளப்பார்வையைக் கொண்டிருத்தல்

தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தை வெறும் உள்நாட்டுப் போராக மட்டும் நாம் பார்க்க முடியாது. மாறாக இப்போராட்டம், பல்வேறு சக்திகளுக்கு இடையேயான ஒரு பூகோள அரசியல் யுத்தமாகவே நோக்கப்பட வேண்டும்.

இரண்டாயிரத்து ஒன்பதில் நடைபெற்று முடிந்த போரில், மிகவும் வல்லமைமிக்க பன்னாட்டு மற்றும் பிராந்திய சக்திகளின் கூட்டணியே தமிழ் மக்கள் மேலும் விடுதலை இயக்கத்தின் மேலும் ஒரு இனப்படுகொலைத் தாக்குதலை சிறீலங்கா அரசு மேற்கொள்ள நேரடியாக உதவிசெய்ததை நாம் போரின் இறுதிக்கட்டங்களில் தெளிவாகப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. ஆகவே தான் தமிழ் ஈழத்தை அடைவதற்கான போராட்டத்தில் எமது கண்ணோக்கு, சிறீலங்காவின் வரையறைகளைக் கடந்ததாகவும் பூகோள ரீதியாக நிலவுகின்ற சூழலையும் நாம் செய்ய வேண்டிய வேலைகளையும் உள்ளடக்குவதாகவும்  அமைவது இன்றியமையாததாகும்.

இந்தக் கொள்கையை நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு, தன் (சுய)நிர்ணய உரிமை, நீதி, மனித உரிமைகள், சனநாயகம் போன்ற விடயங்களை ஏற்றுக்கொள்ளுகின்ற நாடுகள், அமைப்புகள், தனிநபர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய பன்னாட்டுக் கூட்டணிகளையும் நட்பு நாடுகளையும் நாம் இணைத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு வழியில் சொல்வதென்றால் தமிழ் ஈழத்தை அடைவதற்கான செயற்பாடுகள் மிகவும் உறுதியான பூகோளப் பரப்பிலும், பன்னாட்டுக் கண்ணோட்டத்திலும் வடிவமைக்கப்பட வேண்டுமேயோழிய, அந்த முயற்சிகள் பிராந்தியக் கட்டமைப்புகளுக்குள்ளேயோ அல்லது உப பிராந்திய மட்டங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது.

கொள்கை இரண்டு: தற்கால நாடிய அரசுகளைக் (nation states) கட்டமைக்கும் காரணிகளைப் புரிந்து கொள்ளல்

 முன்னெப்போதும் இல்லாத வகையில் இடத்துக்கிடம் மாறிக்கொண்டிருக்கும் நிதி, மனித வளம், அறிவு என்பவற்றின் மூலதனம், மிக அதிக வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் மனித அறிவு, விரைவாக உருவாகிக் கொண்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய இவை அனைத்துமே இப்பூகோளத்தையும் நாடிய எல்லைகளையும் ஏன் ‘நாடிய அரசு” என்ற எண்ணக்கருவையுமே புதிய பரிமாணங்களுக்கு எடுத்துச்சென்றிருக்கின்றன.

கடந்து சென்ற       நூற்றாண்டுகளில் தொடர்வண்டிப் பாதைகளும் வீதி வலைப்பின்னல்களும் எவ்வாறாக  முன்னைய அரசுகளை முற்று முழுதாக மாற்றியமைத்தனவோ, அதே போலத் தொடர்பாடலும் நிதி வலைப்பின்னல்களும் இன்று புதிய அடையாளங்களையும் உறவுகளையும் சமூகங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைய பெருநிறுவனங்கள், நாடுகளை விடவும் பலம் வாய்ந்தவையாக விளங்குவதுடன் நாடிய அரசுகள் இன்று பன்னாட்டு மூலதனங்களுக்கு வழிவிட்டுக்கொண்டிருக்கின்றன.

முன்னைய நாடிய அரசு என்ற எண்ணக்கரு தொடர்பாகப் பூகோள ரீதியாக பொருண்மிய முன்னுரிமைகள் இன்று எப்படி மாறியிருக்கின்றன என்பது பற்றி மிக விரைவாக ஆய்வு செய்து விளங்கிக்கொள்வது இன்று அவசியமாகியிருக்கிறது.

பூகோள ரீதியிலான மூலதனம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு இடம் மாறும் தன்மை, நாடுகளின் எல்லைகளையே மாற்றியமைத்து, அரசியல் இறைமை, ஏன் சுதந்திரம் தொடர்பான எண்ணங்களுக்கே புதிய பொருளைக் கொடுத்திருக்கிறது. இவ்வினாக்களுக்கு அளிக்கப்படும் பதில்களைக் கொண்டு இலக்குகள் கட்டமைக்கப்பட்டு கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்ற பாடங்களைத் துணையாகக் கொண்டும் எதிர்காலத்தில் வலுவாகக் கால் பதித்தவாறும் தமிழ் ஈழத்துக்கான  தூரநோக்கு (vision) வடிவமைக்கப்பட வேண்டும்.

கொள்கை மூன்று: தமிழ் ஈழம் ஏன் அவசியமானது என்பதை முற்றிலும் புதிய முறையில் உலகுக்கு எடுத்துரைத்தல்

தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்பது முற்றிலும் நியாயமான ஒரு போராட்டமாகும். ஆனால் தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசுகள் வெற்றிகரமாக மேற்கொண்ட தவறான பரப்புரைகளின் காரணமாக உலகம் எமது போராட்டத்தை ஒரு நியாயமான போராட்டமாகப் பார்ப்பதில்லை. உண்மையில் சொல்லப் போனால் எமது போராட்டம் தொடர்பாக உலகின் பெரும் பகுதிக்கு எதுவுமே தெரியாது.

இந்த விடயம் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். எமது போராட்டம் பற்றிய உண்மை, முழு உலகுக்கும் சொல்லப்படும் வரை நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டம் அதற்குத் தேவையான பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு வாய்ப்பில்லை.

தமது சொந்த எதிர்பார்ப்புகளையும் விடுதலைக்கான விருப்பையும் கடந்து தமிழ் ஈழத்துக்கான தமது போராட்டம் இன்று வெகு தூரத்துக்குச் சென்றுவிட்டது என்பதை ஈழத்தமிழ் மக்கள் புரிந்துகொள்வது மிக மிக அவசியமானதொன்றாகும். வெறுமனே ஒரு நாட்டின் விடுதலைக்காக மட்டும் முன்னெடுக்கப்படும் போராட்டம் அல்ல எமது போராட்டம்.

ஜேர்மனி நாட்டின் நாற்சிகள் (Nazi) கைக்கொண்டது போன்ற ஒரு மிக மோசமான பாசிசவாதத்துக் (Fascism) கெதிரான ஒரு போராட்டமாகும். ஒரு காலத்தில் இராஜபக்ச அரசை வெற்றிகொள்வது என்பது ஒரு சிறிய தீவுக்குள்ளே நடைபெறும் யுத்தமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இன்றோ அந்த நிலை முற்றிலும் மாறி, நன்மைக்கும் தீமைக்கும் எதிரான ஒரு பூகோளச் சமராக இது மாறிவிட்டதுடன் மனித குலத்தையே தன்நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு போராட்டமாகவும் மாறிவிட்டது.

தமிழ் ஈழம் ஈழத்தமிழ் மக்களின் இலட்சியமாக மட்டும் இனிமேல் இருக்க முடியாது. இந்தப் பூகோளப் பந்தில் இருக்கும் மனச்சான்று இருக்கின்ற ஒவ்வொரு மனிதப்பிறவியும் “இப்போது நாங்கள் எல்லோருமே ஈழத்தமிழர்கள் தான்” என்று பறைசாற்றும் நேரம் வந்துவிட்டது. ஈழத்தமிழ் மக்களின் போராட்ட வரலாறு இனிமேல் தனியே தமிழ் ஈழ மக்களின் கதையாக மட்டும் இருக்காது. அதற்கு மாறாக அது முழு மனித குலத்தினதும் கதையாகவும் மனிதகுலம் முழுவதற்கும் பொதுவாக அமையக்கூடிய விழுமியங்களுக்கான கதையாகவும் விளங்கப்போகிறது.

கொள்கை நான்கு: ஏனைய சமூகங்களோடு இணைந்து பன்னாட்டுக் கூட்டுறவைக் கட்டியெழுப்புதல்

இன்றைய சூழ்நிலையில் தங்களைப் போன்ற நிலையிலே இருக்கின்ற ஏனைய சமூகங்களுடன் இணைந்து கொள்ளாமல் எந்தவொரு குழுவோ, சமூகமோ, நாடோ தாங்கள் விரும்பியதை அடைந்துவிட முடியாது. தமக்காக மட்டுமே போராடுபவர்கள் உலகளாவிய வகையில் ஏனையோரின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியாது. தங்களைப் போன்ற தேவைகளைக் கொண்டிருக்கின்ற ஏனைய மக்களுடன் ஒத்துணர்வுடன் (empathy)  இணைந்து செயற்படுபவர்கள் நிச்சயமாக முழு உலகத்தாலும் போற்றப்படுவார்கள்.

ஆகவே, தமிழ் ஈழத்துக்கான போராட்டம் என்பது, உலகிலே அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்ற ஏனைய சமூகங்களுடனும் கைகோர்த்துப் போராடுவதிலேயே தங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒற்றுமையைக் காட்டுவதும், கட்டியெழுப்புவதும் உலகளாவிய வகையில் மட்டுமல்ல; சிறீலங்காவினுள்ளும் குறிப்பாக நீதி, அமைதி, சனநாயகம் போன்ற பண்புகள் நிறைந்த ஒரு சிறந்த உலகத்தைப் படைக்க விரும்புகின்ற சிங்கள மக்களையும் உள்ளடக்க வேண்டும்.

கொள்கை ஐந்து: புதிய எண்ணங்களை ஊக்குவித்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தல்

சண்டைக் களத்தைப் பொறுத்தவரையில், கெரில்லாப் போராளிகள் எதற்கும் அஞ்சாதவர்கள், எதற்கும் துணிந்தவர்கள் என்று பெயரெடுத்தவர்கள். சண்டைக் களத்தில் வெளிப்படுத்தப்படும் இந்தப் பண்புகள் அரசியல் அரங்கிலும் அரச தந்திரச் செயற்பாடுகளிலும் கூட வெளிப்படுத்தப்பட வேண்டும். அப்படியென்றால், வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் காலகட்டத்தில் முன்சார்பெண்ணங்களோ அல்லது எம்மைக் கட்டிப்போடும் பழக்கவழக்கங்களோ புதிய வழிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் எமது சிந்தனை ஆற்றலை எந்தவிதத்திலும் முடக்கிவிட நாம் அனுமதிக்க முடியாது.

எடுத்துக்காட்டாக, தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்த நிகழ்வு, பலருக்குத் துன்பங்களைத் தந்திருந்தாலும் இந்த நெருக்கடி பல புதிய வாய்ப்புக்களைத் தந்திருப்பதையும் மறுத்துரைக்க முடியாது. ஒரு புதிய நாட்டை மட்டுமல்ல உலகம் அலட்சியம் செய்ய முடியாத வகையில் முற்றிலும் ஒரு புதிய வகையான நாட்டைக் கட்டியெழுப்பும் வாய்ப்பை இது தந்திருக்கிறது.

உலகெங்கும் பரந்து வாழுகின்ற புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் ஏற்கனவே ஒரு நாடாக (ஒரு தேசமாக) இருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் நேரம் வந்து விட்டது. அரசு அல்லது நிலப்பிரதேசத்துக்குள் மட்டுப்படுத்துகின்ற முன்னைய எண்ணக்கருவைப் போலன்றிச், சமகாலச் சிந்தனைகளுக்கு ஏற்ப ஓர் புதிய நாடாக இருக்கிறார்கள்.

ஈழத்தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் பெரும் எண்ணிக்கையான ஈழத்தமிழ் மக்களும், தமக்கு எதிரான, தம்மை அடக்கியாளும் எண்ணங்களைக் கொண்ட சக்திகளின் நடுவில் தற்போது அகப்பட்டிருக்கின்ற போதிலும், இந்த நாடு முன்னரைவிட அளவில் எவ்வளவோ பெரிதாகவும் அறிவிலும் ஆற்றலிலும் பாரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கும் ஒரு மக்களினத்தைக் கொண்டதாகவும் வளர்ந்திருக்கின்றது என்ற உண்மை உணரப்பட வேண்டும்.

எதிர்காலத்திலே உருவாகப் போகின்ற ஒரு நாடாக மட்டும் தமிழ் ஈழத்தை நாம் கண்ணோக்க முடியாது. அந்த நாடு ஏற்கனவே உருவாகி விட்டது என்பது மட்டுமன்றி, பூகோளப்பரப்பில் இந்த நாடு தனக்கென்று தனித்துவமான எண்ணத்தை வடிவமைத்து, அந்த எண்ணத்தை உரக்கச் சொல்லத் தொடங்கி விட்டது. உண்மையாகச் சொல்வதாயின், புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தாம் கொண்டிருக்கின்ற ஆற்றலை முதலில் தெளிவாக இனங்காண வேண்டும். அப்படியாக அந்த ஆற்றல் இனங்காணப்படும் பொழுது, உலகமும் அதனை அங்கீகரிக்கும் நேரம் உருவாகும்.

பாரம்பரியக் கட்டமைப்புகளுக்குள்ளே மட்டும் நின்று சிந்திப்பதை விடுத்து, நாட்டைக் கட்டியெழுப்புவதில் இருந்து பன்னாட்டு அரசதந்திரம் (global diplomacy), குடியுரிமை, சனநாயகம் போன்ற அனைத்து விடயங்களிலும், துணிந்து, புதிய எண்ணக்கருக்களைப் வடிவமைத்து அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுப்பதே தமிழ் ஈழத்துக்கான போராட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது இருக்கின்ற சவால் எனக் கொள்ளலாம்.

கொள்கை ஆறு: அரசாங்கம் போலவே செயற்படுதல், நாடாகுதல்

பல்வேறு தமிழ் அமைப்புகள், குழுக்கள், தனிநபர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, வேறு விடயங்களில் அவர்கள் எப்படிப்பட்ட மாற்றுக்கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், ஒரு பொதுத் தளத்தில், ஒரு பொதுவான இலக்குக்காக அனைவரும் பணியாற்றக்கூடிய ஒரு தந்திரோபாயத்தை வகுப்பது, தற்போதைய சூழலைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். ஒரே விதமாக எல்லோரையும் சிந்திக்க வைப்பது சனநாயகம் அல்ல. அதற்கு மாறாக, வேறுபாடுகளின் நடுவிலும் ஒரு பொதுவான இலக்கை அடைய அனைவரும் ஒருங்கிணைத்து உழைப்பது தான் சனநாயகம் ஆகும். சனநாயக வழிமுறைகளின் ஊடாக இவ்வாறான ஒரு ஒற்றுமையை எம்மால் காட்சிப்படுத்த முடிந்தால், அப்போது தமிழ் ஈழத்தின் காத்திரமான தன்மையை உலகமும் புரிந்து கொள்ளும் நிலை உருவாகும்.

எமது தாயகத்தின் முழுமையான இறைமை இன்னும் அடையப்படாத போதிலும், தமிழ் ஈழத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டையும் ஒரு நாடு ஏற்கனவே உருவாகிவிட்டது போன்ற நடத்தையையும் எமது பொதுவான இலக்குகள் உள்ளடக்கியிருக்க வேண்டும்.

புவியியல் ரீதியாக உலகத்தின் எப்பகுதியில் புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்த போதிலும் தமிழ் ஈழத்தை இயங்க வைப்பதும், அதன் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதும் தற்போது அவசியமான விடயங்களாகும். எமது ஆளுகைக்கான கட்டமைப்புகள் (structures of governance), எமது வணிகத் தொழிற்பாடுகள், எமது வங்கிகள், எமது பிள்ளைகளுக்கான பாடசாலைகள், எமது பெருநூலகங்கள், எமது பல்கலைக்கழகங்கள், விஞ்ஞானத்தில் உயர் வளர்ச்சியைப் பறைசாற்றும் எமது நடுவங்கள், சுகாதார நிறுவனங்கள், எமது விளையாட்டு மைதானங்கள், எமது பண்பாட்டு அரங்கங்கள் போன்றவற்றை இப்போதே கட்டியெழுப்பத் தொடங்குவோம். தமிழ் ஈழத்தை அமைப்பதற்கான அனுமதிக்காகக் காத்திருக்காமல், இப்போதே நாம் எங்கெங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமோ, அங்கங்கெல்லாம் எமது தமிழ் ஈழத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டைத் தொடங்குவோம்.

கொள்கை ஏழு: எம்மை எதிர்ப்பவர்களது தரத்தை விட எமது தரத்தைப் பன்மடங்கு உயர்வாகப் பேணுதல்

எந்த ஒரு போராட்டத்திலும் ஒருவர் தன்னை எதிர்ப்பவர்களிடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்னவோ உண்மை தான். ஆனால் அதே நேரத்தில் எதிராளிகள் செய்வதையே எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே பின்பற்றுவதும் ஏற்புடைய விடயமாக இருக்க முடியாது. அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் அணியில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் தமது போராட்டத்தில் வெற்றியைச் சந்திக்கும் போது, தமது எதிராளிகளைப் போன்று மோசமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்பது எல்லாவிதமான முன்னணி விடுதலைப் போராட்டங்கள் அனைத்தினதும் தார்மீக அடிப்படையாகும்.

பூகோள ரீதியிலான ஆதரவைப் பெறுவதற்காகவும் அதே நேரத்தில் நாடிய விடுதலைப் போராட்டத்தின் (national liberation struggle) அறநெறிமுறைகள் தொடர்பான தெளிவை தமது அணியிலுள்ளவர்களிடையே உறுதிப்படுத்துவதற்காகவும், தமது எதிராளிகளை விடவும் தரத்தில் உயர்ந்த சிந்தனை, செயற்பாடு, நடத்தை என்பவற்றைப் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமான விடயமாகும். இனவாத, பாசிசவாதப் பண்புகளைக் கொண்ட ஓர் எதிரிக்கு எதிராகப் போராடுகின்ற அதே நேரம், எந்தவிதத்திலும் எதிரியின் அதே கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் வெற்றியை ஒருபோதும் அடைந்துவிட முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கொள்ளும் அனைத்துச் செயற்பாடுகளிலுமே முழு மனித குலத்தாலும் மதித்துப் போற்றப்படும் உன்னதமான விழுமியங்களைப் பேணுவதன் மூலமே இப்போராட்டத்தின் வெற்றியை நாம் எமதாக்கிக் கொள்ள முடியும்.

(சத்தியா சிவராமன் -டெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு ஊடகவியலாளர் என்பதோடு ஒரு சுகாதார ஆர்வலரும் ஆவார்)

 

https://www.ilakku.org/தமிழீழம்-என்னும்-இலக்கை/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழத் தமிழர்கள் உலக அரசியலில், தமக்கு சாதகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் -இரா. மணிவண்ணன்

 
1-39-696x387.jpg
 63 Views

சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொதுநிர்வாகத் துறை தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் வடிவம்

இலங்கையில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை, ஜனநாயக விழுமியங்களை எவ்வகையில் பாதிக்கும் என்ற வினாவை எழுப்புகின்றது. இலங்கையில் ஜனநாயகம் என்பதே மிகப் பெரிய சவாலான விடயம். சிங்களவர்களுக்கு ஒரு சட்டம். தமிழர்கள், வேறு சமூகத்தினருக்கு வேறு ஒரு சட்டம் என்ற பன்முக சட்டங்களை அங்கு நாங்கள் பார்க்கின்றோம். பொதுவாக நோக்கின், இந்த 20ஆவது சட்டத் திருத்தம் என்பது அரசியலை மீண்டும் 1978ஆம் ஆண்டிற்கே திரும்ப அழைத்துச் செல்கின்றது என்று தான் பார்க்கின்றேன். காரணம் என்னவெனில், முப்பது ஆண்டுகளுக்கு முன்னதான ஜே.ஆர். காலத்திற்கே ராஜபக்ஸ குடும்பத்தினரும் அதாவது பிரதமரான மகிந்த ராஜபக்ஸவும், அவரின் சகோதரரான ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவும் திரும்பவும் செல்கின்ற நிலையை அழுத்தம் திருத்தமாகப் பார்க்க முடிகின்றது.

இந்த திருத்தச் சட்டத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், ஜனாதிபதியின் அதிகாரம் உட்பட முழு அதிகாரத்தையும் ஒரு தலைமையின்(பிரதமரின்) கீழ் கொண்டு வருவது என்பது தான். ஜே.ஆரிற்கு இரண்டு வகையில் எதிர்நிலைகள் இருந்தன. ஒன்று தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு இருந்தது. மற்றையது சிங்களவர்கள் தரப்பில் ஜே. ஆரிற்கு மிகப் பெரிய எதிரலை ஒன்று இருந்தது உண்மை. சோசலிச தத்துவாத்தம் மற்றும் உழைப்பாளர் சங்கங்கள் போன்ற அனைத்துமே அவருக்கு எதிரான நிலையில் இருந்தன. ஒரு முதலாளித்துவ அடிப்படையிலான அதிகாரத் தன்மையை அக்காலகட்டத்தில் பார்க்க முடிந்தது. சிங்களப் பேரினவாதம் என்பது ஜே.ஆரிற்கும், ராஜபக்ஸ குடும்பத்தினருக்கும் பொருந்தும். இந்த 20ஆவது திருத்தச் சட்டமானது நீதித்துறை, காவல்துறை ஜனநாயக அரசியல் கட்டமைப்பு என்பவற்றை அதிகாரமற்ற ஒரு நிலைப்பாட்டிற்கே கொண்டு போகும்.

18ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள ஒரு சில நிலைப்பாடுகள் 20ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரத்தைத் திரும்பப் பெறுவது, அத்துடன் பாராளுமன்ற அதிகாரம், நீதித்துறை அதிகாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கும் தேசிய அதிகாரத்தை பிரதமருக்கு கொடுக்கப்பட்டிருப்பதை நாங்கள் பார்க்கிறோம். இது ஜனநாயகத்திற்கு பாதிப்பு என்பதுடன், ஒரு குடும்ப அரசியல் அதாவது ஒட்டுமொத்த அதிகாரத்தையும் ஒரு தனிநபர், ஒரு கட்சி, ஒரு குடும்பத்திடம் உள்ளதை நாங்கள் பார்க்கிறோம். கட்சி என்பதுகூட ஒரு குடும்பத்தைச் சார்ந்ததாகவே இருக்கின்றது. பௌத்த குருமார்கள்கூட இதை எதிர்ப்பதாக சாட்சியங்கள் உருவாகியிருக்கும் நிலையிலும், இவற்றை எல்லாம் கடந்து இதை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தை  நாங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.  ராஜபக்ஸ குடும்பத்தினர் அரசியலில் நிலைபெறுவதற்கான ஒரு வழியாக இருக்கலாம்.  அத்துடன் அவர்களுக்குத் தேவையான நேரங்களில், அவர்களுக்குத் தேவையான சட்டத் திருத்தங்களை புதிதாக கொண்டுவரக் கூடிய வாய்ப்புகளும் இந்த 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் அதிகாரம் ஒரு உச்ச நிலையில் இருப்பதை நாங்கள் பார்க்க முடிகிறது.

வெளிநாட்டு இராஜதந்திர உறவுகளைப் பார்த்தால், அவை இவர்களுடன் புதியதொரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.  இந்த நிலை இந்தியாவிற்கு சாதகம் என்பதை விட பாதகம்கூட உள்ளது. ஏனெனில், முழு அதிகாரமும் ராஜபக்ஸ குடும்பத்தினரிடம் இருக்கும் போது, அவர்கள் எந்தவொரு முடிவையும் உரியவர்களிடம் கலந்தாலோசிக்காது; அதாவது பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சியினரிடம், வடக்கு கிழக்கு தமிழர்களுடன் ஆலோசிக்காது, குடும்ப ஆதிக்கத்தைப் பயன்படுத்தி எடுப்பார்கள். தமிழர்களின் அபிப்பிராயங்களை அவர்கள் கேட்க வேண்டும் என்ற நிலையில் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை. ஜனநாயக அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களுக்காக நாங்கள் இந்தக் கருத்தை முன்வைக்க வேண்டும்.

அப்படியான தன்னிச்சையான ஒரு முடிவை ஜனாதிபதியின் அதிகாரத்துடன் எடுக்கும் போது,  இந்தியா இவை அனைத்தையும் கவனத்தில் எடுக்கும் என நாம் நினைக்கின்றோம். அத்துடன் புவிசார் அரசியலில் இராஜதந்திர முடிவுகளை எடுக்கும் போது, அது கொழும்புத் துறைமுகமாக இருக்கட்டும், அல்லது திருகோணமலைத் துறைமுக விவகாரமாக இருக்கட்டும், புவிசார் அரசியலாக இருக்கட்டும், மேற்கத்தைய நாடுகளுடனான உறவுகளாக இருக்கட்டும் இவை அனைத்தையும் இந்தியா உன்னிப்பாகவும், கவனமாகவும் நோக்கும் என்று நாங்கள் பார்க்கின்றோம்.

 ஆனால் அமெரிக்கா, மேற்குலக நாடுகள் போன்றவை இலங்கையின் போக்கிற்கு துணை நிற்குமா? அல்லது எதிர்வினை ஆற்றுமா? என்று சிந்திக்கும் பொழுது, இதில் மனித உரிமை சார்ந்த விடயங்கள்கூட நிறைய அடங்கியிருக்கின்றன. இவை என்னவெனில், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு, அரசியலில் உள்ள நீதித்துறை, அரசு அதிகாரம் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கும் பொழுது,  அதாவது இலங்கை ஒற்றைப் பண்பைக் கையாளும் பொழுது -ஒரே குடும்பம், ஒற்றைத் தலைமை, ஒற்றை அரசியல் தலைமை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொழுது – ஒரு சர்வாதிகாரம் தான் இலங்கையில் ஓங்கும் என்பதை சர்வதேசம் உணரும். அதை இந்தியாவும் உணரும் என நான் நம்புகின்றேன்.

இந்த நிலையிலிருந்து அடிப்படையான மனித உரிமைகளை எடுத்துரைப்பதற்கும், சிறுபான்மையினரின் உரிமைகளைக் கையாள்வதற்கும் உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் இதைக் கவனத்தில் கொள்வதற்கான  முக்கிய காரணமும் இருக்கின்றது. தற்போது இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் அமைப்பில் இருக்கின்ற, அவர்களுக்கு எதிரான தீர்மானங்களில், தீர்ப்பாயங்கள், விசாரணைகளில் தேக்க நிலை இருக்கும் போது அமெரிக்க, மற்றும் மேற்குலக நாடுகள் இந்த தேக்க நிலையிலிருந்து அடுத்த கட்டத்திற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்றும் நாம் நம்புகின்றோம்.

சிங்களப் பேரினவாதம், குடும்ப அரசியல் இவை அனைத்தும் தமிழ் மக்களின் தேசிய உரிமையை முற்றாக நசுக்கி விடும் என்பதுடன், இதற்கான எதிரலை தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் என்றும் நாம் அவதானிக்க வேண்டும். சிங்களப் பேரினவாதம், தனிநபர் அரசு அதிகாரம், ஒற்றை அரசியல் பண்பு இவை அனைத்தும் தமிழ் மக்களை ஒரு புதிய அரசியல் களத்தினை உருவாக்கவும், மற்றும் எழுச்சிகரமான அரசியல் தளத்தை உருவாக்குவதற்கும் வாய்ப்பாக உள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். எல்லாவிதமான  சோதனைகளான காலங்களும் நமது சமூகத்தை ஒருங்கிணைக்கின்றன.

இந்த 20ஆவது திருத்தச் சட்டம், இலங்கை அரசியலில் சிங்கள பேரினவாதத்திற்கு சாதகமாக இருந்தாலும், சிங்கள மக்களிடையேயும் இதற்கு எதிர்ப்பு இருக்கின்றதை நாங்கள் பார்க்கின்றோம். இந்தச் சட்டத் திருத்தம் இருந்தாலும், இல்லா விட்டாலும் தமிழர்களின் நிலைகளை பார்த்தால். தமிழ் மக்களுக்கு உள்ள உரிமை, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகள், அரசியல் சூழ்நிலைகளில் இன்றைய நிலையில் 20ஆவது சட்டத் திருத்தத்தின் பின் தமிழர்களுக்கு எவ்வாறான ஒரு நிலைப்பாடு இருக்கின்றது என்பதை நோக்குவதுடன், அரசியலில் ஒரு புதிய களத்தினையும் தளத்தினையும், வாய்ப்புக்களையும் உருவாக்க சிந்திக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்தாகும்.

20ஆவது சட்டத் திருத்தம் இலங்கை அரசியலில் ஒரு புதிய மாற்றமாக இருக்கும் என நான் பார்க்கவில்லை. ஜே.ஆர். காலத்தில் 1978இல் கொண்டுவரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் அடங்கிய அரசியலை மகிந்த குடும்பத்தினர் மீண்டும் கொண்டு வந்திருக்கின்றனர், ஆனால் இப்போது மிகவும் ஆழமான சிங்களப் பேரினவாதம் ஒரு உச்ச நிலையில் உள்ளது.  தனி ஒரு மனிதனுக்குரிய – ஜனாதிபதிக்கு உரிய – அதிகாரம், அனைத்து அரசியல் அமைப்புகளின் அதிகாரங்களையும் ஒருங்கிணைத்து ஒரு சர்வாதிகாரப் போக்கான அரசியலில் இலங்கை சென்று கொண்டிருப்பதைப்  பார்க்கிறோம். தமிழர்கள் உலக அரசியலிலும், உலக அரசியல் மேடைகளிலும் தமக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்கான கருவிகளைத் தேட வேண்டும். அதைப் பற்றிப் பேச வேண்டும் என்ற கருத்தினைத் தான் முன்வைக்க விரும்புகின்றேன்...

 

https://www.ilakku.org/ஈழத்-தமிழர்கள்-உலக-அரசிய/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2000 களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்கான எழுச்சி வந்து ஒரு தவிர்க்கப்பட முடியாததாக வந்து விட்டது. பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு இனங்களும்  சமம், இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் வைத்துத் தான் இந்தப் பிரச்சினையை தீர்க்க வேண்டிய நிலைமை ஒன்று அன்று இருந்தது. நாங்கள் அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் தீவிரமாக வேலை செய்திருந்தோம்.  

அந்த நேரம் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த சொல்ஹெய்ம் எங்களைச் சந்தித்திருந்தார்.  அப்போது நாங்கள் அவருக்கு சொன்னது என்னவென்றால், இலங்கைத்தீவில் தமிழ் சிங்களம் என்ற இரண்டு தேசிய இனங்களும் சமத்துவமானவை. எண்ணிக்கையில் பெரிது சின்னனாக இருக்கலாம். ஆனால், சமத்துவமானவை.  இரண்டு தேசிய இனங்களும் சமமானவை என்ற அடிப்படையில் வைத்து அந்த இரண்டு இனங்களின் தலைமைகளும் சமமானவை என்ற அடிப்படையில் வைத்து இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். என நான் கூறினேன். 

அப்போது சொல்ஹெய்ம் எனக்கு கூறியது என்னவென்றால் நீங்கள் இதனை பெரிய நாடுகளுக்கு சொல்ல வேண்டும். பெரிய நாடுகள் இதனை ஒரு சிறுபான்மை பிரச்சினை என்று தான் பார்க்கின்றன. தமிழர்கள் ஒரு சிறுபான்மை இனம். அந்த இனத்துக்கு கலாச்சார உரிமைகள் இருக்கின்றன. அதனை கொடுத்தால் போதும், என்று தான் பார்க்கின்றார்கள். தமிழ்மக்களும் ஒரு தேசிய இனம் இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன என்று அவர்கள் பார்ப்பதில்லை. நீங்கள் அந்த லொபி வேலையை பெரிய நாடுகளுடன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.  

ஆனால்,அதற்கு பிறகு எல்லா நிலைமைகளும் மாறி விட்டன. தனிய சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல. உலக ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து இந்த இனவழிப்பை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கிறார்கள். 

இயக்கத்துக்கு கட்சிகள் மேலே நம்பிக்கை இருக்கவில்லை. இதனால் மக்கள் மத்தியில் இருக்கும் சிவில் அமைப்புக்களையும் இணைந்து தான் கூட்டமைப்பை பூரணப்படுத்துகிறார்கள். ஆனால், பின்பு நடந்ததோ வேறு.... இன்று மக்களை பிரித்து, கூறுபோட்டு, அரசியலில் வெறுப்படைய வைக்கும் செயற்பாடுகளே நடைபெறுகின்றன. இனி மக்களை ஒற்றுமையாக்கும் வேலையை அடியிலிருந்து தொடங்க வேண்டும்.  

முழுமையாக கேட்க காணொளியை பாருங்கள்....

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்மக்கள் தமிழ்த் தேசியத்தில் இருந்து விலகிச் செல்கிறீர்களா? 

2020 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகத்தில் சிங்களக் கட்சிகளில் போட்டியிட்டவர்கள் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்களே. அது பற்றி கேட்டபோது அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் பின்வருமாறு பதிலளித்தார். 

இதற்கான முழுப் பொறுப்பையும் கடந்த பத்தாண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளாக காணப்பட்ட  கூட்டமைப்பினர் தான் ஏற்க வேண்டும். இவர்கள் தான் இந்த அரசியல் சீரழிந்த நிலைக்கு வரக் காரணம். 

இன்னொரு வளமாக சொன்னால் கூட்டமைப்பிடம் அந்த திறன் இல்லை. நாங்கள் திரும்பத் திரும்ப மீன் குஞ்சை பறக்கச் சொல்லிக் கேட்கிறோம். அவர்களால் இவ்வளவு தான் ஏலும். அவர்கள் தொழில்சார் அரசியல்வாதிகளாகத் தான்  இருக்கிறார்கள்.   

குறைந்தபட்சம் ஒரு ஆயுத மோதலுக்குப் பின்னரான சமூகத்தை கையாளத் தேவையான புரட்சிகரமான உள்ளடக்கத்தைக் கொண்டவர்களாக அவர்கள் இல்லை. இது ஒரு வகையில் ஆயுதப் போராட்டத்தின் விளைவும் தான். 

முழுமையான நேர்காணலை காணொளியில் பாருங்கள்...

(இந்நேர்காணல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது)

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பண்பாட்டு எழுச்சி ஊடாக தமிழ்மக்களை உயிர்ப்பிக்க முடியும் 

இணக்க அரசியல்.  இணக்கம் என்றால் என்ன? தமிழினத்துக்கும் சிங்கள இனத்துக்கும் உடன்பாடு உள்ளது. இரு இனங்களும் தங்களின் விருப்பங்களை வைத்து அபிலாசைகளை வைத்து அதில் இணக்கம் ஏற்படுத்துவது தான் இணக்க அரசியலே தவிர இவ்வாறு முழந்தாளிடுவது இணக்க அரசியல் அல்ல. இன்று தமிழ் மக்கள் மத்தியில் என்ன உணர்வு தூண்டப்பட்டுள்ளது? இனி எங்களால ஏலாது. இவ்வாறு தெரிவித்த யாழ். பல்கலைக்கழகத்தின் நாடகமும் அரங்கியலும் துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி. க.சிதம்பரநாதன் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், 
 
2009 க்குப் பின்னர் தமிழ்ச் சமூகம் கூட்டு மன வடுவுக்கு உட்பட்டிருந்தது.  இந்த நிலையில் அம்மக்களை அணுகி அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும்.  அரங்கினூடாக அம்மக்கள் தங்கள் கதைகளை கூற இடமளிக்க வேண்டும். அதனூடாக மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும்.  அப்போது தான் தமிழ்ச்சமூகத்தின் வாழ்க்கையை கட்டியமைக்க முடியும் என்கிற நம்பிக்கை வரும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிர்ப்பு அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் இரட்டை வேடமும் 

 இம்முறை இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நழுவியிருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தது. 

ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு  வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ரெலோவும் எதிர்த்து வாக்களித்து இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்களிக்காமல் நழுவிச் சென்றிருந்தனர்.   இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நழுவிச் சென்றமை பெரிய ஆச்சரியத்தினை தரவில்லை. அவர்கள் மரபு ரீதியாக இதனைத் தான் செய்து  வருகின்றார்கள்.     

முழுமையான நேர்காணலை காணொளியில் காணலாம்.
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிரப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகள்!- தவறு எங்கே நடக்கிறது? 

இலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. இலங்கையின் நவீன அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்னரே உள்ளூராட்சி அமைப்புகள் மிகவும் பலமாக இருந்தன. வலுவான அதிகாரங்களையும் கொண்டிருந்தன. 

இப்போது மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என மூன்று வகையான உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளன.  இம்மூன்று சபைகளுக்கும் எழுத்து மூலமான வலுவான அதிகாரங்கள் உள்ளன. குறித்த எல்லைகளுக்குள்  தங்கள் அதிகாரங்களை பிரயோகிக்கக் கூடியதான சட்ட ரீதியான ஏற்பாடுகள் உள்ளன. இதில் மத்திய அரசுக்கும், உள்ளூராட்சி அரசுக்கும் இடையிலான உறவுகள் கூட சட்ட ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளன. 

இன்று மத்திய அரசாங்கமானது இனவாத அரசாங்கமாக இருக்கின்றபடியால் தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் அதிகாரங்களை கணக்கெடுக்காமல் அதனை புறக்கணித்து தங்களுடைய அதிகாரங்களை செலுத்த்துகின்ற செயற்பாடு தான் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் வலி கிழக்குப் பிரதேச சபையில் நடந்த இழுபறியும் மத்திய அரசுக்கும் - உள்ளூராட்சி அரசுக்கும் இடையிலான அதிகாரம் சம்பந்தப்பட்ட விடயமே ஆகும்.      

இவ்விடயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களான யோதிலிங்கம், நிலாந்தன் ஆகியோர் தெரிவித்த முழுமையான கருத்துகளையும் காணொளியில் காணலாம்.

 

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராஜதந்திரக் கூட்டு விவகாரத்தில் தமிழ்த் தலைமைகள் எங்கே தவறிழைக்கிறார்கள்? என்பது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,

 

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Posts

    • இதில் என்ன சந்தேகம்,.. கயாலாகாதவர்கலால்  தமிழரசுக் கட்சி நிறைந்திருக்கும்வரை  சும்மும் இருப்பார்.  🤣  
    • படிகள் | அரவிந்தன் ஓவியம்: Gautam Mukherjee   “நல்லவேளை, எலும்பு எதுவும் முறியல. இன்னும் கொஞ்சம் பெசகியிருந்தா கணுக்கால் எலும்பு முறிஞ்சிருக்கும்” என்றார் டாக்டர். நீலகண்டன் அவர் கட்டுப் போடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான். “குறைஞ்சது மூணு நாளாவது இந்தக் காலுக்கு ரெஸ்ட் குடுங்க. கூடியவரைக்கும் நடக்காதீங்க. நடந்தாலும் இந்தக் கால்ல உடம்பைத் தாங்காதீங்க. உக்காரும்போதும் படுக்கும்போதும் காலை மேல தூக்கி வெச்சிக்கங்க. எவ்வளவுக்கு எவ்வளவு ரெஸ்ட் குடுக்கறீங்களோ அவ்வளவு சீக்கிரம் சரியாகும்.” கட்டு, கால்களை இறுக்கமாகப் பற்றியிருந்தது. நீலகண்டன், டாக்டரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உடன் வந்திருந்த சந்திரமோகனின் தோளைப் பற்றியபடி மெதுவாக நடந்து வெளியில் வந்தான். இருவரும் ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். நல்லவேளை என்று டாக்டர் சொன்னது நீலகண்டனின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. நல்லவேளைதான். இடுப்பில் அடிபடவில்லை. காலையில் அந்தப் பல்லங்காடிக்குச் சென்றபோது மனம் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது. வழக்கத்தைக் காட்டிலும் வண்டியை வேகமாக ஓட்டினான். வண்டியை நிறுத்திவிட்டு நடந்து வருகையில் வழக்கத்தைக் காட்டிலும் நடை வேகம் கூடியிருந்தது. சொல்லப்போனால் சிறு துள்ளல் இருந்தது. பக்கத்தில் வந்த சந்திரமோகன் வியப்பாகப் பார்த்தாலும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். அங்காடியின் நுழைவாயிலுக்கு முன்பு மூன்று படிகள் இருந்தன. நீலகண்டன் தரையிலிருந்து தன்னையறியாமல் துள்ளி மூன்றாம் படிக்குத் தாவினான். மூன்றாம் படியில் காலை வைக்கும்போது கால் பிரண்டு தடுமாறி விழுந்தான். சந்திரமோகன் பதறிப்போய்த் தாங்கிப் பிடித்தான். நீலகண்டன் சுதாரித்தபடி எழுந்து நின்றான். லேசாக வலித்தது. அங்காடியின் நுழைவாயிலில் இருந்த காவலர் தன்னுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னார். சந்திரமோகன் உள்ளே சென்று தண்ணீர் வாங்கிவந்து குடிக்கச் சொன்னாள். நேரமாக ஆகக் கால் வலி கூடியபடி இருந்தது. ஏதேனும் பெரிதாக அடிபட்டிருக்குமோ என்று பயந்த நீலகண்டன் கால் எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க எழுந்து நின்றான். மறுகணம் உடல் முழுவதும் உதறலெடுக்க, சடாரென்று உட்கார்ந்துகொண்டான். காலைக் கீழே வைக்கையில் பொறுக்க முடியாத வலி உடல் முழுவதையும் உலுக்கியது. சந்திரமோகன் பயந்துபோனான். “என்ன ஆச்சு நீலா…” என்று அவன் தோள்களைப் பற்றினான். நீலகண்டன் சற்று ஆசுவாசமடைந்ததும் சந்திரமோகன் கீழே மண்டியிட்டு அமர்ந்து நீலகண்டனின் காலைப் பார்த்தான். “செருப்ப கழட்டு” என்றான். நீலகண்டன் கழற்றினான். சந்திரமோகன் அவன் காலைத் தொட்டதும் நீலகண்டன் விறுக்கென்று காலை இழுத்துக்கொண்டான். சந்திமோகன் கவலையுடன் நீலகண்டனின் முகத்தைப் பார்த்தான். “ஃப்ராக்சரா இருக்குமோன்று தோணுது நீலா…” என்றான் தணிந்த குரலில். நீலகண்டனின் முகத்தில் வலியின் வேதனை படர்ந்திருந்தது. இடுப்பில் ஏதாவது ஆகியிருக்கிறதா என்று லேசாக இடுப்பை அசைத்துப் பார்த்தான். நல்லவேளை. ஒன்றுமில்லை. “எதுக்கு சார் ஜம்ப் பண்ணி வந்தீங்க?” என்று காவலர் கவலையோடு கேட்டார். நீலகண்டன் தலையைக் குனிந்துகொண்டான். சந்திரமோகன் கேட்க விரும்பிய கேள்விதான் அது என்றாலும் இந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாது என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆட்டோ பிடித்து இருவரும் மருத்துவமனை சென்றார்கள். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த டாக்டர் எலும்பு முறிவு இல்லை என்று சொன்னார். உள்ளே பலமாக அடிபட்டிருக்கிறது என்றார். அவனை வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு போன சந்திரமோகன், நீலகண்டன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லிவிட்டு, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினான். வண்டியை மாலையில் கொண்டுவருவதாகச் சொன்னான். “உங்களுக்கு எதுக்கு இந்த வேலை? படியில ஒழுங்கா ஏற மாட்டீங்களா? அவ்வளவு என்ன அவசரம்?” என்று கேட்டாள் மஞ்சு. நீலகண்டன் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து மஞ்சுவே தொடர்ந்தாள். “ரொம்ப பாத்து பாத்துதானே படில ஏறுவீங்க? இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். நீலகண்டன் பதில் சொல்லவில்லை. அவனுடைய அமைதியைக் கண்டு மஞ்சுவும் அமைதியானாள். அவள் முகத்தில் தெரிந்த வேதனை நீலகண்டனை வருத்தியது. “டீ போட்டு தரயா?” என்றான் நீலகண்டன். மஞ்சு எழுந்து உள்ளே போனாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்காடியின் படிகளில் துள்ளி ஏறிய கணம் திரும்பத் திரும்ப அவன் மனதில் தோன்றியபடி இருந்தது. தெருவின் முனையில் இருந்த பிள்ளையார் கோவிலை ஒட்டித் திரும்பியதும் அவன் கண்கள் ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு அப்பால் நீளும் தண்டவாளத்தைப் பார்த்தன. ரயில் வருவது தெரிந்தது. ஓட்டமெடுக்கத் தொடங்கினான். இங்கிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ரயில் நிலைய வாசல். பிறகு 22 படிகள். பிறகு 50 அடி நடைபாதை. அதன் பிறகு 22 படிகள். நடந்துபோனால் ரயில் வந்துவிட்டுப் போய்விடும். வேகமாக ஓடி ரயில் நிலையத்தை அடைந்து, மக்கள் கூட்டத்திடையே புகுந்து ஓடி, மூன்று மூன்று படிகளாகத் தாவி ஏறி, படிகளுக்கிடையில் இருந்த பாதையை வேகமாகக் கடந்து மூன்று மூன்று படிகளாகத் தாவி இறங்குவதற்கும் ரயில் நிலையத்திற்குள் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. ரயிலில் ஏறி ஓரமாக நின்றுகொண்டான். இது அடிக்கடி நடப்பதுதான். 8.36க்கு மாம்பலம் வர வேண்டிய ரயில் இரண்டு மூன்று நிமிடங்கள் தாமதமாக வருவது வழக்கம். நீலகண்டன் 8.35க்குள் ரயில் நிலையத்துக்குள் வந்தால் போதும். ஆனால், அப்படி வருவது அபூர்வம். தாமதமாக வந்து இப்படி ஓடியும் தாவியும் ரயிலைப் பிடிப்பதே வழக்கமாகிவிட்டது. சில சமயம் கணக்குச் சற்றுப் பிசகி ரயில் கிளம்பியிருக்கும். அப்படியும் விடாமல் ஓடி அது ரயில் நிலையத்தைக் கடக்கு முன் தாவி ஏறிவிடுவான். பள்ளியில் படிக்கும்போது நீலகண்டன் எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொள்வான். கபடி, கோகோ, வாலிபால், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் என்று எல்லாவற்றிலும் தீவிரமாக ஈடுபடுவான். விளையாட்டின் வேகம் விளையாடாதபோதும் உடல் முழுவதும் பரவியிருக்கும். எதையும் மெதுவாகச் செய்யும் வழக்கம் இல்லை. எனவே நடந்து வந்து ஆசுவாசமாக ரயிலில் ஏறவில்லை என்ற குறையே அவனுக்குத் தெரியவில்லை. ஓடி வந்து ஏறுவதையே இயல்பானதாக அவன் மனம் கருதியது. ஓடி வந்து ரயிலில் ஏறுவது, படிகளில் தாவித் தாவி ஏறுவது, இறங்குவது, சைக்கிளை வேகமாக ஓட்டுவது, மழைக்காலங்களில் சாலைகளில் இருக்கும் சிறிய நீர்த்தேக்கங்களைத் தாண்டிக் கடப்பது என வேகமான இயக்கம் உடலில் இயல்பாகிவிட்டது. தேநீர் இதமாக இருந்தது. மஞ்சு மீண்டும் எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டாள். நீலகண்டன் தன் கால் கட்டை வெறித்துப் பார்ததுக் கொண்டிருந்தான். மாத்திரைகள் இன்னும் வேலைசெய்ய ஆரம்பிக்கவில்லை. வலி குறையவில்லை. அவன் கவனம் வலியில் இல்லை. அங்காடியின் முன் படிகளில் தாவி ஏறிய கணம் மனதில் மின்னலடித்துக் கொண்டிருந்தது. மாலதி புன்னகைத்தாள். “என்ன இது, சின்னப் பையன் மாதிரி” என்றாள். “எது!” என்றான் அவள் வீட்டு வாசலில் செருப்பைக் கழற்றியவாறே. அவன் உள்ளே வர ஒதுங்கி வழிவிட்ட மாலதி, “வாசப்படில ஏறி வர்ரதுக்குப் பதிலா தாண்டி வந்தீங்களே அதைச் சொன்னேன்” என்றாள். நீலகண்டன் சிரித்தான். “தாவியா வந்தேன்? எனக்குத் தெரியல. இதையெல்லாம் யோசிச்சா செய்வாங்க?” என்றான். மாலதியும் சிரித்தாள். “பரவால்ல. நீங்க நேச்சுரல் அத்லீட்தான்” என்றாள். நீலகண்டன் அந்தப் பாராட்டைப் புன்னைகையுடன் ஏற்றுக்கொண்டான். “டீயா, காஃபியா?” “ம்… டீ. கொஞ்ச நேரம் கழிச்சு. இப்பதான் காஃபி சாப்ட்டேன்.” “ஓ.கே…. சொல்லுங்க நீலகண்டன்… ஈவன்ட எப்டி ப்ளான் பண்ணியிருக்கீங்க?” நீலகண்டன் விளக்க ஆரம்பித்தான். மாலதி உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய திருத்தமான புருவங்கள், அகன்ற விழிகள், நேர்த்தியான மூக்கு, எப்போதும் புன்னகையைப் பிரதிபலிக்கும் அழகிய உதடுகள், சற்றே துருத்தி நிற்கும் உருண்டையான மோவாய், புஷ்டியான கன்னங்கள், தலையாட்டும்போது அழகாக ஆடும் காதணிகள், அவ்வப்போது முகத்தில் வந்து விழுந்து அழகைக் கூட்டும் மயிர்க் கற்றைகள், அதை விலக்கிவிடும் அவள் விரல்களின் நேர்த்தியான அசைவுகள் என அவளுடைய அழகை ரசித்தபடி நீலகண்டன் பேசிக்கொண்டிருந்தான். “ஜஸ்ட் எ மினிட்” என்று மாலதி எழுந்துகொண்டாள். அவள் வயதுக்குப் பெரிய உடம்புதான். எழுந்திருப்பதில் சிரமம் தெரிந்தது. மெல்ல நடந்து சென்று குளிர்பதனப் பெட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டு இருக்கையின் மீது இரு கைகளையும் ஊன்றியபடி மிகவும் கவனமாக அமர்ந்துகொண்டாள். நடமாட்டத்தில் அவள் பட்ட சிரமங்களைக் கண்டு நீலகண்டன் வருந்தினான். பாட்டிலைக் கீழே வைத்துவிட்டுக் கேட்டான். “எனக்குத் தண்ணி வேணும்னு ஒங்களுக்கு எப்படித் தெரிஞ்சிது?” மாலதி புன்னகைத்தாள். வசீகரமான அந்தப் புன்னகை நீலகண்டனை மயக்கியது. “நீங்க பேசும்போது உங்க நாக்கு ட்ரையா இருந்தது தெரிஞ்சுது” என்றாள். நன்றியைப் புன்னகையால் தெரிவித்த நீலகண்டன் பாட்டிலைக் கையில் எடுத்தபடி எழுந்துகொண்டான். “இஃப் யூ டோன்ட் மைன்ட், நானே உள்ள போய் நார்மல் வாட்டர் எடுத்துக்கலாமா? கோல்ட் வாட்டர் குடிக்கறதில்ல” என்றான். “ஓ ஸாரி…” என்றபடி எழுந்திருக்க முயன்றாள். அவள் நினைத்தாலும் சட்டென்று எழுந்திருக்க முடியாது என்பதை அறிந்த நீலகண்டன், “ப்ளீஸ்… நீங்க இருங்க. நா எடுத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய் பாட்டிலை மீண்டும் குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு வெளியிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தான். போகும்போதும் வரும்போதும் தன்னுடைய வழக்கமான வேகத்தைக் கவனமாகக் குறைத்துக்கொண்டான். மீண்டும் பேசத் தொடங்கினான். “வீக் என்ட்ல டி.நகர், நுங்கம்பாக்கம் ஏரியல கூட்டம் அதிகமா இருக்கும்ன்றதால மாம்பலத்துல வெச்சிருக்கோம். நல்லவேளயா பார்க்கிங் ஸ்பேஸோட பெரிய இடம் கிடைச்சிருக்கு…” என்று சொன்னவன் மாலதி தன் உரையாடலைப் பின்தொடரவில்லை என்பதை அறிந்து பேச்சை நிறுத்தினான். அவள் கண்கள் எதிரில் இருந்த சுவரை வெறித்தபடி இருந்தன. அவள் தற்கணத்தில் இல்லை என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. அவளது பருத்த மார்புகள் விம்மித் தாழ்ந்தன. மடியின் மீது வைத்திருந்த கைகளின் பருமன் ஒரு கணம் அவனை அச்சுறுத்தியது. சற்று அகலமான அந்த இருக்கையில் தன்னைப் பொருத்திக்கொள்ள அவள் சிரமப்படுவது தெரிந்தது. அதே அளவுள்ள இருக்கை தனக்கு இடம் கொடுத்துக் கிட்டத்தட்டப் பாதி அளவு காலியாக இருப்பது அவனுக்கு உறைத்தது. இந்தப் பருமன் இயல்பானதல்ல என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தின் அழகும் அதில் ததும்பும் குழந்தைத்தனமும் அவள் உடலுக்குச் சற்றும் பொருந்தாமல் இருந்தன. அதிகபட்சம் இவளுக்கு 30 வயது இருக்கலாம். சூமோ பயில்வானைப் போல உடல் இல்லாவிட்டால் அவளைப் பேரழகிகள் பட்டியலில் எளிதாகச் சேர்த்துவிடலாம். நல்ல உயரம். நீளமான விரல்கள். செதுக்கிய சிலை போன்ற முகம். இவளுக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை என்று நீலகண்டன் வருந்தினான். “நீலன்…” என்றாள். தனிப்பட்ட முறையில் பேசும்போது நீலன் என்றுதான் அழைப்பாள். அவள் பேசவிருப்பது அடுத்த மாத நிகழ்வைப் பற்றியல்ல என்பது நீலகண்டனுக்குப் புரிந்தது. உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். “யூ நோ… ஐம் எ க்லாஸிகல் டான்சர். போத் பரதம் அன்ட் வெஸ்டன்…” என்றாள். முகத்தில் விழும் மயிர்க் கற்றைகளை விலக்கிய விரல்களின் நளினத்திலும் தண்ணீர் பாட்லை நீட்டிய விதத்திலும் அவளுக்குள் இருந்த நடனமணியை உணர்ந்திருந்ததால் நீலகண்டனுக்கு இந்தத் தகவல் வியப்பளிக்கவில்லை. தான் கேட்க நினைத்ததை உணர்ந்து அவளே அதைப் பற்றிப் பேசத் தொடங்கியதுதான் வியப்பாக இருந்தது. “காலேஜ் கல்சுரல்ஸ், அவுட்டிங்னு எதுவா இருந்தாலும் என்னோட டான்ஸ் இல்லாம இருக்காது. அதுவும் பஸ்ல ஆடின ஆட்டமெல்லாம் மறக்க முடியாது. சிம்ரன் டான்ஸெயெல்லாம் கேட்டு கேட்டு ஆடச் சொல்லுவாங்க. ஒரு மணிநேரமெல்லாம் சலிக்காம ஆடுவேன்…” என்றாள். நீலகண்டன் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அதற்குத் தேவையும் இல்லை என்பது அவனுக்குப் புரிந்திருந்தது. மாலதி தனக்குள் ஆழ்ந்திருந்தாள். தன்னியல்பாக அவள் குரல் ஒலித்தது. மார்புகள் விம்மித் தணிந்தபடி இருந்தன. “போன மாசம் நடந்த ஈவன்ட்ல நீங்க எனக்குப் பண்ணின உதவிய மறக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆம்பளைங்க வயசு வித்தியாசம் இல்லாம என்னை சுத்தி சுத்தி வருவாங்க. நான் எப்பவும் மான்போலத் துள்ளிக்கிட்டே இருப்பேன். காலேஜ் பியூட்டி கன்டெஸ்ட்ல மூணு வருஷமும் நான்தான் வின்னர். பசங்க எங்கூட பேசவும் என்னோட நடந்து வரவும் என்ன வண்டில கூட்டிட்டு போகவும் தவம் கெடப்பாங்க. ஆனா இப்ப ஒருத்தனும் கிட்ட வர்ரதில்ல. என் ஒடம்பு அவங்கள மெரட்டி தொரத்தி அடிக்குது. தூரத்துலருந்தே ஒரு ஹாய், ஒரு ஸ்மைல்னு நிறுத்திக்கறாங்க. அழகில்லாத கேல்ஸ ஆம்பளைங்களுக்குப் பிடிக்கறதில்லன்னு நெனைக்கறேன். க்லோஸ் ஃப்ரென்ஸ்கூட கொஞ்சம் தள்ளிப்போக ஆரம்பிச்சபோதுதான் அந்த க்லோஸ்னஸ்ஸுக்கு அர்த்தம் புரிஞ்சிது. எனக்கு அண்ணன் தம்பி யாருமில்ல. அப்பா நான் சின்னவளா இருக்கும்போதே வீட்ட விட்டு ஓடிப்போயிட்டாரு. அவரை நேர்ல பாத்த ஞாபகம்கூட எனக்கு இல்ல. போட்டோல பாத்துருக்கேன். ரொம்ப அழகா, ஸ்லிம்மா, ஸ்மார்ட்டா இருப்பாரு. அம்மா பிரசவத்துக்கப்பறம் கொஞ்சம் குண்டடிச்சிட்டாங்க. சைல்ட் கேர், ஃபேமலி கேர், ஆஃபீஸ் வேலைன்னு மூழ்கிப்போனதுல அவங்க பழைய ஸ்டேஜுக்கு வரவேயில்ல. ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்ட நடக்கும். அப்பா கோபத்துல கத்தி எதையாவது தூக்கி வீசிட்டு போயிடுவாரு. அப்படி ஒருநாள் போனவர் திரும்பி வரவேயில்ல. அப்படியும் எப்பவோ ஒரு பொண்ணோட அவரை அம்மா எங்கயோ பாத்துருக்கா. அந்தப் பொண்ணு பாக்க நக்மா மாதிரி இருந்தான்னு எங்கிட்ட சொல்லும்போது அம்மா குமுறிக் குமுறி அழுதா. நக்மா மாதிரின்னா என்னன்னு புரிஞ்சிக்கற அளவுக்கு அப்ப எனக்கு வயசாயிருந்துது. அதுக்கு மேல எதுவும் பேசல. அம்மா இன்னும் அதிகமா குண்டாயிட்டே போனா. ஆனா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா. டான்ஸ், கராத்தே, மியூஸிக் எல்லாம் கத்துக்க வெச்சா. அவளே கணக்கு, அக்கவுன்ட்ஸ் எல்லாம் சொல்லித் தருவா. ப்ரில்லியன்ட் டீச்சர். ஒரு வருஷத்து சுமையை ஒரே மாசத்துல கொறச்சிட்டா…” மாலதி மூச்சு வாங்கிக்கொண்டாள். கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தாள். “எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்ல? போன மாச ஈவன்ட்ல நான் படி ஏற கஷ்டப்பட்டபோது நீங்கதான் ஓடிவந்து ஹெல்ப் பண்ணினீங்க. உங்க தோள புடிச்கிக்கிட்டு பாதுகாப்பா படி ஏறினேன் இறங்கும்போதும் மறக்காம என்கூட வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹால்ல ஸ்டெப்ஸுக்குக் கைப்பிடி வெக்கணும்ன்ற அறிவுகூட இல்லாம கட்டியிருக்காங்க. நான் ஏதாவது ஹெல்ப் கேக்க மாட்டனான்னு என்ன பாத்து ஏங்கற ஆம்பளைங்களைப் பாத்து பாத்து சலிச்சிருக்கேன். அதே ஆம்பளைங்க இப்ப சம்பிரதாயமா ஹாய் சொல்லிட்டு ஒதுங்கறதயும் பாக்கறேன். ஆனா நீங்க அப்படி இல்ல. நீங்க பண்ணின உதவிய மறக்கவே மாட்டேன்…” நீலகண்டன் நெகிழ்ந்து போயிருந்தான். “அதெல்லாம் ஒரு ஹெல்ப்பா மாலதி? எனக்கு முதுடியலன்னா நீங்க கை குடுக்க மாட்டீங்களா?” “நானா, இப்ப இருக்கற நெலமைலயா?” என்று விரக்தியாகச் சிரித்த மாலதி, “அஃப்கோர்ஸ். நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியுது. அப்டி ஹெல்ப் பண்றதுதான் ஹ்யூமன் டென்டன்ஸி. அப்படித்தான் நானும் நம்பறேன். ஆனா அழகான பொண்ணுக்குக் கிடைக்கற உதவில நூத்துல ஒரு பங்குகூட அழகில்லாத பொண்ணுக்குக் கிடைக்காதுன்றத புரிஞ்சிகிட்டபோது மனசுல கூர்மையா ஒரு வலி வருது. அந்த வலியதான் தாங்க முடியல. அதுவும் எப்பவும் ஜென்ஸ் எங்கிட்ட கையேந்தி நிக்கறத பாத்து வளந்ததுனால இந்த வலி இன்னும் அதிகமாகுது…” மாலதி கண்களைத் திறக்கவில்லை. அவள் முகம் வாடியிருந்தது. நீலகண்டனால் எதுவும் பேச முடியவில்லை. அங்கு நிலவிய மௌனமே அவஸ்தையாக மாறத் தொடங்கியபோது நீலகண்டன் மௌனத்தைக் கலைத்தான். “எப்படி இந்த மாதிரி ஆச்சு மாலதி?” மாலதி கண்களைத் திறந்தாள். “பொண்ணா பொறந்த சாபம் நீலன். மென்ஸ்டுரல் ப்ராப்ளம்லதான் எல்லாம் ஆரம்பிச்சுது. இர்ரெகுலர் பீரியட்ஸ். சில சமயம் மூணு நாலு மாசம்கூட பீரியட்ஸ் வராது. அதுக்கு ட்ரீட்மென்ட் எடுக்கப்போய் அதோட சைட் எஃப்க்ட்ஸ் ஒடம்பையும் மனசையும் பாதிக்க ஆரம்பிச்சுது. நடுவுல யாரோ சொன்னாங்கன்னு டாக்டர மாத்தி, ஆல்ட்ர்னேட் மெடிசனுக்கு மாறி, மறுபடியும் ஆலோபதிக்கு வந்து அப்டீன்னு ஏகப்பட்ட அலக்கழிப்பு. இந்த வயசுல எப்பவும் மாத்தர சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்னு நெனச்சாலே கொலவெறி வரும். பீரியட்ஸ் வரதுக்காக கான்ட்ராசெப்டிவ் மாத்திரை சாப்பிட்டு அதனால ஒபிசிட்டி வந்து, ஒபிசிட்டியால டிப்ரஷன் வந்து, டிப்ரஷனால அதிகம் சாப்ட்டுன்னு விஷஸ் சர்க்கில்ல மாட்டிக்கிட்டேன். ஒருவழியா மாத்திரைகள்லேந்து விடுதலையாறதுக்குள்ள ஒடம்பு ரொம்ப பெருத்துப் போச்சு. அதைக் குறைக்கணும்னா டயட், எக்சர்சைஸ்னு எல்லாத்தையும் கவனிக்கணும். வேலைக்குப் போய்கிட்டே இதையும் கவனிக்க முடியல. ஒரு ஸ்டேஜ்ல போதுண்டா சாமின்னு எல்லாத்தையும் உட்டுட்டேன். ஒடமபு குண்டானதால கழுத்து வலி, இடுப்பு வலி, முட்டி வலின்னு இலவச இணைப்பா நெறய வலி. இத்தனையும் சுமந்துக்கிட்டு எதுக்காக இன்னும் உயிரோட இருக்கேன்னு எனக்கு நெஜமாகவே தெரியல…” மாலதியின் கண்கள் கலங்கியிருந்தன. கண்களைத் துடைக்க அவள் முயலவில்லை. பார்வை விட்டத்தில் நிலைகுத்தியிருந்தது. அவளுக்கு ஆறுதலாகச் சொல்ல அர்த்தமுள்ள ஒரு சொல்கூடத் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்த நீலகண்டன் மௌனமாக அமர்ந்திருந்தான். “என் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாம என் பின்னால ஓடிவந்த ஆம்பளைங்க, என் பக்கத்துல நின்னு பேசவே அவ்ளோ ஆசைப்பட்ட ஆம்பளைங்க இப்ப என்னைப் பாத்து அரை சிரிப்பு சிரிச்சிட்டு ஒதுங்கிப் போறததான் என்னால தாங்கவே முடியல…” “அது உண்மையிலேயே அவ்வளோ முக்கியமா மாலதி?” நீலகண்டன் மெல்லிய குரலில் கேட்டான். “ஆக்சுவலா பாத்தா இல்லதான். ஆனா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நான் இருந்த நிலமயோட கம்பேர் பண்ணும்போது மனசு கேக்க மாட்டேங்குது. இதுலேந்து எப்படி வெளில வரதுன்னு தெரியல. மேபி உங்கள மாதிரி இன்னும் ஒண்ணு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும்போல இருக்கு.” அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைக்காமல் போக மாட்டார்கள் என்று சொல்ல நினைத்து நிறுத்திக்கொண்டான். இதுபோன்ற ஆயத்த பதில்கள் அவளை மேலும் சோர்வடையச் செய்யும் என்று நினைத்தான். “ஸாரி நீலன். ரொம்ப பேசிட்டேன்னு நெனைக்கறேன். ரொம்ப ஸாரி… நீங்க வந்த விஷயத்தையே மறந்துட்டேன். கொஞ்சம் இருங்க டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” கஷ்டப்பட்டு எழ முயன்றவளுக்குக் கை கொடுத்து உதவிய நீலகண்டன், “வாங்க, ரெண்டு பேரும் சேந்து டீ போடலாம்” என்றான். “டீ போடறதுக்கு ரெண்டு பேரா” என்று சொன்னபடியே எழுந்துகொண்ட மாலதி கலகலவென்று சிரித்தாள். கல்லூரியில் அவள் வாங்கிய அழகிப் பட்டங்களுக்கான அடையாளமாய் இருந்தது அந்தச் சிரிப்பு. அந்த அழகான முகத்திற்குக் கீழே மெலிந்த கட்டுடலையும் அந்த உடல் ‘மனம் விரும்புதே’ பாடலுக்கு நடனமாடுவதையும் நீலகண்டன் ஒருகணம் கற்பனை செய்துபார்த்தான். “வலி இப்ப எப்படி இருக்கு?” என்றாள் மஞ்சு. தூக்கத்திலிருந்து முழுமையாக வெளியே வராத நீலகண்டன் காலை அசைத்துப் பார்த்தான் சுரீரென்று வலித்தது. வலியின் வெளிப்பாடு முகத்தில் தெரிந்ததைக் கண்ட மஞ்சு பதறினாள். “அடிபட்ட கால அசைக்கக் கூடாதுன்னு தெரியாதா? எதுக்கு இந்த வேல உங்களுக்கு” என்றாள். நீலகண்டன் அசையாமல் படுத்திருந்தான். “சாப்பிடறீங்களா?” என்றாள் மஞ்சு. “பாத்ரூம் போகணும்” என்றான். மஞ்சு கைத்தாங்கலாக அவனைக் கட்டிலிலிருந்து கீழே இறக்கிக் கழிவறைக்கு அழைத்துச் சொன்றாள். மனைவியாகவே இருந்தாலும் இன்னொருவரின் துணையோடு நடக்க வேண்டியிருப்பதை எண்ணி மனம் வருந்தியது. கல்லூரிகளுக்கிடையிலான வாலிபால் போட்டிக்கான பயிற்சிகளும் பயிற்சி ஆட்டமும் முடிய நெடுநேரம் ஆகிவிட்டது. சாம்பல் போர்வை பூமியின் மீது படர ஆரம்பித்திருந்தது. ஆடுகளத்திலிருந்து வண்டியை ஓடடிக்கொண்டு காலியாக இருந்த கல்லுரி வளாகத்தைத் தாண்டும்போது மதில் சுவரின் ஒரு கோடியில் ஏதோ சலனம் கண்டு திரும்பிப் பார்த்தான். யாரோ ஒருவன் இன்னொருவனைப் பலமாகத் தாக்கியது தெரிந்தது. அடி வாங்கியவன் தடுமாறிப் பின்னால் போனபோது இன்னொருவன் அவனை எட்டி உதைத்தான். அடி வாங்கியவன் பின்புறமாகத் தரையில் விழுந்தான். தடுமாறி எழுந்து ஓடப் பார்த்தவனை மூன்றாமவன் இடுப்பில் எட்டி உதைத்தான். அவன் சுருண்டு கீழே விழுந்தான். நீலகண்டனின் ரத்தம் கொதித்தது. “டேய்…” என்று பெரிதாகச் சத்தம் எழுப்பியவாறே வண்டியை அவர்களை நோக்கித் திருப்பினான். வளாகம் முழுவதும் எதிரொலித்த அந்த கர்ஜனையைக் கேட்டு அவர்கள் மூவரும் இவனை நோக்கித் திரும்பினார்கள். சில நொடிகளில் அந்த இடத்தை அடைந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி வேகமாக முன்னேறினான். கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது அவன் நண்பன் மூர்த்தி. மூர்த்தியை அடித்த ஆட்களை நீலகண்டன் அந்தக் கல்லூரியில் பார்த்ததில்லை. தங்களை நோக்கி ஒண்டி ஆளாக ஒருவன் தைரியமாக முன்னேறுவதைக் கண்ட அந்த மூவரும் இவனைத் தாக்க ஆயத்தமானார்கள். அவர்களில் ஒருவனை நெருங்கிய நீலகண்டன் சட்டென்று இடது காலைத் தரையோடு முன்புறமாகச் சுழற்றி வலது காலுக்கு வலப்புறமாகக் கொண்டுசென்று அந்தக் காலை ஊன்றியபடி வலது காலைச் சுழற்றிப் பின்புறமாக உதைத்தான். சரியாக மோவாயில் இடிபோல இறங்கியது அந்த உதை. அடிபட்டவன் மல்லாந்து விழுந்தான். கோபத்துடன் தன்னை நெருங்கிய இரண்டாமவனைச் சற்றே குனிந்து இடுப்பில் தோள் கொடுத்துத் தூக்கி அப்படியே கீழே போட்டு இடுப்பில் உதைத்தான். ஒரு கணமும் தாமதிக்காமல் மூன்றாமவனின் தாடையில் எட்டி உதைத்தான். ஓரிரு கணங்களில் மூவரும் தரையில் கிடந்தார்கள். உதைக்கும்போது நீலகண்டன் எழுப்பிய ஹுங்காரங்களைக் கேட்டுச் சாலையிலிருந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். அடி வாங்கிய மூவரும் ஆட்களின் தலைகள் தெரிவதைப் பார்த்து எழுந்து ஓடினார்கள். நீலகண்டன் மூர்த்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு மதில் சுவரைத் தாண்டிச் சாலையில் இறங்கி ஒரு ஆட்டோவை நிறுத்தினான். கழிவறையிலிருந்து படுக்கைக்கு வர ஐந்து தப்படிகள் போதும். நீலகண்டன் 18 தப்படிகள் நடந்து வர வேண்டியிருந்தது. மஞ்சு பிசைந்து தந்திருந்த உணவைப் படுக்கையில் சரிந்து உட்கார்ந்தபடி தேக்கரண்டியில் எடுத்துச் சாப்பிடத் தொடங்கினான். அவனுக்குப் பிடித்தமான உணவாக இருந்தும் சாப்பாடு இறங்கவில்லை. வண்டியை வேகமாக ஓட்டும் பழக்கம் இருந்தாலும் விவஸ்தையில்லாமல் ஓட்டுவதில்லை. தவறு நேரக்கூடிய இடங்களிலும் சந்தர்ப்பங்களிலும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வான். என்றாலும் ஒரு சந்திலிருந்து வேகமாக வந்த வண்டி தன்மீது மோதாமல் இருப்பதற்காக வேகமாகத் திருப்பியவன் பின்னால் வந்த வண்டியின் மீது மோதிக்கொண்டான். மோதிய வேகத்தில் வண்டி ஒரு புறமும் அவன் ஒரு புறமுமாகக் கீழே விழுந்ததில் வண்டியின் ஒரு பக்கம் பலத்த சேதம். இவனால் எழுந்திருக்க முடியவில்லை. விளையாட்டிலும் சண்டைகளின்போதும் பலமுறை விழுந்து உடனே துள்ளி எழுந்திருக்கிறான். இப்போது அசைய முடியவில்லை ஆம்புலன்ஸ் வந்துதான் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது. இடுப்பெலும்பு முறிந்ததில் அறுவை சிகிச்சை, சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவம் என எழுந்து நடக்க எட்டு மாதங்கள் ஆயின. சேமிப்பெல்லாம் கரைந்துபோனது. சம்பள இழப்பும் சேர்ந்துகொண்டது. அதையெல்லாம்விடப் பெரிய வலியை டாக்டரின் அறிவுரைகள் தந்தன. உங்களுக்கு இடுப்பில் கம்பி வைத்திருக்கிறோம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேகமாக நடக்கக் கூடாது. அதிக தூரம் நடக்கக் கூடாது. ஓடவே கூடாது. காலில் இயக்கும் கியர் வைத்த வண்டியை விட்டுவிட்டுத் தானியங்கி கியர் வண்டியை வாங்கிக்கொள்ளுங்கள். படி ஏறும்போதும் இறங்கும்போதும் கவனம் தேவை. கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யக் கூடாது. யோகாசனம் செய்தால் முன்னால் வளையும் ஆசனங்களைத் தவிர்த்துவிடுங்கள். பேருந்தில் உட்கார்ந்தபடி நீண்ட பயணங்களைச் செய்யாதீர்கள். மாடி வீட்டில் இருந்தால் கீழ்த்தளத்துக்கு மாறிவிடுங்கள் அல்லது எப்போதும் லிஃப்ட் பயன்படுத்துங்கள். பளு தூக்காதீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. எடை கூடினால் இடுப்பில் வலி எடுக்கும். டாக்டர் சொல்லச் சொல்ல நீலகண்டன் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தான். பதில் தெரிந்திருந்தும் தவிர்க்க முடியாமல் அந்தக் கேள்வியைக் கேட்டான். “ஸ்போர்ட்ஸ்…?” டாக்டர் கருணையே இல்லாமல் தலையை இடவலமாக ஆட்டினார். “கேரம்போர்டு, செஸ் இதெல்லாம் ஆடலாம். அதிலும் ரொம்ப நேரம் உட்கார்ந்திருக்கக் கூடாது.” சாப்பிட்ட தட்டை மஞ்சு எடுத்துக்கொண்டு போனாள். நீலகண்டன் மாத்திரை சாப்பிட்டான். வேகத்தைக் குறைப்பதற்கான ஐந்து ஆண்டுக் காலப் போராட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காலையில் எங்கிருந்து அந்த வேகம் வந்தது? ஐந்து ஆண்டுக் காலப் பயிற்சி அந்த ஒரு கணத்தில் என்ன ஆயிற்று? அன்றாடம் எத்தனையோ படிகளைப் பொறுமையாக, மெதுவாக, ஒவ்வொரு படியாக ஏறி இறங்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும் இந்தப் படியைப் பார்த்ததும் அந்தத் துள்ளல் ஏன் வந்தது? நல்லவேளை, பட்ட இடத்திலேயே படவில்லை. காலிலும் எலும்பு முறிவு இல்லை. ஒருவேளை அப்படி ஏதாவது நடந்து மீண்டும் படுத்த படுக்கையாகும் நிலை வந்திருந்தால் என்று நினைக்கும்போதே மனம் நடுங்கியது. நீலகண்டனுக்கு மாலதி இப்போது எங்கே இருக்கிறாளோ எப்படி இருக்கிறாளோ என்ற எண்ணம் தோன்றியது. ‘மனம் விரும்புதே’ பாடல் நினைவுக்கு வந்தது. தொலைவில் ரயில் சத்தம் கேட்டது. மாலதிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். https://amruthamagazine.com/2024/11/29/281-aravindan-short-story/  
    • சிலரின் அமைதி திமிர் அல்ல அது அவர்களுக்குள் இருக்கும் வலி..
    • வைரமுத்துவின் இரங்கல் பா...   10 பேர் கூட இல்லாத கடைசி ஊர்வலம் இளங்கோவன் செய்த கேவலமான செயல்களுக்கு இதுவே சாட்சி! ஒருவன் இறப்பில் தான் தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று இதிலிருந்து தெரிகிறது இந்த இளங்கோவன் யார் என்று!    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.