Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ள தமிழ்க்கட்சிகள் : ஹர்த்தாலுக்கும் அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன.

இதன்போது,  எவரும் 26ஆம் தினதி தியாகி திலீபனின் நினைவுகூரலை ஆலயங்களில் விசேட பூசைகள்  மற்றும் வீடுகளில் இருந்தவாறு மக்கள் தியாகி திலீபனை நினைவுகூறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கதவடைப்புப் போராட்டத்திற்கு, சமூக சிவல் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மொழியை பேசும் முஸ்லிம் மக்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/90658

  • கருத்துக்கள உறவுகள்

டக்கி, அங்கஐன், பிள்ளையானை தேர்த்தலில் அமோக வெற்றியீட்ட வைத்த தமிழ்மக்களைக் கொண்டதாக இன்று இலங்கை விளங்குகிறது. தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக, தமிழர்களை ஏமாற்றி வெறுப்டையச் செய்த சில தலைவர்களை இன்றும் தன்னுள்ளே கொண்ட தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டமும், கர்த்தாலும் கழுதை தன்வீரத்தைக்காட்ட முயற்சிசெய்த கதையாக முடிந்தாலும் முடியலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

டக்கி, அங்கஐன், பிள்ளையானை தேர்த்தலில் அமோக வெற்றியீட்ட வைத்த தமிழ்மக்களைக் கொண்டதாக இன்று இலங்கை விளங்குகிறது. தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக, தமிழர்களை ஏமாற்றி வெறுப்டையச் செய்த சில தலைவர்களை இன்றும் தன்னுள்ளே கொண்ட தமிழ்க் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டமும், கர்த்தாலும் கழுதை தன்வீரத்தைக்காட்ட முயற்சிசெய்த கதையாக முடிந்தாலும் முடியலாம். 

எமது நீதிமன்றங்களையும் அதன் தீர்ப்புகளையும் விட்டுவிட்டீர்கள்.

 

8 hours ago, பிழம்பு said:

தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஒரு இனம்  மற்றைய இனத்தை  கொன்று குவித்தநாளை வெற்றிவிழாவாக கொண்டாடி, அந்த மக்களின் மனதை காயப்படுத்தி முழக்கமிடமுடியும். ஆனால் தம் இனத்துக்காக இறந்த ஒருவரை அமைதியான முறையில் நினைவுகூரத் தடை, நீதிமன்ற தீர்ப்பு. எங்கே அடக்குமுறை தோன்றுகிறதோ, அது மீறலுக்கு வழிவகுக்கும். இதை தெளிவுபடுத்த வேண்டிய நீதிமன்றம், நீதிக்கும், மனித உரிமைக்கும் உழைக்கவேண்டியவர்கள் ஒருபக்க சார்பாய் நடந்து கொள்வதை என்னவென்பது? நீதிபதி  என்பதா? கைக்கூலி என்பதா? சாதாரண ஏழை மக்கள் எப்படி இப்படிப்பட்ட இடங்களில் நிஞாயத்தை எதிர்பார்க்க முடியும்? பாராளுமன்றத்திலேயே இவர்களின் தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது என்று தமக்கு சாதகமாக பயன்படுத்தும்போது சர்வதேசத்திலும் இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தும். ஒவ்வொருவரின் அடக்கு முறையையும், பொறுப்புகளையும் எடுத்துக்காட்டி, தவறுகளை சுட்டிக்காட்டி நீதியை நிலைநாட்ட வேண்டிய துறை இப்படி ஓரவஞ்சகமாக தீர்ப்பளித்து ஒரு இனத்துக்கு எதிராக  ஒடுக்கு முறையை அங்கீகரித்து தட்டிக்கொடுக்கிறதா? என சந்தேகிக்க இடமுண்டு. இவர்களின் வெற்றி விழாவை தடை செய்யக்கோரி நீதிமன்றம் செல்லாதது நம் தலைவர்களின் தவறுமே. இந்த தவறான தீர்ப்புகளும், தடைகளும் எதிர்காலத்திலும் அடக்குமுறைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும். செய்வது சர்வாதிகாரம், பேசுவது ஜனநாயகம். நாட்டில் எல்லாத் துறைகளும் கேலிக்கூத்தாகி விட்டது. 

Edited by satan
unfinished sentence

  • கருத்துக்கள உறவுகள்

26ம் திகதி உண்ணாவிரதம், 28 ம்திகதி ஹர்த்தால்- தமிழ்கட்சிகள்தீர்மானம்

 

தியாகதீபம் திலீபனின் நினைவு தினமான 26 ம் திகதி செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

நீதிமன்றத்தின் தடை உத்தரவை தொடர்ந்தேஇந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்துஅவசரமாக ஒன்றுகூடிய பத்துதமிழ்கட்சிகள் இது குறித்துதீர்மானித்துள்ளன.

6ம் திகதி திலீபனின் நினைவேந்தல்நிகழ்வை ஆலயங்களில் விசேடபூஜைகள்மூலமும் வீடுகளில்இருந்தவாறும் நினைகூறுமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

அன்றைய தினம் செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் காலை எட்டுமணிமுதல் மாலை ஐந்துமணிவரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

எதிர்வரும் 28 ம்திகதி திங்கட்கிழமை வடகிழக்கில் மாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கும் தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

http://www.ilakku.org/26ம்-திகதி-உண்ணாவிரதம்-28-ம்த/

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் போராட்டங்களுக்கு மக்கள் பங்களிக்க வேண்டும்: சம்பந்தன் அழைப்பு

“நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும் , எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஹர்த்தால் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தததை இதையடுத்தே இரா.சம்பந்தன் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“இறந்தவர்களை நினைவுகூர்வது ஜனநாயக உரிமை. அதை எவரும் தடுக்கவே முடியாது. ஒரு மனிதர் எந்த வழியில் உயிரிழந்தாலும் அவரை அவரது சமூகம் நினைவுகூர உரித்துண்டு. இதைத் தடுத்து நிறுத்துவது சர்வாதிகார செயல். தற்போதைய ஆட்சியில் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகின்றது. தமிழ்பேசும் சமூகத்தினரை இலக்கு வைத்து அராஜகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் திலீபன் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு.

இதை ஒருபோதும் ஏற்கவே முடியாது. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழினத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடி உயிர்நீத்தவரே தியாகி திலீபன். அவரை நினைவுகூர தமிழ்பேசும் சமூகத்துக்கு முழுமையான உரிமையுண்டு. அந்த உரிமை கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஆட்சியில் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நாளை சனிக்கிழமையும் , எதிர்வரும் திங்கட்கிழமையும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்” என்றார்

 

http://thinakkural.lk/article/71937

  • கருத்துக்கள உறவுகள்

இது அல்ல தீர்வு.

இலங்கையில் சிங்கள அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் அதாவது சிங்கள அரசின் உச்சரிப்பில் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஜே வி பிக்கு பொதுமன்னிப்பும் தடைநீக்கமும் வழங்கியது போன்று.. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தடைநீக்கமும் பொதுமன்னிப்பும் அளிக்க நீதிமன்றங்களை நாட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில்.. விடுதலைப்புலிகளின் எந்த ஆயுதச் செயற்பாடும் நாட்டில் இல்லாத நிலையில்.. அந்த அமைப்பின் மீதான தடையினை விலக்க சாத்தியமான வழிகளில் சொறீலங்கா நீதிமன்றங்களில் நீதியை நிலைநாட்டுவது கடினம் என்றாலும் முயல வேண்டும்.

இதே ஜே வி பி தொடுத்த வழக்கில் தான் வடக்குக் கிழக்கு இணைப்பு சிங்கள நீதிமன்றத்தால் பிரிக்கப்பட்டது. அதனை எதிர்த்து எம்மவர்கள் பெரிய சட்டாம்பிகள் ஒரு நீதிமன்ற வழக்கை தன்னும் பதிவு செய்யவில்லை.  ஹிந்தியாவை வாய் பார்த்திருந்தனர். அதன் விளைவு.. 

மேலும் சர்வதேச அரங்கிலும் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து சாத்தியமான நீதி நடவடிக்கைகளும் வெகுஜன நடவடிக்கைகளும் அவசியம். இவை தொடர்ச்சியாக இலக்கு எட்டப்படும் வரை அமைவது இன்னும் முக்கியம்.

விடுதலைப்புலிகள் மீதான தடை ஒன்றைத் தவிர.. இலங்கையில் சிங்கள அரசுக்கு அரச படைகளுக்கு எதிராகப் போராடிய அனைவருக்கும்.. பொதுமன்னிப்பும் அளிக்கப்பட்டும்.. தடைகளும் நீக்கப்பட்டுள்ளன.

ஏன்.. தமிழர்களைப் படுகொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்களப் படையினர் கூட விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு எதிராக கூட நம்மவர்கள் ஒரு நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்வதேச அளவில் கூட ஒரு மனுவை தாக்கல் செய்யவில்லை.

இப்படி இருக்க..

சத்தியாக்கிரகம்.. உண்ணாவிரதம்.. ஹர்த்தால் என்று மக்களை ஏமாற்றுவதை விடுத்து..

உருப்படியான தேவையான.. சர்வதேச கவனத்தை ஈர்க்கக் கூடிய... சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலமான வெற்றி ஒன்றே..

இந்தப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர முடியும்.

அயலில் உள்ள தமிழகத்தில் இருந்து சிங்கள அரசின்.. சிங்கள நீதிமன்றங்களின் இந்த அநியாயம் குறித்து ஒரு கண்டனமும் கூட வரவில்லை.

தமிழக அரசு.. 13 விலக்கலாகட்டும்.. காணாமல் போகடிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் ஆகட்டும்..  போர்க்குற்ற விசாரணை ஆகட்டும்.. எதற்கும் ஒரு கண்டனமோ.. ஆதரவோ தெரிவிப்பதில்லை. ஜெ அம்மையார் செய்த அளவு கூட இல்லை. இந்தா வெட்டுவம் புடுங்குவம் என்ற வைகோ திருமாவளவன் போன்றவர்கள் கூட தன்னிச்சை இழந்துவிட்டார்கள். 

எனவே எமக்கான நீதியை உரிமையை நாமே தான் சாத்தியமான எல்லா வழிகளிலும் போராடி பெற வேண்டும்.. இதில் சோர்வோ.. மயக்கமோ இருக்கக் கூடாது.

அசாத்தியத்தையும் சாத்தியமாக்கிய மறவர்கள் தோன்றிய எம்மினத்தில் இன்று மக்களை ஏமாற்றூம் நகர்வுகளை அரசியல் இலாபங்களுக்காக செய்வதை விடுத்து மக்களின் அடிப்படை உரிமையை மீட்கும் உன்னத நோக்கம் இருந்தால்.. யாழ் நீதவான் நீதிமன்றத்தையும் தாண்டி.. பல வழிகளில்.. இந்த தடைக்கு எதிராக நீதிமன்றங்கள் போக முடியும். மேன் முறையீடுகளை செய்ய முடியும். 

விடுதலைப்புலிகள் மீதான தடை தொடர்வது குறித்து ஏன் இன்னும் நீதியின் பக்கம் யாரும் போகவில்லை..???!

அந்தத் தடைநீங்கின் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட பல விடயங்களை சாத்தியமாக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் நினைவுகூரல் ;  கிழக்கிலும் உண்ணாவிரதம் நடத்தவேண்டும் - தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கோரிக்கை

யாழ் செல்லச் சந்நிதி ஆலையத்தில் திலீபனின் உண்ணாவிரம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து செல்லச் சந்நிதி ஆலயத்தில் எவ்வாறு உண்ணாவிரதம்  நடைபெறுகின்றதோ அதேபோல கிழக்கில் மட்டக்கிளப்பிலும் அவ்வாறு அதேநேரத்தில் நடத்த ஏற்பாட்டுக்குழு  ஏற்பாடு செய்வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார் 

spacer.png

மட்டக்களப்பு வெய் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு அவர் கேரிக்கை விடுத்துள்ளார்  

தியாகதீபம் திலீபன் இந்த நினைவேந்தல் தடையை உடைப்பதற்காக வடக்கு கிழக்கில் உள்ள 10 மேற்பட்ட தமிழ் தேசிய கட்சிகள் இன்று ஒன்றினைந்தது பாராட்டத்தக்க விடயம். இந்த ஒற்றுமை என்பது எமது இன நலனுக்காக  நீடிக்க வேண்டும் என்பதே எமது அனைவரது விருப்பம்.

அவ்வாறே நீதிமன்றம் இன்று மீண்டும் தடை உத்தரவை பிறப்பித்ததையடுத்து தமிழ் கட்சிகள் கூடி நாளை 26ம் திகதி செல்வசந்நிதி ஆலயமுன்றலில் அடையாள உண்ணாவிரதமும் 28 ம் திகதி வடகிழக்கு ரீதியில் ஹர்தால் செய்வதாகவும் தீர்மானம் எடுத்து அதனை அறிவித்தது வரவேற்கத்தக்க விடயம். 

இருந்தபோதும்  இந்த வடக்கைச் சேர்ந்த எமது தலைவர்கள் இந்த முடிவை எடுக்கும் முன்னர் கிழக்கு மாகாணத்தையும் அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இன்று அம்பாறையில் இருக்கின்ற ஒருவரே மட்டக்களப்பில் இருக்கின்ற ஒருவரே செல்வச் சந்நிதிக்கு சென்று அந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வது என்பது இந்த அச்சுறுத்தலான நிலையில் ஒரு சாதாரண விடயமல்ல  

வடகிழக்கு இணைந்த தாயகம் என வாயால் மாத்திரம் தேசியம் கதைக்கின்றோம்.  ஆனால் ஒரு விடயம்வரும் போது நாங்கள் யாழ்ப்பாணத்துக்குள் முடங்கி கொள்கின்றோம். அப்போது ஏன் கிழக்கைப்பற்றி சிந்திப்பதில்லை  கிழக்கில் மாவீரர்கள் இல்லையா? மாவீரர் குடும்பங்கள் இல்லையா? போராளிகள் இல்லையா? எம் மக்களுக்கு உணர்வில்லையா? 

இந்த விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்கெடுத்ததுடன் அதிகளவான போராளிகளையும் அதிகளவான  பாதிப்பை கொண்டதாக  இந்த கிழக்கு மாகாணம்  இருக்கின்றது.  இருந்தபோதும் தியாகதீபம் தீலீபனின் நினைவை அனுஷ;டிப்பதற்கு இந்த மக்களுக்கு உரிமை இல்லையா? அவருக்காக கண்ணீர்விடுவதற்கு எம்மக்களுக்கு உரிமை இல்லையா? 

நீங்கள் செய்யும் இப்படியபான சிறுசிறு தவறுகளினால் தான் எம்மக்கள்கள் இளைஞர்கள் இன்று  மனங்களில் இருக்கின்ற வெறுப்புக்களால் அரசதரப்புக்களான பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், போன்றேர்களிடம் தேர்தல் காலங்களிலும் சரி ஏனைய காலங்களிலும் சரி அங்கு செல்லுகின்றனர் ஆகவே இந்த நிலை மாற்றப்படவேண்டும்.

பெருமளவிலான கிழக்கைச் சேர்ந்த போராளிகள் வடக்கில்தான் இறந்திருக்கின்றனர் அவர்கள் திலீபனை நேசிக்கின்றனர் அவருடைய உண்ணாவிரதத்தை மதிக்கின்றனர். இவ்வாறான நிலையில் கிழக்கு இளைஞர்கள் கிழக்கு மக்கள். கிழக்கிற்காக உயிரை கொடுத்த மாவீரர்களின் பெற்றோர்கள் சகோதர சகோதரிகளின் மனக்குமுறல்களை நான் இன்று அறிவேன் 

தமிழர் தாயகத்தில் தமிழர் தேசியம் சம்மந்தப்பட்ட எந்த விடயமாக இருந்தாலும் வடகிழக்கு பிரதிநிதித்துவப்பட்டுத்தான் செய்யவேண்டும். இந்த தலைவர்கள் எடுத்த தீர்மானங்களை மதிக்கின்றேன.; இந்த தலைவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றது  எனவே இந்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து யாழ் செல்வச் சந்நிதியில் நடக்கின்ற அதேநேரம் கிழக்கில் மட்டக்களப்பில் மாமாங்க ஆலயமே அல்லது கொக்கட்டிச்சோலை ஆலயத்திலே அதேநேரத்தில் இங்கும் ஒரு உண்ணாவிரத்தை செய்தால் தான் வடகிழக்கில் அதனுடைய எழுச்சி  சர்வதேச ரீதியல் பயனளிக்கும் 

தனியாகவே யாழ்ப்பாணத்தில் மட்டும் தமிழ் தேசியத்தையே. தமிழ்தேசயத்தின் நிகழ்சிகளையே எந்தகாலத்திலும் முடக்கமுடியாது. இவ்வளவு காலமும் இதுதான் நடந்தது எம் தலைமைகள் இதைத்தான் செய்து வந்தார்கள் இப்போதும் செய்து வருகின்றார்கள்.

இன்று இளம் சந்தியினரான நாங்கள் இதனை மாற்றுவதற்காகத் தான் யோசிக்கின்றோம் இதற்காகத்தான் நடைபயணத்தை இளைஞர்கள் ஏற்பாடு செய்தனர் அதற்கு தடை ஏற்பட்டது இந்ததடைகள் தகர்த்து எறியப்பட வேண்டும் என்பதற்கே நாங்கள் இளைஞர்கள் இருக்கின்றோம். வடகிழக்கில் நாங்கள் ஓற்றுமையாக தேசியத்தை முன்னிறுத்திக் கொள்ளவேண்டும் என இருக்கின்றோம்.

உயிரிழந்தவர்களின் நினைவைக்கூறி கண்ணீரை விடுவதைக்கூட இலங்கை அரசு தடை செய்கின்றது என எமது சிரேஷ்ட தலைவர்கள் ஊடக அறிக்கை விடுத்திருந்தனர் அதையே நான் திருப்பி கேட்கின்றேன் உயிரிழந்தவர்களுககான கண்ணீர் விடுவதற்கான கிழக்கு மாகாண எமது மக்களின் உரிமையைகூட நீங்கள் பறிக்கின்றீர்கள்தானே இதில் என்ன நியாயப்பாடு இருக்கின்றது 

இதில் குறை பிடிப்பதற்காகவே குழப்புவதற்கா இல்லை தமிழ் தேசிய உணர்வு எங்களுக்குள் இருக்கின்றது அந்த உணர்வு மதிப்பளிக்கப்படவேண்டும் எனக்கு இருக்கும் அந்த உணர்வு அத்தனை மக்கள், போராளிகள் அனைவரிடம் இருக்கின்றது. ஆகவே தமிழ் தேசிய தலைவர்களிடம் தற்போது எற்பட்டிருக்கின்ற ஒற்றுமை நிலைக்கவேண்டும் அப்போது தான்  தாயக பூமிக்குள் அத்துமீறி வந்திருக்கின்ற போலி அரசியல் செய்யும் விசமிகளை திரத்தியடிக்கமுடியும் என்றார். 
 

https://www.virakesari.lk/article/90719

 

நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரதப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

செல்வச்சந்நிதி ஆலய முன்றலில் நாளை நடைபெறவிருந்த உண்ணாவிரதப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சட்டத்தரணிசுகாஸ் இதனைதெரிவித்துள்ளார்.
மாற்று ஏற்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/72101

உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை! – சற்றுமுன் உத்தரவு!

thileepan86zq.jpg?189db0&189db0

தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதனை எதிர்த்து நினைவேந்தல் நாளான நாளை (26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று (25) சற்றமுன் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் இந்த தடை உத்தரவு விண்ணப்பம் இன்று முற்பகல் தாக்கல் செய்யப்பட்டது.

தியாக தீபம் நினைவேந்தலை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நேற்று நீடிக்கப்பட்ட நிலையில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று (24) கூடி நாளை தொண்டமனாறு செல்வச் சந்திநிதியில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அதற்குத் தடை கோரி வல்வெட்டித்துறை பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்ட வழக்கிலேயே பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றால் இந்த தடை உத்தரவு வழங்கட்டுள்ளது.

https://newuthayan.com/உண்ணாவிரதப்-போராட்டத்து/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செண்பகம் said:

எதிர்த்து நினைவேந்தல் நாளான நாளை (26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று (25) சற்றமுன் உத்தரவிட்டுள்ளது.

மேலதிகமாக குறித்த நாளன்று (26) ஒருங்கிணைத்த தமிழ் தேசிய போராட்ட சக்திகள் ஒன்டுக்கு மற்றும் காலை கடன்களை நிறைவேற்றி கொள்ளவும் 
யாழ் நீதிவான் நீதிமன்றம்  தடை விதித்துள்ளமையும் குறிப்பிடதக்கது ..👍

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மேலதிகமாக குறித்த நாளன்று (26) ஒருங்கிணைத்த தமிழ் தேசிய போராட்ட சக்திகள் ஒன்டுக்கு மற்றும் காலை கடன்களை நிறைவேற்றி கொள்ளவும் 
யாழ் நீதிவான் நீதிமன்றம்  தடை விதித்துள்ளமையும் குறிப்பிடதக்கது ..👍

ஒரு சர்வாதிகார நாட்டில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? தமிழ் இளைஞர்களை சிறைகளில் அதற்கும் தடை விதித்து சாகடித்த தலைவர்களையும், அதிகாரிகளையும் கொண்ட  பழம் பெருமை வாய்ந்த நாடு இது. 

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டபடி இன்று உண்ணாவிரதப் போராட்டம்; எங்கே நடைபெறும் என்பது காலையே முடிவு

 

தியாக தீபம் திலீபனின் நினைவு தினமான இன்று சனிக்கிழமை தமிழ்க் கட்சிகள் ஏற்கனவே திட்டமிட்டதைப் போல காலை முதல் மாலை வரையில் உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என யாழ். நகரில் நேற்று மாலை கூடிய தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

நீதிமன்றத் தடை உத்தரவை மீறாத வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த தமிழ்க் கட்சி ஒன்றின் பிரமுகர், இந்தப் போராட்டம் எந்த இடத்தில் நடத்தப்படும் என்பதை இன்று காலை போராட்டம் ஆரம்பமான பின்னர்தான் வெளியிடுவோம் எனத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உட்பட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இந்த முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டது. நெல்வச்சந்திநி ஆலயத்தில் நாளை நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து இந்த முடிவை தமிழ்க் கட்சிகள் எடுத்துள்ளன.

 

http://www.ilakku.org/திட்டமிட்டபடி-இன்று-உண்ண/

உண்ணாவிரதப் பகுதியில் பொலிஸ் குவிப்பு; போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரின் விபரம் சேகரிப்பு

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200 க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருக்கும் அதேவேளையில் மேலும் பெருந்தொகையானவர்கள் அந்தப் பகுதிக்கு வந்துகொண்டிருக்கின்றார்கள்.

இதேவேளையில் அப்பகுதியில் பஸ்களில் கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டுள்ள பொலிஸார், உண்ணாவிரதிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளார்கள். எதற்காக இங்கு கூடியுள்ளீர்கள்? என அவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பிய போது, “அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக” என அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களைச் சேகரித்த பொலிஸார், அவர்களை காணொளியிலும் படம் பிடித்தார்கள். தொடர்ந்தும் அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் நிற்கின்ற போதிலும், உண்ணாவிரதப் போராட்டம் அமைதியாக இடம்பெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://thinakkural.lk/article/72322

  • கருத்துக்கள உறவுகள்

LIVE🔴 கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழில் தொடங்கியது உண்ணாவிரத போராட்டம்!

காணாது மக்கள் எழுச்சி. இன்னும் எத்தனை நாளைக்குதான் மக்கள் ஒதுங்கி ஒதுங்கியே இருப்பார்கள். உண்ணாவிரத்தில் பங்கு பற்றிகொண்டிருக்கு அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பாற்கு தடைவிதித்ததையடுத்து தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி, ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதனால் பெருமளவில் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் போராட்டத்திற்கு தமது ஆதரவைத் தெரிவித்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

120010059_159325075831847_3794130614526963158_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=0OPakatcBC8AX_6bALp&_nc_ht=scontent-maa2-1.xx&oh=3e321352161a6203157492341160fc82&oe=5F93B13D

அதே நேரம் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்திலும் உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பம் நடைபெற்று வருகின்றது.

http://www.ilakku.org/thileepan-hunger-strike-jaffna-university-students/

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, crowd and outdoor

Image may contain: 8 people, people sitting, wedding and outdoor

Image may contain: 9 people, people sitting, crowd and outdoor

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

 

இறந்தவர்களை,  அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை  இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு  எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 28.09.2020 நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப்  போராட்டத்துக்கு  இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது. 

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் அன்றைய தினத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட பரீட்சைகளை,  வேறு தினமொன்றுக்கு மாற்றுமாறும் வடக்கு மற்றும் கிழக்கு  மாகாண கல்வி அமைச்சின்  அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

அரசின் இராணுவ கெடுபிடிகள் நிறைந்திருக்கக்  கூடிய அன்றைய தினம் மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளில் வைத்திருக்குமாறு பெற்றோரை கேட்டுக் கொள்கின்றோம். 

 எவ்வித அச்சுறுதல்களுக்கும் அஞ்சாமல்,  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அனைத்து ஆசிரியர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து உரிமை கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

குற்றவியல் நடைமுறை கோவையின்,  பொது  தொல்லைகள், ஏற்பாடுகளின் கீழ் நினைவேந்தல் உரிமை,  ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்குரிய உரிமை உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் -

இறந்தவர்களை நினைவு கூருவது என்பது உலக  அளவில் ஒரு கலாசார உரிமையாகவும்,  அரசியல் உரிமையாகவும் உள்ளது.

இந்த நிலையில் - போலீசார் ஊடாக   நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் நினைவு கூர்வதற்கு   தடையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியமை ஒருபோதும்   ஏற்றுகொள்ள முடியாது.

இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை இலங்கை  அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும்.

உறுப்புரை 10 ன்  "மனசாட்சியின்  படி செயற்படுதல்",  உறுப்புரை 14 "பேச்சு சுதந்திரத்தின் பாற்பட்டது" என்பவற்றை  இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும். 

யுத்தம் நிறைவு பெற்று 10 வருடங்கள் கடந்த நிலையிலும்,  இத்தகைய நினைவேந்தல் உரிமைகளை  போலீசாரை கொண்டு,  நீதிமன்றங்களின் மூலம்  இந்த அரசாங்கம் தடுக்க முயல்வதானது,  இந்த அரசாங்கத் தின் பாதுகாப்பற்ற - பலவீனமான தன்மையை வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு முழுமையான நீதியின் பாற்பட்ட நல்லிணக்கத்துக்கு யுத்தத்தின் போதும்,  யுத்தத்தின் பின்னரும்  இறந்தவர்களையும்,  அவர்களது உறவுகள் நினைவு கூருவதை இந்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுவுள்ள வடக்கு - கிழக்கு தழுவிய  பூரண  முடக்கப் போராட்டதுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.

https://ctunorth.blogspot.com/2020/09/blog-post_26.html?fbclid=IwAR1RSMmCDtK4_nvH5ZhGKyCOXWdhuFPAROLM18YKetQKhvcEGBx28vvYVHw

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலயே திலீபன் மேல் மதிப்பும்,அவரது கொள்கை மேல் உள்ள அக்கறையினால் உண்ணா விரதம் இருந்திருந்தால் வரவேற்கத்தக்கது.
இன்று புரட்டாதி சனி விரதமாக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

 

இறந்தவர்களை,  அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை  இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு  எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 28.09.2020 நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப்  போராட்டத்துக்கு  இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் அன்றைய தினத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட பரீட்சைகளை,  வேறு தினமொன்றுக்கு மாற்றுமாறும் வடக்கு மற்றும் கிழக்கு  மாகாண கல்வி அமைச்சின்  அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

அரசின் இராணுவ கெடுபிடிகள் நிறைந்திருக்கக்  கூடிய அன்றைய தினம் மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளில் வைத்திருக்குமாறு பெற்றோரை கேட்டுக் கொள்கின்றோம்.

எவ்வித அச்சுறுதல்களுக்கும் அஞ்சாமல்,  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அனைத்து ஆசிரியர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து உரிமை கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

குற்றவியல் நடைமுறை கோவையின்,  பொது  தொல்லைகள், ஏற்பாடுகளின் கீழ் நினைவேந்தல் உரிமை,  ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்குரிய உரிமை உள்ளது.

அதுமட்டுமல்லாமல் –

இறந்தவர்களை நினைவு கூருவது என்பது உலக  அளவில் ஒரு கலாசார உரிமையாகவும்,  அரசியல் உரிமையாகவும் உள்ளது.

இந்த நிலையில் – போலீசார் ஊடாக   நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் நினைவு கூர்வதற்கு   தடையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியமை ஒருபோதும்   ஏற்றுகொள்ள முடியாது.

இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை இலங்கை  அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும்.

உறுப்புரை 10 ன்  “மனசாட்சியின்  படி செயற்படுதல்”,  உறுப்புரை 14 “பேச்சு சுதந்திரத்தின் பாற்பட்டது” என்பவற்றை  இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும்.

யுத்தம் நிறைவு பெற்று 10 வருடங்கள் கடந்த நிலையிலும்,  இத்தகைய நினைவேந்தல் உரிமைகளை  போலீசாரை கொண்டு,  நீதிமன்றங்களின் மூலம்  இந்த அரசாங்கம் தடுக்க முயல்வதானது,  இந்த அரசாங்கத் தின் பாதுகாப்பற்ற – பலவீனமான தன்மையை வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு முழுமையான நீதியின் பாற்பட்ட நல்லிணக்கத்துக்கு யுத்தத்தின் போதும்,  யுத்தத்தின் பின்னரும்  இறந்தவர்களையும்,  அவர்களது உறவுகள் நினைவு கூருவதை இந்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுவுள்ள வடக்கு – கிழக்கு தழுவிய  பூரண  முடக்கப் போராட்டதுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.

 

http://www.ilakku.org/பூரண-முடக்கப்-போராட்டத்த/

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலி செலுத்துவது ஒரு போராட்டமாக மாறிவருகின்றது; நாளைய ஹர்த்தாலில் அணி திரள சுரேஷ் அழைப்பு

BharatiSeptember 27, 2020

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரின் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.

இது குறித்த அவரது அறிக்கை வருமாறு;

“தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவபடுத்துவதும், அவர்களை நினைவு கூருவதும் ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும். இந்த அஞ்சலி என்பது ஐ.நா சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயற்பாடுமாகும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த அஞ்சலி நிகழ்வுகளை கடைப்பிடிப்பது என்பது ஒரு போராட்டமாகவே மாறிவருகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அந்த அரசாங்கள் அதனை தடை செய்வதும் நீதிமன்றங்களின் ஊடாக தடைகளைப் பெற்றுக் கொள்வதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடமும் உரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அஞ்சலி நிகழ்வுகளுக்கு எதிராக தடைகளைப் பெற்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் பங்கு கொள்ளக் கூடாது என்ற ஒரு நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த அஞ்சலி நிகழ்வுகளை நடாத்த முற்பட்டபொழுது ஒவ்வொரு இடத்திலும் அதற்கு எதிரான தடைகளை பொலிஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டனர். ஆனால், அரசாங்கத்தினுடைய இந்த அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் நேற்றைய தினம் 26.09.2020 அன்று சாவகச்சேரியில் ஓர் உண்ணாநேன்பை வெற்றிகரமாக நடாத்தி முடித்தோம். இராணுவ பொலிஸ் சுற்றிவளைப்புக்குள் இந்த உண்ணா நோன்பு நடைபெற்றது.

இதன் அடுத்த கட்டமாக தமிழ் மக்களினுடைய விடியலுக்காக போராடி மரணித்துப் போன அனைத்து பொதுமக்கள் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் எமது உரிமையை நிலைநாட்டும் பொருட்டு வடக்கு – கிழக்கு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு ஹர்த்தாலினூடாக எமது கோரிக்கையை வலியுறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. நாம் அனைவரும் இணைந்து இதனை வலியுறுத்தாவிட்டால் இலங்கை அரசாங்கம் வட – கிழக்கை தனது சிங்கள – பௌத்த மேலாதிக்கத்துக்குள் கொண்டுவரும். அதற்கான பல்வேறு பட்ட நடவடிக்கைகளை ஏற்கனவே இந்த அரசாங்கம் எடுத்து வருகின்றது.

இந்த சூழலில்தான் இந்த உண்ணாநேன்பைத் தொடர்ந்து வட – கிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுக்கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தைச் செய்து ஒரு முழுமையான ஹர்த்தாலை அனுஸ்டிக்கும்படி வேண்டுகின்றோம்.”

 

http://thinakkural.lk/article/72834

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.