Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறைந்தார் பாட்டு தலைவன் எஸ்.பி.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த எஸ்.பி.பியின் உடல் இன்று செங்குன்றத்திலுள்ள அவரது வீட்டில் நல்லடக்கம்

 

  • Replies 74
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

spb உடல் தாமரை பாக்கத்தில்.. இலட்ச கணக்கான மக்களின் அழுகை குரல்

 

  • கருத்துக்கள உறவுகள்

SPB 50வருட கால நண்பன்... பாரதிராஜா உருக்கம்

 

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலுக்கு பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலி

சென்னையில் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அவரது உடல் சென்னையை அடுத்துள்ள அவரது தாமரைப்பாக்கம் இல்லத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் பொதுமக்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர வேண்டாம் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியை கடைபிடித்து, 100 பேருக்கு மிகாமல் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மருத்துவமனை தெரிவித்தது என்ன?

கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எம்ஜிஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி.பி, தொடக்கத்தில் கவலைக்கிடமான நிலையில் இருந்து பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு குணம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் உயிர்காக்கும் கருவிகளின் அதிகபட்ச உதவி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை நேற்று முன் தினம் தெரிவித்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி

எஸ்.பி.பியின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன், நடிகர் ரஜினி காந்த், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனேர்ஜி, மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் செளஹான், மேலும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரைத்துறையினர் என பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

]

https://www.bbc.com/tamil/india-54306650

ஓய்ந்தது இசையருவி || வடஇந்திய ஊடக கள்ள மௌனம் ஏன்?|| நவீன தீண்டாமையா?

 

11 hours ago, colomban said:

கண்ணீர் அஞ்சலிகள் ஐயா

 

கொழும்பான் நீங்கள் கூறியது விடயம் சரியானதே. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.  முதலாவதாக ஒலிப்பதிவு செய்த பாடல் வெளிவரவில்லை என்றும், அதன் பிறகு ஒலிப்பதிவு செய்த பாடல் ‘இயற்கையெனும்’ என்ற பாடல் என்றும் அதன் பின்னரே ‘ஆயிரம் நிலவே’ என்ற பாடல் பாடியதாகவும்,  எஸ். பி  யே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்ததை இன்று வாசித்தேன். படம் ஒரே நேரத்தில் வெளிவந்ததாலும் மக்கள் திலகத்தின் பட பாடல் என்பதாலும் ‘ஆயிரம் நிலவே வா’ பிரபல்யமாகிவிட்டது என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையுடன் இணைந்த இளைய நிலா: 72 குண்டுகள் முழங்க எஸ்பிபி உடல் நல்லடக்கம்!

spacer.png

 

பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனின் உடல் காவல்துறையினரின் 72 குண்டுகள் முழங்க தாமரைப்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 26) நல்லடக்கம் செய்யப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்தமான பாடகர் எஸ்பிபி. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக் குறைவால் நேற்று மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். காலத்தால் அழிக்க முடியாத 40 ஆயிரம் பாடல்களுக்கு உயிர்கொடுத்தவர் இன்று கண்ணாடி பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருப்பதை காண்பதற்கு இதயம் கனக்கத்தான் செய்தது.

spacer.png

எஸ்பிபி மறைந்தாலும் அவர் பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் எனக் கூறி ஒட்டுமொத்த திரையுலகமுமே இரங்கல் தெரிவித்தது. திருவள்ளூர் மாவட்டம் தாமரை பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்ட நிலையில், இயக்குநர் பாரதிராஜா மற்றும் பாடகர் மனோ, இயக்குநர் அமீர் ஆகியோர் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

spacer.png

கண்ணீர் அஞ்சலி செலுத்திய மனோ

பாடகர் மனோ கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் எஸ்பிபியின் உடலைப் பார்த்துத் தேம்பி அழும் காட்சி மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. அதுபோன்று எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். ஆந்திர அரசின் சார்பில் நீர்வளத் துறை அமைச்சர் அனில்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பிரபலங்கள் மற்றும் அவரது உறவினர்கள் மட்டுமே இன்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.

 

இதைத்தொடர்ந்து 10 மணியளவில், எஸ்.பி.பி. உடலுக்குப் புரோகிதர்களின் வேத மந்திரங்களுடன் இறுதிச்சடங்குகள் தொடங்கின. அதன்பின் மகன் எஸ்பிபி சரண் இறுதிச் சடங்கைத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து குடும்பத்தினர் அனைவரும் இறுதிச்சடங்கு செய்தனர்.

spacer.png

இறுதிச் சடங்கு நிகழ்வுக்காகத் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் தலைமையில் 500 போலீசார் தாமரைப்பாக்கம் பண்ணை வீடு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மறுபக்கம் அரசு மரியாதை கொடுப்பதற்காகத் தமிழகக் காவல்துறையின் ஆயுதப்படையினர் அணிவகுத்து தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு வந்தனர்.

spacer.png

எஸ்பிபி காலை தொட்டு வணங்கிய விஜய்

இதனிடையே வீட்டில் இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ‘பத்ம பூஷன் எஸ்பிபி ஐயா புகழ் ஓங்குக’ என்ற வாசகத்துடன் எஸ்பிபியின் உடலைத் தூக்கிச் செல்ல, அவரது உடலுக்கு முன்பாக ஆயுதப்படை போலீசார் அணி வகுத்தனர். அடக்கம் செய்யும் இடத்திற்கு நேரில் வந்த நடிகர் விஜய், சரணுக்கு தோள்தட்டிக் கொடுத்து ஆறுதல் தெரிவித்தார். எஸ்பிபியின் காலை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார்.

spacer.png

இந்நிலையில், 24 காவலர்கள், 3 முறை துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தப்பட்டது. அடக்கம் செய்யப்படும் இடத்திலும் மந்திரங்கள் பாடி குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடல் 12.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தினர், உறவினர்கள், பிரபலங்கள், ரசிகர்களின் கண்ணீர் கடலுக்கு மத்தியில் காற்றில் கலந்தது கானக்குரல். பாட்டுடை தலைவனுக்குப் பிரியா விடை அளிக்கப்பட்டது.

 

 

https://minnambalam.com/public/2020/09/26/26/SBP-body-burial-thamaraipakkam-padum-nila

 

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்பிபியின் இறுதிச் சடங்குக்கு வந்த நடிகர் விஜய்

 

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்

அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்

 

தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பதிவு: செப்டம்பர் 26,  2020 12:38 PM மாற்றம்: செப்டம்பர் 26,  2020 12:55 PM
சென்னை,

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை இல்ல வளாகத்தில் வைக்கப்பட்டு, அவரது குடும்பத்தினர் சார்பில் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த அவரது ரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.


திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் வந்து எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.

அதன்படி குடும்பத்தினரின் இறுதிச்சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கிடையில் எஸ்.பி.பி.யின் பண்ணை தோட்டத்தில் அவரது உடலை புதைப்பதற்கான முன்னேற்பாடுகள் நேற்று தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதிச்சடங்கு நிகழ்வின் போது நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.பி.பி.யை இறுதியாக ஒருமுறை காண்பதற்காக வந்திருந்த அவரது ரசிகர்கள், அவரது உடலை, காவல்துறை அணிவகுப்புடன் சுமந்து சென்ற போது, எஸ்.பி.பி.யின் புகழை போற்றும் விதமாக முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர். இதன் பின்னர் காவல்துறை சார்பில், 24 போலீசார் 3 முறை குண்டுகளை முழங்க அரசு மரியாதையுடன், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/09/26123850/SPBalasubramaniyam-body-buried-with-state-honor.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பாடும் நிலா பாட்டு தலைவன் spbஐயா அவர்களுக்கு என் இசையின் சமர்ப்பணமாக இப் பாடலை எழுதி இசையமைத்து பாடி உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் அவரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம்

 

KJ Music

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

கொரோணாவுக்காகவும்  பாடிட்டு அப்படியே போய்ட்டார்..🙏🙏😢

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

120259440_660350094673053_39988223921148

எங்கள் மாவீரர்களுக்காக அவர் பாடிய பாடல் வீடியோ ஒன்றை பதிவுடுங்களேன்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நேசன் said:

எங்கள் மாவீரர்களுக்காக அவர் பாடிய பாடல் வீடியோ ஒன்றை பதிவுடுங்களேன்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலசுப்பிரமணியம் அவர்கள் ஒரு சிகரம்.
ஒரு சாதனையாளர்.
திரைத்துறையில் இவரை மாதிரி சாதித்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா என தேடிப்பார்த்தேன். ஒருவருமே இல்லை. இந்த உலகிலேயே இல்லை. இவரது பக்தி பாடல்களை நான் விரும்பி கேட்டதில்லை. காரணம் இவரின் திரையிசை பாடல்களின்  அதியுச்ச அதிகாரம். பாலா தெய்வமாகி விட்டார். இனிவரும் காலங்கள் அவரின் பக்திப்பாடல்கள் அவரையே தெய்வமாக வணங்க வழிவிடும்.

பாலா அவர்களே! நீங்கள் இறக்கவில்லை. உங்கள் பூதவுடல் மட்டுமே அழிந்தது. இந்த பூமி  வாழும் வரைக்கும் நீங்களும் வாழ்வீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்கள் பிரியும் 

  • கருத்துக்கள உறவுகள்

 

சென்னையில் ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தன் உடலில் பல இடங்களில் பலதரப்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டு உறக்கத்தில் இருந்தார் எஸ்பிபி. திடீரென்று முழிப்புத் தட்டியது. தன்னைப் பற்றியும் தற்போதைய நிலைமையைப் பற்றியும் உடனே தெளிவடைந்தார். அந்த சமயத்தில் அவரெதிரே மிகுந்த பிரகாசமான ஓர் உருவம் தோன்றியது. வந்திருப்பது அந்த இறைவனே என்பதை அறிந்தார். கை கூப்பினார். ஒரு சில நிமிடங்கள் அமைதியாகக் கரைந்தன.

“மகனே என்னிடம் ஏதாவது பேசத் தோன்றவில்லையா உனக்கு?”

இல்லை என்று தலையசைத்தார் எஸ்பிபி. 

“எனக்கு ஏன் இந்த நிலைமை என்று கேட்பாயோ?” 

இல்லை என்று மீண்டும் தலையசைத்தார். “எனக்கு மட்டும் இந்த அளவு குரல்வளம் தந்தாய். கோடிக்கணக்கான ரசிகர்களைத் தந்தாய். பலபேரின் வாழ்க்கையில் மாற்றத்தை உணரவைக்கும் திறமையைத் தந்தாய். இதெல்லாம் எனக்கு மட்டும் ஏன் என்று நான் கேட்டேனா? அதுபோலத்தான் இதையும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். ஏதோ என் வினைப்பயன் கழிந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறேன்”

இறைவன் முகத்தில் புன்னகை. “உன்னை ஏன் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது தெரியுமா?” 

“என் பாடல்கள். அதனை அவ்வளவு அருமையாக வடிவமைத்துக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் மிக்க நன்றி” 

“பாடல்கள் மட்டுமா?” 

வேறு என்ன என்பதுபோல் பார்த்தார் எஸ்பிபி.

“நீ உண்மையான மனிதத்துவம் அறிந்த மனிதன். எந்த ஒரு சிறிய ஆத்மாவையும் மதிப்பவன்” 

இரு கைகளையும் கூப்பினார் பாலு. 

“புகழின் உச்சியை அடைந்தாலும் அது உன் தலைக்கேறாது பார்த்துக்கொண்டாய். உன் நெருங்கிய நண்பன் உன்னைக் காயப்படுத்திய போதும், அடுத்த மேடையிலேயே அவனைப் போற்றியவன் நீ. பெரியவர்களை மதிப்பதிலும் இளையவர்களை ஊக்குவிப்பதிலும் உனக்கு நிகரில்லை” 

மீண்டும் இரு கைகளையும் கூப்பினார் பாலு. 

“அதனால்தான் எல்லோரும் தங்களில் உன்னைப் பார்க்கிறார்கள் உன்னில் தங்களைப் பார்க்கிறார்கள்” 

“போதும் பெருமானே. இதுவெல்லாம் நீ கொடுத்ததன்றோ?” 

“அப்படிச் சொல்லிவிட முடியாது, நீ வளர்த்துக் கொண்டது. பலபேர் பாலுவைப்போல் ஆகவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். எல்லோரும் உன்னைப்போல் பாடி விட முடியுமா என்ன? ஆனால் எல்லோரும் உன் மனித குணங்களைப் பேண முடியும்” 

“அந்த வகையில் என் ரசிகர்கள் மனதில் நான் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறேன் என்றால் எனக்கு மகிழ்ச்சியே. ஐயனே, இன்று நீங்கள் வந்திருக்கும் நோக்கம்?” 

“உன் முடிவைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை உனக்கு அளிக்கவே இங்கு வந்திருக்கிறேன்” 

“புரியவில்லையே…” 

“இப்பொழுது உன் உடலும் மனமும் எப்படி இருக்கின்றன?” 

“மனம் அதே போல் தான். உடல்தான் சுகமில்லை. இதோ இத்தனை கருவிகள் மூலமாக என் உயிர் ஓடிக்கொண்டிருகிறது. முன்னை விடத் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்” 

இறைவன் புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டிருந்தார். எஸ்பிபி தொடரட்டும் என்று காத்திருந்தார். 

“ஒரு சந்தேகம் கேட்கலாமா?” 

“கேட்பாயாக” 

“என் தொண்டையில் துளையிட்டு சுவாசக்கருவி பொருத்தி இருக்கிறார்கள். நாளை நான் குணமடைந்த பின் மீண்டும் முன்புபோல் பாட இயலுமா?” 

“சில மாதங்கள் கழித்து நன்றாகப்பேச முடியும். உன் நுரையீரல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. முன்புபோல் பாட இயலாது என்பதுதான் உண்மை” 

இதைக் கேட்டவுடன் பாலுவின் கண்களில் தாரைதாரையாக்க் கண்ணீர் வழிந்தது. அதை எதிர்பார்த்து இறைவன் அமைதி காத்து இருந்தான். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பாலு பின்னர் கேட்டார், “எனக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அது செய்து முடிந்தால் நான் பாட முடியுமா?” 

“அப்பொழுதும் சந்தேகமே. அந்த நுரையீரலைக் காப்பாற்றும் பொருட்டு நிறைய மருந்துகளை உட்கொள்ள வேண்டி வரும். சாதாரணமாக வெளியில் சென்றுவரக் கட்டுப்பாடுகள் இருக்கும்” 

“அப்படியானால் நான் முன்புபோல வானம்பாடியாக வாழ முடியாதா?”

“என்னை மன்னித்துகொள் மகனே” 

மீண்டும் பாலுவின் கண்களில் கண்ணீர். 

“முடிவு உன் கையில். இருக்க விருப்பமா, இறக்க விருப்பமா?”

“என்னால் பாட முடியாது என்றால் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. என்னை இப்பொழுதே அழைத்துக் கொள்” 

இறைவனின் முகத்தில் அதே புன்னகை. “நன்றாக மீண்டுமொருமுறை யோசித்துக் கொள்” 

“இதில் யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. நான் தயார்” 

மீண்டும் பாலுவின் கண்கள் கண்ணீர் சிந்தின. 

“இப்பொழுது எதை நினைத்து அழுகிறாய் மகனே?” 

“என்னுடைய கோடிக்கணக்கான ரசிகர்கள், நான் இறந்துவிட்டேன் என்று அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள். அந்த வகையில் நான் அவர்களுக்குத் துன்பம் தருகிறேன். அதை நினைத்தால்….” 

“நீ  திடீரென்று அகால மரணம் அடைந்திருந்தால் பலரும் அதிர்ச்சியில் உயிர் விட்டிருப்பார்கள். அவர்கள் மனதையும் தயார் படுத்தும் பொருட்டுத்தான் கடந்த 40 நாட்களாக நாடகம் நடந்தது. முடிவை யாரும் எளிதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை. ஆனால் ஓரளவு பக்குவப்பட்டு விட்டார்கள். உன் பூத உடல் தான் இல்லாதிருக்கும். இசையாக நீ நெஞ்சில் என்றும் நிறைந்து இருப்பாய். தமிழ் உள்ளவரை உன் புகழ் இருக்கும்”  

கண்ணீர் மல்க மீண்டும் கை கூப்பினார் பாலு. “பல்வேறு இடங்களில், பலதரப்பட்ட மனிதர்களின் முன் நான் பாடியிருக்கிறேன். இப்பொழுது உங்கள் முன் பாடும் வாய்ப்பை வேண்டுகிறேன் இறைவா”

“ஆரம்பிக்கலாம் மகனே உன் இசையை”

கண்கள் மூடி மனம் உருகிப் பாடத் தொடங்கியது அந்தக் குயில். அதை அணைத்தவாறு, அதனை அழைத்துகொண்டு அதன் இசையில் மயங்கியவாறே பயணிக்க ஆரம்பித்தான் இறைவன். சன்னமாக வெகுநேரம் அந்தப் பாட்டு கேட்டுக்கொண்டேயிருந்தது. 

‘இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…………

Copied from FB.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகன்காரனை நினைக்கத்தான் பாவமாய் கிடக்கு. பெடி ஏற்கனவே தண்ணிச்சாமி. தகப்பன் தான் முடிஞ்ச அளவு கட்டுப்படுத்தி மரியாதையாய் வைச்சிருந்தார்.தகப்பன்ரை மரியாதைக்காகவும் பெடியன்ரை சேட்டைகளை கண்டும் காணாமலும் இருந்திச்சினம். இனியும் அது நடக்குமோ தெரியேல்லை.
தகப்பன் சேர்த்து வைச்ச புகழையும் சொத்தையும் அழிக்காமல் இருந்தால் சந்தோசம்.
ஏனெண்டால் உலக பிரபலங்களின்ரை சந்ததி வரலாறுகள் ஒரு மாதிரித்தான் முடிஞ்சிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 அவன்தான் மனிதன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.