Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களின் இடப்பெயர்வுத் தோழன் தட்டிவான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தட்டிவான் அதெல்லாம் ஒரு கனாக்காலம் தான்.

கலியாண வீட்களுக்கும் வாடகைக்கு தட்டிவானை பிடிப்பினம்.....எல்லாம் ஒரு சந்தோச நினைவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் அரிதாக ஓடுது. ஒன்று வேண்ட வேணும் எண்டு ஆசை. பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தட்டிவானை,  மிகவும் நன்றாக புனரமைத்து.. பராமரித்து வருகின்றார்கள்.

அதுகும்... சில நிகழ்வுகளுக்கு, இலவசமாக ஓடவும் தயாராக இருக்கின்றார்கள் எனும் போது... இந்தக் காலத்தில் இப்படியும் உயர்ந்த மனிதர்கள் உள்ளார்களா? என ஆச்சரியமாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்பவும் அரிதாக ஓடுது. ஒன்று வேண்ட வேணும் எண்டு ஆசை. பாப்பம்.

Simon Cowell No GIF by Got Talent Global - Find & Share on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தட்டிவான் அனேகமாக "செவி" (chevy) எனப்படும் Chevrolet. அமெரிக்க GM மோட்டார் கம்பனியின் தயாரிப்பு. எப்படித் தான் வருடக்கணக்காக ஓடுகிறதோ தெரியாது (இயந்திரம் முற்றாக மறுபிறப்பெடுத்திருக்கும் என நினைக்கிறேன்). அமெரிக்காவில் தற்போது பாவனையில்  இருக்கும் செவி வாகனங்கள் 100,000 மைல்களை நெருங்கும் போது அனேகமாக timing belt இல் இருந்து எல்லாம் மாற்ற வேண்டும், மாற்றா விட்டால் நடுறோட்டில் நின்று விடும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

அதுதான் நம்மூர் படிக்காத மேதைகளின் கைவண்ணம்

படித்தவர்களால் கூட முடியாது இவர்கள் திருத்துவதைபோல்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

அதுதான் நம்மூர் படிக்காத மேதைகளின் கைவண்ணம்

படித்தவர்களால் கூட முடியாது இவர்கள் திருத்துவதைபோல்

இது உண்மை. அது  தேவை நிமித்தம் தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு திறமை. சும்மா விளையாட்டு பைக் போல இருக்கும்  C-90 என்ற மோட்டார் பைக்கை, இரட்டை shock absorbers பொருத்தி இரண்டு பயணிகளையும் மூடைகளையும் காவிச் செல்லப் பயன்படுத்தியதும் மறக்க இயலாதது!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

இந்த தட்டிவான் அனேகமாக "செவி" (chevy) எனப்படும் Chevrolet. அமெரிக்க GM மோட்டார் கம்பனியின் தயாரிப்பு. எப்படித் தான் வருடக்கணக்காக ஓடுகிறதோ தெரியாது (இயந்திரம் முற்றாக மறுபிறப்பெடுத்திருக்கும் என நினைக்கிறேன்). அமெரிக்காவில் தற்போது பாவனையில்  இருக்கும் செவி வாகனங்கள் 100,000 மைல்களை நெருங்கும் போது அனேகமாக timing belt இல் இருந்து எல்லாம் மாற்ற வேண்டும், மாற்றா விட்டால் நடுறோட்டில் நின்று விடும்!

அநேகமா எஞ்சின் டாடா அல்லது அசோக் லேலண்ட் ஆக மாத்தி இருப்பார்கள்.

கப்பி போட்டு எஞ்சினை தூக்கி, மெளண்டுகளை எல்லாம் வெட்டி அல்லது வெல்டிங் செய்து உருமாற்றி பின் மற்ற என்ஜினை இறக்கி பூட்டுவார்கள்.

வாகனத்தில் பேட்ஜ் மட்டும்தான் செவி மிச்சம் எல்லாம் சாம்பார்தான்😂.

இதை நினைக்க ஒரு பக்கம் பெருமை, வியப்பாக இருந்தாலும். செசியை கூட சிலசமயம் ரெண்டு துண்டை வெட்டி ஒட்டி ஓடுகிறார்கள். ஒரு முடக்கில வேகமா திரும்பினா, வாலொரு பக்கம் போக தலை ஒரு பக்கம் போகும்.

6 minutes ago, Justin said:

இது உண்மை. அது  தேவை நிமித்தம் தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு திறமை. சும்மா விளையாட்டு பைக் போல இருக்கும்  C-90 என்ற மோட்டார் பைக்கை, இரட்டை shock absorbers பொருத்தி இரண்டு பயணிகளையும் மூடைகளையும் காவிச் செல்லப் பயன்படுத்தியதும் மறக்க இயலாதது!

Necessity is the mother of all inventions. ப சொட்டு மணெண்ணை  விளக்கில் படித்து, சைக்கிள் டைனமோவில் ரேடியோவை கோத்து பாட்டும் கேட்ட ஆக்கள் அல்லவா😂 

30 minutes ago, Nathamuni said:

Simon Cowell No GIF by Got Talent Global - Find & Share on GIPHY

உங்கள கட்டுநாயாக்கால வந்து ஏத்துறன் பாஸ், டோண்ட் யு வொறி🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உங்கள கட்டுநாயாக்கால வந்து ஏத்துறன் பாஸ், டோண்ட் யு வொறி🤣

நல்ல நண்பனை நாசமாக்க பழைய வாகனம் ஒன்றை வாங்கிக் கொடு என்று ஊரிலை சொல்லுவினம்.....🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நல்ல நண்பனை நாசமாக்க பழைய வாகனம் ஒன்றை வாங்கிக் கொடு என்று ஊரிலை சொல்லுவினம்.....🤦‍♂️

🤣 சரியான வார்த்தை.

பிகு: ஏத்துறன் எண்டு சொன்னது வாகனத்தில, வாகனத்தால அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

1980க்கு முன்பு Made In USA  வேறு ரகம் அது போர்ட் ஹென்றின் (Henry Ford) சிந்தனையை மூலமாக கொண்டது அதன் பின்புதான் எங்கும் பணம் எதிலும் பணம் எவ்வளவு லாபம் என்று 
குவாலிட்டியை குறைத்துக்கொண்டார்கள். டொயோட்டா குவாலிட்டி (Toyota Quality) வரைமுறையை எழுதியவர் அமெரிக்கர்தான் அவர் ஏறி இறங்காத கொம்பனிகள் இல்லை எல்லோரும் லாபத்தை பார்த்து 
அவரை கலைத்துவிட்டார்கள் அவர் டோயட்டாவுக்கு அரைமனத்துடன்தான் சென்றார் அனால் அவர்ளுக்கு அது பிடித்துவிட்டது ..இன்று அமெரிக்காவில் அதிகமாக விற்கப்படும் கார் டோயோட்டா கம்மீறி (Toyota Camry) 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பெருமாள்.
எமது பாதையான யாழ்_அச்சுவேலி - பருத்தித்துறை நிறைய தட்டிவானுகள் ஓடியது.

  • கருத்துக்கள உறவுகள்

Share_auto.jpg  201902070620557101_Share-auto-fares-go-up-twice-in-2-months_SECVPF.gif

உங்கள் தட்டிவான், தமிழகத்தில் "பங்கு ஆட்டோ" (உபயம் வடிவேலு காமெடி - Share Auto) வாக இன்றளவும் ஓடுது..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

Share_auto.jpg  201902070620557101_Share-auto-fares-go-up-twice-in-2-months_SECVPF.gif

உங்கள் தட்டிவான், தமிழகத்தில் "பங்கு ஆட்டோ" (உபயம் வடிவேலு காமெடி - Share Auto) வாக இன்றளவும் ஓடுது..

வன்னியர்,

ஷேர் ஆட்டோ தமிழகத்தில் எப்போ ஓடத் தொடங்கியது ? 98க்கு முதல் நான் வந்த போது இது இருந்த நியாபகம் இல்லை. 

எமது ஊரில் தட்டிவான் வழக்கொழிந்து போக தமிழக்கதில் ஷேர் ஆட்டோ புழக்கத்துக்கு வந்ததோ?

பிகு: ஷேர் ஆட்டோவை, (ஒன்றாய்) சேர் ஆட்டோ எனவும் எழுதலாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

வன்னியர்,

ஷேர் ஆட்டோ தமிழகத்தில் எப்போ ஓடத் தொடங்கியது ? 98க்கு முதல் நான் வந்த போது இது இருந்த நியாபகம் இல்லை. 

எமது ஊரில் தட்டிவான் வழக்கொழிந்து போக தமிழக்கதில் ஷேர் ஆட்டோ புழக்கத்துக்கு வந்ததோ?

பிகு: ஷேர் ஆட்டோவை, (ஒன்றாய்) சேர் ஆட்டோ எனவும் எழுதலாம் 🤣.

TY05AUTO

சுமார் பத்து வருசமா தான் இந்த பங்கு ஆட்டோ ஓடுது..!

ஆட்டோவில் எழுதியிருக்கும் வரிகள் "ஷேர் ஆட்டோ"..:)

ஒருமுறை பயணித்துள்ளேன். புது அனுபவமாக இருந்தது. தொடர்ந்து இதில் பயணித்தால் "கொரானா" இலவசமாக உடனே கிட்டும், அவ்வளவு நெருக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ராசவன்னியன் said:

TY05AUTO

சுமார் பத்து வருசமா தான் இந்த பங்கு ஆட்டோ ஓடுது..!

ஆட்டோவில் எழுதியிருக்கும் வரிகள் "ஷேர் ஆட்டோ"..:)

ஒருமுறை பயணித்துள்ளேன். புது அனுபவமாக இருந்தது. தொடர்ந்து இதில் பயணித்தால் "கொரானா" இலவசமாக உடனே கிட்டும், அவ்வளவு நெருக்கம்.

தகவலுக்கு நன்றி.

ஏலவே ஆட்டோ ஆட்டு என்று ஆட்டுவதால்தான் ஆட்டோ என்ற பெயரே வந்ததாம்🤣

இதில் நெருக்கமாய் வேறு உட்கார்ந்தால்- பல காதல் வைரசுகள் உருவாக கூடிய இடம் போல தெரிகிறதே🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.