Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம்

Featured Replies

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம்

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் யாவும் நாளை முதல் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

Closed-300x163.jpg
இதற்கமைய, பரந்தன் பூநகரி வீதியூடாக நாளை மூன்றாம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும், பரந்தனிலிருந்து 12 ஆவது கிலோ மீற்றர் பகுதியில் அமைந்துள்ள இரும்புப் பாலம் ஒன்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்த வேலை காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பொது மக்கள் மாற்று பாதைகளைப் பயன்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் ஆரம்பமாகும் திருத்தப்பணிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறும் எனவும் இக்காலப்பகுதியில் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட எந்தவொரு வாகனமும் குறித்த வீதியைப் பயன்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/76254

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்துப்படி உலகிலேயே மிகவும் அவசரமாகவும் கேவலமாகவும் எந்தவித எதிர்காலத் திட்டமிடலும் இல்லாது வடிவமைக்கப்பட்ட பாலம் பூநகரி சங்குப்பிட்டிப்பாலமாகத்தான் இருக்கவேண்டும். சின்னக்குழந்தைகள்கூட தென்னை ஈர்க்கிள் குச்சியிலயோ அல்லது பனம்மட்டையிலையோ விளையாட்டுக்காகவாவது அழகான பாலம் வடிவமைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

அப்படியா? ஒவ்வொரு முறை போகும் போதும் ஏதாவது தடை வந்து இந்த பாலத்தால் போக முடியாது போய்விடும்.

நான் கடைசியா பயணித்த போது பாதை இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Elugnajiru said:

எனது கருத்துப்படி உலகிலேயே மிகவும் அவசரமாகவும் கேவலமாகவும் எந்தவித எதிர்காலத் திட்டமிடலும் இல்லாது வடிவமைக்கப்பட்ட பாலம் பூநகரி சங்குப்பிட்டிப்பாலமாகத்தான் இருக்கவேண்டும். சின்னக்குழந்தைகள்கூட தென்னை ஈர்க்கிள் குச்சியிலயோ அல்லது பனம்மட்டையிலையோ விளையாட்டுக்காகவாவது அழகான பாலம் வடிவமைக்கும்.

அப்படியா? சில வருடங்களுக்கு முன் மார்கழி மாதத்தில் பாசிக்குடாவில் இருந்து இந்தவழியாக யாழ்ப்பாணம் போனபோது, வழி  நெடுகிலும் பசுமை, நிறையகுளங்கள், வயல்கள்,குரங்குகள் என்று  பார்த்து கடைசியில் பூநகரி சங்குப்பிட்டி பாலத்தில் கொஞ்ச நேரம் இளைப்பாறி பயணத்தை தொடர்ந்தோம். மிகவும் அழகாக இருந்ததே ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Elugnajiru said:

10 hours ago, செண்பகம் said:

இதற்கமைய, பரந்தன் பூநகரி வீதியூடாக நாளை மூன்றாம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும், பரந்தனிலிருந்து 12 ஆவது கிலோ மீற்றர் பகுதியில் அமைந்துள்ள இரும்புப் பாலம் ஒன்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்த வேலை காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியின்படி பரந்தன் பூநகரி B357 வீதி இடையிலான பாலமே புனரமைக்கப்படுகிறது. பூநகரி சங்குப்பிட்டி A32 வீதி இடையிலான மேம்பாலம் அல்ல.

Edited by ஏராளன்
add some information

  • கருத்துக்கள உறவுகள்

பல தடவைகள் மடுவுக்கும், மன்னாருக்கும், திருகேதீஸ்வரத்துக்கும் இந்த பாதை வழியாக போயுள்ளேன்.

முன்பு பாலத்தின் (causeway) 90% கட்டுமானம் முடிந்த நிலையில் இடையில் 10% மட்டும் முடியாமல் ஒரு பாதை (ferry) மூலம் கடக்கும் முறை இருந்தது. Causewayயை கட்டி முடித்தால் மீன்பிடி படகுகள் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் கொண்டு வர முடியாது என்பதால் மீனவர்கள் எதிர்த்து இந்த பாலம் முழுமை பெறவில்லை என கேள்விபட்டேன். 

பின் 2010 இல் இந்த பாலம் ஒட்டக திமில் போல ஒரு உயர்ந்த வடிவில் கட்ட பட்டுள்ளதை படத்தில் பார்த்த போது, படகுகள் கீழால் போக இப்படி கட்டிள்ளார்கள் என்பது புரிந்தது.

ஆனையிறவு பாதை ஜூன் 1990 சண்டையோடு மூடப்பட இந்த வழியே குடாநாட்டுக்கான பிரதான வழங்கல் பாதையாய் இருந்தது.

1991 பெப்ரவரியில் பயணித்த போது. புலிகள் 1ம் ஆகாயா தரை கடல் வழி சமருக்கு தயாராகிய காலம் ( அப்போது எனக்கு தெரியாது). நாங்கள் சென்ற திசைக்கு எதிர் திசையில் சாரை சாரையா வரிபுலி உடையில் சென்றார்கள். 

அடுத்த சில நாட்களில் பொம்மர் அடித்து பாதை சிதைக்கபட, கொம்படி பாதையும், பின்னர் கிளாலி-நல்லூர் படகு போக்குவரத்தும் ஆரம்பமாகியது.

3 minutes ago, ஏராளன் said:

செய்தியின்படி பரந்தன் பூநகரி இடையிலான பாலமே புனரமைக்கப்படுகிறது. பூநகரி சங்குப்பிட்டி இடையிலான மேம்பாலம் அல்ல.

ஓம் அப்படியாயின் மன்னார்-கேரதீவு வீதியால் போகலாம்.

பிகு: இந்த கொரோனோ காலத்தில் நாம் எல்லாம் எதோ இந்த பாதையால் போகபோவது போல் ஏன் அவதி படுகிறோம்🤣. இதுதான் தாய் நாட்டின் ஈர்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nilmini said:

அப்படியா? சில வருடங்களுக்கு முன் மார்கழி மாதத்தில் பாசிக்குடாவில் இருந்து இந்தவழியாக யாழ்ப்பாணம் போனபோது, வழி  நெடுகிலும் பசுமை, நிறையகுளங்கள், வயல்கள்,குரங்குகள் என்று  பார்த்து கடைசியில் பூநகரி சங்குப்பிட்டி பாலத்தில் கொஞ்ச நேரம் இளைப்பாறி பயணத்தை தொடர்ந்தோம். மிகவும் அழகாக இருந்ததே ?

சாதாரணமாகவே ஒரு பாலம் கட்டப்படவேண்டுமாகவிருந்தால் நிறைய விடையங்களைக் கவனிப்ப்பார்கள் என நான் இணையத்தளங்களில் பார்த்திருக்கிறேன் 

அதில் அப்பிரதேசத்தின் தன்மை மற்றும் வரலாறு கலாச்சாரம் ஆகியனவும் அடக்கம். சிங்களம் வடபகுதியில் அதையெல்லாம் கணக்கில எடுக்குமா அதைவிடுங்கோ.

ஒரு எடுகோளாகச் சொல்லுகிறன் 
அதிக பாரத்துடன், அதிகமான போக்குவரத்து இருக்கும் நேரத்தில் இந்தக் குத்தன நிக்கிற பாலத்தில ஒரு வாகனம் வருகுது என வைத்துக்கொள்ளுங்கள் (எங்கட ஊரில இருக்கிற வாகனங்கள் அது பராமரிக்கப்படும் வித எல்லாத்தையும் கவனத்தில்கொள்ளவும்) இருந்தாப்போல பிறேக் சிஸ்டத்தில ஏதாவது கோளாறு அல்லது பிரேக் குளாய்களில் ஒன்று ஓட்டையாகி பிரேக் ஒயில் கசிஞ்சிட்டுது அல்லது கட்டுப்பாடுக்குக் கொண்டுவராதபடி ஒரு பிரச்சனை இந்த நெட்டுக்குத்தா நிக்கிற பாலத்தில வாகனம் நிற்குமா அல்லது வடக்கால போகுமா கிழக்கால போகுமா! இல்லைக் குப்புறக் கடலுக்க விழுமா?

சரி விடையத்துக்கு வருவோம் 

யாழ் பகுதியிலிருந்து பாலம் ஆரம்பிக்கும் பகுது நாவற்குழி தனங்கிளப்பை அண்டிய பிரதேசம் மற்றது பூநகரி சங்குப்பிட்டிப் பகுதி இரண்டுபகுதியும் சன்ப்பெருக்கம் இல்லாத பகுதியாகும் அப்ப என்ன செய்திருக்கவேண்டும் 
இப்ப பாலம் ஆரம்பிக்கும் முடியும் இடத்திலிருந்து ஒருசில கிலோமீற்றர் தூரத்திலிருந்து பாலத்தின் ஏற்றத்தினை இறக்கத்தினை கட்ட ஆரம்பித்திருக்கவேண்டும் தவிர பாலத்தின் ஆரம்ப, முடிவு வீதிகள் ஒரு வளைவான வடிவில் அமையப்பெறுமாறு வடிவமைத்திருக்கவேண்டும் சும்மா தூண்களில் நெட்டுக்குத்தாகப் பாலம் அமைக்காது அந்தப்பகுதியின் "பிரதேச அமைப்பில்"
(landscape ) ஒரு அழகைக்கொண்டுவரவேண்டும் வெட்டினேன் கட்டினேன் என எதுவும் இருக்கக்கூடாது. 

காரணம் இப்பாலம் காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கவேண்டிய பாலம் அதில் அழகையும் எமது தொன்மையையும் கலையாம்சத்தையும் எதிர்பார்ப்பதில் தவறில்லையே

  • கருத்துக்கள உறவுகள்

பாலம் அமைக்க சாய்வு (Slope table)மேடையை படிப்படியாக அதிகரித்து செல்வதுதான் கனரக ஊர்திகள் பாதுகாப்பாக அதன் மேல் பயணம் செய்ய ஏதுவாகும். சாலையின் அகலத்தையும் வருங்காலத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு அமைத்தல் நல்லது.

நான் பார்த்தவகையில், பாம்பன் பாலமும் சரி, பண்ணை வழித்தடமும் சரி, சங்குப்பிட்டி பாலமும் சரி.. மிகக் குறுகலாக, அதிக சாய்வுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளதென எண்ணுகிறேன். இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகக் குறைவாகவே இருக்கலாம்.

tour-lanka-jaffna-sangupiddy.jpg

டிஸ்கி:

இது "தமிழர் களம்" என்பதால் கருத்து மட்டுமே..! "உங்கள் நாட்டில் முதலில் கக்கூஸ் கட்ட பாருங்கள்" என்கிற வழக்கமான 'லொள்ளு' வேண்டாம். 😜

Edited by ராசவன்னியன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, ராசவன்னியன் said:

இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகக் குறைவாகவே இருக்கலாம்.

பாலம் கட்ட ஒதுக்கின நிதியை பிரிச்சு எடுக்க வேண்டிய ஆக்கள் பிரிச்சு எடுத்தாப்பிறகு மிச்சம் மீதியை வைச்சு கட்டி முடிச்சது tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

பாலம் கட்ட ஒதுக்கின நிதியை பிரிச்சு எடுக்க வேண்டிய ஆக்கள் பிரிச்சு எடுத்தாப்பிறகு மிச்சம் மீதியை வைச்சு கட்டி முடிச்சது tw_glasses:

தமிழ் நாட்டில்தான் அனைத்திலும் ஊழல், வேலையில் தரமின்மை, அக்கறையின்மை என்றால் இலங்கையிலுமா அப்படி..? 🤔

7 minutes ago, ராசவன்னியன் said:

தமிழ் நாட்டில்தான் அனைத்திலும் ஊழல், வேலையில் தரமின்மை, அக்கறையின்மை என்றால் இலங்கையிலுமா அப்படி..? 🤔

 பொது துறைகளில் ஊழல் என்பது தெற்காசிய நாடுகள் எங்கும் பரவி கிடக்கும் ஒரு வியாதி. தமிழ்நாடும் தெற்காசிய நாடுகளில் இருப்பதால் அங்கும் ஊழல் இருக்கிறது. தமிழ் நாட்டை  மட்டும் குற்றம் சாட்ட இலங்கையர்களுக்கு அருகதை இல்லை என்பதே உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலத்தால பயணம் செய்தனான், மேல நடுப்பகுதியில் நின்று படங்கள் நண்பர்கள் எடுத்தவை. வாகனங்கள் பாலத்தில் ஏறி இறங்கும் வரை பாலம் சிறிய ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும்! அது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

பாலம் அமைக்க சாய்வு (Slope table)மேடையை படிப்படியாக அதிகரித்து செல்வதுதான் கனரக ஊர்திகள் பாதுகாப்பாக அதன் மேல் பயணம் செய்ய ஏதுவாகும். சாலையின் அகலத்தையும் வருங்காலத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு அமைத்தல் நல்லது.

நான் பார்த்தவகையில், பாம்பன் பாலமும் சரி, பண்ணை வழித்தடமும் சரி, சங்குப்பிட்டி பாலமும் சரி.. மிகக் குறுகலாக, அதிக சாய்வுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளதென எண்ணுகிறேன். இந்த திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகக் குறைவாகவே இருக்கலாம்.

tour-lanka-jaffna-sangupiddy.jpg

டிஸ்கி:

இது "தமிழர் களம்" என்பதால் கருத்து மட்டுமே..! "உங்கள் நாட்டில் முதலில் கக்கூஸ் கட்ட பாருங்கள்" என்கிற வழக்கமான 'லொள்ளு' வேண்டாம். 😜

இரா வ,

இப்பாலம் தொடர்பாக கருத்திருபவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் தற்போதுள்ள பாலத்தின் நிலை தெரியாது ஊகத்தின்/விருப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்திடுகின்றனர் என்பது என் கருத்து. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இரா வ,

இப்பாலம் தொடர்பாக கருத்திருபவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் தற்போதுள்ள பாலத்தின் நிலை தெரியாது ஊகத்தின்/விருப்பின் அடிப்படையில் மட்டுமே கருத்திடுகின்றனர் என்பது என் கருத்து. 

☹️

இந்த பாலம் பற்றி என் நினைவில் நிற்பவை

1. 2010 இல் அபிவிருத்தி என காட்ட அவசர அவசரமாக கட்டபட்டது

2. இந்திய உதவியில் கட்டபட்டது(?)

3. படத்தை பார்க்க, மீன்பிடி படகும் போகவேண்டும், பாலமும் கட்ட வேண்டும் என்ற நோக்கில் கட்டி உள்ளார்கள் எனப் படுகிறது.

4. ஆனால் எழுஞாயிறு சொல்வதுபோல் causeway இரு பக்கமும் முடியும் இடத்தில்  இருந்து ஆரம்பிக்காமல் பாலத்தை கொஞ்சம் இரு பக்கமும் முதலில் இருந்து ஆரம்பித்து இருந்தால் எப்படி செங்குத்தாக எழும்பியிராது என்றே படுகிறது.

உங்கள் அபிப்பிராயம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கோச்சான்,

உங்களுக்கு இந்தப் பாலத்தின் கேந்திர முக்கியத்துவம் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். கடந்த காலத்தில் இந்தப் பாதை இருந்த நிலையும் தெரிந்திருக்கும். இந்தப் பாதையின் இரு முனைகளை இணைப்பதற்கு முதலில் 40 HP இயந்திரம் பூட்டப்பட்ட Ferry /Barge பாவிக்கப்பட்டு வந்தது. பின்னர் போராளிகளால் அந்த இயந்திரம் களவாடப்பட்டது........... அப்போதிருந்தே இந்தப் பாதைக்கான முக்கியத்துவம் மிக மிகக் குறைத்தே எம் மக்களால் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அண்மைக் காலத்தில் வட மாகாணத்தின் மேற்குக் கரையின் முக்கியத்துவம் சிங்களவர்களாலும், சீனர்களாலும் உணரப்பட்டு அந்த இடத்தில் தற்போது திட்டமிட்ட வகையில் காணிகள் தென்பகுதித் தனியாருக்கும் தனியார் நிறுவனங்களுக்கும், சீனர்களுக்கும் பெரும் தொகையாக அபகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டு (ஆம், அபகரிப்பு) வருகிறது. நான் ஏற்கனவே பலதடை பல்வேறு திரிகளில் இது தொடர்பாக குறிப்பிட்டுள்ளேன்.

1) இந்தப் பாதையின் முக்கியத்துவம் போர்க்காலங்களில் போராளிகளால் உணரப்பட்ட அளவு மக்களால் உணரப்படவில்லை. 
2) தற்போது எம் மக்களால் அதன் முக்கியத்துவம் (😏) உணரப்படுகிறது. அதற்குக் காரணம் , பந்தன் சந்தியில் இருந்து பூனகரியூடாக நாவற்குழி வழியான பாதையில் இராணுவ, காவல்துறையினரின் பரிசோதனைகள், வேகக் கட்டுப்பாட்டு சோதனைகள் மிகவும் குறைவு என்பதே 😏மற்றும்படி மேலே கருத்திட்ட அனேகரின் கரிசனையும் உண்மையானது அல்ல😫

3) இந்தப் பாதையும் பாலமும் சீனர்களின் நிதி, ஆளணி, தரக் கட்டுப்பட்டின் கீழே செய்யப்பட்டது. 

4) வடபகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலை (கொழும்பு- கட்டுநாயக்க விமான நிலையம்-யாழ்ப்பாணம்-காங்கேயன்துறை) இதனை ஒட்டியே அமையவிருக்கிறது.

5) பூநகரியின் வடமேற்காக மிகப் பெரிய வைத்தியசாலை சீனாவால் அமைப்பதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டு அதனை இந்தியா தடுத்து நிறுத்துவதற்கு பகீரதப்பிரயத்தனம் செய்கிறது{வைக்கோற் பட்டடை(?) நாய்}

6) பூநகரியின் வட மேற்கில் காற்றாலைகள் அமைப்பதற்கு தென்பகுதித் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுவிட்டன. 

7) பூநகரியில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு Mitsubishi / Mitsui (?) திட்ட வரைபை பூநகரி பிரதேச சபையிடம் சமர்ப்பித்துள்ளது(China VS Japan)

8 ) ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தென்பகுதிச் சிங்களவரால் மிகக் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்டு மர முந்திரிகை, தென்னைச் செய்கையில் ஈடுபடுகின்றனர் 🤥

9) பூநகரிப் பிரதேச சபையின் 75% வருமானம் இப் பிரதேச சபியின் ஆளுகைக்குட்பட்ட இடங்களுக்கு நன்னீர் வினியோகத்திற்கே செலவாகிறது 🤥

10) தலைமுனை என அழைக்கப்படும் அரியாலை கிழக்கின் முனையில்  (பூநகரி/குடாக் கடலின் உள்ளே தென்பகுதியை நோக்கி நீண்டுள்ள முனை) சீனர்களால் நடாத்தப்படும் கடலட்டை வளர்ப்பு , கடலட்டைக் குஞ்சு வளர்ப்பு(Hatchery) பண்ணை அமையப்பெற்று, அதனை அண்டிய பகுதிகளில் காலா காலமாக கடற்றொழிலிலீடுபட்டுவந்த மீனவர்களின் மீன்பிடி தடுக்கப்ப்ட்டுள்ளது ☹️

இத்தனை மிகவும் முக்கியமான விடயங்கள் அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது றோட்டுச் சரியில்லை,அடிக்கடி பாலம் பழுதாகிறது, அந்தக் காலத்திலிருந்தே இப்படித்தான் இந்த றோட்டுக் கிடக்கு, றோட்டுப்போடுறதில கொமிசன் அடிச்சுவிட்டானுகள் என்று கூவுவது கொஞ்சம் ஓவறாயில்லை

😏😏

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kapithan said:

பெயருக்கேற்ற பதிவு கற்பிதன்.... எவ்வளவு விபர சேகரிப்பு. அதையொட்டிய எத்துணை நுண்ணிய பார்வை. 

எனக்கும் இந்த பாதை பற்றி மேலோட்டமாகத்தான் தெரியும். யாழ் கடநீரேரியின் வாயில், நாகதேவன் துறைக்கருகில் இருப்பதால் வரும் கேந்திர முக்கியத்துவம் தவிர அதிக விடயங்கள் தெரியாது. 

ஆனால் இதன் பின்னால் இடியப்ப நூல் போல இத்தனை திரைமறைவு திட்டங்கள். 

வடக்கு பெருஞ்சாலை இதனூடு போகும் காலத்தில் இரு மருங்கும் சீனர்களும் சிங்களவர்களும் இருப்பார்கள் போலுள்ளது.

இதே போல் ஒரு வீதி திருமலையில் இருந்து கடற்கரை வழியே முல்லைதீவு வரை அமைய போகிறதாம்.

மாகாவலியும் இரணை மடு வரைக்கும் வர, தமிழர்கள் குடாநாட்டுக்குள்ளும், எழுவான்கரையிலும் “பெட்டி அடிக்கப்படும்” நாள் தொலைவில் இல்லை என்றே படுகிறது.☹️

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்பாலம்பற்றிக் குறிப்பிட்டது அதனது வடிவமைக்குத்தான் அதைவிடுத்து கேந்திர முக்கியம் அது இது என்பதுபற்றியது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Elugnajiru said:

நான் இப்பாலம்பற்றிக் குறிப்பிட்டது அதனது வடிவமைக்குத்தான் அதைவிடுத்து கேந்திர முக்கியம் அது இது என்பதுபற்றியது இல்லை.

இளஞ் சூரியன், கோவிக்காதீர்கள்,

எவரையும் குறை சொலும் நோக்கமெனக்கில்லை. ஆனால் இத்தனை விடயங்களும் நடைபெறும்போது அதற்குரிய முக்கியத்துவம் எம்மால் வழங்கப்படவில்லை என்பதுதான் என் கவலை. 👍

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வடக்கு பெருஞ்சாலை இதனூடு போகும் காலத்தில் இரு மருங்கும் சீனர்களும் சிங்களவர்களும் இருப்பார்கள் போலுள்ளது.

தமிழர்கள் எல்லாரும் ஏதோ ஒரு வெளிநாட்டிலிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

இளஞ் சூரியன், கோவிக்காதீர்கள்,

எவரையும் குறை சொலும் நோக்கமெனக்கில்லை. ஆனால் இத்தனை விடயங்களும் நடைபெறும்போது அதற்குரிய முக்கியத்துவம் எம்மால் வழங்கப்படவில்லை என்பதுதான் என் கவலை. 👍

உங்கள் கருத்தில் எவ்வித தவறும் இல்லை குறை நினைக்க இப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எமக்கு உணர்த்தியுள்ளீர்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2020 at 03:15, Elugnajiru said:

காரணம் இப்பாலம் காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கவேண்டிய பாலம் அதில் அழகையும் எமது தொன்மையையும் கலையாம்சத்தையும் எதிர்பார்ப்பதில் தவறில்லையே

வணக்கம்  Elugnajiru,

நீண்ட ஒரு விளக்கத்துக்கு நன்றி . இன்ஜினியரிங் எனது துறை இல்லாததால் என் போன்றவர்களுக்கு இதெல்லாம் விளங்காது தானே. ஆனால் உங்கள் எல்லோருடைய பதிவுகளை  வாசித்து விடயங்களையும் அறிந்து கொண்டேன். " அதில் அப்பிரதேசத்தின் தன்மை மற்றும் வரலாறு கலாச்சாரம் ஆகியனவும் அடக்கம்." என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ஆச்சரியமாக இருக்கு. எமது வரலாறு, கலாச்சாரம் இவற்றையெல்லாம் ஆராய்ந்து செயல்படும் நாடா எமது நாடு? அவற்றையெல்லாம் எதிர்பாக்காமல் வாழ கற்றுக்கொண்டே எவ்வளவோ காலமாகி விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2020 at 02:51, goshan_che said:

ஆனையிறவு பாதை ஜூன் 1990 சண்டையோடு மூடப்பட இந்த வழியே குடாநாட்டுக்கான பிரதான வழங்கல் பாதையாய் இருந்தது.

1991 பெப்ரவரியில் பயணித்த போது. புலிகள் 1ம் ஆகாயா தரை கடல் வழி சமருக்கு தயாராகிய காலம் ( அப்போது எனக்கு தெரியாது). நாங்கள் சென்ற திசைக்கு எதிர் திசையில் சாரை சாரையா வரிபுலி உடையில் சென்றார்கள். 

இந்தப் பாதையின் பின்புலத்தில் மாவீரர்களின் தியாகங்களையும் சொல்லிச் செல்கிறீர்கள். மிக்க நன்றி

22 hours ago, goshan_che said:

நாகதேவன் துறைக்கருகில் இருப்பதால் வரும் கேந்திர முக்கியத்துவம்

பூநகரி - நாகதேவன் துறை சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் கூட்டுப்படைமுகாம்  தமிழீழ விடுதலைப் புலிகளால் 1993 இல் கைப்பற்றப்பட்டது. சுமார் 400 போராளிகள் வரை களப்பலியாகி, பல ஆயுதங்களும் ராணுவத் தாங்கியொன்றும் புலிகளால் இத்தாக்குதலில் கைப்பற்றப்பட்டது. பல ஒப்பற்ற தியாகங்களூடு விடுவிக்கப்பட்ட எமது தாயகம் மீண்டும் எதிரியின் கைகளுக்குள் வீழ்ந்து இன்று பிராந்திய வல்லாதிக்கப் பேய்களின் பேராசையால் தமிழர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்டு ஏப்பம் விடப்படுவது வேதனை.

  • கருத்துக்கள உறவுகள்

பாதையை அதிகம் மக்கள் பாவிக்கிறார்கள் பயனடைகிறார்கள்  தற்போது பல சுற்றிவரச்செல்லும் பாதைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் (புதுசு) மண்முனைப்பாலம் என்பன கட்டமுடியாது சதுப்பு என்றார்கள் சீனர்கள் இலகுவாக கட்டி முடித்தார்கள் மட்டக்களப்பு மேற்கை இலகுவாக இணைத்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில்  ஒரு சுற்றுவட்ட பாதையை இலகுவாக்கி உள்ளது மண் முனைப்பாலம்

நம்ம ஆட் கள் குறை கண்டுகொண்டே இருப்பார்கள் 

manmunai

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரஞ்சித் said:

இந்தப் பாதையின் பின்புலத்தில் மாவீரர்களின் தியாகங்களையும் சொல்லிச் செல்கிறீர்கள். மிக்க நன்றி

நன்றி ரகு.

இலங்கையின் பிற பகுதிகளில் அஸ்டிரா மாஜரின்னின் கிரிகெட் வீரர்களின் ஸ்டிக்கரை பண்டமாற்றி மாணவர்கள் விளையாடி கொண்டிருந்த போது, வெற்று ரவை கூடுகளை பொறுக்கி அவற்றை, தர வரிசை படுத்தி, ஏனைய மாணவர்களோடு பண்டமாற்று செய்து வாழ்ந்த ஒரு சபிக்கபட்ட சந்ததியின் பிள்ளைகள் நாங்கள்.

சில வீதிகளை, இடங்களை கடக்கும் அல்லது நினைக்கும் போது பழைய நினவு எழுவது தவிர்கவியலாதது. 

16 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பாதையை அதிகம் மக்கள் பாவிக்கிறார்கள் பயனடைகிறார்கள்  தற்போது பல சுற்றிவரச்செல்லும் பாதைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு கல்லடிப்பாலம் (புதுசு) மண்முனைப்பாலம் என்பன கட்டமுடியாது சதுப்பு என்றார்கள் சீனர்கள் இலகுவாக கட்டி முடித்தார்கள் மட்டக்களப்பு மேற்கை இலகுவாக இணைத்து பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில்  ஒரு சுற்றுவட்ட பாதையை இலகுவாக்கி உள்ளது மண் முனைப்பாலம்

நம்ம ஆட் கள் குறை கண்டுகொண்டே இருப்பார்கள் 

manmunai

கல்லடி பாலம் உண்மையிலேயே ஒரு நல்ல விடயம்தான். பாலம் கட்டமுதல் காலையிலும் மாலையிலும் ஒரு வழி தடத்தில் பலர் காத்து கிடப்பது இப்போ இல்லை. கூடவே “பாலத்தில் லொறி தட்டிய சாவுகளும்” இப்போ இல்லை. ஆனால் என்ன இப்போ குதித்து சாகிறார்கள்.

மண்முனை பாலமும் ஓகே. அந்த நீரூந்து-பாதையில் முன்பு போகவே ஒரே திகிலாக இருக்கும். ஆனால் கட்டிய புதிதில் இருந்ததை போல இப்போ பாலத்தை கடக்கும் வீதிகள் செப்பனாக இல்லை.

பாலம் நல்லாக இருந்தாலும் வீதி குன்றும் குழியுமாய்விட்டது. இப்போ திருத்தி இருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

கல்லடி பாலம் உண்மையிலேயே ஒரு நல்ல விடயம்தான். பாலம் கட்டமுதல் காலையிலும் மாலையிலும் ஒரு வழி தடத்தில் பலர் காத்து கிடப்பது இப்போ இல்லை. கூடவே “பாலத்தில் லொறி தட்டிய சாவுகளும்” இப்போ இல்லை. ஆனால் என்ன இப்போ குதித்து சாகிறார்கள்.

மண்முனை பாலமும் ஓகே. அந்த நீரூந்து-பாதையில் முன்பு போகவே ஒரே திகிலாக இருக்கும். ஆனால் கட்டிய புதிதில் இருந்ததை போல இப்போ பாலத்தை கடக்கும் வீதிகள் செப்பனாக இல்லை.

பாலம் நல்லாக இருந்தாலும் வீதி குன்றும் குழியுமாய்விட்டது. இப்போ திருத்தி இருக்க கூடும்.

தற்போதும்  சரி செய்யப்படுகிறது பாலம் தாண்டிய பகுதி காப்பற் வீதிகளாக கொக்கட்டி சோலை வரைக்கும் செல்லலாம் என நினைக்கிறன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.