Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்

ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள்

தேனி:

பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடுமேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

 நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார், மொத்த மதிப்பெண் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த மாணவர் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை நாராயணமூர்த்தி. இவர் சென்னையில் ஒரு பழச்சாறு தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி சொந்த ஊர் திரும்பிய அவர், தற்போது ஆடு மேய்த்து வருகிறார்.

மாணவர் ஜீவித்குமார் 664 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் ‘நீட்’ தேர்வில் தேசிய அளவில் அரசுப்பள்ளி மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் தேர்ச்சி பெற்றவர்களில் 1,823-வது இடத்தை ஜீவித்குமார் பிடித்துள்ளார்.

அரசுப்பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கியதால் அவர் தனது ஆசிரியர்கள் உதவியுடன் தனியார் பயிற்சி மையத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றார். அதற்கு பலனாக தற்போது தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவர் ஜீவித்குமாரை, அவரது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/17082432/1985025/NEET-2020-worker-son-achievement.vpf

பாராட்டுக்கள்  ஜீவித்குமார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து

நீட் தேர்வில் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் சாதனை ஓ.பன்னிர்செல்வம் வாழ்த்து

ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார்.
பதிவு: அக்டோபர் 17,  2020 13:45 PM
சென்னை

தேனி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஜீவித் குமார், 2020 நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடமும் பெற்றுள்ளார்.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை நேற்று (அக்.16) மாலை வெளியிட்டது. தேர்வு எழுதிய 14 லட்சம் மாணவர்களில் மொத்தம் 7,71,500 பேர் (56.44%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜன் 710 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவித் குமார், 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தேசிய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடமும் பெற்றுள்ளார்.

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவித் குமார். இவரின் தந்தை நாராயணசாமி, ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி. தாய் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜீவித் குமார், 2019-ம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத நிலையில், இந்த ஆண்டு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் அகில இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இதுகுறித்து ஜீவித் குமார் அரசுப் பள்ளி மாணவர்கள் முயன்றால் முடியாது எனப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் சாதனைபடைத்த அரசு பள்ளி மாணவர் ஜீவித்குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

https://www.dailythanthi.com/News/State/2020/10/17134527/In-the-NEET-exam-record-of-the-son-of-a-shepherd.vpf

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

பொருண்மியம் ஈட்ட ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்.. ஒருவர் சொந்த விடா முயற்சியால் படித்து முன்னேறுவதற்கும் என்ன பிரச்சனை..??! இதில் என்ன ஏற்ற இறக்கம். 

இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மனதில் விதைக்கும் தலைப்புக்களே அன்றி... வேறு என்ன விளைவை உண்டு பண்ணும்..?!

இப்பவும் தமிழகம்.. சொறீலங்காவில்.. இப்படியான ஆடு மேய்ப்பவரின்..... மாடு மேய்ப்பவரின்..  தலைப்புக்கள்.. அமைவது கண்டிக்கத்தக்கது.

யாழ் களம் முன்மாதிரியாக இருந்து இவ்வாறான தலைப்புக்கள் அமைவதை தடுக்கலாமே. 

தாய் தந்தையரின் பொருண்மிய பின்னடைவுகளை காரணம் காட்டி பிள்ளைகளின் தனிப்பட்ட முயற்சிகள் சாதனைகளை.. இரண்டாம் நிலையில் வைத்து.. தலைப்பிடும் செய்திப் போக்கும்.. சில தொழில்களை மட்டமாக எண்ணத்தூண்டும் தலைப்புக்கள் அமைவதும்.. நிச்சயம் எமது சமூகத்தில் ஒடுக்கப்படுதல் அவசியம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nedukkalapoovan said:

மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

அருமையான கருத்து.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, nedukkalapoovan said:

மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

பொருண்மியம் ஈட்ட ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்.. ஒருவர் சொந்த விடா முயற்சியால் படித்து முன்னேறுவதற்கும் என்ன பிரச்சனை..??! இதில் என்ன ஏற்ற இறக்கம். 

இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மனதில் விதைக்கும் தலைப்புக்களே அன்றி... வேறு என்ன விளைவை உண்டு பண்ணும்..?!

இப்பவும் தமிழகம்.. சொறீலங்காவில்.. இப்படியான ஆடு மேய்ப்பவரின்..... மாடு மேய்ப்பவரின்..  தலைப்புக்கள்.. அமைவது கண்டிக்கத்தக்கது.

யாழ் களம் முன்மாதிரியாக இருந்து இவ்வாறான தலைப்புக்கள் அமைவதை தடுக்கலாமே. 

தாய் தந்தையரின் பொருண்மிய பின்னடைவுகளை காரணம் காட்டி பிள்ளைகளின் தனிப்பட்ட முயற்சிகள் சாதனைகளை.. இரண்டாம் நிலையில் வைத்து.. தலைப்பிடும் செய்திப் போக்கும்.. சில தொழில்களை மட்டமாக எண்ணத்தூண்டும் தலைப்புக்கள் அமைவதும்.. நிச்சயம் எமது சமூகத்தில் ஒடுக்கப்படுதல் அவசியம். 

இதைத்தான் நானும்  எழுத  வந்தேன்

நன்றி  தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, nedukkalapoovan said:

ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்

நாங்களும் ஆடு, மாடு வளர்த்தோம். அவற்றையும் மேய்த்தோம். ☺️ அந்த பெருமையான அனுபவம் எல்லோருக்கும் வாய்க்காது😊

ஒரு கூலித்தொழிலாளியின் மகனான ஜீவிதகுமார், வளங்கள், வசதிகள் இல்லாமல் நீட் தேர்வில் சாதனை படைத்தது பாராட்டுக்குரிய விடயமே. ஜீவிதகுமாருக்கு பாராட்டுக்கள்.👏👏👏

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

நாங்களும் ஆடு, மாடு வளர்த்தோம். அவற்றையும் மேய்த்தோம். ☺️ அந்த பெருமையான அனுபவம் எல்லோருக்கும் வாய்க்காது😊

ஒரு கூலித்தொழிலாளியின் மகனான ஜீவிதகுமார், வளங்கள், வசதிகள் இல்லாமல் நீட் தேர்வில் சாதனை படைத்தது பாராட்டுக்குரிய விடயமே. ஜீவிதகுமாருக்கு பாராட்டுக்கள்.👏👏👏

3 hours ago, உடையார் said:

அரசுப்பள்ளியில் சிறந்த மாணவராக விளங்கியதால் அவர் தனது ஆசிரியர்கள் உதவியுடன் தனியார் பயிற்சி மையத்தில் ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி பெற்றார். அதற்கு பலனாக தற்போது தேர்வில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து மாணவர் ஜீவித்குமாரை, அவரது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

இது தான் அவரின் வெற்றியின் ரகசியம். பாவம்.. அவரின் தந்தையின் பொருண்மிய மீட்டும்.. வழிமுறை செய்தியில் தலைப்பில்.. அந்த இளைஞனின் சுயமுயற்சிக்கு அடைமொழியாவது. 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் & பாராட்டும் 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி

தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 1615 மாணவர்கள் தேர்ச்சி

சென்னை:

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தை சேர்ந்த ஜீவித்குமார் என்ற மாணவர் 720 - 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு மாதிரி பள்ளியில் 12ம் வகுப்பு பயின்றுள்ளார்.

இந்நிலையில், தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையத்தில் பயின்று தேர்வு எழுதிய 1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மொத்தம் 6,692 பேர் நீட் தேர்வை எதிர் கொண்டனர். அதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 738 பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். 

கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வாசுகி என்ற மாணவி 720க்கு 580 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். காஞ்சிபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த சக்திவேல் 720க்கு - 552 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

மேலும் நீட் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 400-500 மதிப்பெண்களுக்குள் 15 பேரும், 300-400 மதிப்பெண்களுக்குள் 70 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 300-க்கும் அதிகமான மதிப்பெண்களை 32 மாணவர்கள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் 70 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 

https://www.maalaimalar.com/news/topnews/2020/10/17173729/1985197/1615-students-have-passed-the-training-at-the-Government.vpf

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

மிகவும் அவலமான அறிவிலித்தனமான தலைப்பு.

பொருண்மியம் ஈட்ட ஆடு மேய்ப்பதற்கும்.. மாடு மேய்ப்பதற்கும்.. ஒருவர் சொந்த விடா முயற்சியால் படித்து முன்னேறுவதற்கும் என்ன பிரச்சனை..??! இதில் என்ன ஏற்ற இறக்கம். 

இவை சமூக ஏற்றத்தாழ்வுகளை மனதில் விதைக்கும் தலைப்புக்களே அன்றி... வேறு என்ன விளைவை உண்டு பண்ணும்..?!

இப்பவும் தமிழகம்.. சொறீலங்காவில்.. இப்படியான ஆடு மேய்ப்பவரின்..... மாடு மேய்ப்பவரின்..  தலைப்புக்கள்.. அமைவது கண்டிக்கத்தக்கது.

யாழ் களம் முன்மாதிரியாக இருந்து இவ்வாறான தலைப்புக்கள் அமைவதை தடுக்கலாமே. 

தாய் தந்தையரின் பொருண்மிய பின்னடைவுகளை காரணம் காட்டி பிள்ளைகளின் தனிப்பட்ட முயற்சிகள் சாதனைகளை.. இரண்டாம் நிலையில் வைத்து.. தலைப்பிடும் செய்திப் போக்கும்.. சில தொழில்களை மட்டமாக எண்ணத்தூண்டும் தலைப்புக்கள் அமைவதும்.. நிச்சயம் எமது சமூகத்தில் ஒடுக்கப்படுதல் அவசியம். 

மாலைமலம் இப்படி தான் எழுதும்.

நியாயமான ஆதங்கம். 

  • கருத்துக்கள உறவுகள்

நீட்  தேர்வை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்ப்பவர்கள் இவரை முன் மாதிரியாய் கொள்ள வேண்டும் ...வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி அடித்த மாணவர் ஜீவித்குமார் - அன்றும், இன்றும்

  • கருத்துக்கள உறவுகள்

121654481_3468698983224198_4822614352082694394_n.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=xY6P8Hc-itUAX-4Xby3&_nc_ht=scontent-frt3-1.xx&oh=544c8324f91213a7289ad7a4b3bb8a41&oe=5FB3501C

121647111_3355376314547720_944219161392408831_n.jpg?_nc_cat=111&_nc_sid=dbeb18&_nc_ohc=_Dz1FQbhkU0AX8i9YuE&_nc_ht=scontent-frx5-1.xx&oh=72a8c384c60100a90ba6d44f5306a1db&oe=5FB28BA6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.