Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு – வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு – வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு

October 21, 2020
 
 
Share
 
 
PRESSMEET-696x371.jpg
 30 Views

மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி, தங்கள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்வதாக குறித்த வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இன்று மட்டு. ஊடகத்திற்கு வருகைதந்த குறித்த பெண் உத்தியோகத்தர்களும் ஆண் உத்தியோகத்தர்களும் இது தொடர்பான ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இதில் கருத்து தெரிவித்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள்,

“தமது குடும்ப வறுமையின் காரணமாக வைத்திய அதிகாரியின் பாலியல் தொல்லைகளையும் தாங்கிக்கொண்டு கடமையினை  செய்து வருகின்றோம்.

பெண்கள் ஆடைமாற்றும் அறையில் திடீர் என நுழையும் வைத்திய பொறுப்பதிகாரி எமக்கு பாலியல் அச்சுறுத்தல் விடுக்கின்றார். இடமாற்றம் பெற்றாலும் நீண்ட தூரத்திற்கு செல்லவேண்டியுள்ளது.

நாங்கள் ஆடைமாற்றும் அறையில் எந்தவித வசதிகளும் இல்லை. அறையின் கதவுகள் கூட முறையான கதவு இல்லாமல் இடைவெளிகள் கொண்ட கதவுகளாக இருக்கின்றன. அதனை முறையாக அமைக்கவும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது தொடர்பில் திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதோடு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளோம்.

மேலும் எங்களுக்கு ஆதரவாக இருந்த பெண் வைத்தியரையும் தவறானவராக காட்டுவதற்கு முயற்சிகளை அவா் மேற்கொண்டார்.

இது தொடர்பில் அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் கொண்டுசென்றபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுப்படாத நிலையிலேயே இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ளோம்.

கடந்த மூன்று வருடமாக இந்த வேதனைகளை அனுபவித்து வருகின்றோம். எங்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் ஆண் ஊழியர்களையும் அங்குள்ள பெண் ஊழியர்களுடன் இணைத்து அபாண்டமான வதந்திகளையும் பரப்புகின்றார்” என்றனர்.

மேலும் உயர் அதிகாரியொருவர் இரவு வேளையில் சோதனை நடவடிக்கைக்கு வந்தபோது இரவு கடமையில் வைத்தியர் இல்லாதது தெரியவந்த நிலையில், அதற்கு எதிராக நடவடிக்கையெடுத்தபோது குறித்த உயர் அதிகாரி மதுபோதையில் வந்ததாக கடிதம் ஒன்று எழுதி தருமாறு ஊழியர்களிடம் கேட்டபோது அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தன் காரணமாக அவர்கள் தொடர்ச்சியாக பழிவாங்களுக்குள்ளாவதாக  ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தன்னை அனுசரித்துப் போகாவிட்டால் பழிவாங்கப் படுவீர்கள் என குறித்த வைத்திய பொறுப்பதிகாரி அச்சுறுத்துவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனம் செலுத்தி தமக்கான நீதியைப் பெற்றுத் தரவேண்டும் எனவும் தங்களால் சுதந்திரமாகவும் அச்சமின்றிய சூழ்நிலையில் கடமையாற்றுவதற்கான வழியை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.ilakku.org/மட்டு-வைத்தியசாலையின்-ப/

 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்டவர்களுக்கு... நாரி முறிய, இருட்டடி குடுக்கிறதை விட்டுட்டு... ஆக்களை கூப்பிட்டு, அறிக்கை கொடுப்பதில் பிரயோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை படித்து விட்டு மட்டு பெரியாஸ்பத்திரியில் தான் ஏதோ நடந்து விட்டதோ  என்று அதிர்ச்சியாய் போய் விட்டது:shocked:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தலைப்பை படித்து விட்டு மட்டு பெரியாஸ்பத்திரியில் தான் ஏதோ நடந்து விட்டதோ  என்று அதிர்ச்சியாய் போய் விட்டது:shocked:

அப்ப  சின்ன ஆஸ்பத்தரி என்றால் பரவாயில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை’ வைத்தியர் விளக்கம்

 
IMG-20201021-WA0068-696x522.jpg
 50 Views

‘என் மீது வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் ஊழியர்கள் சிலரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது’ என மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.

நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

“நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை நிறுவன மட்டத்தில்,திணைக்கள மட்டத்தில்,அமைச்சு மட்டத்தில் கொண்டுசெல்லப்பட்டு தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடக சந்திப்பினை நடாத்தி என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் கொண்டுசெல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பொலிஸ் நிலையத்திலும் உள்நோக்கோடு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதியான நியாயமான விசாரணையொன்று நடைபெற்று உண்மைகள் வெளிப்படுத்தப் படவேண்டும்.

இது தொடர்பில் அறியவிரும்புவோர் என்னுடன் நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியும். அல்லாதுவிட்டால் வைத்தியசாலையுடன் தொடர்கொள்ளமுடியும்.

இந்த வைத்தியசாலையில் அனைத்து இன ஊழியர்களும் கடமையாற்றுகின்றார்கள்.அனைவரும் சந்தோசமாக கடமையாற்றுகின்றனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர்.அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு வைத்தியசாலையினைவிட்டு வெளியேறுவதற்கு நான் ஆயத்தமாகவுள்ளேன்.” என்றார்.

மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி, தங்கள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்வதாக குறித்த வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள்  குற்றஞ்சாட்டி நேற்று ஊடக சந்திப்பை நடத்திப்பொன்றை நடத்தியிருந்த நிலையில், இந்த குற்றச்சாட்டை மறுத்து டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன்  தானும் ஊடக சந்திப்பை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.ilakku.org/பாலியல்-குற்றச்சாட்டு-எ/

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2020 at 11:51, தமிழ் சிறி said:

இப்படிப் பட்டவர்களுக்கு... நாரி முறிய, இருட்டடி குடுக்கிறதை விட்டுட்டு... ஆக்களை கூப்பிட்டு, அறிக்கை கொடுப்பதில் பிரயோசனம் இல்லை.

1 - (1/3 + 1/3)= 1/3 🤫

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

1 - (1/3 + 1/3)= 1/3 🤫

ஆஹா... இது, நல்ல தீர்வு. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை’ வைத்தியர் விளக்கம்

 
IMG-20201021-WA0068-696x522.jpg
 50 Views

‘என் மீது வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் ஊழியர்கள் சிலரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது’ என மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் 

நேற்று இந்தச் செய்தி வந்த போது...

இவர் தமிழராகவோ, சிங்களவராகவோ இருக்க மாட்டார், நிச்சயம் ஒரு முஸ்லீமாகத்தான் இருப்பார் என நினைத்தேன். அது சரியாகப் போச்சுது. 😁

  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு கூட்டம் வரும் 

பிள்ளையானுக்கும் முரளிக்கும் கை  கொடுப்போம் 

சிங்களத்துடன் கைகோர்ப்போம் என????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Nathamuni said:

1 - (1/3 + 1/3)= 1/3 🤫

 

54 minutes ago, தமிழ் சிறி said:

ஆஹா... இது, நல்ல தீர்வு. 😁

ஓம் நல்ல தீர்வு. எல்லாருக்கும் அரோகரா :cool:

  • கருத்துக்கள உறவுகள்

"இந்த வைத்தியசாலையில் அனைத்து இன ஊழியர்களும் கடமையாற்றுகின்றார்கள்.அனைவரும் சந்தோசமாக கடமையாற்றுகின்றனர்."

"இது தொடர்பில் நீதியான நியாயமான விசாரணையொன்று நடைபெற்று உண்மைகள் வெளிப்படுத்தப் படவேண்டும்."

"தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர்.அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு வைத்தியசாலையினைவிட்டு வெளியேறுவதற்கு நான் ஆயத்தமாகவுள்ளேன்.” என்றார்."

நீதியான விசாரணை தொடங்கிவிட்டது 

எல்லோரும் (ஒரு சிலரை தவிர) சந்தோசமாக இருக்கிறார்கள் 

எல்லாம் சாதகமாக இருக்கும்போது 
ஐயா ஓட்டம் எடுக்க போகிறேன் என்று சொல்வதுதான்? 

அங்கு சென்ற ஊடகவியாளர்களின் கேள்வியாக இருந்து இருக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎21‎-‎10‎-‎2020 at 22:39, Maruthankerny said:

அப்ப  சின்ன ஆஸ்பத்தரி என்றால் பரவாயில்லை?

தலையங்கத்தில் ஆயுள் வேத ஆஸ்பத்திரி என்று போட்டு இருக்கலாம் ...மட்டு ஆஸ்பத்திரின் பணிப்பாளர் ஒரு பெண்😄...எந்த வகையிலும் பாலியல் ரீதியான குற்றங்களை ஆதரிக்கவில்லை , அப்படி ஆதரித்தால் நான் ஒரு பெண்ணாகவே இருக்க முடியாது  

On 22/10/2020 at 23:06, உடையார் said:

தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு சிலர் தூண்டிவிடுகின்றனர்.அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு வைத்தியசாலையினைவிட்டு வெளியேறுவதற்கு நான் ஆயத்தமாகவுள்ளேன்.” என்றார்.

உனது பக்கம் தான் நியாயம் இருந்தால் எதட்காக நீ "அவர்களுக்கு தேவையானவற்றை வழங்கிவிட்டு வைத்தியசாலையினை விட்டு" வெளியேறவேண்டும்?. அவர்களுக்கு என்ன தேவை?. நீதி. 

உன்னை  சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட்டஈடு வழங்கவேண்டும். நீதிபதி இளஞ்செழியன்முன் உன்னை கொண்டு செல்ல வேண்டும். 

On 22/10/2020 at 23:06, உடையார் said:

இந்த வைத்தியசாலையில் அனைத்து இன ஊழியர்களும் கடமையாற்றுகின்றார்கள்.அனைவரும் சந்தோசமாக கடமையாற்றுகின்றனர்.

என்ன சொல்ல வருகிறார்?. இது பாலியல் சம்பந்தமான குற்றசாட்டு. உடனே இனத்தை கொண்டுவந்தது தன்னை காப்பாற்றும் செயல். அதிகாரத்தை வைத்து பாலியல் குற்றம் செய்வோர் கடைபிடிக்கும் தந்திரோபாயகளில் முதலாவது குற்றம் சுமத்துபவரை தாழ்த்துவது. அதைத்தான் இவர் செய்கிறார். இவர் இதே விளையாடடை நைஜீரியா மாநிலமொன்றில் செய்தால் இப்பமிச்சியிருக்கிறதையும் இழக்கநேரிடும் (நாதமுனியின்  சொலுஷன் போல )!

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுனானி ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 
DSC_0104-696x465.jpg
 45 Views

மட்டக்களப்பு மஞ்சந்தோடுவாய் யுனானி ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் தயாளக்குமார் கௌரி  வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 39வது சபை அமர்வானது  மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதம கணக்காளார் ஹெலன் சிவராஜா மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கலந்துரையாடலில் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

  IMG_0210-300x200.jpg

இந்நிலையில், மட்டக்களப்பு மஞ்சந்தோடுவாய் யுனானி ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் பெண் ஊழியர்கள் அண்மையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மற்றும் ஊடாக சந்திப்பொன்றினையும் மேற்கொண்டிருந்ததாகவும் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகைகளும் எடுக்கப்படவில்லை என்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் தயாளக்குமார் கௌரி சபையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

பெண்களின் மீதான இவ் வன்முறையினை மதவாதமாக மாற்றும் செயற்பாட்டில் ஒரு சில நபர்கள் ஈடுபட்டு வருவதோடு, சம்பந்தப்பட்ட வைத்தியரை இடமாற்றம் செய்யாமல் தொடர்ந்தும் அங்கு பணி செய்வதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

DSC_0028.jpg

மேலும் இந்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில், ஒரு குழுவினை அமைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்றும் சபையில் தீர்மானத்தினை நிறைவேற்றி இதற்கான அழுத்தத்தினை மாநகர சபையின் ஊடாக வழங்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான துரை மதன் மற்றும் வேலுப்பிள்ளை தவராஜா ஆகியோரும்  வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இப் பிரச்சனை மாநகர சபையின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் இதற்கு தீர்மானங்களை நிறைவேற்றாது குறித்த அமைச்சு மற்றும் மாவட்ட செயலாளர் ஊடாக நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவும் மாநகர முதல்வர் இதன் போது பதில் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

https://www.ilakku.org/யுனானி-ஆயுர்வேத-வைத்தியச/

 

On 22/10/2020 at 18:44, தமிழ் சிறி said:

நேற்று இந்தச் செய்தி வந்த போது...

இவர் தமிழராகவோ, சிங்களவராகவோ இருக்க மாட்டார், நிச்சயம் ஒரு முஸ்லீமாகத்தான் இருப்பார் என நினைத்தேன். அது சரியாகப் போச்சுது. 😁

தலைப்பை பாத்தவுடன் நானும் அப்படித்தான் நினைத்தேன். அது உண்மையாகிவிட்ட்து. குருநாகல் வைத்தியசாலையில் இவர்கள் செய்யாத அடடகசங்களா? இவர்களுடைய சரித்திரமே அப்படிதான். ஆனால் அவர்களிடம் கேடடால், சுவர்க்கத்துக்கு முதல் போவது தாங்கள்தான் என்று மார் தட்டிக்கொள்ளுவார்கள். அதிகாரத்தில் இருக்கும் வியாழேந்திரன் இதட்கு தட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Robinson cruso said:

தலைப்பை பாத்தவுடன் நானும் அப்படித்தான் நினைத்தேன். அது உண்மையாகிவிட்ட்து. குருநாகல் வைத்தியசாலையில் இவர்கள் செய்யாத அடடகசங்களா? இவர்களுடைய சரித்திரமே அப்படிதான். ஆனால் அவர்களிடம் கேடடால், சுவர்க்கத்துக்கு முதல் போவது தாங்கள்தான் என்று மார் தட்டிக்கொள்ளுவார்கள். அதிகாரத்தில் இருக்கும் வியாழேந்திரன் இதட்கு தட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரியாக... சொன்னீர்கள், றொபின்சன்.
ஊரில் உள்ள முஸ்லீம்கள் மட்டுமல்ல, 
இங்கும்... தமது மதத்தை முன்னிறுத்தி... பல பித்தலாட்டங்களை,
அவர்களின்  நண்பர்களிடமும், வேலை இடங்களிலும்.. செய்வதைப் பார்க்க, சகிக்க முடியாது.   

வியாழேந்திரனும்.... தனிய ஒராளாக நின்று, 
இவர்களை சமாளிப்பது கடினம் என்றே.. நினைக்கின்றேன்.

கிழக்கு... முதலமைச்சர்  பதவியை, முஸ்லீம்களுக்கு...  தாரை வாரத்துக்கு கொடுத்த,
கூத்தமைப்பு...  களி மண்டைகளும்,  பொறுப்பாளிகள் ஆவர்.

2 minutes ago, தமிழ் சிறி said:

சரியாக... சொன்னீர்கள், றொபின்சன்.
ஊரில் உள்ள முஸ்லீம்கள் மட்டுமல்ல, 
இங்கும்... தமது மதத்தை முன்னிறுத்தி... பல பித்தலாட்டங்களை,
அவர்களின்  நண்பர்களிடமும், வேலை இடங்களிலும்.. செய்வதைப் பார்க்க, சகிக்க முடியாது.   

வியாழேந்திரனும்.... தனிய ஒராளாக நின்று, 
இவர்களை சமாளிப்பது கடினம் என்றே.. நினைக்கின்றேன்.

கிழக்கு... முதலமைச்சர்  பதவியை, முஸ்லீம்களுக்கு...  தாரை வாரத்துக்கு கொடுத்த,
கூத்தமைப்பு...  களி மண்டைகளும்,  பொறுப்பாளிகள் ஆவர்.

கூத்தமைப்பு ஒரு நல்ல நோக்கத்தோடு அப்படி செய்தாலும் , இன்னும் அவர்களைப்பற்றி அறியாமலிருப்பது எவ்வளவு மூடத்தனமென்று இன்னும் அறியாமலிருக்கிறார்கள்.

அந்த காலம் தொடக்கம் தமிழ் பாசறையில்   கற்று தமிழர்களை காட்டிகொடுப்பதே அவர்களது வரலாறு. அப்படி இருந்தும் இந்த மடையர்கள் இன்னும் அவர்களை நம்புகிறார்கள் எண்டால் இவர்கள் மடத்தனத்தை என்னவென்று சொல்வது.

இப்போது ஓரளவு புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்பலாம். மக்கள் இன்னும் தெளிவாக இருக்கிறார்கள். எனவே வியாழேந்திரன் கூறியதுபோல அடுத்தமுறை ஐந்து மட்டில்தான் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.