Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துமிந்தவுக்கு மன்னிப்பு கோரும் மனுவில் மனோவும் கூட்டணியும் கையெழுத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரன் படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான முன்னாள் எம்பி துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கோரும் அரச தரப்பு எம்பிகளின் மனுவில் மனோ கணேசன் எம்பி மற்றும் அவரது கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

அரச தரப்பின் இந்த மனுவில அரச எம்பிகளான சுரேன் ராகவன், கெஹெலிய ரம்புக்வெல, வீரகுமார திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சிலர் கையெழுத்திடாத நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்து மனோ கணேசன் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய அறிக்கையில்,

“முன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவர், மது போதையில் இருந்துள்ளார். தற்போது, அவர் சுமார் ஐந்து வருடங்களை சிறையில் கழித்துள்ளார். அவர் மீது சட்டத்தை மீறிய வேறு குற்றங்கள் இருப்பின், சட்ட ஒழுங்கு அதிகாரிகள் அவர் மீது குற்றம்சாட்டி வழக்கு தொடரலாம்.

நான், அரசியல்வாதி என்பதை விட ஒரு மனித உரிமை செயற்பாட்டாளன். வெள்ளை வான் கடத்தல், சட்டத்துக்கு அப்பாலான கடத்தல் கொலை, கப்பம், அடாத்தான கைது ஆகியவற்றுக்கு எதிராக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நான் போராடியுள்ளேன். எனவே எனக்கு மனித உரிமை தொடர்பில் கற்பிதம் தேவையில்லை.

இளையோர் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்பட கூடாது. குற்ற செயல்களில் ஈடுபடும், இளையோருக்கு திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது என் பொதுவான கொள்கை நிலைப்பாடு. துமிந்த சில்வா, ஏற்கனவே ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன். அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

அதேபோல், அரசியல் சார்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழ் கைதிகளும் சிறைகளில் உள்ளார்கள். இளைஞர்களாக இருக்கும்போது கைது செய்யப்பட்டு, தம் வாழ்நாளில் கணிசமான காலத்தை இவர்கள் சிறையில் கழித்துள்ளார்கள். அவர்களில், தீர்ப்பு வழங்கப்பட்டவர்களும், விசாரணை கைதிகளும், வழக்குகளை எதிர்நோக்குகின்றவர்களும் உள்ளார்கள். அவர்களும் சீர்திருந்தி, புனர்வாழ்வு பெற்று, சமூகத்துக்குள் சென்று, தம் குடும்பங்களுடன், மனைவி மக்களுடன் வாழ விடுதலை வழங்கப்பட வேண்டும் எனவும் கோருகிறேன்.” – என்றுள்ளார்.

https://newuthayan.com/துமிந்தவுக்கு-மன்னிப்பு/

 

  • கருத்துக்கள உறவுகள்

துமிந்தவை விடுவிக்கக்கோரும் மனுவில் கையொப்பமிட்டது எதற்காக – மனோ விளக்கம்

 
Mano-Ganesan_850x460_acf_cropped_850x460
 16 Views

துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு கோரும் மனுவில் குறித்து கையெழுத்திட்டது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.

“துமிந்தசில்வாவை விடுதலை செய்யவேண்டும் என கோரும் மனுவில் கைச்சாத்திடும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை அது சுயாதீன ஆவணம் ,எதிர்கட்சியில் உள்ள பலர் கைச்சாத்திட்டுள்ளனர் எங்கள் கட்சியை சேர்ந்தவர்களும் அதில் கையெழுத்திட்டுள்ளர்” என மனோகணேசன் தெரிவித்தார் என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த நினைத்தேன் அதற்காக அதில் கையெழுத்திட்டேன் என மனோகணேசன் தெரிவித்தார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான வலுவான அழுத்தத்தினை கொடுக்கலாம் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவரது கட்சி அரசாங்கத்துடன் இணையவுள்ளதா அல்லது வரவுசெலவுதிட்டத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதா என்ற கேள்விக்கு அவ்வாறான திட்டமெதுவுமில்லை என மனோகணேசன் தெரிவிததுள்ளார்.

நாங்கள் இன்னமும் எதிர்கட்சியினதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஒரு பகுதியாக உள்ளோம்,நாங்கள் அரசாங்கத்துடன் இணையமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.ilakku.org/துமிந்தவை-விடுவிக்கக்கோ/

  • கருத்துக்கள உறவுகள்

துமிந்தவின் விடுதலையில் மனோவும் விலை போனாரா?

best-library-desk-books-wallpaper-preview.jpg

துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட மனோ கணேசன் உள்ளிட்ட எந்த MPக்களும் அதை நியாயப்படுத்திவிடமுடியாது. இப்போது இந்த கையெழுத்துக்கு வெள்ளையடிக்கும் வகையில் கூறிவரும் கருத்துக்களை அப்படியே நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. துமிந்த சில்வா ஒரு கிரிமினல். பலரும் அறிந்த போதைப்பொருள் வியாபாரிகள். பட்டப்பகலில் படுகொலை செய்து தமது பண, அதிகார செல்வாக்கால் கூட விடுதலை பெற முடியாதபடி நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர். போதைப்பொருள் பணத்தில் பிரதான இனவாத ஊடகமொன்றை நடத்திவரும் குடும்பம் அவர்களின் குடும்பம். துமிந்தவை வெளியில் கொணர்வதற்காக ராஜபக்ச குடும்பத்தினரை பதவியில் அமர்த்த கடுமையாக உழைத்த ஊடகம் அது.

கடந்த சில வருடங்களாக இனவாத பிக்குமாரையும், இனவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் துமிந்தவின் விடுததலைக்கு குரல் கொடுக்க வைப்பதற்காக ஏராளமாக செலவழித்தவர்கள். தற்போதும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கையெழுத்துக்காக தலா நாற்பது லட்சம் வீதம் வழங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

baratha-lakshman-killed.jpg

இப்படியெல்லாம் இருக்க

“ஐந்து வருடங்கள் சிறையில் இருந்துள்ளார். அவர் அங்கே சீர்திருத்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என நம்புகிறேன்”

என்றெல்லாம் மனோ கணேசன் கூறுவது பசப்பு மட்டுமல்ல வேடிக்கையாக இருக்கிறது. மனோகணேசன் இப்பேர்பட்ட உத்தரவாதத்தை கொடுப்பார் என்று நாம் கொஞ்சமும் நம்பியிருக்கவில்லை.

இன்னமும் வழக்குமின்றி, விசாரணையும் செய்யப்படாத நிலையில் துமிந்த சில்வாவை விட அதிக காலம் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளும், சந்தேகநபர்களும் உள்ளார்கள். ஆனால் மேன்முறையீட்டு  நீதிமன்றத்தாலும் சந்தேகமின்றி கொலைக்குற்றவாவாளியென மீளவும் உறுதி செய்யப்பட்ட ஒருவரை விடுவிப்பதில் இந்த அரசியல்வாதிகளுக்கு எந்தளவு அக்கறை வந்திருக்கிறது பாருங்கள். 

“அவருக்கு திருந்தி, தனது சமூகத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என நான் எண்ணுகிறேன்.”

என்கிறார் மனோ கணேசன். துமிந்தவால் கொல்லப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும், அவரது பாதுகாவலரும் கூட குடும்பஸ்தர்கள் தான். அவர்கள் இந்த சமூகத்தில் வாழ பாரத லக்ஸ்மனால் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தனது தந்தையின் கொலைக்காக நீதி கோரி போராடிய அவரது மகள் ஹிருனிகா பிரேமச்சந்திர; மனோ கணேசனுடன் ஜனநாயக அரசியல் கூட்டணியில் ஒன்றாக சேர்ந்து பயணித்து வருபவர். இனி சக தோழமை அரசியல் சகாவின் முகத்தில் தான் மனோ கணேசன் விழித்திட முடியுமா?

z_p01-Supreme.jpg

இதை எல்லாவற்றையும் விட இலங்கையின் ஜனாதிபதிகள் தமது அரசியல் சுய லாபங்களுக்காக நிறைவேற்று அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பது இப்போது ஒரு போக்காக மாறி வருகிறது. ஜே.ஆர். காலத்தில் அவரின் ஆதரவாளனான ஒரு பெரிய சண்டியனை விடுவித்தார். மிகச் சமீபத்தில் கூட மைத்திரிபால தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரரை விடுவித்தார்.

20 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் அத்தகைய அராஜக அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டு இன்னும் ஓரிரு தினங்கள் கூட கடக்கவில்லை. அதற்குள் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச குடும்பம் தனது ஆதரவாளனான கொலைக்குற்றவாளியை விடுவிக்க முற்படுகிறது. இதற்கு விலை போபவர்கள் யார் யார் என்பது பற்றி இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். மனோ கணேசன் அந்த பட்டியலில் எப்போது சேர்ந்தார்.

1-Hirunika.jpg

அதிகார நலன்களுக்காக நாட்டின் நீதித்துறையை துஷ்பிரயோகம் செய்வதை ஒரு வழிமுறையாகவே மேற்கொண்டு வருபவர்கள் ராஜபக்ச தரப்பு. அதில் மனோ கணேசன் எப்போது பங்காளியானார்.

மனோ கணேசன் மட்டுமல்ல இதற்கு துணைபோன அத்தனை எம்பிக்களும் நயவஞ்சகர்களே. 
 

 

https://www.namathumalayagam.com/2020/10/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளை விட மனோ கணேசனைய்  மலையென நம்பியிருந்தேன், ஆனால் மனோ கணேசன் கூலிக்கு மாரடிக்கும் பக்கா அரசியல்வாதி என நிரூபித்து உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

துமிந்த சில்வாவை விடுதலை செய்யக் கோரும் கடிதம் – கையெழுத்தை வாபஸ் பெறுவதாக மனோ அறிவிப்பு

 

 

  by : Dhackshala

http://athavannews.com/wp-content/uploads/2020/09/mano-ganesan-1.jpg

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை வாபஸ் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 செப்டம்பர் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானித்திருந்த குறித்த மனுவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர்.

ஒக்டோபர் 20 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட இந்த மனு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் செல்லும் போது, துமிந்த சில்வாவின் விடுதலையானது உறுதிப்படுத்தப்படும் என்றும் ஆங்கில ஊடகம் கடந்த வாரம் அறிக்கையிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக அறிக்கையொன்றினை வெளியிட்ட மனோ கணேசன் துமிந்த சில்வாவை போன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் அவர்களின் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்தை சிறையில் செலவிட்டுள்ளதாக கூறினார்.

ஆகவே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எனவே  மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுவிக்கும் மனுவில் தான் கையொப்பமிட்டதாக மனோ கணேசன் அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/துமிந்த-சில்வாவை-விடுதலை/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகளை விட மனோ கணேசனைய்  மலையென நம்பியிருந்தேன், ஆனால் மனோ கணேசன் கூலிக்கு மாரடிக்கும் பக்கா அரசியல்வாதி என நிரூபித்து உள்ளார்.

பசிலின்  Rs.600 கோடி வேலை செய்கிறது. 

பணம் பாதாளம் வரை பாயும். 😀

  • கருத்துக்கள உறவுகள்

துமிந்த சில்வா மனுவிலிருந்து நான் விலகுகிறேன் – மனோ கணேசன்

 
press-mano.600.png
 8 Views

துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் நான் இட்ட கையெழுத்தை அகற்றிகொண்டு வாபஸ் பெறுகின்றேன் என இன்று கொழும்பு ஜானகி விடுதியில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் அறிவித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் வேலு குமார் எம்பி, உப தலைவர் பாஸ்கரா எம்எம்சி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்ட இந்த ஊடக மாநாட்டில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

புதிய அரசாங்கத்துக்கு மக்கள் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்கள். இதை பயன்படுத்தி, மிருசுவில் கிராமத்தில், கொலை குற்றம் புரிந்த இராணுவ சிப்பாய்க்கு பொது மன்னிப்பை, இன்றைய அரசு கொடுத்துள்ளது. அதற்கு தேவையான மக்கள் ஆணையை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் பெற்றுக்கொண்டதாக அரசாங்கம் கூறுகிறது.

Media-Con-Janaki-291020-2-300x257.jpgஅதேபோல், கடந்த ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரோயல் பார்க் குடியிருப்பில், கொலைகுற்றம் புரிந்து, சிறையில் இருந்த நபருக்கு, பொது மன்னிப்பு அளித்து விடுதலை வழங்கினார்.

இந்த பின்னணியில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யும்படி கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் 150 பேருக்கு குறையாதோரின் கையெழுத்தில், மனு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணத்தில் நான் கையெழுத்திட்டது, இதன் மூலம் ஏற்படும் பிரச்சாரத்தை பயன்படுத்தி, தசாப்தகாலமாக சிறைவாசம் அனுபவிக்கும் 100 பேருக்கு குறைவில்லா தமிழ் அரசியல் கைதிகளின் நிர்க்கதி நிலைமையை நாட்டின் கவனத்துக்கு கொண்டு வரவே ஆகும்.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதி, இதுவரைக்கும் நாட்டின் கவனத்துக்கே வரவில்லை. எனது முயற்சி, நாட்டின் தேசிய மட்டத்தின் கவனத்துக்கு இதை கொண்டு வந்து, அவர்களின் விடுதலைக்கு வழி தேடுவதாகும்.

துமிந்த சில்வா மனுவில் நான் கையெழுத்திட்ட பின்னர், இலங்கையின் முன்னணி தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இருவரிடம், எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி மனு ஒன்றை தயாரித்து, ஜனாதிபதியிடம் முன்வைக்கும் யோசனையை முன் வைத்தேன். ஆனால், எனது இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.

நான் பாராளுமன்ற உறுப்பினர்கள் கெளரவ எம். ஏ. சுமந்திரன், கெளரவ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரையே தொடர்பு கொண்டேன். கெளரவ சுமந்திரன், தமிழ் கைதிகள் பற்றிய ஒரு மனுவுக்கு உரிய தருமணம் இதுவல்ல என்று கூறினார். கெளரவ அடைக்கலநாதன், இது தொடர்பில் பரிசீலித்து பதில் கூறுவதாக கூறினார். எனது இந்த இரண்டு பாராளுமன்ற தோழர்களின் கருத்துரிமையை நான் மதிக்கின்றேன்.

துமிந்த சில்வாவின் மனுவில், நான் கையெழுத்திட்டதின் பின்னுள்ள காரணத்தை புரிந்துக்கொள்ளாமல் ஒரு சிறு பிரிவினர் செயற்படுகின்றனர்.

எனது இருபத்தைந்து வருட அரசியல் வரலாற்றில், ஒருபோதும் கட்சி தாவாமல், அரசியல் அணி மாறாமல், பணத்துக்கு விலை போகாமல், கொள்கைவழி விலகாமல், எனக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல்களை கண்டு ஓடி ஒளியாமல், மனித உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் நான் பணியாற்றியுள்ளதாக மனப்பூர்வமாக நம்புகிறேன். ஆனால், எனது இந்த நேர்மையான வரலாற்றை நினைவுக்கூர்ந்து பார்க்க இவர்களுக்கு முடியாமல் போயுள்ளது.

அதேபோல், பல தசாப்தங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் எடுக்கும் முயற்சியை, அந்த தமிழ் கைதிகளை, கொலைக்காரர்களுக்கு இணையாக பார்க்கிறேன் என இன்னொரு தமிழ் தரப்பு என் மீது குற்றம் சாட்டுகின்றது.

இவர்களுக்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இக்கைதிகளை, தமிழ் அரசியல் கைதிகள் என நாம் அடையாளப்படுத்தினாலும், இந்நாட்டின் தெற்கில் வாழும் பெரும்பான்மை மக்கள், அவர்களை இன்னமும் பயங்கரவாதிகளாகவே கணிக்கின்றனர். ஒருவரின் போராளி, அடுத்தவரின் குற்றவாளியாக தெரியும் உலக நடப்பை மறந்து, செயற்பட முடியாமையை இவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

தமிழ், முஸ்லிம், மக்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற துன்பங்களுக்கு தீர்வுகளை தேட நாம் தெற்கின் சிங்கள மக்களுக்கு அவை பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது எப்போதும் எனது உறுதியான வழி நிலைப்பாடாகும்.

press-mano.600.pngதுமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் நான் கையெழுத்திட்டதினால், மக்கள் மத்தியிலுள்ள ஒரு பிரிவினரின் மத்தியில் குழப்ப நிலைமை ஏற்படுவதை பயன்படுத்தி, எனது அரசியல் எதிரிகள், எனக்கு எதிராக பொய் பிரசாரங்களை முன்னெடுத்து, என் மீதும், என் நேர்மையின் மீதும் களங்கம் கற்பிக்க திட்டமிட்டு முயல்வது எனக்கு தெரிகின்றது. இதன்மூலம், எனது ஜனநாயக போராட்ட அரசியல் வரலாற்றை அழிக்க சிறுபிள்ளைத்தன முயற்சிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கண்ட காரணங்களை மனதில் கொண்டு, துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் நான் இட்ட கையெழுத்தை அகற்றிகொண்டு வாபஸ் பெறுகின்றேன்.

அதேபோல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி அரசாங்கத்தினதும், தெற்கின் சிங்கள மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல நான் மேற்கொள்ளும் முயற்சி, தவறாக புரிந்துக்கொள்ளப்படுவது தொடர்பில், நான் மிகவும் மனம் நொந்து போயுள்ளேன் என்பதையும் தெரிவிக்கின்றேன்.

எனினும், நீண்டகாலமாக தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோரை பிரிந்து, பெரும் துன்புற்று, சிறைசாலைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் மேற்கொள்ளும் முயற்சிகளை தொடர்ந்தும் நான் முன்னெடுப்பேன்.

அதேபோல், ஒரே நாட்டுக்குள் இலங்கையர் என்ற முறையில், நாம் அனைவரும் வாழ்வதற்கு குந்தகமாக இருக்கும் தடைகளை அகற்றும் எனது பாதையிலிருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன்.

https://www.ilakku.org/துமிந்த-சில்வா-மனுவிலிரு/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

மேற்கண்ட காரணங்களை மனதில் கொண்டு, துமிந்த சில்வாவின் விடுதலை மனுவில் நான் இட்ட கையெழுத்தை அகற்றிகொண்டு வாபஸ் பெறுகின்றேன்.

அவர்கள் கூறிய காரணங்கள் சரியா? அல்லது தான்  செய்தது தவறு என்று நினைத்து விலகினாரோ? அவர் ஒரு அரசியல்வாதி! 

  • கருத்துக்கள உறவுகள்

துமிந்தவை விடுதலைசெய்யக் கோரும் மனுவில் கையெழுத்திட்டதற்காக மனோ கூறும் காரணம் நம்பமுடியாதது. துமிந்தவை விடுவித்தால், தமிழ் அரசியல்க் கைதிகளை விடுவிப்பார்களாம், யாரை நம்பவைக்க இந்த நாடகம்.

மிருசுவில் கொலையாளியான ராணுவக் கோப்ரலை எந்தவித குற்றங்களுமின்றி கோத்தா விடுதலைசெய்தபோது, இன்றுவரை அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ச் சிறுமியின் தகப்பனை விடுதலை செய்யமறுக்கும் போர்க்குற்றவாளி தமிழ அரசியல்க் கைதிகளை விடுதலை செய்வான் என்று மனோ எப்படி நம்பினார், அல்லது எப்படி மக்களை நம்பச் சொல்கிறார்?

பணமும் அதிகாரமும் எல்லோரையும் வீழ்த்திவிடும். முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள், அமைச்சர்களை பயங்கரவாதிகளின் முகவர்கள் என்று சிங்களப் பேரினவாதம் கூறியபின்னரும் 6 முஸ்லீம்கள் இன்று 20 ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து அதனை நிறைவேற்ற உதவியிருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் ஆதரவாக வாக்களைக்கவில்லையாம், ஆனால் மற்றையவர்களை மனச்சாட்சியின்படி நடக்கச் சொன்னராம், அதனால் மற்றையவர்கள் தமது மனச்சாட்சியின்படி நடந்து ஆதரவாக வாக்களித்தார்களாம்.

இன்னும் கொஞ்சப் பேர்தான். கிழக்கில் சாணக்கியனும் மதில்மேல் பூனைபோல இருக்கிறார் என்று கேள்வி. கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேசியல்ப் பட்டியல் பிரதிநிதியும் சிலவேளை தனது முன்னோடிகளைப் பின்பற்றலாம், எனது யூகம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

தவறென்று தெரிந்ததும் விலகி விட்டார் அல்லவா? இது தான் முதிர்ச்சியுள்ள மனிதனுக்கு அழகு! மனோ கணேசன் மீதான மதிப்பு கூடியிருக்கிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.